வலன்புரி
[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-11-26 08:39:54| யாழ்ப்பாணம்]
ஊடகங்களின் செயற்பாடுகள் சமூகத் திற்கு நம்பிக்கையை தரக்கூடியவை. மக்களின் அன்றாட வாழ்வியலோடு ஒன்றிணைந்து பணிபுரிவது ஊடகத்தின் இயல்பு என யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நா.சண்முகலிங்கன் தெரி வித்தார். யாழ்.பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் பயிற்சி நிலையத்தின் சான்றி தழ் வழங்கும் நிகழ்வு நேற்று யாழ்.பல் கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரை யாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்த ஊடகங்களில் வரும் தகவல்களை மதிப் பீடு செய்வது அவசியமானது. மதிப்பீட் டின் மூலமே அதன் கருத்தினை முழுமை யாக அறிய முடியும். சமூக மேம்பாட்டிற் காகவும் தனிமனித மேம்பாட்டிற்காக வும் பணி புரிவது ஊடகங்களேயாகும்
ஊடகங்களின் வளமான சேவை யால்த சமூகங்கள் முன்னேற்றமடை கிறது.யதார்த்தமான விடயங்களை வெளிப்படுத்துவதில் ஊடகங்களின் பணி போற்றுதலுக்குரியது. உலகத்தில் 40 இற்கு மேற்பட்ட நாடுகளில் ஊடகக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.மக்களினை நெறிப்படுத்தும் துறைகளில் ஊடகத்திற்கு முக்கிய பங் குள்ளது. ஊடகங்கள் இரு பிரிவாக தொழிற்பட்டு வருகிறன. அச்சு ஊடகம்த இலத்திரனியல் ஊடகம் என இரு பிரிவு கள் உள்ளன.
ஊடகப் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறும் இந்த மாணவர்களில் மிக சிறப்பானதொரு எதிர்காலம் தெரிகிறது. ஊடகக் கல்வியை பெற விரும்பும் மாண வர்களுக்கு யாழ்.பல்கலைக்கழக ஊடக உயர் கல்விப் பிரிவுக் கதவுகள் எப்போ தும் திறந்திருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே சமூகத்திற்கு நம்பிக்கை தரக்கூடிய இந்த ஊடகத்துறை மென் மேலும் வளர்ச்சியடைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.