Friday, December 28, 2012

நம் இல்லங்களும் தெய்வீக அன்பால் உருவாக்கப்பட உழைப்போம்

30.12.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
 
இன்று திருக்குடும்ப விழாவைக் கொண்டாடுகிறோம். குடும்ப பண்பை விழக்க படித்த கதைஒன்றை பகிர்வது இங்கு நல்லது: ஒருமுறை ஓர் அரசர் சிறந்த ஓவியத்திற்கு உயர்ந்த பரிசு அளிக்கப்படுமென அறிவித்தார். சிறந்த ஓவியமாய் எதை வரைவது என திறமை மிகு ஓவியர்கள் பலரிடையே குழப்பமாய் இருந்தது. கடைசியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியம் இதுதான். “விவசாயி ஒருவர் பகல் முழுவதும் வயலில் உழுது விட்டு மாலை நேரத்தில் களைப்படைந்த நிலையில் கலப்பையை தோழில் போட்டுக் கொண்டு வீடு திரும்புகிறார். அவரின் மனைவி அவரின் குடிசை வாயிலில் நின்று கொண்டு அன்பான முகப்பாவனையில் அவரை வரவேற்க காத்திருந்தார். அவர்களின் சிறுவயது குழந்தையோ வீட்டிலிருந்து அவரை நோக்கி இரு கைகளையும் நீட்டிய நிலையில் ஓடுகிறது”. இம்மூவரும் ஒருவரை ஒருவர் ஏற்று அன்பு செய்து அரவணைப்பதைக் ஓவியம் தெளிவாக காணமுடிகிறது. இம்மூன்று பண்புகளுமே நல்ல குடும்பத்தின் சிறப்பாகும். “ஆண்டவருக்கு அஞ்சும் மனிதனை அவர் சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார். கனிதரும் கொடி முன்திரிபோல் அவன் மனைவி அவள் வீட்டின் உட்புறத்தில் இருப்பாள். ஒலிவச் செடிகள் போல அவன் மக்கள் பந்தியில் அவளைச் சூழ்ந்திருப்பர் என நாம் திருப்பாடலில்(தி.பா.128:3-4)வாசிக்கிறோம். இது ஓவிக்கருத்தானாலும் எம்வாழ்விலும் ஒளிரவேண்டும்
 
திருச்சபை திருக்குடும்பத்தை நாம் முன்மாதிரிகையாய் வாழ வேண்டுமென இன்று நினைவுறுத்துகிறது. நல்லவர்கள் வரமுடியா நாசரேத்து ஊரில் அவர் குடியிருந்தாலும் இவர் தச்சன் மகனல்லவா? எனக் குறைத்து மதிப்பிடும் தொழில் செய்தாலும் இவரின் தாய் மரியாவல்லவா? எனப் பெயர் குறிப்பிடும் சாதாரண பெண்ணாய் மரியாள் இருப்பினும் அக்குடும்பத்தில் சூசையப்பரிடம் நீதி இருந்தது. மரியாளிடம் “இதோ ஆண்டவரின் அடிமை” எனக் கூறும் தாழ்ச்சி இருந்தது. இயேசுவிடம் பெற்றோருக்குப் பணியும் கீழ்ப்படிதல் இருந்தது. இக்குடும்பமே நம் குடும்பங்களுக்கு முன் மாதிரிகை.
இக்குடும்பத்தில் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பு பளிச்சிடுகிறது. பன்னிரண்டு வயதில் மூன்று நாள்கள் காணாமல்போன மகனைத் தேடியலைந்து கண்டுகொண்ட அன்னை, மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக் கொண்டிருந்தோமே என்றார். இந்த வரிகள் அனைத்து அன்னையரின் மனநிலையை, இதய வேதனையை அருமையாக வெளிப்படுத்துகின்றன. தம் பிள்ளை மேல் தாங்கள் கொண்டிருந்த பொறுப்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. நாசரேத்துக்குத் திரும்பிச் சென்ற பிறகு இயேசு இறை நம்பிக்கையிலும் ஞானத்திலும் உடலிலும் வளர வழிகாட்டினர். இவ்வாறு பொறுப்புள்ள பெற்றோருக்கு மரியாவும் சூசையும் முன்மாதிரியாய் விளங்குகின்றனர்.
 
இன்று குடும்பங்கள் பலவிதமான சிக்கல்களைச் சந்திப்பதை பார்க்கிறோம். மண முறிவுகள், பிளவுகள், சண்டை சச்சரவுகள், ஊடகங்களின் தாக்கத்தால் ஆன்மீகச் சிக்கல்கள் போன்றவை குடும்பத்தின் ஆணி வேரையே அசைத்துப் பார்க்கின்றன. திருமணம் செய்யாமல், குடும்ப வாழ்வுக்குள் நுழையாமல் விருப்பம்போல் வாழலாம் என்னும் மனநிலை மெல்ல, மெல்ல பரவி வருகிறது. அத்துடன் ஒவ்வொரு தாயும் தன் பிள்ளைக்காக துன்புறுகிறார். தம் பிள்ளைகள் தம்மை விட்டு, தமது வாழ்வு நடைமுறைகளைவிட்டு விலகிச் செல்லும்போது தாய் பெரிதும் வேதனை அடைகின்றார். படிப்பில் கவனம் செலுத்தாமல், தொலைக்காட்சி, அலைபேசி, இணைய தள விளையாட்டுகளில் ஆர்வம் காட்டும் போது பிள்ளைகளை எண்ணித் தாய்மார்கள் கவலைப்படுகின்றார்கள். அவர்கள் நன்முறைக்குத் திரும்ப வரவேண்டுமென்று தேடுகிறார்கள். எனவே, குடும்பங்களை உறுதிப்படுத்தும் பணியை நாம் அக்கறையுடன் ஆற்றவேண்டும். இந்த நாளில் நமது குடும்பங்கள் அனைத்தும் ஆன்மீக குடும்பங்களாகத் திகழ இறைவனை வேண்டுவோம்.
 
திருக்குடும்பத்தின் தலைவர்கள் விசுவாசம் நிறைந்தவர்களாவும் அருள் வாக்குக்குக் கீழ்படிந்தவர்களாகவும் இறை வார்த்தையை ஆழ்ந்து சிந்தித்து செயற்படுபவர்களாகவும் விளங்கினார்கள். மூவரும் தனித்தனியாகவும் ஒன்றாகவும் சேர்ந்து வளர்த்துக் கொண்ட மதிப்பீடுகள் மனநிலைகள், நற்பண்புகள், செயல்பாடுகள் அனைத்தையும் இன்று சிந்திப்பதோடு வாழவும் நாம் முடிவெடுக்கவும் வேண்டும்.
 
புனித அகுஸ்தினார் மனந்திரும்பி இயேசுவை பின்பற்றுவதற்கு அவரின் தாய் மொனிக்காவின் இடைவிடா செபம் தான் காரணம். புனித குழந்தை தெரசாள் தன் தந்தை மார்டினைக் குறித்து இவ்வாறு கூறுவார். “என் தந்தை இப்பூமியில் வாழும் போதே புனிதரைப் போன்று எனக்குத் தென்பட்டது. அவரின் புனிதமே நாங்கள் அனைவரும் துறவு வாழ்வில் இறைபணி செய்ய காரணம்” என்றார்.
“நல்ல குடும்பமே தேவ அழைத்தலின் விளைநிலம் என்றார் பரிசுத்த தந்தை. வீடு செங்கற்களால் கட்டப்படுகிறது. ஆனால் நல்ல இல்லமோ தெய்வீக அன்பால் உருவாக்கப்படுகிறது". எனவே, நம் குடும்பங்களும் திருக்குடும்பத்தைப் போல் வளரட்டும் வாழட்டும் வாழ்த்துகின்றோம்.

Friday, December 21, 2012

இயேசுவின் பிறப்பில் நாம் வாழ எம்மை சாத்தியாமாக்குவோம்


23.12.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
திருவருகைக்காலத்தில் இருக்கும் நமக்கு, இது கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு முன்னான கடைசி ஞாயிறு. இது மனித உடலேற்பு மறைபொருளான கிறிஸ்து பிறப்புக்கு அழைத்துச்செல்லுகிறது.

மத்திய அமெரிக்காவின் மறைந்து போன மாயன் நாகரீக மக்களில் நடுவில் வழக்த்தில் இருந்த  கதை ஒன்று: மனிதன் ஒருநாள் காட்டில் சோகமாக அமர்ந்திருந்தான். காட்டு விலங்குகள் அவனைச் சுற்றி வந்து அவனிடம், ‘நீ சோகமாக இருப்பதை எங்களால் சகிக்க முடியவில்லை. என்ன வேண்டுமானாலும் கேள். நாங்கள் உனக்குத் தருகிறோம்’ என்றன. மனிதன், ‘எனக்கு நல்ல கண்பார்வை வேண்டும்’ என்றான். கழுகு ‘என் பார்வையை உனக்குத் தருகிறேன்’ என்றது. ‘யாரும் எதிர்க்கமுடியாத வலிமை வேண்டும்’ என்றான். ஜகுவார், ‘நான் தருகிறேன்’ என்றது. ‘பாதாளங்களின் இரகசியத்தை அறிய வேண்டும்’ என்றான். பாம்பு, ‘அதை நான் உனக்குக் காட்டுகிறேன்’ என்றது. எல்லா விலங்குகளும் தன் ஆற்றலை இப்படியாக மனிதனுக்குத் தந்தது. எல்லா ஆற்றல்களையும் பெற்ற மனிதன் எழுந்து புறப்பட்டான். அப்போது மான் மற்ற விலங்குகளைப் பார்த்து, ‘மனிதன் இப்போது எல்லாவற்றையும் பெற்று விட்டான். இனி அவனிடம் சோகம், வருத்தம் இருக்காது’ என்றது. அதற்கு ஆந்தை மறுமொழியாக, ‘இல்லை, மனிதனின் மனத்தில் ஒரு துவாரத்தை, வெற்றிடத்தை நான் பார்த்தேன். அது ஒரு தணிக்க முடியாத பசி. அது அவனுக்கு சோகத்தைத் தரும். இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று அவன் எல்லாவற்றையும் கொண்டு அந்த வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டேயிருப்பான். ஒருநாள் இந்த பூமி சொல்லும்: ‘இதற்கு மேல் நீ எடுத்துக்கொள்ள என்னிடம் ஒன்றுமேயில்லை’. மனிதனின் தேடலை, தேடல் தருகின்ற ஏமாற்றத்தையும், ஏக்கக்தையும், தாகத்தையும், பசியையும், விரக்தியையும் வெளிப்படுத்துகின்ற ஒரு கதை இது.

வாழ்வில் நிகழ்வுகள் எம் எதிர்பார்ப்புகளுக்கு மாறாகச் செல்லும்போதும், வாழ்வின் நிகழ்வுகள் எம் அமைதியைக் குலைக்கும்போதும், நாம் செல்கின்ற பாதை தெளிவாக இல்லாத போதும் நாம் நினைத்துக்கொள்ளுவத கடவுள் இல்லை. ஆனால் “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என் நுகம் அழுத்தாது. என் சுமை எளிதாயுள்ளது.” என்று எம்மிடம் வரும் இயேசு கூறுகின்றார். எல்லாவற்றையும் கொண்டு வெற்றிடத்தை நிரப்பத் துடிக்கும் எமக்கு ஒரு நிறைவான வழியைக் காட்டுகின்றார் இயேசு. அவரது ஒளியில் நாம் எப்போதும் நடக்க வேண்டுமெனில், இறை வார்த்தையின் வழி நடக்க வேண்டும்.

அநீதியான ஆடம்பரச்  செயல்கள், இரக்கமற்ற அதிகாரம், நியாயமற்ற பொருளாதார நெருக்கடி எனக் கூக்குரலிடும் உலகின் பல பகுதிகள், இயேசுவின் போதனையில் உண்மை அர்த்தத்தைக் காண முடியும். நீதியும்-பிறரன்பும், உண்மையும்-நேர்மையும், அதிகாரமும் - மதித்தலும் ஒன்றுக்கொன்று இணைந்து செல்ல வேண்டும். அத்துடன்  எம் வார்த்தைகள் இன்றும் நம் வாழ்வுடன் இயைந்து செல்பவைகளாக இருக்கவேண்டும். இருப்பவர் இல்லாதவரோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். இன்று அளவுக்கதிகமாக வைத்திருக்கும் நிலை, மற்றும், அளவுக்கதிகமாகத் துன்புறும் நிலை என்ற இந்த இரு நிலைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை நீக்குவதற்கு நீதி எமக்கு அழைப்பு விடுக்கிறது. நேர்மையுடனும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமலும், அயலவர்மீது அன்புடனும் நடக்க வேண்டியத் தேவையில் நாம் உள்ளோம்.

நுகர்வுக் கலாச்சாரத்தில் தன் மகிழ்வைத் தேடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகில், கிறிஸ்து பிறப்பு விழாவை நாம் காத்திருந்து எவ்விதம் கொண்டாடப்போகின்றோம் என்பது ஏக்கம் நிறைந்த கேள்வி வருகையும், காத்திருத்தலும் நமது அன்றாட வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. வருகை மகிழ்ச்சியையும், காத்திருத்தல் நம்பிக்கையுடன் கூடிய சுகத்தையும் தருகிறது. நாம் பலவேளை பலரின் வருகைக்காக காத்திருந்தபோது  ஏமாற்றம்தான் எஞ்சியிருந்தது. ஆனால் இறைவாக்கினர்கள் வாயிலாக பேசிய இறைவன் இறுதியிலே மனித உரு நமக்காக நம்முடன் வாழ வருகின்றார்;. அவர் நம்மிடம் கேட்பது என்ன? அன்பு மட்டும்தான் அதைத் தர நமது மனம் ஏன் மறுக்கிறது? இறையன்பும், பிறரன்பும்தானே நாம் கடைபிடிக்க வேண்டிய கட்டளைகள். என்னை அன்பு செய் இறையன்பு, உன்னை அன்பு செய்வதுபோல் உன் அயலானையும் அன்பு செய் பிறரன்பு இவைதானே இயேசு நமக்கு கொடுத்த கட்டளைகள். இதனை கடைபிடிக்க நாம் தவறுவது ஏன்? காரணம் சுயநலம்.

கலாசாரமும், பண்பாடும் அழியும்போது, அட்டூழியம் எங்கும் மிளிரும்போது, அரசியலும், சினிமாவும்தான் வாழ்க்கை என்றாகும் போது, குடி, போதை, சீரியலுக்கு அடிமையாகும்போது, இன்னும் பல போதுக்களோடு நாம் வாழும்போது இயேசுவின் பிறப்பு நம்மிலே எப்படி சாத்தியமாகும்.

இருளிலும் இறப்பின் பிடியில் இருப்போருக்கு ஒளிதரவும் நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும், நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும், விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது எனவே இயேசுவின் பிறப்பில் நாம் வாழ எம்மை சாத்தியாமாக்குவோம்

Thursday, December 13, 2012

உண்மை வாழ்வைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாவோம்

16.12.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இன்று நாம் சந்திப்பு. பற்றி சிந்திக்கலாம்  சந்திப்புகள் பலவிதம். புனித பிலிப் நேரி வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு சம்பவம். புனித பிலிப் நேரி ஒருநாள் நண்பர்களுடன் பொழுதுபோக்காக சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சாவைப் பற்றிய பேச்சு அங்கு எழுந்தது. நண்பர்களில் ஒருவர் பிலிப்பிடம், "பிலிப், இதோ, அடுத்த நிமிடமே நீ இறக்கப் போகிறாய் என்று தெரிந்தால், என்ன செய்வாய்?" என்று கேட்டார். பிலிப் அவரிடம், "தொடர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பேன்." என்றாராம். பிலிப் நேரியாரைப் போல் எந்தவித பயமும் இன்றி இறைவனைச் சந்திக்க நாம் என்ன செய்ய வேண்டும்? நல்ல கேள்வி: இதே கேள்வியைத் தான் மக்கள் திருமுழுக்கு யோவானிடம் எழுப்புகிறார்கள். இறைவனைச் சந்திக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று யோவானைச் சுற்றி இருந்த மக்கள் தேட ஆரம்பித்தனர்.

இந்தக் கேள்விக்கு நாம் பதில் தேடு முன்பு, திருமுழுக்கு யோவானைச் சுற்றி நின்ற கூட்டத்தில் இருந்தவர்கள் யாவர் என நோக்கினால்: மக்கள், வரிதண்டுவோர்;, படைவீரர் என நற்செய்தி சொல்கின்றது. ஆனால், ஒரு முக்கிய குழுவைப் பற்றி இன்றைய நற்செய்தியில் இல்லை. ஆனால், அவர்கள் கட்டாயம் அந்தக் கூட்டத்தில் இருந்திருக்க வேண்டும். யார் அவர்கள்? மதத் தலைவர்கள் தான் அவர்கள். யோவானின் புகழ் பரவி வந்ததை அவர்களும் அறிவர். யார் இந்த மனிதர்? என இவரைத் தேடி பாலைவானத்திற்கே மக்கள் போகிறார்கள் என்றால் தங்கள் கேள்விகளுக்கு விடை தேடி அந்த மதத் தலைவர்களும் அங்கு வந்திருப்பர்.

இந்த கூட்டத்தில் யோவான் இறைவனின் வரவை, இறைவன் வார்த்தையை எடுத்துக் கூறுகிறார். இடித்துக் கூறுகிறார். யோவான் சொன்னதைக் கேட்ட மக்கள், வரிதண்டுவோரும், படைவீரர் இவர்கள் நடந்து கொண்டது ஒரு விதம். மதத் தலைவர்கள் நடந்து கொண்டது வேறு ஒரு விதம். கண்ணாடியில் தெரியும் உருவம் சரியில்லை என்றால், கோபத்தில் கண்ணாடியை உடைப்போமா? உடைத்தார்கள் அந்த மதத் தலைவர்கள். யோவான் வாழ்ந்த தவ வாழ்வு, அவரது போதனை எல்லாம் மதத் தலைவர்களின் முகமூடிகளைக் கிழித்து அவர்களது உண்மை உருவைக் காட்டும் கண்ணாடியாக இருந்தது. தங்கள் வாழ்வைச் சங்கடபடுத்தும் இந்த உண்மையை ஊமையாக்க ஒரே வழி? இந்தக் கண்ணாடியை உடைக்க வேண்டும். மதத்தலைவர்கள் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். உண்மையை ஊமையாக்க வேண்டும், உண்மை வாழ்வைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளை உடைக்க வேண்டும் என திட்டம் போட்டனர்.

மதத் தலைவர்களுக்கு மாறாக, தங்கள் வாழ்வின் உண்மை நிலையைக் காட்டிய யோவானிடம் மக்கள், வரிதண்டுவோர்;, படைவீரர்  மீட்படையும் வழி கேட்டார்கள். ஏக்கம் நிறைந்த கேள்வி: நாங்கள் என்ன செய்ய வேண்டும்? நாங்கள் இறைவனைச் சந்திக்க என்ன செய்யவேண்டும்? சாக்குத் துணி அணிந்து, சாம்பல் பூசி, சாட்டைகளால் உங்களையே அடித்துக் கொண்டு கடும் தவம் செய்யுங்கள்." யோவான் இப்படி சொல்வார் என்று எதிர்பார்த்திருந்தனர் அந்த மக்கள். ஏனெனில் யோவானே அத்தகைய கடும் தவங்களைச் செய்து வருகிறவர். ஆனால், யோவான் கூறிய பதில் மிக எளியது:

பிரச்சனைகளுக்கான தீர்வை இயேசுகிறிஸ்துவுடன் நாம் கொள்ளும் ஒன்றிப்பிலேயேக் காணமுடியும், ஏனெனில் அதுவே அன்பு மற்றும் உண்மையை அடிப்படையாகக்கொண்ட வழிகளும் நடவடிக்கைகளும் உருவாகக் காரணமாகிறது. இறைவன் மீது கொண்டுள்ள தாகத்தை நினைவில்கொண்டு, உள்மன வாழ்வைத் தூய்மைப்படுத்தி, பலப்படுத்தவேண்டும்.

மனித குலம் அனைத்தும் ஆண்டாண்டு காலமாக எதிர்நோக்கியிருந்த ஒரு முடிவற்ற புதிய உடன்படிக்கையைக் குறித்து இறைவாக்குனர்கள் வழியாகக் கற்றுக்கொண்டனர். மனித வரலாற்றில் படிப்படியாக உணரப்பட்டு வடிவம் பெற்று வந்த இத்தெய்வீகத்திட்டம், இறைமகன் மனுவுருவெடுத்த இயேசுகிறிஸ்துவின் வருகையில் தான் உச்சநிலையை அடைந்தது. இந்த திருவருகைக்காலத்தில் இறைவனின் மீட்புத்திட்டம் படிப்படியாக வெளியிடப்பட்டதை ஆழ்ந்து தியானிப்போம், கிறிஸ்துவில் இறைவன் நம் அருகே நெருங்கி வந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்வோம்;. பெத்லகேம் குடிலை நிறைத்த மகிழ்வு மற்றும் ஒளி நம் வாழ்வின் வழியாக தன் கதிர்களைப் பரப்பி, இறைபிரசன்னத்தை உணர்ந்ததன் சாட்சிகளாக விளங்குவதற்கு, இவ்வுலகின் கவனச்சிதறல்கள், மனக்கலக்கங்கள் மற்றும் மேம்போக்கான நிலைகள் போன்றவைகளின் மத்தியிலும் நம்பிக்கையையும், நற்செய்தியையும் வாழ்வாக்குவோம்.

Thursday, December 6, 2012

பண்டிகைக்கால வர்த்தகத்திலோ வலைப்பின்னலின் வழுக்கல்களுக்குள்ளோ சறுக்கிவிடாமல் ஆண்டவருக்காக நாம் காத்திருப்போம்.

09.12.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

மனித உடலேற்பு மறைபொருளான கிறிஸ்து பிறப்புக்கு அழைத்துச்செல்லும்  திருவருகைக் காலத்தின் இரண்டாம் வாரத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இது கடவுளின் வருகையை, உலகில் அவரது உடனிருப்பைக் குறித்து நிற்கிறது. அனைத்துலகையும் வரலாற்றையும் உள்ளடக்கிய இந்த மறை பொருளில் இரண்டு அம்சங்கள் உள்ளன: இயேசு கிறிஸ்துவின் முதல் மற்றும் இரண்டாம் வருகை. இறைமகன் இயேசுவின் பிறப்பு நம் இல்லங்களில் நிகழ வேண்டுமென்ற எதிர்ப்பார்ப்பில் இல்லத்தை அலங்கரிக்கும் நிகழ்வுகள் இக்காலங்களில் இடம்பெற்று வருகின்றன. கிறிஸ்மஸ் பண்டிகைக்கால வர்த்தகம் சூடு பிடிக்க புதிது புதிதாக எதுவெல்லாமோ சந்தையில் குவிகின்றன. உறவுகளை ஊக்குவிக்கும் முடிவற்ற வலைத்தொடர்புகளும், சமூகத் தொடர்புகளும் இன்றைய உலகில் குவிந்து காணப்பட அனைத்தையும் அனுபவித்து வாழத்துடிக்கும் இன்றைய உலகின் சுயநலக் கொள்கைகள் மனிதரின் மாண்பைக் கீழ்மைப்படுத்துவதாகவே அமைய நம்; மனங்கள் அதனூடேயும் பயணிக்கின்றன. அதனால் பெரும்பான்மை நேரங்களில் நாம் தனிமையின் வெறுமையை உணர்கின்றனர்.

இத்தகைய நிகழ்வுகள் கிறிஸ்மஸ் பெருவிழாவின் உண்மைப் பொருளை உலகிடமிருந்து மறைப்பதற்குத் துணைபோகின்றன. கிறிஸ்மஸ் ஒரு களியாட்டமாக கொண்டாடவே நாம் முனைவது உண்மையாகிறது. நம் மீட்பரின் வருகையை முன்குறித்து பாலைவனத்தின் அறிவிப்புக் குரலாய் திருமுழுக்கு யோவான் செயற்பட்டார். மனந்திரும்புங்கள். கடவுளின் அரசு தெருங்கியுள்ளது என அவர் மக்களை ஆயத்தப்படுத்தினார். மனமாற்றமடைந்து இறைவனை நாடவேண்டுமென்பதே அவரது வேண்டுகோளாயிருந்தது. அவரது குரலைக் கேட்டவர்களும், அவரைப் புறந்தள்ளியவர்களும் இருந்தனர். அவரது குலைக் கேட்டு மீட்படைந்தவர்களும் உள்ளனர். இன்றைய உலக அவலங்கள், பிரச்சினைகளுக் கெல்லாம் காரணம் மக்கள் இயேசுவின் போதனைகளைக் கைக்கொண்டு நடக்காமையே எனலாம்.

ஆன்மிக வரட்சியுடனான மக்கள் மனங்கள் விசுவாசங் கொள்ளாத ஒரு காலகட்டத்தில் திருமுழுக்கு யோவானின் இச்செய்தி அக்கால மக்கள் மனதில் பசுமரத்தாணியாக பதிந்தது. இன்றும் உலகெங்கிலும் இடம்பெறும் பிரச்சினைகள், வன்முறைகள் சமூகச் சீர்குலைவுகளுக்கும் சிக்கல்களுக்கும் ஆன்மிக வறுமையே முக்கிய காரணம். 'என்னைத் தேடுங்கள் சகலதும் உங்களைத் தேடிவரும். கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படுமென்று" கிறிஸ்து போதித்ததை இக்காலத்தில் நாம் சிந்திப்பது அவசியம்.

கிறிஸ்துவின் பிறப்புப் பெருவிழாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நாம் திருமுழுக்கு யோவான் போல் மனந்திரும்புதலுக்கான அறிவிப்பை இன்றைய சமுதாயத்தில் தெரிவிக்க வேண்டியது அவசியம். பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: 'ஆண்டவருக்காக வழியை ஆயத்தம் பண்ணுங்கள், அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள். பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும். மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்: கோணலானவை நேராக்கப்படும், கரடுமுரடானவை சமதளமாக்கப்படும் மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்".

எனவே இறைவருகைக்கான எமது ஆயத்தம் இதய நெருடல்களாக எம்மனங்களில் பதிந்துள்ள ஏக்கம், துயரம், பாவநிலைகள் என்ற பள்ளத்தாக்குகளை இல்லா தொழித்து மன நிம்மதி, மகிழ்ச்சி, அன்பு, தாழ்ச்சி, விட்டுக்கொடுப்பு என்ற கடவுளின் அருளால் நிரப்பப்படவேண்டும். சுய நலம், வைராக்கியம் என்ற குன்றுகளும் மலைகளும் நம் மனங்களில் தலைதூக்கி நிற்கும் போது, அவை கடவுளின் அருள் நமக்குக் கிட்டுவதற்கான தடைகளாக அமையும்.

இதனால் எம் சிந்தனைகள் நேரற்ற கோணலாகவும் கடும் போக்கினால் உள்ளம் கரடுமுரடாகவும் காணப்படுகின்றது. இவற்றை எம்மிலிருந்து களைந்து தாழ்ச்சியை பொறுமையயை பிறர் அன்பை பிறருக்கு உவந்து உதவுவதை இத்திருவருகைக் காலத்தில் மேற்கொள்வோம். பண்டிகைக்கால வர்த்தகத்திலோ வலைப்பின்னலின் வழுக்கல்களுக்குள்ளோ சறுக்கிவிடமல் 'ஆண்டவருக்காக நான் காத்திருக்கிறேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். விடியலுக்காகக் காத்திருக்கும் காவலரைவிட என் நெஞ்சம் என் தலைவருக்காய்க் காத்திருக்கின்றது. கடவுள் நம்பிக்கையில் தான் உயிர்வாழ்ந்திருப்பர்." என்று கத்திருப்போம்.

அத்துடன் கிறிஸ்துவின் வருகையை நம் வாழ்வால் புதிய நற்செய்தி அறிவிப்பின் வடிவாக வாழ்வோம் அனைவரிடையேயும் அமைதியையும் வளர்க்கும் முயற்சிகளில் பங்கேற்போம் அப்போது கரடு முரடான கோணல் மிக்க நம் வாழ்வு கடவுள் அருளும் மீட்பைக் காண்பது உறுதியாகும்.

Monday, November 26, 2012

நாம் மனம் மாறி மனம்மாற்றுவோம்.

02.12.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இன்று நாம் திருவருகைக் காலத்திற்குள் காலடி எடுத்து வைக்கின்றோம். திருவருகைக் காலம்'  எதிர்நோக்கிக் காத்திருக்கும்" காலம் என்று அழைக்கப்படும். ஆதனால் என்னவோ நம் வாழ்வு சார்ந்த எதிர்பார்ப்பும் திருவருகைக் காலத்தில் தெரிகிறது. மனிதரிடையே சண்டை சச்சரவும் அராஜகமும்  மறைந்து அமைதி நீதி நிலவும் புதியதொரு காலம் மலரும் என்பது நம் எதிர்பார்ப்பு. நீதிக்கு அநீதி தீர்பிடும்காலமும் ஆயுதப் பயிற்சிக்கு ஆட்களை சேர்க்கும் காலமும் இராணுவச் செலவுகள் அதிகரிக்கும் காலத்திலும்  கிறிஸ்துவின் வருகையால் அனைத்து அட்டூழியம் மறைந்து அமைதி நீதி நிகழும் என்பது நம் நம்பிக்கை.

2007ம் ஆண்டு உலகின் பல நாடுகளும் இராணுவத்திற்கென செய்த செலவு 5,850,000 கோடி ரூபாய். (1.339வசடைடழைn னுழடடயசள) அதே ஆண்டு ஐ.நா. அமைப்பு மேற்கொண்ட அத்தனை மனித சமுதாய முன்னேற்ற முயற்சிகளுக்கும் ஆன செலவு (4.2 டிடைடழைn னழடடயசள) ஆகும். எனவே உலக அரசுகள் இராணுவத்திற்குச் செலவிடும் தொகையில் பாதித் தொகையை, அல்லது, பத்தில் ஒரு பங்குத் தொகையை ஏழைகளுக்குச் செலவிட்டால், உலகின் வறுமையைப் பெரிதும் குறைக்கலாம்.
2007 அமெரிக்கத்தலைவர் ஒபாமா இந்தியா வந்திருந்தபோது வாண வேடிக்கைகளுடன் அவர் வரவை கொண்டாடினர். அவரது பயணத்தின் ஒரு முக்கிய காரணம்? அமெரிக்காவின் இராணுவத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்பதற்கான வழிமுறைகளைக் கண்டு பிடிப்பதாகவே இருந்தது என ஊடகங்கள் சில குறிப்பிட்டன. இவ்வாறு பல பில்லியன் டாலர்களை இராணுவத்திற்காகக் கரியாக்கும் நிகழ்வு உலகில் இன்றும் நடந்தவண்ணம் உள்ளது. 

இன்று இராணுவத்தைப் பற்றி; பேச காரணம் முதல் வாசகத்தில். எசாயா இறைவாக்கினர் இறுதி நாட்கள் குறித்து காணும் ஒரு அழகான கனவு தரப்பட்டுள்ளது தான்: 'அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்."
வாள்கள் கலப்பை கொழுக்களாக மாறும். ஈட்டிகள் அறுவடை செய்யும் அரிவாள்கள் ஆகும். உயிர்களை அறுவடை செய்யும் படை வீரர்கள் பயிர்களை அறுவடை செய்யும் அற்புதமானப் பணியில் ஈடுபடுவார்கள். போர் பயிற்சிகளுக்குப் பதிலாக, ஏர் பிடித்து உழுகின்ற பயிற்சிகள் நடைபெறும். இந்த அற்புதமான, அழகான கற்பனை, எம்மை; நம் குழந்தைப் பருவத்திற்கு, வாலிபப் பருவத்திற்கு  அழைத்து செல்லும் கற்பனையைப் போன்றது. இவைகள் கற்பனைகளாக, கனவுகளாக மட்டுமே இருக்க முடியும். நனவாக மாறவே முடியாது என்று நம்மில் பலர் தீர்மானித்து விட்டோம். எனவே, இப்படி ஒரு காட்சியை நினைத்துப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விடலாம், அல்லது ஒரு விரக்தி சிரிப்பு சிரிக்கலாம். நமது ஏக்கத்திற்கும், விரக்திக்கும் காரணம் உள்ளது. எசாயாவின் கனவில் போர் கருவிகள் விவசாயக் கருவிகளாக மாறுகிறது. நாம் வாழும் சூழலில் விவசாயக் கருவிகள் போர் கருவிகளாக மாறி வருகின்றன. பயிர்களை அறுவடை செய்யும் அரிவாள் உயிர்களை அறுவடை செய்யும் கொடூர கருவிகளாகின்றன.

இத்த திருவருகை காலத்தில் இயேசுவின் வருகைக்கு எம்மை சரியான முறையில் ஆயத்தப்படுத்துவோம். ஆமிப்பயிற்சிக்கு ஆட்களை சேர்ப்பதை தவிர்த்து அன்பியப்பயிற்சிக்கு ஆட்களை சேர்க்க ஆயத்தமாவோம். இயேசுவின் பிறப்பு ஆயத்தங்கள் நாம் வாழும் இன்றைய காலங்களில் எமது வெளியரங்க ஆயத்தங்களோடு மட்டும் நின்று விடுவது மிகவும் மனம் வருந்துவதற்குரிய செயலாக இருக்கின்றது. இயேசுவின் பிறப்புக் கால ஆயத்தங்கள் மற்றவர்களால் வியாபார மயப்படுத்தப்படலாம். ஆனால் கத்தோலிக்கர் என்ற சொல்லும் எமது ஆயத்தம் எவ்வாறு இருக்கின்றது? போரின் வடுக்களை தினம் கண்டு வாழும் குழந்தைகள் மட்டில் எங்களது ஆயத்தம் எத்தகையது?

இன்றைய நற்செய்தி வாசகம் தெளிவான எச்சரிக்கையைத் தருகிறது. எமது உள்ளங்கள் மந்தம் அடைவதற்கான மூன்று காரணிகளை இயேசு சுட்டிக்காட்டுகிறார்: குடிவெறி, களியாட்டம், இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலைகள். இந்த மூன்றிலும் ஈடுபடுபவர்கள் இறையாட்சியில் பங்கேற்க முடியாது என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார். குடிவெறி என்பது நிச்சயமான மந்தப் பொருள். அது உடலையும், உள்ளத்தையும் மட்டுமல்ல ஆன்மாவையும் மந்தப்படுத்துகிறது. களியாட்டம் என்பதோ தேவைக்கதிகமான பொழுதுபோக்கு, உல்லாசம் போன்றவற்றைக் குறிக்கிறது. எப்போது இவை இறைவனிடமிருந்து நம்மை பிரிக்கின்றனவோ, அப்போது பொழுதுபோக்குகளும், மகிழ்ச்சி;ச் செயல்பாடுகளும்கூட களியாட்டமாக மாறிவிடுகின்றன. நம் வாழ்வைக் கொஞ்சம் ஆய்வு செய்து, குடிவெறி, களியாட்டம், உலகக் கவலைகள் நம் அகவாழ்வை மந்தப்படுத்தியுள்ளனவா என கண்டறிவோம். ஆம் என்றால், இவை மூன்றிலிருந்தும் விடுபட்டு, இறைப்பாதம் சேர்வோம்.

Tuesday, November 20, 2012

பாதங்களை கழுவும் மாமன்னராய் மாறுவோம்


25.11.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இன்று நாம் கிறிஸ்துவை அரசராக நினைந்து விழாக்கொண்டாடுவதற்கு தரப்பட்ட வாசகம் பிலாத்து இயேசுவைச் சந்தித்தக் காட்சி. இன்நற்செய்தி 'கிறிஸ்துவை அரசர்" என்பதன் உட்பொருளை ஓரளவு உணர்துகின்றது. இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது, அவரை அரசராக எண்ணிப் பார்த்தவர்கள், அரசராக்க முயன்றவர்கள் ஒரு சிலர்.

நற்செய்தியில் இயேசுவை அரசர் என்று கூறிய முதல் மனிதர்கள் கீழ்த்திசை ஞானிகள். இயேசு பிறந்ததும், அவரைக் காண நெடுந்தூரம் பயணம் செய்து தேடி வந்து உலக அரசரைப் போல் அவர் இருப்பார் என்று ஏரோது அரசனின் அரண்மனைக்குச் சென்றனர். ஏரோதிடம், 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? என்றார்கள்."  கள்ளம் கபடில்லாமல் அவர்கள் கேட்ட அந்தக் கேள்வி பல நூறு கள்ளம் கபடமற்ற குழந்தைகளின் உயிரைப் பலி வாங்கி விட்டது.

இரண்டாவது சம்பவம் யோவான் நற்செய்தி இயேசு அப்பத்தைப் பலுகச் செய்து, மக்களின் பசியைத் தீர்த்தார்து. இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், 'உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்"

மூன்றாவது சம்பவம் எருசலேம் வீதிகளில் நடந்தது. திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், 'ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!' என்று சொல்லி ஆர்ப்பரித்தனர்.

வயிறார உண்டதால் வந்த ஆர்வம் இயேசுவை அரசராக்கத் துடித்தது. தங்களுக்கு விடிவு வராதா என்ற ஏக்கம், எருசலேம் வீதிகளில் ஆரவாரமாய் ஓசன்னா அறிக்கையாக மாறியது. ஆனால், இப்படி அந்தந்த நேரத்தின் தேவைக்கேற்ப தோன்றி மறையும் ஆர்வம், ஆரவாரம் நிலைத்திருக்காது என்பது சில நாட்களிலேயே நிஷரூபணமானது.

நான்காவது சம்பவம் இயேசுவின் விசாரணைகளின் போது நடந்தது. இயேசுவை அரசர் என்று பிறர் கூறிய வதந்திகளால் பயம் கொண்ட பிலாத்து, இயேசுவிடமே நீர் அரசரா? என்று கேட்டார். அந்தக் கேள்வியின் உண்மையான பதிலைக் கண்டு பிடிக்கவும் பிலாத்து பயந்தார்.

ஐந்தாவது பிலாத்துவும் யூதர்களின் தலைமைக்குருக்களும் இடையில் நடந்த உரையாடல் காட்டுகின்றது: யூதரின் அரசன்  என்று எழுதவேண்டாம் மாறாக  யூதரின் அரசன் நான் என்று அவனே சொல்லிக்கொண்டதாக எழுதும்  என்று கேட்டுக்கொண்டனர்  பிலாத்து நான் எழுதியது எழுதியது தான் என்றான்.

'அரசர்" என்று இயேசு அழைக்கப்பட்ட ஆறவதான நிகழ்வு கல்வாரியில் நடந்ததாக லூக்கா நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது. இயேசுவை அரசராகப் பார்க்க முடியாத உரோமைய வீர்களின் ஏளனக் குரலும், இயேசுவை அரசர் என்று ஏற்றுக் கொண்ட குற்றவாளியின் ஏக்கக் குரலும் இன்நற்செய்தியில் ஒலிக்கின்றன.

உரோமைய வீரர்கள் இதுவரை பல அரசர்களைச் சந்தித்தவர்கள். பல அரசர்களுக்கு பணிவிடை செய்தவர்கள். அவர்களுக்குத் தெரிந்த அரசர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சிலுவையில் குற்றவாளி போல் தொங்கிக் கொண்டிருந்த இயேசு ஒரு பரிதாபமான, போலி அரசனாய் தெரிந்தார். அவர்களது ஏளனத்திற்குத் தூபம் போடும் வகையில் அந்தச் சிலுவை மீது "இவன் யூதரின் அரசன்." என்று ஏக வசனத்தில் எழுதி, வைக்கப்பட்டிருந்தது.

இந்த ஏளனக் குரல்களுக்கு நேர் மாறாக, இயேசுவுடன் அறையப்பட்டிருந்த குற்றவாளியின் ஏக்கக் குரல் இயேசுவின் அரசத் தன்மையை வெளிப்படுத்துகிறது.'இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்".

சிலுவையில் தொங்கும் அந்த உருவத்தை மனிதன் என்று கூட ஏற்றுக்கொள்ள முடியாத அந்த சூழ்நிலையில், இந்தக் குற்றவாளி இயேசுவை ஓர் அரசனாக எப்படி காண முடிந்தது? அவர் இயேசுவிடம் கண்ட அரசத் தன்மை என்ன? உலக மன்னர்களில் ஒரு சிலர் கைது செய்யப்பட்ட போது, அல்லது அவர்கள் தூக்கு மேடைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, அவர்கள் காட்டிய கண்ணியம், அமைதி எதிரிகளையும் அவர்கள் மீது மரியாதை காட்ட வைத்தது என்று வரலாறு சொல்கிறது. அந்த கண்ணியத்தை, அந்த அமைதியை இயேசுவிடம் கண்டார் இந்தக் குற்றவாளி. அவர் கண்களில் இயேசு அறையுண்டிருந்த சிலுவை ஒரு சிம்மாசனமாய்த் தெரிந்தது. இயேசு தலையில் சூட்டப்பட்ட முள்முடி, மணி மகுடமாய்த் தெரிந்தது. எனவே, இயேசு அரசரிடம் தன் விண்ணப்பத்தை வைத்தார் அந்தக் குற்றவாளி.

இதுவரை நாம் சிந்தித்த மற்ற நிகழ்வுகளிலும் இயேசு தவறான முறையில் 'அரசன்" என்று கருதப்பட்டார். இவர்களில் யாருக்கும் இயேசு சரியான பதில் கூட சொல்லவில்லை. தன்னை வாழ்வில் அரசரென அழைத்த, அல்லது அரசராக்க முயன்ற பலருக்கும் பதில் தராத இயேசு, இந்தக் குற்றவாளிக்குப் பதில் தருகிறார். தனது உண்மையான அரசை, தனது உண்மையான அரசத் தன்மையை இந்தக் குற்றவாளி கண்டு கொண்டார் என்பதை இயேசு உணர்ந்ததனால் என்னவே அவருக்கு மட்டும் சரியான பதிலைத் தருகிறார். 'நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என உறுதிகூறுகின்றார் இயேசு.

இயேசு நமக்கும் இந்த உறுதியைத் தருகிறார். தன் பேரின்ப வீட்டில் நமக்கும் இடம் தர நம்மை அழைக்கிறார். இதுதான் அவர் நிறுவ வந்த அரசு. இதற்குதான் அவர் அரசர். இறைவன் ஒருவரே தேவை, அவர் ஒருவரே போதும் என்று சொல்லக்கூடிய மனங்களில் இந்த அரசு நிறுவப்படும். இந்த அரசில் அரசன் என்றும், அடிமை என்றும் வேறுபாடுகள் இல்லை, எல்லாரும் இங்கு அரசர்கள். இந்த மன்னர்கள் மத்தியில் இயேசு ஒரு மாமன்னராய் அமர்ந்திருப்பார் என்று தேடினால், நமக்கு ஏமாற்றமே காத்திருக்கும். ஏனெனில், இயேசு அரியணையில் அமர்ந்திருக்க மாட்டார். அவர் நம் எல்லாருடைய பாதங்களையும் கழுவிக்கொண்டு இருப்பார். எல்லாரையும் மன்னராக்கி, தானும் மன்னராகும் இயேசுவின் அரசுத்தன்மையைக் கொண்டாடத்தான் இந்த கிறிஸ்து அரசர் திருநாள். இத்திருநாள் தான் கிறிஸ்து அரசர் பெருவிழா.

Saturday, November 17, 2012

எதிர் காலத்தை எதிர்கொள்ளும் மனப் பக்குவத்தை எம்மில் வளர்ப்போம்.

19.11.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இன்றைய நற்செய்தியில், இயேசு தனது இரண்டாவது வருகையை பற்றி கூறுகிறார். ஆனால் இங்கே இயேசு இன்னும் அவரின் முதல் வருகையையின் பணியை முழுவதுமாக முடிக்கவில்லை. 'அந்நாள்களில் வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டு விடும் நிலா ஒளி கொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும் வான்வெளிக் கோள்கள் அதிரும்." இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். 

இது இன்றுவரை ஒரு முடிவில்லாதப் பிரச்சினை. இயேசு எங்கே? அவர் என்ன சொன்னார் என்பதை கவனித்தால்: 'இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார்". அவர் எந்த ஒரு தேதியையும் உறுதியாக சொல்லவில்லை. சீடர்களுக்கு எந்த ஒரு தடயமோ, அல்லது தமது இரண்டாம் வருக்கைக்கான எந்த ஒரு சரியான குறியீடும் கொடுக்கவில்லை. ஏனெனில், அவருக்கும் அது தெரியாது!
கிறித்தவத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்றுதான் இயேசுவின் இரண்டாம் வருகை. முதல் வருகையின்போது, மனித உருவெடுத்து, தொடர்ந்து பாடுபட்டு, மரித்து, உயிர்த்த இறைமகன் இயேசு  இரண்டாம் முறையாக மீண்டும் வருவார். அந்த வருகையின்போது அவர் நடுவராக உலகைத் தீர்ப்பிடுவார். என்பதுவே இரண்டாம் வருகையின் பொருள். இதை நாம் ஒவ்வொரு நாளும் திருப்பலியிலும், விசுவாசப் பிரமாணத்திலும், இன்னும் வேறு பல வேளைகளிலும் அறிக்கையிடுகிறோம்.

இந்த விசுவாச அறிக்கையை எப்படி வாழ்வில் பயன்படுத்துவது என வினாவினால் அது ஒரு நல்ல கேள்விதான். நடுவராக இயேசு மீண்டும் வரவிருக்கிற அந்த இரண்டாம் வருகை உலக முடிவில்தான் இருக்கும். உலக முடிவு எப்போது என்று மனுமகனுக்கே தெரியாது என்று இயேசுவும் கூறிவிட்டார். எனவே, நம்மைப் பொறுத்தவரை, உலக முடிவு என்பது நம் ஒவ்வொருவரின் முடிவுதான். அதாவது, நமது இறப்புதான். நாம் இறக்கின்றபோது நடுவராம் இயேசு நம்மைச் சந்தித்து நம்மைத் தீர்ப்புpடுவார். அந்தத் தீர்ப்பின் வேளைக்காக நாம் எப்போதும் ஆயத்தமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் நாம் இறைவனுடைய பிரசன்னத்தை உணர்ந்து வாழ்வதும், நமது பணிகளை நேர்மையாக, நேர்த்தியாக ஆற்றுவதுமே இரண்டாம் வருகைக்கான நமது தயாரிப்பு.

இயேசு தம் சீடர்களுக்கு இன்னுமொரு விடையத்தை கூறுகின்றார் அது நிறைவுக் காலம் பற்றியது. கடவுளாட்சி ஏற்கெனவே வந்துவிட்டது என்றாலும் அதன் முழுமை இன்னும் மலரவில்லை. ஆனால் இயேசு இறுதி வெற்றி உறுதியாக வரும் என நமக்குக் கற்பிக்கிறார். இந்த உலகில் நிலவுகின்ற அநீதிகளும் அட்டூழியங்களும் ஒருநாள் முடிவுக்கு வரும் எனவும், குறைகளும் குற்றங்களும் மலிந்த நம் வாழ்வு ஒரு நாள் ஒளிமயமானதாக விளங்கும் எனவும் நமக்கு அவர் அறிவுறுத்துகிறார். ஆனால் அந்த நிறைவுக் காலம் எப்போது வரும்? இக்கேள்விக்கு இயேசு பதிலளிக்க மறுத்துவிட்டார். இந்த நிறைவுகாலம் எமக்கு எதிர்காலத்தில் தான் வரும் என்கிறார் இயேசு.
இன்று நம்மில் எத்தனை பேர் எதிர்காலத்தைத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறோம்? எப்படி அதை அறிய ஆசைப்படுகின்றோம் என்பது சுவாரிசமானதுதான். கத்தோலிக்கர்கள் என மார்புதட்டிக்கொண்டும் பங்குத்தளங்களில் உள்ள பக்திக்குழுக்களில் பைபிளை தூக்கிக்கொண்டு வேதம் ஓதியபின். கையைப் பார்த்து, கிளியைக் கேட்டு, நாடி பார்த்து நல்ல சாத்திரக்காறரை நாடிச்சென்று கேட்டு தம்வாழ்வையும் மட்டுமல்லாது தம் அன்பர்களில் வாழ்வையும் பாழாக்குபவர்கள் பற்றி நாமறிவோம் அப்பப்பா இன்னும் எத்தனை வழிகளில் எதிர்காலத்தைப் பற்றி அறிந்துகொள்ள ஆசைப்படுகிறோம். எதிர்காலம் முழுவதும் நல்ல காலம் பொறக்குது என்ற சொற்களையேக் கேட்டுக் கொண்டிருந்தால் பரவாயில்லை. அந்த எதிர்காலத்தில் பிரச்சனைகள் மலையாகக் குவிந்து கிடந்தால் ஏன் இதைத் தெரிந்து கொண்டோம் என்று பிரச்சினையில் வருத்தப்படுவோம்.
எனவே எதிர் காலத்தைத் தெரிந்து கொள்வதில் காட்டும் ஆர்வத்தில் ஒரு பகுதியையாவது அந்த எதிர் காலத்தை எதிர்கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்ப்பதில் செலவிட்டால், எவ்வளவோ பிரச்சனைகளைச் சமாளிக்கலாம், வெல்லலாம். எதிர்காலம் என்பதில் பிரச்சனை கூட்டமாக சேர்த்து வந்தாலும், அந்தக் கூட்டத்தின் மத்தியில் நல்லவைகளை, நல்லவர்களைப் பார்த்து கைகுலுக்கிக் கொள்ளும் பக்குவம் நாம் பெறவேண்டும். இதை ஒரு உருவகத்தில் சொல்ல வேண்டுமெனில், எதிர்காலம் மலைபோல் குவிந்த ஒரு குப்பையாக தெரிந்தாலும், அந்த குப்பையின் நடுவிலும் வைரங்கள் மின்னுவதை நம் கண்கள் பார்க்கும் போது, குப்பை மறைந்து விடும், வைரங்கள் மட்டும் தெரியும். குப்பைகளை விலக்கி, குண்டு மணிகளை, வைரங்களைப் பார்க்கும், வைரங்களைச் சேர்க்கும் மனப்பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ள இறைவன் துணையை நாடுவோம். இந்த உலகத்தின் இறுதி காலம் பற்றி சிந்திக்க இந்த ஞாயிறு வாசகங்களான தானியேல், மாற்கு நற்செய்தியின்  இறை வார்த்தைகளைக் பகுதிகளை கேட்போம்

Wednesday, November 7, 2012

முக மலர்ச்சியைக் பெற்றுத்தரும் தான தர்மங்களைச் செய்வோம்.

11.11.2012 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
அன்னை தெரசா ஒருமுறை  சொன்னார்: "புiஎந வடைட வை hரசவள " 'கொடுங்கள், உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் கொடுங்கள்." இதனை எண்ணும்போது நம் தமிழ் பாரம்பரியத்தில் பேசப்படும் சிபி சக்ரவர்த்தி நினைவுக்கு வருகிறார். தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவைக் காப்பாற்ற, தன் உடலின் சதையை அறுத்துத் கொடுத்த அந்த மன்னர் அன்னை தெரசா சொன்னது போல் உடலை வருத்தித் தந்தவர். கர்ணனும் இப்படி கொடுத்ததாக நமது மகாபாரதம் சொல்கிறது.

தன்தை வருத்தி தன்னை பாதிக்கும் அழவுக்கு தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் காணிக்கையாக செலுத்திய ஏழைக் கைம்பெண்ணின் செயலை இன்று நற்செய்தி கூறுகின்றது. இதனை உற்று நோக்கிய இயேசு இதனை பாராட்டுகின்றார். ஆனால் பணம், பதவி, அந்தஸ்து, அதிகாரம் ஆகியவற்றைத் தேடிய மனிதர்களை இயேசு பல முறை கண்டித்துப் பேசினார். அந்த கைம்பெண தன்னிடம் இருந்ததைப் போட்டார், பிழைப்புக்காக வைத்திருந்ததைப் போட்டார். நிகழ் காலம், எதிர் காலம் இரண்டையும் காணிக்கை பெட்டியில் போடுகிறார். அப்படி ஓர் ஆழ்ந்த நம்பிக்கை கடவுள் மேல்.

எம்மில் பலர் இன்று கடவுள் என் தியாகத்தைப் பார்த்து ஏதாவது செய்வார் என்று பலவெளிவேடங்களை செய்கின்றோம். இந்தக் கண்ணோட்டம் ஒரு வியாபாரம். கடவுளே நான் இவ்வளவு தருகிறேன் அல்லது செய்கின்றேன் நீ இவ்வளவு தாரும் என்று பேரம் பேசுகின்றோம்.  ஆனால் இயேசு புகழ்ந்த கைம்பெண் வியாபார பேரங்களைக் கடந்தவர். கடவுளுக்குத் தன்னிடம் இருந்தவை எல்லாவற்றையும் மகிழ்வாகத் கொடுத்தவர். எனவே தான் இயேசுவின் இந்த மனமார்ந்த பாராட்டுகளைப் அவள் பெறுகிறார். அந்தப் பெண் இந்தப் புகழுரையைக் கேட்டிருப்பாரா? காணிக்கை செலுத்திய திருப்தியுடன் காணாமல் போய்விட்டார். அந்தப் பெண்ணுக்கு பெயர் கூட இல்லை.
கடவுளுக்குக் காணிக்கை என்று கூறிவிட்டு, ஏழைகளைச் சுறண்டுகின்ற செயல் நடந்தால் அது கொடுமைதான். இதனை இயேச கண்டிக்கின்றார். இயேசு பாராட்டும் அக்கைம்பெண்ணைப் பொறுத்தமட்டில் அவருடைய உள்ளத்திலிருந்து எழுகின்ற அன்பு நம்மைக் கவர்ந்து இழுக்கிறது. 'உன் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக" என்னும் அன்புக் கட்டளையை அக்கைம்பெண் நடைமுறையில் செயல்படுத்துகிறார்.

மனிதனுக்கு விலாசம் தேவை. விளம்பரம் தேவையல்ல. விலை கொடுத்து விளம்பரப்படுத்தி பெறுவை பெயரும் புகழும். மாறாக தன்னை வருத்தி தியாகம் செய்வதால் தானாக அவை வந்து சேர வேண்டும். விளம்பரம் தேடும் விவரம் தெரிந்த படித்த பெரிய மனிதர்களையும், கொடுத்துக்கொடுத்து தன்னையும் தன் வாழ்வையும் தன் முகவரியையும் கூட இழந்து போன ஒரு பெண்ணையும் இன்று நற்செய்தியில் காண்கிறோம். இயேசு பெண்ணைப் பாராட்டுகிறார். பெரிய மனிதர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கச் சொல்கிறார். மறைநூல் அறிஞரின் ஆடம்பரம், செல்வாக்கு, பெருமை இவை வெளி அடையாளங்கள் கைம்பெண்ணின் ஒரு வெள்ளிக்காசு மறைவான தியாகத்தின் உச்சநிலை. தியாகச்செயல் ஆண்டவருக்கே செய்யப்பட்டப் போதிலும் அது மறைவாக இருக்க வேண்டும். தன்னை வருத்துவதாய் இருக்க வேண்டும்.

இயேசு கொடுக்கும் முக்கியத்துவம் எப்பொழுதுமே பொன்னுக்கோ பொருளுக்கோ அல்ல. மனிதனுக்கே முதலிடம், முக்கியத்துவம். ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது. மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை." பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்". பாவத்தை அல்ல, பாவியை பெரிதாக கருதுபவர். இவ்வாறு மனிதனையும் அவனது மனநிலையையும் முதன்மைப்படுத்துவதால் அவர்களிடமிருந்து வெளிப்படும் செயல்களின் எதார்த்தமும் வெளிப்படுகிறது. தியாகம், காணிக்கை, பிறருக்குக் கொடுத்தல் இவற்றின் உட்பொருள், உள் நோக்கம் இவற்றை உணரமுடிகிறது. தன்னில் ஒரு தாக்கத்தை, இழப்பை ஏற்படுத்தாத எச்செயலையும் தியாகம், காணிக்கை என்று கணிக்கமுடியாது. ஏழைக் கைம்பெண் தன்  வறுமையில் இருந்த அனைத்தையும் போட்டாள். இது தியாகம். பணக்காரன் பல கோடியில் பல இலட்ஷத்தில் பலரும் பாராட்டும் மண்டபம் கட்டுவதில் என்ன தியாகம் இருக்கிறது என்பது இயேசுவின் பாராட்டில் புதைந்திருக்கும் பூதாகாரமான கேள்வி. இந்த கேள்வியின் பதிலே சம தர்ம சமூகத்தின் வாழ்வாதாரம். இதுவே இயேசு விரும்பும் காணிக்கை, தியாகம்.

நல்ல மனதோடு செய்கின்ற சிறிய தியாகமும் தர்மமும் ஆண்டவரின் ஆசீரை அள்ளிக் கொண்டு குவிக்கும் ஆற்றல் படைத்தது. அதே வேளையில் பெருமைக்காக, விளம்பரத்திற்காகச் செய்யும் பெரிய கொடைகள் பல வேளைகளில் நமக்கு உதவாமல் போய்விடும். ஏழைக் கைம்பெண்ணிடம் விளங்கிய மன நிலையோடு தான தர்மங்களைச் செய்வோம். அது நமக்கு முகவரியைப் பெற்றுத் தரும். முக மலர்ச்சியைக் கொடுக்கும்.

Wednesday, October 31, 2012

அயலானை இனம் காண்போம் அன்பு செயல்கள் ஆற்றுவோம்.

04.11.2012 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்


அறிவை வளர்க்கும் கேள்வி-பதில் பரிமாற்றத்தை விட, நீயா,நானா, யார் பெரியவன் என்ற பரிதாபமான பெருமை நம்மிடையே தலைதூக்குகின்றமையை நாம் பல தடவைகள் உணர்ந்திருக்கிறோம்.

இயேசுவுக்கும் இதுபோன்ற ஒரு சூழல் உருவாகியிருப்பதை இன்றைய நற்செய்தியில் பார்க்கிறோம். இயேசுவிடம் தவறான, குதர்க்கமான எண்ணங்களுடன் மறைநூல் அறிஞருள் ஒருவரிடமிருந்து கேள்வி கேட்கப்பட்டாலும், அந்தக் கேள்வி மிக அழகான, ஆழமான ஒரு கேள்வி என்பதை இயேசு உணர்ந்து, அதற்கு என்ன அருமையான ஒரு பதில் சொல்கிறார். இயேசு தந்த பதில், காலத்தால் அழியாத ஒரு பதிலாகின்றது. மனித குலத்தின் அடிப்படை உண்மையாய், உயிர்த்துடிப்பாய் இருபது நூற்றாண்டுகள் கடந்தும் நம் அனைவருக்கும் சவாலாக அமைந்துள்ள ஒரு பதிலை இயேசு தருகிறார்.

அனைத்திலும் முதன்மையான கட்டளை எது? என்று கேட்டவரிடம் இயேசு, உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக என்பது முதன்மையான கட்டளை. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக என்பது இரண்டாவது கட்டளை. 

கத்தோலிக்க சமயம் இரண்டு முக்கிய விடயங்களை கத்தோலிக்கர்களாகிய நமக்கு வலியுறுத்துகிறது. முதலாவது முழு இருதயத்தோடு இறைவனை அன்பு செய்வது. இரண்டாவது நம்மை நாம் நேசிப்பது போல நம் அயலானை நேசிப்பது. அதற்கு இந்த இரண்டு விடயங்களும் வழிவகுக்கின்றன. இறைவனை நேசிப்பது என்பது எல்லோராலும் மேற்கொள்ளப்படும் விடயம்தான். எனினும் நாம் நம் அயலானை நேசிப்பதென்பது அதுவும் நம்மை நாம் நேசிப்பது போன்றே அயலானையும் நேசிப்பது என்பது நடைமுறையில் இல்லாத ஒன்று. இங்கு முதலில் நமக்குள் நாமே எழுப்பிக்கொள்ளும் கேள்வி:  நம் அயலான் என்பவன் யார்? என்பதுதான்.

இயேசுவின் காலத்திலிருந்து இன்றுவரையிலும் உள்ள பெரிய பிரச்சனையே அயலான் அல்லது அடுத்திருப்பவர் யார் என்ற தெளிவு இல்லாததுதான். அருகில் இருப்பவன் எல்லாம் அயலான் அல்ல. ஆடை அணிகலன்களோடு விருந்து விழாக்களில் கூடி வருபவன் எல்லாம் அயலான் அல்ல. சட்டத்தையும் சம்பிரதாயத்தையும் கடைபிடிப்பதால் அயலானின் அன்பன் ஆகிவிட முடியாது. மனிதாபிமானம் இல்;லாத மதமும் சாரமற்ற வழிபாடும் அயலானின் அன்பன் ஆக்க உதவாது. அடித்தள மனிதனின் ஆதங்கத்தை உணராமல் ஆகாயத்தில் சிறகடிக்கும் மனிதனால் அயலானைக் காண கண் பார்வை போதாது.

எனவே என் அயலவர், அடுத்திருப்பவர் யார்? இன்றும் இந்தக் கேள்விக்குப் பதில் தேடி வருகிறோம். உலகில் 680 கோடிக்கும் அதிகமாய் மக்கள் இருந்தும்;, நமது அயலவரை, அடுத்தவரை இன்னும் தேடிக் கொண்டுதானே இருக்கிறோம். 'இந்த உலகத்தைத் தாண்டி, விண்வெளியைக் கடந்து வெண்ணிலவில் காலடி வைத்து விட்டுத் திரும்பி விட்டோம். ஆனால், நம் வீட்டுக்கு அடுத்த வீட்டில் இன்னும் காலடி வைக்கத் தயங்குகிறோம்." என்று நாம் வாழும் இந்தப் புதிரான காலத்தைப் பற்றி புநழசபந ஊயசடin என்னும் அறிஞர் கூறியுள்ளார்.

'என் அயலவர், அடுத்தவர் யார்?" என்று சட்ட அறிஞர் கேட்டது குதர்க்கமான கேள்வியாக இருக்கலாம். ஆனால், இதே கேள்வியைத் தானே இன்றும் நம்மில் பலர் கேட்டு வருகிறோம். எப்போது இதற்கு விடை கண்டு பிடிப்போம்?

தேவையில் இருப்பவன் அயலான். சமூகம், பொருளாதாரத்தால் தாக்குண்டு தவிக்கும் மனிதன் ஒரு அயலான். கொள்னை கொலை வன்முறையால் பாதிக்கப்பட்டவன் அயலான். அநீதியாலும் சாதீயத்தாலும் நசுக்கப்பட்ட மனிதன் ஒரு அயலான். தனிமையில் வாடுவோர், அனாதைகள், ஆதரவற்றோர் அனைவரும் அயலானே.

மேலும் அயலான் என்பவன் யார் என்பதை இயேசு நல்ல சமாரியன் உவமை மூலம் நமக்கு தெரியப்படுத்துகிறார். எதிரியாக இருந்தாலும் ஆபத்தில் உதவுபவன் உதவிக்காக காத்திருப்பவன் அயலான். இயேசு குறிப்பிடுகின்ற அயலானாக நாம் இருக்கின்றோமா? அடுத்தவர் அன்பைப் பற்றி சமய உலகம் மட்டுமல்லாமல், கடவுள் நம்பிக்கையற்றவர்களும் இன்று பேசி வருகின்றனர். அயலானை இனம் காண்போம் அன்பு செயல்கள் ஆற்றுவோம்.

Wednesday, October 24, 2012

'உமக்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என எவராவது கேட்கமாட்டார்களா என்று ஏங்குவோருக்கு எங்கள் பதில் என்ன?

 28.10.2012 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

பார்க்கும் திறன் இருந்தால் மட்டும் போதாது. பார்வை பெற வேண்டும். சரியான பார்வை பெற வேண்டும்.  இதனை விளக்க ஒரு சிறு கதை: கணவனும், மனைவியும் ஒரு வீட்டுக்கு குடி வருகிறார்கள். தினமும் கண்ணாடி ஜன்னல் வழியே அடுத்த வீட்டுத்தலைவி, துணிகளைக் காய வைப்பதைப் பார்ப்பார். பின்பு கணவனிடம் அந்தபெண்ணுக்கு சரியா துணி துவைக்கத் தெரியவில்லை துவைச்ச பின்பு பாருங்கோ எவ்வளவு அழுக்கா இருக்கு என முறையிடுகிறார். முறையீடுகள் மூன்று நாட்கள் தொடர்ந்தன. நான்காம் நாள் காலையில் மனைவிக்கு ஒரே ஆச்சரியம். கணவன் வந்ததும் மனைவி சொன்னார்: 'அங்கே பாருங்கோ. நான் மூன்று நாளாக சொல்லிகிட்டிருந்தது அவளுக்கு காதுல கேட்டிருக்கு என நினைக்கிறேன். இன்று அந்தத் துணியெல்லாம் சுத்தமா துவைக்கப்பட்டிருக்கு." என்று வியந்து பாராட்டினார். கணவன் அமைதியாக 'அடுத்த வீட்டுலே ஒன்றும் குறையேயில்ல. இன்று எம்முடைய ஜன்னல் கண்ணாடியை நான் காலையில எழுந்து சுத்தமாகினேன்" என்று சொன்னாராம்.


இன்று நற்செய்தியில் கதாநாயகன் பார்வையற்ற மனிதன் பர்த்திமேயு. அவர் இயேசுவிடம் ஒரே ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார்: 'ரபூணி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்". அழுக்கில்லாத, களங்கமில்லாத பார்வை பெற வேண்டும். தெளிவான, சரியான பார்வை பெற வேண்டும். பார்வையற்றவராக இருந்தபோதிலும் அவர் இயேசுவை உண்மையிலேயே 'பார்க்கின்றார்". எரிக்கோ நகரத்து நடை பாதையை மாளிகையாக்கி அதன் வழியே வருவோர் போவோர் கொடுத்த உணவையும் பணத்தையும் நம்பிவாழும் அவனிடம் கண் பார்வை இருண்டிருந்தது. ஆனாலும் வாழ்கைப் பாதை இருண்டிட அவன் அனுமதிக்கவில்லை. கிடைத்த இந்த வாழ்விலும் நிறைவடைந்து வாழ்ந்தான். பெற்றுள்ள பிற புலன்களைப் பயன்படுத்தி நிறைவைத் தேடினான். எனவே நாமும் பார்வை பெற வேண்டும். அடுத்தவரைச் சரியான உண்மையான கண்ணோட்டத்தில் காண இறைவன் நம் உள்ளத்தைத் தூய்மையாக்க வேண்டுவோம்.

பெரிய மனிதன் செல்வமும் செல்வாக்கும் பெருகப் பெருக எல்லோரும் தனக்கு பணிவடை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் இறைவன் இயேசு ஒரு செல்வாக்கு மிகுந்த பெரிய மனிதர் இருந்தும் 'உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?"என்று பாதையோரம்; படுத்திருந்த பார்வையற்ற மனிதனிடம் கேட்கிறார். பாதை ஓரத்தில், வாழ்க்கையின் ஓரத்தில், பார்வையற்று, வாழ வழியற்றுப் படுத்திருக்கும் மனிதனுக்கு 'உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டது அவனை வாழ்வின் மையத்திற்கு கொண்டு சென்றிருக்கும் அல்லவா? இன்று இதே போல் எத்தனை பேர் வாழ்வின் ஓரத்தில், விழி இழந்து, வழி இழந்து விழிநீருடன் எங்களின் ஒரு வார்த்தைக்காகக் காத்திருக்கிறார்கள். 'உமக்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என யாராவது கேட்கமாட்டார்களா எனக் காத்திருப்பவர்களுக்கு எங்கள் பதில் என்ன? இயேசுவின் இவ் வார்த்தையை நாமும் அடிக்கடி பயன்படுத்த முன்வருவோம். அப்போது நம்மிடம் இயேசு அதே வார்த்தை கேட்பார்.

 கத்தோலிக்க சமயம் வலியுறுத்தும் ஒரு பண்பு சீடத்துவம். ஆனால் இன்றைய நாட்களில் இச் சீடத்துவம் குறைந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்துச் செல்வதைக் காண்கிறோம். பக்தர்கள் கூட்டத்தினால் இறையரசுப் பணியில் எந்தப் பங்களிப்பும் இல்லை என்றே கூறவேண்டும். இயேசு எருசலேமை நோக்கிப் போகிறார். தான் சாவைக் குறித்து கடைசியாக கூறி விட்டார். இவை எல்லாம் தெரிந்தும் அதே பாதையில் சிலுவையின் பாதையில் மரணத்தின் பாதையில் துணிவோடு நடக்கின்றான் பர்த்திமேயு என்ற மனிதன். இவன் இயேசு கூறிய பின்பற்றுதலின் இலக்கணமாகின்றான். 'ஒருவன் தன்னைத் தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும் " என்ற வாக்கு இம்மனிதனின் வாழ்வில் நியமாகிறது. இது தான் சீடத்துவம். சீடர்களை உருவாக்கும் திருப்பணியாளர்களாக மாறி நாமும் சீடர்களாக மாறுவோம்.

ஒரு குருடன் அல்லது அங்கவீனரான ஒருவன் இறைவனை நல்லவர் என்றோ, அவர் இரக்கமுள்ளவரென்றோ ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால் இவனோ இறைவனின் இரக்கத்தை வாஞ்சித்து கதறினான். அந்தக் கதறலைக் கேட்ட இயேசு அவனை அழைத்தார். இதில் நாம் கவனிக்க வேண்டியது, அவன் இயேசுவின் அழைப்பைக்கேட்டவுடன் தன்னுடைய மேலுடையை எறிந்துவிட்டு அவரிடம் வந்தான். சிலுவையின் பாதையில் மரணத்தின் பாதையில் துணிவோடு நடக்கின்றான் கண்பார்வையற்ற பர்த்திமேயு இயேசுவை அடையாளம் 'கண்டுகொண்டார்" நாமும் இயேசுவை அடையாளம் கண்டு, அவரில் நம்பிக்கை கொள்ள அழைக்கப்படுகிறோம். அப்போது புதிதாகப் பார்வைபெற்ற பர்த்திமேயுவைப் போன்று நாமும் புதுப் பார்வை பெற்ற மனிதர்களாக மாறுவோம்; பார்வைகளைச் சீர்படுத்தி வாழ்கைப் பாதையை வளப்படுத்துவோம். இயேசுவோடு 'வழி நடந்து செல்ல" முன்வருவோம்.

Sunday, October 21, 2012

நாற்காலி, சிலுவை, இரண்டுமே அரியணைகள்தாம். நாற்காலியா, சிலுவையா? தேர்ந்து கொள்ளுவோம்.

21.10.2012
 ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்


செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் இயேசுவை  அணுகிச் சென்று அவரிடம், நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும் என்று வேண்டினர்.

அரியணை பற்றி இன்று சிந்திப்போமானால்  நாற்காலி, சிலுவை என்னும் இரண்டும் அரியனைகள் ஞாபகத்திற்கு வரலாம.; நாற்காலி அரியணைக்காக உயிரைத் தந்தவர்களும், எடுத்தவர்களும் உண்டு. சிலுவையில் உயிரைத் தந்தவர்களும், எடுத்தவர்களும் உண்டு.

ஒரு முறை, அன்னை திரேசாவுடன் ஒரு நாள் முழுவதும் செலவிட்ட ஒரு பத்திரிக்கையாளர், அந்த நாள் இறுதியில் அன்னையிடம்: எனக்கு யாராவது பத்தாயிரம் டொலர்கள் தருகிறேன் என்றால் கூட இது போன்ற வேலைகளை நான் செய்ய மாட்டேன்." என்றாராம். அதற்கு அன்னை தெரசா அவரிடம்: நானும் அப்படித்தான். பத்தாயிரம் டொலருக்காக இந்த வேலைகளைச் செய்ய மாட்டேன்." என்று பதில் சொன்னாராம். இப்படி பணி செய்த அன்னை திரேசாவைப் போல், எத்தனையோ தன்னலமற்ற பணியாளர்கள் மக்கள் மனதில் அரியணை கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரியணை ஏறுவதற்காக, மக்களைப் படிகற்களாகப் பயன்படுத்திய பலரை வரலாறு மறந்து விட்டது. மக்களும் மறந்து விட்டனர். அன்னையை அல்ல

உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். இயேசுவின் இந்த வார்த்தைகள் நமக்கு ஒரு பெரும் சவாலாக அமைகிறது. பணியாளர் தலைமைத்துவம் என்பது அண்மையில் பலராலும்  பேசப்படும் ஒரு கருத்து. பணியாளர் தலைமைத்துவம் பற்றி விக்கிபீடியாவில் தேடிய போது வரலாற்றில் பலர் சொன்ன கருத்துக்களோடு, இயேசு இன்றைய நற்செய்தியில் சொன்ன கருத்துக்களும் உள்ளன. இயேசு என்ற தலைவர் அவருடைய சீடர்களின் பாதங்களைக் கழுவிய செயலும் பணியாளர் தலைமைத்துவத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாக அங்கு சொல்லப் பட்டுள்ளது. இந்த பணியாளர் தலைமைத்துவத்தில் பல அம்சங்கள் உள்ளன: பரிவோடு குறை கேட்பது, மற்றவரை உற்சாகப்படுத்துவது, மற்றவரின் திறமைகளை வெளிக் கொணர்வது... என இப்படிபல பேசப்படுகின்றன.

11வயதில் ஒரு சிறுவன் பங்கு சந்தையில் ஈடுபட்டான். 14 வயதில் அந்த சிறு கம்பெனியை ஆரம்பித்தான். இன்று தனது 79 வது வயதில், 63 பெரும் நிறுவனங்களுக்கு அதிபராக இருந்து உலகின் பெரும் செல்வந்தர்களில் இரண்டாம் இடம் பிடித்திருக்கும் அவர் - வாரன் பபெட். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே எளிய வீட்டில் வாழ்கிறார். அது அரண்மனை அல்ல. தன் காரைத் தானே ஓட்டுகிறார். அவர் ஒரு விமான கம்பெனியை நடத்தினாலும், சொந்த விமானம் இல்லை. ஒரு செல்போன், ஒரு கணனி இல்லாத அந்த மனிதர் - பல தலைவர்களுக்குப் பாடம்.

நான் கேள்விப்பட்ட ஒரு சம்பவம்: இந்தியாவில் சீக்கியரான ஒரு மாவட்ட ஆட்சியர், தமிழ் நாட்டில் ஒரு முக்கிய நகருக்கு நியமனம் ஆனார். பல அதிரடி மாற்றங்கள். நேர்மையாய் உழைக்கும் அதிகாரிகள், முதல்வர்களை வைத்து வந்த ஒரு சில திரைப்படங்கள் இவரைப் பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டனவோ என்று பலரும் எண்ணியதுண்டு. அப்படி நேர்மையாக, சிறப்பாக செயல் பட்டவர்.

ஒரு நாள் அதிகாலையில் இவர் வழக்கம் போல் உடற்பயிற்சிக்காக நடந்து சென்றபோது, ஒரு இடத்தில் சாக்கடை அடைத்துக் கொண்டு தண்ணீர் வெளியேற சிரமமாக இருந்தது. ஒரே நாற்றம். நகராட்சி ஊழியர் அதைச் சுற்றி நின்று பேசிக்கொண்டிருந்தனர். அந்த மாவட்ட ஆட்சியர் அங்கே போனதும், கேட்டார்: என்ன பிரச்சனை? சாக்கடை அடைச்சிருக்கு. அது தெரியுது. சுத்தம் செய்யிறதுதானே. ஒரே நார்த்தமாக இருக்கு, எப்படி இறங்குறதுன்னு தெரியவில்லை. அவர்கள் சொல்லி முடிக்கும் முன்பு, அவர் சாக்கடையில் இறங்கி, அங்கிருந்த கருவிகளை வைத்து, அந்த அடைப்பை எடுத்து விட்டார். பிறகு மேலே வந்து, இப்படித்தான் செய்யவேண்டும் என்று சொல்லி அவர் வழி போனார்.

வாழ்க்கையின் பெரும் பகுதியை ஏழைகளுக்காகவும், சமுதாயத்தால் விலக்கப்பட்டவர்களுக்காகவும் செலவழித்த அன்னை திரேசா கோடான கோடி மக்கள் மனதில் அரியணை கொண்டிருக்கும் தலைவர். வாரன் பபெட் பணத்தையே வாழ்க்கையில் தெய்வமாக வழிபடும் பல நிறுவன முதலைகளுக்குப் பாடம் சொல்லித் தருகின்ற ஒரு பெரிய செல்வந்தர்.

அரசு அதிகாரிகளும் நேர்மையாக, திறமையாக உழைக்க முடியும். அது வெறும் சினிமா கதை அல்ல என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு சீக்கியரான அந்த மாவட்ட ஆட்சியர். பணியாளர் தலைமைத்துவத்திற்கு இவர்களெல்லாம் உதாரணங்கள. உலகின் பெரிய, பெரிய வியாபார நிறுவனங்களெல்லாம் பணியாளர் தலைமைத்துவத்தைப் பற்றி சிந்திக்கவும், செயல் படவும் ஆரம்பித்துவிட்டனர். இவர்களை இந்தப் பாதையில் சிந்திக்கத் தூண்டிய இயேசுவின் வார்த்தைகள் நம்மையும் நல் வழி படுத்த வேண்டுவோம்.
நாற்காலி, சிலுவை, இரண்டுமே அரியணைகள்தாம். நாற்காலியா, சிலுவையா... தேர்ந்து கொள்ளுவோம்.

எம்மை ஏழைகளுக்குக் கொடுப்போம்

14.10.2012 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

செல்வந்தர்கள் வாழ்க்கை இன்று எப்படிப்பட்டதாக இருக்கிறது. செல்வந்தர்களாக தங்களைக் காட்டிக் கொள்ள விரும்புவோர் எண்ணிக்கையே அதிகமாகிறது. இதனால் கடன்பட்டு வாழ்க்கையை தொலைத்தவர்கள் அதிகம். சமூகத்தில் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இன்று மனஉளைச்சலுக்கு ஆளானவர்களே இன்னும் அதிகம். இந்த நிலையில் உள்ளதையெல்லாம் விற்று, கொடுத்துவிட்டு வந்து என்னை பின் செல்லுங்கள் என்ற இறைவார்த்தை அர்த்தத்தை இழக்கிறதோ என எண்ணத் தோன்டுகிறது. இயேசு சொன்னதைக் கேட்டதும் இயேசுவைத் தேடி வந்த இந்த மனிதர்; முகம் வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார்.

எத்தனை இளைஞர்கள் இன்று முக வாட்டத்தோடு அலைகிறார்கள். போதை, மது, கேளிக்கை இவற்றால் நிம்மதி இழந்து தவிக்கும் இளைஞர்கள் எத்தனைபேர் நம்மிடையே இருக்கிறார்கள். இளைஞர்கள் பலர் பணத்தையும் உடலையும் உள்ளத்தையும் இறுதியில் வாழ்க்கையையும் இழந்து தவிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இப்படிப்பட்ட நிலையில்தான் அந்த இளைஞன் இயேசுவிடம் வந்தான்.  இயேசு அவனிடம், 'நீ நல்லவன். ஆனால் உன்னிடம் உள்ள பணம், சொத்து உன்னை மயக்கிவிட்டது. அதை தவறாகப் பயன்படுத்தி நீ உன் வாழ்வை அழித்துக்கொண்டாய். நீ தவறு செய்யவில்லை. ஆனால் நல்லது செய்ய தவறிவிட்டாய். அதுதான் நீ சந்தோஷமில்லாமல் இருப்பதற்குக் காரணம். ஆகவே இன்றிலிருந்து சில நல்லவற்றைச் செய்யத் தொடங்கு மீட்படைவாய்" என்கிறார்.

நாற்செய்தியின் படி மீட்படைந்தோர் யார் என்னும் ஒரு ஆய்வை செய்தால் பல விடைகளை காணலாம். இயேசுவை, இறையரசை, இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக் கொண்டோர் அனைவரும் மீட்படைந்தனர் என்று எளிதாக கூறிவிடலாம். இன்னும் கொஞ்சம் ஆழமாக பாத்தால்: கூரைப்பிரிப்பில் விசுவாசம் வெளிப்பட்டது. திமிர் வாதக்காரன் மீட்படைந்தான். பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அத்திமரத்தில் ஏறியதில் விசுவாசம் வெளிப்பட்டது. சக்கேயு மீட்படைந்தான். தொட்டால் போதும் என்பதில் இறையரசு இருந்தது. கனானேயப் பெண் மீட்படைந்தாள். என்னையும் மன்னிப்பார் என் தந்தை என்ற நினைவு இருந்தது. ஊதாரி மகன் மீட்படைந்தான். என்னை நினைத்தால் போதும் என்ற ஆசை இருந்தது. சிலுவையிலேயே கள்ளன் மீட்படைந்தான்.

மீட்படையக் கேட்டவர்கள் யார் என் நோக்கினால்: ஒரு சட்ட வல்லுநர் மீட்படைய என்ன செய்ய வேண்டும். 'சட்டங்களை விட, சாதி சம்பிரதாயங்களை விட, அயலானை நேசிப்பதே மீட்படைய வழி என்பது பதிலானது" ஒரு செல்வர் - மீட்படைய என்ன செய்ய வேண்டும்? 'பணத்தை வைத்துப், பரிமாறிக் கொள்வது, பகிர்ந்து கொள்வது மேலானது என்பது பதிலானது". செபதேயுவின் மக்கள் யோவான்-யாகப்பர் வந்தனர். இடுக்கான வாயில் வழியே நுழையுங்கள் என்றதன் மூலம் சிலுவை வழியே மீட்பு உண்டு என்பது அறிவிக்கப்பட்டது.

'நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்னும் கேள்வி நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் எழுகின்ற கேள்வியே. இம்மண்ணக வாழ்வோடு மனிதரின் இலட்சியங்கள் மடிந்துவிடுவதில்லை. சாவுக்குப் பின் வாழ்வுண்டு என்னும் உறுதிப்பாடு மனித உள்ளத்தில் ஆழப் பதிந்த ஒன்று. எனவே, 'நிலைவாழ்வை"அடைய வேண்டும் என்னும் உள்ளார்வத்தால் நாம் உந்தப்பட்டு, நிறைவடைய முனைகின்ற வேளையில் அக்குறிக்கோளை எட்டுவதற்கான வழியைத் தேடுவது இயல்பே. இயேசு அவ்வழியை நமக்குக் காட்டுகிறார். அவரை முழு மனத்தோடும் விருப்போடும் பின்செல்வோர் அவர் வாக்களிக்கின்ற நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வர்.

நாம் வாழ்க்கையில் நிறைவையும் நிம்மதியையும் காண விரும்புகிறோம். வாழ்க்கையில் எப்போதும் வசந்தம் வீச வேண்டும் என்று விரும்புகிறோம். எனவே  இன்று ஆண்டவர் சொல்லுவதைக் கேட்போம் அந்த பணக்கார இளைஞரிடம் நிறைய நல்ல மனது இருந்தது. நியாயமாக நிம்மதியாக வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருந்தது. தன் வாழ்வில் கடவுளின் கட்டளைகளையும் அன்றாடக் கடமைகளையும் தவறாது கடைபிடித்து வாழ்ந்துள்ளான். ஆனாலும் இவற்றில் தான் எதிர்பார்த்த நிறை வாழ்வையும் நிம்மதி வாழ்வையும் அவன் காணவில்லை. ஆகவேதான் இயேசுவிடம் வந்துள்ளான் எனலாம். இயேசுவோடு; வாழ்வின்; ஆழத்துக்குள் செல்லுவோம். எங்கள் குடும்பத்தின் ஆழத்துள் அவரை அழைத்து செல்லுவோம். எங்கள் வாழ்வின் பிரச்சினைகளின் ஆழத்துள் இயேசுவை கூட்டிச் செல்லுவோம். அவர் அந்த பணக்கார இளைஞனை கூர்ந்து நோக்கியது போல எங்கள் உள்ளத்தையும் குடும்பத்தையும் பிரச்சனைக்குரிய இடங்களையும் கூர்ந்து நோக்கட்டும். நோயின் ஆழத்திற்குச் செல்லட்டும். நிறைவாழ்வு தேடிய பணக்கார இளைஞனின் வாழ்வின் ஆழத்துள் சென்று, கூர்ந்து நோக்கிய இயேசு, அவனது நோயின் காரணம் அறிந்து அதற்கு மாற்று மருந்து கொடுத்தார். 'நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்". எங்கள் வாழ்வைக் கூர்ந்து நோக்கும் இயேசு எங்கள் நல்வாழ்வுக்கும் நல் விருந்தும் மருந்தும் தருவார். மகிழ்வோடு ஏற்று வாழுவோம். நிறை வாழ்வைக் காண்போம்.

“மனிதாபிமானம் வளர்ச்சியின் உச்ச கட்டத்தில் இருக்கும் இவ்வேளையில் மணமுறிவு தேவையா

07.10.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

கேள்விகள் பல விதம். சிலர் நேர்மையான உள்ளத்தோடு பிறருடைய கருத்தை அறியும் ஆவலோடு கேள்வி கேட்பார்கள். வேறு சிலர் பிறரிடம் குற்றம் காண்கின்ற நோக்கத்தோடு கேள்வி கேட்பார்கள். இயேசுவிடம் கேள்வி கேட்டவர்கள் பலர்;. சிலர் நேர்மையான உள்ளத்தோடு இயேசுவை அணுகியதுண்டு. வேறு சிலர் 'இயேசுவைச் சோதிக்கும் எண்ணத்துடன்; கேள்வி கேட்டார்கள்". பரிசேயர் அவரை அணுகி மண விலக்குப் பற்றி இயேசுவிடம் கேட்ட கேள்வி இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தது. எனவேதான் இயேசு தம்மிடம் கேள்வி கேட்ட பரிசேயரிடம் ஒருமறு கேள்வியைக் கேட்கிறார்: 'மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?. கணவன் மணவிலக்குச் சான்று எழுதி தன் மனைவியை விலக்கிவிடலாம் என்று மோசே அனுமதி அளித்ததாக அவர்கள் பதில் சொல்லுகின்றார்கள். உண்மையில் மோசே மண விலக்குப் பற்றி கட்டளைகள் கொடுத்ததாக பெரிதாக வேதாகமத்தில் இல்லை ஆனால் மண விலக்குச் செய்யும் கணவன் மீண்டும் அதே பெண்ணை மணமுடித்தல் ஆகாது என்பதே அக்காலத்தில் சட்டமாக இருந்திருக்கின்றது. இவற்றை வைத்துப்பார்க்கும் போது அக்காலத்தில் திருமணஉறவு சீர்குலையத் தொடங்கியது என்பது தெரிகிறது.


இன்றைய உலகில் திருமண உறவு பல விதங்களில் முறிந்துவிடும் நிலையில் உள்ளது. மேற்குலக நாடுகளில் பத்தில் ஆறு திருமணங்கள் முறிந்துவிடுவதாக கணிப்பு. நம் நாட்டிலும் விவாகரத்து விரிந்து கொண்டிருப்பதாகச் செய்திகள் திதமும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. திருமணங்களின் முறிவு மனித வாழ்வின் சீரழிவின் அடையாளம். ஆணும் பெண்ணும் திருமணத்தில் இணைந்த பின் இறுதிவரை இணைந்து வாழும்போது மனித சமுதாயம் வாழும். திருமண முறிவு, விவாகரத்து தொடருமாயின், ஒரு தலைமுறையோடு தலைமுறை வாழ்ந்து அழியும். திருமணத்தில் இணைந்தவரைப்; பிரிக்கும் முயற்சி, தலைமுறையை அழிக்கும் முயற்சி.

அன்றிலிருந்து இன்று வரை மனிதருள் பலர் திருமண உறவை எப்படி பிரிப்பது? என்று சுயநலத்தோடு முயற்சி செய்துகொண்டே இருக்கின்றனர். அத்தகைய முயற்சிகளுள் ஒன்று இன்றைய நற்செய்திப்பகுதியில் காணலாம். தங்களின் சுயநல முயற்சிக்கு பக்க துணையாக வேதாகமத்திலிருந்து மோசேயை துணைக்கு காட்டுகின்றனர். ஆனால் இயேசுவோ தன்னுடைய பதிலின்மூலம் அவர்களுக்கு உண்மை நிலையை உறுதிப்படுத்துகிறார். திருமணங்கள் கடவுள் இணைக்கும் ஒரு அருங்கொடை. திருமணத்தில் இணையும் ஆணும் பெண்ணும் ஆண்டவன் செயல்பட உதவும் இன்றியமையாத கருவிகள். இந்தச் சமுதாயம் அவர்களுக்கு உதவும் கரங்கள். எனவே இதனை  பிரிக்கும் அதிகாரம் மனிதர்கள் யாருக்கும் இல்லை. ஆகவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் என்கின்றார் இயேசு.

அன்று தொடங்கிய இந்த திருமண முறிவு பிரச்சினை இன்றுவரை தொடர்ந்துகொண்டே வருகிறது. எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், சம்பிரதாயங்கள் கடைபிடித்தாலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எத்தனையோ விளக்கங்கள், வியாக்கியானங்கள் கொடுத்தும் நிறைவடைந்தபாடில்லை. இந்த கெடுபிடி தொடர்வதற்குக் காரணம், எல்லா மதமும் மனித கலாசாரமும் திருமணத்தை தெய்வீக அனுபவமாகப் பார்க்கின்றன.  இத்தெய்வீகத்தன்மை திருமணத்தில் ஊடுருவிப் பரவி படர்ந்திருப்பதால்,  திருமண உறவு முறிவு ஏற்பட்டிருக்காது எனலாம். மனிதன் மனித பலவீனம், உலக ஆசைகள், நவீன பொருளாதாரம், நுகர்;வு கலாசாரம், பண்பற்ற பாலியல் அறிவு இவற்றால் பாதிக்கப்பட்டு, திருமணத்தோடு போராடிக்கொண்டிருக்கிறான். இந்நிலையில், ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கிவிடுவது முறையா?"  என்று பரிசேயத்தனமாக சிந்திப்பதற்குப் பதிலாக வாழ வைப்பதற்கான வழியைச் சிந்திப்பது நல்லது.

சட்டத்திற்கு எப்போதுமே சில விதிவிலக்குகள் உண்டு. விதிவிலக்குகள் சட்டமாகிவிடக்கூடாது.  கணவனும் மனைவியும்  ஒரே உடலாய் இருப்பர். 'இனி அவர்கள் இருவர் அல்ல, ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" இதுதான் சட்டம்.

ஒருவன் திருமணம் முடித்த பின் அவளது அருவருக்கத்தக்க செயலைக் கண்டு அவள்மேல் அவனுக்கு விருப்பமில்லாமற்போனால், அவன் முறிவுச் சீட்டு எழுதி, அவள் கையில் கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடுகிறான். இது மேசே காலத்து வளக்கமாக இருந்திருக்கிறது. இது விதிவிலக்கு. இந்த விதிவிலக்கும் கூட முறையானதல்ல என இயேசு கூறுகிறார். அவர்களது கடின உள்ளத்தின் பொருட்டே இந்த விதிவிலக்கு தரப்பட்து. அறிவு வளர்ச்சியின்றி, கல்வியும் கலாசாரமும் இல்லாது காட்டுமிராண்டியாக கடின உள்ளத்தோடு மிருகமாக வாழ்ந்த காலத்தில் இதுபோன்ற விதிவிலக்கு தேவைப்பட்டது. இயேசுவின் காலத்திலேயே அந்த விதிவிலக்கு கேள்விக்குறியாகிவிட்டது.

இன்று அறிவும் அறிவியலும், கல்வியும் கலாசாரமும், மனிதமும் மனிதாபிமானமும் வளர்ச்சியின் உச்ச கட்டத்தில் இருக்கும் காலத்தில் மணமுறிவு கேட்டு விண்ணப்பிப்பம் தேவைதானா. நம் அறிவு, மனிதாபிமானம், கலாசாரம், மனோதத்துவம், இறை நம்பிக்கை இவற்றை எல்லாம் கையாண்டு, கணவனையோ மனைவியையோ ஏற்றுக்கொண்டு இல்லறம் நடத்தினால்; வாழ்வில் எல்லாம் நிறைவாக இருக்கும்.

Thursday, September 27, 2012

“மற்றவருக்கு வெட்டும்”-தினமும் தினத்தாளில் இடம்பிடிக்கும் இந்த செய்தியை இனிநாமகற்றுவோம்

30.09.2012.
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இயேசுவின் உளவியல் முதிர்ச்சியையும், பரந்த மனநிலையையும் இன்று நற்செய்தி நம்மை வியக்கவைக்கின்றது. இயேசுவை சாந்திராத, சீடர் என வரையறுக்கப்படாத ஒருவர் இயேசுவின் பெயரால் பேய்கள் ஓட்டினார் என்பதே மிகவும் வியப்பான ஒரு செய்திதான். இயேசுவின் பெயருக்கு எத்தகைய ஆற்றல் இருக்கிறது என்பதற்கு இது சிறந்த சான்று. அவரைத் தடுக்கப் பார்த்தோம் என்று சீடர்கள் சொன்னபோது இயேசுவின் நம்பிக்கை பதில் எல்லாரையும்; வியக்க வைக்கிறது. தடுக்க வேண்டாம். என் பெயரால் வல்ல செயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார்.

இயேசு இத்தகு பொறாமையை நிராகரிக்கிறார். “நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்”. இயேசுவின் செய்திக்குத் தாங்கள் மட்டுமே உரிமையாளர்கள் என்னும் சீடர்களின் உணர்வுக்கு இந்த அகன்ற அடிப்படைத் தத்துவம் ஒரு சவாலாக அமைந்துள்ளது. இயேசுவைத் தாங்கள் மட்டுமே பின்பற்றவேண்டும் என்று சீடர்கள் பேராசைப்படுவது ஒரு தடைக்கல்லாகும். அது இயேசுவை தூரத்தில் இருந்து பின்பற்றுவேரை துரத்திவிடும். நற்செய்திக்கு விளக்கமளிக்கத் தங்களுக்கு மட்டுமே உரிமையுண்டு என எண்ணும் உட்கட்சியினரை இயேசு கண்டிக்கின்றார். குறுகிய மனம், பொறாமை, தன்னம்பிக்கையின்மை, இவற்றை அடித்து நொறுக்கிவிட்டு, நன்மையை ஏற்பிசைவு செய்யும் பரந்த மனதையும், தன்னம்பிக்கையையும் இயேசு வெளிப்படுத்துகிறார். நமது திறமைகளை, கொடைகளைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளத் தயங்கும் நமக்கு இயேசு பாடம் கற்றுத் தருகிறார். பிறரும் நம்மைப் போல நல்ல பணிகள் ஆற்றட்டும், நற்பெயர் வாங்கட்டும் என்று நினைப்பவரெல்லாம் இயேசுவின் நல்ல சீடர்கள் ஆகின்றனரே.

இன்றைய சிந்தனைளை இன்ஒரு பார்வையில் நோக்கினால் இன்றைய நற்செய்தியை “நற்செய்தி” என்று சொல்வதற்கே கொஞ்சம் பயமாயிருக்கின்றது என்றும் கூறலாம்.  ஏனெனில், இயேசு கையை, காலை வெட்டி கண்ணை பிடுங்கி எறிந்து விடுங்கள் என் கடுமையாப் பேசியிருக்கார். ஆனால் இங்கு நல்லவேளை, இயேசு ஒருவர் தம்முடைய கண்ணையோ, கையையோ, காலையோ வெட்டச்செல்கிறாரே தவிர மற்றவர்களுடையதையல்ல. ஆனால் இன்று நாம்வாழும் இந்த மண்ணிலே மற்றவர்களை வெட்டும் செய்தி தினமும் தினத்தாளில் இடம்பிடிக்கும் செய்தியாகின்றது.

இன்றுபோல் இயேசு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த சமுதாயம் எளிதாக கையை, காலை வெட்டுகின்ற சமுதாயம். பழிக்குப் பழி வாங்குவதில் அதிகத் தீவிரமாய் இருந்தவர்கள் யூதர்கள். இதனால்தான், இயேசுவே அவர்களைப் பார்த்து “கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் வலது கன்னத்தில் அறைபவனுக்கு இடது கன்னத்தைக் காட்டு". என்று முற்றிலும் மாறுபட்ட பாடங்களைச் கற்பிக்க ஆரம்பித்தார்.

இப்படி சொல்லும் இயேசுவை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் யூதர்களால் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. கோபமாக, கடுமையாகப் பேசும் இயேசுவைப் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம்தான். சாட்டையடிபட்டு சிலுவையில் தொங்கும் இயேசுவைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், சட்டையைக் கையில் எடுத்துக் கொண்டு, கோவிலிலிருந்து வியாபாரிகளை விரட்டினாரே, அப்போது இயேசுவைப் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம்தான். அப்படி ஒரு சவாலை இன்றைய நற்செய்தி தருகிறது. இயேசுவைப் புரிந்து கொள்ள, அவர் சொல்லும் வார்த்தைகள் எந்த பின்னணியிலிருந் சொல்லுகின்றார் என உணர்வது அவசியமாகிறது.  ஒருகன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று கூறும் இயேசு, தலைமை குருவின் ஊழியன் அவரை அறையும் போது, மறு கன்னத்தைக் காட்டவில்லையே. மாறாக, அவனிடம், என்னை ஏன் அறைகிறாய் என்று கேள்வி கேட்டார். சூழ்நிலை, பின்னணி இவற்றோடு இயேசுவின் வாழ்க்கையையும், அவரது கூற்றுக்களையும் பார்ப்பது பயனளிக்கும்.

இன்று இயேசு நற்செய்தியில் கூறும் வார்த்தைகளுக்குப் பின்னணி என்ன?  சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் அங்கம் நீக்கப்பட வேண்டும். ஒவ்வொருவரும் தங்களைப் பற்றி யோசித்து, அவரவர் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவேண்டும். அப்படி மாற்றுவதற்கு, அவரவர் உடலில் இருக்கும் தடைகளை நீக்க வேண்டும். இந்தக் கருத்தை வலியுறுத்தவே, கண்ணைப் பிடுங்கி விடுங்கள், கை, கால்லை வெட்டி போடுங்கள் என்று கோபமாகச் சொல்வது போல் தெரிகிறது.

எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல், தன்னிச்சையாக வாழும் போது, மருத்துவ மனைகளில் உயிரா, உறுப்பா என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும். பழக்கங்களை மாற்றிக் கொள்வோம். கட்டுப்பாட்டுடன் வாழ்வோம். தேவையற்ற ஆபத்துக்களை வாழ்விலிருந்து நீக்குவோம். இவைகள் எல்லாருக்குமே நல்லதுதானே. இயேசு இவைகளைத்தான் கொஞ்சம் ஆழமாக, அழுத்தமாக, கோபமாகச் சொல்லியிருக்கிறார். அவர் கோபமாக சொல்கிறாரோ, சாந்தமாகச் சொல்கிறாரோ என்பதல்ல மாறக அவர் சொல்வதில் உள்ள உண்மையை உணர்வது, அதன் படி வாழ்வது நமக்கு நல்லதுதானே.

Tuesday, September 18, 2012

எம்மைப் பற்றியும், எம் வாழ்வின் இலக்கு பற்றியும் தெளிவாக இருப்போம்

23.09.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

கத்தோலிக்க நம்பிக்கைகளை வாழ்வில் கடைப்பிடித்து, அதைப் பிறருக்கு அறிவிக்கின்றவர்கள் துன்பங்களையும் எதிர்ப்புகளையும் திரிபுக்கதைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது வரலாறு.  இயேசு தாம் துன்பங்கள் அனுபவிக்க வேண்டும் என்று கூறியது அவருடைய சீடர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்தது. அவருடைய சீடர்கள் 'துன்புறும் மெசியா" வை ஏற்க மறுத்தார்கள். தங்களுக்கும் அதிகாரப் பொறுப்புகள் வழங்கப்படும் என இயேசுவின் சீடர்கள் கனவு கண்டார்கள். இயேசு துன்புறப் போகிறாரே என கவலைப்படாமல் சீடர்கள் மட்டும் 'தங்களுள் யார் பெரியவர்" என்னும் வாதத்தில் ஈடுபட்டார்கள்.

உலகத்தின் கண்களுக்குப் பெரியவர் என்றால் எல்லாராலும் போற்றப்பட்டு, புகழப்பட்டு, உயர்நிலையில் வைக்கப்படுகின்ற ஒருவர்.இயேசுவின் பார்வையில் பெரியவர் அனைவரிலும் சிறியவராக மாற வேண்டும். உலகப் பார்வையில் சிறப்பு மிக்கோர் பிறரிடமிருந்து பணிவிடை பெறுவார்களே தவிர பிறருக்குப் பணிவிடை செய்பவர்கள் அல்ல. இக்கருத்தையும் இயேசு புரட்டிப் போடுகின்றார். இயேசு இவ்வாறு உலகப் பார்வைக்கு நேர்மாறான கருத்தை ஏன் கூறுகிறார்: மனிதர் எப்போதுமே சிறப்பான நிலையை அடைய விரும்புகிறார்கள்.ஆனால் சிறப்புநிலை எதில் அடங்கியிருக்கிறது என்பதுதான் கேள்வி. பிறருக்குத் தொண்டுசெய்வதும் பிறரைத் தமக்கு உயர்ந்தவராகக் கருதுவதும் உண்மையான சிறப்புக்கு அடையாளம்.

இயேசுவின் வாழ்வில் துலங்கிய மதிப்பீடுகளை அவருடைய சீடர்களும் கடைப்பிடிக்க அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் நடுவே யார் பெரியவர் என்னும் கேள்வி எழுவதே சரியல்ல என இயேசு உணர்த்துகிறார். உண்மையான சிறப்பு பிறருக்குப் பணிசெய்வதிலே அடங்கும் என்று போதித்த இயேசு அதை முழுமையாகத் தம் வாழ்வில் கடைப்பிடித்தார். அவர் தம் சீடருடைய காலடிகளைக் கழுவினார்.எனவே, இயேசுவைப் பின்செல்வோருக்குத் தரப்படுகின்ற வழிமுறை இவ்வுலகப் பார்வையைப் புரட்டிப்போடுகின்ற வழிமுறை. அவ்வழியே நாம் நடந்தால் நாமும் கடவுளின் பார்வையில் சிறப்புடையோர் ஆவோம்.

இயேசு குழந்தையை ஏன் சீடர்கள் மத்தியில் வைத்தார்? என்றால் சென்ற வாரம் இயேசு சீடர்களிடம் இரு முக்கிய கேள்விகளைக் கேட்டார். மக்கள் என்னை யாரென்று சொல்கிறார்கள்? நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்? சீடர்கள் மத்தியில் இது ஒரு தேடலை ஆரம்பித்து வைத்திருக்கும். இயேசு, தன் கேள்விகளுக்கு'மெசியா"என விடையளித்த பேதுருவைப் புகழ்ந்தார். பேதுரு கொடுத்த அந்த  பட்டத்தில் மமதை கொண்டு இயேசு மயங்கிப் போகவில்லை. மாறாக அந்த பட்டத்தின் பின்னணியில் இருக்கும் துன்பம், சிலுவை பற்றி இயேசு பேசினார். இயேசுவின் இந்த பேச்சு சீடர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எனவே,பேதுரு அவரைத் தனியே அழைத்து அறிவுரைச் சொல்ல ஆரம்பித்தார். தன்னைப் பற்றியும், தன் வாழ்வின் இலக்கு பற்றியும் இயேசு தெளிவாக இருந்ததால், பேதுருவைக் கோபமாகக் கடிந்து கொண்டார். சீடர்களிடம் மீண்டும் தன் சிலுவையைப் பற்றி ஆணித்தரமாக பேசுகிறார். சீடர்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லை. இயேசுவின் பாடுகள் அவர்களுக்கு விளங்காமல் போனதற்கு ஒரு காரணம் - அவர்கள் வேறு திசைகளில் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். தங்களில் யார் பெரியவன்? என்பது அவர்களுக்கு இப்போது முக்கியம்.

இயேசு அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை ஓரளவு கேட்டார். அவருக்கு அதிர்ச்சி. தான் இவ்வளவு சொல்லியும் இவர்களின் எண்ண ஓட்டம் இப்படி இருக்கிறதே என்ற அதிர்ச்சி. மற்றொரு பக்கம் ஒரு நெருடல்.ஒருவேளை அவர்கள் பேசிக் கொண்டதை சரியாகக் கேட்காமல், அவர்களைத் தவறாக எடை போட்டுவிடக் கூடாது என்று நினைத்து, 'வழியில் என்ன பேசினீர்கள்?" என்று கேட்கிறார். பதில் வரவில்லை. அவர்கள் பேசிக் கொண்டதெல்லாம் இயேசுவின் எண்ணங்களுக்கு முற்றிலும் மாறுபட்டது. தாங்கள் பேசியதை அவரிடம் சொல்ல முடியவில்லை.

அதற்கு இயேசுவின் பதில், 'ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்". இந்த கருத்தை வலியுறுத்தவே, ஒரு குழந்தையை அவர்கள் நடுவில் நிறுத்துகிறார். குழந்தைகளைப் போல் மாறாவிடில் விண்ணரசில் நுழைய முடியாது என ஏற்கனவே அவர்களுக்கு சொல்லியிருந்தார். இப்போது மீண்டும் அந்த சிந்தனையை மற்றொரு வழியில் வலியுறுத்துகிறார். 

குழந்தைகளை குழந்தைகளாகவே ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை உங்களைப் போல் மாற்றாதீர்கள், முடிந்த அளவு, நீங்கள் குழந்தைகளாக மாறுங்கள் என்று இயேசு சொல்லாமல் சொல்கிறார். 'எந்த ஒரு குழந்தையும் பிறக்கும் போது இரு இறக்கைகளுடன் சம்மனசாய் பிறக்கிறது. அனால், கால்கள் வளர, வளர, இறக்கைகள் குறைந்து மறைந்து விடுகின்றன." என்பது பிரெஞ்சு மொழியில் ஒரு அறிஞர் சொன்ன அழகான வார்த்தைகள். கால்கள் மட்டுமல்ல, நமது எண்ணங்கள், கருத்துக்களெல்லாம் வளரும்போது, சம்மனசுக்கான இறக்கைகள் மறைந்து விடுகின்றன. குழந்தைகளைக் குழந்தைகளாகவே ஏற்றுக் கொள்வோம்.அவர்களை நம்மைப் போல் மாற்றாமல், முடிந்த அளவு, நாம் குழந்தைகளாக மாறுவோம்.

Wednesday, September 12, 2012

நான் யார் என்று தெரிகின்றேன்


16.09.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையா ளர்

'நான் யார்?"இந்தக் கேள்வியைச் சிந்திக்காதவர்களே இல்லை எனலாம். இன்று நம்மில் பலருக்கு இது எப்;போது எழும் ஒரு கேள்வியாக இருக்கலாம். ஆனால்இ அறிஞர்களும் ஞானிகளும் 'நான் யார்?" என்றத் தேடலில் வாழ்க்கை முழுவதும் ஈடுபட்டுள்ளனர். நான் யார் என்ற இந்தக் கேள்விக்குள் பல கேள்விகள் உள்ளன: என் குடும்பத்தினருக்கு நான் யார்? என் நண்பருக்கு நான் யார்? என் பணியிடத்தில் நான் யார்? நான் வாழும் சமுதாயத்தில் நான் யார்? இவர்களுக்கெல்லாம் நான் என்னவாகத் தெரிகிறேன்? அடிப்படையில் மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? என்பது இன்று நம் வாழ்வின் ஒரு முக்கிய கேள்வியாகிறது.

இயேசுவூக்கும் இந்தக் கேள்வி எழுந்தது. 21நூற்றாண்டுகளாக மனிதர்கள் 'யார் இந்த இயேசு?" என்னும் கேள்விற்கு விடைதேடுகின்றனா;. இக்கேள்விக்குப் பதில் என்ன?. இயேசு மக்களும் சீடர்களும் தம்மை யார் என்று கூறுகிறார்கள் என்னும் கேள்வியைக் கேட்கிறார். இயேசுவின் இந்தத் தேடலை இன்றைய நற்செய்தி நமக்குக் தருகின்றது. இன்றைய நற்செய்தியின் இயேசுவின் இந்த இரு கேள்விகள் நாம்  கவனிப்போம். 'நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" 'நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?"

21நூற்றாண்டுகளாய் மனித வரலாற்றில் அதிகமான ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியவர்களைக் குறித்து கருத்துக் கணிப்புகள் பல நடந்துள்ளன. ஏறக்குறைய எல்லாக் கருத்துக் கணிப்புகளிலும் இயேசுவின் பெயர் முதலிடம் அல்லது முதல் மூன்று இடங்களில் ஒன்றாக இருந்துள்ளது. மனித வரலாற்றை இத்தனை நீண்ட காலம். ஈராயிரம் ஆண்டுகள் இத்தனை ஆழமாகப் பாதித்துள்ளவர்கள் ஒரு சிலரே. மக்கள் இயேசுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்? என்று நோக்கினால் என்னென்னவோ சொல்லி விட்டார்கள். இன்னும் சொல்லி வருகிறார்கள். நல்லதும் பொல்லாததும். உண்மையூம் பொய்யூம். விசுவாசச் சத்தியங்களும் கற்பனைக் கதைகளும். ஓர் இறைவாக்கினர் எனவூம் அளவூக்கதிகமாகவே சொல்லி விட்டார்கள். ஆனால் இவ்வளவூ சொல்லியூம் இயேசுவைப் பற்றி முழுமையாக நம் மனித குலம் சொல்லிவிட்டதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இயேசு இவர்தான் இப்படித்தான் என்று இலக்கணம் சொல்வது மிகக் கடினம். இலக்கணங்களை வரையறைகளை வேலிகளை உடைப்பது இயேசுவின் இலக்கணம். இயேசுவின் அழகு. யோவான் தன் நற்செய்தியின் இறுதியில் எழுதியூள்ள வரிகள் நாம்; நினைத்துப் பார்க்கலாம்: இயேசு செய்தவை வேறு பலவூம் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன். சிறு வயது முதல் நாம் பயின்றவைகளை எல்லாம் பட்டியலிட்டு இயேசு கேட்ட அந்த முதல் கேள்விக்குப் பதில் ஒப்பித்து விடலாம்.

'நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" இந்தக் கேள்வி நமக்குத் தான் தரப்படுகின்றது. ஆனால்இ இந்த இரண்டாவது கேள்விக்கு அப்படி எளிதாகப் பதில் சொல்லிவிட முடியாது. நாம் படித்தவைகளை விட பட்டுணர்ந்தவைகளே இந்தக் கேள்விக்குப் பதிலாக வேண்டும். நாம் மனப்பாடம் செய்தவைகளை விட மனதார நம்புகிறவைகளே இந்தக் கேள்விக்கான பதிலைத் தரமுடியூம். இந்தக் கேள்வி நம்மில் பலருக்கு சங்கடங்களை உருவாக்குகின்றன என உணர்ந்தால் அது ஒரு நல்ல ஆரம்பம். இயேசுவின் இந்தக் கேள்வி வெறும் கேள்வி அல்ல. ஓர் அழைப்பு. 'என்னைப் பற்றிப் புரிந்து கொள். என்னைப் பற்றிக் கொள்" என்று இயேசு விடுக்கும் அழைப்பு. இது சாதாரண அழைப்பு அல்ல. அவரை நம்பி அவரோடு நடக்க அவரைப் போல் நடக்க இரவானாலும் புயலானாலும் துணிந்து நடக்க அவர் தரும் ஓர் அழைப்பு. வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த கொடுக்கப்படும் இந்த அழைப்பிற்கு மனதின் ஆழத்திலிருந்து வரட்டும் நம் பதில்கள்.

இயேசுவை அறிந்துகொள்ளும் இரு வழிகளை இன்றைய நற்செய்தி நமக்கு வழங்குகிறது. சொந்த ஈடுபாடு எதுவூம் இல்லாமல் இயேசுவைப் பற்றிய கருத்துக்களைத் திரட்டுவது முதல் வழி. 'மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று இயேசு கேட்டபோது இந்த முதல் வழியில் திரட்டிய பதில்களைச் சீடர்கள் இயேசுவிடம் கூறினர். பின்னர் இயேசு தன் சீடர்களிடம் 'ஆனால் நீங்கள்இ நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று கேட்டார். சீமோன் பேதுருஇ 'நீர் மெசியா வாழும் கடவூளின் மகன்" என்கின்றார்;. பேதுருவின் பதில் வெறும் கருத்துக்களைத் தாண்டி விசுவாசத்தின் அறிக்கையாக இங்கு ஒலிக்கிறது.

இன்று எங்களிடம் இயேசு 'நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?"என்ற இதே கேள்வியைக் கேட்கிறார் என வைத்துக்கொண்டால்: இயேசுவின் கேள்விக்கு தாராள மனதோடும் துணிவோடும் பேதுருவின் விசுவாச அறிக்கைக்குப் பதிலாக நாம் உலகிற்கு இயேசு மெசியா வாழும் கடவூளின் மகன்" என எமது வாழ்வால் காட்டுவோமா?

Thursday, September 6, 2012

கனல் கக்கும் எம் மணல்பரப்பை நீர்த் தடாகமாக்குவோம்

09.09.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இயேசு தன்னை தேடிவந்த நோயாளர்களைக் பல்வேறு வழிமுறைகளில் குணமாக்கியுள்ளார். சிலரைத் தொலைவிலிருந்தே குணமாக்கினார்.சிலரைத் தொட்டுக் குணமாக்கினார்.சிலரைத் தொடாமல் 'உம் நம்பிக்கை உம்மைக் குணமாக்கிற்று"என்று சொல்லிக் குணமாக்கினார். ஆனால், இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் பார்க்கும் காது கேளாத, திக்கிப்பேசும் மனிதரை இயேசு குணப்படுத்திய முறை வித்தியாசமானது.'இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று,தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு,உமிழ் நீரால் அவர் நாவைத் தொட்டு, பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி,'எப்பத்தா"அதாவது 'திறக்கப்படு" என்றார்." உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன் நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.இந்த மனிதரைக் குணமாக்க இயேசு கூடுதல் கவனம் எடுத்துக்கொள்கிறார் என கருதலாம்.

செவிடர்களும் வாய்பேச முடியாதவர்களும் நம்மிடையே இல்லையா?  இன்று நாம் வாழும் சூழலில் பலபாழ்பட்ட விடயங்கள் நடந்தாலும் யாரும் தட்டிக் கேட்க முன்வருவதில்லையே. இங்கு ஏன் யாருமே தட்டிக் கேட்கவில்லை. ஏன் யாருக்கும் காது கேட்கவில்லையா? அல்லது எல்லோருமே ஊமைகளா? ஏன்னும் கேள்விக் விடைகளை தேடி அலைகின்றன. இன்று இதுபோன்ற நிகழ்சிகளைக் கண்டும் காணாமலும் கேட்டும் கேளாமலும் சென்றால், இயேசுவின் வைத்தியம் நமக்குத் தேவைப்படுகிறது. நாம்தான் காது கேளாதவர். நாம்தான் திக்கு வாயுள்ளவர்கள். வாய்பேச இயலாதவர்கள். நம் காதுகளுக்குள் இயேசுவின் சில அதிரடி வைத்தியம் தேவைப்படும். நாம் நம் காதுகளைத் திறந்தால், நம் வாயைத் திறந்தால், வாய் பொத்தி,காதுகளை பொத்தி வாழும் எத்தனையோ குரல் இழந்த அடித்தள மக்களுக்கு குரலும் வாழ்வும் கொடுத்த இயேசுவைபோல் புதிய மனிதர்களாக மாறுவோம். எங்களைப் பார்த்து, இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார் என்பார்கள்.

இயேசு ஆற்றிய புதுமைகள் அக்கால மக்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் ஒரு நல்ல செய்தியைக் தருகின்றன. அவற்றை நன்குணர்து வாழ்வாக்கினால். நம் காதுகள் திறக்கப்பட்டு, நாவு கட்டவிழும் அதிசய செயல்களை நம் வழியாகச் இயேசு செய்வார். தன்பணிவாழ்வில் இயேசு புரட்சிகரமாகப் பேச வேண்டும் அதனால் மக்களை தன் வயப்படுத்த வேண்டும் என்று முயன்றதில்லை. தான் ஆழ்மனதில் நம்பியவைகளை மக்களுக்குச் சொன்னார். வாழ்ந்தும் காட்டினார். அவரது போதனைகளும், எடுத்துக்கொண்ட நிலைப்பாடும், வாழ்ந்த வாழ்வும் யூதர்களுக்கு ஒரு சவாலாக இருந்தன. இன்றைய நற்செய்தி வழியாக இயேசு இப்படி ஒரு சவாலை இன்று நமக்கும்  விடுக்கிறார்.

இயேசு வாய் பேசாத, காது கேளாத ஒருவனை குணமாக்கியப் புதுமையை, தன் வல்லமையை வெளிப்படுத்த அவர் எடுத்துக்கொண்ட முயற்சியாக பார்க்காமல், இன்று நமக்கும் காட்டும் ஒரு மாற்றுப் பாதையாக பார்க்க வேண்டும். தன் குறைகளைப் பார்த்து இயேசுவையும் இந்த சமுதாயத்தின் ஒரு ஆளாக நினைத்து அவன் அவரை அணுக தயங்கியிருக்க வேண்டும். தயக்கம், குழப்பம், தன் மீது தனக்கே ஏற்பட்ட வெறுப்பு என்று பல சிறைகளுக்குள் தன்னையே பூட்டிக்கொண்டவனாக அவன் இருந்திருக்கவேண்டும். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு குணமாக்கினார்.இயேசுவின் இந்த செயல்களில் இருந்து ஒரு சில பாடங்கள்: இயேசு அவர் காதுகளில் கையை வைக்கும் போது, அவரிடம் இயேசு சொல்லாமல் சொல்லியது: 'உன்னை இதுவரை அல்லது இனியும் மனம் தளரச் செய்யும் வண்ணம் இந்த உலகம் சொல்வைதைக் கேளாதே. உன் காதையும், நாவையும் நல்ல செய்திகளுக்காகத் திறந்து விடு. வேதனையில், விரக்தியில், நீ வாழ்ந்தது போதும். உன் சிறைகளைத் திறந்து வெளியே வா. உன் சிறைகள் திறக்கபடுக."என கூறிவிடலாம். எனவே நாமும் தீமைகளைப் பார்க்காதே, கேட்காதே, சொல்லாதே என்று மூன்று குரங்குகள் வழியாக நமது காந்தி கற்றுத்தந்த பாடத்தை வாழ்வாக்குவோம்.

இயேசுவிடம் குறையுள்ள அந்த மனிதனை மற்றவர்கள் கொண்டு வந்தனர். அந்த மனிதன் தானாக இயேசுவிடம் வரவில்லை. அவனுடைய ஒரு சில நண்பர்கள் அவனுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இயேசுவிடம் அவனை கொண்டு வந்தனர்.  இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களாக நாம் இன்று மாறுவோம். இயேவைப்போல் நாமும் எம் செவிகளையும், நாவையும், எல்லா புலன்களையும் தொட்டு இதே வார்த்தைகளைச் சொல்லுவோம். நல்லவைகளைப் பார்ப்போம், நல்லவைகளைப் பேசுவோம், நல்லவைகளைக் கேடபோம். கனல் கக்கும் எம் மணல்பரப்பு நீர்த் தடாகமாக்குவோம்

கிளாலி புனித கண்மணி மாதா ஆலயத்தில் 15 வருடங்களின் பின் முதல் நன்மை அருட்சாதன திருப்பலிக் கொண்டாட்டம்.





























01.9.2012 அன்று மேற்படி ஆலயத்தில் அருள் தந்தையர்கள் டியுக் வின்சன், பங்குத்தந்தை பத்தினாதர் தலைமையில் 10 சிறார்களுக்கு முதல் நன்மை அருட்சாதனம் வழங்கப்பட்டு திருப்பலி கொண்டாடப்பட்டது. இத் திருப்பலியில் மறையுரை அற்றிய அருள் தந்தை டியுக் வின்சன், இயேசு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே என்று தன்னை அறிவித்தார். அவரை நாம் இன்று முதல் முதலில் அருந்தபோகின்றோம். எனவே இயேசு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே என்று தன்னை அறிவித்த போது, அதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம் என்று சொல்லி அவரைப் பின்சென்றவர்களில் பலர் அவரை விட்டு விலகினர், அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை. அப்போது இயேசு பன்னிரு சீடரிடம், நீங்களும் போய்விட நினைக்கின்றீர்களா என்று கேட்டார். அதே கேள்வியை எம்மையும் பார்த்துக் கேட்கின்றாh.; விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து நமக்கு வாழ்வு வழங்க காத்திருக்கும் இயேசுவை நாமும் உட்கொண்டு அவரோடு இருப்போம். அவரைப்போல் வாழ்வோம்; என தெரிவித்தார்.

இப்பகுதி மக்கள் நாட்டில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக இடம் பெயர்ந்து தற்போது 15 வருடந்களுக்குப் பின்பு மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆலயம் முற்றக சேதமாக்கப்பட்டிருந்தாலும் அம்மக்களின் அயராத உழைப்பாலும் உதவியாலும் புனரமைக்கப்பட்டு அந்த அலயத்தில் பங்குத்தந்தை  மடுத்தீன் பத்தினாதர் தலைமையில் இவ்வருடம் வழமைபோல் திருப்பலி கொண்டாடப்பட்டுவருகின்றது. இன்னிலையில் மறைஆசிரியர் செல்வன் கிறிஸ்ரி கொண்சலஸ் அவர்களின் வழிநடத்தலில் 10 சிறர்களுக்கு முதல் நன்மை அருட்சாதனம் வழங்கப்பட்ட திருப்பலி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Sunday, September 2, 2012

Catholic Dog

 A joke to enjoy

Catholic Dog
-------------

A farmer named Muldoon lived alone in the Irish countryside with a pet dog he doted on. The dog finally died and Muldoon went to the parish priest and asked, "Father, the dog is dead. Could you be saying a mass for the creature?"

Father Patrick replied, "No, we cannot have services for an animal in the church, but there's a new denomination down the road, no telling what they believe, but maybe they'll do something for the animal."

Muldoon said, "I'll go right now. Do you think $50,000 is enough to donate for the service?"

Father Patrick asked, "Why didn't you tell me the dog was Catholic?"

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff