Saturday, December 5, 2020

இந்தியாவை ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - மனித துயரங்களில் குளிர் காய்ந்த வரலாறு பற்றி அறியப்படாத தகவல்கள்

https://www.bbc.com/tamil/india-54953614 


தொடர்பாடலும் ஊடகக்கற்கையும் தரம் 11 , வினாப்பத்திரம் -03 (க.பொ.த -O/L) இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினுடையது-

 

தொடர்பாடலும் ஊடகக்கற்கையும் தரம் 10-11 , வினாப்பத்திரம் -02

 

தொடர்பாடலும் ஊடகக்கற்கையும் தரம் 10-11, வினாப்பத்திரம் -01

Tuesday, June 23, 2020

மாணவர்களுக்கான தரம் 1 முதல் உயர்தரம் வரை வினாக்கள் அடிங்கிய இணையத்தளம்


செய்தி மதிப்புகளுக்கும்- (பெறுமதி சேர்க்கும் காரணிகள்) மற்றும் செய்தி கூறுகளுக்கும் (அளவுகோல்கள்) உள்ள வேறுபாடுகள்

Difference between New Values & Elements of News:
ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, 
யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை


News Value:: செய்தி மதிப்புகள் - பெறுமதி சேர்க்கும் காரணிகள் : செய்திக்கு வழங்கப்பட்ட பல்வேறு வரையறைகளை நாம் சந்தித்திருக்கிறோம். அவை எமது கவனத்தையும் ஈர்த்துள்ளன. ஒரு நிகழ்வு செய்திகதான என தெரிந்தெடுப்பதற்கு அவை பெரும் உதவிபுரிந்துள்ளன. சில பொதுவான காரணிகள் தமக்குள் சிறிய மற்றும் பெரிய அளவில் சில பண்புகளை மற்றொன்றுடன் பகிர்ந்து கொள்ளுகின்றன.

செய்தி என்பதற்கு கொடுக்கப்பட்ட பல்வேறுபட்ட  வரையறைகளிலிருந்து எடுக்கப்பட்ட பொதுவான சில அம்சங்களை செய்தி மதிப்புகள்–பெறுமதி சேர்க்கும் காரணிகள்– என கூறுகின்றோம்.  இந்த பெறுமதி சேர்க்கும் காரணிகளே ஒரு பொதுவான சம்பவத்திற்கு, நிகழ்வுக்கு, அறிக்கைக்கு, கருத்துக்கு செய்திப் பெறுமானத்தை–மதிப்பை  கொடுக்கின்றன. செய்திக்காக கொடுக்கப்பட்ட பலவேறுபட்ட வரைவிலக்கணங்களிலிருந்த வடிகட்டி எடுக்கப்பட்ட பொதுவான அம்சங்களே செய்தயின் மதிப்புகள் எனப்படுகின்றன. இந்த செய்தி மதிப்புகளை அளவுகோலாக வைத்து ஒரு பொதுச்சம்பவம், நிகழ்வு, வாக்குறுதி, கருத்துக்கள் செய்திசார் பெறுமானத்தை பெறுகின்றன எனலாம். ஒரு செய்திப் பொறுமானத்தின் அளவுகோலுக்கு எதிராக ஒரு நிகழ்வை மதிப்பீடு செய்தலின் முதல் நிலை –கட்டம்– இதுவே ஆகும் 


News Elements: செய்தியின் கூறுகள்ஃஅளவுகோல்கள்: குறிப்பிடப்பட்ட ஒரு நிகழ்வு செய்தியாக வடிவமைக்கப்பட -கருதப்பட- தகுதியானது என முடிவு எடுக்கப்பட்ட உடன் அல்லது பின்னர் அடுத்த கட்டமாக அதனை ஒரு செய்தி ஊடகத்திற்கு அல்லது ஒரு செய்திப் பத்திரிகைக்கு எழுதுகின்றோம். இப்போது அந்த நிகழ்வை நியாயமாக எழுத தேவையான நிபுணத்துவம், துல்லியாமாக எழுத தேவையான துணிவு, தெளிவாக தெரிவிக்க தேவையான திறமை, தொடராக ஒழுங்குபடுத்தும் ஆற்றல், சுற்றிவளைக்காது சுருக்கமாக படைக்கும் ஆற்றல். அழகுற அனைத் தையும் அடக்கும் ஆற்றல், அற்புதமாக அர்த்தம் நிறைந்ததாக்கும் ஆற்றல், சுவாரிசமாக சமர்ப்பிக்கும் பாணி, பக்கம் சாராது சொற்குறைப்பும் பொருள் செறிவும் கொண்டு எழுதும் ஆற்றல். பொருத்தமான சொற்களை, அனைவருக்கும் தெரிந்த பொதுவான மொழியில் எழுதும் ஆற்றல்  போன்றவை மிக முக்கியமாவை. ஒரு செய்தி எழுத்தாளர் செய்தியை எழுதும்போது பயன்படுத்தும் இந்த நிபுணத்துவமே செய்தியின்;கூறுகள்  எனப்படும். 

உசாத்துணை நின்றவை:-
  1. பத்திரிகை இயலுக்கு ஓர் ஆறிமுகம் முதற்பதிப்பு 26 டிசம்பர் 2001இ புனித வளன் கத்தோலிக்க அச்சகம்இ யாழ்ப்பணம்.

Friday, June 19, 2020

செய்தியின் கூறுகள் -அளவுகோல்கள் - News Elements


ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, 
யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை




ஓர் ஊடகவியலாளர், தமக்குக் கிடைக்கக்கூடிய வளங்களைப் பயன்படுத்தி தரமான ஒரு செய்தியை எழுதவேண்டும். ஒரு செய்தி நிருபர் தனது செய்தியினைச் சமூகவியல் வெளிப்பாடுகள், பிரசாரம் மற்றும் மனித நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்தி எழுதலாம். செய்திகள் தயாரிக்கப்படும் உண்மைப் விடயங்கள் மிகவும் மென்மையானவை. அவைகள் வாசகர்கள், இரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து உடனடிபிரதிபலிப்பைப் பெறுகின்றன. பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டுள்ள செய்தி எழுத்து நடை மற்றும் வடிவத்தை அமைப்பதற்கு செய்தி உறுதிப்படுத்து கின்றது.

செய்திக்கு மதிப்பையும் பெறுமானத்தையும் தகமையையும் வரவேற்பையும் வழங்கும் விதத்தில் எழுதும்போது -தயாரிக்கும்போது- வடிவமைக்கும்போது கருத்தில் கொள்ளவேண்டிய செய்திக் கூறுகள் பற்றி நோக்கவோம்:- 

1. Accuracy – துல்லியம் 
2. Balance and Fairness  – சமநிலையும் நியாயமும் 
3. Objectivity– குறித்தவிடயம்
4. Clarity– தெளிவு
5. Conciseness -Brevity– சுருக்கம் 
6. Credibility: நம்பகத்தன்மை- Factual – உண்மைதன்மை 
7. Meaningful- கருத்தாளம் - அர்த்தம் நிறைந்தது
8. Interesting– கவனத்தை கவருதல் ஃ சுவாரிசம்
9. Comprehensiveness  – அனைத்துவிடயங்களையும் உள்ளடக்கியமை
10. Cohesiveness / Order– இணக்கத்தன்மை / தொடர்தன்மை / ஒழுங்குமுறை 
11. Current – நடப்புநிலை 


1. துல்லியம் : உண்மையற்ற செய்தி உயிரற்ற செய்தியாகும். அரைகுறை ஆதாரங்களோடு, சொந்த எண்ணங்கள், கருத்துக்களோடு மெய்பொருள் காணாமல் அறிக்கையிடுவது உண்மைத் தன்மைக்கு ஆப்பு வைப்பதைப் போன்றது. உண்மைகளைச் சரிபார்க்க நேரம் போதுமானதாக இல்லை என்ற காரணத்தைக்காட்டி ஊடகவியலாளர்கள் தப்பித்துக்கொள்ளகூடாது. அசட்டுத் தனத்தாலோ, அறியாமையாலோ வேண்டுமென்றோ, சொந்தக்காரணங்களுக் காகவோ பிழையான தகவல்களை வழங்கக்கூடாது. இங்கு தமிழில் உள்ள ஒரு பழமொழியை நோக்குவது இதற்கு துணைபுரியும்: 'எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு." 

இங்கு 'நன்றாக இருக்கிறது. நன்றாக வளரும், ஏசுவார்கள் எரிப்பார்கள் அஞ்சவேண்டாம். உண்மையை எழுதுங்கள். உண்மையாக எழுதுங்கள்." என்று 1959.02.19அன்று கொழும்புத்துறை யோகர் சுவாமிகள் ஈழநாடு முதல் இதழைப் பார்வையிட்டபின்பு அருளிய ஆசீர், பத்திரிகைத்துறையில் நோக்கப்பட வேண்டியது. (யாழ் நகரின் நீண்டகாலம் ஒரே பத்திரிகையாக வலம்வந்த இந்த பத்திரிகைக் காரியலயம் பலதடவை எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.) 

தகவல்கள் உண்மையானதா என ஐயப்பாட்டினை எழுப்பும்போது பிழையாக வெளியிடுவதை தவிர்த்து அந்த செய்தியை பிரசுரிக்கமால் விடுவதே சாலச்சிறந்தது. சந்தேகம் எழும்போது நீக்கி விடுக- Where/when in doubt, Leave it out என்ற ஊடகவியலாளரக்குரிய பொன்மொழியை இங்கு ஞாபகப்ப டுத்துவது மிகவும் பொருத்தமானது. ஆதாரமற்ற செய்திகள் ஆபத்தான செய்திகளாக முடியும் என்பதை எப்போதும் ஊடகங்கள் நினைவில் நிறுத்தவேண்டும். 

நாம் துல்லியம் என குறிப்பிடும் போது தகவலின் ஒவ்வொரு சிறு துண்டும்- every crumb of its details மிகவும் சரியக உறுதிப்படுத்தப்பட்ட துல்லியத்துடன் இருக்கவேண்டும்:-

  • செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள், பதவிகள் கட்டயம் சரியான துல்லியத்துடன்  இருக்க வேண்டும்.
  • செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள இடங்கள் விபரம் கட்டயம் சரியான துல்லியத்துடன் இருக்க வேண்டும்.
  • செய்தியில் மனிதர்களின் வயதுகள் கொடுக்கப்பட வேண்டுமாயின் கட்டயம் சரியான துல்லியத்துடன் இருக்க வேண்டும்.
  • நிகழ்வு (சம்பவம், பெரியார்களின் உரைகள், விபத்துக்கள்) செய்தியாக வெளியிடப் படவேண்டுமாயின் திகதிகள், நாள்கள், நேரங்கள், விபத்துக்களில் பாதிக்கப்பட்வர்கள் விபரங்கள் கட்டயம் சரியான துல்லியத்துடன் இருக்க வேண்டும்.
  • மொழிசார்ந்த - உச்சரிப்பு, வார்த்தைகள், இலக்கணத்தின் கட்டமைப் புக்கள்  சரியான துல்லியத்துடன் இருக்கவேண்டும்.
  • மக்களின் கருத்துகள்ஃவெளியிடப்பட்ட அறிக்கைகள் சரியான துல்லியத்துடன் இருக்க வேண்டும். செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ள மேற்கோள்கள்,சூழமைவும் சரியானதுல்லியத்துடன் இருக்க வேண்டும். இது இன்னுமொரு அர்த்தத்தை–பொருளைக் குறிக்கும் வகையில் தவறாகக் மொழி பெயர்க்கப்படக்கூடாது.
  • விஞ்ஞானம் சார்ந்த தகவலாக இருந்தால் விஞ்ஞான ரீதியாக சரியாக எழுதப்பட்டு விளங்கப்படுத்தப்பட்டுள்ளதா? எனபதை சரியான துல்லியத்துடன் உறுதிப்படுத்த வேண்டும். 
  • விளையாட்டுடன் சார்ந்த தகவலாக இருந்தால் நிலை நாட்டப்பட்ட சாதனைகள், எடுக்கப்பட்ட ஓட்டங்கள், பெறப்பட்ட கோல்கள் போன்ற வை சரியான துல்லியத்துடன் உறுதிப்படுத்த வேண்டும்.
  • நீதிமன்றத்துடன் தொடர்புடைய தகவலாக இருந்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை திரிபு படுத்தாமல் சரியான துல்லியத்துடன் உறுதிப்படுத்த வேண்டும்.
ஊடகங்களில் தோன்றியதை பெறுநர்கள் ஒருபோதும் நம்பவில்லை என்று சொல்வதற்கு ஒருபோதும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என்பதற்கு ஊடகவியலாளர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். செய்தியில் வழங்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் வாசகர்கள் கேள்விகள் எதுமின்றி ஏற்றுக்கொள்ள தக்கவகையில் செய்தி எழுதப்படவேண்டும். துல்லி யம் என்பது சரியானது. அந்த சரி சாதாரணமான பொதுவான தோற்றத்தில் மட்டுமல்ல, மாறாக  விவரங்களிலும் கூட சரியாக அமையவேண்டும். ஒரு செய்தித்தாளுக்கு அல்லது ஊடகத்திற்கு  துல்லியமானது என்பது ஒரு பெண்ணுக்கு என்ன நல்லொழுக்கம் போன்றதை ஒத்ததாகும்.


2. நடுநிலையும் நியாசமும் (பாரபட்சமற்ற நிலை);: நாணயத்திற்கு இருபக்கங்கள் இருப்பதுபோல செய்திக்கும் இருபக்கங்கள் உண்டு என்பதை நாம் கற்றறிந்து எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு விடயத்தினை விளக்கும் போது அதன் இருபக்கங்களையும் அப்படியே படம் பிடித்து காட்டுவது சாலச்சிறந்தது. எந்த செய்தியும் பக்கம் சாராமல் வெளியிடப்படும்போது மதிப்புடையதாகிறது. பக்கம் சார்ந்து, பகுதிக் கருத்து க்களை பிரதிபலித்து, ஒரு தரப்பின் விருப்பு வெறுப்புக்களுக்கு மட்டும் இடம் கொடுத்து வெளியிடப்படும் செய்திகள் சமநிலை பேணுவதில்லை. 

உ-ம்:பல்கலைக்கழகத்தில் போராட்டம் ஏற்ப்பட்டிருப்பின் அதுதொடர்பாக துணைவேந்தரினதும் அவரது குழுவினரதும் அறிக்கைகளை வெளியிடும் போது மாணவர்களின் குரல்களையும் கருத்துக்களையும் வெளியிடுவது சமநிலையை பேணுதலுக்கு எடுத்துக்காட்டாகும். தீர்ப்பு வழங்கப்பபடும் வரை குற்றம் சுமத்தப்பட்டவர் என குறிப்பிடுவது சாலப் பொருத்தம். இலங்கையில் நடந்து முடிந்த 56,58,77,82,83 இனக்கலவரங்களுக்கு ஊடகங்களின் சமநிலை பேணப்படாத- பொறுப்பற்ற செயற்பாடுமே ஒரு காரணம் என கூறலாம்.

நியாயத்தன்மை என கருதும் போது ஊடகவியலாளர்கள் தமது சொந்தக் கருத்துக்களை- ஆலாசனைகளை- நோக்கங்களை சேர்க்கக் கூடாது. வெளியி டப்படும் செய்திகளை ஆயிரம் ஆயிரம் மக்கள் படிக்கப் போகிறார்களை. அதிகமான வார்த்தைப் (சிலேடைசொல்;) பிரையோகங்கள் வெளியிடுவ தானால் அவர்களின் சிந்தனாசக்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறந்து விடக்கூடாது. நடுநிலை வார்த்தைகளைப் பயன்படுத்துவது எப்போதும் சிறந்தது.

ஒவ்வொரு விடயத்திலும் செய்திகளை சமநிலையாக எழுதுவது என்பது எளிதான காரியமல்ல என்றாலும் செய்திகள் சமநிலையாக எழுதப்பட வேண்டும், எந்தவொரு நிகழ்வினையும் மிகச்சிறந்த முறையில் சமநிலை யுடன் வழங்க ஓர் ஊடகவியலாளர் கடுமையான முயற்சி எடுக்க வேண்டும். ஊடகவியலாளர் குறிப்பிட்ட அனைத்து உண்மைகளையும் சரியாகவும் நியாய மாகவும், துல்லியமாகவும், புறநிலைத்தன்மையாகவும்-குறிக்கோளுக்கமை வாக எழுத வேண்டும். அவர் தனது செய்தி அறிக்கை சரியான உண்மை உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அனைத்து உண்மைகளையும் ஒன்றாக இணைத்து எழுதவேண்டும். அவர் நிகழ்வு நடைபெற்றமாதிரியே அந்த நிகழ்வின் நியாயத்தை படம்பிடித்துப் பெறுநருக்கு காட்டவேண்டும். செய்தி உள்ளடக்கம் மற்றும் அர்த்தத்தில் சமநிலையில் இருப்பது அவசியம். ஒரு நிருபர் முழு சூழ்நிலையையும் ஒரு சீரான பார்வையை அளிக்க உண்மைக ளைத் தேர்ந்தெடுத்து ஒழுங்கு ஏற்பாடு செய்து எழுதவேண்டும்.



3. குறிக்கோள்: செய்தி என்பது ஒரு நிகழ்வு நிகழ்ந்ததைப் பற்றிய ஓர் உண்மை அறிக்கை ஆகும். செய்தியானது குறித்த ஒரு விடையத்தை நோக்கமாக-மையமாகக் கொண்டிருக்க வேண்டும். செய்தியைவெளியிடும் ஊடகம் ஒருபக்கம் சாய்ந்து செயற்படக்கூடாது. செய்திகளில் ஊடகங்களின் தனிப்பட்ட சார்புகள், விருப்பு வெறுப்பக்கள் பிரதிபலிக்கக்கூடாது. ஒரு செய்திக்கு இருபக் கங்கள் இருக்குமாயின் இரண்டு பக்கங்களுக்கும் முழுமையான தழுவுதல்கள்- (coverage)- கொடுக்கப்பட வேண்டும். இன்னொரு வார்த்தையில் கூறுவதையின் செய்தியானது சமநிலை வாய்ந்ததாக இருக்கவேண்டும். 

செய்தியில் உண்மைகள் நிகழ்ந்தபடியே பக்கச்சார்பற்ற முறையில் தெரிவிக் கப்பட வேண்டும். செய்திகளில் உள்ள குறிக்கோள் - புறநிலைத் தன்மை நவீன பத்திரிகையியலில் மிக முக்கியமான கொள்கைகளில் ஒன்றாகும். இதன் கருத்து எந்தவொரு தனிப்பட்ட சார்பு அல்லது எந்தவொரு வெளிப்புற செல்வா க்குமின்றி தெரிவிக்கப்பகிறது என்பதாகும். செய்தி தவிர்க்க முடியாதது. ஒரு நிழலும் இல்லாமல் செய்திகளை வழங்கவேண்டும். பளபளப்பாக வண்ணங் களாக்கப்பட் வடிவமாக நிகழ்வுகளை-செய்திகளை ஒரு ஊடகவியலாளர் பார்க் கக்கூடாது. முழுக்க முழுக்க பக்கச்சார்பற்ற முறையில்; செய்திகள் வழங்கப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு விடயத்திலும் நேர்மையான அவதானிப்பு அவசியம். குறிக்கோள்- புறநிலைத் தன்மை; செய்தி எழுதும் போது அவசியம் ஏனென்றால் பெறுநர் தங்கள் கருத்துக்களை செய்திகளின் அடிப்படையில் உருவாக்குவதனால் தூய்மையான செய்திகளால் மட்டுமே பெறுநர்களுக்கு நம்பிக்கையைத் கொடுக்க முடியும். எனவே செய்தியில் எல்லா நடையிலும் புறநிலைத்தன்மை; -குறிக்கோள் இருக்க வேண்டியது அவசியம்.

4. தெளிவு: சமூகத்தில் பலதரப்பட்டவர்கள் செய்திகளை பெறுகின்ற பெறுநர் களாக உள்ளனர். எனவே சாதாரண சராசரி வாசகர்களைக் கவனத் தில் கொண்டு எப்போதும் செய்திகள் வெளியிடப்படவேண்டும். செய்திகள் எப்போதும் இலகு மொழியில் அழகுநடையில் தெளிவு சாரலில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பலபொருள் கொடுக்கும் சொற்களை-ambiguous சிக்கல் கொடுக்கும் மொழிநடை யை தவிர்க்க வேண்டும். சரியான தெளிவு டன் இலக்கணக் குறிகளை சரியாக, சரியான இடத்தில் பாவிக்க வேண்டும். (பொலிஸ், வாகனத்திற்கு கல்வீச்சு) (09.06.2017 வலப்புரி பத்திரிகை 12 பக்கம் குழப்பத்துடன் வந்த தலையங்கம் ஒன்றை நோக்குவோம். நீதிபதி கர்ணனுக்கு விதித்த தண்டனையை ஒரு போதும் இரத்துச் செய்ய முடியாது) செய்தி வெளியிடுவதன் பிரதான நோக்கம் வாசகரை சுற்றி என்ன நடக்கிறது என்ற விம்பதத்திற்குள் அவர்களை வைத்திருப்பதாகும். எனவே செய்திகளை வாசகர்களின் அறியவேண்டும் என்ற ஆவலை the reader’s inquisitiveness திருப்திப டுத்துவதாக அமையவேண்டும். வாசார்களுக்கு தெளிவு இல்லை என்ற தகவல்கள் தவிர்க்கப்படவேண்டும்.    It is said that a reporter, when is in doubt, he should leave it out. 
தெளிவாகவும் குழப்பமின்றியும் திட்டவட்டமாகவும் செய்திகள் வெளியி டப்படவேண்டும். ஊடகங்கள் என்ன சொல்கின்றன என பெறுநர்கள் யோசிக்குமளவிற்கு செய்திகளில் வாசகர்கள் குழப்பமடையக்கூடாது. சொல் சிக்கனமும் பொருள் செறிவும் மிக்க சிறிய வாசனங்களே எப்போதும் சிறந்தது. பொருத்தமான சொற்களை பொருள் விளங்கி பாவிக்கவேண்டும். எல்லோ ருக்கும் தெரிந்த சொற்களை எப்போதும் பாவிக்கவேண்டும். புதிய சொற்க ளாயின் விளக்கங்கள் கொடுக்கப்படவேண்டும். தெளிவற்ற செய்தி கள் தேவை யற்ற பிரச்சினைகளை உருவாக்கலாம்.

உ-ம் நாவாப் என்பவரின் உயிர் ஊசலாடுகிறது. இரவு 11மணிக்கு வைத்திய சாலைக்கு கொண்டு சென்றபோது 12.45 மணிக்கு பின்னிரவு தாண்டமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது கல்கத்தா சண்டே பத்திரிகையின் சென்னை செய்தியாளர், நாவாப் இறந்துவிட்டாக செய்தி யை வெளியிட்டார். ஆனால் அவர் இறக்கவில்லை. பத்திரிகை வெளிவந்து 5 மணித்தியாலங்கள் கழித்தே இறந்தார். அடுத்த நாள் மற்றய ஊடகங்கள் நாவாப் அவர்கள் இறந்து விட்டார் என தெரிவிக்க, குறிப்பிடப்பட்ட அந்த ஊடகம் நாவாப் அவர்கள் உண்மையாகவே இறந்து விட்டார் Nawab is really read  என செய்திவெளியிட்டது.

பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட செய்தி வடிவத்தை செய்திகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். செய்தி ஒத்திசைவாக, சுருக்கமாக, தெளிவாக மற்றும் எளிமையானதாக கட்டாயம் இருக்க வேண்டும். செய்தியானது அங்கும் இங்கும் பாய்ந்துகொண்டு சீரற்றதாக இருக்கக்கூடாது. It must not be jumpy and uneven=சீரற்ற. சீரற்றறுகண்டபாட்டிற்கு பரவியுள்ள, ஒழுங்கற்ற மற்றும் அர்த்தத் தில் தெளிவற்ற ஒரு செய்தி, செய்திகளின் சிறப்பியல்பு கொண்டிருப்பதில் லை. அர்த்தம்; முற்றிலும் தெளிவாக இருக்கும் வகையில் செய்தி மிகவும் தெளிவாக ஒருங்கிணைத்து எளிமை யாக எழுதப்பட்ட வேண்டும்.


5. நம்பகத்தன்மை: செய்திகள் எப்போதும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும். வெளியிடப்படுவதற்கு முன்னர் உண்மைகள், தகவல்கள், புள்ளிவிபரங்கள் சரியானதா என பலதடவைகள் பரிசோதிக்கப்பட வேண்டும். செய்திகளை விரைவாக வெளியிட வேண்டும் என்ற அவசரச் செயற்பாடு தவறுகள் அச்செய்திக்குள் நுழைவதற்கு வாய்பளித்த விடும். எனவே செய்திகளை, செய்தி வெளியிட்டு ஆசிரியருக்கு அனுப்புவதற்கு முன்பே நகலை திரும்பப்பார்த்து திருத்திக்கொள்வது சாலச்சிறந்ததாகும். செய்தியா னது இன்னும் திருத்தப்பட வேண்டும் என்றால் திருப்பி எழுதுவதே பொருத்த மான தாகும். செய்திகள் ஆதாரபூர்வமாக சேகரிக்கப்படவும் வெளியிடப் படவும் வேண்டும். 

எந்த செய்தியும் அது தரப்படும் நிலையத்தின் நம்பகத்தன்மையிலேயே பெரிதும் தங்கியுள்ளது. பெரும்பாலான வாசகர்கள் எந்தெந்த செய்தி நிறுவனங்கள் நம்பகத்தன்மை வாய்தவை என தெரிந்து வைத்திருக்கிறார் கள். 

உ-ம்: பி.பி.சியை நம்பகத்தின் நடுநிலையமாக தெரிந்து வைத்திருக்கி றார்கள். லங்காபுவத் என்ற செய்தி நிறுவனத்தை லங்கா புழுகு என்றும். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை இலங்கை ஒளிப்பு மறைப்பு கூட்டுத்தாபனம் என்றும் பெறுநர்கள், நேயர்கள் தமக்குள் கதைப்பதை கேட்கும்போது இதனை நம்பகத்தன்மை அற்ற நிகழ்விற்காக இங்கு குறிப்பிடலாம். 

a உண்மைதன்மை / நம்பகத்தன்மை: செய்தியானது உண்மையாக நடந்த நிகழ்வின் தகவல் அல்லது அறிக்கை, சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளியிடப்படவேண்டும். நாம் வாழும் இந்த ஊடக சகாப்பத்தில் செய்தியினை படிக்கும் ஊடகத் தெரிவுகள் பரவலாகவும் பரந்ததாகவும் உலகளவியதுமாக இருக்கின்றன. ஓர் ஊடகத்தில் வெளியான செய்தியானது உடனடியாகவே வேறு ஓர் ஊடகத்தில் பரிசீலித்து சரிபார்க்கக் கூடியநிலை காணப்படுகிறது. வறட்டுதையிரியத்தை எடுத்துகொண்டு செய்திகளை சோடித்தும், கற்பனை களை இடைச்செருகியும்- fabricated or concocted வெளியிடுவது ஊடகத்தின் நற் பெயருக்கும் நம்பகத்தன்மைக்கும் குந்தகம் விழைவிக்கும் செயலாக அமைந்துவிடும். எனவே சரியான தகவல்களையும் உண்மை களையும் வெளியிடுவது ஊடகங்களின் தலையாயக் கடமைகளாகும். 

மேற்கூறப்பட்ட துல்லியம், நடுநிலை, தெளிவு ஆகியன ஒன்று சேரும்போது அந்தகவல் மீது நம்பகத்தன்மை ஒன்று கட்டயெழுப்பப்படுகிறது. செய்தி ஒன்றில் நம்பகத்தன்மை உருவாக்கப்படுகிற விதம் பற்றி எளிய சமன்பாடு ஒன்றினை யுனெஸ்கோ தொடர்பாடல் நிபுணர் போல் டி மெசுனியர்( Paul De Mesuniyar - Measeneer) எடுத்துக் காட்டுகிறார்: 

A         +               B        +           C                =              C
Accuracy               Balance           Clarity                         Credibility

6. கருத்தாளம் / அர்த்தம் நிறைந்தது: செய்திகள் அர்த்தம் முள்ளவையா கவும் கருத்தாளம் மிக்கவையாகவும் இருக்கவேண்டும். சொற்குறைப்பும் பொருள் செறிவும் கொண்டதாக அமைக்கப்படவேண்டும். நாம் கற்றுக் கொள்ளும் செய்தி பெறுமானங்களை தாங்கியவையாக இருக்க வேண்டும்.  

7. கவனத்தை கவருதல் / சுவாரிசம்: செய்திகள் வெளியிடப்படும்போது வாசகர்கள் அந்த செய்தியை படிக்கும்போது சலிப்படையாது ஆர்வத்துடன் அறிய துடிக்கவேண்டும். அழகுமொழியில் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட -கட்டமைக்கப்பட்ட செய்தி வாசகர்களில் ஆர்வத்ததை தூண்டி சலிப்புத்தன் மையை நீக்கிவடும் எனலாம். 

8. சுருக்கம்:  செய்திகள் சுருக்கமாகவும் சுவையானதாகவும் அமைகின்ற போது அதன் மதிப்பு அதிகரிக்கின்றது. அதனை அறிவோர் மகிழ்ச்சி அடைவர். செய்திகள் தேவையற்று நீண்டு செல்லக்கூடாது. தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்கள் மீண்டும் மீண்டும் பாவிப்பதை தவிர்க்க வேண்டும். குற்ற செயல்களான செய்திகளாயின் அவற்ரை செய்தியாக மட்டும் பிரசுரிக்க வேண்டும். அதை விடுத்து ஏன் இந்த செயல்கள் நிகழ்கின்றன. இன்று பரவலாக இச்செயல்கள் எங்கும் நிகழ்கின்றன. என்று எழுத முற்படக்கூடாது. அவ்வாறு முற்படுவது இந்த விடயம் குற்றசெயல்கள் என்ற அல்லது விபரணக் கட்டுரையை ஊடகத்தில் எழுதுவதங்கு பொருத்தமான தலைப் பாகும். ஆனால் செய்தி அறிக்கையிடலுக்குப் செய்திக்குப் பொருத்தமானதல்ல. செய்திகளை சுற்றிவளைத்து வெளியிடும்போது வாசகர்களும் ஏன் செய்தியாளரும் குழப்பமடைந்து விடுகின்றனர். ஆங்கிலத்தில் ஒரு காலத்தில் ஒரு வசனத்தில் பாவிக்கப்பட்ட வார்த்தைகள் காலத்திற்கு காலம் குறைந்து வருகிறன. 17நூ- 45 சொற்கள், 19நூ-30 சொற்கள், இன்று 20 சொற்களுக்கு குறைவாகப் பயன்படுத்தப்படுகிறன.

சுருக்கம் என்னும்போது குறிகியதாக எழுதுவதல்ல. மாறாக குறுகிய சொற்களில், குறுகிய வசனங்களில், சிறிய பந்திகளில் எழுதுவதாகும். சிறிய சிறிய பந்திகளாக ஒரு கருத்தை அச்செய்திக்குள் எழுதும்போது அச்செய்தி சுவைநிறைந்ததாக அமைந்துவிடும். இன்றைய வாசகர்கள் அவசரமாக உள்ளார்கள். நீண்ட செய்திகளைப் படிக்க விரும்பமாட்டார்கள். சிறிய பந்தி களில் செய்தியை வடிவமைக்கும்போது பார்வைக்கு இலகுவாகவும் கண்க ளுக்கு இதமாகவும் அவர்களுக்கு அமைந்து விடுகிறது. உ-ம் உலகப்புகழ் பெற்ற பத்திரிகையாளர் புலிட்சர் சுருக்கமாக எப்படி எழுதுவது…? சொல்லவேண்டிய எல்லாத்தையும் எழுது. அதை அவுஸ்ரேலி யாவுக்கு சொந்த செலவில் தந்தி அனுப்புவதாக எண்ணிகொள்ளும் சுருக்கம் தானாக வந்தவிடும் என கூறுகின்றதை இங்கு நினைவுபடுத்துவது நன்று.

9. அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியமை/பூரணத்தன்மை: இதனைக் நோக்கும்போது எல்லா விடயங்கள், அம்சங்கள் உள்ளடக்கப் படவேண்டும் என்பதாகும். ஒரு செய்தியை படிக்கின்ற வாசகர் மனதில் நியாயமாக எழக்கூடய எல்லாக் கோள்விகளுக்கும் அச்செய்தி அழகுற விடைகொடுக் குமாக இருந்தால் அனைத்து விடயங் களையும் உள்ளடக் கியமை என்பது பூரணமாகிறது. பொதுவாக செய்தியானது '5-எ" வினாக்க ளுக்கும் ஒர் 'ஏ" வினாவிற்கும்: என்ன?, ஏன்? எங்கே?, எவர்?, எப்பொழுது?, எப்படி?, - (05 Ws+ 01 H: What?, Why?, Where?, Who?,  When?  How?) விடைகளை கொடுத்துவிட்டால் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியமைக்குள் வந்துவிடும் எனலாம். ஒரு செய்தியைப் படிக்கும்போது வாசகர் மனதில் நியாயமாக எழக்கூடிய எந்தக்கேள்வியும் இந் கேள்விகளுக்கள் அடங்கி விடுகின்றன.  

உ-ம் ஒரு சம்பவம் நடந்து விட்டால்:  என்ன நடந்தது?, ஏன் நடந்தது?, எங்கே நடந்தது?, எவர் நடத்தினார்?, எப்பொழுது நடந்தது?, எப்படி நடந்தது?, What happened?, Why happened? Where happened?, Who did it?,  When happened?  How did it happen?)  என்ற வினாக்களுக்கு பதில் கொடுத்துவிட்டால் அது ஒரு பூரண செய்தியாகும். இதற்கு இன்று சில சந்தர்ப்பங்களில் 6ஆவது “எ” –“W= for Whom” க்கு விடைகொடுக்கவேண்டிய தேவையும் ஏற்படுகின்றது. அதாவது எவருக்காக நடத்தப்பட்டது? என்ற வினாவிற்கான விடையும் விளங்கப் படுத்துவது கட்டயமாகிறது. இன்று நம்மை சுற்றி நடத்தப்படும் வாள்வெட் டுக்கள் இதற்கு உதாரணமாக லாம். எவருக்காக இந்த குற்றச்செயல்கள் நடத்தப்படுகிறது. உண்மையில் இவர்களை பயன்படுத்துபவர்கள் எவர்கள். அவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட வேண்டியது கட்டயமாகிறது.


10. இணக்கத்தன்மை / தொடர்தன்மை ஃ ஒழுங்குமுறை - வரிசை: செய்திகள் எழுதப்படும்போது ஒரு தொடர் ஒழுங்கு காணப்படவேண்டும். அதாவது பாகங்களின் பொருத்தம்-Symmetryஒத்ததன்மை காணப்படவேண்டும். சரியாக திட்டமிடப்பட்டதாக, ஒழுங்கு படுத்தப்பட்டதாக, பின்னப்பட்டதாக இருக்கவேண்டும். செய்தியின் கடைசிப்பந்தியில் செய்தி யின் முடிவு அமையவேண்டும். சரியாக பொருந்தப்படாத பாகங்களை கொண்ட செய்தி கள் அதன் அழகை கெடுத்துவிடுகின்றன. இதனால் வாசகர் கள் சரியான ஒழுங்கில் படிப்பதற்கு குந்தகம் விளைவித்துவிடுகிறது. Symmetry mars the  beauty  and the listener does not go on with the bulletin smoothly and comfortably. செய்தியானது அங்கும் இங்கும் பாய்ந்துகொண்டு சீரற்றதாக இருக்கக்கூடாது. It must not be jumpy and uneven.

Attribution– பண்புக்கூறுகள் ஃ மூலக்கூறுகள்: இந்த மூலக்கூறு இன்று மிகவும் முக்கியமானது. செய்தியின் தகவல் மூலம் எங்கிருந்து வருகிறது என்பத னை குறிக்கின்றது. இச்செய்தியானது எங்கிருந்து வருகிறது? ஒரு நேர்கா ணலில் இருந்து வருகிறதா? ஒரு நிறுவனம் ஊடகத்திற்காக வெளியிடப்பட்ட அறிக்கை யிலிருந்து வருகிறதா? ஓர் உரையிலிருந்து வருகிறதா? ஒரு நீதிமன்ற தீர்ப்பி லிருந்து வருகிறாதா? அல்லது வேறு ஓர் ஊடகத்தில் வெளி யிடப்பட்ட செய்தியி லிருந்து எடுக்கப்பட்டதா? என்பதை குறிப்பதாகும். இதனைக் கொண்டு வாசகர்கள் செய்தியின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்வர். 

11. நடப்புநிலை : ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான பெறுநருக்காக உண்மைகள் அல்லது கருத்துகள் மீது ஆர்வத்தை மற்றும்  முக்கியத்துவத்தை வைத்திருக்கும் சரியான நேரத்து அறிக்கையே செய்தி எனலாம். நடப்புக் காலதோடு இசைதல்-ஒத்ததாக செய்தி அமையவில்லை யாயின் அல்லர் அதற்கு முக்கிய கவனம் செலுத்தப்படாவிட்டால் செய்தி களின் வரைவிலக் கணம் முழுமையடையாது போய்விடும். காலதோடுஇசைதல் என்பது செய்திகளின் சாராம்சம். விடயங்கள் எப்போதுமே மாறிக்கொண்டே இருக்கும் என்பது நாம் அறிந்ததே. இதனால் செய்தியின் காலம் முக்கியமானது. காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களால் செய்தியில் குழப்பம் ஏற்படலாம்.  மேலும் செய்திப்பெறுநர்கள் தங்களுக்கு அக்கறை யுள்ள அல்லது ஆர்வமுள்ள விடயங்களில் மிக சமீபத்திய தகவல்களை விரும்புகிறார்கள். தற்போதைய சூழ்நிலைகளில் செய்தி விரைவாக மாற்றத்திற்கு உள்ளாகக்கூடும். காலையில் நிகழும் நிகழ்வுகள் முற்றிலும் மாலையில் காலாவதியாகலாம் அல்லது குழப்பத்தை உருவாக்கலாம். பெரும்பாலான செய்திகள் இன்றைய| என்று பெயரிடப்பட்டுள்ளன அல்லது மிகமிக அண்மையில், நேற்றிரவு என குறிப்பிட்டு எழுதப்படுகின்றன. செய்தி ஊடகங்கள் நேரம் குறித்து தனித்து வத்தை பேணுகின்றன. செய்தி சமீபத்தியது மட்டுமல்ல, உண்மையி லேயே இந்த விடயத்தில் அதுகடைசி வார்த்தையாகும் என்று ஊடகங்கள் பெறுநருக்கு கூறுகிறார்கள்.

ஓர் ஊடகவியலாளனது வேலை தெரிவிப்பதேதவிர, சம்மதிக்க வைப்ப தில்லை." ஆனால் ஊடகங்கள் இன்று இந்த அடிப்படையிலிருந்த எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளது என எண்ணும்போது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.


உசாத்துணை நின்றவை:-
  1. பத்திரிகை இயலுக்கு ஓர் ஆறிமுகம்இ முதற்பதிப்பு 26 டிசம்பர் 2001இ புனித வளன் கத்தோலிக்க அச்சகம்இ யாழ்ப்பணம்.
  2. தொடர்பாடலும் ஊடகவியற்கற்கையும், தரம் 11, இரண்டாம் பதிப்பு 2016, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இலங்கை 
  3. http://studylecturenotes.com/characteristics-of-news-are-accuracy-balance-concise-clear-current/, accessed on 10.06.2020

Saturday, June 13, 2020

செய்தி ஒன்றின் பெறுமதிக்கு வலுச் சேர்க்கும் காரணிகள் / பெறுமதியை பாதிக்கும் காரணிகள். (News Value)

ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, 
யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை



ஒரு நிகழ்வு செய்தியாக மதிப்பிடப்படுவதற்கு அது ஒரு புதிய நிகழ்வாக இருக்கவேண்டும். அந்த நிகழ்வு அறிக்கையிடப்பட வேண்டும். அதில் புதினத்தன்மை இருக்கவேண்டும். நடக்கும் நிகழ்வுகளே செய்தியா குகின்றன. அறிக்கையிடப்பட்ட பல நிகழ்வுகளை நாளாந்தம் ஊடகங்கள் வழியாக வெளிவரும்போது அவற்றை செய்திகளை நாம்; அறிந்துகொள்ளு கின்றோம். அந்தசெய்திகள் எல்லாம் வாசகர்களைப் பெறுத்த வகையில் சமமான பெறுமதியை கொண்டிருப்பதில்லை. செய்தி ஒன்றின் பெறமதியை ,மதிப்பை, தகமையை வழங்கும் காரணிகள்- தீர்மானிப்பதில் தாக்கம் செலுத்தும் காரணிகள் பலவற்றை நாம் இனங்காண்பது செய்திகளை பற்றி மென்மேலும் புரிந்து கொள்வதற்கு எமக்கு துணைபுரியும் எனலாம்: அவற்றுள் சிலவற்றை நோக்குவோம்:

  1. காலத்தோடு இயைந்திருத்தல் - Timeliness
  2. அண்மித்த தன்மை –Proximity / Nearness
  3. தொடர்புபடுதல் - Relevance  
  4. வெளிப்படையாகத் தெரிதல்- Prominence
  5. முரண்பாடுகள் -Conflict Controversy
  6. மானுட விருப்பங்கள்- Human Interest
  7. தாக்கம் ஃ விளைவு - Impact / Consequence
  8. முக்கியத்துவமும் - Importance
  9. அசாதாரணமான தன்மை - Unusualness / Novelty / Rarity
  10. அக்காலத்திற்குரியவை மட்டும் -    Currency (Newness)
  11. உபயோகமுள்ளவை ஃ பிரயோசனமுள்ளவை-    Usefulness
  12. கல்விசார் பெறுமதியுடையவை  - Educational Value 
  13. நாடகபானித்தன்மை  - Drama


1. காலத்தோடு இயைந்திருத்தல் -  Timeliness:- 
செய்தி காலத்தோடு போராடவேண்டிய ஒரு பொருள். கரணம் தப்பினால் மரணம், ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்ற நிலைபோல் காலம் தப்பினால் செய்தி மரணமாகிவிடும் என்ற தத்துவத்தை இங்கு உணரவேண்டும். செய்தி ஒன்றிற்கு உயர் பெறுமதி உரித்தாகிட வேண்டுமாயின் அது புதியவையாக அமையவேண்டும். அந்த செய்திகள் சுடச்சுட தரப்படும்போதே சுவையும் விறுவிறுப்பும் பெறுகின்றன. அத்துடன் அச்செய்தி முன்வைக்கப்படுகின்ற காலத்திற்குப் பொருத்தமானதான நிகழ்வாக அமைய வேண்டும். காலம் செல்லச்செல்ல குறிப்பிடப்பட்ட ஒரு நிகழ்வு தன் செய்தி தன்மையை இழந்து விடுகிறது அல்லது அதன் செய்திசார் பெறுமதி குறைந்து போதல் நிகழும். ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த ஒரு விபத்து இன்றைய நாளிதளில் செய்தியாகாது. 

காலத்தோடு இயைந்திருத்தல் பண்பை விளக்க 2006ஆம் ஆண்டும் யாழ்ப்பணத்தில் நடந்த இந்த உதாரணம் சாலப்பொருந்தும் எனலாம்: யாழ்நகரில் தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம், படையினரால் அமுல்படுத்தப் பட்டுக் கொண்டிருந்தது. இதன் நேரவிபரம் நாளுக்கு நாள், ஏன் நாளுக்குள் வேறபட்ட நேர இடைவெளிகள், ஏன் வடமராட்சிக்கு ஒரு நேர இடைவெளி, தென்மராட்சிக்கு, வலிகாமத்திற்கு என வேறுபட்ட நேர இடைவெளிகள் ஒவ்வொரு நாளும் மாறுபட்டதாக அமுல் படுத்தப்பட்டுக்கொண்டிருந்தன. இந்தகாலத்தில் ஊரடங்கு அறிவித்தல் பற்றிய நேரவிபரம் மிகமிக முக்கிய மானது. இதனை ஊடகங்கள்  காலம் பிந்தி அறிவிக்குமாயின் அதில் எந்த அர்த்தமும் இருக்காது. 

ஊடகங்களுக்கு ஊடகம் காலத்தோடு இயைந்திருத்தல் என்னும் மூலக்கூறு வேறுபடலாம். காலத்தோடு உ-ம்: ஒரு தினப்பத்திரிகைக்கு முதல்நாள் நடந்த சம்பவம் செய்தியாகும். ஆனால் வாரப்பத்திரிகைக்கு ஒரு வாரத்திற்கு முதல் நடந்த சப்பவம் செய்தியாகும். போhரட்டகாலங்களில் சில பத்திரிகைகள் (யாழ்நகரில்) காலை ஒரு பதிப்பும், மாலை புதிய தகவலுடன் இன்னொரு பதிப்பையும் வெளியிட்டதை நாம் இங்கு நோக்கலாம். ஏன் இப்போது கூட யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் காலைக்கதிர் பத்திரிகை காலை ஒரு பத்திரிகையும், மாலையும் இன்னொரு பத்திரிகையும் வெளியிடுகிது.; செய்தியை இருபத்திநான்கு மணித்தியாலமும் வெளியிடும் ஒரு ரீ.வி ஊடகத்திற்கு ஒவ்வொரு நிமிடமும் அல்லது வினாடியும் அந்த செய்தி முடிவுக்காலக்கெடுவாக இருக்கலாம். இங்கு கணத்திற்கு கணம் செய்தி புதிதானவையாக அமையும். இதனால் காலத்தோடு இயைந்திருத்தல் தன்மை ஊடகங்களுக்கு ஊடகம் மாறுபட்டுக் கொண்டிருக்கும் எனலாம்.சுடச்சுட செத்திகள் தரப்படும்போது மக்கள் சுறுசுறுப்பாக அதன் மீனு ஆர்வம் காட்டி அறியமுற்படுவர் என்பது உண்மையே.


2. அண்மித்த தன்மை – Proximity / Nearness:-
இது எமக்கு நெருக்கமான, முக்கியமான தன்மையை குறிக்கின்றது. தூர நிகழ்வுகள் வாசகர்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. வாசகர்கள் -பெறுநர்கள் தூரஇடத்து செய்திகளை விருப்பி படிக்கமாட்டார்கள் -அறிய ஆர்வம் காட்டமாட்டார்கள். வாசகர்கள் தாம் வாழும் பிரதேசத்தில், பண்பாட்டில் தனது நாட்டில் நடக்கும் நிகழ்வுகளின் தகவல்களை அறிய ஆவலாக இருப்பார்கள். 

இந்தியாவில் சென்னை சில்க் என்னும் பெரிய புடவைக் கடை எரிந்துபோன போது. இது எமக்கு ஒரு செய்தியானதா? என்றால் அது ஒரு கேள்விக்குறியே? எம்மில் பலர் அதனை அறிந்திருக்கலாம். ஆனால் அதைபற்றி கவலை கொண்டிருக்கமாட்டோம். அதுமட்டுமல்ல பலருக்கு இந்த விடயம் தெரியா மலும் போய்விட்டது எனலாம். ஆனால் எமது பிரதேசத்தில் ஒரு புடவைக்கடை எரிந்திருந்தால் நாம் அதுபற்றி விழிப்புடன் இருந்திருப்போம். 

மலேசிய விமானம் கடலில் விழுந்தபோது நாம் பெரிதாக அலட்டிக்கொள்ள வில்லை. ஆனால் பலாலியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் விமானம் மன்னர் கடலில் விழுந்தபோது நாம் மிகவும் அக்கறையாக அதுபற்றிய செய்திகளை அறிய ஆவலாக ஊடகங்களை நாடிக் கொண்டிருந் தோம். இந்த செய்தியாது ஊடகங்களில் தலைமைச் செய்திகளானதையும் நாம் மறந்த விடமுடியாது. ஏனெனில் இது எங்களுக்கு அருகாமையில் நிகழ்ந்தமையேயாகும். 

தென்பகுதியில் மிகஅண்மையில் நடந்த வெள்ளப்பெருக்கும், அதன் அழிவும் இதற்கு சிறந்த  உதாரணமாகலாம். 

தென்பகுதியில் டெங்கு தாக்கமும், மரணமும் நடைபெறும் போது நாம் பரவலாக அக்கறைப்படவில்லை. ஆனால் இது இன்று எமது வீட்டு படலையை தட்டும்போது மிக கவனத்தடன் அக்கறைப் படுகின்றோம். ஆயினும் சில வேளைகளில் தூரத்தில் நடந்தாலும் நாம் அக்கறைப்பட நேரிடும். மாணவர்க ளுடன் தொடர்புடைய ஒரு நிகழ்வு தேசிய மட்டத்தில் நடந்தாலும் நாமும் மாணவர்கள் என்ற ரீதியில் உள்ளவர்கள் அதனுள் என்ன விடயங்கள் அடங்கு கின்றன என்று அறிய ஆவலாக இருப்போம்.

இதன் அடிப்படையில் இந்த அண்மித்த தன்மை அதிகரிக்கின்றபோது செய்திசார் பெறுமதி அதிகரிக்கி றது. இங்கு ஊடகங்கள் வாசகர்களின் இந்த மனநிலையை அறிந்து தூரஇடத்து செய்திகளையும் தமது செய்தி வழங்கும் திறமையால் வாசகர்களுக்கு மிக நெருக்கமாக்கிவிடுகின்றன. 

உதாரணமாக: 22.02.1999ஆண்டு உதயன் பத்திரிகையில் முதல்பக்கத்தின் மேல்பகுதியில் சவுதி ஆரேபியாவில் கோ~;டி மோதல் 23பேர் பலி என்று கட்டம் கட்டி வெளியிடப்பட்ட செய்தியை நோக்குவோம்: சவுதி அரேபியாவின் றியாட் நகரில் இடம்பெற்ற கோஸ்டி மோதல் ஒன்றில் 23 இலங்கையர்கள் காயமடைந்தனர். கடந்த வியாழக்கிழமை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்களுக்கும், பங்களாதேஸ் தொழிலா ளர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்தகராறே கோ~;டி மேதலாக மாறியது. இச்சம்பவத்தில் இருதரப்பிலும் பலர் கயமடைந்தனர் என தெரிவிக்கப்ப டுகிறது. இச்சம்பவம் தொடர்பாக 40 இலங்கையர்கள் உட்பட பலர் கைதாகிய ள்ளனர். 

இச்சம்பவத்தை பார்க்கும்போது இது எங்கேயோ தூரத்தில் நடந்த ஒரு செய்தியாகும். ஆனால், அதில் இலங்கையர்கள் சம்மந்தப்பட்டருக்கிறார்கள் என்றவுடன் அந்த செய்தி எமக்கு மிகவும் நெருக்கமாகி விடுகிறது. பத்திரி கைகள், (ஏனைய ஊடகங்களும்)அச்செய்தியை எடுத்து முன்னுரிமை கொடுத்து கட்டம் கட்டி முதல் பக்கத்தில் பிரசுரித்து விடுகின்றன. 


3. தொடர்புபடுதல் - Relevance :- 
மனிதர்கள் தமது வாழ்க்கையில் தமக்கு தாக்கம் ஏற்படுத்தும் செய்திகள் பற்றி அதிக அக்கறை காட்டுவர். குறிப்பிடப்பட்ட தகவல் ஒன்று செய்தியாக மாற்றமடைய வேண்டுமாயின் பெறுநருக்கு அது தொடர்புபட்டதாக இருக்க வேண்டும். செய்திகளின் பெறுமதி உயர்வடைவதில் இந்தத் தொடர்புபடுத்தல் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

உ-ம் சாதாரண பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும்போது அந்த செய்தி அந்த பரீட்சையில் தோற்றிய மாணவர்க்கும், அவர்களது உறவினருக்கும், பாடசாலைக் கும், அயலவர்களுக்கும் தொடர்புபட்டதாகும் ஆனால் அச்செய்தி பொதுவாக சகலருக்கும் தொடர்பு பட்டாதகமாட்டாது. 

இத்தொடர்புபடும் தன்மை வாசகர்களுக்கு வாசகர் கூட மாற்றமடையலாம். இராசிபலனில் நம்பிக்கை உள்ளவர் ஊடகங்களில் அதனை நாடித்தேடுவார் அது அவருக்கு முக்யமானது. நம்பிக்கை அற்றவர் அதனைப்பற்றி அலட்டிக் கொள்ளமாட்டர். ஒரு மரக்கறிவியாபாரி தன்னுடன் தொடர்புபட்ட மரக்கறி களின் சந்தை நிலைமைகளை அறிய, அது தொடர்பான செய்திகளையே ஊடகங்களில் தேடிச்செல்வார். ஏனெனில் அச்செய்தி அவருடன் முக்கியமாக தொடர்புபடுகிறது. 

4. வெளிப்படையாகத் தெரிதல்- Prominence:- 
சமூகத்தின் பிரசித்தமான மனிதர்கள், இடங்கள், பொருள்கள் மற்றும் சூழ்நிலைகள் பற்றியதாக ஆக்கப்படுகின்ற தகவல்கள் உயர் பெறுமதியு டையனவாகும். மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய மனிதர்கள், உலகப் பிரமுகர்கள், முக்கிய தலைவர்கள், முக்கிய சமயத்தலைவர்கள் நிகழ்வுக ளோடு தொடர்புபடுகின்றபோது அவைகள் செய்திக ளாகி விடுகின்றன. சர்வதேச, உள்ஊர் சார்ந்ததான சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற, பிரசித்தி பெற்ற நிறுவனங்கள், ஒழுங்கமைப்புக்கள் தகவல்கள் செய்திகளாக முன்வைக்கப்படுகின்றன. இந்த செய்திகளை அறிந்து கொள்ள தனிநபர்கள் விருப்பத்தோடு முனைகின்றனர். இதற்கு காரணம். வெளிப்படையாகத் தெரிதல் என்னும் பெயருடைய காரணியூடாக செய்தியின் பெறுமதி அதிகரிக்கப் படுகின்றமையாகும். 
உ-ம் சாதாரணமான ஒரு மனிதன் தனது காரில் சென்று கொண்டிருக் கும்போது இடையே வாகனத்தில் பழுது ஏற்பட்டு திருத்தவதற்காக 10 நிமிடங்கள் வீதியோரத்தில் தரித்து நிற்கவேண்டி ஏற்பட்டால் அது செய்தியாக இடம் பிடிக்கமாட்டாது. ஆனால் இதுவே எமது நாட்டினுடைய பிரதமருக்கு ஏற்பட்டால் செய்தியாக இடம்பிடித்து விடும். சாதாரண ஒரு மனிதன் நாட்டின் மறைந்த தலைவர்களுடைய கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தினால் அது செய்தியாக மாறாது. அதுவே எமது நாட்டுக்கு விஜயம் செய்த அமெரிக்க அரச தலைவராக இருந்தால் செய்தியாக இடம் பிடித்துவிடும். 

தினமும் பலர் குழியலயையில் வழுக்கி விழுகின்றனர். ஆனால் ஒருமுறை பாப்பரசர் - திருத்தந்தை 2ஆம் அருளப்பர் சின்னப்பர் தனது குளியல் அறையில் வழுக்கி விழுந்தவிட்டார். இந்த சம்பவம் ஊடகங்களில் முக்கிய செய்தியானது இங்கு குறிப்பிடத்தக்கது. 


5. முரண்பாடுகள் -Conflict / Controversy-சச்சரவு:-
பொதுவாக மக்கள் சச்சரவுக்குரியவைகளை, முரண்பாடுகள் நிறைந்த விடையங்களை விரும்பிப் அறிய முற்படுவார்கள். முரண்பாடுகள், வாதங்கள், குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர் குற்றச்சாட்டுகள், சண்டை மற்றும் பதட்டங்கள் ஆகியவற்றுடன் தொடர்புபட்டவை செய்திகளாக மாறுகின்றன. இதற்கான காரணம் முரண்பாடுகள் தனிநபருக்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுவதானால் ஆகும். சிலவேளைகளில் அவை சமூகப் பண்பாடு, அரசியல் கருத்துக்கள் காரணமாக எழுகின்ற கொள்கை முரண்பா டாகவும் இருக்கமுடியும் அல்லது வன்முறை, யுத்தம் தொடர்பான முரண்பாடகளாகவும் இருக்கலாம். இதிலிருந்து நாம் முரண்பாடகள் எப்போ துமே செய்திக்கான பெறுமதியைக் கொண்டுள்ளன எனலாம்.

உ-ம்: நாம் அனைவரும் இந்தியாவில் நடைபெற்ற கார்கில் சண்டை பற்றி அறிந்திருக்கின்றோம். இது இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற ஒரு சண்டையாகும். இந்த சண்டை உலகம் முழுவதும் பாரவிய ஒரு செய்தியாகும். அமெரிக்கவில் நியுயோக்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது 2001 ஆண்டு பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் மேற்கொண்டபோது அது  எல்லா ஊடகங்களிலும் முதன்மைச் செய்தியாகமா றியது நினைவிருக்கும். செய்திக்காக முரண்பாடுகள் முக்கிய மூலாதாரமாக செயற்படுகின்றன என்பதையும் நாம் மறக்கக் கூடாது. ஏனெனில் நாம் இந்த முரண்பாட்டில் யார் வெற்றிபெறுகிறார்கள். யார் யார் என்ன என்னவெல்லாம் சொல்கிறார்கள் என்பதை அறிய ஆவலாக இருப்பதே ஆகும். 

6. மானுட விருப்பங்கள் ஃ உணர்வுகள் -Human Interest:-
எந்த செய்திகளுக்கும் இல்லாத ஒரு மதிப்பும் முக்கியத்துவமும் மனித உணர்வுச்செய்திகளுக்கு உண்டு எனலாம். செய்திகளைப் படிக்கின்ற எல்லோரும் மனிதர்களாக இருப்பதனால் அவர்களின் உணர்வுகள், மனநிலை கள், விருப்புவெறுப்பக்கள், அன்பு-கருணை கொண்ட விடயங்கள், இன்பதுன் பங்கள், அனைத்துமே மனிதஉணர்வுகளைத் தொடுகின்றனவாக அமைகின்ற போது அச்செய்திகள் மதிப்பம் முக்கியத்தவமும் பெறுகின்றன. பெரும்பாலும் மனதை உலுக்குகின்ற அழிவுச் செய்திகளிலே மனிதநேயம் அதிகமாக வெளிப்படுகிறது. இதனால் மக்கள் இச்செய்திகளுக்கு அதிக விருப்பம் காட்டுகின்றனர். எனவே ஊடகங்களும் ஆக்கச் செய்திகளை காட்டிலும் அழிவுச்செய்திகளுக்கு முக்கியத்துவம் காட்டுகின்றன எனலாம்.

உ-ம்: நீண்டகாலம் எமது மண்ணில் நடைபெற்ற போரில் அழிக்கப்பட்டோர், அனாதைகளாக்கப்பட்டோர், துணையிழந்த குடும்பத் தலைவிகளாக்கப் பட்டோர். கற்பழிக்கப்பட்டோர்-கொலை செய்யப்பட்டோர். குhணாமல் ஆக்கப்பட்டோர் போன்றோர்பற்றிய செய்திகளே மற்றைய செய்திகளைவிட எமது ஊடகங்களில் எப்போதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏன் அண்மையில் தெற்கில் நடந்த மண்சரிவும் அதன் இழப்புக்களும் செய்திக ளாகிக் கொண்டிருந்தன. பலரை காப்பாற்றிய ஒர் இளைஞன் மக்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் போது  மண்சரிவில் அகப்பட்டு இறந்தபோது அது முக்கிய செய்தியாகியது.

இந்த மனித உணர்வு செய்திகளில் மனித மாண்பு, மனிதபிமானம்,  மனித உரிமைகள் போன்ற மனித நேயப் பிரச்சினைகள் பெரிதாக அணுகப்படு கின்றன. 

a. பால் (நிலை) - எதிர்பால் சம்மந்தமான- Sex:
இது மனித வாழ்வேடு பின்னிப்பிணைது ஒன்னிணைந்த ஒரு பகுதியாகும். இது அத்தியவசியமாகது. இது காதல் விவகாரங்களில் -எழுச்சி ஊட்டுகின்ற விடயங்களில் (சன்னி லியோன்-பையன்கள்.) அல்லது திருமணங்களில், திருமண முறிவுகளில், மற்றும் ஏனை தகாத உறவுகளில் எழுச்சிஊட்டுகின்ற செய்திகளின் கூறாகும்.(மேனிக்கா கிலின்ரன் உறவு) போன்ற  எதிர்பால் சம்மந்தமான செய்திகளில் வாசகர்கள் உணர்வுகள் தூண்டப்படுவதால் -கிளறப்படுவதால் அதிகம் வாசிப்பார்கள் (It is an integral part of human life. Sex is a vital (= indispensable)- news element in stories of romance, (about Sunny Leone to Boys), marriage, divorce and other illicit relationships ( Monica – Clinton relationships) among members of opposite sexes as readers want their emotions stirred.)

7. தாக்கம் / விளைவு – Impact / Consequence:-
ஒரு நிகழ்வின் தாக்கத்தின் அளவு அந்த நிகழ்வின் செய்திசார் பெறுமானத் தை சமூகத்தில் கூட்டக்குறைக்கின்றது எனலாம். அதிகமானோருக்கு அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற செய்தி யொன்றின் செய்திசார் பெறுமதி அதிகமாகும். 

உ-ம் சுனாமி அலைகள் உலகின் சில நாடுகளின் சில பகுதிகளை 2004 ஆம் ஆண்டு தாக்கியபோது பல இலச்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். இது உலகின் எல்லாப்பகுதிகளிலும் முக்கிய செய்திகளாகியது. கொரோனா பலரை காவுகொள்ளும் இச்சந்தர்ப்பத்தில் அதன் தாக்கம் உலகம் முழுவதிலும் உணரப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் நி~hப்புயல் தாக்கி 2008ஆம் பலர் பாதிக்கப்பட்ட போது இச் சம்பவம் உலகத்தின் பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனலாம். டெங்கு காச்சல் தாக்கி 100பேர் தென்பகுதியில் இறந்து விட்டார்கள் என்றால் இலங்கை முழுவதிலும் அதன் தாக்கம் உணரப்படுகிறது. அதுசெய்தியாக உருப்பெறுகிறது. மக்கள் இந்த செயலின் தாக்கத்தால் விழிப்படைகி றார்கள் அவர்களையும் அது பாதிக்கிறது. புதியதொரு அரசியல் மாற்றம், புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட-மாற்றி யமைக்கப்பட்டசட்டம், மாற்றியமைக்கப்பட்ட வரிநடைமுறைகள், சம்பள உயர்வுகள், எரிபொருள் விலை உயர்வுகள் போன்ற செய்திகள் இதனுள் அடங்கும். 


8. முக்கியத்துவம்-Importance:-
 முக்கியமான செய்திகளே ஊடகங்களில் முதலிடம் பிடிக்கின்றன. ஒர் ஊடகத்திற்கு வரும் செய்திகள் அனைத்தும் முக்கியத்துவத்தின் அடிப்படையி லேயே வரிசைப்படுத்தப்படுகின்றன. இவ்முக்கியத்துவ தன்மை வாசகர்க ளுக்கு வாசகர் கூட மாற்றமடையலாம். கிரிக்கெர் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர் ஊடகங்களில் அது சம்மந்தமான செய்திகளை நாடித்தேடுவார். அது அவருக்கு முக்கியமானது. ஆந்த விளையாட்டில் அக்கறை அற்றவர் அதனைப் பற்றி அக்கறைப்படமாட்டார். ஒரு நீரிழிவு நோயாளி ஊடகங்களில் வரும் அந்த நோயுடன் தொடர்புடைய தகவலை அறிய ஆவலாகத் தேடுவார். ஆனால் அந்த நோய் அற்றவர் அதைபற்றி அக்கறை கொள்ளமாட்டார். செய்திகளின் முக்கயத்துவம் பிரகூரத்திற்குப் பிரசுரம் வேறுபடலாம். ஒரு பகுதியில் அப்பிரதேசத்தின் தேவையை ஒட்டி முக்கியம் எனக் கருதப்படும் ஒரு செய்தி இன்னொரு பதிப்பில் இடம் பிடிக்காமல் போகலாம். இது பத்திரிகைக்கு பத்திரிகைகூட வேறுபடலாம்.  

9. அசாதாரணமான தன்மை- Unusualness ஃ புதுமைத்தன்மை -Novelty/ Rarity:- 
உலகில் நிகழ்கின்ற விந்தையான, நம்பமுடியாத சம்பவங்கள் பற்றிய தகவல்கள் செய்திசார் பெறுமதிகளை கொண்டமைந்து விடுகின்றன. அதற்குக் காரணம் அவ்வித செய்திகளில் காணப்படுகின்ற அசாதாரண தன்மை எனலாம். முதல் முதலாக நடந்த சம்பவமொன்று, எந்த விதத்திலும் எதிர்பார்க்க முடியாத விதத்திலான சம்பவமொன்று, சாதாரணமாக நடந்ததென நம்பமுடியாத நிகழ்வொன்று இவ்வகைக்குள் அடக்கலாம். உ-ம் பிள்ளையார் சிலையால் பால் வடிதல். மாதா சிலையால் கண்ணீர் வடிதல் போன்றவை உதாரணமாகலாம். 

a. அதிர்ச்சியானஃவினோதமான Shock/Bizarre Value or Oddity:-
அதிர்ச்சியான- வினோதமான செய்திகள் ஊடகங்களில் முக்கிய இடத்தை பிடிக்கின்றன. பெறுநர்கள் விரும்பி அறிய முற்படுகின்றனர். வடமாகண சபையின் பதினெட்டுக்கு மேற்பட்டவர்கள் 14.06.2017 அன்று எங்களது 'வடக்கு முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் விரேரணையை வடபகுதி ஆளுரிடம் இரவோடு இரவாக சமர்ப்பித்த போது வடமாகணமே அதிர்ச்சிக்கு உள்ளகியது. அதன் விளைவுகள் பன்மடங்காகின. மறுநாளுக்கு அடுத்தநாள் வடபகுதி முழுவதும் கர்த்தல் அனுசரித்தமை நாமறந்ததே. கூட்டமைப்பு தலைவர் சம்மந்தன் ஐயா அவர்கள் சிற்றம்பலம் ஐயா அவர்கள் தேசிய பட்டியல்முலம் நாடாளமன்றத்திற்கு தெரிவு செய்யாமல் வேறுநபர் களை தெரிவுசெய்தபோது அனைவருக்கும் அது அதிர்சியானதாகமாறியது. ஆந் நிகழ்வு ஊடகங்களில் செய்தியாக இடம் பிடித்தது. சம்மந்தன் ஐயா எதிர்கட்சி தலைவர் ஆனபோது அனைவருக்கும் அதிர்ச்கியானதாக இருந்தது. அதுமட்டு மல்ல இன்றுகூட எந்த வற்புறுத்தலும் இன்றி அவர் மனப்பூர்வமாக கட்சியி லிருந்து விலகி தனது பதவியை துறக்கிறார் என்றால் அனைவருக்கும் அது அதிர்சியன தகவலாக இருக்;கும்." 




b. இருதலைகளுடன் பிறந்த குழந்தை, ஆறு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி. மனிதன் நாயைக் கடித்தல், தென்னை மரம் முழைத்து ஆறு மாதத்தில் காய்த்தது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் (ஆனிமாதம் 2020) விதோதம். போன்ற சம்பவங்கள் இதற்கு உதாரணமாகும் 

A man pulls a car by his hair, a woman gives birth to triplets, a singer enters the Guinness Book by singing non-stop for 48 hours, the painting of a famous artist is auctioned for a very expensive price. All such odd stories evoke much public interest. Similarly, a child getting birth with two heads or four legs will provide a reporter with good news. If you come to know that a person devours up glass or iron or blades, how will you not help yourself getting astonished? ---. You will definitely. A man pulling a truck with his mustache, or allowing a tractor overrun himself makes news carrying a strong flavor of novelty. So, anything capable enough to surprise your faculty of accepting things come under the head of NOVELTY

10. அக்காலத்திற்குரியவைமட்டும்-Currency– Present times(Newness-புதுமைத் தன்மை) 
குறிப்பிடப்பட்ட ஒரு காலத்திற்கு பேசுபொருளாக, கவனத்தை ஈர்க்கின்ற விடயங்கள் இதனுள் அடக்கலாம் அல்லது திடிரென எழுப்பப்படும் கொந்த ளிப்பு- (Simmer) நிறைந்ததாக அமைந்துள்ள விடயங்கள் செய்திசார் பெறும தியை பெற்றுவிடுகின்றன. ஊடகங்களும் அதற்கு முக்கியத்தவம் கொடுத்து வெளியிட்டுவிடுகின்றன. அநேகமாக இவை ‘‘Seasonal’ Pieces as well as trending pieces  ஒரு குறுகிய காலத்திற்கு மட்டும் பேசப்படுபவையாகும்.

உ-ம்: கிறிஸ்மஸ் காலத்தில் நத்தார் பாப்பா, கிறிஸ்மஸ் மரம் போன்றவை, வருடந்தோறும் அனேகமாக பெப்ரவரி 10 திகதிக்கு பின்னர் காதலர் தினம் பற்றிய விடயங்கள் வெளியிடப்படுபவை. தேசிய விளையாட்டு போட்டிகள் 2016 ஆண்டு யாழ்ப்பணத்தில் நடைபெற்ற பொழுது அது முக்கிய நிகழ்வாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து செய்திகளாக ஊடகங்களில் இடம்பிடித் தது. இவ்வாறு சாக்மகா நாடு இலங்கையில் நடைபெற்றதையும் குறிப்பிட லாம். 
Occasionally, a situation long simmering will suddenly emerge as the subject of discussion and attention. Historians might describe the situation as an idea whose time has come. When it does, the media catch up. In the early 1960s, President Kennedy called attention to the plight of the poor. Then President Johnson declared a “war on poverty.” Newspapers responded by covering health and welfare agencies and by going into poor areas of their cities in search of news. Television produced documentaries on the blighted lives of the poor. More than 40 years later, poverty, although as pervasive, receives less attention. Similarly, if extreme cold weather continues for a week and fog disrupts air, rail and road traffic, it becomes news

11. உபயோகமுள்ளவைஃபிரயோசனமுள்ளவை-  Usefulness:-
சில வேளைகளில் செய்திகள் பொதுமக்களுக்கு பல வழிகளில் துனைபுரிகின் றன. கடல்கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் சில நாள்களில் கடலுக்கு செல்லவேண்டாம் என் வானிலை ஆய்வாளர்களால் எச்சரிக்கப்படும் செய்திக ளை நாம் கண்டிருக்கி றோம்.-(இந்தியாவின் தமிழ்; நாட்டிலிருந்து இறமணன்). ஊடகங்கள் முக்கிய தொலைபேசி இலக்கங்க ளை (சிறுவர்துஸ்பிரயோகம்,) அதாவது பொலிஸ் நிலைய, வைத்தியசாலையின், நோயாளர் காவுவண்டி யினுடைய, மக்களுக்காக வெளியிடுவதை காண்கின்றோம். இவற்றை இதற்கு உதாரணங்களாக்கலாம். 
You might have seen in newspapers, requests from relatives to donors of blood for a patient in a critical condition. Newspapers also raise funds from the public to help victims of disasters and natural calamities, like tsunami and earthquake.

12. கல்விசார் பெறுமதியுடையவை-Educational Value:- 
செய்திகள் கல்விசார் பெறுமதிகள் கொண்டவை யாகவும் அமைந்துவிடுகின் றன. இன்று நாம் பத்திரிகைகளில் - அச்சு ஊடகங்களில் கல்விசார், வேலைவா ய்புப் பகுதிகளைக் கொண்ட பகுதிகளை- கொண்ட பக்கங்களை பார்கின் றோம். இந்தசெய்திகள் புலமைப்பரிசில் ஐந்hம் ஆண்டுக்குரியவை, சாதாரண பரீச்சைகளுக்குரியவை. அதுமட்டுமல்ல பல்வேறுபட்ட கல்விதுறைகள் சார்ந் தபடிப்புக்களை தெரிவுசெய்வதற்கு வழிகாட்டுபவை. உயர்படிப்புக்குரிய வைகள். இந்தசெய்திகள் நாம் மென்மேலும் அறிவை பெருக்கிகொள்ள உதவுகின்றன். 

13. நாடகபானித்தன்மை  - Drama:-
நாடகபானித்தன்மையான எழுத்துக்களும் ஒரு செய்தியின் மதிப்பை ஊக்குவிக்கிறது. ஒரு நிருபர் எப்போதும் தனது செய்திகளுக்கு நாடகப்பாணி யிலாக அழகிய பின்னணியையும் வியத்தகு செயலையும் கண்டுபிடித்து எழுத முயற்சிக்கிறார்.இப்பாணியிலான் செய்திகளை படிக்க பல வாசகர்கள் ஆர்வத்துடன் முன்வருவர். 




உசாத்துணை நின்றவை:-
  1. பத்திரிகை இயலுக்கு ஓர் ஆறிமுகம்இ முதற்பதிப்பு 26 டிசம்பர் 2001இ புனித வளன் கத்தோலிக்க அச்சகம்இ யாழ்ப்பணம்.
  2. தொடர்பாடலும் ஊடகவியற்கற்கையும், தரம் 11, இரண்டாம் பதிப்பு 2016, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இலங்கை 
  3. http://studylecturenotes.com/elements-of-news-are-immediacy-prominence-drama-oddity-conflict/accessed on 24.05.2020
  4. https://www.digitalthirdcoast.com/blog/values-content-newsworthy, accessed on 24.05.2020
  5. https://dcdc.coe.hawaii.edu/ltec/612/wp-content/uploads/2017/03/Mencher-Chapter-3-What-is-News.pdf  , accessed on 24.05.2020
  6. https://medium.com/atlantic-57/these-7-news-values-can-help-you-make-smarter-content-choices-6b3cbc0bddf7accessed on 24.05.2020
  7. http://commonwealth-pr.com/keep-in-mind-seven-news-values/ accessed on 24.05.2020
  8. https://zeepedia.com/read.php?news_values_ii_timeliness_proximity_novelty_human_interest_radio_news_reporting_and_production&b=80&c=5, accessed on 24.05.2020

  9. https://www.google.com/search?q=news+values&safe=active&sxsrf=ALeKk003xgLxJxqsmycBBZSdIHqF9iFiZw:1592045406794&source=lnms&tbm=isch&sa=X&ved=2ahUKEwiwrsCnz_7pAhUM63MBHcFwDzsQ_AUoAXoECAwQAw&biw=1242&bih=524#imgrc=YTwyGqgSYwCZNM&imgdii=DhWMkonTJm4sOM ,  accessed on 12.06.2020

Friday, June 12, 2020

செய்தி எழுதும் போது கவனிக்க வேண்டிய சில விடயங்கள்




ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை





உசாத்துணை நின்றவை:-
  1. https://www.thoughtco.com/here-are-helpful-newswriting-rules-2074290, accessed on 03.06.2020 
  2. தொடர்பாடலும் ஊடகவியற்கற்கையும், தரம் 11, இரண்டாம் பதிப்பு 2016, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இலங்கை 



Monday, June 8, 2020

சொன்னால்தான் அது செய்தியா


ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை



தொடர்பாடல் என்னும் வார்த்தையை செய்தியின் மீள்கட்டமைப்புச் செயன்முறை என சனொன் மற்றும் வீவர் (Shannon and Weaver) என்னும் தொடர்பியல் அறிஞர்கள் வியாக்கியானஞ் (பொருள்கோடல்) செய்தனர். சனொன் மற்றும் வீவர் தொடர்பாடல் மாதிரியில் சிந்தனைகள் செய்தியாக மாற்றப்படுதல் குறிமுறையவிழ்க்கப்படும் கட்டத்தில் நடைபெறும் என்பது தெரிகிறது. 

பேராசிரியர் ஹரோல்ட் டீ லாஸ்வெல் தொடர்பாடல் மாதிரியில் காணப்படும் பிரதான ஜந்து கூறுகளில் இரண்டாவது கூறு செய்தியாகும். ஹரோல்ட் டீ.லாஸ்வெல்லின் தொடர்பாடல் குறித்த வரைவிலக்கணம் தொடர்பில் செய்தியானது பெறுநரிடம் மாற்றமொன்றை ஏற்படுத்து கின்றது. 


யுனெஸ்கோ தொடர்பியல் அறிஞர் போல் டீ மெசனியர்; செய்தி பற்றி ஒரு சமன்பாட்டை முன்வைத்தார். இச்சமன்பாட்டின் படி, ஒருவரது தனிப்பட்ட ஆதாயங்களும் ஆர்வமும் செய்தி யொன்றில் சேர்க்கப்படுமானால் அது நேரடியாகப் நம்பகத் தன்மையை பதிக்கும் என்கிறார். அச்சமன் பாட்டின்படி:-
  • செய்தியொன்றுடன் தொடர்புடைய சகல தகவல்களும் துல்லியமாக-உண்மையாக இருக்கவேண்டும். 
  • முக்கிய தகவல்கள் துலாம்பரமாக எடுத்துக் காட்டப்பட்டிருக்க வேண்டும்.
  • செய்தியறிக்கையானது தேவையான தகவல்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்,
  • தனிப்பட்ட விருப்பு வெறுப்பு ஆதாயம் தனிப்பட்ட பார்வை நோக்கு ஆகியவற்றைக் கொண்டிராது சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் செய்தி அறிக்கையிடப்படல் வேண்டும்
  • செய்தி அறிக்கையிடலில் எளிய-தெளிவாக மொழிப்பிரயோகம்- எல்லோராலும் புரிந்துகொள்ளப்படக்கூடிய மொழியை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும்,
  • துல்லியம் பக்கம்சாராமை, தெளிவு ஆகிய 3 காரணிகளும் முழுமையாக உள்ளடக்கப்பட்டிருந்தால் வாசகர்கள் மத்தியில் செய்தி தொடர்பான நம்பிக்கை உருவாகும். இவற்றில் ஏதேனும் ஒன்று தவறும் பட்சத்தில் செய்தி மீதான நம்பகத்தன்மை குறையும்

'தாக்கம்" செய்தியொன்றின் பெறுமதியைத் தீர்மானிப்பதாகும். இதன்படி ஏதாவதொரு சம்பவம் சமூகமொன்றில் செய்தியாகக் கணிக்கப்படுவதற்கு அது நிச்சயம் பெரும்பாலானவர்களிடத்தில் அதிக பாதிப்பைக் கொண்டிருக்க வேண்டும். 'ஒரு விமானம் விமானத்தளத்தில் இருந்து திட்டமிட்டபடி புறப்பட்டுச் செல்வது ஒரு செய்தியல்ல." இந்த வெளிப்பாடு அர்த்தப்படுவது: ஒரு சம்பவம் ஒரு செய்தியாவதற்கு அரிதான ஒரு வாய்ப்பே உள்ளது என்பதாகும். முக்கியமான தலையாய ஒவ்வொரு சம்பவமும் செய்தியாக முடியும். செய்தி என்பது ஒரு சம்பவமல்ல அது சம்பவம் பற்றிய அறிக்கை எனலாம். ஒரு செய்தி எப்போதும் புறவயமதனது(ழடிதநஉவiஎந). ஒரு சம்பவம் செய்தியாக வேண்டுமானால் அதனை செய்தியாளர் கட்டயம் அவதானித்திருக்க வேண்டும் என்பதும்மல்ல.


தொடர்பாடல் செயன்முறை தொடர்ந்து இயங்குவதற்கு முக்கிய அம்சமாகத் (பண்புக்கூறாகத்) தேவைப்படுவத செய்தியே ஆகும். தொடர்பாடல் செயன்முறையின் உள்ளடக்கம் என்பது செய்தி ஆகும். எந்தவொரு தொடர்பாடல் நிலைமையிலும் அத்தியவசியமாகக் காணப்படும் கூறு செய்தி அல்லது தகவல் ஆகும். செய்தி அறிக்கையிடலில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, ஆசைகள், ஆழமான பற்று அகியவற்றில் ஒன்றை பிரதிபலிக்கக் கூடாது என்ற குணம்சம் தொடர்பு பட்டமைவது செய்தியின் நடுநிலைத் தன்மையுடன் ஆகும். 

செய்தி ஒன்றுக்கான அர்த்தத்தை வழங்கக்கூடிய முக்கிய நபராக அமைபவர் பெறுநர்-செய்திக்கான சந்தாதாரர் ஆவார். பெறுநரை இலக்கா கக் கொண்டு தொடர்பாளன் தன்னகத்தே கொண்டுள்ள கருத்துக்களின், எண்ணங்களின், உணர்வுகளின் வெளிப்பாடே தகவல்-செய்தியாகும். தொடர்பாடல் மூலக்கூறுகளில் மிகவும் முக்கியமானது செய்தியாகும். இது தொடர்பாளனின் கருத்துக்களாக மனநிலைகளாக, உணர்வுகளாக, பார்வை களாக, கட்டளைகளாக, அபிப்பிராயங்களாகக் கூட அமையலாம். இச்செய்தி யானது பயணிப்பதற்கு பயன்படுத்தப் படுகின்ற செல்வழிக்குப் பொருத்த மானதான முறையில் தயரிக்கப் படவேண்டும். உ-ம்: அனுப்பப்ட வேண்டிய செய்தி எழுத்து ஊடகத்தில் அனுப்புவதாயின் அதனை எழுத்து வடிவில் தயரிக்கவேண்டும். அல்லது பேச்சு ஒலிக்கு ஏற்றவாறு செய்தி அமையுமா யின் செய்தியினை பேச்சு மொழிக்கு ஏற்றவாறு தயாரித்துக் கொள்ளவேண் டும்.


வெகுசன ஊடகங்களின் இருப்புக்கு அடிப்படையாகத் தேவைப்படுவது செய்தி -தகவலாகும். வெகுசன ஊடகம் தொடர்பில் செய்திகள் எப்போதும் மேலிருந்து கீழாக எடுத்துச் செல்லப்படுகின்றன. வெகுசன ஊடகச் செயற்பாட்டில் செய்திகளில் தேர்தல், அரசியல் சம்மந்தமான தகவல்க ளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வெகுசன ஊடக செய்தி அறிக்கையி டல்கள் முரண்பாட்டு நிலைமைகளைத் தோற்றுவிக்கின் றன. இதனடிப்படை யில் செய்தி ஒன்றின் செம்மை மற்றும் துல்லியம் தீர்மானிக்கப்படுவது செய்தி ஆசிரியரின் விவேகத்தில் ஆகும்.  பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்லப்படும் ஒரு செய்தியின் மீது ஒரு நபரோ அல்லது ஒரு குழுவோ கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பார்களாயின் அவர்கள் வாயிற்காப் பாளர்கள் ஆவர். ஒரு செய்தி நேயர்களைச் சேர்வது வாயில்காப்பு பொறிமுறையில் தங்கியுள்ளது.

ஒரு நபரிடம் உருவாக்கும் கருத்துக்கள் சிந்தனைகள் ஆகியவற்றை குறியீடுகள் மூலம் குறிமுறையாக்கமாக மாற்றுவதன் மூலம் அவை செய்தியாக மாறாலாம். பெறுநரே செய்தி ஒன்றின் குறிமுறை அவிழ்ப்ப வராக இருப்பவர் ஆவர். ஒரு நபர் தனது விழங்கறிவு வழியில் ஒரு செய்தியை சரியாக புரிந்துகொள்ளும் ஆற்றலும் அதனை வியாக்கியானம் செய்து கொள்ளும் ஆற்றலும் கைவரப்பெறுகின்றார். ஒரு செய்தியை பரிமாற்றிக் கொள்வதில் உள்ள மந்த நிலை, தரமற்ற செய்திக் கட்டமைப்பு, தப்பவிப்பிரா யம், மொழிசார்ந்த குழப்பநிலை. என்பன தொடர்பாடல் செயன்முறையில் தடைகளாக அமையலாம். 


செய்திகளை அல்லது தகவல்களை தவறாக புரிந்துகொள்ளுதல், செய்தியை செம்மையாக அறிக்கையிடுவதனால் தவிர்க்கப்படுகின்றது. ஒருவர் ஏதாவ து ஒன்றை தனது நண்பரக்கு கூறுகின்றார் எனின் அதில் உள்ள தொடர்பாடல் கூறுகளின் ஒழுங்கு: தொடர்பாடுபவர் செய்தி பெறுநர் ஆகும்.

எழுத்து  மூலத்தகவல்  தொடர்பின் பாதகமான அம்சமாக அமைவது: செய்தி கடினமானதாக அல்லது சிக்கலானதாக அமையும்போது தக்கம் குறைவாக அமைதல். செய்தியை யதார்த்த பூர்வமதக வெளிப்படுத்தல் கடினம் போன்றன.

செய்தியாளருக்கும் செய்தி மூலத்திற்குமான தொடர்பு மிகச் சரியான செய்திகளை வழங்குவதற்கு அடிப்படையானது செய்தியாளர் மகாநாடு ஆகும். செய்தி- தகவல் மூலாதாரங்களின் முக்கியத்துவம்: செய்தியை உருவாக்குவதில் பங்கெடுக்கின்றன, செய்தி அறிக்கையிடலுக்கு ஆதாரமா கின்றன. ஒரு சம்பவம் தொடர்பான பல்வேறுபட்ட தகவல்களை செய்தி மூலங்கள் வழங்குகின்றன-உறுதிப்படுத்து கின்றன. செய்தி அறிக்கையிடல் வடிவத் தத்துவத்தை(நேறள சுநிழசவiபெ) வலுப்படுத்துகின்றன. (செய்தி அறிக்கையிடலுக்கு அடிப்படையாக அமைகின்ற தகவல் மூலங்களின் வகிபங்காக கொள்ளமுடிவது: செய்தியை உறுதிப்படுத்த உதவகின்றன. செய்தி தொடர்பில் பல்வேறு தகவல்களை தருகின்றன. செய்தியை ஆதாரப்படுத்துகின்ற ஆவணமாக உதவுதல், செய்தி அறிக்கையிடலை உருவாக்க உதவகின்றன.) செய்தியின் மூலத்தை சிலர் விளங்கிக் கொள்வர், சிலர் விளங்கிக்கொள்ள மாட்டார், சிலர் செய்திகளை நேரடியாகப் பெறுவர், சிலர் செய்திகளை நேரடியாகப் பெறமாட்டார். செய்திகள் குறித்த இடத்தில் குறித்த கருவி வழியாகத்தான் பரப்பப்படவேண்டும் என்ற கட்டாயத் தன்மை காணப்படமாட்டாது என் பலபடி போக்கு மாதிரி கூறுகின்றது.

தொலைக்காட்சி செய்தி அறிக்கைகள் பற்றியதில், அலைவரிசையின் கொள்கைகளால் செய்திகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தின் தன்மை தீர்மானிக்கப்பட முடியும். செய்தியை அளிக்கை செய்பவரின் உடல் மொழியும் உணர்வுகளும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது மிக முக்கியமானது. ஒவ்வொரு செய்திக்கும் பல பக்கங்கள் இருப்பதை ஒரு செய்தியாளர் தனது வகிபாகம் தொடர்பில் அடையாளம் காணவேண்டும்.


செய்தியாளன் தகவல் சேகரித்து வழங்கும் ஒவ்வொரு செய்தியும் ஏதாவது ஒரு வகையில் மக்களுக்குப் பயன்படவேண்டும். சாதாரண மக்கள், அடித்தட்டு மக்கள் வாழ்வில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் உருவாக, ஓரள வேனும் அநீதிகள் களையப்பட, செய்தியாளன் கொடுக்கும் செய்திகள் உதவவேண்டும் . 

உசாத்துணை நின்றவை:-
  1. https://www.savukkuonline.com/11999/, accessed on 03.06.2020 
  2. https://www.google.com/search?q=news+3d+background&safe=active&sxsrf=ALeKk03y1Xn9ADMxZpIeBZv0eaqubz8Kfw:1591613858709&source=lnms&tbm=isch&sa=X&ved=2ahUKEwiHzKvVh_LpAhW063MBHUalDWUQ_AUoAXoECAsQAw&biw=1242&bih=524,accessed on 03.06.2020 
  3. தொடர்பாடலும் ஊடகவியற்கற்கையும், தரம் 11, இரண்டாம் பதிப்பு 2016, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இலங்கை 

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff