Thursday, January 9, 2020

12.01.2020 நீதியையும் சமர்த்துவத்தையும் பகிர்வையும் வலியுறுத்திதும்  புரட்சிக்கருத்துக்கள் இயேசுவின் கருத்துக்களோடு ஒருமிக்க செய்வோம் ' "

ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்- தொடர்பாடல்-ஊடகவியற்கற்கை ஆசிரியர்.

இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழா இன்று. பாவத்திலிருந்து விடுவித்து ஒளியின் பாதையில் மக்கள் புதுவாழ்வை தொடங்க, இயேசுவிற்கு சொந்த மானவர்கள் எனும் முத்திரையை அவர்களுக்கு கொடுக்க திருச்சபை வழங்கும் ஓர்அடையாளமே திருமுழுக்கு ஆகும். இன்று அதனை கத்தோலிக்க திருச்சபை யில் உள்ள ஏழு திருவருட்சாதனங்களுள் (Sacraments- சக்கிர மென்ர்;) ஒன்று என அழைக்கின்றோம் உலகின் பாவங்களை போக்கும் கடவுளின் செம்மறியாக இவ்வுலகிற்குவந்த இயேசு தன்னுடைய பாடுகள் மரணத்தின் மூலம் மனுக்குலத்தின் பாவங்களைப் போக்கி உயிர்ப்பின் மூலம் மக்களுக்கு புதுவாழ்வு தந்தார். எனவே ஒருவன் இயேசுவோடு பாவத்துக்கு இறந்து, தன்னுடைய பழைய மனித இயல்பை அடக்கம் செய்துவிட்டு, இயேசுவோடு புதுவாழ்வுக்கு உயிர்த்தெழுவதே உண்மையான திருமுழுக்காகும் என பவுல் என்னும் இயேசுவின் சீடர் அன்று உரோமையில் வாழ்ந்த மக்களுக்கு கூறுகின்றார்.

இயேசுவின் வாழ்வில் நடைபெற்ற திருமுழுக்கு நிகழ்வு இயேசு திருக்காட்சிப்படுத்தப்படுதலாக அமை கிறது. இதனுடன் சேர்த்து நாம் இயேசுவின் நான்குவகையான திருக்காட்சிகளை (வெளிப்படுத்தல் களை) நோக்கலாம். பெத்லகேமில் தனது பிறப்பின்போது புறவின அரசர்களுக்கு தனதுஅருள்முகம் காட்டியமை. பன்னிரண்டு வயதில் இயேசு அறிஞர்களி டத்தில் அவர்களை மலைத்துப்போகும் அளவுக்கு அறிவுரீதியான கேள்வி-பதில் கொண்டு தன்னைவெளிப்படுத்தல், இன்றுநாம் கொண்டாடும் திருமுழுக்கில் இயேசு வெளிப்படுத்தப்படல். கானவூர் திருமணநிகழ்வில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றி முதல் புதுமை செய்தபோது வெளிப்படுத்தப்படல்.

இயேசு திருக்காட்சிப்படுத்தப்பட்ட திருமுழுக்கு நிகழ்வில் பைபியின்படி இரண்டு முக்கிய நபர்களைப் பற்றி நாம் சிந்திக்கலாம்: புரட்சிமிகு கருத்துக்களை வழங்கி இயேசுவின் திருமுழுக்குக்கு உறுதுணையாகிய திருமுழுக்கு யோவான். இந்த யோவானிடம் திருமுழுக்குப் பெற கலிலேயா விலிருந்து யோர்தானுக்கு வந்த இயேசு.

இயேசுவிற்கு ஆறுமாதவயதில் மூத்தவரான திருமுழுக்குயோவான் இயேசுவிற்கான வழியை ஆயத்தப்படுத்துவதே பணியாகக்கொண்டவர். இயேசு தாமாகவே திருமுழுக்கும் பெறுவதற்கு கலிலேயாவிலி ருந்து யோர்தானுக்கு வருகின்றார். இதன்மூலம் அவர் தேசிய புதுவாழ்வுப் பயணத்தில் மற்றய மக்களுடன் இணைந்து கொள்வதற்காக தமக்கு பழக்கமான சுற்றுப்புறச் சூழல்களை விட்டு புறப்பட்டு வந்துள்ளார் என்பது தெளிவாகின்றது. ஆனால் திருமுழுக்கு யோவான் இயேசுவிடம் 'நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?" என்று கூறித்தடுத்தார். அதற்கு இயேசு,'இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை" எனப் பதிலளித்தார். அதற்கு யோவானுக்கு விருப்பமில்லை எனினும் இயேசு தன்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட தனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால்; திருமுழுக்குக் கொடுப்பார். கடவுள் பார்வையில் அதுதான் சரிஎன உணர்ந்து இணங்கினார்.இதேபோன்று பெற்றோர், ஆசிரியர்கள், ஞானவழிகாட்டிகள், சமூகத்தலைவர்கள் ஆகியநாம் நேரத்திற்கு நேரம் பல சந்தர்பங்களில் தகுதியற்றவர்களாக கடவுள் பார்லையில் மாறுகின்றோம். நாங்கள் தான் எம்மை தகுதியானவர்களாக மாற்ற வேண்டும் அதுமட்டுமல்ல எமக்கு விருப்பமில்லை என்றாலும் கடவுளுக்கு அது விருப்பம் எனின் அதனை கீழ்படிவுடன் ஏற்று அவர் பொருட்டு செய்யவேண்டும். 

இயேசுவின் திருமுழுக்கு அவரது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக இருந்தது அதுவரைக்கும் நசரேத்தூரில் ஒரு தச்சனாக இருந்தவர் ஊர்விட்டு ஊர்சென்று இறைஅரசைப் போதிக்கும் போதகராக மாறுகின்றார். இயேசு தன்னுடைய பணி வாழ்வைத் தொடங்குகின்றார் அப்போது பாலஸ்தீனத்தின் பாழடைவுகளையும் சமூகபொருளா தார ஏற்றத்தாழ்வுகளையும் அடித்தட்டு மக்களின் அழுகுரல்களையும் ஆட்சியாளர்களின் அநியாயங்களையும் அதனால் ஏற்படும் அவலங்களையும் அன்றாடம் கண்டு கொண்டார். புறந்தள்ளப்பட்ட அடித்தட்டு மக்களின் விடுதலை, நம்பிக்கைதான் இயேசு போதித்த இறையாட்சி எனலாம். இறைவனின் செயல்திட்டத்தில் தாமும் அழைக்கப்பட்டிருப்பதை ஆழமாக இயேசு உணர்ந்திருந்தார். அத்தகைய ஓர்உந்து சக்திதான் அவரை யோர்தான் நோக்கிபயணிக்க வழிவகுத்தது.

(Wm.J.Bausch)டவுள்யுஎம். யே.போஸ்ச் என்பவர் சக்கிரமென்ர் திருவருட் சாதனங்கள்(Sacraments-- சக்கிரமென்ர்;) ஒரு புதிய பார்வை என்னும் தலைப்பில்; கூறும்போது: எமது திருச்சபை வேரூன்றிய உரோமைச் சாம்ராஜ்யத்தில் அந்த ஆட்சியாளருக்கு ஒரு போர்வீரர் எடுத்துக்கொள்ளும் நம்பிக்கை ஆரதவு வாக்குறுதி எனக் கூறுகின்றார். ஆனால் திருச்சபையில் இன்று எமக்கு சக்கிரமென்ர்; என்பது இயேசுவை பின்பற்றுவதற்கு எடுத்துக்கொள்ளும் பொதுப்படையான வாக்குறுதி என பொருள்படுகின்றது.

மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள் இறையாட்சி நெருங்கிவந்து விட்டது என்று யோர்தான் நதியோரம் வீரமுழக்கமிட்ட திருமுழுக்கு யோவானின் குரலொலி இயேசுவைக் கவர்ந்தது. சட்டங்களையும் சடங்குகளையும் உயர்த்திப்பிடிக்காமல் அன்பையும் நீதியையும் சமர்த்துவத்தையும் பகிர்வையும் வலியுறுத்திய யோவானின் புரட்சிக்கருத்துக்கள் இயேசுவின் கருத்துக்களோடு ஒருமித்து இருந்தன. இதுவே இயேசுவின் திருமுழுக்கு எமக்குத் தரும் செய்தியாகும். இன்று நாமும் திருமுழுக்கு மூலமாக இறைவனின் ஊழியராக வாழ நன்மைகளை நானிலமெங்கும் ஆற்ற முன்வர வேண்டும். 


Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff