Thursday, February 20, 2014
பழி தீர்ப்பதில் ஓர் உயர்ந்தவகை பழிதீர்ப்பை செய்வோமா
23.02.2014
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
23.02.2014'" பழி தீர்ப்பதில் ஓர் உயர்ந்தவகை பழிதீர்ப்பை செய்வோமா
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இன்று நமக்குத்தரப்படும் பைபிள்பகுதியில் இயேசு 'கண்ணுக்குக் கண்", 'பல்லுக்குப் பல்"என்று கூறப் பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்கவேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள் என கூறுவதைக் நாம் பார்க்கின்றோம்.
'கண்ணுக்குக் கண்", 'பல்லுக்குப் பல்"என்ற இந்த பைபிள் வரிகளை சற்றுநோக்குவோமானால்: இயேசு வருவதற்கு முன்பட்டகாலத்திலும் இயேசு வாழ்ந்த காலத்திலும் மக்கள் குழுக்களாக வாழ்ந்தபோது, ஒரு குழுவில் உள்ளவர் வேறொரு குழுவில் உள்ளவருக்கு தீங்கு செய்தால், அது பெரும் சண்டையாகமாறி, இரண்டு குழுக்களுக்கும் பெரும் உயிர்ச்சேதமும், சொத்துசேதமும் ஏற்பட்டுவிடுகின்ற நிலமையே அன்று காணப்பட்டது.இதனைத்தவிர்ப்பதற்காக அவர்களுக்குஒரு புதிய ஒழுங்கைக் கொண்டு வருகிறார்கள் இயேசு. அதுதான் 'கண்ணுக்குக் கண்", 'பல்லுக்குப் பல்". இதன்படி ஒரு குழுவில்உள்ளவர் மற்றகுழுவில் உள்ளவரைத்தாக்கினால், பாதிக்கப்பட்டவருக்கும், அவரைத் தாக்கியவருக்கும் இடையே மட்டும் வழக்குத்தீர்க்கப்படும். ஒரு மனிதனுக்காக குழுக்கள் தங்களிடையே சண்டையில் ஈடுபடாது, பாதிக்கப்பட்டவருக்கு ஒருகண் போயிருந்தால், அவரைத்தாக்கியவருக்கும் அதே தண்டனைக்கொடுக்கப்படும்.இயேசுவாழ்ந்தபோது இதுதான் மக்களிடையே ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருந்தது.
இயேசு இப்போது மற்றொரு நிலைக்கு மக்களை அழைத்துச்செல்கிறார். இதன்படி, பகைவருக்கும் அன்பு என்ற பழைய ஏற்பாட்டின் கட்டளைக்கு புத்துயிர் கொடுக்கிறார். இது புதியது அல்ல மாறாக, புதுமையானது. கண்ணுக்குக்கண் என்று சொல்கிற பழைய ஏற்பாட்டில் ஏராளமான இடங்களில் பகைவருக்கு அன்பு என்கிற பார்வை மேலோங்கிக்காணப்படுகிறதையும் நாம் பார்கின்றோம். ஆனால் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது இன்றைய உலகில் பலரது பழிதீர்க்கும் மந்திமாகக் காணப்படுகின்றது. இதற்கு நேர்மாறாக, பழியைத் தீர்க்கும் மந்திரங்களும் வழிகளும் உலகில் பல உண்டு. கண்களையும், மனதையும் திறந்து இவற்றைப் பார்க்க நாம் பழக வேண்டும் என்று இயேசு இன்றைய நற்செய்தியில் நமக்கு அழைப்பு விடுக்கிறார்.
இந்த வேளையில் படித்ததில் பிடித்து என் மனதில் ஆழமாய் பதிந்துவிட்ட ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோன்: 2005ம் ஆண்டு கார்;திகையில், யுhஅயன முhயவiடி-அகமட் கரிப் என்ற பாலஸ்தீனிய சிறுவன் ஒருவன் இஸ்ரயேல் வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான். அவன் வைத்து விளையாடிக் கொண்டிருந்த பொம்மை துப்பாக்கியை உண்மைத் துப்பாக்கி என்று நினைத்த வீரர்கள் அகமட் கரிப் சுட்டனர். இஸ்ரயேல் வீரர்கள் தங்கள் தவறை உணர்ந்ததும், உடனே அச்சிறுவனை இஸ்ரயேல் பகுதியில் இருந்த ஒரு மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர். அவனது பெற்றோரையும் அழைத்துச் சென்றனர். அங்கு அகமட் கரிப்பை காப்பாற்ற முடியவில்லை. அந்த நேரத்தில் அவனது பெற்றோர் ஓர் அற்புதம்; செய்தனர். கொல்லப்பட்ட தங்கள் மகன் - அகமட் கரிப்னின் உடல் உறுப்புகளைத் தானம் செய்யமுன் வந்தனர். அவர்கள் அந்த உறுப்பு தானத்தை இஸ்ரயேல் பகுதியில் இருந்த மருத்துவமனையிலேயே செய்தனர்.
இதனைக் கேள்விப்பட்ட பாலஸ்தீனியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலர் கோபமடைந்தனர். ஆனால், கட்டாயம் வேறு பல பாலஸ்தீனியர்கள் மகிழ்ந்திருப்பர். தங்கள் மகனைக் கொன்றது இஸ்ரயேல் படைவீரர்கள் என்று தெரிந்தும், அந்தப் பகுதியிலேயே தங்கள் மகனின் உறுப்புக்களை அவர்கள் தானம் செய்தது பழி தீர்ப்பதில் ஓர் உயர்ந்த வகை. ஐளாஅயநட- யுடிடயா- இஸ்மாஎல்-அப்லா என்ற அந்த சிறுவனின் பெற்றோர் எளிய மக்கள். அந்தப் பெற்றோர் எடுத்த முடிவைப்பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, அவர்கள் சொன்னது: 'எங்கள் மகனின் உறுப்புக்கள் வழியே வாழப்போகும் இஸ்ரயேல் மக்கள் இனிமேலாகிலும் சமாதானத்தை விரும்புவார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த உறுப்புகளை நாங்கள் தானம் செய்தோம்."

கண்ணுக்குக் கண், என்று பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் இஸ்ரயேல், பாலஸ்தீன மக்களிடையேயும் நமக்கும், கண்ணற்றோருக்குக் கண் என்று சொல்லித்தரும் இஸ்மாஎல்-அப்லா அவர்களின் பாடம், பழியைத் தீர்க்கும் ஓர் அழகிய பாடம். ஆயிரத்தில், பல்லாயிரத்தில் ஒரு சிலர் இப்படி இருப்பதாலேயே இந்த உலகம் இன்னும் மனிதர்கள் வாழும் உலகமாக இருக்கிறது. அளந்து, கணக்குப் பார்த்து அன்பு காட்டும் பலரது நடுவில், பயனேதும் கருதாமல், கணக்குப் பார்க்காமல் வாழும் இஸ்மாஎல்-அப்லா போன்றவர்கள் தொடர்ந்து நம்மிடையே வாழவேண்டும் என்று வேண்டுவோம். கணக்குப் பார்த்து பழிதீர்க்கும் உலகை விட, பழி தீர்ப்பதில் ஓர் உயர்ந்த வகை என நாம் இங்கு குறிப்பிட்ட நல்ல செயல்கள் வழியாக, பழிகளைத் தீர்ப்பதில் நம் உலகை நாம் வளர்ப்போம். திருவள்ளுவரின் கூற்றாகிய: 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்." என்பதனை மனதில் நிறுத்தி அன்பையே நம் வாழ்வின் அடித்தளமாக கொள்வோம்.
Subscribe to:
Posts (Atom)