Tuesday, October 26, 2021

எமக்குள் வளரும் சிறிய 'லூசிபரை அடியோடு அழிப்போம்.

 ஆக்கம் ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

'லூசிபர்" என்ற பெயரை கத்தோலிக்கர்கள்-கிறிஸ்தவர்கள் அறிந்திருந்தாலும் 'லூசிபர்"என்ற பெயர் நம்முடைய கத்தோலிக்க தமிழ் பைபிளில் காணப்படவில்லை. அதிதூதரான புனித மிக்கேலே விண்ணுலகில் வான்தூதர்களின் தலைவர்; ஆவார். லூசிபர் என்னும் அதிதூதர், வானமும் பூமியும் படைக்கப்படும் முன்னர் வான்தூதர்களின் விடிவெள்ளி என அழைக்கப்பட்டவர். தாவீதுக்கு கடவுள் ஒரு வாக்குக் கொடத்தார். 'நீ உன் மூதாதையரோடு துயில் கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப் பின் நான் உயர்த்தி அவனது அரசை நான் நிலைநாட்டுவேன்…. அவனது அரசை நான் என்றும் நிலைநிறுத்துவேன். 'என்முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றும் நிலைத்திருக்கும்" 2சாமுவேல்7:12,16. 'அந்த அரசர்களின் காலத்தில் விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்;@ அது என்றுமே அழியாது@ அதன் ஆட்சியுரிமை வேறெந்த மக்களினத்திற்கும் தரப்படாது. அது மற்ற அரசுகளை எல்லாம் நொறுக்கி அவற்றிற்கு முடிவுகட்டும்;@ அதுவோ என்றென்றும் நிலைத்திருக்கும்…. நீர் கண்ட அந்தக் கல் இந்த அரசையே குறிக்கிறது. இவ்வாறு எதிர்காலத்தில் நிகழப்போவதை மாபெரும் கடவுள் அரசருக்குத் தெரிவித்திருக்கிறார். கனவும் உண்மையானது அதன் உட்பொருள் நிறைவேறுவதும் உறுதி.(தானி2:44-45) வாக்குப்பிறளாத வல்லமையுள்ள கடவுள் உலகிற்கு மீட்பர் ஒருவரை அனுப்பத் திருவுளம் கொண்டார். உலஇரட்சகர்-அரசர் தேவைப்பட்டார். அந்த மீட்பரை-அரசரை தாம் தாவீதுக்கு முன்னுரைத்ததன்படி தாவீதின் விழித்தேன்றலில் தெரிவுசெய்தார். என்றும் நிலைத்திருக்கும் கடவுளரசை கட்டியெழுப்ப கடவுள் தனது மகன் இயேசுவை தாவீதின் வழித்தோன்றலில் வந்த அன்னை மரிய-யோசேப்பின் ஊடாக தெரிந்துகொண்டு தாவீதின் அரியணையில் -கடவுளின் அரியணையில் அமர்த்த திருவுளம் கொண்டார். ஆனால் லூசிபர், அதிதூதராகத் தான் இருக்கும்போது மனித உடல் எடுக்கும் மீட்பரை ஆராதிக்கமாட்டேன் என்று இறுமாப்புக் கொண்டான். அகங்காரம் கொண்ட அவர் ஆணவத்தால் இறைவனை எதிர்த்து நின்றான் என்று நாம் அறியமுடிகின்றது. 

அச்சந்தர்ப்பத்தில் புனித மிக்கேல் அதிதூதர் லூசிபருக்கு நல்வழிகளைக் காட்டினார். லூசிபர் அவரின் நல்லுரைகளை உதறித்தள்ளினான்;. லூசிபர், 'விண்ணுலகில் இறைவனுக்குப் பணிவதை விட, நரகத்தில் ஆட்சிபுரிவதே மேல்" என்று தனக்குள் கூறிக்கொண்டான் என மரபுவழிகளில் இருந்து அறியமுடிகின்றது. புனித மிக்கேல் அதிதூதர் இறைவனுக்கு நிகரானவன் யார்? என வீரமுழக்கமிட்டு போராடி லூசிபரையும் அவன் சகாக்களையும் எரிநரகில் வீழ்த்தினார்;. இதனால்தான் தூய மிக்கேல் அதிதூதரின் சுரூபத்தில், அவர் பாதத்தின்கீழ் பசாசு மிதிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். பசாசுக்கு அதிதூதர் மிக்கேல் என்றாலே நடுக்கம். அவரிடம் போரிட்டு வெற்றி கொள்ள அதனால் இயலாது. அதிதூதர் மிக்கேல் வல்லமை மிக்கவர். ஆயினும் தாழ்ச்சியுடையவர். 

இந்நிகழ்வை பைபிளின் கீழ்வரும் இறைவார்த்தைப்பகுதிகள் எமக்கு தெளிவாக விளக்குகின்றன: 'பின்னர் விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்;;@ அரக்கப் பாம்பும் அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள். அரக்கப் பாம்பு தோல்வியுற்றது. விண்ணகத்தில் அதற்கும் அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று. அப்பெரிய அரக்கப் பாம்பு வெளியே தள்ளப்பட்டது. அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப் பெற்ற அதுவே தொடக்கத்தில் தோன்றிய பாம்பு. உலகு முழுவதையும் ஏமாற்றிய அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது. அதன் தூதர்களும் அதனுடன் வெளியே தள்ளப்பட்டார்கள்."(திவெ:12:7-9) 'வைகறைப் புதல்வனாகிய விடி வெள்ளியே! வானத்திலிருந்து நீ வீழ்ந்தாயே! மக்களினங்களை வலிமை குன்றச் செய்தவனே, வெட்டப்பட்டுத் தரையில் விழுந்தாயே! ஷநான் விண்ணுலகிற்கு ஏறிச் செல்வேன்; இறைவனுடைய விண்மீன்களுக்கு மேலாக உயரத்தில் என் அரியணையை ஏற்படுத்துவேன்;@ வடபுறத்து எல்லைப்பகுதியிலுள்ள பேரவை மலைமேல் வீற்றிருப்பேன். மேகத்திரள்மேல் ஏறி, உன்னதற்கு ஒப்பாவேன்| என்று உன் உள்ளத்தில் உரைத்தாயே! ஆனால் நீ பாதாளம் வரை தாழ்த்தப்பட்டாய்;@ படுகுழியின் அடிமட்டத்திற்குள் தள்ளப்பட்டாயே!"என உவமையாக பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.(எசா14:12-15). இந்த உவமையைப் பின்வரும் பைபிள் பகுதியிலும் காணமுடியும். (எசேக்.28:12-19).

ஆதாமைப் போன்று லூசிபருக்கும் தெரிவு ஒன்று இருந்தது: கடவுளைக் கடவுளாக லூசிபர் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது அவர் தனக்குத்தானே கடவுளாக இருப்பதை முடிவு செய்யலாம். அவர் கடவுளை மீறி தன்னை 'மிக உயர்ந்தவர்" என்று அறிவித்ததை மீண்டும் மீண்டும் அவரது 'ஆணவம்- (ஐ றுடைடள)" காட்டுகிறது. இதனால் ஏற்பட்ட லூசிபரின் வீழ்ச்சியை பைபிளில் எசேக்கியலில் புத்தகத்தில் உள்ள ஒரு பகுதி கோடிட்டுக் காட்டுகின்றது: (எசேக் 28:12-19).

வீழ்த்தப்பட்ட சாத்தானுக்கு எபிரேய பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள பெயர் 'ஹெலேல்"ஆகும். ஆங்கில பைபிளில் கே.ஜே.வி(முதுஏ) மொழிபெயர்ப்பில் இவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர்தான் 'லூசிபர்." கே.ஜே.வி பைபிளில் ஏசாயா புத்தகத்தில்14:12-13 என்னும் இறைவார்தையை படிக்கும்போது இதனை நோக்கலாம். (ஐளயiயா 14:12-13 முiபெ துயஅநள ஏநசளழைn- 12 ர்ழற யசவ வாழர கயடடநn கசழஅ hநயஎநnஇ ழு டுரஉகைநசஇ ளழn ழக வாந அழசniபெ! hழற யசவ வாழர உரவ னழறn வழ வாந பசழரனெஇ றாiஉh னனைளவ றநயமநn வாந யெவழைளெ!). கத்தோலிக்க பைபிளில் லூசிபர் என்னும் பெயர் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லையாயினும்;, 'வைகறைப் புதல்வனே, விடிவெள்ளியே, என எசாயா நூலில் 14:12-13 பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு இலத்தீன் மொழியின் பொருள் விளக்கத்தின்படி லூசிபர் என்பதாகும்.“ர்ழற லழர யசந கயடடநn கசழஅ hநயஎநnஇ  ழு னுயல ளுவயசஇ ளழn ழக னுயறn!

'லூசிபர்" மற்றும் 'அசுமதேயு" யார் இவர்கள் 

விழுந்து போன வானதூதர்களை: பிசாசின் தூதர்கள், அசுத்த ஆவிகள், தீய ஆவிகள், அசுத்த அரூபிகள், வஞ்சிக்கிற ஆவிகள், ஏமாற்றும் பேய்கள், சாத்தான், பொல்லாத ஆவிகள், பிசாசு, ஆதிமேன்மையை காத்துக்கொள்ளாத தூதர்கள், பெயல்செபூல், அலகை, அசுமதேயு, இலேகியோன் (6000பேய்களின் பெயர்) பெய்களின் தந்தை, என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள்.(மத் 4:24, மத்10:1, மத்12:25, மத்25:41, மாற்3:22, மாற்5:15, திவெ12:9, தோபி:3:17, 1தீமோ4:1, லூக்11:26, எசா37:19.) விழுந்துபோன வானதூதர்களில் ஒரு பங்கு சங்கிலியால் கட்டப்பட்டுள்ளது, மற்றவர்கள் அப்படியே விடப்பட்டுள்ளனர்.(2பேது2:4, சங் 78:49, எபே6:12, திவெ12:7-9). 

திருவெளிப்பாடு நூலில் புனித மிக்கேல் அலகையோடு போரிட்டு வெல்வதைக் குறித்து நாம் மேலே வாசிக்கின்றோம். அந்தப் போரில் அரக்கப்பாம்பும் என வர்ணிக்கப்பட்டவன்தான் இந்த லூசிபர். அவனுக்கு விண்ணகத்தில் இடம் இல்லாது போனது. உலகு முழுவதையும் ஏமாற்றிய அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது. பாவம் செய்த வானதூதர்களைக் கடவுள் தண்டிக்காமல் விடவில்லை. விலங்கிட்டுக் காரிருள் நகரில் தள்ளித் தீர்ப்புக்காக அவர்களை அவர் அடைத்து வைத்திருக்கிறார்.(2பேது2:4)

புனித மிக்கேல் குறித்து பைபிளில் இறைவாக்கினர் தானியேல் புத்தகத்திலும் யூதா புத்தகத்திலும், திருவெளிப்பாடு நூலிலும் வாசிக்கின்றோம். தானியேல் புத்தகத்தில் 'மிக்கேல் இஸ்ரயேல் மக்களின் தலைவராக இருந்து, எதிரிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றுகிறார்."(தானி10:13,12:1),தூய யூதா புத்த கத்தில்,'மிக்கேல் சாத்தானோடு மோசேயின் இறந்த உடலைக்குறித்து வாதிடுவதையும், அப்போதும் சாத்தான் மோசேயின் உடலை புதைக்கவேண்டும்" என்று சொல்ல, மிக்கேல் அதனைக் கடிந்துகொள்வதையும் குறித்து வாசிக்கின்றோம்(யூதா1:8-9). 

கடவுள் பிரசன்னத்திற்குள்ளும் இவன் நுழைந்துவிடுவான். ஒருநாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர். சாத்தான் அவர்கள் நடுவே வந்துநின்றான். ஆண்டவர் சாத்தானிடம்,'எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டார். சாத்தான் ஆண்டவரிடம் 'உலகைச் சுற்றி உலவி வருகிறேன்" என்றான்…. ஆண்டவர் சாத்தானிடம், 'இதோ! அவனுக்குரியவை யெல்லாம் உன் கையிலே@ அவன்மீது மட்டும் கை வைக்காதே" என்றார். சாத்தானும் ஆண்டவர் முன்னிலையினின்று புறப்பட்டான். (யோபு 1:6-12) அவனது உள்ளார்ந்த நோக்கம் கடவுளின் ஊழியன் யோபுவை அழிப்பதே ஆகும். யோபு மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி தீமையானதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனும் இல்லை" என்று கடவுள் கூறும்படி நடப்பவர் ஆவர். எனவே நாம் எம்மாத்திரம். நாம் கடவுளை விட்டு விலகிவிட்டோம் என்றால் நிச்சயமாக எங்களுக்குள் வந்து எங்களை அழித்தேவிடுவான். 

இந்த விழுந்த லூசிபர் பற்றி இயேசு பைபிளில் லூக்கா10:1,17-18 குறிப்பிடுவதை இங்கு நோக்குவோம்: இயேசு தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்பாக 72 சீடர்களை இருவர் இருவராக அனுப்பினார். அந்த 72 சீடர்களும் மகிழ்வுடன் திரும்பி வந்து கூறிய வார்த்தைகள்: 'ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால், பேய்கள்கூட எங்களுக்கு அடிபணிகின்றன." 

பேய்கள்கூட தங்களுக்கு அடிபணிகின்றதைப்பார்த்து அந்த 72 சீடர்களும் மிகவும் அதிர்ச்சியடைந்தனர், ஏனெனில் அவர்கள் அதுவரை, யூத மூலங்களை மட்டுமே கண்டிருந்தனர், யூதர்கள் பேயோட்டுதலுக்கு நீண்ட ஒரு செயல்முறையைப் பயன்படுத்தினர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது வெற்றிகரமாக அமைய வில்லை. இன்னும் பல சந்தர்ப்பங்களில் அந்த தீயஆவியை ஓட்டுபவர்களை- அந்த தீய ஆவிகள் தாக்கி அனைவரையும் திணறடித்து, காயப்படிடுத்தி, ஆடையற்றவர்களாகத் துரத்திவிடுகின்றது. இதனை பைபிளில் திப19:14-16 பகுதியில் காணமுடியும். 

ஆனால் இந்த 72 பேரும் சாதாரண மீனவர்கள், சாதாரண மக்கள், இவர்கள் கையில் எதுவும் இல்லை: எந்த ஆயுதங்களும் இல்லை, சிறப்புப் புத்தகங்கள் இல்லை, சிறப்பு மேற்கோள்கள் இல்லை, வாளோ? எதுவும் அவர்களுடைய கையில் இல்லை. ஆனால் அவர்கள் இயேசுவின் பெயரைப் பயன்படுத்தினார்கள், உடனடியாகத் தீய ஆவியிலிருந்து விடுவிப்பு நடைபெற்றது. அந்த பேய்கள் கீழ்ப்படிந்தன. இவற்றைப் பார்த்து, அவர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். இங்கு கூர்ந்துகவனிக்க வேண்டிய உண்மை, இயேசு அந்த 72பேரையும் அனுப்பியபோது, தீயஆவிகளை ஓட்டுவதற்கு எந்த அதிகாரம் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. தீயஆவிகளை ஓட்டுவதற்கான அதிகாரம் 12 அப்போஸ்தலர்களுக்கு வழங்கப்பட்டதாகத்தான் பைபிள் கூறுகின்றது.(மத்10:1-4). 

ஆயினும் இந்த 72பேரும் இயேசுவின் பெயரைப் பயன்படுத்தும்போது பேய்கள் அவர்களுக்கு அடிபணிந்தன. அடிபணிவது-கட்டுப்படுவது என்பது வெளியேற்றுவது என்பதிலிருந்து அடிப்படையில் வேறுபடு கின்றது. வெளியேற்றுவது பேய்களை நீக்குவது என்று பொருள். ஆனால் அடிபணிவது என்பது ஒருவருக்கு கீழ்ப்படிவது ஆகும். எனவே ஒவ்வொரு கிறிஸ்தவரும் சாத்தானைக் கட்டுப்படுத்தும் திறன், அதிகாரம் பெற்றிருக்கின்றோம். இயேசு இந்த அதிகாரத்தை எமக்குத் தந்திருக்கின்றார். அதாவது நாங்கள் பேயைப்  பார்த்து இயேசுவின் பெயரால் நகரும் என்று சொன்னால், அது நகரும்;, என்னைத் தொடாதே என்றால் தீய ஆவிகள் தொடாது. ஏனெனில் பேய்கள் வானுலகிலிருந்து விழுத்தப்பட்டவர்கள் தீய ஆவிகள் அதிதாரம் அற்றவர்கள். இயேசு கூறுகின்றார்: 'வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப்பேல விழக்கண்டேன்." ~நான் பார்த்தேன். நான் அங்கு இருந்தேன். நான் அதை பார்த்துக்கொண்டிருந்தேன்.| எனவே இங்கு இயேசு லூசிபரை சாத்தன் என்று கூறுகின்றார் என அறிய முடிகின்றது. இயேசு லூசிபரின் வீழ்ச்சியைப் பற்றி இங்கு குறிப்பிடுகின்றார். (லூக்.10:17-18) 

எனவே சாத்தனுக்கு மனிதர்கள்மீது அதிகாரம் இல்லை. மாறாக சாத்தான்மீது எங்களுக்குத்தான் அதிகாரம் உள்ளது. இந்த சாத்தான் எங்களின் அதிகாரத்திக்கு உட்பட்டவன். ஏனென்றால் சாத்தானுக்கு விண்ணகத்தில் இடம் இல்லை. சாத்தான் வானத்திலிருந்து விழுத்தப்பட்டுவிட்டான். நாங்கள் விண்ணுலகின் ஒரு பகுதியாக இருப்பதால் எதுவும் எங்களை காயப்படுத்தாது. இந்த சாத்தான் எங்களின் அதிகாரத்திக்கு உட்பட்டவன். 'பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கின்றேன்." என இயேசு தெளிவாகக் கூறிவிட்டார். (லூக்.10:19)  

கடவுள் வானதூதர்களுக்கும் ஆன்மீக உடலைக் கொடுத்துள்ளார். அவர்கள் தெய்வப் புதல்வர்கள். ஒவ்வொரு வானதூதர்களுக்கும் புத்தி இருக்கிறது. ஒவ்வொரு வானதூதர்களுக்கும் முடிவெடுக்கும் சுதந்திரம் உள்ளது. ஒவ்வொரு வானதூதருக்கும் விருப்பத் தெரிவிருக்கின்றது. தெரிவுச் சுதந்திரத்தைக் கடவுள் கொடுத்துள்ளார். தெரிவுச் சுதந்திரத்தின் பிரகாரம் அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிவதைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது கடவுளுக்குக் கீழ்ப்படியக்கூடாது என முழுமையாகவும் தேர்வு செய்யலாம். அவர்கள் கடவுளின் படைப்புக்கள். ஆயினும் வானதூதர்களால் முழு யதார்த்தத்தையும் உண்மையையும் முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியாது. அவர்கள் முழுமையான- Pநசகநஉவ படைப்புக்கள் அல்ல. ஏனென்றால் அவர்கள் கடவுளால் உருவாக்கப்பட்ட உயிரினங்கள். அவர்களிடம் இருக்கும் இந்த சிறிய குறைபாடுதான், அவர்கள் சாத்தானாக வானுலகிலிருந்து கீழே விழுவதற்கு ஒரு காரணமாயிற்று.

வீழ்த்தப்பட்ட லூசிபர், சாத்தான் மற்றும் தீயசக்திகள் அனைத்தையும் ஏன் நாம் புரிந்து கொள்ள வேண்டும்? என்பது மிக முக்கிய விடைதேடிவேண்டிய வினாவாகும். முதலில் நாம் சாத்தானை அறியாதிருந்தால்- அவர்களின் தந்திரோபாயங்கள், குணாதிசயங்கள், இயல்புகள் நமக்குத் தெரியாவிட்டால்- நாம் அவர்களைப்பார்த்து பயப்படவேண்டும். சாத்தானின் வஞ்சகத் தந்திரோபாயங்களை நாம் அறிந்து கொண்ட பின்புதான் அவனை வெல்லமுடியும். அப்போதுதான் நாம் அவரைக் கட்டுப்படுத்த முடியும். இல்லையெனில் நாம் அவரை பார்த்துப் பயப்படுவோம். இதை பைபிளில் 2கொரி2:11மிக தெளிவாக அறியமுடியும்: 'இவ்வாறு சாத்தான் நம்மை வஞ்சிக்க இடம் கொடுக்க மாட்டோம். அவனது சதித்திட்டம் நமக்குத் தெரியாதது அல்ல." புனித பவுல் கூறுகிறார், நாம் சாத்தானால் வெல்லப்படக்கூடாது. நாம் சாத்தானை வெல்லவேண்டும். நாம் பிசாசின் சதித்திட்டங்கள், தந்திரங்களை அறிந்தவுடன் நாம் சாத்தானால் வஞ்சிக்கப்படமாட்டோம், வெல்லப்படமாட்டோம். சாத்தான் எம்முடன் விளையாட முடியாது. சாத்தான் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால் சாத்தான் பற்றி நாம் நன்கு அறிவோம். 

சாத்தான் எப்படிப்பட்டவர், எங்கு மறைந்திருக்கின்றார், எங்கு மறைகின்றார்;, எப்படி வருகிறார், எப்போது வருகிறார், எங்கே வருகிறார், அல்லது எத்தனை முறை வருகிறார், அடிக்கடி வருகின்றாரா? என்று நாங்கள் கருத்தாய் ஆய்ந்து நாங்கள் தெரிந்துகொண்டால் எங்களால் சாத்தனைக் கட்டுப்படுத்த முடியும். நாங்கள் சாத்தானால் கட்டுப்படுத்தப் படமாட்டோம். 

இங்கு பைபிளில் சீராக் புத்தகம்12:13-18கூறும் பகுதிகளை 'பாம்பாட்டியைப் பாம்பு கடித்துவிட்டால் யாரே அவருக்கு இரங்குவர்? அவ்வாறே, பாவிகளோடு சேர்ந்து பழகி, அவர்களுடைய பாவங்களிலும் ஈடுபாடு காட்டுவோர்மீது யாரே இரக்கம் காட்டுவர்? சிறிது நேரம் அவர்கள் உன்னுடன் உறவாடுவார்கள்;@நீ தடுமாற நேர்ந்தால் உன்னைத் தாங்கிக்கொள்ளமாட்டார்கள். பகைவர் உதட்டில் தேன் ஒழுகப்பேசுவர்;@ உள்ளத்திலோ உனக்குக் குழி பறிக்கத் திட்டமிடுவர்;. உனக்கு முன் கண்ணீர் சிந்துவர்;@ வாய்ப்புக் கிடைக்கும்போது அவர்களது கொலை வெறி அடங்காது. உனக்குத் துன்பம் நேர்ந்தால் அங்கே உனக்குமுன் அவர்களைக் காண்பாய்;@ உனக்கு உதவி செய்வதுபோல் உன் காலை இடறிவிடுவர்@ அவர்கள் தங்களது முகப்பொலிவை மாற்றிக்கொண்டு எள்ளி நகையாடும்படி தலையாட்டுவர்;@ கை கொட்டுவர்; புரளிகளைப் பரப்புவர்." என்னும் சாத்தானின் செயல்கள் என கருதப்படக்கூடிய பைபிளில் சீராக் புத்தகம்12:13-18கூறும் பகுதிகளை பற்றிய கருத்தைக் கருத்தாய் ஆய்ந்து செயற்படுவோம்.

  சாத்தானை எங்களுக்குத் தெரிந்தால், அவனது செயல்கள் எங்களுக்குத் தெரிந்தால், நாங்கள் அவனைப் பற்றி ஒருபோதும் பயப்படத்தேவையே இல்லை. பயப்படமாட்டோம். நாங்;கள் சாத்தானைக் கட்டுப்படுத்தி அவனைத் துரத்தமுடியும். அதனால்தான் பேயோட்டுவோர் ஒவ்வொரு முறையும் வெளியேற் றும்போது முதல் கேட்கும் விடயம் உம்; பெயர் என்ன? சாத்தான் தனது பெயரை வெளிப்படுத்தினால், நாங்கள் அவனை கண்டுபிடித்துவிட்டோம் என்று அர்த்தம். அவன் தனது பெயரை வெளிப்படுத்தினால், அவன் தனது அடையாளத்தை வெளிப்படுத்திவிட்டார் என்று அர்த்தம். நாம் அவனது அடையாளத்தை அறிந்த விட்டவுடன் அவன் சரணடைந்து விடுகிறான் என்று அர்த்தம், சாத்தான் தன்னை முழுமையாக ஒப்படைத்தார் எனப்பொருள். இதனை நாம் பைபிளில் மாற்கு புத்தகத்தில் 5:9-13 பகுதியில் காணமுடியும். அதனால்தான் சாத்தான் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமலிருக்க தன்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறது. ஆனால் ஒன்றுமே செய்ய முடியாத சங்கடமான  வேளைகளில் சாத்தான் வேறு வழியில்லாமல்; தனது அடையாளத்தை வெளிப்படுததுகின்றது. அவ்வாறு வெளிப்படுத்தியவுடன் சாத்தான் வெளியேறுகின்றான் என்று அர்த்தம். சாத்தான் தனது சத்தியை விட்டு, அந்த உடலை விட்டு வெளியேறுகிறார். 

அதனால்தான் சாத்தான்கூட இயேசுவுக்கு எதிராக அதே தந்திரத்தை பயன்படுத்துகிறான். கப்பர்நாகும் தொழுகைக் கூடத்தில் தீயஆவியான பேய்பிடத்த ஒருவர் இருந்தார். அங்கு இயேசு கற்பித்துவந்தபோது, அந்த மனிதனைப் பிடித்திருந்த தீய ஆவி இயேசுவுக்கு முன்னால் வந்து இயேசுவின் முன் மண்டியிட்டு, 'ஐயா! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேவை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர். நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்." நீ உன்னத கடவுளின் மகன், எனக்கு உன்னை தெரியும் என்று கத்தியது. இதன் பொருளை நாம் நோக்கினால்: சாத்தான் இயேசுவிடம் சொன்னான், நான் உன்னை அறிவேன், எனவே நீ எனக்கு அடிபணிவது நல்லது. இயேசு பின்னர்,'அமைதியாக இரு - வாயை மூடு- இவரைவிட்டு வெளியே போ" என்று அதட்டினார். உடனே சாத்தான் அவனைவிட்டு வெளியேறினான். (லூக்.4:31-37). இவ்வாறு நாம் சாத்தானை கட்டுப்படுத்தலாம். எனவே சாத்தானை கட்டுப்படுத்த, சாத்தானின் தந்திரங்களை நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.  

ஒருவருக்குள் சாத்தான் எப்படி வளர்கிறது, சாத்தான் அவருள் எங்கே இருக்கிறார், சாத்தானின் வசீகர சத்திக்குள்ப்பட்டுள்ளாரா இல்லையா? இறைவார்த்தை வாசிப்பதில் ஆர்வம் காட்டுகின்றாரா இல்லையா? தொடர்ந்தும் சுறுசுறுப்பற்று சோம்பியவாறு இருக்கின்றாரா? இல்லையா? என்பதை நாங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். சிறிய சாத்தான் அல்லது சிறிய லூசிபர் ஒன்று எமக்குள்ளே வளர்கிறதா இல்லையா எனவும் அறிந்து கொள்ளவேண்டும். ஆகையால், நாம் பைபிளில் 1யோவான்3:8 படிக்கும்போது இதனை அறிந்து கொள்ள முடியும்: 'பாவம் செய்துவருகிறவர் அலகையைச் சார்ந்தவர்;@ ஏனெனில் தொடக்கத்திலி ருந்தே அலகை பாவம் செய்து வருகிறது. ஆகவே அலகையின் செயல்களைத் தொலைக்கவே இறைமகன் தோன்றினார்." அலகையின் செயல்களை அழிக்க இயேசு வந்தார். பாவம் செய்யும் எவரும் அலகையின் பிள்ளை-குழந்தை. நன்மை செய்யும் எவரும் கடவுளின் பிள்ளை. இவ்வாறே கடவுளின் பிள்ளைகள் யாரென்றும், அலகையின் பிள்ளைகள் யாரென்றும் நாம் கண்டறிகின்றோம். 

நாம் இதனை பைபிளில் யோவான்10:10 படிக்கும்போது இன்னும் ஆழமாக விளங்கமுடியும்: 'திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்." அலகை  மனிதனை வெறுக்கிறான் என்பதை நாம் அறிந்திருக்கவேண்டும். ஏனெனில் மனிதர்கள் கடவுளின் குழந்தைகள் என அலகைக்குத் தெரியும். எனவே அலகை கடவுளின் குழந்தைகளை அழிக்க விரும்புகிறார். அலகையின் உள்ளார்ந்த நோக்கம் எங்களுக்கு செழிப்பைத் தருவது அல்ல. ஒருவேளை ஓரிரு நாள்கள், அல்லது சில காலங்களுக்குச் செழிப்பைத் தரலாம், ஆனால் இறுதியில், எங்களை அழிப்பதே அலகை திட்டமாகும். 

அலகை கடவுளின் மீது கோபமாக கடவுளை வெறுக்கிறான். எனவே, கடவுள் விரும்பும் ஒவ்வொருவரையும் அவன் வெறுக்கிறான். ஆலகை, வானதூதர் ஒருவரின் ஒளியைப்போல வரலாம். சிறந்த ஒரு நண்பர்; போல வரலாம். எங்கள் உடல், மனம் மற்றும் எல்லாவற்றிற்கும் நிறைந்த மகிழ்ச்சிகளைத் சிறிது நாள்கள் தருகிறது. ஆனால் இறுதியில் அலகையின் நோக்கம் முழுமையான அழிவைத் தருவதே. ஏனெனில் அலகை கடவுளை வெறுப்பதால், கடவுள் விரும்பும் அனைத்தையும் அலகை வெறுக்கிறார். எனவே அனைத்து மனிதர்களும் அலகையுடன் நட்பு கொள்ளாதீர்கள். அலகையின் நோக்கம் வெறுப்பும், எங்களை அழிப்பதுமே. அலகையின் தாரகமந்திரமே முதலில் வந்து திருடுவான், பின்னர் கொல்வான் அதன் பின்னர் எங்களை அழித்துவிடுவான். (ளுவநயட –முடைட யனெ னுநளவசழல). முதலில் வந்து எமது மகிழ்சிகளைத் மெதுவாகத் திருடுவான். பின்பு எமது உணர்வுகளைக் கொலைசெய்வான். பின்பு முழுவதுமாக குடும்பம் முழுவதையும் சின்னாபின்னமாக அழித்துவிடுவான். இச்செயற்பாட்டை நாம் இயேசுவின் துணைகொண்டு கருத்தாய் ஆராய்ந்து வெற்றிகொள்ளவேண்டும். இல்லையேல் ஆபத்து பயங்கரமானது.

கடவுள் மனிதனை மிகவும் நேசிக்கிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர் எங்களுக்காக வந்து இறந்தார். எனவே, அலகை மனிதகுலத்தை வெறுக்கிறது. மனிதகுலத்தை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் வெறுக்கிறது. அதனால்தான் அவர் முழு பிரபஞ்சத்தையும் கெடுக்கின்றான். அக்கிரமத்தின் மூலம் இவற்றை  இரட்டிப்பாக்கிறார். உதாரணமாக, மனிதனின் பேராசை காரணமாக காலநிலை மாற்றங்கள், புற்றுநோய் மற்றும் பல்வேறு வகையான நோய்கள் வெளிவருகின்றன. பேராசை,தற்பெருமை, கர்வம் மற்றும் சுயநலம், இவையனைத்தும் எங்கிருந்து வருகின்றன? இவை அலகையிடமிருந்தே வருகின்றன. இந்த இழிச்செயல்களை விதைப்பதன்மூலம் அலகை இந்த அழகான சொர்க்கத்தை அழிக்க விரும்புகிறார்.

விழுந்த லூசிபர் மற்றும் அசுத்த அரூபிகள் பற்றி நாங்கள் அறிவோம். கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார் அது நல்லதாகவே கடவுள் கண்டார். அந்த படைப்பில் வானதூதர்களும் மனிதர்களும் சிறந்தவையாகவே இருந்தன. அதன் பிறகு தனக்குள் பேராசை, தற்பெருமை, கர்வம் சுயநலம் கொண்ட லூசிபர் மற்றும் அசுத்த அரூபிகள் பூமிக்குள் விழுத்தப்பட்டனர். அவர்கள் பூமியை சிதைத்தார்கள். அழகான சொர்க்கத்தை அலகை அழிக்கவே முயற்சிக்கின்றான். ஆனால் கடவுளே அதை மீண்டும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார். 

திவெ12:7-9 என்னும் பைபிள் பகுதியைப் படிக்கும்போது அறிய முடியும்: இந்த விழுந்த தேவதைகளைப் பற்றி ஒரு குறிப்பு உள்ளது. லூசிபர் மற்றும் அதிதூதர் மைக்கேல் இடையே விண்ணகத்தில் நடந்தபோரில் மைக்கேலும் அவரது வானதூதர்களும் லூசிபரையும் அதன் அசுத்த அரூபிகளையும் தோற்கடித்தனர். அவர்களுக்கு விண்ணகத்தில்; இனி இடமே இல்லாமல் போயிற்று. லூசிபர், மற்றும் அவருடன் அவரது தேவதைகள் தூக்கி எறியப்பட்டனர். இதுவே அவர்களின் வீழ்ச்சி. இங்கு இதையே இயேசு குறிப்பிடுவதை நாம் நோக்கலாம்: சாத்தான் மின்னலைப் போல வானத்திலிருந்து கீழே வீசப்பட்டதை நான் பார்த்தேன். இயேசு சொன்னார் நான் பார்த்தேன். (லூக்கா10:17-18). ஏனென்றால் தொடக்கத்திலிருந்தே இயேசு இருந்தார். நான் அல்பா மற்றும் ஒமேகா.

அதனால் தான் இயேசு சொன்னார், தோல்வியடைந்தவர் கீழே விழுந்ததை நான் பார்த்தேன். எனவே நினைவில் கொள்ளுங்கள், நான், 'பாம்புகளையும் மற்றும் தேள்களையும் மிதிக்கவும் பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கின்றேன். உங்களுக்கு எதுவுமே தீங்குவிளையிக்காது." உங்களுக்கு அதிகாரம் உள்ளது. இந்த அலகையைப்பற்றி ஓர் இரகசியம் இருக்கிறது: அவர் ஒரு தோல்வியடைந்தவர். அவர் ஆரம்பத்திலிருந்தே தோல்வியுற்றவர். அந்த தோல்வி யுற்றவர் எங்களுக்கு முன்னால் தன்னை விளப்பரப்படுத்திக்காட்ட முயற்சிக்கிறார். நாம் அவரை ஒரு தோல்வியுற்றவராகவே கருத வேண்டும். எனவே எங்கள் பயத்தால் அவரை உயர்த்தக்கூடாது. 1பேது5:8 பகுதியை படிக்கும்போது விளங்கமுடியும்: 'அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித்திரிகிறது. அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள்." நாம் அலகையின் தாக்குதலிலிருந்து எங்களைப்பாதுகாத்துக் கொள்ள விரும்பினால்? அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருப்பதே ஒரே ஒரு வழியாகும். எங்கள் ஆன்மீக வாழ்க்கையிலும்,(ஆன்மீக வாழ்க்கையை ஆழப்படுத்த குருக்களின் உதவியை நாடுவதும் சிறந்தது.) தனிப்பட்ட வாழ்க்கையிலும் எல்லா இடங்களிலும் இந்த அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருக்க வேண்டும்.

லூசிபர் ஏன் கீழே விழுந்தார்.

லூசிபர் ஏன் கீழே விழுந்தார் என நோக்குவோம்: லூசிபர் சேராபீமில் ஒருவர், ஒருவேளை சேராபீன்களின் தலைவராக இருக்கக் கூடும். அல்லது வானதூதர்களின் அரசராக இருக்கக்கூடும். கடவுளைச் சுற்றி நின்று, 24 மணிநேரமும், 'படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது" என்று உரத்த குரலில் கூறிக் கொண்டிருப்பவர். சேராபீன்கள், அனைத்து வானதூதர்களிலும் மிக உயர்ந்த வடிவமாகும். இந்த சேராபீன்களுக்குள் லூசிபர் மிக உயர்ந்த வானதூதர் ஆவார். இந்த லூசிபருக்கு கடவுளுக்கு முன்னால் சிறப்பு இடம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. கடவுளால், கடவுளுக்கு அடுத்தபடியாக அவருக்கு இடம் கொடுக்கப்பட்டிருந்தது. லூசிபர் கடவுளின் மலைமீது இருந்தார். கடவுளின் மலையாக இருந்தார்- (வுhந அழரவெ ழக புழன).(ஆனால் இப்போது மரியன்னையே கடவுளின் மலையாக உள்ளார். வானதூதர்களின் அரசராக இருப்பவர் அன்னை மரியா.) ஆனால் அந்நாள்களில், லூசிபருக்குக் கொடுக்கப்பட்ட இடம்தான் அல்லது பதவிதான் கடவுளின் மலை. இவ்வாறு லூசிபர் அறியப்பட்டார். லூசிபர் அறியப்பட்ட அந்த அவரது நிலைப்பாட்டை அவர் பயன்படுத்தினார். 

ஆனால் பைபிளில் எசாயா 14:12 இறைவார்த்தைப் பகுதியை வாசிக்கும்போது இந்த விழுந்த லூசிபர் பற்றி அறிய முடியும். 'வைகறைப் புதல்வனாகிய விடி வெள்ளியே! வானத்திலிருந்து நீ வீழ்ந்தாயே! மக்களினங்களை வலிமை குன்றச் செய்தவனே, வெட்டப்பட்டுத் தரையில் விழுந்தாயே! 'நான் விண்ணுலகிற்கு ஏறிச் செல்வேன்;. இறைவனுடைய விண்மீன்களுக்கு மேலாக உயரத்தில் என் அரியணையை ஏற்படுத்துவேன்;. வடபுறத்து எல்லைப்பகுதியிலுள்ள பேரவை மலைமேல் வீற்றிருப்பேன். மேகத்திரள்மேல் ஏறி, உன்னதற்கு ஒப்பாவேன்" என்று உன் உள்ளத்தில் உரைத்தாயே! ஆனால் 'நீ பாதாளம் வரை தாழ்த்தப்பட்டாய்;. படுகுழியின் அடிமட்டத்திற்குள் தள்ளப்பட்டாயே! உன்னைக் காண்போர், உற்று நோக்கிக் கூர்ந்து கவனித்து, 'மண்ணுலகை நடுநடுங்கச் செய்தவனும், அரசுகளை நிலைகுலையச் செய்தவனும், பூவுலகைப் பாலைநிலமாய் ஆக்கி, அதன் நகரங்களை அழித்தவனும், தன்னிடம் சிறைப்பட்டவர் வீடு திரும்ப விடுதலை அளிக்காதிருப்பவனும் இவன் தானோ?" என்பர். மக்களின மன்னர்கள் அனைவரும் அவரவர் உறைவிடங்களில் மாட்சியுடன் படுத்திருக்கின்றனர். நீயோ, அருவருப்பான அழுகிய இலைபோல, உன் கல்லறையிலிருந்து வெளியே வீசப்பட்டிருக்கிறாய்;. வாளால் வெட்டி வீழ்த்தப்பட்டு, நாற்றமெடுத்த பிணம்போலக் கிடக்கின்றாய் எனக் கூறப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளமுடியும்.

வைகறைப் புதல்வனாகிய விடி வெள்ளியே என்பதற்குரிய இலத்தீன் வார்த்தையாக லூசிபர் ஒப்பிடப்படுகின்றது-அழைக்கப்படுகிறது. அப்படித்தான் லூசிபர் என்ற வார்த்தை உருவானது. லூசிபர் மிகவும் சக்திவாய்ந்தவராக இருந்தார். லூசிபர் காலை நட்சத்திரம் ஒன்றைப்போல இருந்தார். ஆனால் தற்போது காலை நட்சத்திரம் என்ற பட்டத்தை இழந்துவிட்டார். இப்போது, அன்னை மரியா அந்த பட்டத்தை பெற்றுள்ளார். வீழ்வதற்கு முன்பு மிக உயர்ந்த நிலையில் இருந்த லூசிபருக்குக் கொடுக்கப்பட்ட அனைத்தும் வல்லமைகளும் அவருடைய வீழ்ச்சிக்கு பின்பு அன்னை மரியாவிற்கு வழங்கப்பட்டுள்ளன. அதனால்தான் லூசிபர் பெண்கள்மீது மிகவும் கோபமாக இருக்கிறார். லூசிபர் தற்பெருமையால் எல்லாவற் றையும் இழந்தார். அன்னை மரியா தாழ்சியினால் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டாள். லூசிபர் எல்லாவற் றையும் இழந்ததன் காரணம் என்ன? அவர் கடவுளின் முன்னிலையில் கடவுளுக்குக் கீழே இருந்தபோது, அவர் தனது இதயத்தில்,'நான் விண்ணுலகிற்கு ஏறிச் செல்வேன்;. இறைவனுடைய விண்மீன்களுக்கு மேலாக உயரத்தில் என் அரியணையை ஏற்படுத்துவேன்;…. அதாவது தான் கடவுளுக்கு மேலே அமர்ந்திருப்பேன். என்று தன் உள்ளத்தில் உரைத்ததேயாகும்! உள்ளத்து எண்ணங்களை ஊடுருவிப்பாப்பவர் கடவுள் அல்லரோ?

லூசிபர் பதவியின் முதன்மைநிலையை, எல்லாப் புகழையும் பெயரையும் விரும்பினார். அவர் எல்லா பாராட்டுக்களையும் எல்லா உயர்வையும் அவரது உள்ளத்தில் விரும்பினார். அவர் ஏன் அதை செய்தார்? விண்ணுலகம் என்பது அப்படி ஒரு புனித இடமாகும். அப்படியிருக்க அவருக்கு இந்த கெட்ட எண்ணம் எப்படி வந்தது? ஒவ்வொரு படைப்புக்களும் முழுமையான படைப்பல்ல. படைப்புக்கள் எல்லாம் குறைபாடுகளுடன் தான் படைக்கப்பட்டன. இந்த குறைபாடுகள் பற்றி நாம் கவனமாக இல்லாவிட்டால், இவற்றினூடாக தீமையான விடயங்கள் உள்நுழைந்து விடுகின்றன. தேவையற்ற தீய விடயங்கள் நமக்குள் வரலாம். உ-ம்: ஓர் அறையில் வெளிச்சம் இருக்கும்போது இருள் தெரிவதில்லை. ஆனால் உண்மையில், அந்த அறையில் ஏற்கனவே இருள் இருக்கிறது. நாம், ஒளியின் காரணமாக அந்த அறையினுள் எந்த இருளையும் காண்பதில்லை. ஆனால் நாங்கள் ஒளியை அணைத்தால், உடனே இருள் தெரிகிறது. இருளை கொண்டு வருவதற்காக நாங்கள் எந்த இருண்ட ஒளிக்குழிளையும் அங்கு இயக்குவதில்லை. அதே வழியில்தான் ஒருவருக்குள் ஏற்கனவே தீய எண்ணங்கள் உள்ளன. ஏற்கனவே எதிர்மறை எண்ணங்கள் இருக்கின்றன. ஆனால் கடவுளின் ஒளியில் இருக்கும்வரை யாரும் தீய எண்ணங்களை,இருளை பார்ப்பதில்லை. ஆனால் அவர்கள் ஒளியிலிருந்து விலகி தூரத்தில் இருக்க விரும்பிய தருணம் இருள் வந்துவிடும். நாம் அதை உருவாக்க தேவையில்லை. சுதந்திர விருப்பத்தின் காரணமாக இது வருகிறது. ஏனெனில் கடவுள் லூசிபர், வானதூதர்கள் ஒவ்வொருவருக்கும் சுதந்திர விருப்பத்தை  வழங்கியுள்ளார். 

நாங்கள் கடவுளின் முன்னிலையில் இருந்தாலும், இந்த தீய எண்ணங்கள் உள்ளே வருகிறது. அதனால்தான் மிக உயர்ந்த புனித இடத்தில் அலகை இருப்பதைக் காணமுடிகின்றது. யோபு 2:1-2  'ஒருநாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர். சாத்தானும் அவர்கள் நடுவே வந்து, ஆண்டவர்முன் நின்றான்." இதற்கு பொருள் என்ன? நாங்கள் கடவுளுக்கு மிக நெருக்கமாக இருந்தாலும், அலகை உள்ளே வந்து எங்களிடம் பேசுவார். ஏனெனில் நாம் அனைவரும் குறைபாடுகள் உள்ள படைப்புக்கள். கடவுள் மட்டுமே பரிபூரணமாக இருக்கிறார், அவருள் இருள் இல்லை, தீய எண்ணங்கள் இல்லை. தீமை எதுவும் இல்லை, அகந்தை இல்லை. 

லூசிபர் தனது இதயத்தில் தனக்கு உயர்ந்த பதவி வேண்டும் என்று எண்ணிக்கொண்டான். எல்லோரும் கடவுளைப் புகழ்வதை நான் காண்கிறேன், ஆனால் நான் அதை விரும்புகிறேன். லூசிபரின் மிகப்பெரிய பிரச்சனை பெருமை-அகந்தை மற்றும் அதிருப்தியே ஆகும். மற்றும் அதிகாரத்திற்கு எதிராக கலகம் செய்வதே ஆகும். யாரவது தங்கள் இதயத்தில் தாங்கள் இருக்கின்றவாறு தங்களுக்கு மகிழ்ச்சி இல்லை என எண்ணினால், எங்களுக்குள் சக்திவாய்ந்த சிறிய லூசிபர் ஒருவர் வளர்ந்து வருகின்றார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 

முதலில் இங்கு பெருமை என்றால் என்ன என நோக்குவோம்: எனக்கு உயர்ந்த பதவி வேண்டும், எனக்கு அனைவரும் கட்டுப்படவேண்டும், எனக்கு எல்லாப் புகழும் வேண்டும். எல்லோரும் என்னைப் பாராட்டவேண்டும் என்று விரும்புவது.

இரண்டாவது அதிருப்தி: ஒருவர் எங்கே இருக்கிறார் என்பதில் திருப்தியற்றநிலை. ஒருவர் ஒரு பெரியவராக இருப்பதில் மகிழ்ச்சியடையாநிலை. ஒருவர் தமக்கு வழங்கப்பட்ட அனைத்திலும் மகிழ்ச்சி அடையாநிலை.

நாமும் எமக்கு வழங்கப்பட்டதில் அனைத்திலும் மகிழ்ச்சி அடையவில்லை என்றால். எல்லாவற்றிலும் உயர்ந்த இடத்தை விரும்பினால், அதற்காகத் தாகமாக இருந்தால் இந்த அதிருப்தி ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். கடவுள் எங்களுக்குக் கொடுத்துள்ளவற்றுடன் திருப்பிகொள்ள வேண்டும். இயேசுவைப் பாருங்கள். இயேசுவின் அணுகுமுறை என்னவாக இருந்தது. அவர் முழு பிரபஞ்சத்தின் ஆட்சியாளராக இருந்தாலும், அவர்  ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். அவர்தான் இந்த உலகில் உள்ள அனைத்தையும் உருவாக்கியவர். ஆனால் அவருடைய புனித குடும்பம் ஓர் ஏழைக் குடும்பம். இயேசுவிற்குத் தலை சாய்க்கவோ இடம்; இல்லை. 'நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை."(லூக்9:58)ஆனால் இயேசுவிற்கு தங்குவதற்குக்கூட இடம் இல்லை. அதனால் அவர் மிகவும் ஏழை. மேலும் அவர் படுப்ததற்கு ஒரே ஓர் இடம்தான் கிடைத்தது. அதுதான் சிலுவை. அவர் தன்னைத் தாழ்த்தினார். எனவே கடவுள் அவரை உயர்த்தினார், லூசிபர் தன்னை உயர்த்தினார். அவர் எங்கே இருக்கிறார் என்பதில் திருப்தி இல்லை. அவர் ஒரு பெரியவராக இருப்பதில் மகிழ்ச்சியடையவில்லை. அவர் மிகவும் உயர்ந்த இடத்தில் இருக்கவிரும்பினார். அதனால் கடவுள் லூசிபரை தாழ்த்தினார்.

தன்னை தனக்குள்ளே உயர்த்திக்கொள்ளும் எவரும் இன்று அல்லது நாளை தாழ்த்தப்படுவார்கள். பதவிகள் மற்றும் அதிகாரிகளைத் தேடும் எவரும், நாளை தாழ்த்தப்படுவார்கள். தாழ்மையுடன் இருக்கத்த யாராக இருக்கும் எவரையும்- இருக்கத் தயாராக இருந்தால்- கடவுள் அவர்களை உயர்த்துவார்.

எனவே, எமக்கு உள்ளே ஒரு சிறிய லூசிபர் வளர்கிறேனா என்று எப்படி அறியமுடியும்? எங்களிடம் என்ன இருக்கிறது என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடையவில்லையா? நாங்கள் உயர்ந்த இடத்தைத் தேடிக்கொண்டே அதில் தாகமாக இருக்கின்றோம் எனின், நாங்கள் மேலும் மேலும் எங்களைப் பிரபலமாக்க விரும்புகின்றோம் எனின், எங்களுக்குள் ஒரு சிறிய லூசிபர் வளர்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். நாங்கள் அந்த லூசிபரை அழிக்கவில்லை என்றால், அவரை விடுவிக்கவில்லை என்றால் ஆபத்தானது. இன்று அல்லது நாளை நாங்கள் கீழே விழுத்தப்படுவோம். எங்களுக்கு அது மிகபெரிய வீழ்ச்சியாகும். அந்த வீழ்ச்சி மிகமிக ஆபத்தானது.

இன்று பலர் பதவி மரியாதைக்காக தாகம் கொண்டுள்ளார்கள். மற்றவர்களிடமிருந்து பாராட்டுப் பெற வேண்டும் என்று அவாவில் உள்ளார்கள். அவர்கள் புகழ், புகழ் என்று அதை பெற விரும்பி அலைகின்றார்கள். அதற்காக அவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றார்கள். அதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார்கள். மக்களை ஈர்க்கும் சர்ச்சைக்குரிய விடயங்களை மற்றும் பல உடலியல் ஆசைகளைத் தூன்டும் வீடியோக்களைப் பதிவேற்றம் செய்து வருகின்றார்கள். இதன்மூலம் அவர்கள் புகழ்நாமம் பெற முனைகின்றார்கள். ஒழுக்கக்கேடான வழிகளில் கீர்த்தி நாமம் பெறமுனை கின்றார்கள். மேலும் பல விடயங்களை செய்து புகழ் பெற பல மெம்மைநிகழ்ச்சி வழிகளை முன்வைக்கின்றார்கள். ஏனென்றால் அவர்கள் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற ஆசை அவர்களுக்குள் இருக்கிறது. இவை மிக உயர்ந்த பெயரின் புகழை அடைவதற்கான வெளிப்பாடே. இந்த அவா ஒரு சிறிய லூசிபர் எங்களுக்குள் வளர்ந்து வருகிறது என்பதனை தெளிவாகக் காட்டும் ஓர் அறிகுறியேயாகும்.

  லூசிபரின் இந்த வெவ்வேறு குணாதிசயங்களை பைபிளில் இருந்து தெளிவாகப் படிக்கமுடியும்.  லூசிபர் எங்களுக்குள் வளர்கின்றாரா என்பதை நாங்கள் சோதித்து அறியவிரும்பினால், அவருடைய குணாதிசயங்கள், அவருடைய இயல்புகள் உள்ளனவா என அதைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் பைபிளில் எசேக்கியேல் 28:1 இறைவார்தைமுதல் படித்தால் புரியும். இங்கு பைபிள் ஒரு மன்னன் பற்றி கூறுகின்றது. அவன், தீயஆவி அவனுள் இருக்கும் அரசன் ஒருவன். அதாவது அலகை-லூசிபர் அவனுக்குள் இருக்கும் அரசன் ஒருவன். 

(அவரை தீர் நகரின் மன்னன் என அறிமுகஞ் செய்து, (இங்கு தீர் நகரின் மன்னன் என்பதை தீய ஆவிக்கு உள்ளிருக்கும் இளவரசருக்கு ஒப்பிட்டு பேசப்படுகின்றது.) ஆண்டவரின் வாக்கு எசேக்கியேல் வழியாக எடுத்துரைக்கப்படுகின்றது:  தீர் நகரின் மன்னரே 'உன் இதயத்தின் செருக்கில், நானே கடவுள்;@ நான் கடல் நடுவே கடவுளின் அரியணையில் வீற்றிருக்கிறேன்" என்று சொல்கின்றாய், ஆனால் நீ கடவுளைப்போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல@ மனிதனே! தானியேலை விட நீ அறிவாளிதான்! மறைபொருள் எதுவும் உனக்கு மறைவாயில்லை! உன் ஞானத்தாலும் அறிவாலும் உனக்குச் செல்வம் சேர்த்தாய்;@ உன் கருவூலத்தில் பொன்னையும் வெள்ளியையும் குவித்தாய். உன் வாணிபத் திறமையால் உன் செல்வத்தைப் பெருக்கினாய்;@ உன் செல்வத்தினாலோ உன் இதயம் செருக்குற்றது. ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்;: கடவுளைப்போல் அறிவாளி என உன்னைக் கருதிக் கொள்வதால், மக்களினங்களில் மிகவும் கொடியோரான அன்னியரை உனக்கெதிராய் எழும்பச் செய்வேன்;@ அவர்கள் உன் அழகுக்கும் ஞானத்திற்கும் எதிராக உருவிய வாளுடன் வருவர்;@ உன் பெருமையைக் குலைப்பர். படுகுழியில் தள்ளுவர் உன்னை@ கடல் நடுவே மூழ்கிச் சாவோரெனச் சாவாய் நீயே! அப்போது உன்னைக் கொல்வோரின் நடுவில் 'நானே கடவுள்" என்று சொல்வாயே? உன்னைக் குத்திக் கிழிப்போரின் கையில் நீ கடவுளாக அல்ல, மனிதனாகவே இருப்பாய். விருத்தசேதனம் செய்யப் படாதவனைப்போல் அன்னியர் கையால் நீ சாவாய். நானே உரைத்தேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.)  

நான் இந்த நாட்டின் கடவுள்; என இதயத்தில் எண்ணினார். அவர் தன்னை அந்த நாட்டின் கடவுளாக்கினார். குடிமக்கள் அனைவரும் அவரை வணங்கவேண்டும் என்று அவர் விரும்பினார். எனவே, இந்த அரசரை எதிர்கொள்ள கடவுள் தனது தீர்க்கதரிசியை அனுப்பி, இளவரசரிடம் இஸ்ரேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார், உம் இதயம் தற்பெருமை கொள்கின்றது. நீ ஒரு கடவுள் என்று நினைக்கிறீர், நீர் கடவுளின் இருக்கையில் அமர்ந்திருக்கிறீர்-நீர் கடல்களின் இதயத்தில் கடவுளின் இருக்கையில் அமர்ந்திருப்பதாக நினைக்கிறீர், ஆனால் உம் மனதை கடவுளின் மனதோடு ஒப்பிட்டாலும் நீர் ஓர் உயிரினம், நீர் ஒரு மனிதன் மட்டுமே, கடவுள் அல்ல. உம் மனதில், எல்லாம் சாத்தியம் என்று நீர் நினைக்கிறீர். உம் மனதில், நீர் எதையும் செய்ய முடியும் என்று நினைக்கிறீர். உம் மனதில், நீர் அனைவரையும் கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறீர். உமக்குக் கடவுள் தேவையில்லை என நினைக்கிறீர். இது லூசிபரின் வேலையாகும்.

தங்கள் இதயத்தில் தங்களுக்குக் கடவுள் தேவையில்லை என நினைக்கும் எவரும், நினைவில் வைத்து கொள்ளவேண்டியது: இந்த லூசிபர் தெரிந்தோ தெரியாமலோ உங்களுக்குள் இருக்கிறார் என்பது. என்னிடம் நல்ல சத்தி, பணம் இருக்கிறது. மேலும் என் தந்தை மிகவும் பணக்காரர். எனக்கு நல்ல சம்பளம், நல்ல குடும்பம் கிடைத்துள்ளது. எனக்கு கடவுள் தேவையில்லை. நான் ஏன் ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்குச் செல்லவேண்டும், ஒவ்வொரு நாளும் செபமாலை சொல்வதில் எனது நேரத்தை ஏன்  வீணாக்கவேண்டும். நானே எனக்கு மிகவும் போதும் என நினைக்கும்போது, எங்களுள் ஒரு லூசிபர் வளர்கிறார். எனக்கு கடவுள் தேவையில்லை. நானே எனக்கு போதும் என நினைக்கும் போதெல்லாம் அது மிகவும் ஆபத்தானது என நினைவில் கொள்ளவேண்டும்.

ஒன்றை நாம் இப்போது கூர்ந்து கவனித்தால்: உலகளாவிய கோரோனா தொற்றுநோயின் இந்த தருணத்தில் உலகின் சனாதிபதிகள், இன்றைய அமெரிக்க சனாதிபதி உட்பட, 'தயவுசெய்து கடவுளிடம் மன்றாடுங்கள்" என்று மக்களிடம் கூறுவதைக் காணமுடியும். தொற்றுநோயின் இந்தத் தருணத்தில் கடவுள் மட்டுமே நமக்கு உதவ முடியும், ஏனென்றால் உலகம் முழுவதும் தம்மால் எதுவும் செய்யமுடியாது என்று நம் தலைவர்கள் நன்றாக அறிவுத்தெளிவு பெற்றுவிட்டார்கள். 'என் ஆண்டவரே, நீர் மட்டுமே எங்கள் மன்னர். ஆதரவற்றவர்களும் உம்மைத்தவிர வேறு துணையற்றவர்களுமாகிய எமக்கு உதவி செய்யும்@ உமது கைவன்மையால் எங்களைக் காப்பாற்றும். ஏனெனில் நாம் எம் உயிரைப் பணயம் வைத்துள்ளோம்." (எஸ்தர்(கி)4:17ட,17வ) என்னும் இறைவார்தைபகுதியில் காணலாம்) தாங்கள் ஆதரவற்றவர்கள். 'அனைத்தின் மேலும் அதிகாரம் செலுத்தும் கடவுளே, நம்பிக்கை இழந்த எங்களது குரலுக்குச் செவிசாயும். தீயோரின் கைகளினின்று எங்களைக் காப்பாற்றும்;, அச்சத்தினின்று என்னை விடுவியும்." (எஸ்தர்(கி)4:17ண)என்று மன்றாடுவதை நாம் காணமுடியும். இந்த சூழ்நிலையில், நாம் எப்படி எமக்கு கடவுள் தேவையில்லை என்று சொல்ல முடியும்.

தீர் மன்னனைக் குறித்து இரங்கற்பா ஒன்று பாடும்படி எசேக்கியலிடம் ஆண்டவர் கேட்டுக்கொண்டார்: 'ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது. மானிடா! தீர் நகரின் மன்னனைக் குறித்து, இரங்கற்பா ஒன்று பாடு. தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே 'நீ நிறைவின் மாதிரியாகவும் ஞானத்தின் நிறைவாகவும் அழகின் முழுமையாகவும் இருந்தாய். கடவுளின் தோட்டமாகிய ஏதேனில் இருந்தாய். விலையுயர்ந்த கற்கள் உன்னை அழகுபடுத்தின! பதுமராகம், புட்பராகம், வைரம், பளிங்கு, கோமேதகம், படிகச் பச்சை, நீலம், மாணிக்கம், மரகதம் ஆகியவற்றை அணிந்திருந்தாய். பொன்னாடை உன் அழகை வெளிக்காட்டிற்று. நீ பிறந்த அன்றே இவை படைக்கப்பட்டுத் தயாரிக்கப்பெற்றன. காவல் காக்கும் கெருபுபோல் உன்னைத் திருப்பொழிவு செய்தேன்;. கடவுளின் தூய மலையில் நீ இருந்தாய்;@ ஒளி வீசும் கற்கள் நடுவே நடந்தாய். நீ படைக்கப்பட்ட நாளிலிருந்து உன்னில் கயமை காணப்பட்ட நாள்வரை உன் நடத்தையில் மாசின்றி இருந்தாய். எசேக்கியேல் 28:11 இப்பகுதியில் இதை நாம் காணமுடியும். 

நீ விண்ணுலகில் இருக்கும்போது நீ முழுமையின் அடையாளமாக இருந்தாய். ஏனென்றால் அனைத்தும் உமக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஞானம் நிறைந்தவர். அழகு மிகுநிறைந்தவர். நீ பரிபூரணத்தின் அடையாளம். லூசிபர் கடவுளின் முன்னிலையில் இருந்தபோது இவை அனைத்தும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. லூசிபர் பரிபூரணத்தின் அடையாளம், ஞானம் நிறைந்தவர், அழகில் மிகுநிறைந்தவர். லூசிபர் கடவுளுக்குக் கீழே இருந்தார். (நாம் தற்போது நினைவில் கொள்ளவேண்டிய விடயம் முழுமையின் அடையாளம், ஞானம் நிறைந்தவர். மற்றும் அழகு மிகுநிறைந்தவர். மேலே கூறப்பட்டுள்ள அனைத்தும் குணாம்சங்களும் தற்போது லூசிபரிடம் இல்லை. எமது அன்னை மரியாவுக்குக் அவை அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன: முழுமை, ஞானம், அழகு நிறைந்தவள்…) நீ கடவுளின் தோட்டமான ஏதேனில் இருந்தீர். நீ அழகான ஏதேனில் தோட்டத்தில் கடவுளின் முன்னிலையில் இருந்தீர். ஒவ்வொரு விலையுயர்ந்த கற்களும் உன்னை அழகுபடுத்தின. விலையுயர்ந்த கற்கள் பரிசுத்த ஆவியின் கொடைகளின் அடையாளமாகும். உனக்கு பரிசுத்த ஆவியின் இந்தக் கொடைகள் வழங்கப்பட்டிருந்தன: பதுமராகம், புட்பராகம், வைரம், பளிங்கு, கோமேதகம், படிகச் பச்சை, நீலம், மாணிக்கம், மரகதம் ஆகியவற்றை அணிந்திருந்தாய். பொன்னாடை உன் அழகை வெளிக்காட்டிற்று. நீ பயன்படுத்தும் இசைக்கருவிகள் அனைத்தும் தங்கத்திலான கலைவேலைப் பாடுகள் நிறைந்திருந்தன. இதன் கருத்து கடவுள் உன்னை பல ஆசீர்வாதங்களைக் கொடுத்து மேன்மைப்படுத்தியிருந்தார். ஏனென்றால் நீ கடவுளுக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் வானதூதர்க ளிடையே விண்ணில்; மிக உயர்ந்த நிலையில் இருந்தாய். ஏனென்றால் காவல் காக்கும் கெருபுபோல் உன்னைத் திருப்பொழிவு செய்து கடவுளின் தூய மலையில் உன்னை வைத்திருந்தார். ஒளி வீசும் கற்கள் நடுவே நடந்தாய். நீ பிறந்த அன்றே இவை அனைத்தும் படைக்கப்பட்டு உனக்கு வழங்கப்பட்டன. இதன் பொருள். பரிபூரணத்தின் அடையாளம், ஞானம் நிறைந்தவர், அழகில் மிகுநிறைந்தவர் ஆனால் நீ ஓர் உயிரினம, கடவுளால் உருவாக்கப்பட்ட ஓர் உயிரினம். திருப்பொழிவு செய்யப்பட்ட கெருபைப் போல இருந்தீர். உமக்கு மெய்க்காப்பாளர்களையும் நான் ஏற்படுத்தியிருந்தேன். 

லூசிபர் அருள்பொழிவு செய்யப்பட்ட பல கெருபீன்களைச் சுற்றி நின்று கொண்டிருந்தார். நீ கடவுளின் புனித மலையில் இருந்தீர், கடவுளின் புனித மலையில் இப்போது அன்னை மரியா இருப்பதை நாம் அறியலாம். நீ ஒளி வீசும் கற்கள் நடுவே நடந்தாய். நீ விண்ணக பரிசுத்த ஆவியின் முன்னிலையில் இருந்தீர். நீ விண்ணகத்தில் தெய்வப்புதல்வர்கள் நடுவில் இருந்தீர். நீ படைக்கப்பட்ட நாளிலிருந்து உன்னில் கயமை காணப்பட்ட நாள்வரை உன் நடத்தையில் மாசின்றி இருந்தாய். நீ குற்றமற்றவர். உன் வழிகளில் எந்த தவறும் இல்லாமல் எந்த பாவமும் இல்லாமல். இந்தக் குணதிசயங்கள் அனைத்தும் லூசிபர்ருக்கு கயமை-அக்கிரமம் காணப்படும்வரை. கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த கயமை இன்று நம் வாழ்வில் காணப்படலாம்;. கடவுள் எங்களுக்கு எல்லாவகையான  ஆசீர்வாதங்களையும் தந்திருக்கின்றார்: நல்ல குடும்பம், வடிவழகு, தைரியம், வலிமை, ஆரோக்கியம், சமூகநிலை, புகழ்-பெயர், நல்ல கணவர், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், மிக நல்லவைகள் மற்றும் நல்லவை அனைத்தும் உட்பட அனைத்து ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளார். 

ஆனால் இவை அனைத்தையும் மீறி, கடவுளுக்கு நன்றி சொல்வதற்குப் பதிலாக, நான் மகிழ்ச்சியாக இல்லை, எனக்கு நன்றாக வேண்டும், எனக்கு சிறந்த மனைவி வேண்டும், எனக்கு சிறந்த கணவர் வேண்டும், எனக்கு நல்ல குழந்தைகள் வேண்டும், எனக்கு நல்ல வீடு வேண்டும், எனக்கு எல்லாம் நல்லது வேண்டும் என்கின்றோம். கடவுள் எங்களுக்குக் கொடுத்ததற்காக நாம் கடவுளுக்கு நன்றி சொல்லவில்லை. கடவுள் செய்த நல்ல காரியங்களுக்குக் கடவுளுக்கு நன்றி சொல்லாமல் பலர் இன்றும்கூட இருக்கின்றோம். வேலை கிடைக்கும்போது கடவுளுக்கு நன்றி சொல்வதற்குப் பதிலாக, இன்னும் சிறந்த ஒன்றைப் பெற நினைக்கின்றோம்.

முதலில் எங்களுக்கு சிறிய ஏதாவது ஒன்று கிடைத்தாலும் கடவுளுக்கு நன்றி தெரிவிப்போம்.  இறைவனுடன் இருப்போம். நாம் இவ்வாறு இருப்பதற்குக்-நாம் இப்படி இருப்பதற்குக் கடவுளுக்கு நன்றி சொல்வோம். இறைவன் எங்களுக்கு வழங்குவதில் அப்பொழுது மிகவும் மகிழ்ச்சியடைகிறார். நாங்கள் நன்றியுள்ள இதயத்துடன் இருப்போம். நன்றியுள்ள இதயம் ஒன்றைக் கடவுள் விரும்புகின்றார். தாழ்மையுள்ள இதயம் ஒன்றைக் கடவுள் தேடுகின்றார். மாறாக அகந்;தை உள்ள இதயம் ஒன்றைக் கடவுள் விரும்பவில்லை. பெருமை உள்ள இதயம் ஒன்று, எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். கடவுள் எமக்கு கொடுத்த அனைத்து ஆசீர்வாதங்களுக்கும்: எங்கள் கணவர், எங்கள் மனைவி, எங்கள் குழந்தைகள் மற்றும் எங்கள் குடும்பம். எங்கள் ஆன்மீக வழிகாட்டும் குருக்கள், எங்கள் ஆன்மீக வாழ்க்கை, பரிசுத்தஆவியின் பரிசுகள், எங்களுக்குக் கிடைத்த எல்லாவற்றிற்கும், கடவுளுக்கு நன்றிசெலுத்தும்போது கடவுள் இன்னும் அதிகம் அதிகம் தருவதில் மகிழ்வடைவார்.  

பைபிள் கூறுகிறது, கடவுள் தனக்குக் கொடுத்த அனைத்துக்குமாகக் கடவுளுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாக லூசிபர் ஒரு மனப்போக்கை கொண்டிருந்தார். வேறுஎந்த வானதூதர்களுக்கும் கொடுத்ததை விட கடவுள் லூசிபருக்குக் நிறையவே கொடுத்திருந்தார். லூசிபர் மட்டுமே இந்த அனைத்து வளங்களையும் பெற்றிருந்தர். மற்ற எந்த வானதூதர்களும் லூசிபரைப்போல் பெற்றிருக்கவில்லை. ஆனால் நன்றி செலுத்துவதற்கும், சர்வவல்லமையுள்ள கடவுளைப் புகழ்வதற்குப் பதிலாக, லூசிபர் கடவுளைப் புகழ்வதை நிறுத்தினார். மேலும் அவர் அனைத்து புகழும் தமக்கு வேண்டும் என ஆசைப்பட்டார். லூசிபர் எல்லோரும் தம்மைப் புகழ வேண்டும் என்று விரும்பினார். அவர் இவ்வாறு தம்முடன் சில தூதர்களைச் சேகரிக்க முடிந்தது. 

யாராவது உயர்வு, உயர் பதவிகள் மற்றும் அதிகாரங்கள் வேண்டும் என நினைத்து அதன்பின்னால் ஓடி கடவுளைப் போற்றுவதைக், கடவுளைப் புகழ்வதை, நன்றி சொல்வதை நிறுத்திவிட்டால். உடனடியாகத் தன்னுணர்வு பெற்றவராய்-அறிவு தெளிந்தவராய் லூசிபர் ஒருவர் தங்கள் இதயத்திற்குள் வளர்ந்து வருகிறார், ஆம், ஒருவேளை மிக வேகமாக வளர்ந்து வருகிறர் என்பதை நன்குணரவேண்டும். மிகவிரைவாக அவரை கட்டுப்படுத்தவேண்டும். அவரை அடக்கவேண்டும்.  இல்லையெனில் அது மிகவும் ஆபத்தானது. நாங்கள் பாதாழத்தை நோக்கி வீழ்ச்சியடைவோம்.  

லூசிபரின் மேலும்சில தவறுகள்

லூசிபரின் மேலும்சில தவறுகள் பற்றி நோக்குகையில்: பரந்த உன் வாணிபத்தால் வன்முறை நிறைந்தது உன்னில்;@ பாவம் செய்தாய் நீயே! பலவற்றைப்பற்றி தலையிடுகின்றாய். அதனுள் முழ்கியிருக் கின்றாய். எனவே வன்முறை உன்னுள் உருவாகியது. வன்முறையே லூசிபரின் இயல்பாக மாறியது.

நாங்கள் பலவற்றில் மிகவும் தலையிடுவோமாயின் மிக விரைவாக கோபப்படுவோம். எரிச்சலை மிக விரைவாக அடைவோம். தொந்தரவுக்குள் மிக விரைவாக விழுந்துவிடுவோம். நாங்கள், இரக்கம், கருணை மற்றும் இவை அனைத்தையும் புறக்கணிப்போம். நாங்கள் இந்த விடயங்களைப் பற்றி கவலைப்படமாட்டோம். எங்கள் மனைவிக்கு என்ன நடக்கிறது என்று நாங்கள் கவலைப்பட மாட்டோம். எங்கள் கணவருக்கு என்ன நடக்கிறது? எங்கள் குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்று நாங்கள் கவலைப்படமாட்டோம். எங்கள் கணவருக்கு ஆறுதல் தேவைப்படுவதை நாங்கள் காணமாட்டோம். எங்கள் மனைவிக்கு ஒத்துழைப்பு தேவையென நாங்கள் காணமாட்டோம். எங்கள் குழந்தைகளுக்குப் பாசம், ஆதரவு தேவை என நாங்கள் உணரமாட்டோம். ஏனென்றால் நாங்கள் பல்வோறு விடயங்களில் மூழ்கியிருப்போம். இந்த வன்முறையால் நாங்கள் பாவம் செய்தோம். 

எனவே, வெறுப்புடன் உன்னைக் கடவுளின் மலையினின்று வெளியேற்றினேன்; ஓ! காவல்காக்கும் கெருபே! உன்னை ஒளிவீசும் கற்கள் நடுவினின்று வெளியே தள்ளினேன். உன்னுடைய சொந்தப் பாதுகாவலர்-காவல்காக்கும் கெருபே உன்னை வெளியே நெருப்புக் கற்களுக்கு மத்தியில் தள்ளிவிட்டது. பைபிளில் யூதாப் புத்தகத்தில் 1:6 இறைவார்த்தைப்பகுதியை வாசிக்கும்போது நாம் இதை நன்கு அறிவது கொள்ளமுடியும்: 'சில வானதூதர்கள் தங்கள் ஆளும் அதிகாரத்தைக் காத்துக்கொள்ளாமல், தங்கள் உறைவிடத்தைத் துறந்துவிட்டார்கள். என்றும் கட்டப்பட்டவர்களாய் அவர்களைக் கடவுள் மாபெரும் தீர்ப்புநாளுக்காகக் காரிருளில் வைத்திருக்கிறாரர்."இந்த இறைவார்த்தைப் பகுதிகளை தொடக்கநூல் 1:1-2 இல் இருந்தும் அறிந்துணரவும் முடியும்: ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. இந்த வானதூதர்கள் தங்களுக்கு கிடைந்துள்ள இந்த மேன்மையான நிலையை காத்துக் கொள்ளவில்லை. தங்களுக்கு கிடைந்துள்ள மேன்மையான நிலையைப் பற்றி மகிழ்ச்சியாகவில்லை. அவர்கள் இன்னும் தங்களுக்கு உன்னதமான இடம் வேண்டும் என்று அவாவில் அலைந்தனர். இதனால் தங்கள் உறைவிடத்தை விட்டு தூரமாகத் துரத்தப்பட்டார்கள். பின்னர் கடவுள் அவர்களை மாபெரும் தீர்ப்புநாளுக்காகக் காரிருளில் சங்கிலிகளில் வைத்திருக்கிறார். 2பேது2:4 இறைவார்த்தைப்பகுதியிலும் காணமுடியும் 

பைபிளில் 1பேதுரு3:3 இறைவார்த்தைப்பகுதியை வாசிக்கும்போதும் காணும் வரிகளை ஆய்வுசெய்தால்: 'முடியை அழகுபடுத்துதல், பொன் நகைகளை அணிதல், (நேர்த்தியான) ஆடைகளை அணிதல் போன்ற வெளிப்படையான அலங்காரமல்ல. இவைகளினால் எமது தோற்றத்தை அழகுபடுத்த அதிகமாக அக்கறையாக இருந்தால் அது மிகவும் ஆபத்தானது. மாறாக, மனித உள்ளத்தில் மறைந்திருக்கும் பண்புகளாகிய பணிவும் அமைதியுமே உங்களுக்கு அழியாத அலங்காரமாய் இருக்கட்டும். கடவுள் பார்வையில் அதுவே விலையுயர்ந்தது." 

நாம் பைபிளில் எசேக்கியோல் புத்தகத்தில் 28:17 படித்து, லூசிபர் பற்றிய இந்த தொடர்பை, மேலுள்ள பகுதியுடன் தொடர்புபடுத்தி விளங்கிக் கொள்ளமுடியும். 'உன் அழகின் காரணமாய் உன் இதயம் செருக்குற்றது@ எங்கள் அழகைப் பற்றி பெருமையாக இருக்கும்போது, எங்கள் தோற்றத்தைப் பற்றி நாங்கள் மிகவும் அக்கறையாக இருக்கும்போது, எங்கள் தோற்றத்தில் நாங்கள் மிகவும் பெருமைப்படும்போது, பெருமளவு பணம் அழகுபடுத்தலுக்காக செலவிடுகின்றோம். நாங்கள் நிறைய நேரத்தை கண்ணாடி முன் செலவிடுகின்றோம். நாங்கள் யார்? எதற்காக உள்ளோம் என்பதை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, எங்கள் தோற்றத்தைப் பற்றி நாங்கள் மிகவும் கவலைப்படுகின்றோம். கடவுள் எங்களை நேசிப்பது நாங்கள் கடவுளை நேசிப்பதால் அல்ல. இதை நாம் நன்றாக நினைவில் கொள்ளவேண்டும். எம் உடலுக்கு சிலவேளைகளில் சில அலங்காரங்கள் மற்றும் கூடுதல் பொருத்துதல்கள் தேவைப்படலாம். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் சிலர் மிகவும் அதிகமாக அதே எண்ணத்துடன் இருக்கின்றார்கள். (அந்த எண்ணங்கள் மனதை ஆக்கிரமித்தவண்ணம் உள்ளன.)அவர்கள் இதற்காக நிறையப் பணத்தையும் நேரத்தையும் வீணடிக்கிறார்கள். வெவ்வேறு வகையான வாசனைத்திரவியங்களை வாங்குகின்றார்கள். ஆனால் எதுவும் பயன்படுவாதாக இல்லை. மாறாக ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்கு மட்டுமே அவை பயன்படுகின்றன. ஆதனால் திருப்தி இல்லை, இந்த அழகு சாதனங்கள் எல்லாம்கூட வரம்புகளுக்கு உட்பட்டவை என ஒருநாள் அவர்கள் தெரிந்து கொள்வார்கள். நாங்கள் எங்கள் வடிவழகுக்காக எங்கள் இதயத்தில் மிகவும் பெருமைப்படுகின்றோம்.  

கடவுள் லூசிபரைக் குறித்துக் கூறும் பகுதியை இங்கு நோக்குவோம்: 'உன் மாட்சியின் காரணமாய் உன் ஞானத்தைக் கெடுத்துக் கொண்டாய்;@ (உன் அறிவினை நல்ல விடயங்களுக்குப் பயன்படுத்தவில்லை மாறாக தீயவிடயங்களுக்குப் பயன்படுத்தினாய்.) எனவே நான் உன்னைத் தரையில் தள்ளிவிட்டேன்;@ மன்னர்கள் முன்னே உன்னைக் காட்சிப் பொருளாக்கினேன்." 

யாராவது இவ்வாறு தீயவிடயங்களை இரகசியமாகப் பார்த்து வந்தால், அவர்கள் ஒரு நாள்; வெளிப்படையாகக் காட்சிப் பொருளாக்கப்படுவார்கள். எந்த இரகசியமான பாவமோ, எந்த இரகசியமான பெருமையோ அல்லது நாம் மறைத்து வைத்திருக்கும் எந்த தீயஎண்ணங்களோ இன்று அல்லது நாளையோ ஒரு நாள் வெளிப்படும்- வெளிப்படுத்தும். நாங்களே எமக்குத் தெரியாது வெளிப்படுவோம். லூசிபர் எங்கும் மறைந்திருக்க முடியாது. அவர் வெளிப்படுத்தப்பட்டே ஆகவேண்டும். ஒருவேளை விண்ணகத்திலாவது அவர் வெளிப்படுவார். லூசிபர் கடவுளோடு இருக்கும்போது விண்ணகத்தில் மிகவும் சக்திவாய்ந்தவராக இருந்தார், வானதூதர்களுடைய முழு அதிகாரத்தையும் கொண்டிருந்தார். ஆனாலும் அவர் அங்கே அம்பலமாகிவிட்டார். எனவே, இங்கே மண்ணுலகில் எளிதில் வெளிப்படுவார்.

கடவுள் இன்னும் லூசிபரைக் குறித்துக் கூறும் பகுதி: 'உன் மிகுதியான பாவங்களாலும் நேர்மையற்ற வாணிபத்தாலும் உன் திருத்தலங்களைத் தீட்டுப்படுத்தினாய்; எனவே உன் நடுவினின்று நெருப்பு வரச்செய்தேன்." ஒன்று அல்லது இரண்டு பாவங்களினால் அல்ல இரகசியமான அக்கிரமங்களின் பெருக்கத்தால் லூசிபர் தனது புனித இடத்தை, கடவுளின் புனித இடத்தை- திருத்தலங்களைத் தீட்டுப்படுத்தினார்;.  எனவே, கடவுள்  வெளியே கரிருளினுள் தள்ளினார். 

(எங்களுக்குள் இருக்கும் இதேபோன்ற பெருமை, அகங்காரம், சுயநலம காரணமாக, நாம் தங்கியிருக்கும் இடத்தைத் தீட்டுப்படுத்துகின்றோம் (தேவநிந்தனை). எங்கள் வீடு இழிவுபடுத்தப்படும். நாங்கள் எங்கிருந்தாலும் அந்த இடமும் தீட்டுப்படுத்தப்படும். அது ஒரு புனித இடமாக-சரணாலயமாக இருந்தாலும் எங்களால்  தீட்டுப்படுத்தப்படும்;.) 

அதனால் நான் உனக்குளிருந்து நெருப்பை வெளியே கொண்டு வந்தேன்." நான் உள்ளே இருந்து நெருப்பை வெளியே கொண்டு வந்தேன்" என்பதன் பொருள்: உனக்குள் இருந்து பரிசுத்த ஆவி வெளியே சென்று விட்டார். மன்னர் சவுல் பாவம் செய்தபோது கடவுளின் ஆவி அவரிடமிருந்து விலகி தீயஆவி அவருள் வந்ததுபோலவே. (1சாமுவேல்16:15, 23@ 18:10 மற்றும் 19:9). எனவே உமக்குள் ஒளியற்றுப்போய் இருள் சூழ்ந்து கொண்டது. அந்த இருள் உன்னை நுகர்ந்துகொண்டது. நான், உன்னைப் பார்த்தோர் கண்முன்னே முற்றிலும் உன்னைத் தரையில் சாம்பலாக்கினேன். உனக்குள் ஒளி இல்லை, உனக்குள் இருள் மட்டுமே உள்ளது. பயம் மட்டுமே உனக்குள் உள்ளது. சாத்தான் பயத்தின் மீகுதியால் உள்ளான். பயப்படுபவர்கள் மட்டுமே தாக்குவார்கள். யாராவது ஒருவர் யாருக்காவது பயப்பட்டுவிட்டால், அவரை நீக்கிவிடுவது பற்றி என்றுமே எண்ணிக்கொண்டே இருப்பார். நாங்கள் ஒருவரைப்பற்றியும் பயப்படவில்லை என்றால், ஏன் நாம் அவரை நீக்குவது பற்றி எண்ணவேண்டும். 

பலர் கடவுள் ஏன் சாத்தானை அழிக்க வேண்டும். கடவுளுக்குப் பயமா? என்கின்றார்கள். அதாவது, அவர் கடவுளுக்கு அச்சுறுத்தல் இல்லை. கடவுளுக்கு, யாரும் அச்சுறுத்தலாக இல்லை. கடவுள் சர்வவல்லமையுள்ளவர், எங்கும் நிறைந்தவர். எல்லாம் அறிந்தவர், எனவே அவர் யாருக்கும் பயப்படவில்லை. 

'உன்னைத் தெரிந்த எல்லா நாடுகளும் உன்னைக் கண்டு மருண்டு திகிலுறுகின்றன. நடுங்கற்குரிய முடிவுக்கு வந்து விட்டாய் நீ@ இனிமேல் நீ இருக்கமாட்டாய்." கடவுள் கூறுகின்றார்: ஷநீ இனி ஒன்றுமே இல்லை|. தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: 'சீதோனே, நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்;. உன் நடுவில் என் மாட்சியை வெளிப்படுத்தும்போது, நான் உன்மீது தண்டனைத் தீர்ப்புகளை நிறைவேற்றும்போது, உன் நடுவில் என் தூய்மையைக் காண்பிக்கும்போது, ஷநானே ஆண்டவர்| என உன்னிலுள்ளோர் அறிந்து கொள்வர்." 1கொரி1:19 இறைவார்த்தையைப் படிக்கையில், ஏனெனில், 'ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன், அறிஞர்களின் அறிவை வெறுமை யாக்குவேன்" என்று கடவுள் கூறுவதைத் தெரிந்துகொள்ளமுடியும்.  சாத்தான் ஞானம் நிறைந்தவனாக இருந்தான். அதில் அவர் பெருமிதம் கொண்டார். லூசிபர் ஞானத்தை தவறான விடயங்களுக்குப் பயன்படுத்தினார். அதனால் கடவுள் லூசிபரை அழித்தார். 

சாத்தான் பலவற்றுக்குள் தலையிட்டுப் பெரும்சுமைகளைக் கொடுக்கின்றான். சுமைகளைத் தந்து சுகங்களை சுக்குநூறக்குவதே லூசிபரின் இயல்பாகும். எனவே இதனை இலகுவாக வெல்ல இயேசுவை நாடினால், 'பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது@ என் சுமை எளிதாயுள்ளது" என தேற்றுவதை காணலாம். (மத்தேயு11:28-30)

மத்தேயு 6:33 நாங்கள் படிக்கிறோம்: 'ஆகவே முதலாவதாக அனைத்திற்கும் மேலாக அவரது (கடவுளது) ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்." நாம் உயர் நிலையை அடைய முய்ற்சிக்க வேண்டியதில்லை. உயர்ந்த பதவிநிலையை, அதிக பணத்தை, தேட முயற்சிக்கவேண்டியதில்லை நாங்கள் பணத்திற்குப்பின் ஓடினால், பணம் எங்களிடமிருந்து ஓடிவிடும். நாங்கள் உயர்பதவநிலையைத் தேடி ஓடினால். பதவி நிலை எங்களுக்கு ஒருபோதும் வராது. நாங்கள் அழகுக்குப் பின்னால் ஒடினால், அழகு எங்களைவிட்டு புறப்பட்டுவிடும். நாங்கள் எதற்கும் பின்னும் ஓடிக்கொண்டிருந்தால், அவைகள் எங்களை விட்டுவிலகிச் சென்றுகொண்டே இருக்கும். ஆனால் முதலாவதாக அனைத்திற்கும் மேலாக கடவுளது ஆட்சியையும், கடவுளுக்கு ஏற்புடையவற்றையும் நாடும்போது இவையனைத்தும் எங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். பெருஞ்சுமையை நாம் சுமக்க வேண்டியதே இல்லை.

எனவே எங்களுக்குள் ஏதாவது திருப்தியற்றநிலை: முணுமுணுப்புக்குள், கோபத்தேடு-மனக்குறைபாடுடன் முனகுதல், வாழ்க்கையில் மகிழ்ச்சியற்றநிலை, எங்கள் கணவரைப்பற்றி மகிழ்ச்சியற்றநிலை, எங்கள் மணைவியர்பற்றி மகிழ்ச்சியற்றநிலை, குழந்தைகளைப்பற்றி மகிழ்ச்சியற்றநிலை, எங்கள் வீடுகள்பற்றி மகிழ்ச்சியற்றநிலை, நாங்கள் எங்கள் சூழ்நிலை பற்றி எப்போதும் முணுமுணுக்கின்றோம், புகார் செய்கின்றோம். கோபத்தேடு உறுமுகின்றோம் எனின், ஒரு லூசிபர்-சாத்தான் எங்களுக்குள் வளர்கிறார் என நாம் நினைவில் கொள்ளவேண்டும். 

யாராவது அதிகாரத்திற்கு எதிராக கலகம் செய்தால், சாத்தான் கலகக்காரன். தன்னுள் கலகங்களை வைத்திருக்கின்றான் என நினைவில் கொள்ளவேண்டும். லூசிபரின் போக்கு என்ன என நோக்குகையில், அதிகாரமுள்ள கடவுளுக்கு எதிராக கலகம் செய்தலே என்பது தெரியவரும். நாங்கள் யாராவது அதிகாரமுள்ள மேலதிகாரிகள், தலைவர்கள், எங்கள் ஆன்மீக தந்தையர்கள்-குருக்கள் போன்றோர்களுக்கு எதிராகப்பேசும் போக்கு எங்களுக்கு இருந்தால். அவர்களை விமர்சித்து, முகநூலில், புலனத்தில், கட்டசெவி அஞ்சலில்- கீச்சகத்தில் செய்திகளை அனுப்புதல் மற்றும் கடவுள் நிறுவிய இந்த அதிகாரிகளை எல்லா இடங்களிலும் அவமதித்தால், அதாவது எங்களுக்குள் ஒரு சிறிய லூசிபர் வளர்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.  

தற்போது ஒருவருடைய முகநூல் பக்கங்களைப் பார்த்தால், அவருக்குள் எத்தனை லூசிபர் வளர்கின்றார் என்பது தெரியவரும். அவருடைய விமர்சிக்கும் தன்மையைப் பார்த்தால் எவ்வளவு சக்தி வாய்ந்த லூசிபர் வளர்கின்றார் என்பது தெரியவரும். இது மிகவும் அவருக்கு ஆபத்தானது.(லூக்11:24-26) 'ஒருவரை விட்டு வெளியேறுகின்ற தீயஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல், நான் விட்டுவந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன் எனச் சொல்லும். திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டிருப்பதைக் காணும். மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளை அழைத்து வந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும். அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையை விடக் கேடுள்ளதாகும்." எனவே இயேசு பின்வருமாறு கூறினார்;:'என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்."(யோவா.14:23)

எமக்குள் சாத்தானின் இயல்புகள் உள்ளன என காணப்பட்டுவுடனே அதனை நிறுத்தவேண்டும். அல்லது அழிவு பெரிதானதாகத்தான் இருக்கும். இங்கு இந்த இறைவார்தையை நோக்குவோம்:பேதுருவுக்குள் சாத்தனின் இயல்புகளைக் கண்ட இயேசு,'பேதுருவே தயவு செய்து இப்படி சொல்லவேண்டாம், அமைதியாய் இரும். அமைதியாய் இரும். நான் உனக்கு சிலவற்றைச் சொல்லுகின்றேன் என அன்பு ததும்ப தாம் மிகுந்த அன்புகொண்ட பேதுருவுடம் சொல்லவில்லை. இயேசு அதை சகித்துக்கொண்டாரா? விட்டுக்கொடுத்து சமாதான உடன்படிக்கை செய்துகொண்டாரா? இல்லவே இல்லை அக்கணமே கோபத்துடன் பேதுருவைத் திரும்பிப் பார்த்து, 'என் கண்முன் நில்லாதே சாத்தானே- என் பின்னாலே போ- நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்றார்.(மத்16:23). எனவே சாத்தனின் இயல்புகளை உடனடியாக உதறித்தள்ளுவோம். லூசிபரிடம் கேட்போம், அவர் மனம் நோகவிட்டால் பின்பு அதனை விட்டுவிடுவோம் என சமரசம் செய்வேமா?  இல்லவே இல்லை. மறுகணமே நாமே விட்டுவிடுவோம். இறைவார்த்தை கூறுவதைக் நாழிகையும் கோட்போம். செயற்படுத்துவோம். எம்மை விட்டு வெளியேறி தீய ஆவி அப்போது வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் கண்டுபிடிக்கும்.  

பைபிளில் எபிரேயர் 12:15'உங்களுள் எவரும் கடவுளின் அருளை இழந்துவிடாமலிருக்கப் பார்த்துக் கொள்ளுங்கள். கசப்பான நச்சுவேர் எதுவும் உங்களுக்குள் முளைத்து, தொல்லை கொடுக்காத படியும் அதனால் பலர் கெட்டுப்போகாதபடியும் பார்த்துக் கொள்ளுங்கள். யாராவது நீங்கள் கெட்டுப்போய் விட்டீர்கள்-தூய்மையற்றவர்களாகிவிட்டீர்கள்- என்றால் மற்றவர்களையும் கெட்டுப்போகிறவர்களாக மாற்றக் கூடிய  இயல்புநிலைக்கு ஆளாக்குவீர்கள். நாம் எம் நினைவை மீட்டினால், லூசிபர் தீட்டுப்பட்டபோது-கெட்டுப்போய் விட்டபோது, மூன்றில் ஒருபகுதி வானதூதர்களையும் தீட்டுப்படுத்தி தூய்மையற்றவர்களாக்கிவிட்டான். ஒரு தீமை இருந்தால். அந்த தீமை மற்ற தீயவர்களையும் ஈர்க்கும் என்பது உறுதி. பைபிளில் திவெ12:4'அது தன்வாலால் விண்மீன்களின் (வானதூதர்கள்) மூன்றில் ஒரு பகுதியை நிலத்தின்மீது இழுத்துப்போட்டது. பேறுகால வேதனையிலிருந்த அப்பெண் பிள்ளை பெற்றவுடன் அதை விழுங்கிவிடுமாறு அரக்கப் பாம்பு அவர்முன் நின்று கொண்டிருந்தது." 

(திவெ12:7பின்னர் விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்; அரக்கப் பாம்பும் அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள். அரக்கப் பாம்பு தோல்வியுற்றது. விண்ணகத்தில் அதற்கும் அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று. அப்பெரிய அரக்கப் பாம்பு வெளியே தள்ளப்பட்டது. அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப் பெற்ற அதுவே தொடக்கத்தில் தோன்றிய பாம்பு. உலகு முழுவதையும் ஏமாற்றிய அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது. அதன் தூதர்களும் அதனுடன் வெளியே தள்ளப்பட்டார்கள்;.)

பாவம் புரிந்த வானதூர்களை கடவுள் விண்ணுலகில் வைத்திருக்கவில்லை.அவர்கள் வெளியேற்றப் பட்டார்கள். நமக்குள் ஏதேனும் கலகத்தனமான செயற்பாடுகள் இரகசியமாக வளர்ந்துவந்தால் இந்த கலகச்செயல்களைப் பற்றி மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில் ஒரு லூசிபர் எமக்குள் வளர்கின்றார் என்பதற்கான ஒரு தெளிவான அறிகுறி இதுவாகும். 

பின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது." 'இதோ, மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி, அவருடைய மெசியாவின் அதிகாரம் ஆகிய அனைத்தும் வந்துவிட்டன. நம் சகோதரர் சகோதரிகள் மீது குற்றம் சுமத்தியவன்- (என்பது இங்கு சாத்தானின் மறுபெயர்), நம் கடவுள் திருமுன் அல்லும் பகலும் அவர்கள்மீது குற்றம் சாட்டியவன் வெளியே தள்ளப்பட்டான். (திவெ.12:10)

லூசிபர்-தீயஆவி உள்ளே இருப்பவர்கள் ஒரே புகார்செய்துகொண்டே இருப்பார்கள். அவர்களிடம் பாதுகாப்பு இல்லை, நியாயம் இல்லை, குறைகளே இருக்கும். அவர்கள் கடவுளுக்கு முன் இருளில் இருக்கிறார்கள். நல்லது எடுத்துச் சொன்னாலும்-செய்துகாட்டினாலும் அதிலும் குற்றம் சாட்டுகிறார்கள். இவ்வாறு குற்றச்சாட்டுகளில் மட்டுமே மூழ்கியிருப்;பவர்கள் எம் மத்தியிலும் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அவர்களும் தங்களைப்பற்றி கவனமாக இருக்கவேண்டும்.  ஏனென்றால் அப்படிப்பட்வர்களுக்குள் ஒரு லூசிபர் வளர்கின்றார்.

உள்ளத்தின் எண்ணங்களை ஊடுரிவிப் பார்க்கக்கூடியவர் கடவுள் ஒருவரே. அவர் முன் நாம் வெளிப்படையாக இருப்போம். நாம் கண்களை மூடிக்கொண்டு அகக் கண்களைத் திறப்போம். நம் மனசாட்சியை ஆராய்வோம். நமக்குள் எங்காவது லூசிபர் இருப்பதற்கான அறிகுறிகள் எங்களிடம் உள்ளதா என எம் மனசாட்சியின்படி தன்னுணர்வு வெறுவோம். லூசிபர் கட்டுப்பாட்டில் இருக்கிறாரா என அறிவுத்தெளிவு பெறுவோம். இயேசு தன்னைத் தாழ்த்தியதுபோல், அன்னைமேரிமாதா தன்னைத் தாழ்த்திக் கொண்டதுபோல, நம்மைநாமே தாழ்த்துவோம். அன்னைமேரிமாதா தன்னைத் தாழ்த்தினார். அதனால் கடவுள் அவரை உயர்த்தினார். அன்னையை விண்ணகத்தில்; உயர்ந்த பதவியில் உயர்தினார். எனவே நாம் இதில் அறிந்துகொண்ட எல்லாவற்றிற்கும் ஆண்டவருக்கு உளமார நன்றி கூறுவோம். 

காணாமற்போன மகன் அறிவு தெளிந்தவராய் தந்தையிடம் திரும்பிவந்துபோல, (லூக்.15:17-20) அவர் அறிவு தெளிந்தவராய், 'என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ~அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்;@ இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்;@ உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்" என்று சொல்லிக்கொண்டார். உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித்தழுவி முத்தமிட்டார்." மனம் மாறுவோம். விழுந் தடிபணிவோம். பழுதுளப் பாவப்படுகுழி இனியும் விழுந்திடாது எம்மை காக்கும்பட இயேசுவிடம் மன்றாடுவோம். இயேசு ஆண்டவர் ஓடேடிவருவார். நம்மையும் கட்டி அணைத்து தழுவி முத்தமிடுவார். விண்ணுலகில் எம்மைக்குறித்து அப்போது மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்.(லூக்.15:7). இயேசுவைக் கண்டதும் லூசிபர் கத்திக்கொண்டு இயேசுவின் முன் விழுந்து பணிந்து பேய்விடும். (லூக்.8:26-39) 

ஒவ்வொரு நாளும் தவறாமல் இறைவனிடம் வேண்டும்போது இவ்வாறு அவரிடம் கேட்டுக்கொள்வோம்: இயேசுவே, நாங்கள் முழு ஞானத்தையும் ஆவிக்குரிய அறிவுத்திறனையும் பெற்றுக் கடவுளின் திருவுளத்தைப் பற்றிய அறிவை நிறைவாக அடைய எங்களுக்கு அருள்புரியும். நாங்கள் அனைத்திலும் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்து அவருக்கு ஏற்புடையவர்களாய் நடந்து கொள்ள எங்களுக்கு அருள்புரியும்;. நாங்கள் பயன்தரும் நற்செயல்கள் அனைத்தும் செய்து கடவுளைப்பற்றிய அறிவில் வளர எங்களுக்கு அருள்புரியும்;. நாங்கள் முழு மனஉறுதியோடும் பொறுமையோடும் இருக்குமாறு தம் மாட்சிமிகு ஆற்றலுக்கேற்பத் தம் வல்லமையால் அவர் எங்களுக்கு வலுவூட்ட அருள்புரியும்;. மகிழ்ச்சியோடு, தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்த எங்களுக்கு அருள்புரியும்;. அவர் இறைமக்களுக்கான ஒளிமயமான உரிமைப்பேற்றில் பங்குபெற எங்களைத் தகுதியுள்ளவர்களாக்க எங்களுக்கு அருள்புரியும்;. அவரே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்குட்படுத்த எங்களுக்கு அருள்புரியும்;. அம்மகனால்தான் நாம் பாவமன்னிப்பாகிய மீட்பைப் அடைய எங்களுக்கு அருள்புரியும்;. (பார்க்க கொலோ. 1:9-14) நின்ற இடம்தெரியாது லூசிபர் ஓடிவிடுவார்இ

தீயோனை- இருளின் அதிகாரத்தை விரட்ட நாம் தூயஆவியால் நிரப்பப்படவேண்டும். எனவே தாவீதின் கடவுளிடம் தாவீதோடு சேர்ந்து உரத்த குரலில் வேண்டுவோம். 'கடவுளே,என் பாவங்களைப் பாராதபடி உம்முகத்தை மறைத்துக்கொள்ளும்;@ என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும். கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்;@ உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும். உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்;. உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்;. தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்."(திபா.51:9-12) கடவுள் எம் தீவினை முற்றிலும் நீங்கும்படி அப்போது எம்மைக் கழுவுவார். எம் பாவம் அற்றுப்போகும்படி எம்மை தூய்மைப்படுத்துவார். ஈசோப்பினால் எம்மைக் கழுவுவார். நாம் தூமையாகுவோம். உறைபனியிலும் வெண்மையாகுவோம். மகிழ்வொலியும் களிப்போசையும் நாம் ஒவ்வொரு நாழிகையும் கேட்கும்படி செய்வார். 'நாங்கள் வலப்புறமோ, இடப்புறமோ, எப்பக்கம் சென்றாலும், ஷஇதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்| என்னும் இறைவார்த்தை பின்னிருந்து எங்கள் செவிகளில் ஒலிக்கச்செய்வார்."(எசா.30:21)  எனவே இயேசு கூறுவதை கருத்தாய் கோட்டு: 'என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்." அதனைச் செயற்படுத்துவோம். அப்போது தீயோன் தான் பயன்படுத்திய அனைத்துத் தந்திரோபாயங்களும் செயலற்றுப்போய்விட்டதே என்று அறிந்து அவர்கள் கடவுளின் பிள்ளைகளாகிவிட்டார்கள். அவர்கள் சார்பாக மூவொரு கடவுளும் எனக்கெதிராகப் போரிடப்போகிறர்கள், என்னை தொலைக்கப் போகின்றார்கள் என்று எண்ணி செய்வதறியாது திகைத்து அலகை அச்சமடையும். எம்மை விட்டு வெளியேறி தீயஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் கண்டுபிடிக்கும். இருளின் அதிகாரம் எங்களைவிட்டு விலகிபோகும். மூவொரு இறைவனும் எமது அன்னை மரியாவும் எங்கள் வீட்டில் வந்து எங்களுடன் குடிகொள்வார்கள்."ஆண்டவரை எங்கள் வீட்டுக்குக் கொண்டுவருவோம். கடவுளுக்கு ஏற்றவை பற்றி எப்போதும் எண்ணுவோம். அலகை அடிபணிந்து அகன்றேபோகும்.

உசாத்துணைநூல்கள்:

1. திருவிவிலியம்,(இணைத் திருமுறையுடன்) பொதுமொழிபெயர்ப்பு,22ஆவது பதிப்பு 2009,TNBCLC.

1.Bible, New Revised Standard Verson.

2. Bible, King James Verson.d

3. Bible,Good News Translation (GNT) -Version.

4. https://www.youtube.com/watch?v=uX5_u31qwYk&t=461s, viewd on 24.09.2021 @8:86 P.M.

5. https://www.youtube.com/watch?v=BgghzRisdaM, viewd on 24.10.2021 @01.23 P.M.

Friday, October 15, 2021

அன்னை மரியாவைப்பற்றியும் இயேசுவைப் பற்றியும் முஸ்லீம் பெண்ணினுடைய வலிமைமிக்க சாட்சியம்.

POWERFUL TESTIMONY OF A YOUNG MUSLIM LADY WHO ENCOUNTERED JESUS THROUGH MARY

https://www.youtube.com/watch?v=eiRZhQ-n3FY

https://www.nikkikingsley.com/

https://www.youtube.com/watch?v=0JTOmEa1LaI


Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff