Friday, December 22, 2023

நத்தாரின் நாயகர்கள்- செக்கரியா மற்றும் அன்னை மரியா. ஒரு திறனாய்வூ

ம.பிரான்சிஸ்க்-ஆசிரியர் தொடர்பாடலும் ஊடகக்கற்கை மற்றும் கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர், 

உலகினைப் படைத்த கடவூள் நமக்காக நம்மைத்தேடிப் காசினிக்கு வந்தார். பைபிளில் உள்ள ஒரு புத்தகத்தின் ஆசிரியர் புனித லூக்கா தனது நற்செய்தியை இந்த இரண்டு நாயகர்களின் கதையூடன் ஆரம்பித்து வைக்கின்றார்: குரு செக்கரியா மற்றும் இயேசுவின் தாயாக வரவிருக்கும் அன்னை மரியா:- 'யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில்இ அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார்". 'ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவூள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா". (லூக்கா 1:5,26-27).

நத்தார் கதையில், இயேசுவூக்கு வழியை ஆயத்தம் செய்யவரும் திருமுழுக்கு யோவானின் தந்தையாக முக்கியப்பங்கு வகித்தார் செக்கரியா. கடவூளின் தாயாக முக்கிய பங்கு வகிக்கின்றார் மரியா. இறைவனின் வார்த்தைகள் குறித்து சந்தேகம் அடைந்த செக்கரியா, மற்றும், இறைவார்த் தையை முழுமையாக நம்பிய அன்னை மரியா என இருவருக்கும் இடையேயான வேறுபாடுகளை நோக்குவோம்:- செக்கரியா வயதான ஒரு குரு. மரியா ஓர் இளம் கன்னிப்பெண். இருவரும் சமூகத்தில் நேர்மையானவர்கள், உயர்ந்தவர்கள். குறிப்பாக இதில் செக்கரியா அன்று முதன்மை யானவர். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் பரிசுத்த தலத்தில் கடவூளுக்கு ஊழியம் செய்யூம் ஓர் உன்னத குரு. மேலும் ஒரு சிலர் மட்டுமே காணும் பரிசுத்த நிகழ்வூகளைப் பார்த்த பாக்கியத்தை அடைந்த ஒரு குரு.

இந்த வேளையில் மெசியா வருவார் என ஆவலுடன் இரண்டாயிரம் ஆண்டுகளாகக் காத்திருத்த தருணத்தில் வானதுhதர் கபிரியேல் இந்த இரண்டு நாயகர்களிடம் கடவூளின் செய்தியூடன் வருகிறார். இருவரும் மிகவூம் அச்சமும் கலக்கமும் அடைந்தனர். 'அஞ்சாதீர்" என்று கடவூளின் தூதர் அவர்களைச் சமாதானப்படுத்துகிறார்.

செக்கரியாவிடம், வானதூதர்கபிரியேல்,'செக்கரியா, அஞ்சாதீர், உமதுமன்றாட்டுக் கேட்கப்பட்டது. உம் வயதான மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர். நீர் மகிழ்ந்து பேருவகை கொள்வீர். அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர். அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார்;. அவர், இஸ்ரயேல் மக்களுள் பலரைத் தம் கடவூளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார்.

மரியாவிடம், வானதூதர் கபிரியேல், கடவூளின் அருளைக் கண்டடைந்துள்ளீர் இதோ, கருவூற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவூளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவூள் அவருக்கு அளிப்பார்.

இந்த இரண்டு நாயகர்களும் ஒரு முக்கியமான செய்தியைப் பெறுகின்றன, ஆனால் அவர்களின் பதில்கள் மாறுபடுகின்றன்:- 

செக்கரியா வானதூதரிடம் கேள்வி எழுப்புகிறார்: 'இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியூம்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியூம் வயது முதிர்ந்தவராயிற்றே" என்றார். என் மனைவி குழந்தையைப் பெற்றடுக்கும் வல்லமை அற்றவள்இ நாங்கள் குழந்தைகளைப் பெறமுடியாத அளவூக்கு வயதாகிவிட்டோம். செக்கரியாவின் நம்பிக்கையின்மை வெளிப்படுவதை நாம் கூர்ந்து கவனிக்கலாம்.

மரியாவின் மறுமொழியை நோக்குவோம்: அதற்கு மரியா வானதூதரிடம், 'இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்றார். இப்பதில் மேலோட்டமாகத் தெரிகிறது: 'நான் கன்னியாக இருப்பதால் இது எப்படி இருக்கும்?" இருப்பினும், மரியாவின் வார்த்தைகளைக் கருத்தில் கொள்ளும்போது, அவை நம்பிக்கையின்மையை பிரதிபலிக்கவில்லை என்பதை நன்றாகப்; புரிந்து கொள்ளமுடியூம். அவர் விளக்கம் தேடுகிறார். மனித வழியால் அல்ல, பரிசுத்த ஆவியினால் இவைநிகழும் என்று வானதூதர் விளக்குகிறார். மேலும் உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவூற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம் என விளக்குகின்றார்

இதைக் கேட்டதும் மரியாவன் பதில் ஆச்சரியமாக-அற்புதமாக இருக்கிறது. 'நான் ஆண்டவரின் அடிமை உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார். மரியா தன்னை கடவூளுடைய சீடராகப் பார்க்கிறாள். இந்த வழியில் கடவூள் தன்னை பணிசெய்ய அழைக்கின்றார் என உணர்ந்து உடநடியாக அவர் தயாராகுகின்றார். மரியா 12 வயது மதிக்கத்தக்க ஒரு குழந்தை, உளவயது போதாத ஒரு சிறுமி. அவள் எப்படி தனது வாழ்க்கையை மாற்றும் ஒரு முடிவை எடுக்க முடியூம்? என்பது ஒரு பெரும் கேள்வி. அவள் அதனுடைய எல்லா தாக்கங்களையூம் விளைவூகளையூம் புரிந்து கொள்ளமுடியாத வாழ்வின் பருவத்தில் உள்ளார். இதெல்லாம் எப்படி அறிவியல் பூர்வமாக இருக்கமுடியூம்? அவளின் கர்ப்பத்தினால், தன் சொந்த ஊரில் உருவாகும் அவதூறு, நிராகரிப்பு, அவமானம், அவள் குடும்பம் மற்றும் அவளுடைய வருங்கால கணவர் யோசேப்பு மீது எற்படுத்தும் தாக்கம் என்ன? இதெல்லாம் அவளால் அந்த வயதில் அறியமுடியாது. அவள் இந்த எல்லா காரணிகளையூம் கருத்தில் கொள்ளமுடியாதவள். எனவே அவளுடைய பதில் ஓர் எளிய மனிதராகிய வருடைய பதிலாக அமைகின்றது. நாம் மரியாவை ஓர் எளிய பெண்ணாகப் பார்ப்பதற்குப் பதிலாக, கடவூளை நம்பும் ஒரு இளம் கன்னிப் பெண்ணாக பார்க்கவேண்டும் என்பது அவரது பதில் எமக்குப் புகட்டும் பாடமாகும். 

  அதன்பின்பு தன் மகனின் பிறப்புக்காக தன்னை தயாரிக்கும் விதத்தில் தன் வீட்டிலேயே தங்க வேண்டிய அன்னை மரியாஇ தன் வயது முதிர்ந்த உறவினருக்கு உதவிச் செய்ய சென்ற செயல், தன் கருவில் வளரும் இறைமகனின் சீடராக மாறிவிட்டார் என்பதை காண்பிக்கின்றது. இறையன்பின் கனியாகப் பிறரன்பு இருக்க வேண்டும். அங்கு 'நான்" என்பதல்ல, மாறாக, தேவையிலிருப்போரே மையமாக இருக்கவேண்டும் என்பதைக் கன்னி மரியா காட்டிநிற்கின்றார். இங்கு பனிப் பூத்த மங்குலிலே மடி தாங்கிய மனுமகனைக் கொண்டு தங்கிட, இடமின்றித் தவித்த அன்னையை நினைத்துப் பார்க்கவேண்டும். நாகரிகங்கள் தோன்றிய காலத்திலும், இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து, இதோ, இறைவனின் அடிமை! என்று தாழ்பணிந்த அன்னையை நாம் முன்மாதிரியாக எண்ணிப் பார்த்தாலேபோதும் பெண்கள் தேடும் விடியலின் முன்னுரை நம் தாய் மரி என்று. சினிமா நடிகையின் பின்னே நசுங்கிச் சின்னாபின்னமாவதை விட்டு விட்டு அன்னை மரியின் காலடி நடந்தாலே நம் இல்லத்தில் இணையில்லாக் கிறிஸ்து பிறப்பினை தினம் தினம் கொண்டாடலாம் என்பது கத்தோலிக்கர்க ளுக்குப் புரியூம்.

செக்கரியா மற்றும் மரியா இருவரும் கிறிஸ்துமஸ் கதையின் மையமாக இருந்தாலும்இ கடவூள் தனது தெய்வீகத் திட்டத்தில் வெவ்வேறு நபர்கள் மூலம் இலகுவில் புரியமுடியாத மர்மமான வழிகளில் செயற்படுவார் என்பது எமக்கு எடுத்துக்காட்டுகிறது. எனவே இந்த நத்தார் காலத்தில் செக்கரியாவூம் அன்னை மரியாவூம் சவாலான மாறுபட்ட விடயங்களை நமக்கு வழங்குகிறார்கள். இந்த இரண்டு நாயகர்களுள் யாருடன் நம்மை நாம் அடையாளப்படுத்திக் கொள்ளப் போகின்றௌம். நாம் யாராக இருக்க விரும்புகின்றௌம்?

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff