கோட்டாபாய இராஜபக்ஸவினால் தூக்கி எறியப்பட்ட ஷhனி அபேசேகர மஹிந்தவின் மாளிகைக்குள் நுழைந்த கதை
ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்,
ஷhனி அபேசேகரவைக் கைது செய்தார்கள். சிறையில் அடைத்தார்கள், ஓய்வுதியத்தைப் பறித்தார்கள். பதவி இறக்கினார்கள். இலங்கையின் மிகத் திறமையானப் புலனாய்வு அதிகாரி ஒரு குப்பையைப்போல் தூக்கி எறியப்பட்டார்.
இவ்வாறு கொடுமைகள் புரிந்ததன்மூலம் இராஜபக்சைகளின் சாம்ராஜியம், ஷhனி அபேசேகர (ளூயni யுடிநலளநமயசய) என்ற அத்தியாயத்தை முற்றிலுமாக அழித்து விட்டதாக நினைத்தது. ஆனால் எந்த இராஜபக்சைக்கள் ஷhனி அபேசேகர அவர்களைப் பழிவாங்கினார்களோ அதே இராஜபக்சைக்களின் கதையை முடிக்க அதே ஷhனி அபேசேகர திரும்பி வந்திருக்கிறார். திகில் நிறைந்த இந்தக்கதையை ஆரம்பிக்கலாம். மீண்டும் அதிகாரத்திற்கு வந்திருக்கக் கூடிய ஷhனி அபேசேகரவிற்கு முன்னால் இரண்டு பிரமாண்டமான சவால்கள் காத்திருக்கின்றன:-
காத்திருக்கும் சவால்கள்:-
முதலாவது: இந்துனேசியாவில் கைதாகி இப்போது ஊஐனு காவலில் இருக்கும் பாதாள உலகக்கும்பல் - அரசியல் வாதிகளினுடைய ஏவல் நாய்களாக இருந்த இவர்கள் - இப்போது தாங்கள் யாருக்காக வேலைசெய்தோம் என்ற உண்மைகளைக் கக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்களின் வாக்குமூலம் இலங்கையின் பழம்பெரும் தலைகளின் முகத்திரையைக் கிழிக்கப்போகிறது. இவர்களோடு சம்பந்தம் வைத்திருந்த அரசியல் வாதிகளும் ஓடி ஒழிந்துகொண்டு இருப்பதால் இவர்கள் தமக்குள்ளேயே அடித்துச் செத்துகொண்டு இருக்கிறார்கள். மொத்தமாய் எல்லாரையும் கூண்டோடு அள்ள ஊஐனு விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றது.
யார் இந்த மௌலானா:-
இரண்டாவது: இதைவிட பெரிய சவால்: ஈஸ்ரர் குண்டுத் தாக்குதலின் முக்கிய சாட்சியான ஹசீர் அசாத் மௌலானாவை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவருவது. 270 அப்பாவிகளின் உயிரைப் பறித்த ஈஸ்ரர்த் தாக்குதல் ஓர் அரசியல் சதி என்கிற மௌலானாவின் வாக்குமூலம் இலங்கையின் சரித்திரத்தையே மாற்றக்கூடியது. அசாத் மௌலானா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், இப்போது பல்வேறு சட்டச்சாட்டுகளின் நிமிதம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருப்பவருமான பிள்ளையானின் இணைப்புச் செயலாளராயிருந்தவர். மௌலானா இலங்கையில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக்கூறி சுவிஸ்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கிறார். அரசியல் தஞ்சம் கோரியிருப்பவரினுடைய கோரிக்கை நிறைவேற்றப்பட்டு வழங்கப்படும் பாஸ்போட்டில் அச்சுறுத்தல் உள்ள நாட்டைத் தவிர மற்ற நாடுகளுக்குச் செல்ல முடியும். ஆகவே சற்றுச்சிக்கலான விவகாரம் இது. மௌலானாவை மீண்டும் எந்த வழியிலேயேனும் நாட்டுக்குள் கொண்டுவரும் ஏற்பாடுகளையும் ஊஐனு செய்து கொண்டிருக்கிறது. மௌலானா எப்படியும் அழைத்து வரப்படுவார் என்று அமைச்சர் விமல் இரத்நாயக்கவும் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
ஷhனி அபேசேகரவின் திரும்பி வருகை:-
ஷhனி அபேசேகர் திரும்பி வந்திருக்கிறார். ஆனால் அவருடைய முதல் அடி எங்கே விழுந்திருக்கிறது தெரியுமா? இராஜேபக்சைக்களின் கோட்டையிலேயே விழுந்திருக்கிறது. மஹிந்த இராஜேபக்சையினுடைய ஏக்கர் கணக்கான ஆடம்பரபங்களா இனி இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஊஐனுக்கு உடையதாக மாறியிருக்கிறது. இது ஒரு மிக தெளிவான செய்தி. இனி உங்களின் கோட்டைக்குள் இருந்தே உங்களை வேட்டையாடுவோம் என்கிற ஒரு ஸ்மார்ட்டான இராஜதந்திரம். ஆனால் ஒரு சாதாரண மனிதரால் இப்படி இவ்வளவு பெரிய சத்திகளை எதிர்க்க முடிகிறது. கையே வைக்க முடியாது என்று இலங்கையில் உள்ள 99மூ நம்பப்பட்ட முன்னாள் சனாதிபதி ரணிலின் மீதும் கை வைத்தார். சிறையிலடைக்கப்பட மூளையானவர் ஷhனி அபேசேகர எனலாம். எனவே முதல் பந்திலிருந்தே சனத் ஜெயசூரியாவின் சிக்சர்களை நாம் மிக நீண்ட நாள்களுக்குப் பின்பு கண்டுகளிக்கலாம் போலவும். சனத்தாட்டம் சல்லடைபோடும். போடவேண்டும்.
யார் இந்த ஷhனி அபேசேகர:-
இலங்கை பொலீஸ் திணைக்களத்தில் ஹொலக் ஹோம்ஸ் என்று அழைக்கப்படும் கீர்த்திமிகு பொலீஸ் அதிகாரியான ஷhனி அபேசேகர, அனுர குமார திசாநாயக்கா சனாதிபதி அவர்களால் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் பொலீஸ் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவருக்குக் குற்றப் புலனாய்வு, பகுப்பாய்வு மற்றும் குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதில் மிகத்திறன்படத் தன்னுடைய பணியைமுடித்த ஷhனி அபேசேகர மீண்டும் தனக்குத் தோதான காக்கிச் சட்டையைப் போட்டுக்கொண்டு ஊஐனு பணிப்பாளராய் அனுர குமார திசாநாயக்காவுக்குச் சல்லூட் அடித்து நடந்தபோது ஷhனி அபேசேகரவின் இரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விசிலடித்து கொண்டாடினார்கள். ஷhனி அபேசேகர திரைப்படக் கதாப்பாத்திரம் அல்ல. அவர் நிஜ சாதனையாளர்;.
1986ஆண்டு சப்;பின்ஸ்பெக்டராய் பொலீஸ் திணைக்களத்தில் சேர்ந்த ஷhனி அபேசேகர பொலீஸ் விசேட அதிரடிப்படையிலும் சனாதிபதி பாதுகாப்புப் படையிலும் பணிபுரிந்தார். அவரின் துணிச்சல்மிகு சேவை அவரை 1999ஆண்டு ஊஐனுக்கு உள்ளீர்க்க வைத்தது. ஷhனி அபேசேகர என்றால் எம் நாட்டு மக்களுக்கு யார் என்று புரிய வைக்கும் அளவுக்கு அடுத்து வரும் குற்றங்களும் சம்பவங்களும் விசாரணைகளும் அமைந்தன.
சட்டண பத்திரிகையின் எழுத்து:-
ஷhனி அபேசேகர 1999ஆண்டு முதல் இலங்கையில் மெல்ல பிரபல்யமடையத் தொடங்கினர். அப்போதைய சனாதிபதி சந்திரிக்காவுக்கும் நடிகர் சனத் குணத்திலக்காவுக்கும் தொடர்பு இருப்பதாக அப்போது சிங்கள வாசகர்கள் மத்தியில் பிரபலமான விடயத்தைச் சட்டண பத்திரிகை எழுதியது. அந்நாளில் சனத் குணத்திலக்காதான் சந்திரிக்காவுக்கு எல்லாமே. மனேஜர், இணைப்புச் செயலாளர், பி.ஏ மாதிரி. சட்டண சந்திரிக்கா அரசினுடைய ஒவ்வொரு ஊழலையும் அச்சமின்றி எழுதித் தள்ளியது. அவுஸ்ரேலியாவில் இருக்கும் குருபரன் என்ற கோடிஸ்வரர் சனல்-9என்ற தொலைக்காட்சி சேவையை இலங்கையில் தொடங்க சனத் குணத்திலக்காவை அணுகியதாகவும் அனுமதிப்பத்திரம் பெற்றுத்தந்தால் பதிலுக்கு 20மில்லியன் டொலர் இலஞ்சம் தர குருவரன் ஒப்புக் கொண்டதாகவும் சந்திரிக்காவும் அத்தொலைக்காட்சி சேவையில் காமினி இராஜனாயகம் என்ற பினாமி பெயரில் பங்குதாரராக விருப்பியதாகவும் சட்டண அப்போது எழுதியது. இதன் விழைவுகள் மிகப் பயங்கரமாக அமைந்தன.
கொலைகளும் ஷhனி அபேசேகர மேற்கொண்ட நடவடிக்கைகளும்
பர்த்தகானே சஞ்சிவ என்ற அரச அனுசரணை பெற்ற அந்நாளின் பாதாள உலக தாதவால் சட்டண பத்திரிகை ஆசிரயர் ரோஹன குமார படுகொலை செய்யப்பட்டார். பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய அந்த படுகொலையின் சூத்திரதாரி பத்தகானே சஞ்சிவ என்று, இளம் உப பொலீஸ் பரிசோதகரான ஷhனி அபேசேகர கண்டுபிடித்தபோது உடனே விசாரணை நிறுத்தப்பட்டது. இதே போல ஒன்றுதான் 2005ஆண்டு ராஜிகிரிய ரோயல் பார்க்கில் நடந்த சுவீடன் யுவதியான ஈமான் யோன்ஸ் படுகொலை. சாட்சியே இல்லாமல் நடந்தேறிய அந்த பயங்கரத்தினுடைய பின்னணியை விசாரித்தவரும் ஷhனி அபேசேகர தான். ஆங்காங்கே பதிந்திருந்த கைரேகைகள் மூலம் குற்றவாளி யூட் மஹாவின் கையில் விலங்கைப் பூட்டினார் ஷhனி அபேசேகர. பம்பலபிட்டி கோடிஸ்வர வர்த்தகர் சியாம் படுகொலையில் னு.ஐ.பு.வாஸ் குணவர்த்தனவை உள்ளேதள்ளிய பெருமையும் ஷhனி அபேசேகரவுக்கே. சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமத்துங்கவின் கொலை, நாடாளமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் கொலை, அங்குலானய இரட்டை கொலை, உடத்தலவின முஸ்லீம் இளைஞர்கள் கொலை, பார்தலக்ஸ்மன் கொலை, 11தமிழ் மாணவர்கள் கொலை - 2007-2009காலத்தில்11 இளைஞர்கள் கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், றக்கி வீரர் வசீன் தாஜுதீன் கொலை, குடிதண்ணீர் கேட்டுப் போராடிய ரத்துப் பஸ்வல மக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் பின்னணி, ஊடகவியலாளர்களான போத்தல ஜாயந்த, பிறகீத் எக்யெலிகொடா மற்றும் கேய்த் நோயர் போன்றோரின் மீதான தாக்குதல்கள் என்று இலங்கையினை ஒரு பாதாள தேசமாக்கிய அத்தனை குற்றங்களின் பையில்களையும் ஷhனி அபேசேகர திறந்தவைத்தார்.
வெளியே போ கழுதை| என்ற ரணிலின் கோசம்:-
2015-2019கால ஆட்சியில் ஷhனி அபேசேகர ஊஐனுபணிப்பாளராய் நியமிக்கப்பட்ட போதிலும் அன்றைய ஆட்சியாளர்கள் கடமையைச் செய்ய ஒத்துழைக்கவில்லை. மத்திய வங்கி கொள்ளை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளப் போனபோது ஷவெளியே போ கழுதை| என்று பிரதமர் ரணிலினால் விரட்டப்பட்டார் ஷhனி அபேசேகர. இப்படித்தான் அன்று கள்ளன் பிடிப்பதாய் ஆட்சியைக்கோரிய கோமாளிகளின் தர்பார் அமைந்தது.
கோட்டாபாய இராஜபக்ஸ சனாதிபதியும் அவரது செயலும்:-
ஷhனி அபேசேகர 2019ஆண்டு நடந்த ஈஸ்ரர் குண்டுவெடிப்பானது அரசியல் அதிகாரத்தை மேற்கொள்வதற்காக நடத்தப்பட்ட ஒரு சதி வலையா என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தார். கோட்டாபாய தேருதலில் வெற்றிகொண்டவுடன் அவர்களுக்கு எதிராக விசாரணைகள் நடாத்திய பொலீஸ் உயர் அதிகாரிகள் தூக்கிப் பந்தாடப்பட்டார்கள். கோட்டாபாய சனாதிபதியாகி பதவிப்பிரமானம் எடுத்ததும் பிரதமரையும் கபினெட்டையும் நியமிப்பதை ஒத்திப் போட்டுவிட்டு செய்த முதல் காரியமே ஷhனி அபேசேகரவை அப்படியே தூக்கிக் காலிக்கு இடம்மாற்றம் செய்து காலி செய்தார். ஆயினும் ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகளை மிகவேகமாகப் இனங்கண்டு கைதுசெய்தமைக்காக சர்வதேசரீதியில் ஷhனி அபேசேகர புகழப்பட்டார். இன்ரப்போலிடமிருந்தும் புகழினைப் பெற்றுக்கொண்டார் என்பதும் இங்கு குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்
கெத்தாய் இருந்த ஷhனி அபேசேகர கடிதம் பிரிக்கும் ஒரு பியோன் தரத்துகு மிதித்து எறியப்பட்டார். ஷhனி அபேசேகர மற்றும் சி.ஐ.டி அதிகாரிகளின் இடமாற்றங்களால் ஈஸ்ரர் தாக்குதல் உட்பட மொத்தக் குற்ற விசாரணைகளும் நிலைகுலைந்த போயின. அனைத்து வழக்குகளிலுமிருந்து இராஜபக்சைகளும் எடுப்பிடிகளும் விடுதலையானார்கள். வேறுவழியின்றி பணி ஓய்வு பெற்றார் ஷhனி அபேசேகர. அனாலும் கோட்டாபாய விடுவதாகவில்லை. வாஸ் குணவர்தனவின் கேசை மையமாக வைத்து சேவையிடை நிறுத்தம். மூன்று வருடம், ஆறுமாதம், ஓய்வுதியம் இடை நிறுத்தம், பத்துமாதச்சிறை என்று தொடந்து பழிவாங்கல்கள். கோட்டாபாய மக்கள் எழுச்சியால் தப்பி ஓடியபிறகு, ரணில் சனாதிபதியான போதும் ஷhனி அபேசேகர விடயத்தில் பாராமுகமாகவே இருந்தார். அதுமட்டமல்ல கோட்டாபாய காலத்தில் மூடப்பட்ட எந்த ஒரு பையிலும் திறக்கப்படவே இல்லை. ரணில் மொத்தத்தில் இராஜபக்சைகளின் ஏஜன்ராய்ப்பணி செய்துவிட்டு, சனாதிபதித் தேருதலில் தோற்றுப்போனார். கடைசியில் பூமரம் மீண்டும் ஷhனி அபேசேகர பக்கம் வந்தது.
ஷhனி அபேசேகர அவர்களின் அதிரடி முடிவு:-
யாரோடு சேர்ந்தால் கணக்குத் தீர்க்கமுடியுமோ அவர்களோடு சேரத் தீர்மானித்தார் ஷhனி அபேசேகர. சனாதிபதி தேருதலின் ஓய்வு பெற்ற பொலீஸ் அதிகாரிகள் என்ற விசேட மாநாட்டைக் கூட்டி அதற்குத் தலைமையும் தாங்கி, அனுரவிற்குத் ஆதரவளித்தார் ஷhனி அபேசேகர. அவர் எந்த ஒரு தலைவருடனும் சமரசம் செய்து கொண்டதில்லை. இது ஷhனி அபேசேகர அவர்களின் முறை. இனித்தானே பார்க்போறாய் காலியின் ஆட்டத்தை என்ற விறுவிறுப்பு இரகம் அந்தமுறை எந்த இராஜபக்சைக்களால் ஷhனி அபேசேகர பழிவாங்கப்பட்டாரோ அந்த இராஜபக்சைக்கள் நாடாளமன்றத் தேருதல் போட்டியிட முடியாத அளவுக்கு ஓடி ஒழிந்துகொண்டு இருக்கும் நிலையில் ஷhனி அபேசேகர வேலையை ஆரம்பித்திருக்கிறார். என்ன ஒரு பவபுல்லான கர்ம வினை. இந்தத் தடவை எந்த அரசியல் தலையீடும் இருக்காது. ஷhனி அபேசேகர இராஜபக்சைகளுக்குச் சவால் விடத்தயாராகிக் கொண்டிருக்கிறார் என்பதையே அவரது நடவடிக்கைகள் கட்டியம் கூறுகின்றன.
முடிவு:
இராஜபக்சைக்கள் பிறைவேட் லிமிடட். ரணில் உட்பட 90மூ அரசியல்வாதிகளை ஈரேழு ஜென்மத்திற்கும் பகைத்து கொள்ளவேண்டிய நிற்பந்தம் ஷhனி அபேசேகரவுக்கும் அவர் வழியில் செல்லப்போகும் நேர்மையான பொலீஸ் அதிகாரிகளுக்கும் ஏற்படலாம். ஷhனி அபேசேகரவின் சேவையில் இதுதெல்லாம் புதிய விடயம் அல்ல. ஷhனி அபேசேகர எப்படி அடித்தாடப்போகிறர் என்பதை அவருடைய அடுத்தடுத்த நகர்வுகள் தீர்மானிக்கும். (S.K. Kiruththikan வலையொளிப் பதிவிலிருந்தும் www.lankaenews.com , Daily FT, News 1st பதிவிலிருந்தும் தொகுக்கப்பட்டது)