Friday, December 19, 2025

அயர்லாந்து நாட்டில் காலநிலை தூதுவர் (Climate Ambassador) விருது பெற்ற இலங்கைத் தமிழர்


யாழ்மாவட்டத்தின் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகக்கொண்ட இலங்கை தமிழரான ஜெயால்ட் அன்ரனி இராசரத்தினம் அவர்களுக்கு அண்மையில் அயர்லாந்து நாட்டில் அவரது காலநிலை மாற்றம் (Climate change) மற்றும் காலநிலை நீதி (Climate Justice) தொடர்பான பணிகளை அங்கீகரித்து. The National Trust for Ireland (An Taisce)அமைப்பு காலநிலை தூதுவர் Climate Ambassador  என்ற விருதை வழங்கியுள்ளார்கள். 

யாழ் சென்ஜோண் கல்லூரியில் க.பொ.த உயர்தர கல்விபயின்ற ஜெயால்ட் அன்ரனி தனது முகமைத்துவப் பட்டத்தினை யாழ்பல்கலைக் கழகத்தில் பெற்றுக்கொண்டவராவார். வணிக நிர்வாகம் மற்றும் இணையவழி சந்தைப்படுத்தல் துறையில் முதுமானி பட்டதாரியூம் ஆவார். ஜெயால்ட் அன்ரனி அவர்கள் ‘‘Turning poultry waste into Rural Wealth   மற்றும் Local Voices Drive Circular Transformation’ தொடர்பான ஆய்வூக் கட்டுரைகளையூம் எழுதி வெளியிட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ் உயரிய விருதினைப் பெற்று ஒரு வரலாற்றுச் சாதனையை படைத்தவர் ஓர் இலங்கைத் தமிழர் என்பதே எமது சமூகத்திற்கு மிகுந்த பெருமையும் ஊக்கத்தையும் அளிக்கின்றது. 

இந்த விருது காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களுக்கு எதிராக அவர் மேற்கொண்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிலைத்த சமூக வளர்ச்சிக்காக செய்த முயற்சிகள் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச அளவிலான பங்களிப்பு அத்துடன் Local Tidy Towns  குழுக்களுடன் இணைந்து செய்த தொண்டு மற்றும் சமூக ஈடுபாட்டு பணிகள் Organic Farms and Community Gardens  ஆகியவற்றை ஊக்குவித்து இந்த விருது வழங்கப்பட்டது.

ஓர் இலங்கைத் தமிழர் இவ்வாறு உலக அரங்கில் குறிப்பாக ஐரோப்பிய அயர்லாந்தது  நாடு போன்ற முன்னேற்ற நாடுகளில் மதிப்புமிக்க விருதைப் பெறுவது புலம்பெயர் தமிழர்களின் அறிவுத் திறன் சமூகப் பொறுப்பு உணர்வு  உலகளாவிய பிரச்சினைகளில் எங்களின் பங்களிப்பு மற்றும் முன்னணியில் செயல்படுகிறார்கள் என்பவற்றை வெளிப்படுத்துகிறது என்பது எமக்குப் பெருமையாகும். இந்த சாதனை தனிநபரின் வெற்றியைத் தாண்டி முழு இலங்கையரின் பெருமையாக கருதப்பட வேண்டும்.

இது இளம் தலைமுறைக்குக் குறிப்பாக மாணவர்களுக்கு சுற்றுச்சூழலைக் காக்கும் பொறுப்புணர்வையும் சமூக நலன் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடும் ஊக்கத்தையு ம் அளிக்கிறது. 

இது தமிழர்களும் உலகத்தை வழிநடத்த முடியூம்  என்பதற்கான உறுதியான சான்றாகும். இந்த சாதனைமூலம் திரு. ஜெயல்ட் அன்ரனி அவர்கள் காலநிலை மாற்றம் என்பது அரசுகள் மட்டுமே கவனிக்க வேண்டிய விடயமல்ல். ஒவ்வொரு குடிமகனும் பொறுப்பேற்க வேண்டிய ஓர் உலகளாவிய சவால் என்ற எண்ணத்தை சமூக மட்டத்தில் வலியுறுத்தி வருகிறார். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சமூக அமைப்புகளை இணைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் அவரது முயற்சிகள் பாராட்டுக்குரியவையாக அமைந்துள்ளன.

பூமியை பாதுகாப்போம் - எதிர்காலத்தை காப்போம். -சுற்றுச்சூழலைக் காப்போம் - மனிதகுலத்தின் எதிர்காலத்தை பாதுகாப்போம்.

(இதனை கீழ் உள்ள இணைய முகவரியில் பாரவையிடமுடியும்:) 

https://www.virakesari.lk/article/233858



வேட்டையாடி விளையாட இரும்புக் கரம் வேண்டும்

ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இலங்கையின் பிரபல பாதாளத் தாதாக்களில் ஒருவரும்இ 19 கொலை வழக்குகளுடன் தொடர்புடையவருமான  கனேமுள்ள சஞ்சிவ புதுக்கட நீதிமன்றத்தில் கடந்த மாசி19 அன்று  சட்டத்தரணி வேடத்தில் வந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டமை எமக்குத் தெரியூம். சமிது தில்சான் என்ற இந்த துப்பாக்கிதாரியூம் இசாரா செவ்வந்தியூம் குற்றவியல்களின் ஒழுக்கக் கோவைச் செயன்முறைச் சட்டப்புத்தகத்திற்குள்(Code of Criminal Procedure) துளைப் போட்டு துப்பாக்கியை மறைத்து மிக தந்திரமான முறையில் நீதிமன்றத்தின் வளாக்கத்திற்குள் வந்து இந்தக் கொலையினை செய்திருக்கின்றனர். இந்தக் கொலையினுடைய பங்குதாரர்களாக இவர்களுடன் பலர் சம்மந்தப்பட்டது நாம் அறிந்ததே. சமிது தில்சானைச் செவ்வந்தி வழி நடத்தஇ செவ்வந்திக்குக் கெகல் பத்திரப் பத்மே மூலையாய் இருந்தார். கெகல் பத்திரப் பத்மேஇ பக்கோசமன்இ பானந்துர நிலங்கஇ தெம்பிலி லகிருஇ குடு சலிந்த போன்றௌர் இந்தோனேசியாவிலும் அதேபோல் இசாரா செவ்வந்திஇ கம்பஹா பபாஇ நுகேகொட பவிஇ ஜே.கே பாய்இ ஜப்னா சுரேஸ்இ செவ்வந்தி டம்மிஇ நந்தக்குமார் ஆகியோகியோர் நேபாளத்திலும் கைதாகிஇ அழைத்து வரப்பட்டபின்னர்இ விசாரணைகள் வேகப்படுத்தப்பபட்டிருக்கின்றன. 

செவ்வந்தியைச் சட்டத்தரணி என்று நினைத்துஇ ஒரு பெண் வந்து தன்னுடைய வழக்கை ஒப்படைக்கமுன் வந்ததாகவூம். அவர் வேறொரு சட்டத்தரணியை கை காட்டியதாகவூம் பலதரப்பட்ட பாட்டிக் கதைகள் ஊடகங்களில் பரப்பப்பட்டன. எது எப்படியோஇ செவ்வந்தியின் சட்டத்தரணிக் கதாபாத்திரம் சறுக்காமல்; பொருந்திருயிருக்கிறது. ஒரு குற்றத்தைச் செய்யப் போகிறௌம் என்ற எந்தவித பதட்டமும் இல்லாமல் அவருக்கு இத்தனை தத்துரோபமாகக் கறுப்புக் கோட்டணிந்து நடிக்க ஒரு சட்டத்தரணியால் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்.  செவ்வந்திக்கும் சமிது தில்சான் என்ற சூட்டருக்கும் வாகனத்தில் செல்லும்போது தடங்கள் இல்லாமல் செல்ல சட்டத்தரணி அனுமதிப்பத்திரம் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.   பிரச்சினை இல்லாமல் நீதிமன்றத்திற்குள் வந்து கொலையை அரங்கேற்றிவிட்டுச் செல்ல சட்டத்தரணி அடையாள அட்டை செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது அது மட்டுமல்லாமல் சட்டத்தரணிகளுக்கே உரிய இரு கழுத்துப் பட்டிகளையூம் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் இந்த நாசகாரத்தின் ஆணிவேராக இருந்த 55வயதான கடவத்தையைச் சேர்ந்த ஒரு பெண் சட்டத்தரணி கைது செய்யப்பட்டிருக்கிறார். அது மட்டுமல்ல செவ்வந்திக்கு குற்றவியல்களின் ஒழுக்கக் கோவை செயன்முறைச் சட்டப்புத்தகத்தையூம் இரண்டை இந்தச் சட்டத்தரணிதான் வழங்கியிருக்கிறார். எதற்கு இரண்டு புத்தகங்களை வழங்கினார் என்று தெரியவில்லை. ஆனால் இருப்பதிலேயே தனக்குப் பாதுகாப்பான புத்தகத்தை செவ்வந்தியே தேர்வூ செய்து கொள்ளட்டும் என்று அந்த இரண்டு புத்தகங்களையூம் வழங்கியிருக்கக்கூடும். விசாரணைகள்தான் இதன்னுடைய பின்னணியையூம் உண்மையையூம் வெளிப்படுத்தவேண்டும். 

சட்டத்தரணியருடைய பாதாள தொடர்புகள் இப்படி இருக்க இன்னுமொரு மிகச்சுவாரிசமான செய்தி அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றும்  சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர் மிக கூருணர்வானஇ இரகசியமான பொலிஸ் நடவடிக்கை களை எல்லாம் வலையயொளி ஒருவருக்கு வழங்கி இருப்பதாகவூம் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் பொலிஸ்மா அதிபர் பிரியந்த விஜயசூரியவிற்கு எதிராக அபதூறு பரப்ப முன்னின்று செயற்பட்டதற்கும் எதிராக சிஐடியில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பொலிஸ்மா அதிபர் பிரியந்த விஜயசூரிய பொலிஸ் கமிசனிடமும் சிஐடியிடமும் இந்த சிரேஸ்ட டி.ஐ.ஜிக்கு எதிராக முறைப்பாடு செய்திருக்கிறார். அதிகாரியை இடமாற்றம் செய்து உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு கோரியிருக்கிறார். இதேவளை வலையொளியாளருக்கும் சிரேஸ்ட டி.ஐ.ஜிக்கும் இடையில் நடக்கும் தொலைபேசி உரையாடல்களும் சமூக ஊடகங்களில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. குருநாகல் பகுதியைச் சேர்ந்த வலையொளி யாளரிடம் சி.ஐ.டி வாக்கு மூலங்களை எடுத்திருக்கிறது. இந்தநிலையில் சிரேஸ்ட டி.ஐ.ஜியிடம் முறையான விசாரணைகளை தொடர இருக்கிறது.


பொலிஸ்மா அதிபர் தன்னுடிய காத்திரமான நடவடிக்கைகளின்மூலம் மக்கள் மத்தியில் பொலிஸ் திணைக்களத்தின்மீது கீர்த்தியையூம் மதிப்பையூம் ஏற்படுத்த பெரும் பங்காற்றியவர். அவரைச் சுற்றி இப்படி ஒரு சதி முயற்சி நடந்திருப்பதாகச் சொல்லப்படும் நிலையில்தான் ஒரு விடயம் ஞாபகத்துகு வருகிறது. இந்தோனேசியாவில் கெகல் பரத்திர பதமைக் குழுவை வேட்டையாடி விளையாட ஏ.எஸ்.பி ரோஹான் ஒலுகல்ல தலைமையிலான குழு மிகுந்த கவனத்துடனும் நிதானத்துடனும் இந்தோனேசியாவூக்குப் புறப்பட்டுச் சென்றபோது அதுவூம்  ரோஹான் ஒலுகலை யப்பானுக்கு ஒரு கற்கைக்குச் செல்வாதாகச் சொல்லிவிட்டுச் சென்ற போதும் உள்ளிலிருந்த கறுப்பாடுகள் மூலமாக பொலிஸ் நடவடிக்கை வெளியே கசிந்து விட்டது. இதனால்தான் கெகல் பத்திர பத்மே குழு ஓடித்தப்ப முயன்றது. ஆனால் இந்தோனேசியா பொலிஸ்இ மற்றும் சர்வதேசப் பொலிசாரின் உதவியூடன் அவர்களை ரோஹான் ஒலுகலை குழுவினரால் மடக்கிப் பிடிக்க முடிந்தது. 

இதேபோல ஒன்று தான் பாதாள உலக பேர்வழி ஒருவருக்கு ஆயிதம் கொடுத்த விவகாரம். ஜப்பனா என்று அழைக்கப்படும் பாதாள உலக அடியாள் ஒருவர் கடந்த ஐப்பசி 17 திகதி விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு களுத்துறை தெற்;குப் பொலிஸ் நிலையத்தில் ஒப்பிடைக்கப்பட்டார். ஜப்பனாவின் படுக்கையறையில் ஒழித்து வைக்கப்பட்டு இருந்த உள்@ர் மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிகள்இ தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலதிக விசாரணைகளின்போது அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியையூம் அவமானத்தையூம் ஏற்படுத்தியது. களுத்துறைத் தெற்குப் பொலிஸ் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி ஒருவர் வழங்கிய ஆயிதங்கள்தான் இவை என்றார் ஜப்பனா. இந்த முன்னாள் பொறுப்பதிகாரியூடன் உமக்கு என்ன தொடர்பு என்று கேட்டு அவருடைய கைத்தொலை பேசியைச் சோதனை செய்தபோது நம்பவே முடியாத அதிர்ச்சி காத்திருந்தது. வெறுமனவே ஒரு பாதாள அடியாளான ஜப்பனாவூடன் சேர்த்துகொண்டு இந்த பொறுப்பதிகாரி உண்டு குடித்து மகிழ்ந்து மது மயக்கத்தில் இருக்கும் விதம்விதமான புகைப்படங்கள் தொலை பேசியில் நிறைத்திருந்தன.  இது தொடர்பாக இப்போது விசாரணைகள் நடந்து வருகின்றன.  

இங்கு வேடிக்கையை நாம் நோக்கினால் ஒரு பொலிஸ் அதிகாரி தன்னுடிய நண்பரான நிழல் உலக தாதாவூக்குத் துப்பாக்கி வைக்கும் களஞ்சியத்திலிருந்து துப்பாக்கிகளை எடுத்துக் கொடுக்கிறார்இ ஒரு சட்டத்தரணி பாதாள ஜோடி ஒன்றை ஹொலிவூ+ட் படம் ஒன்றிற்குத் தயார் செய்வதுபோல சட்டத்தரணி வேடம் அணிவித்து ஒப்பனை செய்து சட்டப் புத்தகத்தையூம் வழங்கி அச்சமூட்டுகிறார். இராணுவ முகாமொன்றில் இருந்த 73 ரீ-56 துப்பாக்கிகளில் 35 துப்பாக்கிகள் மாயமாகியிருக்கின்றன. கொமாண்டோ ஒருவன் ஓர் இலட்சம் தோட்டாக்களை பாதாள உலகத்துகு வழங்க பேரம் பேசுகிறார். பெயர்போன கிரிமினல் ஒருவருக்கு புறக்கோட்டையில இருக்கும் புத்தகம் விற்பனை செய்யூம் ஒருவருடைய கை விரல் அடையாளத்தை வைத்து மூன்று பாஸ்போட்டுகளைச் செய்து கொடுத்திருக்கிறார்கள். 2008 ஆண்டில் தயாரிக்கப்பட்ட கார் ஒன்று 2003ஆண்டில் பதிவூ செய்யப்பட்டிருக்கறது. இதெல்லாம் உணர்த்துவது என்ன? பாதாள உலகத்தில் இருப்பவர்கள் எல்லாம் வெறும் முட்டாள் கூட்டம் கிடையாது. இவர்களில் பெருமளவனவர்கள் கல்வியில் சாதாரணதரம்கூட சித்தி அடையாத வர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு நாடாளமன்றத்தில் ஆள்கள் இருக்கிறார்கள். நீதிமன்றத்தில் ஆள்கள் இருக்கிறார்கள். பொலிசில்இ இராணுவத்தில்இ சிறைச்சாலையில்இ போதைப்பொருள் தடுப்புபிரிவில்இ இமிக்ரேசனில்இ மோட்டார்வாகனப் பதிவூ திணைக்களத்தில் என்று செல்வாக்கான நபர்கள்; இருக்கிறார்கள். இவர்களும் ஒரு பாதாள அரசை நிறுவி இருக்கிறார்கள். இந்தப் பாதாள அரசானது நிஜ அரசைவிட வேகமாக இத்தனை காலமும் இங்கியது. இப்போது நிஜ அரசு இவர்களுக்கு எதிராகப் போர் தொடுக்கப்போக இந்த கறுப்பு பொறிமுறை தாறுமாறாய் சிதறுண்டு போயிருக்கிறது. ஆனால் இன்னமும் முழுமையாய் ஒழிக்கப்படவில்லை. அப்படி ஒழிக்க முற்;படும்போதுதான் எண்ணற்றபல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. 

இதனால்தான் தோல்வி அடைந்த ஒரு கும்பல் நம்பம்பர் மாதம் 21-ஆம் திகதி நிகழ்வை அரங்கேற்றியிருந்தது. கடந்த காலங்களில் நாட்டில் எங்கே அதிகம் போதைப்பொருள் பிடிப்பட்டன என்றும் எந்தக் கட்சியின் உறுப்பினர்களின் பெயர்கள் இதில் அதிகம் பேசப்பட்டன என்றும் எல்லாருக்கும் தெரியூம். அவர்கள்மிகுந்த அதிர்ச்சிக்குளாகி பதட்டத்தில் இருக்கிறார்கள். இப்படியே இந்தப்போதை மற்றும் பாதாளமாப்பியாவூக்கு எதிரான நடவடிக் கைகள் தொடர்ந்து மொத்த தேசமும் துப்பரவானால்இ தம் அரசியல் இருப்பு நாறிப்போய்விடும் என்று அஞ்சுகிறார்கள். இதனால்தான் இத்தனை நாள்களாய் மூர்ச்சையாகியிருந்த இனவாதிகளும் கூட மெல்ல மெல்ல தலையெடுக்கப் பார்க்கிறார்கள். ஞானசாரதேரர்இ ஊடக சந்திப்பு என்ற பெயரில் பழையபடி வதந்திப்பரப்பத் தொடங்கிருக்கார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் ரங்கத் திசானாயக்கவை எப்போது பார்த்தாலும் கடிந்து கொள்கிறார்கள். வாய்க்கும் மூளைக்கும் சம்மந்தமில்லாமல் பேசுவதில் விற்பன்னராக இருக்கும் உதய கம்பன்பில தன்னை கைது செய்யக்கூடும் என்று அஞ்சி பாங்கொக்கில் போய் ஒழிந்துவிட்டு வந்து எந்தவித மனச்சாட்சியூம் இல்லாமல் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின்மீது தாக்குதல்தொடுத்து அதில் பணியாற்றக்கூடிய நேர்மைமிகு அதிகாரிக ளிடத்தில் ஒருவித அழுத்தத்தை பிரையோகிக்கின்றார். விமல்விரவன்ச இலங்கையினுடைய பொருளாதார விழிம்பில் அரும் தொண்டாற்றிய மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் விரசிங்கமீது சொத்தக்குவிப்புக் குற்றச்சாட்டை முன்வைக்கிறார். இதே விமல் விரவன்சவிற்கு எதிராகச் சொத்துகுவிப்பு வழக்கு நடந்துகொண்டிருக்கும் நிலையில்தான் நந்தலால்மீது இவர் பழிபோடுகின்றார். எப்போதும் இனவாத மாயைக்குள் நாட்டைத்தள்ளி கற்பனைக்கதைகள் சொல்லிவாழும் விமல் விர வன்சவின் வரலாற்றை நாம் அறிவோம். 

முஸ்லீம் தாதியருக்குப் பணியாற்றுவதில் எந்தவித சிக்கலும் இல்லைஎன்றும் அவர்கள் தலைமூடிய நிலையில் தாதியர் ஆடைகளுடன் பணிசெய்யலாம் என்றும் அமைச்சர் விஜித்த கேரத் சொன்னதை வைத்து ஒர பிரளயமே மூண்டிருக்கிறது. கடந்த காலத்தில் மகிந்த இராஜபக்சையின் வலக்கரமாக இருந்த ஆனந்த தேரர் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்திருக்க சமூகவலைத்தளங்களில் மிகத் துவோசமான கருத்துகள் எழுப்பப்படுகின்றன. பொலிஸ்மா அதிபருக்கு எதிராகஇ சிஐடி பணிப்பாளர் சானி அபயசேகரவிற்கு எதிராகஇ பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவிற்கு எதிராகஇ பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்தினவிற்கு எதிராகப் பொய்யூம் புரளிகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதை எல்லாம் பார்க்கும்போது கடந்த காலங்களைப்போல இனத்துவேசத்தையூம் புனைவூகளையூம் பரப்பி அரச இயந்திரங்களை மௌனித்துப் போகச்செய்யூம் ஒரு சதிமுயற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறதா என்று நாம் சந்தேகம் எழுப்பலோம்.  பாதாளக் கும்பலின் குருநாதர்கள் போதை வலையமைப்புக்களை வழிநடத்தக்கூடிய சர்வதேச- சுதேச தாதாக்கள் இலங்கைகைஇ போதையற்ற குற்றச்செயல்கள் அற்ற சுபிட்சம் நிறைந்த நாடாக மாறுவதற்கு ஒருபோதும் விடப்போவதில்லை. அவர்களுக்கு இந்தநாடு சுடுகாடாய்ப் போனாலும் பரவாயில்லை. தங்களுடைய போதைப் பாதாளச்  சாம்பிராட்சியம் தளைக்கவேண்டும் என்றே எப்போதும் விரும்புவார்கள். இதனால் இந்த நாட்டில் மறுமலர்சிக்கு எதிராக பொறிமுறை மாற்றத்திற்கு எப்போதும் நிரந்தர முட்டுக்கட்டையாக இருக்கப்போகிறார்கள். இதனால்தான் குற்ற நிழல்படிந்த தங்களுடைய சட்டவிரோதப் பணத்தைப் பயன்படுத்தி என்னவிலை கொடுத்தாகிலும் இதை நிர்மூலமாக்க முயல்வார்கள். ஆகவே இனவாதத்தையூம் மதவாதத்தையூம் பொய்யான பரப்புரைகளையூம் கையில் எடுத்து தாராளமாய் வளங்களைச் செலவூசெய்தாகிலும் தமக்குத் தோதான ஓர் ஆட்சியைக் கொண்டுவருவதற்கு அவர்கள் என்றும் பின் நிற்கப்போவதில்லை. போதைப் பொருளும் பாதாள உலகமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.  ஒன்று இல்லாமல் இன்னொன்று இல்லை. சனாதிபதி போதைப்பொருள் மாபியவிற்கு எதிரான போரை  உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தள்ளார். ஆகவே இனிவரும் காலங்களில் சவால்கள் பலமடங்கு பெருகி வரலாம். மக்களின் நம்பிக்கையைச் சிதைக்க உயர் அதிகாரிகள்மீது சேறு பூசப்படலாம். இனங்களுக்கிடையே முறுகலை எற்படுத்த விசமிகள் முனையலாம். இதுதொடர்பாக அரசு மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும். மக்களின் இயல்புவாழ்க்கையை குழப்பி துண்டாட முயலும் அத்தனை தீயசத்திகளையூம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினால் அரச எதிர்பார்த்த பெறுபேறுகளை அடையமுடியூம். 

Hisham.M.Vlog என்னும் வலையொளிப் பதிவிலிருந்து பதிவிலிருந்தும் தொகுக்கப்பட்டது)






Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff