யாழ்மாவட்டத்தின் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகக்கொண்ட இலங்கை தமிழரான ஜெயால்ட் அன்ரனி இராசரத்தினம் அவர்களுக்கு அண்மையில் அயர்லாந்து நாட்டில் அவரது காலநிலை மாற்றம் (Climate change) மற்றும் காலநிலை நீதி (Climate Justice) தொடர்பான பணிகளை அங்கீகரித்து. The National Trust for Ireland (An Taisce)அமைப்பு காலநிலை தூதுவர் “Climate Ambassador” என்ற விருதை வழங்கியுள்ளார்கள்.
யாழ் சென்ஜோண் கல்லூரியில் க.பொ.த உயர்தர கல்விபயின்ற ஜெயால்ட் அன்ரனி தனது முகமைத்துவப் பட்டத்தினை யாழ்பல்கலைக் கழகத்தில் பெற்றுக்கொண்டவராவார். வணிக நிர்வாகம் மற்றும் இணையவழி சந்தைப்படுத்தல் துறையில் முதுமானி பட்டதாரியூம் ஆவார். ஜெயால்ட் அன்ரனி அவர்கள் ‘‘Turning poultry waste into Rural Wealth மற்றும் Local Voices Drive Circular Transformation’ தொடர்பான ஆய்வூக் கட்டுரைகளையூம் எழுதி வெளியிட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ் உயரிய விருதினைப் பெற்று ஒரு வரலாற்றுச் சாதனையை படைத்தவர் ஓர் இலங்கைத் தமிழர் என்பதே எமது சமூகத்திற்கு மிகுந்த பெருமையும் ஊக்கத்தையும் அளிக்கின்றது.
இந்த விருது காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களுக்கு எதிராக அவர் மேற்கொண்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிலைத்த சமூக வளர்ச்சிக்காக செய்த முயற்சிகள் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச அளவிலான பங்களிப்பு அத்துடன் Local Tidy Towns குழுக்களுடன் இணைந்து செய்த தொண்டு மற்றும் சமூக ஈடுபாட்டு பணிகள் Organic Farms and Community Gardens ஆகியவற்றை ஊக்குவித்து இந்த விருது வழங்கப்பட்டது.
ஓர் இலங்கைத் தமிழர் இவ்வாறு உலக அரங்கில் குறிப்பாக ஐரோப்பிய அயர்லாந்தது நாடு போன்ற முன்னேற்ற நாடுகளில் மதிப்புமிக்க விருதைப் பெறுவது புலம்பெயர் தமிழர்களின் அறிவுத் திறன் சமூகப் பொறுப்பு உணர்வு உலகளாவிய பிரச்சினைகளில் எங்களின் பங்களிப்பு மற்றும் முன்னணியில் செயல்படுகிறார்கள் என்பவற்றை வெளிப்படுத்துகிறது என்பது எமக்குப் பெருமையாகும். இந்த சாதனை தனிநபரின் வெற்றியைத் தாண்டி முழு இலங்கையரின் பெருமையாக கருதப்பட வேண்டும்.
இது இளம் தலைமுறைக்குக் குறிப்பாக மாணவர்களுக்கு சுற்றுச்சூழலைக் காக்கும் பொறுப்புணர்வையும் சமூக நலன் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடும் ஊக்கத்தையு ம் அளிக்கிறது.
இது தமிழர்களும் உலகத்தை வழிநடத்த முடியூம் என்பதற்கான உறுதியான சான்றாகும். இந்த சாதனைமூலம் திரு. ஜெயல்ட் அன்ரனி அவர்கள் காலநிலை மாற்றம் என்பது அரசுகள் மட்டுமே கவனிக்க வேண்டிய விடயமல்ல். ஒவ்வொரு குடிமகனும் பொறுப்பேற்க வேண்டிய ஓர் உலகளாவிய சவால் என்ற எண்ணத்தை சமூக மட்டத்தில் வலியுறுத்தி வருகிறார். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சமூக அமைப்புகளை இணைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் அவரது முயற்சிகள் பாராட்டுக்குரியவையாக அமைந்துள்ளன.
பூமியை பாதுகாப்போம் - எதிர்காலத்தை காப்போம். -சுற்றுச்சூழலைக் காப்போம் - மனிதகுலத்தின் எதிர்காலத்தை பாதுகாப்போம்.
(இதனை கீழ் உள்ள இணைய முகவரியில் பாரவையிடமுடியும்:)
https://www.virakesari.lk/article/233858


No comments:
Post a Comment