Sunday, September 5, 2010

யாழ் மாவட்டத்துக்கான சமாதான நீதவான்கள் மனித உரிமைகள் அமைப்பு உருவாக்கம்.


செய்தி : யாழ் மாவட்டத்துக்கான சமாதான நீதவான்கள் மனித உரிமைகள் அமைப்பின் ஊடகப்பணிப்பாளர் - மரியநாயகம் பிரான்சிஸ்க்

இந்த நிகழ்வு சமாதான நீதவான்கள மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பேராசிரியர் ஜெயந்த களுபோவில தலைமையில் யாழ்ப்பாணம் கடற்கரை வீதியிலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் யாழ் மாவட்டத்திலிருந்து சுமார் நாற்பதிற்கும் அதிகமான சமாதான நீதவான்கள் கலந்து கொண்டனர்.

அன்றயதினம் இதில் முதலில் யாழ் மாவட்டத்துக்கான பணிப்பாளர் சபை சமாதான நீதவான்கள மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பேராசிரியர் ஜெயந்த களுபோவில முன்னிலையில் தெரிவு செய்யப்பட்டது.

பணிப்பாளர் சபையின் விபரம் வருமாறு.

1. அமைப்பின் யாழ் மாவட்ட நிருவாகப் பணிப்பாளர்- சிவசுப்ரமணியம் ஜெயச்சந்திரன்.

2. மாவட்ட பணிப்பாளர் - சுப்ரமணியம் ரத்னசிங்கம்

3. தேசிய சர்வதேசப் பணிப்பாளர் - தாதபிள்ளை தருமரெட்ணம்

4. ஊடகப்பணிப்பாளர் - மரியநாயகம் பிரான்சிஸக்;
5. அரசியல், சமூக சேவைப் பணிப்பாளர் - இராமநாதன் சாந்தன்

6. திட்டப் பணிப்பாளர் - ஜெகதீசசிங்கம் சத்தியேந்திரன்

7. பெண்கள், சிறுவர் விவகாரப் பணிப்பாளர் - மரியகொரட்டி அன்ரன்

8. கல்வி, கலாச்சாரப் பணிப்பாளர் - தில்லையம்பலவாணன் விமலன்

9. நிதிப்பணிப்பாளர் - கோபாலப்பிள்ளை சந்திரசேகரம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

பின்னர் யாழ் மாவட்டத்தின் பிரதேச செயலகங்களுடன் இணைந்து பணிபுரிய பதினைந்து இணைப்பாளர்களும்; தெரிவு செய்யப்பட்டனர்.

நிகழ்வில் தொடர்ந்து பேராசிரியர் ஜெயந்த களுபோவில உரையாற்றுகையில் உலகில் பிறந்த மனிதன் தகக்குரிய சகலவிதமான உரிமையகையும் சாதி சமய குல கோத்திர வேறுபாடின்றி தனக்கு சொந்தமான நாட்டுக்குள் அனுபவிக்க உரிமையுண்டு தான் விரும்பிய இடத்தில் குடியேறவும் வியாபரம் செய்யவும் அவனுக்கு உரிமையுண்டு. குறிப்பாக இலங்கையில் சிறுபான்மையினர் பெரும் பான்மையினர் என்றோ. பௌத்தர் கிறிஸ்தவர் இந்துக்கள் இஸ்லாமியர்; என்ற வேறுபாடின்றி வாழுவதற்கும் உரிமைகளை அனுபவிப்பதற்கும் அவனுக்கு உரிமை உண்டு;

எமது நாட்டின் பிரயை ஒருவருக்கு உரிமைகள் மறுக்கப்படும்போதோ அல்லது தவறக தண்டிக்கப்படும்போதோ அல்லது சமூகத்தில் அநீதிகள் இடம்பெறும்போதோ இந்த அமைப்பில் பணிபுரியும் நாம் துணிவுடன் குரல்கொடுத்து அவர்களுக்குரிய சரியான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff