Wednesday, September 8, 2010

இங்கே சிரிக்கவா? சிந்திக்கவா?

தமிழில்
ம.பிரான்சிஸ்க்
கிட்டத் தட்ட 100 வருடங்களுக்கு முன்பு பல்கலைக்கழக மாணவன்; ஒருவன் புகைவண்டியில் பிரயாணம் செய்துகொண்டிருந்தான். அந்த மாணவன்; அருகில், பணக்காரர் போலும், படிப்பறிவு குன்றியவர் போலும் தென்பட்டுக் கொண்டிருந்த ஒரு முதியவர் அமர்ந்திருந்து பிரயாணம் செய்து கொண்டிருந்தார்;. அந்த முதியவர் திருச்செபமாலையை தியானித்தபடி தனது கைகளில் செபமாலையை உருட்டிக் கொண்டிருந்தார்.


அந்த பல்கலைக்கழக மாணவன்; அந்த முதியரிடம்;: “ஐயா நீங்கள் செயலற்றுப் போன இந்த செபமாலைத் தியானத்தில் இன்னுமா நம்பிக்கை வைத்திருக்கின்றீர்கள்” எனக் கேட்டான். “ஆம் என பதிலுரைத்தவராக உமக்கு இதில் நம்பிக்கை இல்லையா?” என முதியவர் திரும்பிக் கேட்டார்

அந்த மாணவன் ஏழனமாக சிரித்தவாறே “நான் தேவையற்ற சிறிய விடையங்களில் நம்பிக்கை கொள்வதில்லை என்று பதிலுரைத்தான்” பின்பு அந்த முதியவரிடம் நான் கூறும் அறிவுரையை ஏற்றுக் கொள்ளும் இந்த செபமாலையை இந்த யன்னல் வழியே எறிந்துவிடும். அத்துடன் விஞ்ஞானம் இந்த செபமாலையைப்பற்றி என்ன கூறுகின்றது என அறிந்துகொள்ளும் என்று தொடர்ந்த கூறினான்.

விஞ்ஞானமா? எனக்கு இந்த விஞ்ஞானத்தைப் பற்றி விளங்கவில்லை. ஒருமுறை இந்த விஞ்ஞானத்தைப் பற்றி; எனக்கு புரியும் படி நீர் விளங்கப்படுத்தும். என கண்ணீர் ததும்ப எளிமையான இதயத்துடன் கேட்டார்.


அந்த மாணவன், முதியவர் மிகவும் கவலையடைந்திருப்பதை அப்பொமுது கண்டான். மேலும் அவரது உணர்வுகளை காயப்படுத்த விரும்பாது கூறினான்; “ஐயா தயவு செய்து உமது முகவரியை எனக்கு கொடுத்துவிடும் இந்த விடயத்தில் உமக்கு உதவக்கூடிய சில இலக்கியங்களை அருப்பி வைக்கின்றேன்” என்றார்.

அந்த முதியவர் தனது பெயர் அட்டையை (விசிற்ரிங் காட்டை) தனது சட்டையிலிருந்து எடுத்துக் அந்த மாணவரிடம் கொடுத்தார்.

அந்த பெயர் அட்டையை(விசிற்ரிங் காட்டை) பார்த்த கணமே அந்த மாணவன் வெக்கத்தால் தலைகுனிந்து அமைதியானான்;.

அந்த பெயர் அட்டையில்: லூயிஸ் பாஸ்ர, அதிபா (பணிப்பாளர்);, விஞ்ஞான ஆராட்சி நிறுவனம், பாரிஸ், பிரான்ஸ்.


No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff