Thursday, December 26, 2019

05.01.2020 அடுத்திருப்பவர்களின் பாதைக்கு வழிகாட்டும் பிரகாச விண்மீன்களாகுவோம்

 ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்- ஊடகக்கற்கைநெறி ஆசிரியர்.

இன்று மூவிராசாக்கள் திருவிழா. வீண்மீன் ஒன்று தோன்றியதை கண்டு ஞானிகள் கீழக்கிலிருந்து எங்கேபோவது என தெளிவாகத்தெரியாது புறப்பட்டு அந்த விண்மீனின் வழிகாட்டலில் வருகை தந்து பெத்லகேம்மில் ஒரு மாட்டுத்தொழுவத்தின்மேல் அந்த விண்மீன் நின்றபோது அதனுள்பிறந்திருந்த பாலன்னைக்கண்டு மகிழ்ந்தனர். ஞானிகள் இயேசுவைத் தரிசித்த இத்தினத்தை கத்தோலிக்கத்திருச்சபை ஆண்டவரின் திருக்காட்சித் திருவிழா- மூவிராசாக்கள் திருவிழா என கொண்டாடுகிறது. இந்த ஞானிகளை ஆங்கிலத்தில் ஷமேயை–ஆயபi|என அழைக் கின்றோம். இந்த ஞானிகள் அரசர்கள்தான் என்னும்கருத்து: ஷபிறஇனத்தார் உன் ஒளி நோக்கிவருவர்;. மன்னர் உன் உதயக்கதிர் நோக்கி நடைபோடுவர்|. என்றுகி.மு8 நூற்றாண்டில் எழுதப்பட்டு பைபிளில் உள்ள எசாயா புத்தகத்தில் 60அதிகாரம் 3வசனத்திலிருந்து வந்திருக்கக்கூடும் என்கிறார்கள். 

ஞானிகள் மூன்றுபேர் என்று பைபிளில் கூறப்படவில்லை. உண்மையில், ஆரம்பகால கத்தோலிக்க பாரம்பரியத்தில் ஞானிகளின் எண்ணிக்கையில் ஒருமுரண்பாடு இருந்துள்ளது. கீழத்தேய திருச்சபைப்பாரம்பரியம் ஞானிகள்  பன்னிரண்டு பேர் என்கிறது. ஆனால்உரோமில் ஆரம்பகால கிறிஸ்தவ ஓவிங்களின்படி: புனிதர்கள் பேதுரு மற்றும் மார்செலினுஸ் அவர்களின் கல்லறையில் இரண்டு ஞானிகள் ஓவிங்களில் காணப்படுகின்றனர். புனித டொமரிலா வின் கல்லறையில் நான்கு ஞானிகள் சித்தரிக்கப்படுகின்றனர். மேற்கத்தயத்தில், ஆரம்பகால திருச்சபையின் தந்தையர்கள் பலர், ஞானிகள் மூன்று பேர் என ஏற்றுக்கொண்டனர். இவர்கள் இயேசுவுக்கு அளித்த பரிசுகளின் எண்ணிக்கையினை வைத்துத்தான் இவர்கள் மூவர் என நம்பப்படுகின்றது. கி.பி7 நூற்றாண்டிலிருந்து மேற்கத்திய திருச்சபையில் இந்த ஞானிகள்: மெல்கியோர், காஸ்பர், மற்றும் பால்தாசர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர்கள் வேறுபட்ட கல்வித்தரத்தைக் கொண்ட வகுப்பினர்கள். மற்றவர்கள் வாழ்வில் தாக்கத்தைச் செலுத்தக் கூடியவர்கள். அவர்கள் மெய்யிலாளர்கள், ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டல் ஆலோசனை செய்பவர்கள். முற்கா லத்து கிழக்கில் ஞானஅறிவை கற்றுத்தேர்ந்தவர்கள். பொருள்களை வணங்குபவர்கள் அல்லர். இவர்கள் வானியளாலர்கள். ஒற்றுமையின் நேர் உதாரணமானவர்கள்.

பைபிளின் மீக்கா புத்தகம் 05அதிகாரம்,2 வசனமும்: ஷநீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர்; உன்னிடமிருந்தே தோன்றுவார்;|, பைபிளின் திருப்பாடல் புத்தகம் 77அதிகாரம்,10-11 வசனங்களும் முக்கியமானவை: ஷதர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள். எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள்|. இவர்கள் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து இயேசுவை வணங்கினார்கள். மெல்கியோர் என்ற ஞானி இயேசுவுக் குப் பொன்னைக் காணிக்கையாக்கினார். கஸ்பார் சாம்பிராணியைக் கொடுத்தார். பல்த்தசார் வெள்ளைப் போளத்தைக் கொடுத்தார். பொன்னைக் கொடுப்பதன் மூலம் இயேசுவை அரசனாக அவர்கள் ஏற்கின்றனர். சாம்பிராணியைக் கொடுப்பதன் மூலம் கடவுளாக அங்கீகரிக்கின்றனர். அத்துடன் வெள்ளைப் போளத்தை வழங்கி இயேசுவின் பாடுகள் மற்றும் அடக்கத்தை குறித்துக் காட்டுகின்றனர். இவர்கள் இயேசுவின் வாழ்க்கையை உணர்ந்த ஞானிகளாகக் காட்சி தருகின்றனர்.

மரபுகளின்படி மெல்கியோர் பேர்சியாவிலிருந்தும் கஸ்பார் இந்தியாவிலிருந்தம் பல்த்தசார் அரேபியாவிலிருந்தம் வந்திருக்கலம் என கூறப்படுகின்றது. இந்த விண்மீனுக்கு இவர்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக் காரணம் என்ன. இவர்கள் கீபூறுமொழியில் இருந்த பைபிளைக் கற்றுத்தேர்ந்து உண்மைகளை கண்டடைந்திருக்கவேண்டும். பலநூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தஇறைவாக்கினர் பிலேயாமின் கணிப்பு வார்த்தைகள் இவர்களது கவனத்தை கட்டாயம் ஈர்த்திருக்க வேண்டும். இது பைபிளில் உள்ள எண்ணிக்கைப்புத்தகம் 24அதிகாரம், 17 வசனமாகிறது: ஷயாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்! இஸ்ரயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும்!| எந்தவொரு சாதாரண நட்சத்திரத்தாலும் ஒரு மாட்டுத்தொழுவத்திற்கு வழிகாட்டமுடியாது ஆனால் பெத்லகேமில் உள்ள பெருமளவான மாட்டுத்தொழுவத்திற்குள் சரியாக இயேசு பிறந்த மாட்டுத்தொழுவத்திற்கு இந்த விண்மீன்; வழிகாட்டியது. எனவே இந்த விண்மீன் ஒரு கடவுளின் சம்மனசு, அல்லது இயேசுபிறப்பை குறித்துக்காட்ட கடவுள் உருவாக்கிய வேறு ஏதேனும் சிறப்பு அடையாளம் என ஞானிகள் நம்பினர். வடஅமரிக்காவின் ஆஸ்டிஎன்னும் நாட்டின் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்தவக் கற்கைகளின் பேரசிரியர் பிறன்ர் இலன்டஉ (டீசநவெ டுயனெயர)என்பவர் எழுதிய ஷஞானிகளின் வெளிப்பாடு| சுநஎநடயவழைn ழக வாந ஆயபiஇஎன்னும் புத்தகத்தில், பெத்லகேமுக்கு ஞானிகளை அழைத்துச் சென்றபின் பிரகாச ஒளிவிசுகின்ற குழந்தையாக மாறிய தேன்றிய அந்த விண்மீன் இயேசுக் கிறிஸ்துவே எனக்கூறுகின்றார். அத்துடன் திருத்தந்தை 16 பெனடிற் அவர்கள் ஷஇறைவார்தைதையே அந்த விண்மீனாகா தோன்றியது எனஒருமுறை குறிப்பிட்டுள்ளார். 

ஜேர்மனியின் கொலோன் நகரில் அச்சிடப்பட்ட ஒரு மத்தியகால புனிதர்களின் நாள்காட்டியில் உள்ளஒரு பகுதியில்: ஷநற்செய்திக்காக பல சோதனைகள் மற்றும் சோர்வுகளுக்கு ஆளான நிலையில், மூன்று ஞானிகளும் ஆர்மீனியாநாட்டில் சேவா என்னும் இடத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட கி.பி 54 இல் சந்தித்துக் கொண்டார்கள் என்றும் அதன்பின்பு மெல்கியோர் ஜனவரி 01, 116 வயதிலும், காஸ்பர், ஜனவரி 11, 109 வயதில், மற்றும் பால்தாசர் ஜனவரி 06, 112 வயதில் இறந்துள்ளார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உரேமின் மரியியல் இத்திகதிகளை ஞானிகளின் வணக்க திருவிழா நாள்கள் என குறிப்பிடுகின்றது. 


ஞானிகள் விண்மீன் தோன்றியதைக் கண்டனர். பயணத்தை மேற்கொண்டனர். விண்மீன் இரவில் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். பகலில் தெரியாது. எனவே ஞானிகள் இரவில் தங்கள் பயணத்தை அதிகம் செய்திருக்க வேண்டும். நாம் வாழும் அவசர உலகில், விண்மீன்களைப் பார்ப்பது மிகவும் அரிது. வானத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட நமக்கு இப்போது நேரமில்லை. எப்போது வானத்தைப் பார்ப்போம்? கருமேகம் சூழும்போது சந்தேகத்தோடு 'ஒருவேளை மழைவருமோ?" எனநிமிர்ந்து வானத்தைப்பார்க்கிறோம். அதேபோல், உள்ளத்தில் கருமேகங்கள் சூழும்போதும் மீண்டும் வானத்தைச் சந்தேகத்தோடு பார்க்கிறோம். கடவுள் என்ற ஒருவர் அங்கிருக்கிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள சந்தேகம் வரும்போது மட்டும் வானத்தைப் பார்த்தால், அங்கே கருமேகங்கள் மட்டுமே தெரியும். அந்தக் கருமேகங்களுக்குப் பின் கண் சிமிட்டும் விண்மீன்கள் தெரியாது. அந்த விண்மீன்கள் இறைவனிடம் நம்மை அழைத்துச்செல்ல அவைகள் தரும் அழைப்பும் தெரியாது. நம் வாழ்க்கையில் உண்மை விண்மீன்கள் தொலைந்து போகும் போது, மனதின் அந்தவெற்றிடத்தை நிரப்ப, மற்றபோலியான விண்மீன்கள் ஆக்கிரமித்து விடுகின்றன. இன்று நாம் சிந்திக்கும் இந்த ஞானிகள் எத்தனை இரவுகள் எத்தனை இடர்பாடுகள் மத்தியில் விண்மீனைத்தொலைத்துவிட்டு வேதனைபட்டிருப்பார்கள்? இருந்தாலும் இறுதிவரை மனம் தளராமல் ஒரே குறிக்கோளுடன் மன உறுதியுடன் இரவின் துணையில் பல ஆயிரம் மைல்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள், இலக்கை அடைந்தார்கள். கடவுளைக் கண்டார்கள். நாமும் கடவுளைக் காண நம் வாழ்க்கைப் பதையை இறைவார்த்தையின் வழியில் அமைப்போம்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff