02.12.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இன்று நாம் திருவருகைக் காலத்திற்குள் காலடி எடுத்து வைக்கின்றோம். திருவருகைக் காலம்' எதிர்நோக்கிக் காத்திருக்கும்" காலம் என்று அழைக்கப்படும். ஆதனால் என்னவோ நம் வாழ்வு சார்ந்த எதிர்பார்ப்பும் திருவருகைக் காலத்தில் தெரிகிறது. மனிதரிடையே சண்டை சச்சரவும் அராஜகமும் மறைந்து அமைதி நீதி நிலவும் புதியதொரு காலம் மலரும் என்பது நம் எதிர்பார்ப்பு. நீதிக்கு அநீதி தீர்பிடும்காலமும் ஆயுதப் பயிற்சிக்கு ஆட்களை சேர்க்கும் காலமும் இராணுவச் செலவுகள் அதிகரிக்கும் காலத்திலும் கிறிஸ்துவின் வருகையால் அனைத்து அட்டூழியம் மறைந்து அமைதி நீதி நிகழும் என்பது நம் நம்பிக்கை.
2007ம் ஆண்டு உலகின் பல நாடுகளும் இராணுவத்திற்கென செய்த செலவு 5,850,000 கோடி ரூபாய். (1.339வசடைடழைn னுழடடயசள) அதே ஆண்டு ஐ.நா. அமைப்பு மேற்கொண்ட அத்தனை மனித சமுதாய முன்னேற்ற முயற்சிகளுக்கும் ஆன செலவு (4.2 டிடைடழைn னழடடயசள) ஆகும். எனவே உலக அரசுகள் இராணுவத்திற்குச் செலவிடும் தொகையில் பாதித் தொகையை, அல்லது, பத்தில் ஒரு பங்குத் தொகையை ஏழைகளுக்குச் செலவிட்டால், உலகின் வறுமையைப் பெரிதும் குறைக்கலாம்.
2007 அமெரிக்கத்தலைவர் ஒபாமா இந்தியா வந்திருந்தபோது வாண வேடிக்கைகளுடன் அவர் வரவை கொண்டாடினர். அவரது பயணத்தின் ஒரு முக்கிய காரணம்? அமெரிக்காவின் இராணுவத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்பதற்கான வழிமுறைகளைக் கண்டு பிடிப்பதாகவே இருந்தது என ஊடகங்கள் சில குறிப்பிட்டன. இவ்வாறு பல பில்லியன் டாலர்களை இராணுவத்திற்காகக் கரியாக்கும் நிகழ்வு உலகில் இன்றும் நடந்தவண்ணம் உள்ளது.
இன்று இராணுவத்தைப் பற்றி; பேச காரணம் முதல் வாசகத்தில். எசாயா இறைவாக்கினர் இறுதி நாட்கள் குறித்து காணும் ஒரு அழகான கனவு தரப்பட்டுள்ளது தான்: 'அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்."
வாள்கள் கலப்பை கொழுக்களாக மாறும். ஈட்டிகள் அறுவடை செய்யும் அரிவாள்கள் ஆகும். உயிர்களை அறுவடை செய்யும் படை வீரர்கள் பயிர்களை அறுவடை செய்யும் அற்புதமானப் பணியில் ஈடுபடுவார்கள். போர் பயிற்சிகளுக்குப் பதிலாக, ஏர் பிடித்து உழுகின்ற பயிற்சிகள் நடைபெறும். இந்த அற்புதமான, அழகான கற்பனை, எம்மை; நம் குழந்தைப் பருவத்திற்கு, வாலிபப் பருவத்திற்கு அழைத்து செல்லும் கற்பனையைப் போன்றது. இவைகள் கற்பனைகளாக, கனவுகளாக மட்டுமே இருக்க முடியும். நனவாக மாறவே முடியாது என்று நம்மில் பலர் தீர்மானித்து விட்டோம். எனவே, இப்படி ஒரு காட்சியை நினைத்துப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விடலாம், அல்லது ஒரு விரக்தி சிரிப்பு சிரிக்கலாம். நமது ஏக்கத்திற்கும், விரக்திக்கும் காரணம் உள்ளது. எசாயாவின் கனவில் போர் கருவிகள் விவசாயக் கருவிகளாக மாறுகிறது. நாம் வாழும் சூழலில் விவசாயக் கருவிகள் போர் கருவிகளாக மாறி வருகின்றன. பயிர்களை அறுவடை செய்யும் அரிவாள் உயிர்களை அறுவடை செய்யும் கொடூர கருவிகளாகின்றன.
இத்த திருவருகை காலத்தில் இயேசுவின் வருகைக்கு எம்மை சரியான முறையில் ஆயத்தப்படுத்துவோம். ஆமிப்பயிற்சிக்கு ஆட்களை சேர்ப்பதை தவிர்த்து அன்பியப்பயிற்சிக்கு ஆட்களை சேர்க்க ஆயத்தமாவோம். இயேசுவின் பிறப்பு ஆயத்தங்கள் நாம் வாழும் இன்றைய காலங்களில் எமது வெளியரங்க ஆயத்தங்களோடு மட்டும் நின்று விடுவது மிகவும் மனம் வருந்துவதற்குரிய செயலாக இருக்கின்றது. இயேசுவின் பிறப்புக் கால ஆயத்தங்கள் மற்றவர்களால் வியாபார மயப்படுத்தப்படலாம். ஆனால் கத்தோலிக்கர் என்ற சொல்லும் எமது ஆயத்தம் எவ்வாறு இருக்கின்றது? போரின் வடுக்களை தினம் கண்டு வாழும் குழந்தைகள் மட்டில் எங்களது ஆயத்தம் எத்தகையது?
இன்றைய நற்செய்தி வாசகம் தெளிவான எச்சரிக்கையைத் தருகிறது. எமது உள்ளங்கள் மந்தம் அடைவதற்கான மூன்று காரணிகளை இயேசு சுட்டிக்காட்டுகிறார்: குடிவெறி, களியாட்டம், இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலைகள். இந்த மூன்றிலும் ஈடுபடுபவர்கள் இறையாட்சியில் பங்கேற்க முடியாது என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார். குடிவெறி என்பது நிச்சயமான மந்தப் பொருள். அது உடலையும், உள்ளத்தையும் மட்டுமல்ல ஆன்மாவையும் மந்தப்படுத்துகிறது. களியாட்டம் என்பதோ தேவைக்கதிகமான பொழுதுபோக்கு, உல்லாசம் போன்றவற்றைக் குறிக்கிறது. எப்போது இவை இறைவனிடமிருந்து நம்மை பிரிக்கின்றனவோ, அப்போது பொழுதுபோக்குகளும், மகிழ்ச்சி;ச் செயல்பாடுகளும்கூட களியாட்டமாக மாறிவிடுகின்றன. நம் வாழ்வைக் கொஞ்சம் ஆய்வு செய்து, குடிவெறி, களியாட்டம், உலகக் கவலைகள் நம் அகவாழ்வை மந்தப்படுத்தியுள்ளனவா என கண்டறிவோம். ஆம் என்றால், இவை மூன்றிலிருந்தும் விடுபட்டு, இறைப்பாதம் சேர்வோம்.