19.05.2013'" ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்பகிறேன்" என்றார். இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்…என்றார். வேதகமத்தின் இப்பகுதி இன்று எமக்குத் தரப்படுகின்றது. ஆணிகளால் துளையிடப்பட்டு காயப்பட்ட பகுதியை காட்டினான் என்னும் பகுதியை நோக்குவோம்.
ஷஎங்கள் மூச்சுக்குள்ளே உண்டு பாட்டுச்சந்தம் என்றும் பாட்டுக்கள் தான் எங்கள் சூரியோதயம்| தருண் ஹீரோவாக நடத்த புன்னகைதேசம் படத்தில் இருந்து எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட பாடல் வரிகள் இவை. பெற்றெடுத்த பெற்றோரும் துரத்திவிட ஒட்டி உறவாடியவர்களும் ஏழனம் செய்ய வாழ்கையின் விழிம்புக்கு சென்ற மூன்று இளைஞர்களை தருண் நண்பர்களாக்கி அவர்களுக்காக தன்னை கரைத்து மாடய் வேலைசெய்து அவர்களுக்காக மற்றவர்களிடம் பரிந்துபேசி அவர்களுக்காக மற்றவர்களிடம் ஏளனம் பெற்று அவர்களை இசையில் சாதனை புரியவைத்து நட்புக்கு பாடம் புகட்டியவர்.அந்த நண்பர்களின் பணயம் பைகளையே கூலியாளாகத் தன் கைகளால் தூக்கிகாட்டியவர். இவ்வாறு படம் நகர்கின்றது. எமக்காக தன் கைகளில் ஆணிகளை ஏற்றவர் தம் கைகளை இன்று எமக்கும் காட்டுகின்றார். எமது பதில் என்ன?
1492 கலப்பகுதியில் ஜெர்மனி நாட்டில் ஆர்வம் மிக்க ஆல்பிரட் ட்ரூரர் மற்றும் பிரான்ஸ் க்னிக்ஸ்டெயின் ஆகிய இரண்டு நண்பர்கள் சிறந்த ஓவியர்களாக வேண்டும் எனத் திட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் ஓரளவு ஓவியம் வரைய தெரிந்திருந்தார்கள். ஆனால் ஓவியப் கல்லூரிக்கு சென்று கற்பதற்குத் தேவையான பணமில்லை. அவர்கள், ஒருவர் வேலை செய்து மற்றவர் படிப்பதற்குப் பண உதவி செய்வதென்றும், அவ்வாறு படித்தவர் மற்றவருக்குப் பிறகு உதவி செய்வதென்றும் உறுதி செய்துகொண்டனர்.
யார் முதலில் கற்கச்; செல்வது என்பதைக் கண்டறிய அவர்கள் ஒரு காசைப் பூவா, தலையா எனப் போட்டுப் பார்த்து முடிவெடுத்துக் கொண்டனர். முதலில ட்ரூரர் முதலில் படிக்கச் சென்றார் . க்னிக்ஸ்டெய்ன் வேலை செய்யச் சென்றார். ட்ரூரர் மிகத் திறமையான ஓவியரானார். தம் ஓவியங்களை நிறைய விலைக்கு விற்கத் தொடங்கினார். தம்முடைய ஒப்பந்தப்படி ஊருக்குத் திரும்பி தம் நண்பர் க்னிக்ஸ்டெய்ன் படிப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்ய வந்தார். அப்பொழுதுதான் தம் நண்பர் தமக்காகச் செய்திருந்த தியாகத்தை அவர் உணர்ந்தார். தம் நண்பரின் கடுமையான உழைப்புக் காரணமாக அவரது விரல்கள் விறைத்துப் போய் மென்மையான ஓவியம் தீட்டுவதற்குத் தகுதியில்லாதவைகளாக இருந்ததை கண்டார். க்னிக்ஸ்டெய்ன் ஓவியராவதற்கன தன் கனவுகளை மறந்தாலும் வருத்தப்படவில்லை. தம் நண்பருடைய வெற்றியில் இவரும் பெருமகிழ்ச்சி கொண்டார். ஒரு நாள் ஆல்பிரட் ட்ரூரர்;, தம் நண்பர்; க்னிக்ஸ்டெய்ன் கைகளைக் கும்பிட்டபடி செபித்துக் கொண்டிருந்த காட்சியை அவர் காணாத போது ஓவியமாகத் தீட்டினார். அந்த ஓவியம் விலை மதிப்பில்லாத மிகச் சிறந்த ஓவியமாக மதிக்கப்பட்டது. தம் வாழ்வையும் கைகளின் உழைப்பையும் தானமாகத்தந்த நண்பரின் கும்பிட்ட கைகள் இன்று காலமெல்லாம் மறக்கமுடியாத மிகச் சிறந்த ஓவியமாக உலகெங்கும் போற்றப்படுகிறது. இன்று ஓவியக் காட்சி சாலைகளில் ட்ரூரர்;, பல சிறந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு கண்களையும் மனத்தையும் கொள்ளையடிக்கின்றன . ஆனால் எல்லோர் உள்ளத்தையும் கண்டிப்பாகக் கவர்வது கும்பிட்ட கைகள் என்ற அவருடைய நண்பருடைய கரங்களாகும். அந்த ஓவியம் பல லட்சம் பிரதிகள் உலகெங்கும் பிரதி எடுக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளது. இந்த ஓவியம் அந்தக் கைகளின் தியாகத்தை, நிபந்தனையில்லாத பேரன்பை, கடுமையான உழைப்பை, நன்றிப் பெருக்கை நினைவு படுத்துகின்றது .
இயேசுவின் கைகள் இன்னும் மிகப்பெரிய கதையை நமக்குச் சொல்கின்றன. இதோ, என் கைகளைப் பாருங்கள் என இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுகிறார். நம் நெஞ்சைத் தொடும் இந்தக் காட்சியை சாட்சியாக்கி உயிரோடு வாழ்வதாகக் காட்டுகிறார். எம் மனதில் இயேசுவின் தழும்புகளும் சிலுவைச் சாவும் அழியாது பதிந்திருக்கின்றன. இயேசு நமக்கு நல்லதொரு நண்பராக உள்ளார். வாழ்க்கையில் எம் வெற்றிக்குப் படியாக, ஏணியாக பின்புலத்திலிருந்து உதவிய கரங்களை நாம் மறந்துவிடுகின்றோம். நம் வாழ்க்கையில் நாம் முன்னேற தம் கைகளைக் காயப்படுத்தி நமக்கு அன்பைப் பொழிந்து உதவியவர்களை நினைத்துப் பார்க்கிறோமா. நம்முடைய வருங்கால வெற்றிகளும் நமக்காக தன்னுயிரைச் சிலுவையில் தந்து ஆணிகள் துளைத்த அந்தக் கரங்களைக் காட்டும் இயேசுவின் கரங்களில் தியாகத்திற்கு எமது சமர்ப்பணம் என்ன?

No comments:
Post a Comment