Monday, June 8, 2020

சொன்னால்தான் அது செய்தியா


ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை



தொடர்பாடல் என்னும் வார்த்தையை செய்தியின் மீள்கட்டமைப்புச் செயன்முறை என சனொன் மற்றும் வீவர் (Shannon and Weaver) என்னும் தொடர்பியல் அறிஞர்கள் வியாக்கியானஞ் (பொருள்கோடல்) செய்தனர். சனொன் மற்றும் வீவர் தொடர்பாடல் மாதிரியில் சிந்தனைகள் செய்தியாக மாற்றப்படுதல் குறிமுறையவிழ்க்கப்படும் கட்டத்தில் நடைபெறும் என்பது தெரிகிறது. 

பேராசிரியர் ஹரோல்ட் டீ லாஸ்வெல் தொடர்பாடல் மாதிரியில் காணப்படும் பிரதான ஜந்து கூறுகளில் இரண்டாவது கூறு செய்தியாகும். ஹரோல்ட் டீ.லாஸ்வெல்லின் தொடர்பாடல் குறித்த வரைவிலக்கணம் தொடர்பில் செய்தியானது பெறுநரிடம் மாற்றமொன்றை ஏற்படுத்து கின்றது. 


யுனெஸ்கோ தொடர்பியல் அறிஞர் போல் டீ மெசனியர்; செய்தி பற்றி ஒரு சமன்பாட்டை முன்வைத்தார். இச்சமன்பாட்டின் படி, ஒருவரது தனிப்பட்ட ஆதாயங்களும் ஆர்வமும் செய்தி யொன்றில் சேர்க்கப்படுமானால் அது நேரடியாகப் நம்பகத் தன்மையை பதிக்கும் என்கிறார். அச்சமன் பாட்டின்படி:-
  • செய்தியொன்றுடன் தொடர்புடைய சகல தகவல்களும் துல்லியமாக-உண்மையாக இருக்கவேண்டும். 
  • முக்கிய தகவல்கள் துலாம்பரமாக எடுத்துக் காட்டப்பட்டிருக்க வேண்டும்.
  • செய்தியறிக்கையானது தேவையான தகவல்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்,
  • தனிப்பட்ட விருப்பு வெறுப்பு ஆதாயம் தனிப்பட்ட பார்வை நோக்கு ஆகியவற்றைக் கொண்டிராது சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் செய்தி அறிக்கையிடப்படல் வேண்டும்
  • செய்தி அறிக்கையிடலில் எளிய-தெளிவாக மொழிப்பிரயோகம்- எல்லோராலும் புரிந்துகொள்ளப்படக்கூடிய மொழியை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும்,
  • துல்லியம் பக்கம்சாராமை, தெளிவு ஆகிய 3 காரணிகளும் முழுமையாக உள்ளடக்கப்பட்டிருந்தால் வாசகர்கள் மத்தியில் செய்தி தொடர்பான நம்பிக்கை உருவாகும். இவற்றில் ஏதேனும் ஒன்று தவறும் பட்சத்தில் செய்தி மீதான நம்பகத்தன்மை குறையும்

'தாக்கம்" செய்தியொன்றின் பெறுமதியைத் தீர்மானிப்பதாகும். இதன்படி ஏதாவதொரு சம்பவம் சமூகமொன்றில் செய்தியாகக் கணிக்கப்படுவதற்கு அது நிச்சயம் பெரும்பாலானவர்களிடத்தில் அதிக பாதிப்பைக் கொண்டிருக்க வேண்டும். 'ஒரு விமானம் விமானத்தளத்தில் இருந்து திட்டமிட்டபடி புறப்பட்டுச் செல்வது ஒரு செய்தியல்ல." இந்த வெளிப்பாடு அர்த்தப்படுவது: ஒரு சம்பவம் ஒரு செய்தியாவதற்கு அரிதான ஒரு வாய்ப்பே உள்ளது என்பதாகும். முக்கியமான தலையாய ஒவ்வொரு சம்பவமும் செய்தியாக முடியும். செய்தி என்பது ஒரு சம்பவமல்ல அது சம்பவம் பற்றிய அறிக்கை எனலாம். ஒரு செய்தி எப்போதும் புறவயமதனது(ழடிதநஉவiஎந). ஒரு சம்பவம் செய்தியாக வேண்டுமானால் அதனை செய்தியாளர் கட்டயம் அவதானித்திருக்க வேண்டும் என்பதும்மல்ல.


தொடர்பாடல் செயன்முறை தொடர்ந்து இயங்குவதற்கு முக்கிய அம்சமாகத் (பண்புக்கூறாகத்) தேவைப்படுவத செய்தியே ஆகும். தொடர்பாடல் செயன்முறையின் உள்ளடக்கம் என்பது செய்தி ஆகும். எந்தவொரு தொடர்பாடல் நிலைமையிலும் அத்தியவசியமாகக் காணப்படும் கூறு செய்தி அல்லது தகவல் ஆகும். செய்தி அறிக்கையிடலில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, ஆசைகள், ஆழமான பற்று அகியவற்றில் ஒன்றை பிரதிபலிக்கக் கூடாது என்ற குணம்சம் தொடர்பு பட்டமைவது செய்தியின் நடுநிலைத் தன்மையுடன் ஆகும். 

செய்தி ஒன்றுக்கான அர்த்தத்தை வழங்கக்கூடிய முக்கிய நபராக அமைபவர் பெறுநர்-செய்திக்கான சந்தாதாரர் ஆவார். பெறுநரை இலக்கா கக் கொண்டு தொடர்பாளன் தன்னகத்தே கொண்டுள்ள கருத்துக்களின், எண்ணங்களின், உணர்வுகளின் வெளிப்பாடே தகவல்-செய்தியாகும். தொடர்பாடல் மூலக்கூறுகளில் மிகவும் முக்கியமானது செய்தியாகும். இது தொடர்பாளனின் கருத்துக்களாக மனநிலைகளாக, உணர்வுகளாக, பார்வை களாக, கட்டளைகளாக, அபிப்பிராயங்களாகக் கூட அமையலாம். இச்செய்தி யானது பயணிப்பதற்கு பயன்படுத்தப் படுகின்ற செல்வழிக்குப் பொருத்த மானதான முறையில் தயரிக்கப் படவேண்டும். உ-ம்: அனுப்பப்ட வேண்டிய செய்தி எழுத்து ஊடகத்தில் அனுப்புவதாயின் அதனை எழுத்து வடிவில் தயரிக்கவேண்டும். அல்லது பேச்சு ஒலிக்கு ஏற்றவாறு செய்தி அமையுமா யின் செய்தியினை பேச்சு மொழிக்கு ஏற்றவாறு தயாரித்துக் கொள்ளவேண் டும்.


வெகுசன ஊடகங்களின் இருப்புக்கு அடிப்படையாகத் தேவைப்படுவது செய்தி -தகவலாகும். வெகுசன ஊடகம் தொடர்பில் செய்திகள் எப்போதும் மேலிருந்து கீழாக எடுத்துச் செல்லப்படுகின்றன. வெகுசன ஊடகச் செயற்பாட்டில் செய்திகளில் தேர்தல், அரசியல் சம்மந்தமான தகவல்க ளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வெகுசன ஊடக செய்தி அறிக்கையி டல்கள் முரண்பாட்டு நிலைமைகளைத் தோற்றுவிக்கின் றன. இதனடிப்படை யில் செய்தி ஒன்றின் செம்மை மற்றும் துல்லியம் தீர்மானிக்கப்படுவது செய்தி ஆசிரியரின் விவேகத்தில் ஆகும்.  பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்லப்படும் ஒரு செய்தியின் மீது ஒரு நபரோ அல்லது ஒரு குழுவோ கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பார்களாயின் அவர்கள் வாயிற்காப் பாளர்கள் ஆவர். ஒரு செய்தி நேயர்களைச் சேர்வது வாயில்காப்பு பொறிமுறையில் தங்கியுள்ளது.

ஒரு நபரிடம் உருவாக்கும் கருத்துக்கள் சிந்தனைகள் ஆகியவற்றை குறியீடுகள் மூலம் குறிமுறையாக்கமாக மாற்றுவதன் மூலம் அவை செய்தியாக மாறாலாம். பெறுநரே செய்தி ஒன்றின் குறிமுறை அவிழ்ப்ப வராக இருப்பவர் ஆவர். ஒரு நபர் தனது விழங்கறிவு வழியில் ஒரு செய்தியை சரியாக புரிந்துகொள்ளும் ஆற்றலும் அதனை வியாக்கியானம் செய்து கொள்ளும் ஆற்றலும் கைவரப்பெறுகின்றார். ஒரு செய்தியை பரிமாற்றிக் கொள்வதில் உள்ள மந்த நிலை, தரமற்ற செய்திக் கட்டமைப்பு, தப்பவிப்பிரா யம், மொழிசார்ந்த குழப்பநிலை. என்பன தொடர்பாடல் செயன்முறையில் தடைகளாக அமையலாம். 


செய்திகளை அல்லது தகவல்களை தவறாக புரிந்துகொள்ளுதல், செய்தியை செம்மையாக அறிக்கையிடுவதனால் தவிர்க்கப்படுகின்றது. ஒருவர் ஏதாவ து ஒன்றை தனது நண்பரக்கு கூறுகின்றார் எனின் அதில் உள்ள தொடர்பாடல் கூறுகளின் ஒழுங்கு: தொடர்பாடுபவர் செய்தி பெறுநர் ஆகும்.

எழுத்து  மூலத்தகவல்  தொடர்பின் பாதகமான அம்சமாக அமைவது: செய்தி கடினமானதாக அல்லது சிக்கலானதாக அமையும்போது தக்கம் குறைவாக அமைதல். செய்தியை யதார்த்த பூர்வமதக வெளிப்படுத்தல் கடினம் போன்றன.

செய்தியாளருக்கும் செய்தி மூலத்திற்குமான தொடர்பு மிகச் சரியான செய்திகளை வழங்குவதற்கு அடிப்படையானது செய்தியாளர் மகாநாடு ஆகும். செய்தி- தகவல் மூலாதாரங்களின் முக்கியத்துவம்: செய்தியை உருவாக்குவதில் பங்கெடுக்கின்றன, செய்தி அறிக்கையிடலுக்கு ஆதாரமா கின்றன. ஒரு சம்பவம் தொடர்பான பல்வேறுபட்ட தகவல்களை செய்தி மூலங்கள் வழங்குகின்றன-உறுதிப்படுத்து கின்றன. செய்தி அறிக்கையிடல் வடிவத் தத்துவத்தை(நேறள சுநிழசவiபெ) வலுப்படுத்துகின்றன. (செய்தி அறிக்கையிடலுக்கு அடிப்படையாக அமைகின்ற தகவல் மூலங்களின் வகிபங்காக கொள்ளமுடிவது: செய்தியை உறுதிப்படுத்த உதவகின்றன. செய்தி தொடர்பில் பல்வேறு தகவல்களை தருகின்றன. செய்தியை ஆதாரப்படுத்துகின்ற ஆவணமாக உதவுதல், செய்தி அறிக்கையிடலை உருவாக்க உதவகின்றன.) செய்தியின் மூலத்தை சிலர் விளங்கிக் கொள்வர், சிலர் விளங்கிக்கொள்ள மாட்டார், சிலர் செய்திகளை நேரடியாகப் பெறுவர், சிலர் செய்திகளை நேரடியாகப் பெறமாட்டார். செய்திகள் குறித்த இடத்தில் குறித்த கருவி வழியாகத்தான் பரப்பப்படவேண்டும் என்ற கட்டாயத் தன்மை காணப்படமாட்டாது என் பலபடி போக்கு மாதிரி கூறுகின்றது.

தொலைக்காட்சி செய்தி அறிக்கைகள் பற்றியதில், அலைவரிசையின் கொள்கைகளால் செய்திகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தின் தன்மை தீர்மானிக்கப்பட முடியும். செய்தியை அளிக்கை செய்பவரின் உடல் மொழியும் உணர்வுகளும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது மிக முக்கியமானது. ஒவ்வொரு செய்திக்கும் பல பக்கங்கள் இருப்பதை ஒரு செய்தியாளர் தனது வகிபாகம் தொடர்பில் அடையாளம் காணவேண்டும்.


செய்தியாளன் தகவல் சேகரித்து வழங்கும் ஒவ்வொரு செய்தியும் ஏதாவது ஒரு வகையில் மக்களுக்குப் பயன்படவேண்டும். சாதாரண மக்கள், அடித்தட்டு மக்கள் வாழ்வில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் உருவாக, ஓரள வேனும் அநீதிகள் களையப்பட, செய்தியாளன் கொடுக்கும் செய்திகள் உதவவேண்டும் . 

உசாத்துணை நின்றவை:-
  1. https://www.savukkuonline.com/11999/, accessed on 03.06.2020 
  2. https://www.google.com/search?q=news+3d+background&safe=active&sxsrf=ALeKk03y1Xn9ADMxZpIeBZv0eaqubz8Kfw:1591613858709&source=lnms&tbm=isch&sa=X&ved=2ahUKEwiHzKvVh_LpAhW063MBHUalDWUQ_AUoAXoECAsQAw&biw=1242&bih=524,accessed on 03.06.2020 
  3. தொடர்பாடலும் ஊடகவியற்கற்கையும், தரம் 11, இரண்டாம் பதிப்பு 2016, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இலங்கை 

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff