Difference between New Values & Elements of News:
ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை,
யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை
News Value:: செய்தி மதிப்புகள் - பெறுமதி சேர்க்கும் காரணிகள் : செய்திக்கு வழங்கப்பட்ட பல்வேறு வரையறைகளை நாம் சந்தித்திருக்கிறோம். அவை எமது கவனத்தையும் ஈர்த்துள்ளன. ஒரு நிகழ்வு செய்திகதான என தெரிந்தெடுப்பதற்கு அவை பெரும் உதவிபுரிந்துள்ளன. சில பொதுவான காரணிகள் தமக்குள் சிறிய மற்றும் பெரிய அளவில் சில பண்புகளை மற்றொன்றுடன் பகிர்ந்து கொள்ளுகின்றன.
செய்தி என்பதற்கு கொடுக்கப்பட்ட பல்வேறுபட்ட வரையறைகளிலிருந்து எடுக்கப்பட்ட பொதுவான சில அம்சங்களை செய்தி மதிப்புகள்–பெறுமதி சேர்க்கும் காரணிகள்– என கூறுகின்றோம். இந்த பெறுமதி சேர்க்கும் காரணிகளே ஒரு பொதுவான சம்பவத்திற்கு, நிகழ்வுக்கு, அறிக்கைக்கு, கருத்துக்கு செய்திப் பெறுமானத்தை–மதிப்பை கொடுக்கின்றன. செய்திக்காக கொடுக்கப்பட்ட பலவேறுபட்ட வரைவிலக்கணங்களிலிருந்த வடிகட்டி எடுக்கப்பட்ட பொதுவான அம்சங்களே செய்தயின் மதிப்புகள் எனப்படுகின்றன. இந்த செய்தி மதிப்புகளை அளவுகோலாக வைத்து ஒரு பொதுச்சம்பவம், நிகழ்வு, வாக்குறுதி, கருத்துக்கள் செய்திசார் பெறுமானத்தை பெறுகின்றன எனலாம். ஒரு செய்திப் பொறுமானத்தின் அளவுகோலுக்கு எதிராக ஒரு நிகழ்வை மதிப்பீடு செய்தலின் முதல் நிலை –கட்டம்– இதுவே ஆகும்
News Elements: செய்தியின் கூறுகள்ஃஅளவுகோல்கள்: குறிப்பிடப்பட்ட ஒரு நிகழ்வு செய்தியாக வடிவமைக்கப்பட -கருதப்பட- தகுதியானது என முடிவு எடுக்கப்பட்ட உடன் அல்லது பின்னர் அடுத்த கட்டமாக அதனை ஒரு செய்தி ஊடகத்திற்கு அல்லது ஒரு செய்திப் பத்திரிகைக்கு எழுதுகின்றோம். இப்போது அந்த நிகழ்வை நியாயமாக எழுத தேவையான நிபுணத்துவம், துல்லியாமாக எழுத தேவையான துணிவு, தெளிவாக தெரிவிக்க தேவையான திறமை, தொடராக ஒழுங்குபடுத்தும் ஆற்றல், சுற்றிவளைக்காது சுருக்கமாக படைக்கும் ஆற்றல். அழகுற அனைத் தையும் அடக்கும் ஆற்றல், அற்புதமாக அர்த்தம் நிறைந்ததாக்கும் ஆற்றல், சுவாரிசமாக சமர்ப்பிக்கும் பாணி, பக்கம் சாராது சொற்குறைப்பும் பொருள் செறிவும் கொண்டு எழுதும் ஆற்றல். பொருத்தமான சொற்களை, அனைவருக்கும் தெரிந்த பொதுவான மொழியில் எழுதும் ஆற்றல் போன்றவை மிக முக்கியமாவை. ஒரு செய்தி எழுத்தாளர் செய்தியை எழுதும்போது பயன்படுத்தும் இந்த நிபுணத்துவமே செய்தியின்;கூறுகள் எனப்படும்.
உசாத்துணை நின்றவை:-
- பத்திரிகை இயலுக்கு ஓர் ஆறிமுகம் முதற்பதிப்பு 26 டிசம்பர் 2001இ புனித வளன் கத்தோலிக்க அச்சகம்இ யாழ்ப்பணம்.
No comments:
Post a Comment