Friday, October 31, 2025

வசீம் தாஜ{தீனின் மரண விசாரணையும் சிறுநீர் போன வைத்தியர் ஆனந்த சமரசேகரவும்

ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர், 

சட்ட வைத்தியர் பேராசிரியர் ஆனந்த சமரசேகரஇ வசீம் தாஜுதீன் மரண அறிக்கையைத் திரிபுபடுத்தி எழுதியூள்ளார்.இலங்கை அரச நிர்வாகத்தின் படுமோசமான துஸ்பிரயோகம் இது. வசீம் தாஜுதீன் மரணத்தைப்பற்றி நாம் கடந்தவாரம் இதேபகுதியில் எழுதியிருந்தோம். தாஜுதீனின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த வைத்தியர் ஆனந்த சமரசேகர பொலீஸ் விசாரணைகளுக்குச் சரியாய் ஒத்துழைக்கவில்லை என்று அறியமுடிந்தது. இன்று ஆனந்த சமரசேகரவினுடைய இந்தச் செயலை விரிவாகப்பார்ப்போம். மே17இ2012ஆண்டு வசீம்தாஜுதீன் சென்றவாகனம் நாரஹேன்பிட்டிய சாலக்கா மைதானத்துகுகருகில் ஒரு மதிலில் விபத்துகுள்ளாகி அவர் இறந்துபோனதாக மறுநாள் இலங்கைப் பத்திரிகைகளில் செய்திகள் மூலையோரமாக வெளியாகியிருந்தன. 

மே18. மற்றும் மே19.என்பது ராஜபக்சை அரசுக்கு விடுதலைப்புலிகளை வென்றௌம் என்னும் போர் வெற்றிவிழாத்தினங்கள்;. மிகக்கோலாகலமாக அந்த அரசு காலிமுகத்திடலில் கொண்டாடும்போது அந்தநிகழ்வூ ஓர் ஊடக விஸ்திரணமாகிப்போனது. தனிநபர்கள் கார் ஓட்டிக்கொண்டுபோய் விபத்துகுள்ளாகி இறந்துபோன துன்பியலுடன் ஒப்பிடும்போது வசீம் தாஜுதீனின் மரணம் மிகவித்தியாசமாகிருந்தது. அவர் காரின் பயணிகள் ஆசனத்தில் சீற் பெல்ட் அணிந்த நிலையில் இறந்து கிடந்தார். இந்த அவலத்தைப் பூதாகரமாக்கி மே18-19 நாள்களில் செய்திகளை வெளியிட்டிருக்க முடியூம். ஆனால் பெருமளவான ஊடகங்கள் அன்றைய ராஜபக்சை அரசு சொல்லும் கேவலங்களைச் செய்திகளாக வாந்தி எடுத்துக்கொண்டிருக்கு மளவூக்குத்தான் அன்று ஊடக சுதந்திரமும் இருந்தது. 

பொய்யான அறிக்கை

மே18இ வசீம்தாஜுதீனின் உடலைப் பரிசோதித்த வைத்தியர் ஆனந்த சமரசேகரஇ காலை11 மணிக்கு தன்னுடைய இளையவர்களான வைத்தியர்கள் ஸ்ரீயந்த அமரசேன மற்றும் ராஜகுருவிடம் உடலை ஒப்படைத்து இது விபத்து அல்ல. இதில் ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதுபோல தெரிகிறது. இந்தப் பிரேதப் பரிசோதனையைக் கச்சிதமாகச் செய்யூங்கள் என்று சொல்லிவிட்டு வெளியே போனாராம். இரண்டு வைத்தியர்களும் பரிசோதனைகளை ஆரம்பித்த சில நொடிகளில் அவர்களுக்கு இந்தமரணம் விபரீதமானது என்று புரிந்துபோனது. தாஜுதீனின் தொண்டைப் பகுதியிலும் நெஞ்சுப்பகுதியிலும் துவாரங்கள் இருந்தன. தொடைஎலும்புகள் முழங்காலுடன் இணையூம் இடங்கள் மோசமாக நொறுக்கப்பட்டிருந்தன. பற்கள் உடைக்கப்பட்டிருந்தன. மேலும் தாஜுதீனின் ஆணுறுப்பும் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தது. எல்லாவற்றையூம் தம்பரிசோதனை அறிக்கைகளில் குறித்துக் கொண்ட வைத்தியர்களும் பிரேதத்தை பிரீசரில் போட்டுவிட்டு போய்விட்டார்கள். எங்கோ சென்றிருந்த வைத்தியர் ஆனந்த சமரசேகர பகல் 12:30அளவில் அவசரமாகத் திரும்பிவருகிறார். ஸ்ரீயந்தவூம் ராஜகுருவூம் எழுதியிருக்கக்கூடிய அறிக்கையைப் படித்துவிட்டு தாஜுதீனின் பிரேதத்தை மீண்டும் தனியாகப் பிரேதப் பரிசோதனை செய்ய ஆரம்பித்தார். இந்தமரணத்தில் ஏதோ ஒரு விடயம் இருகிறது. கவனமாய்ப் பார்த்து வேலை செய்யூங்கள் என்று சகாக்களிடம் சொல்லிவிட்டுபோன அதே ஆனந்த சமரசேகர மொத்தமாக தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இது ஒரு விபத்தால் ஏற்பட்ட மரணம் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கை வழங்கியிருந்தார்.

ஊடக அடக்குமுறை

ஆரம்பத்தில் பிரேதப் பரிசோதனை செய்த வைத்தியர்களான ஸ்ரீயந்தவூம் ராஜகுருவூம் ஆனந்த சமரசேகரவின் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குக் கூடவிருந்த சாட்சிகளாக கையொப்பமிட்டு இருந்தனர். அத்தோடு தாஜுதீன் விவகாரம் விபத்து என்ற பொய்ப்போர்வையால் மூடி மறைக்கப் பட்டது. ஆனால் இப்படி மூடப்பட்ட பொய்யில் விரிசல்கள் விழத்தொடங்கின. டுயமெய ஈ நியூ+ஸ் போன்ற இணையத்தளங்கள்இ ராவய போன்ற பத்திரிகைகள் கேள்வி எழுப்பிக் கொண்டு கட்டுரைகள் எழுதினாலும் முகநூலில் தங்களுடைய அடையாளத்தை மறைத்தபடி சில முகநூல் பக்கங்கள் இது ஒருகொலை என்று சத்தியம் செய்து கொண்டிருந்ததாலும் இராட்சதத் தனமான ராஜபக்சை அரசின் ஊடக ஒடுக்குமுறையை மீறி சாதாரணமக்களிடம் இவைபோய்ச் சேரவில்லை. 

உதவமறுத்த ரணில்-மைத்திரி அரசு

சனவரி 08இ 2015ஆண்டு சனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சை தோற்கடிக்கப்பட்டுஇ நல்லாட்சி குழுபதவிக்கு வருவதற்கு தாஜுதீன் மரணம் தேர்தல் மேடைகளில் வாக்கள்ளும் இயந்திரமாக்கப் பட்டது. ராஜித சேனாரத்னஇ வசீம் தாஜுதீன் கொலைக்கு ராஜபக்சைவினுடைய மனைவி சிரந்தி ராஜபக்சை சம்பந்தப்பட்ட இருப்பதாகவூம்இ அலரிமாளிகையில் இருந்து தாஜூதீனைச் சித்திரவதை செய்த இடத்தில் இருந்த நபர்களுக்கு 42 தொலைபேசி அழைப்புகளை வழங்கியிருந்ததாகவூம்இ மக்களை அச்சத்தில் உறையச்செய்யூம் உரைகளை அந்த காலத்தில் ஆற்றியிருந்தார். பின்னாளில் சிரந்தியினுடைய கால்ட்டன் இல்லத்துகுச் சொந்தமான டிபண்டர்வாகனம் தாஜுதீனை பின்தொடர்ந்தது சிஐடியால் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் அன்றைய கோமாளி அரசு விசாரணை மேற்கொண்ட சிஐடி பணிப்பாளர் ~hனி அபேசேகர போன்றௌருக்கு எந்த ஒத்துழைப் பையூம் வழங்கவில்லை. சிரந்தி மற்றும் யோசித்தவின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்த படைவீரர்களின் விபரங்கள் மற்றும் குறித்தத் தினங்களில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பற்றிய எந்த ஒரு விபரத்தையூம் வழங்க ரணில்-மைத்திரி அரசு மறுத்துவிட்டது.

வசீம்தாஜுதீனின் உடல் யூலை2015ஆண்டு நாடாளாமன்றத் தேர்தலுக்குமுன் மீண்டும் தெகிவளை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் இருந்து எடுக்கப்பட்டு இரண்டாவது தடவையாகப் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அந்நாள்களில் இலங்கையில் மிகப்பிரபலமான வைத்தியர்களான அஜித் தென்னக்கோன் ஜீ.பெரேரா மற்றும் கொலம்பகே ஆகியயோர் பிரேதப் பரிசோதனை நடத்தினார்கள். தாஜுதீனின் சடலத்தின் தொடைஎலும்புகளும்இ நெஞ்சு எலும்புகளும்இ தொண்டைக் குழிஎலும்புகளும் காணாமல்போயிருப்பதைகண்டு பேரதிர்ச்சிக்குள்ளானர். இப்போது என்ன செய்வது? தாஜுதீனின் சடலத்தை ஆரம்பத்தில் பிரேதப் பரிசோதனை செய்த வைத்தியர்கள் ஸ்ரீயந்த அமரசேன மற்றும் ராஜகுரு ஆகியோர் பிரேதப்பரிசோதனை செய்த சம்பூரணமான அறிக்கையைக் கண்டுபிடிக்கிறார்கள். தொண்டைக்குழி எலும்புகளும் நெஞ்சு எலும்புகளும் தொடைஎலும்புகளும் சேதமாக்கப்பட்ட இருப்பதாக ஸ்ரீயந்தவூம் ராஜகுருவூம் அப்போது எழுதிய அறிக்கைக்குச் சான்றுபகரும் விதமாக அன்றைய எக்ஸ்ரே அறிக்கை எல்லா எலும்புகளும் பத்திரமாகவிருப்பதையூம் விபரிக்கிறது. ஆனால் அவை சேதமாக்கப்பட்டிருந்தன. ஆகவே வைத்தியர் ஸ்ரீயந்த மற்றும் ராஜகுருவின் பிரேதப்பரிசோதனைக்குப்பிறகு தாஜுதீனின் எலும்புகளை களவாடியது யார்?என்று விசாரணைகள் ஆரம்பமாகின. விடை தெரியாத கேள்விகள் இங்கும் ஆக்கிரமித்திருந்த நிலையில் விசேட வைத்தியர் குழு தாஜுதீன் கொடூரமாய் வதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக முடிவூக்கு வந்தனர்.

வதைசெய்யப்பட்ட தாஜுதீன்

தாஜுதீனை எங்கோ கொன்றுவிட்டு ஒரு விபத்தாய் நாடகமாடி இருக்கிறார்கள் என்று முடிவூ செய்தார் சானி அபேசேகர. சிஐடி 2012 தாஜுதீனின் பிரேதப் பரிசோதனையோடு சம்பந்தப்பட்ட வைத்தியர் ஆனந்த சமரசேகரவையூம் உதவியாளர்களாயிருந்த ஸ்ரீயந்த மற்றும் ராஜகுருவையூம் விசாரணைக்குள் கொண்டுவருகிறார்கள். எலும்புகளுக்கு என்ன நடந்தது என்று ஆனந்த சமரசேகரவிடம் விசாரித்தபோதுஇ தனக்கு எதுவூம் தெரியாது என்று முதலில் கைவிரித்தார். ஸ்ரீயந்த மற்றும் ராஜகுருவிடம் விசாரரித்தபோது. நாங்கள் பிரேதப் பரிசோதனை செய்தோம். நாங்கள் இன்று காணாமற்போய் இருப்பதாகச்சொல்லப்படும் எலும்புகள் தொடர்பாக அறிக்கையூம் எழுதி வைத்தோம். அது மட்டுமல்ல தாஜுதீன் உடலில் ஏற்பட்டிருந்த அசாதாரண காயங்கள் பற்றி ஆனந்த சமரசேகரவிடமும் முறையிட்டோம் என்றார்கள். மேலும் இந்த எலும்புகளை வைத்தியர் ஆனந்த சமரசேகர வேறாக எடுத்து கொண்டார் என்று வைத்தியர் ராஜகுரு மேலும் ஒரு அறிக்கையில் எழுதியிருந்தார். உடனே மீண்டும் சிஐடி ஆனந்த சமரசேகரவை நெருங்கியது. எலும்புகளை நீங்கள் எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அறிக்கையூம் இங்கே இருக்கிறது. எங்கே எலும்புகள் என்று எகிறினார்கள் சிஐடி. அதுவா? நான் மேலதிகப் பரிசோதனைகளுக்காக எடுத்தேன். அதை ஒரு ரொலியின் மீது வைத்தேன். அதன் பின்னர் எனக்கு மறந்துவிட்டது. அந்த எலும்புகளுக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை என்றார். ஆனந்த சமரசேகர பதில் கொடுத்த எழுகோலத்தை வைத்தே சாட்சிகளை அழிப்பதில் அவர் துணைபோயிருக்கிறார் என்ற முடிவூக்கு வந்தது சிஐடி. 

மீண்டும் ஆனந்த சமரசேகர ஸ்ரீயந்த அமரசேன மற்றும் ராஜகுரு ஆகியோரை ஒன்று சேர்த்து விசாரணைகள் ஆரம்பமாகின. பிரேதப் பரிசோதனையை நீங்களா மேற்கொண்டீர்கள் என்று ஆனந்த சமரசேகரவிடம் கேட்டபோது எந்த தயக்கமும் இன்றி ஆம் நான்தான் என்றார். ஆனால் ஸ்ரீயந்தவூம் ராஜகுருவூம் அதனை மறுத்த விட்டனர். நாங்கள்தான் முதலில் பிரேதப் பரிசோதனை செய்தோம். எங்களுக்குத் தாஜுதீனின் உடலில் காயங்கள் இருந்த இடங்கள் தொடர்பாகச் சந்தேகங்கள் ஏற்பட்டது. நாங்கள் ஒன்றும் விடாமல் எல்லாவற்றையூம் குறித்துவைத்திருக்கிறௌம். இந்த நிலையில் ஆனந்த சமரசேகர மீண்டும் வந்தார். அவர் தனியே பிரேதப் பரிசோதனை மேற்கொண்டார். இது ஒரு விபத்து என்று தனது கடைசி அறிக்கையை எழுதினார். எம்மிடம் பலவந்தமாகத்தான் கையொப்பங்களை வாங்கினார். நாம் கையொப்பம் வழங்காவிட்டால் எமது மேற்படிப்புக்கு அனுமதிக்கப்போவதில்லை என்று மிரட்டினார். எமக்கு வேறுவழியில்லாமல் கையொப்பங்கள் வைத்தோம் என்றனர். ஒரு பிரேதப் பரிசோதனை நடக்கும்போது அது எந்த வகையான மரணம் என்றாலும் நீதிமன்ற விவகாரம் என்றபடியல் அந்தப் பிரேதப்பரிசோதனை நடக்கும் நிகழ்வைப் புகைப்படம் எடுப்பார்கள். தாஜுதீனின் மரணப்பரிசோதனை நடந்தநேரம் 79 புகைப்படங்கள் எடுக்கப்பட்டதைக் கண்டுபிடித்தது சிஐடி. ஆனால் எந்தவொரு புகைப்படத்திலும் ஆனந்த சமரசேகர இல்லை. நீங்கள் பிரேதப் பரிசோதனை செய்தால் இந்த புகைப்படங்களில் இருக்கவேண்டுமே. நீங்கள் ஒருபுகைப்படங்களிலும் இல்லையேஎன சீஐடி கேட்டபோது என்னைக் காட்சிப்படுத்தாமல் மற்றவர்களை வைத்துப் புகைப்படங்களை எடுக்கச்சொல்லி நான்தான் சொன்னேன் என்று மீண்டும் ஓர் அபூர்வமான காரணம் சொன்னார் அவர்.

புகைப்படப்பிடிப்பாளின் அறிக்கை

உடனே புகைப்படப்பிடிப்பாளர் அழைக்கப்படுகின்றார். இவர் என்ன சொல்லுகிறார். இவரை எடுக்காமல் ஏன் புகைப்படம் எடுத்தீர் என்று கேட்டபோதுஇ இது என்ன பைத்தியக்காரக் கதை. இவர் அகப்படாது புகைப்படம் எடுப்பதா எனதுவேலை. நான் மரணவிசாரணைகளுக்கான உத்தியோகபூர்வ புகைப்படப்பிடிப்பாளர். துல்லியமாக அனைத்தையூம் ஆவணப்படுத்துவது எனது கடமை என்றார் அவர். ஆனந்த சமரசேகர ஒரு குற்றத்தை தாழ்ப்பாழ்போட்டு மூடி மறைக்க முனைவது நிருபணமானது. ஆனந்த சமரசேகர வசமாய் இறுகி ஒரு கட்டத்தில் நிதானமிழந்து இனிமேல் என்னவாகும் எல்லாம் முடிந்துவிட்டதுதானே என்று கேட்டார். அதற்கு சிஐடி இனிமேல்தான் ஆரம்பமாகப்போகிறது உங்களுக்கு வந்த தொலைபோசி அழைப்புகள் பற்றிய விசாரணைகள் என்றனர். அவ்வளவூதான் ஆனந்த சமரசேகர அந்த இடத்திலே சிறுநீர் போய்விட்டாராம். சிஐடி காரியலையத்தில் ஆனந்த சமரசேகரவிற்கு எற்பட்ட இந்த நிலைமை தொடர்பாக அப்போது ராவைய பத்திரிகை ஒரு விரிவான கட்டுரையையூம் எழுதியிருந்தது. இதேவேளை காணமல்போன வசீம்தாஜுதீனின் எலும்புகள் நெவில் பெனாண்டோ மருத்துவ மனையில் இருக்கலாம் என்று சந்தேகம் எழும்பவே சிஐடி அங்கு விரைந்தது.

சைரம் மருத்துவமனையில் நடந்தது என்ன

சைரம் என்று அன்று அழைக்கப்பட்ட நெவில் பெனாண்டோ மருத்துவமனையில் மற்றும் மருத்துவக் கல்லூரியில் ஆனந்த சமரசேகர பணிபுரிந்து கொண்டிருந்தார். சிஐடி அங்கிருந்த ஆய்வூகூடங்களைப் பரிசோதித்தபோது மற்றும் ஓர்அபூர்வ மேசடியைக் கண்டிறிந்தது. மே 01இ 1993ஆண்டு ரணசிங்கப் பிறேமதாசவூடன் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்வர்களின் எலும்புகளை எல்லாம் ஆனந்த சமரசேகர இலாவகமாக அங்கு கொண்டுவந்திருப்பது தெரியவந்தது. வசீம் தாஜுதீனின் விவகாரத்தில்; சாட்சிகளை அழித்தக் குற்றச்சாட்டிற்காகவூம் அரச பகுப்பாய்வூத் திணைக்களத்தில் இருக்கவேண்டிய எலும்புகளைத் தாம் பணிபுரியூம் மருத்துவனைக்குக் கொண்டு சென்றதால் பொதுச்சொத்துகளைத் துஸ்பிரையோகம் செய்தக் குற்றச்சாட்டுக்காகவூம் கைது செய்யப்பட்டார் ஆனந்த சமரசேகர. முன்பிணைகோருவதும் கைதுசெய்யப்பட்டு பிணையில் வருவதுமாக மூன்று-நான்கு ஆண்டுகள் இப்படியே கழிந்தன. ஆனந்த சமரசேகர எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் 2020ஆண்டு அவர் இறந்துபோனபோது கொழும்பு மேல்நீதிமன்றம் இந்த வழக்கு முடிவூக்கு வருவதாக அறிவித்தது. ஒரு மருத்துவர் தனது கடைமையைச் செய்யாது தவறவிட்டு ஒரு குற்றத்தை யாருக்காகவோ மறைக்கப்போனதன் விளைவூகள் பாதாள உலகக் கும்பல்போல ஆட்சிக்கு உடந்தையாக இருந்த ஆனந்த சமரசேகரபோன்ற வைத்தியர்களும் அனுர சேனநாயக்க போன்ற டிஐஜிக்களும் வசீம் தாஜுதீனின் மரணத்திற்குப் பங்குதாரர் ஆகிப்போனார்கள். இன்று வசீம்தாஜுதீனைப் பின்தொடர்ந்த வாகனத்தில் இருந்ததாக உறுதிசெய்யப்பட்டிருக்கும் கஜ்ஜா எல்லாம் சும்மா ஏவலர்கள். படிப்பறிவில்லாத பாதாளப் பெயர்வழிகள். ஆனால் போரசிரியர் ஆனந்த சமரசேகரவூம் இந்தக் கொலைக்கு ஏதோவொருவிதத்தில் துணைபேயிருக்கிறார். என்ன படித்து என்ன பலன். மெத்தப் படித்த அவரையூம் சம்பத் மரம்போரி கஜ்ஜா குழுமத்துடன்தான் சேர்க்கவேண்டி இருக்கிறது. 

Hisham.M.Vlog என்னும் வலையொளிப் பதிவிலிருந்தும் https://www.colombotelegraph.com, https://lankanewsweb.net, https://economynext.com, https://dbsjeyaraj.com/dbsj, https://www.themorning.lk,https://www.dailymirror.lk, https://www.adaderana.lk பதிவிலிருந்தும் தொகுக்கப்பட்டது)


Wednesday, October 22, 2025

சொப்பன சுந்தரியை யார் வைத்திருக்கிறார்கள்

ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர், 

வசீம் தாஜுதீனைப்- (கவலொக் விளையாட்டுக் கழக றக்கி தலைவர்) பின்தொடர்ந்து சென்று டிபண்டர் (Defender Range Rover) வாகனத்தினுள் இருந்த அருண விதான கமகே எனப்படும் கஜ்ஜா 2011ஆம் ஆண்டுமுதல் 2013ஆம்ஆண்டுவரை பாதுகாப்பு அமைச்சில் ஒரு சாரதியாவார். பொலீஸ் ஊடகப்பேச்சாளர் ஏ.எஸ்.பி மினுர சேனறத் செப்டம்பர் 30ஆம் திகதி மாலை திடீர் ஊடகச் சந்திப்பொன்றை நடத்தி வசீம் தாஜுதீனை பின்தொடர்ந்த டிபண்டரில் இருந்த நபர் கஜ்ஜா என்றும் அவரது மனைவி விசாரணைகளின்போது தெரிவித்ததாகவும் அறிவிக்க இலங்கையின் அரசியல் களம் அலங்கமலங்கமாகியது. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, கஜ்ஜாவின் மனைவி வாக்குமூலம் கொடுத்தால் நாமல் ஏன் குழப்பமடைய வேண்டும் என்று வினவுகிறார். நாமல் ராஜபக்சை சம்பந்தமே இல்லாமல் அறிக்கைக்குமேல் அறிக்கை விட்டு முயலாமையாகிறார். 


கஜ்ஜாவுக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவருக்கு 16 இளையவருக்கு 9 மற்றும் மகளுக்கு 6 வயதுகள். இந்த இளைய இரு பிள்ளைகளும் பெப்ரவரி 18, 2025அன்று தந்தையுடன் சுட்டு கொல்லப்பட்டார்கள். அதுபற்றி பின்னர் நோக்குவோம். ராஜபக்சைக்களுக்கு இப்படி எல்லாம் ஏவலாளிபோல உழைத்தேன் என்று ஊடகவியலாளர் சமுதித்தவினுடைய வலையொளிச் சனலுக்கு இரண்டு தடவை நேர்காணல் வழங்கியிருந்தார் கஜ்ஜா.

கஜ்ஜாவின் மூத்தமகனின் ஊடக சந்திப்பு,

பொலிஸ் ஊடகப்பேச்சாளரின் அறிக்கை வந்த மறுநாள் கஜ்ஜாவின் மூத்தமகன் இந்துவர விதான கமகே ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். நன்னுடைய தந்தையைத் தன் தாயாரும் அவரோடு முறையற்ற தொடர்பைப்பேணி வந்த நபரும்தான் தீர்த்துக் கட்டியிருக்கவேண்டும். சம்பத் ராமநாயக்க எனப்படும் அந்த நபர் பக்கோ சமன் எனப்படும் இந்தோனேசியவில் கைது செய்யப்பட்டு அழைத்துவரப்பட்ட பாதாள உலகத் தாதவிற்கு நெருக்கமான பெயர்வழி. இந்த சந்தேகம் தனது தந்தையின் சகோதரிகளுக்கு இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார் அவர். இதுபற்றி தனது முகநூலில் ஒரு பதிவும் எழுதியிருந்தார். அத்துடன் அனது தந்தையின் கொலையைத் தொடர்ந்து ஒரு தொகை பணம் தனது தாயாரின் கணக்குக்கு கைமாற்றப்பட்டிருக்கிறது. இது மேலும் தனது தந்தையின் கொலையில் சந்தேகங்களை எழுப்புகின்றது என்றும் அவர் கூறுகிறார். கஜ்ஜாவின் மூத்தமகனின் திடிர் பிரவேசம் யாரும் எதிர்பார்த்திராத ஒன்று. பாடசாலைக் கல்வியை முறையாகப் பெறாத, பாடசாலைக் கல்வியை இடை நிறுத்திய கஜ்ஜாவின் மகனை ஊடகவியலாளர் சந்திப்பு நடத்துமளவிற்கு கொண்டுபோன அந்த சத்தி எது? இதன் பின்னால் கடந்த காலங்களில் இனவாதத்தை மூட்டிய இரு பிரதான சத்திகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பலத்த ஊகங்கள் முன்வைக்கப்பட்டன. சிங்கள மொழியில் அதுவரை இலக்கணப் பிழையின்றி ஒரு பதிவேனும் எழுதியிராத கஜ்ஜாவின் மூத்தமகன், ஆங்கில எழுத்துகளால்  கிறுக்கிப்போடும் கஜ்ஜாவின் இந்த மகன். ஆங்கிலத்தில் சரியாக எழுதத் தெரியாத கஜ்ஜாவின் இந்த மகன், தாயார் யாரோ ஒரு நபருடன் தொடர்பு பட்டிருந்தார் என்றும் தனது தந்தை நல்லவர்-வல்லவர் என்றும் சுத்தமான சிங்களத்தில் எழுதியிருந்தார். இது எப்படி சாத்தியமானது என்பது புரியாத புதிர் என முகநூல் பயனர்கள் பலர் தெரிவித்தனர். 

கஜ்ஜாவின் மனைவி ஊடக சந்திப்பு

இதனைத் தொடர்ந்துதான் கஜ்ஜாவின் மனைவி அஜித் தர்மபால என்பவருடைய வலையொளி சனலுக்குப் பேட்டி ஒன்றை வழங்கினார். தன்னுடைய கணவர் 2009ஆண்டு மார்கழி வரை கரகம்பிட்டிய எத்தியாவத்த பேருந்து 76 வழித்தடத்தில் சாரதியாகப் பணிபுரிந்தவர் என்றும், ஊடகங்களில் இன்று அவதூறு சொல்லும் மூத்தமகன்: இந்துவர விதான கமகே தை 03, 2010  பிறந்ததாகவும் மகன் பிறந்தகாலத்தில் தாம் கணவருடன் மகிந்த ராஜபக்சையின் சொந்த ஊரான நதமுல்லையில் இருந்ததாகவும் வலஸ்முல்ல-யாழ்ப்பணம் வழித்தடத்தில் பயணிக்கும் பேருந்தில் தனது கணவர் சாரதியாக வேலைக்குச் சேர்ந்ததாகவும் கஜ்ஜாவின் மனைவி சொல்லியிருந்தார். அப்படி ஒருவருடம் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கும்போது ஒருநாள் பேருந்தில் கஞ்சா கடத்தி தனது கணவர் கஜ்ஜா பொலிஸ்சில் பிடிபட்டதாகவும் தனது தந்தையும் கபில திஸ்சாநாயக்கவும் முன்னாள் தென்மாகாண உறுப்பினரும் சேர்ந்து தன் கணவரை எப்படியோ பிணையில் வெளியில்  எடுத்ததார்கள். அதன் பின்னர் கபில திஸ்சாநாயக்கவும் மகிந்த இராஜபக்சையும் சேர்ந்து பாதுகாப்பு அமைச்சில் சாரதி வேலை பெற்றுக் கொடுத்ததாகவும் 2011முதல் 2013 வரை அவர் பாதுகாப்பு அமைச்சில் பணிபுரிந்ததாகவும் சாட்சியம் பகிர்ந்தார் கஜ்ஜாவின் மனைவி. அதாவது வசீம் தாஜுதீன் இறந்த காலப்பகுதியான மே17,2012 கஜ்ஜா பாதுகாப்பு அமைச்சில்தான் பணிபுரிந்திருக்கிறார் என்பது அவரதுமனைவியின் இந்தவாக்கு மூலத்தின்மூலம் நிருபணமாகின்றது. கஜ்ஜாவின் மனைவியின் வாக்கு மூலத்தைப் பதிவுசெய்திருந்த சிஐடியின் மேலதிக விசாரணைகளில் கஜ்ஜா வசீம் தாஜுதின் இறந்த காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சில்தான் பணிபுரிந்தர் என்று உத்தியோக பூர்வமாக அறிவித்திருக்கின்றது. 

இன்னும் ஒரு முக்கியமான விடயம் அரசசாட்சியாக இருக்கவேண்டிய கஜ்ஜாவை பக்கோ சமன் ஏதோ கஞ்சாக் கொடுக்கல் வாங்கற் தகராறில் ஒப்பந்த அடிப்படையில் கொலைசெய்திருந்ததாகச் சொல்லியிருந்தார். கஜ்ஜாவின் கொலையைப் பெறுப்பெடுக்கமேலும் சில றெளடிகள் தயாரக இருந்ததாகவும் ஒன்றும் அறியாத இருபாலகரும் சூடுபட்ட விழுந்து இறந்ததும் அவர்கள் பின்வாங்கியதாகவும் தெரிவித்திருந்தார் பக்கோ சமன். ஆனால் கைதுசெய்யப்பட்ட ஒப்பந்த கொலையாளிகள் வழங்கிய வாக்குமூலத்தில் தமக்கு காரணங்கள் எதுவும் தெரியாது என்றும் தாம் கஜ்ஜாவைக் கொல்லமுன்னர் பக்கோ சமனைத் தொடர்பு கொண்டு இருபிள்ளைகளும் கூட இருக்கிறார்கள் என்று சொன்னதும் பரவாயில்லை அடித்துச் சாத்திவிட்டுப் போ என்று பக்கோ சமன் சொன்னதாகவும் வாக்குமூலம் கொடுத்திருந்தார்கள். 

வசீம் தாஜுதீனின் திட்டமிடப்பட்ட கொலையில் பங்காளர்கள்

கஜ்ஜா இறந்தது இரவு நேரம். இரவு 11மணிக்கெல்லாம் கஜ்ஜாவின் மூத்தமகன் கஜ்ஜாவிடம் இரவு சாப்பிட்ட சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லை என்றும் ஒரு கொத்துறொட்டி வாங்கிவரும்படி கஜ்ஜாவை கடைக்கு அனுப்பியதாகவும் கஜ்ஜா மேட்டார்சைக்கிளை ஸ்ராட்செய்ததும் இளைய பிள்ளைகள் இருவரும் ஏறிக்கொண்டதாகவும் ஒரு கதை சொல்லப்படுகின்றது. எது எப்படியோ கஜ்ஜாவின் மகனை விசாரிக்க சிஐடி இப்போது தயாராகிறது. அத்தோடு ஊடகவியலாளர் சமுதித்திடம் ஆலமரத்தடியில்  புலம்பவதுபோல புலம்பித் தீர்த்து ஒன்றுக் கொன்று முரணான பதில்களைக் கொடுத்த கஜ்ஜாவின் ககோதரிகளையும் விசாரிக்க சிஐடி தயாராகிறது. எனி இந்த விசாரணை எந்தக்கோணத்தில் நகரும் என்று பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் இந்த நிலையில், சிராந்தி இராஜபக்சையைத் தலைவராகக் கொண்ட சிறிலிய சவியா அமைப்பு என்றும் சிராந்தி இராஜபக்சை என்றும் இதுதொடர்பாக முணுமுணுப்புக்கள் ஏற்படத் தொடங்கி இருக்கின்றன. அத்துடன் மகிந்த இராஜபக்சையின் மூத்தமகன் நாமல் மற்றும் இரண்டாவது மகன் யோசித்த ஆகியோரும் வசீம் தாஜுதீனின் திட்டமிடப்பட்ட கொலையில் மிகப் பெரிய வகிபங்காளர்கள் என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. வசீம் தாஜுதீன் இறந்த தருணத்தில் கஜ்ஜா பாதுகாப்புப் அமைச்சில் எந்தப் பிரிவில் இருந்தார். யாருக்கு சேவகம் செய்தார். எந்த வண்டியில் சாரதியாகப் பணிபுரிந்தார் என்பதற்கான மர்மங்கள் உத்தியோக பூர்வமாக விலகும்போது வசீம் தாஜுதீன் மரணத்தின் 13 ஆண்டு கால துயர் விலகிவிடும்.

வசீம் தாஜுதீன் இறந்தவுடன் பொலிஸ் அறிக்கை: அவர் மதுபோதையில் சாரத்தியத்தால் இறந்தார் என்று தெரிவித்தது. ஆனால் அவர் மது அருந்துவதில்லை என்பது உண்மை. எனவே யாரைக்காப்பாற்ற பொலிஸ் அறிக்கையைத் தயாரித்தது என்பது விசாரணையின் பின்பு புலப்படும். பிரேதப் பரிசோதனையின் உண்மை மூல அறிக்கைக்கும் அரசாங்கப் பகுப்பாய்வு அறிக்கைக்கும் வேறுபாடுகள் இருப்பதை சிஐடி கண்டுபிடித்தது. ஆவணி 2015 வசீம் தாஜுதீனின் உடல் மீண்டும் இரண்டாவது பிரேதப் பரிசோதனைக்கு தோண்டி எடுக்கப்பட்டு வைத்தியர் அஜித் தென்னக்கோன் மற்றும் அவரது குழுவிர் மேற்கொண்ட பரிசோதனையில் நெஞ்சு, களுத்துப் பகுதிகளில் சில எலும்புகள் காணாமல் போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 

அனுர குமார திசாநாயக்காவின் உரை சொல்லும் கதை

2017 ஆண்டு ஆவணி 15திகதி அன்னாள் நாடாளமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்கே ஒரு கூட்டத்தில் உரையாற்றும்போது கீழ்காணும்வாறு போட்டுத் தாக்கியிருப்பார். 2012 ஆண்டு வசீம் தாஜுதீன் கொல்லப்பட்ட தினத்தில் திம்பிரிகஸ்யாயவில் உள்ள எரிபொருள் நிலையத்தில் இருந்த கடையில் வசீம் தாஜுதீன் ஒரு தண்ணீர்ப் போத்தல் வாங்குகின்றார். தண்ணீர்ப் போத்தலை வாங்கிக் காருக்குள் வைத்துவிட்டு பயணத்தை ஆரம்பித்தபோது ஒரு டிபண்டர் வசீம் தாஜுதீனைப் பின்தொடர்ந்து வருகின்றது. அந்த டிபண்டரைச் சிஐடி விசாரணைகளிலின்போது அடையாளம் கண்டுகொள்கிறது. டிபண்டரின் சரித்திரத்தைத் தேடிச்சென்றபோது அது சமூகசேவை அமைச்சுக்குச் சொந்தமானது என நிரூபணமாகிறது. அப்போது சமூகசேவை அமைச்சராகப் பீலிக்ஸ் பெரேரா இருந்தார். பீலிக்ஸ் பெரேராவிற்குச் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் வழங்கிய டிபண்டர் வாகனம் அது என்று மேலும் தகவலைத் திரட்டி எடுக்கிறது சிஐடி. புதுவகையான அந்த டிபண்டரைச் சிரந்தி கண்டார். அதன்மீது அவருக்குப் பேரார்வம் ஏற்பட்டது. ஷபீலிக்ஸ் அதை எங்களின் பாவனைக்குத் தந்துவிடுங்கள் என்று கேட்டுப் பெற்றுக் கொண்டாராம் சிரந்தி|. பீலிக்ஸ் பெரேரா டிபண்டரின் சாவிலை சிரந்திக்குக் கையளிக்கும் நிகழ்வின் போட்டோ என்னிடம் இருக்கிறது. அதற்குப் பிறகு என்ன நடந்தது. இந்த டிபண்டருக்கான எரிபொருள் செலவுகளைச் சனாதிபதிச் செயலகமே அப்போது பெறுப்பெடுத்தது. சனாதிபதிச் செயலகத்தின் தரவுகளின்படி அந்த வாகனத்தை யோசித்த இராசபக்சே பாவித்திருக்கிறார். 

வசீம் தாஜுதீன் விவகாரத்திற்குப் பிறகு இந்த டிபண்டர் காணமல் போயுள்ளது. சிஐடி அந்த டிபண்டர் ஹபரணையில் கைவிடப்பட்ட நிலையில் இருந்தபோது கண்டுபிடித்தது. ஏன் சனாதிபதிச் செயலக வாகனம் ஹபரணையில் இருக்கவேண்டும். யாரைப் பார்க்கப் போவதற்கு அந்த வாகனம் ஹபரணைக்குச் சென்றது. ஹபரணையில் சிஐடி அந்த டிபண்டர் வாகனத்தை மீட்டபோது அதன் நிறம் மூன்றுதடவை மாற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகாவே இங்கே பிரச்சினை இருப்பது உறுதியாகுகின்றது. வசீம் தாஜுதீன் கொல்லப்பட்ட இரவில் அவரது காரைப் பின்தொடர்ந்து ஒரு டிபண்டர் செல்கிறது. இது சிரந்தியின் சிரிலிய எனப்படும் நிதியத்திற்குச் சொந்தமான ஒன்று. இதை யோசித்த ராயபைக்சே பாவித்திருக்கிறார். கடைசியில் நிறத்தை மாற்றி ஒழித்து வைத்திருக்கிறார்கள். இப்படி அத்தனையையும் கண்டுபிடித்த சிஐடி,  வாக்குமூலம் வழங்கக்கூறி சிரந்தியை விசாரணைக்கு அழைத்தது. இது நியாயமானது தானே. கல்வி அறிவு இல்லாத, சமூகத்தைப்பற்றி எந்தவித பிரக்ஞையும் இல்லாத, நாட்டையோ, மக்களையோ பற்றி எந்தவித பாசமுமில்லாத மனிதர்களை உருவாக்கி இருக்கிறார்கள் இந்த இராசபக்சைக்கள். ஆனால் சிரந்தியை சிஐடிக்கு அழைக்கும்போது அவர்கள் வந்து தேசத்தின் அம்மா என்று கத்துகிறார்கள். ஒரு இளைஞனின் கொலை சம்மந்தமாக விசாரணைக்கு சிஐடி அழைத்திருக்கிறது. இந்த கும்பல் வந்து தேசத்தின் அம்மா என்று ஓலமிடுகிறது. இப்படியாக நீண்டுகொண்டு போகும் இந்தஉரை இப்போதும் வலையொளியில் இருக்கிறது. 

பிரதமர் ரணிலின் கபடம்

அன்று சிரந்தியை சிஐடி விசாரணைக்கு அழைத்தபோது பிரதமர் ரணில் தனது அளவில்லாக் கருணைக் கடலைத் திறந்து விட்டார். சிஐடிக்குப், பாதம் நொந்துகொண்டு சிரந்தி போவதற்குப் பதிலாக, சிரந்தியிடம் சிஐடி அதிகரிகளை அனுப்பி அழகு பார்த்தார் ரணில். இப்படி நல்லாட்சி என்பதையே கெட்டா வார்த்தையாக்கி நல்லாட்சியின் பெறுமானங்களைச் சிதைத்தவரைத்தான் அவரது ஆதரவுக் கண்மணிகள் ஆசியாவின் அதி அற்புத சனநாயகச் செம்மல் என்று இன்றும் துதிபாடுகிறார்கள். சனாதிபதி சிறிசேன தன்னுடைய பங்குக்குக் கருத்தும் மூட்டினார். அவருக்கு இரவு 10 மணிக்குப் பிறகு நாட்டில் நடப்பது எதுவுமே தெரியவில்லை. மாலை நேர காலிவிதி வாகனநெரிசலைக் கடக்க முயலும் இரு குருடர்கள் போலதான் அன்றைய ஆட்சியின் இலச்சணம் இருந்தது. 

கஜ்ஜாவை யார் வைத்திருந்தார்கள்

அன்று நாடாளமன்ற உறுப்பினராய் டிபண்டர் கதை சொல்லும் அனுர குமார திசாநாயக்கா இன்று சனாதிபதி. அன்று சிஐடி பணிப்பாளராய் இருந்த கீர்த்திமிகு ஷhனி அபயசேகர இன்றும் சிஐடி பணிப்பாளராய் இருக்கிறார். இதனால்தான் இந்த விசாரணைகள்மீது பொதுமக்களுக்குத் துளியளவேனும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது. அனுர குமார திசாநாயக்கா அன்று சொன்னதைப் பார்க்கும்போது தாஜுதீனைப் பின்தொடர்ந்த டிபண்டர் வாகனத்தில்தான் கஜ்ஜா இருந்திருக்கிறார் என்று தெளிவாகுகிறது. இன்று கஜ்ஜா உயிரோடு இல்லை. கேள்வி என்னவென்றால் சொப்பன சுந்தரியை யார் வைத்திருக்கிறார் என்று செந்தில் கவுண்டமணியிடம் கேட்டமாதிரி கஜ்ஜாவை அல்லது டிபண்டரை யார் வைத்திருந்தார்கள்.  

Hisham.M.Vlog என்னும் வலையொளிப் பதிவிலிருந்தும் https://www.adaderana.lk, colombo telegraph.com, Lankanewsweb.net, www.lankaenews.com, https://www.dailymirroronline.lk,bbc news .com, dbsjeyaraj.com, Morning.html, The Morning Telegraph.com, Tamil Guardian.com பதிவிலிருந்தும் தொகுக்கப்பட்டது)




Tuesday, October 14, 2025

மகிந்தாக்களால் பயன்படுத்தித் தூக்கி எறியப்பட்ட ருசுப் பேப்பர் வெலிக்கடை சிறைச்சாலையில் விழுந்த கதை

ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர், 

ராஜபக்சை குடும்பத்தின் மிகநெருங்கிய சகாவும் பிரபல பாதாள உலக தாதாவுமான யூலம்பிட்டிய அமரவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ஐப்பசி 7, 2025 அன்று உறுதி செய்திருக்கிறது.

தங்கல்ல மேல் நீதிமன்றம் கார்த்திகை 2019, வழங்கிய மரண தண்டனைக்கு எதிராக யூலம்பிட்டிய அமரே, கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு செய்திருந்தார். கார்த்திகை 2024, மேல் முறையீட்டு நீதிமன்றம், தங்கல்ல மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உறுதி செய்தது. ஆனாலும் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனாய் முயன்று பார்த்தார் யூலம்பிட்டிய அமரே. உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார். தன்னை முற்றாய் விடுவித்து அன்று பிறந்த பாலகன் போல ஆக்குமாறு யூலம்பிட்டிய அமரே தன்னுடைய சட்டதரணிகள் மூலம் கொடுத்த மனுவைப் பார்க்காமலேயே தூக்கி எறிந்திருக்கிறது உச்ச நீதிமன்றம். மூன்று நீதிமன்றங்களும் கை விரித்துவிட்;டன. இனிமேல் இலங்கையில் முறையிட நீதிமன்றம் எதுவுமில்லை. இனி ஆண்டவரிடம்தான் முறையிட வேண்டும். அல்லது மைத்ரிபால சீறிசேனை, கோட்டாபாய ராஜபக்சை, ஜே.ஆர் ஜேயவர்தன போன்ற ஆட்சியாளர்கள் அமைய வேண்டும். அப்படி ஓர் அதிஸ்டசாலி சனாதிபதி அமைந்தால்தான் பொது மன்னிப்பின் கீழ் யூலம்பிட்டிய அமரே வெளியே வரலாம். 

யார் இந்த யூலம்பிட்டிய அமரே? 

யார் இந்த யூலம்பிட்டிய அமரே? ஜீகான கமகே அமரசிறி என்னும் பெயர் கொண்டவர் யூலம்பிட்டிய அமரே என பிரபல்யமாக அறியப்படுபவர் ஆவார். அவர் சாதித்திருக்கும் சாதனைகள் என்ன என்ற கேள்விக்கு பதில்: 24 கொலை வழக்குகள், பதினைந்து கொள்ளை வழக்குகள் என்று ரொம்பவே எதிர்நிலையில் பிரகாசிக்கின்றன அமரேயின் சுயவிபர சமூகவிம்பம். இந்த யூலம்பிட்டிய அமரேயை மரண தண்டனையில் நிறுத்திய வழக்கு எது? அவர் அப்படி என்னதான் செய்தார்? அதை அறிவதற்கு அரசியல்வாதிகளால் போசிக்கப்பட்டு, காண்டாமிருகம்போல வளர்ந்து நின்ற பாதாள தாதாவின் இரத்த வரலாறுகளை நாம் சற்றேனும் அறிவது நன்று. இலங்கை அரசியல் தலைவர்களுக்கும் பாதாள உலகத்துக்குமான தொடர்பு பிரிக்க முடியாத ஒன்றாகியிருந்தது. ஜே. ஆர், -ரணிலுக்கு கோனவல சுணில் போல, பிரிமதாசவுக்கு சொத்தி உப்பாலி போல, சந்திரிக்காவுக்கு பத்தகான சஞ்சீவ போல, ராஜபக்சைக்களின் ஆஸ்தான பாதாள உலகத் தலைவராயிருந்தவர் தான் யூலம்பிட்டிய அமரே. யூலம்பிட்டிய அமரே இலங்கையின் தென்மாகாணத்தில் வெகுப்பிரசித்தம். அவருடைய சுயவிபரக் கோவையில் 06 வகுப்பு மட்டும் என்ற கல்வித் தகைமைக்கு அப்பால் துரைசார் நிபுணத்துவ அனுபவங்களாய், பொரும்நிழல்தரும் மரங்களை வெட்டி விற்றல், கஞ்சா கடத்துதல், கொலை செய்தல், கொள்ளை அடித்தல், கப்பம் கேட்டல், கள்ள மாடு வியாபாரம் என்று ஏகப்பட்வை இருக்கின்றன. அமரே ஆரம்பத்தில் மகிந்த ராஜபக்சையின் ஒன்;றுவிட்ட சகோதரி நிரூபமா ராஜபக்சையின் தோட்டக் காவலாளியாக இருந்தவர். இப்படி ஆரம்பித்த காவலாளி 18வயதில் என்ன பிடிக்கும் என்று பள்ளிப்படிப்பை மேற்கொள்ள வில்லை, மாறாகச்சிறைக்குச் சென்றார். இப்படித்தான் அமரேயின் ஆடுகளம் ஆரம்பமானது.

மித்தனியைச் சேந்த பஸ்வியாபாரி அமிலச்சூட்டி என்பவரை பிடித்து பகிரங்கமாய் அமரே செய்த கொலை பொலிஸ் ஆவணங்களில் இன்றளவும் பதபதைப்புடன் பேசப்படுகின்றது. அமரே தன்னிடமிருந்த குண்டுகளை வீணாக்கவில்லை. அமிலச்சூட்டியின் துப்பாக்கியைப் பறித்து அவரையே போட்டுத் தள்ளினார். அதன்மூலம் அமரேயின் திருநாமம் பட்டித்தொட்டியங்கும் பிரபல்யமானது. அமரேயின் பலமான அரசியல் ஆதரவுத்தலத்தின் முன்னால் கவல்துறைக்குச் சகலதையும் மூடிக்கொண்டு வேடிக்கைப் பார்ப்பதைத்தவிர வேறுவழியேதும் செய்யமுடியவில்லை. ஒரு முறை தன்னுடைய ஏற்றுமதி வியாபாரத்துகாக நான்கு ஏக்கர் காணி ஒன்றுக்குள் புகுந்து பலாமரங்களை எல்லாம் வெட்டிச்சாய்த்துக் கொண்டு இருந்தார் அமரே. இந்த அநியாயத்தைப் பார்ப்போர் கேட்போர் யாருமிலையா என்று மக்கள் சபித்தப்படி சென்றுகொண்டு இருந்தபோது, ஐந்துபொலிஸ் அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்தார்கள். சீருடையில் இருந்த அந்த அதிகாரிகளை ஒரு மணுத்தியலத்துகு மேலாக முழம்தாளிடவைத்தார் அமரே. இப்படி எல்லாம் நடக்குமா என்று அங்கலாய்க்க வேண்டாம். இப்படித்தான் இந்த நாடு ஒருகாலத்திலே இருந்தது. குண்டுத் துளைக்காத முழு ஆடை அணிந்தபடி எப்போதும் ரீ56 துப்பாக்கியைத் தோளில் ஏந்திய வண்ணம் பகிரங்கமாய் அலைவார் அமரே. இந்தியாவின் சந்தனக்கடத்தில் மன்னன் வீரப்பன் நடமாடுவதுபோல இந்த காட்சி இருக்குமாம். 

அமரேயின் சிறைச்சாலை முற்றுகை

அமரே சிறைக்குச்செல்வதும் விடுதலையாவதும் பெரிய விடையம் அல்ல. சிறையில் இருந்தால் பரவாயில்லை என்று யோசித்தால் சிறைக்குப்போவார். சிறைக்குப் போனாலும் தாராளமான உபசரிப்புகள் அவருக்குக் கிடைத்தன. 2002ஆண்டு அமரே தங்கல்ல சிறையில் இருந்தபோது நடத்திய ஒரு போராட்டத்தின்மூலம் உலக அளவில் பிரபலமானார். சிறைச்சாலை ஆயுதக் களஞ்சியத்தைக் கைப்பற்றிய அமரேவும் அவருடைய சக சிறைவாசிகளும் ஆயுதங்களை கையிலேந்திய படி திரிந்தன. அத்தனைபேர் கையிலும் ஆயுதங்கள் இருந்ததால் எந்த நேரத்திலும் சிறைச்சாலைக்குள் ஒரு கோரத் தாண்டவம் நிகழலாம் என்று எதிர்வு கூறப்பட்டது. ஊடகங்கள் எல்லாம் தங்கல்ல சிறைச்சாலையில் மையம் கொள்ளத் தொடங்கியிருந்தன. முன்னெச்சரிக்கையாக விசேட அதிரடிப்படையும் வரவழைக்கப்பட்டிருந்தது. அப்போது ரணில் பிரதமராக இருந்தார். மகிந்த ராஜபக்சை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.

உள்விவகார அமைச்சர் ஜோண் அமரத்துங்கவுக்கு நிலைமையின் விபரிதம் புரிந்திருந்தது. யாரை அழைத்துக்கொண்டு போனால் நிலைமையைச் சாந்தப்படுத்தலாம் என்று ஜோண் அமரத்துங்கவுக்கு தெரிந்திருந்தது. எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சையை அழைத்துக்கொண்டு சிறைச்சாலைக்கு விரைந்தார் ஜோண் அமரத்துங்க. சிறைச்சாலை மதிலுக்கு வெளியே இருந்தவாறே அமரே, அமரே, நான் மகிந்த ராஜபக்சையே வந்திருக்கிறேன். பயப்படாமல் வெளியே வா என்றாராம் மகிந்த ராஜபக்சைசே. அத்தோடு அமரேவின் அந்த சத்தியாகிரகப் போராட்டம் நிறைவு பெற்றது. பழையபடி அமரே தனுடைய சிறைகூடத்துக்குப் போனார். மகிந்த ராஜபக்சையின் ஒற்றை வாக்கியம் அமரேவை மகுடிக்குக் கட்டுப்படும் பாம்பாக்கியது. 2005ஆண்டு சனாதிபதி தேருதல் சமயம் மகிந்த ராஜபக்சைவுக்கு ஆதரவாய் களத்தில் இறங்கி தன்னுடைய பங்களிப்பை அச்சரம் பிசகாமல் வழங்கினார் அமரே. மேடைகளில் ஏறிப்பேசினார். பாட்டுபாடி மகிழ்ந்தார். தனுடைய ஆஸ்தான நாயகர்கள் பதவிக்குவர இப்படித்தான் உழைத்தார் அமரே. அமரே என்ற ஒருவரே அரச அங்கிகாரம் பெற்ற தாதாவாக அப்போது இருந்ததார். தென்மாகாணத்தில் இருந்த பல பாதாள உலக குழுக்களுக்கு செய்வதற்கு ஒன்றும் இருக்கவில்லை. அமரேவை எதிர்த்துகொண்டு நின்றுபிடிக்க முடியாததால் நேவி ருவான் போன்ற பிரபல தாதாக்கள் தலைமறைவானார்கள்

அதிகாரம் குறைந்த யூனியத் தாதாக்கள் அமரேவுக்கு சலாம் போட்டு ஒதுங்கி நின்றார்கள். அமரேமேல் அப்போது அதிக வம்புகளும் வழக்குகளும் குவிந்திருந்தன. ஆனால் அமரே எதையும் இலட்சியம் செய்வில்லை. எதுவுமே வேலைக்காகாததால் கண்ட இடத்தில் கைது செய்யுமாறு அமரேவுக்கு எதிராக தங்கல்ல மேல் நீதிமன்றம் திறந்த பிடியாணையை விதித்தது. எனக்கு என்ன வந்தது நீ விதித்தால் விதித்துக்கொள்ள என்றவாறு அமரே தன்பாட்டுக்குச் சுற்றித்திரிந்தார். அவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு யாருமே முயற்சி செய்யவில்லை. அந்த அளவுக்கு அமரேவின் அரசியல் பலம் இருந்தது. ஒரு முறை அமரே சாகாசமாய் வந்து சகசிறைவாசி ஒருவரை பார்த்துவிட்டுப் போவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து நின்றாராம் தங்கல்ல மேல் நீதிமன்ற நீதிபதி சந்தரசேனன்.

திறந்த பிடி ஆணை

திறந்த பிடி ஆணை பிரப்பிக்கப்பட்ட அமரே துப்பாக்கியை தூக்கிக்கொண்டு பொலிஸ் நிலையம் சென்று முறையாய்த் துப்பாக்கியை மேசைமேல் வைத்துக் கண்ணியப்படுத்திவிட்டு பொறுப்பு அதிகாரியோடு சாகசமாய் உரையாடி விட்டு வருவாராம். இப்படிப்பட்ட ஒருவரை யார் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவது. இப்போது இதை எல்லாம் கற்பனை செய்யவே அச்சமாக இருக்கிறது. இன்று சனநாயகம் பேசும் நாமலிடம் யாருமே இதற்கெல்லாம் விளக்கம் கேட்காததுதான் மற்றுமொரு புதிர். அமரேவின் அட்டகாசங்கள் இப்படி தறிகெட்டு சென்றுகொண்டு இருந்தபோதுதான் அமரேவின் வாழ்வை மொத்தமாக மாற்றிப்போட்ட அந்த சம்பவம் நடந்தது. நாமல் ராஜபக்சை தன்னை இளவரசர் என்று நினைத்திருந்த காலம்தான் அது. நாமலின் நீலப்படையெனப்படும் நில்பலகாயவில் எல்லாமாக இருந்தார் யூலம்பிட்டிய அமரே. இந்த நிலையில் ஜேவிப்பியின் பத்திரிகையான ஷலங்கா| யூலம்பிட்டிய அமரேவை போட்டு தாறுமாராகத் தாக்கத் தொடங்கியது. உச்சகட்டமாக நதமுல்லன  வேட்டை நாயை கட்டிப்போடு என்று கட்டுரை எழுதியது ஷலங்கா பத்திரிகை|. இதனால் மிகுந்த ஆத்திரம் கொண்டார் அமரே, 2012ஆண்டு யூன் 15ஆம் திகதி ஹம்பாம்தோட்ட மாவட்டத்தில் கடடிவற்ர கட்டுவான என்ற இடத்தில் லியனகே ரஞ்சித் என்பவரது வீட்டில் ஜேவிப்பியின் ஒரு சிறிய கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. அது ஒரு 50 - 60 பேர் கூடியிருந்த ஒரு கூட்டம். இன்றைய சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜாயதிஸ்ச  மேடையில் இருந்தார். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. அமரேயுடன் நான்கு பேர் மோட்டார் சைக்கிள்களில் தடாலடியாய் வந்து இறங்கினார்கள். நான் நதமுல்லன வேட்டையினாய் வந்திருக்கிறேன். யார் இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்தவன். முடிந்தால் வா மோதிப்பார்போம் என்று குரைத்தப்படி கண்டப்படி சுடத் தொடங்கினாராம் அமரே. அரசியல் தொடர்புகள் அற்ற இரண்டு பேர் அந்த இடத்திலேயே துடித்துடித்து இறந்துபோனார்கள்:- எடேறிமான்னல ஜி. மலானி (50) நிமாந்தா கேஷhன் ஜேயசேன (18) மற்றும் ஒருவருக்கு மிக கடுமையான காயம். இன்னும்பலர் கயமடைந்தனர்.

பயங்கரவாதத்தை ஒளித்து விட்டதாய் மார்புதட்டிக் கொண்ட தேசத்தில் யூலம்பிட்டிய அமரே ரீ56 துப்பாக்கிகளுடன் வந்து சனாதிபதியின் சொந்த மாவட்டத்தில் இந்த குரூரத்தை நிகழ்த்தி விட்டு போனார். அப்போது தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் என்ற ஒன்று இருந்தது. அதன் பணிப்பாளராய் லக்ஸ்மன் குலுகல்ல என்பவர் இருந்தது. இரவு 7 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. 9மணி அளவில் தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளராயிருந்த லக்ஸ்மன் குலுகல்ல, இந்த படுகொலைகளை ஜேவிப்பியின் கோஸ்டிச் சண்டை என்று கதைகட்டி, யூலம்பிட்டிய அமரேயைக் காப்பாற்றக் களத்தில் இறங்கினார். இதனால் மிகுந்த ஆத்திரமடைந்த ஜே.வி.பி, லக்ஸ்மன் குலுகல்லவை நாடாளமன்றத்திலும் பொதுமேடையிலும் வறுத்தெடுக்கத் தொடங்கியது. அமரவை கைதுசெய்யுமாறு அரசுக்கு அழுத்தம் கொடுத்து மிகப்பெரிய எதிரப்;புப் பேரணியை நடத்தியது 

அநுர குமார திஸாநாயக்கா உலுகல்லவை உலுக்கியமை

திரண தொலைக்காட்சியில் வாதப்பிட்டிய அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அநுர குமார திஸானாயக்கா லக்ஸ்மன் குலுகல்லமீது குட்டச்சாட்டுகளை அடுக்கிக்கொண்ட போனார். அப்போது நிகழ்ச்சிக்குத் தொலைபேசி வழியாகத் தொடர்புகொண்டு பேசிய லக்ஸ்மன் குலுகல்ல அநுர குமார திஸாநாயக்காவின் பொய்களுக்குத்தான் அஞ்சப்போவதிலை என்றார். அவ்வளவுதான் அநுர குமார திஸாநாயக்கா லக்ஸ்மன் குலுகல்லவை உடும்புப்பிடியாய்ப் பிடித்து உலுக்கி எடுக்க தொடங்கினார். 7மணிக்கு சம்பவம் நடக்கிறது. எந்த விசாரணையும் இன்று நீர் எப்படி இதை ஜேவிப்பி மோதல் என்று சொல்லலாம். ஓர் அரச உழியனாய் உமது கடைமையை சரிவரச் செய்ய என்றுவாறு எகிற வாதப்பிட்டிய நிகழ்ச்சி அல்லோல கல்லோமாகிப்போனது. அப்போது ஜேவிப்பியின் தலைவராக சோமவான்ச அமரசிங்கை இருந்தார். அவருடைய வழிகாட்டலில் கட்டுவன படுகொலைகளுக்கு எதிராக நாடுமுழுக்கச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மிகுந்த வீரியமாய் எதிர்த்து நின்றது ஜேவிப்பி. ஒரு கட்டத்தில் அமரேவை இன்னமும் பாதுகாப்பது பெரும் அவமானமாகிப் போனது அரசுக்கு. வாழை மரத்தை கொத்திய மரங்கொத்தி போலாகிபோனார் அமரே. வெள்ளை நிற சேட், வெள்ளை நிற காற்சட்டை, வெள்ளை நிற சபாத்து அணிந்து ரெஸ்ட் மச்சு விளையாடும் கிரிக்கட் வீரர் போல தங்கல்ல நீதிமன்றத்தில் சரணடைந்தார் அமரே. வலஸ்முல்ல நீதிவான் நீதிமன்றத்தில் நடத்த இனங்காணல் அணிவகுப்பில் அமரே கொலைக்குற்றவாளி என மூன்று கண்கண்ட சாட்சிகாளால் யூன் 22, 2012 இனங்காணப்பட்டார். 7ஆண்டுகள் நடந்த வழக்கு விசாரணை முடிவில்தான் 2019ல் தங்கல்ல மேல் நீதிமன்ற நீதிபதி சு.ளு.ளு.ளுயிரறiனாய அவர்கள் அமரேக்கு மரண தண்டனை விதித்தார். இந்த தண்டனையைக் கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியிருக்கின்றன. என்ன ஒரு விதி பாருங்கள்? வெறும் 30-40 பேர்களோடு சிறிய கூட்டம்கூட வைக்கமுடியாத அளவுக்கு அமரே மற்றும் ராஜபக்சைக்களால் அழுத்தம் கொடுக்கப்பட்ட காட்சியும். சனாதிபதியும் இன்று பதவியில் இருக்கிறார்கள். அமரேவைக்  காப்பாற்றுவது எப்படி போனாலும் அன்றைய சண்டித்தனத்தின் ராஜதானியான ஹம்பாதே}ட்டையில் தேருதலில் கூட நிற்க முடியாத அளவுக்கு ராஜபக்சைகள் வங்;கிரோத்த அடைந்திருக்கிறார்கள்

உச்ச நீதிமன்ற நீதிபதி சனாதிபதியினால் தீர்மானிக்கப்படும் ஒரு நேரத்தில் ஓரிடத்தில் வைத்து அமரே தூக்கிலிடப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்ப்பு அளித்துள்ளார். மரண தண்டனை நிறைவேற்றப்படும் வரைக்கும் வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளார். அரசியல்வாதிகளால் போசிக்கப்பட்ட அமரேவின் அத்தியாயம் 2025 ஐப்பசி 07 உடன் நிறைவுக்கு வருகிறது. அமரே போன்றோரை தம் அரசியல் தேவைக்காகப் பயன்படுத்தியவர்கள் இன்று வாயே திறக்கமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை அமரே பாவித்து முடித்து வீசப்பட்ட ஒரு ருசுப் பேப்பர். (Hisham.M.Vlogஎன்னும் வலையொளிப் பதிவிலிருந்தும் 
https://asianmirror.lk/newshttps://www.adaderana.lk/news, https://www.dailymirror.lkhttps://www.newswire.lk, பதிவிலிருந்தும் தொகுக்கப்பட்டது)


Wednesday, October 8, 2025

ஒழித்த மனம்ரியும் ஒலுகல்லவின் கிடுக்குப்பிடியும்

ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர், 


ஒரே ஒரு நபர் மட்டும் வாய்த்திருந்தால் போதும் இலங்கைக் குற்றச் சாம்ராஜ்யத்தில் இத்தனை நாளாகத் திரைக்குப்பின்னால் மறைந்திருந்த அரசியல்வாதிகளின் சுயவிபரங்கள் எல்லாம் ஊடகங்கள் வழியாக வெளிவந்திருக்கும். அவர்தான் சம்பத் மனம்பேரி. மனம்பேரி ஒப்படைக்கப்பட வேண்டிய இடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.இனித்தான் ஆட்டம் ஆரம்பமாகப்போகின்றது. சம்பத் மனம்பேரியின் சரித்திரத்தைக் கடந்தவாரம் சுருக்கமாக இங்கு சொல்லியிருந்தோம். மனம்பேரி ஒரு காலத்தில் முன்னாள் சனாதிபதி மஹிந்த ராஜபக்சையின் பாதுகாப்புப்பிரிவில் பொலிஸ் கான்ஸ்டபிள். 50,000கிலோ ஐஸ் இரசாயண மாதிரிகள் அவருடைய வீட்டில் கண்டுபிடிக்கப்படும் வரை பொதுஜன பெருமுனவின் கட்சி உறுப்பினர். அவரை நாம் அங்குணுக்குல பலச பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் என்றும் முன்பு கூறியிருந்தோம். ஆனால் அவர் அங்குணுக்குல பலச பிரதேச சபையின் தேருதலில் பொதுஜன பெருமுன சார்பாகப்; போட்டியிட்டவராம். அவரது சகோதரர் பியல் மனம்பேரிதான் பிரதேச சபையின் உறுப்பினராய் இருந்தவராம் என்கிறார் நமால் ராஜபக்சை.பியல் மனம்பேரி 50,000கிலோ ஐஸ் இரசாயண மாதிரி விவகாரத்தில் முதல் சந்தேக நபர். ஐஸ் பூந்தோட்டம், சிறைவாசம் என்றவாறு விளக்கமறியலில் இப்போது இருக்கிறார்.

இனி சம்பத் மனம்பேரிக்கு இலங்கைக்குள் உருவாகி இருக்ககூடிய ஐஸ்லாந்தின் உத்தியோக பூர்வமற்ற சனாதிபதி என்றும் செல்லமாக நாமம் சூட்டலாம். ஐஸ் இரசாயண மாதிரிகளுக்காகப் புரட்டாதி 26ஆம்திகதி வரையிலும் பேரழிவு ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களை மறைத்து வைத்திருந்ததற்காக, ஐப்பசி 01திகதி வரையிலும் சம்பத் மனம்பேரி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 

கஜ்சாவின் வாக்குமூலம்

ராஜபக்சைக்களின் குற்றவியல் சரித்திரத்தை ஊடகவியலாளர் சமுதித்தவிடம் பிளந்து கொட்டிய கஜ்சா எனப்படும் அருண விதானகமகே அங்குணுக்குல பலச சிறையில் புழங்கும் போதைப் பொருளானது முழுப் பாக்கிஸ்தான் தேசத்திக்கும் பகிர்ந்;தளிக்கும் அளவுக்குத் தாராளமானது என்று சொல்லியிருந்தார். அந்த நேர்காணலில் சம்பத் மனம்பேரி போன்றோர் அம்பாந்தே}ட்ட மாவட்டத்தில் நிறுவிய இரத்தச் சரித்திரத்தை அழகாக விவரித்தும் இருந்தார் கஜ்சா. கஜ்சா இப்போது உயிரோடி இல்லை. இப்படிப் போதைப் பொருள்களும் குற்றங்களும் மலிந்துபோன சிறையில் மனம்பேரி போன்ற ஒரு கிரிமினல் அடைக்கப்படுவதானது பொலிஸ் விசாரணைகளில் ஒரு சறுக்கலை ஏற்படுத்தும் என்றும் மனம்பேரி ஒருவேளை சிறைக்குள்ளே கொல்லப்படலாம் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரையில் வலச்முல நீதவான நீதிமன்றம் சென்ற பொலிஸ் குழு, மனம்பேரியைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் 90நாள்கள் தடுத்து வைத்து மேல் மாகாணத்தில் வழக்குக் குற்றப்புலனாய்வு பிரிவில் விசாரிக்க விசேட அனுமதியை கோரியிருந்தது. அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது. மனம்பேரி தற்போது இலங்கையின் மிகப்பிரபல பொலிஸ் அதிகாரியான ஏ.எஸ்.பீ ரோஹான் ஒலுகல்லவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்.

இந்தோனேஷpயாவில் இருந்து கொண்டு முடிந்தால் என்னைக் கைது செய்துபாருங்கள் என்று இலங்கைப் பொலிஸ் திணைக்களத்துகு சவால்விட்ட ஹெகல் பத்திர பத்மே தலைமையிலான குழுவை அள்ளிக் கொண்டு இலங்கைக்கு வந்த அசகாய சூரன்தான் இந்த ரோஹான் ஒலுகல்ல. ஒலுகல்லவின் கிடுக்குப்பிடியில் ஹெகல் பத்திர பத்மே குழு கீரிப்பிள்ளையிடம் சிக்கிய கோழிபோல சின்னாபின்னமாகியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ரோஹான ஒலுகல்லவிற்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் பத்மே குழு வழங்கிக்கொண்டு இருக்கிறது. இதனால்தான் இலங்கையின் அரசியல் களம் இந்த அளவுக்கு அல்லோல கல்லோலமாயிருக்கிறது.

தொலைபேசி வேண்டும்


சில நாள்களுக்கு முன்னர் ஹெகல் பத்திர பத்மே, ரோஹான் ஒலுகல்லிடம் ஐயா எனக்கு ஒரு வெளிநாட்டு அழைப்பு எடுக்கவேண்டும் என்று சொல்ல, உடனே ஒலுகல்ல தனுடைய அலைபேசியைக் கொடுத்திருக்கிறார். யாருக்கோ அழைப்பு எடுத்த பத்வே, அண்ணா நான் உங்களுக்குத் தந்த ஆயுதங்களையும் ரீக்களையும் ஐயாவிடம் ஒப்படையுங்கள் என்று சொல்லியிருக்கிறார். இங்கே ரீP எனப்படுவது ரீ-56 துப்பாக்கி. இந்த உரையாடல் நடந்து சில நாள்களுக்குப்பின் புரட்டாதி 26ஆம் திகதி ஒலுகல்லவின் தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்திருக்கிறது. ஐயா, சாமான்கள் எல்லாம் அந்த இடத்தில் இருக்கின்றன. போய் எடுத்துகொள்ளுங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. உடனே அந்த இடத்துக்கு விரைந்தது பொலிஸ். அது பாலியகொட மீன் சந்தைக்கு அருகே ஓர் இடம். அந்த இடத்தில் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு ரீ-56வகைத் துப்பாக்கிகளும் 500 தோட்டாக்களும் இராணுவ சீருடையை ஒத்த சீருடைகளும் கைது செய்யும்போது பூட்டும் கைவிலங்கு ஒன்றும் மீட்கப்பட்டிருக்கின்றன. இந்த பயங்கரத்தின் பின்னணி என்ன? இராணுவச் சீருடை அணிந்து கொண்டு பெரிய அசம்பாவிதம் ஒன்றுக்குத் திட்டமிடப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணையை ஆரம்பித்திருக்கிறது சீஐடி.

ஒலுகல்லவிடம் ஒப்படைப்பு

ஒலுகல்லவிடம் மனம்பேரியை ஒப்படைப்பது என்பது இந்த விசாரணையின் போக்கை மேலும் செப்பன் செய்துவிடும். மனம்பேரி இலேசுபட்ட ஆள்கிடையாது. அவர் செய்திருக்கும் திருகுதாளங்கள் அப்படியானவை. நாடாளமன்றத்தில் நடந்த காரசாரமான விவாதம் ஒன்றின்போது பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, சம்பத் மனம்பேரி,  முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னண்டோவின் இணைப்புச் செயலாளராக இருந்தவர் என்று தெரிவித்திருந்தார்;. மனம்பேரி இராஜபக்சைக்கிளுக்கு மட்டும் அல்ல, ஜோன்ஸ்ரனுக்கும் சேவகம் செய்திருக்கிறார் என்பது இதன்மூலம் உறுதியாகின்றது. ஜோன்ஸ்ரன் குருநாகல் மாவட்டத்தில் 12அரசியல் கூட்டங்களை தவர்த்;துவிட்டு 300 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள மித்தனியவில் நடக்கக்கூடிய மனம்பேரியின் கூட்டத்துகு வந்ததாய் மார்புதட்டிக் கொண்டதன் பின்னனி என்னவென்று இப்போது தெளிவாகிறது. அந்த கூட்டத்தில் ஜோன்ஸ்ரன் மனம்பேரியை தாராளவாதி என்றும் பணத்தை வீசி எறிந்து செலவு செய்யும் கொடையாளி என்றும் புகழ்ந்து பாடியிருந்தார்.

மனம்பேரியின் தில்லுமுல்லு

சனாதிபதி மகிந்தவின் பாதுகாப்புப் பிரிவில் பொலிஸ் கான்ஸ்டபிளாக வாழ்க்கையை ஆரம்பித்த மனம்பேரி இப்படி முன்னேறியதெல்லாம் எப்படி. இத்தனை பெரும் செல்வத்தை மகிந்த ராஜபக்சையிடம் இருந்தபோது மனம்பேரி சம்பாதித்தாரா அல்லது ஜோன்ஸ்ரனின் இணைப்புச் செயலாளராக இருந்தபோது சம்பாதித்தாரா என்ற தெரியதில்லை. பொலிஸ் கான்ஸ்டபிள் அடையாள அட்டையைத் தவறுதலாகப் பயன்படுத்தி, கஞ்சா கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மனம்பேரி- கலா ரேடஸ் உரிமையாளர் சுவிஸ் கந்தராஜாவை கடத்தி கப்பம் கேட்டு கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மனம்பேரி - நாடாளமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மனம்பேரி- ஜோன்ஸ்ரனுக்கு எந்த மாதிரியான இணைப்புச் செயலாளராக இருந்தார் என்பதுதான் விடைதேடவேண்டிய வினா.

மனம்பேரியின் இராகுகாலங்களும் சனிகளும்


குருநாகலில் இருக்கும் சட்டத்தரணி ஒருவர் 327 கிலோமீற்றர் பயணம் செய்து வலச்புல நீதிமன்றத்தில் நடக்கும் ஒரு வழக்கில் ஆஜராகிய அதிசயம் ஒன்று உண்டு. சம்பத் மனம்பேரி வலச்புல நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போதெல்லாம் குருநாகலிலிருந்து ஒரு சட்டத்தரணி ஓடி வந்தார். எங்கோ ஒரு இடத்தில் நடக்கும் வழக்குக்கு, எங்கோ ஒரு மூலையிலிருந்து சட்டத்தரணி ஒருவர் படை எடுக்கிறார் என்றால் இந்த நெற்வோர்க்கின் பலத்தை சற்று யோசித்துபாருங்கள். உண்மையில் சம்பத் மனம்பேரி அத்தனை சீக்கிரத்தில் காவல் துறையிடம் சிக்குபவர் அல்லர். ரோஹான் ஒலுகல்ல தலைமையிலான குழு ஹெகல் பத்திர பத்மே கும்பலை அள்ளிக் கொண்டு வந்ததால்தான் மனம்பேரி சிக்கினார். மனம்பேரி இவர்களோடு நடத்திய வாட்சப் கூறுப் உரையாடல்கள் எல்லாம் அம்பலமாகியிருக்கின்றன. மனம்பேரியை ஒலுகல்லவிடம் ஒப்படைத்தி ருப்பதால் அவர் மனம்பேரியின் ஜாதகத்திலிருக்கும் இராகுகாலங்களையும் சனிகளையும் வட்டம் போட்டு பகிரங்கப்படுத்தி விடுவார் என்பது திண்ணம். ஏன்னென்றால் மனம்பேரி ஒலுகல்லவிடம் ஒப்படைக்கப்பட முன்னரே சில முக்கியமான தகவல்களை வெளியிட்டிருந்தார். அவருக்குப் பொலிசிலிருந்து தலைமறைவாய் இருக்க உதவிபுரிந்த தோளியையும் மின்சாரசபையில் வேலை செய்யும் தோளியின் கணவரையும் இனம் காட்டி இருந்தார்.

சிக்கிய சிட்டைகள்


அந்த வீட்டைப் பரிசோதித்தபோது தங்கம் பூசப்பட்ட ரீ-56துப்பாக்கிகளும் 115 தோட்டாக்களும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. அதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் துறை முகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஐஸ் இரசாயண மாதிரிகளை விடுவிக்கச் சுங்கத் திணைக்களத்துகு பணம் கட்டிய பின்னர் பெற்றுக்கொண்ட சிட்டைகளும் கொள்கலன்களை வெளியே எடுப்பதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களும்கூட சிக்கியிருத்தன. 


தனது சட்டதரணிகள் முகங்களில் கரி பூசிய மனம்பேரி 

மனம்பேரியின் சட்டதரணிகள் தம் தரப்பினருக்கும் இந்த ஐஸ் இரசாயண மாதிரிகளுக்கும் எந்த வித சம்பந்தமுமில்லை என்றும் இந்த கொள்கலன்கள் மனம்பேரியினுடையதல்ல என்றும் மனம்பேரி சும்மா யாருக்கோ உதவிக்கு அங்கே சென்றார் என்றும் புரட்டாதி 17ஆம் திகதி வலச்புல்ல நீதவான நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்கள். ஆனால் மனம்பேரி பொலிஸ் விசாரணைகளின் அமிலம் தாங்க முடியாமல் அனைத்தையும் ஒப்புக்கொண்டு தன்னுடைய சட்டத்தரணிகளின் முகத்திலேயே கரிபூசியிருந்தார். இப்போது கேள்வி என்னவென்றால் மனம்பேரி இக்கொள்கலன்களை சுங்க திணைக்களத்திடம் எப்படியானப் பொய்யைச் சொல்லி விடுவித்துக்கொண்டார் என்பதுதான். 

அமரிக்க உளவுத்துறைத் தகவல்

இக்கொள்கலன்களில் ஐஸ் மாதிரிகள் இருப்பதாக அமரிக்க உளவுத்துறை இலங்கைச் சுங்கத் திணைக்களத்திற்கு அறிவித்ததாகவும் இங்கே அவற்றைக் கண்டறியும் தொழினுட்பம் இல்லாததாலும் இந்த இக்கொள்கலன்கள் வெளியே சென்றதாகவும் சொல்லப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இலங்கைக்கான அமரிக்க தூதுவர் ஜூலி சாங் போதைப் பொருள்களைக் கண்டறியக்கூடி நவீன இயந்திரம் ஒன்றை இலங்கை அரசிடம் கையளித்திருந்தார். இது போன்ற போதைக் கடத்தல் பேர்வளிகள் சூட்சுமமாய் மறைத்துக் கொண்டுவரும் மாதிரிகளை அடையாளம் காணவேண்டு மென்ற நல்ல எண்ணமே எனலாம். எது எப்படியோ குறித்த கொள்கலன்கள் தொடர்பாக உரிய விசாரணைகள் நடிப்பதாக அமைச்சர் ஆனந்த விஜேபாலை அறுவித்திருக்கிறார்.

சஜித் பிரேமதாசவின் மௌன விரதம்

சும்மா முன்ணோட்டத்தின்போது இத்தனை விடயங்களைக்கொட்டிய சம்பத் மனம்பேரி, ஒலுகல்லவிடம் எல்லாவற்றையும் கொட்டப் போகிறார். இதெல்லாம் இப்படி இருக்க நாடெங்களும் போதைப் பொருள் மற்றும் பாதாள மாபியாவுக்கு எதிராக பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்க, எதிர்க்கட்சியோ இதை எதையும் இலட்சியம் செய்யாமல் இருக்கிறது. ஒரு சின்ன விடயத்தையும் பூதாகரமாக்கி நாடாள மன்றத்திலே கலாட்டா செய்யும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த விவகாரம் தொடர்பில் மௌன விரதம் இருக்கிறார் எனலாம். இதேவேளை உதே கம்மான்பில்ல நாட்டில் போதைப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் சந்தைப் பெறுமதி அப்படியே தான் இருப்பதாகவும் அரசு போதைமாபியாவுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டிருந்தால்  போதைப் பொருளினுடைய விலை இரண்டு மூன்று மடங்கு அதிகரித்து இளைஞர்கள் இளைஞிகள் அவலக்குரல் எழுப்பிக்கொண்டு பாதையில் விழ்ந்து கிடப்பார்கள் என்றும் அப்போ அவர்களை மக்கள் மருத்துவ மனைகளுக்கு தூக்கிச்சென்று இருப்பார்கள் என்றும் சொல்லுகிறார். என்ன ஒரு விளக்கம். குடிவரவு கட்டுபாட்டாளர் மாதிரி, கம்மன்பில்ல ஒரு குடுவரவு கட்டுபாட்டாளராய் இருக்க வேண்டிய ஒருவர் போலிருக்கிறது. காதல் நுளையாத மனமிலைமாதிரி, இந்த கம்மன்பில்ல கருத்துச் சொல்லாத இடம் இல்லை என்றாகிவிட்டது என்கிறது. 

முடிவு


இம்முறை ஒரு தேர்ந்த போதைப் பொருள் வியாபாரி வேடம் தாங்கி போதைப் பொருள் பாவிக்கும் சமூகத்தின் குரலாய் கம்மன்பில்ல கலக்கிக்கொண்டு இருக்கிறார். கம்மன்பில்ல தன்னுடைய தலைக்குள் இருக்கும் மூளையை தன்னுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது பயன்படுத்த வேண்டும் என்பது சமூக ஊடக நண்பர்கள் முன்வைக்கும் ஒரு கோரிக்கை. கம்மன்பில்ல வகையராக்கள் எதிர்க்கட்சிகள் என்னதான் ஒப்பாரி வைத்தாலும் இந்த ஒப்பரேசனை நிறுத்த எப்படிதான் சதி செய்தாலும் அனுர அரசுசின் அதிரடி முன்னோக்கிச் செல்லும் என்பதையே போதை மாப்பியாவிற்கு எதிரான சனாதிபதியினுடைய ஐ.நா சபை உரை உணர்த்தி நிற்கிறது. கடைசியாக சம்பத் மனம் பேரி ரோஹான் ஒலுகல்லவிடம் வாக்குமூலம் கொடுத்து முடியும்போது வெள்ளையும் சொல்லையுமாக இன்று கதைபேசி திரிபவர்களினுடைய கறுப்பு பக்கங்கள் நம்முன்னே அவலட்சனமாய்க் காட்சி கொடுக்கப்போகின்றது என்பது நிஜம்.  அப்போது எத்தனை பேர் சிறைக்குள் இருப்பார்கள் எத்தனை ஆயுதங்கள் கைப்பட்டப்பட்டிருக்கும் என்பதுதான் விறுவிறுப்பான இந்த படத்தின் கிளைமெக்ஸ் ஆக இருக்கப் போகுறது.(S.K. Kiruththikan  வலையொளிப் பதிவிலிருந்தும் https://hirunews.lk/ https://www.themorning.lk/https://www.adaderana.lk/ பதிவிலிருந்தும் தொகுக்கப்பட்டது)











Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff