Tuesday, October 14, 2025

மகிந்தாக்களால் பயன்படுத்தித் தூக்கி எறியப்பட்ட ருசுப் பேப்பர் வெலிக்கடை சிறைச்சாலையில் விழுந்த கதை

ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர், 

ராஜபக்சை குடும்பத்தின் மிகநெருங்கிய சகாவும் பிரபல பாதாள உலக தாதாவுமான யூலம்பிட்டிய அமரவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ஐப்பசி 7, 2025 அன்று உறுதி செய்திருக்கிறது.

தங்கல்ல மேல் நீதிமன்றம் கார்த்திகை 2019, வழங்கிய மரண தண்டனைக்கு எதிராக யூலம்பிட்டிய அமரே, கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு செய்திருந்தார். கார்த்திகை 2024, மேல் முறையீட்டு நீதிமன்றம், தங்கல்ல மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உறுதி செய்தது. ஆனாலும் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனாய் முயன்று பார்த்தார் யூலம்பிட்டிய அமரே. உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார். தன்னை முற்றாய் விடுவித்து அன்று பிறந்த பாலகன் போல ஆக்குமாறு யூலம்பிட்டிய அமரே தன்னுடைய சட்டதரணிகள் மூலம் கொடுத்த மனுவைப் பார்க்காமலேயே தூக்கி எறிந்திருக்கிறது உச்ச நீதிமன்றம். மூன்று நீதிமன்றங்களும் கை விரித்துவிட்;டன. இனிமேல் இலங்கையில் முறையிட நீதிமன்றம் எதுவுமில்லை. இனி ஆண்டவரிடம்தான் முறையிட வேண்டும். அல்லது மைத்ரிபால சீறிசேனை, கோட்டாபாய ராஜபக்சை, ஜே.ஆர் ஜேயவர்தன போன்ற ஆட்சியாளர்கள் அமைய வேண்டும். அப்படி ஓர் அதிஸ்டசாலி சனாதிபதி அமைந்தால்தான் பொது மன்னிப்பின் கீழ் யூலம்பிட்டிய அமரே வெளியே வரலாம். 

யார் இந்த யூலம்பிட்டிய அமரே? 

யார் இந்த யூலம்பிட்டிய அமரே? ஜீகான கமகே அமரசிறி என்னும் பெயர் கொண்டவர் யூலம்பிட்டிய அமரே என பிரபல்யமாக அறியப்படுபவர் ஆவார். அவர் சாதித்திருக்கும் சாதனைகள் என்ன என்ற கேள்விக்கு பதில்: 24 கொலை வழக்குகள், பதினைந்து கொள்ளை வழக்குகள் என்று ரொம்பவே எதிர்நிலையில் பிரகாசிக்கின்றன அமரேயின் சுயவிபர சமூகவிம்பம். இந்த யூலம்பிட்டிய அமரேயை மரண தண்டனையில் நிறுத்திய வழக்கு எது? அவர் அப்படி என்னதான் செய்தார்? அதை அறிவதற்கு அரசியல்வாதிகளால் போசிக்கப்பட்டு, காண்டாமிருகம்போல வளர்ந்து நின்ற பாதாள தாதாவின் இரத்த வரலாறுகளை நாம் சற்றேனும் அறிவது நன்று. இலங்கை அரசியல் தலைவர்களுக்கும் பாதாள உலகத்துக்குமான தொடர்பு பிரிக்க முடியாத ஒன்றாகியிருந்தது. ஜே. ஆர், -ரணிலுக்கு கோனவல சுணில் போல, பிரிமதாசவுக்கு சொத்தி உப்பாலி போல, சந்திரிக்காவுக்கு பத்தகான சஞ்சீவ போல, ராஜபக்சைக்களின் ஆஸ்தான பாதாள உலகத் தலைவராயிருந்தவர் தான் யூலம்பிட்டிய அமரே. யூலம்பிட்டிய அமரே இலங்கையின் தென்மாகாணத்தில் வெகுப்பிரசித்தம். அவருடைய சுயவிபரக் கோவையில் 06 வகுப்பு மட்டும் என்ற கல்வித் தகைமைக்கு அப்பால் துரைசார் நிபுணத்துவ அனுபவங்களாய், பொரும்நிழல்தரும் மரங்களை வெட்டி விற்றல், கஞ்சா கடத்துதல், கொலை செய்தல், கொள்ளை அடித்தல், கப்பம் கேட்டல், கள்ள மாடு வியாபாரம் என்று ஏகப்பட்வை இருக்கின்றன. அமரே ஆரம்பத்தில் மகிந்த ராஜபக்சையின் ஒன்;றுவிட்ட சகோதரி நிரூபமா ராஜபக்சையின் தோட்டக் காவலாளியாக இருந்தவர். இப்படி ஆரம்பித்த காவலாளி 18வயதில் என்ன பிடிக்கும் என்று பள்ளிப்படிப்பை மேற்கொள்ள வில்லை, மாறாகச்சிறைக்குச் சென்றார். இப்படித்தான் அமரேயின் ஆடுகளம் ஆரம்பமானது.

மித்தனியைச் சேந்த பஸ்வியாபாரி அமிலச்சூட்டி என்பவரை பிடித்து பகிரங்கமாய் அமரே செய்த கொலை பொலிஸ் ஆவணங்களில் இன்றளவும் பதபதைப்புடன் பேசப்படுகின்றது. அமரே தன்னிடமிருந்த குண்டுகளை வீணாக்கவில்லை. அமிலச்சூட்டியின் துப்பாக்கியைப் பறித்து அவரையே போட்டுத் தள்ளினார். அதன்மூலம் அமரேயின் திருநாமம் பட்டித்தொட்டியங்கும் பிரபல்யமானது. அமரேயின் பலமான அரசியல் ஆதரவுத்தலத்தின் முன்னால் கவல்துறைக்குச் சகலதையும் மூடிக்கொண்டு வேடிக்கைப் பார்ப்பதைத்தவிர வேறுவழியேதும் செய்யமுடியவில்லை. ஒரு முறை தன்னுடைய ஏற்றுமதி வியாபாரத்துகாக நான்கு ஏக்கர் காணி ஒன்றுக்குள் புகுந்து பலாமரங்களை எல்லாம் வெட்டிச்சாய்த்துக் கொண்டு இருந்தார் அமரே. இந்த அநியாயத்தைப் பார்ப்போர் கேட்போர் யாருமிலையா என்று மக்கள் சபித்தப்படி சென்றுகொண்டு இருந்தபோது, ஐந்துபொலிஸ் அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்தார்கள். சீருடையில் இருந்த அந்த அதிகாரிகளை ஒரு மணுத்தியலத்துகு மேலாக முழம்தாளிடவைத்தார் அமரே. இப்படி எல்லாம் நடக்குமா என்று அங்கலாய்க்க வேண்டாம். இப்படித்தான் இந்த நாடு ஒருகாலத்திலே இருந்தது. குண்டுத் துளைக்காத முழு ஆடை அணிந்தபடி எப்போதும் ரீ56 துப்பாக்கியைத் தோளில் ஏந்திய வண்ணம் பகிரங்கமாய் அலைவார் அமரே. இந்தியாவின் சந்தனக்கடத்தில் மன்னன் வீரப்பன் நடமாடுவதுபோல இந்த காட்சி இருக்குமாம். 

அமரேயின் சிறைச்சாலை முற்றுகை

அமரே சிறைக்குச்செல்வதும் விடுதலையாவதும் பெரிய விடையம் அல்ல. சிறையில் இருந்தால் பரவாயில்லை என்று யோசித்தால் சிறைக்குப்போவார். சிறைக்குப் போனாலும் தாராளமான உபசரிப்புகள் அவருக்குக் கிடைத்தன. 2002ஆண்டு அமரே தங்கல்ல சிறையில் இருந்தபோது நடத்திய ஒரு போராட்டத்தின்மூலம் உலக அளவில் பிரபலமானார். சிறைச்சாலை ஆயுதக் களஞ்சியத்தைக் கைப்பற்றிய அமரேவும் அவருடைய சக சிறைவாசிகளும் ஆயுதங்களை கையிலேந்திய படி திரிந்தன. அத்தனைபேர் கையிலும் ஆயுதங்கள் இருந்ததால் எந்த நேரத்திலும் சிறைச்சாலைக்குள் ஒரு கோரத் தாண்டவம் நிகழலாம் என்று எதிர்வு கூறப்பட்டது. ஊடகங்கள் எல்லாம் தங்கல்ல சிறைச்சாலையில் மையம் கொள்ளத் தொடங்கியிருந்தன. முன்னெச்சரிக்கையாக விசேட அதிரடிப்படையும் வரவழைக்கப்பட்டிருந்தது. அப்போது ரணில் பிரதமராக இருந்தார். மகிந்த ராஜபக்சை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.

உள்விவகார அமைச்சர் ஜோண் அமரத்துங்கவுக்கு நிலைமையின் விபரிதம் புரிந்திருந்தது. யாரை அழைத்துக்கொண்டு போனால் நிலைமையைச் சாந்தப்படுத்தலாம் என்று ஜோண் அமரத்துங்கவுக்கு தெரிந்திருந்தது. எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சையை அழைத்துக்கொண்டு சிறைச்சாலைக்கு விரைந்தார் ஜோண் அமரத்துங்க. சிறைச்சாலை மதிலுக்கு வெளியே இருந்தவாறே அமரே, அமரே, நான் மகிந்த ராஜபக்சையே வந்திருக்கிறேன். பயப்படாமல் வெளியே வா என்றாராம் மகிந்த ராஜபக்சைசே. அத்தோடு அமரேவின் அந்த சத்தியாகிரகப் போராட்டம் நிறைவு பெற்றது. பழையபடி அமரே தனுடைய சிறைகூடத்துக்குப் போனார். மகிந்த ராஜபக்சையின் ஒற்றை வாக்கியம் அமரேவை மகுடிக்குக் கட்டுப்படும் பாம்பாக்கியது. 2005ஆண்டு சனாதிபதி தேருதல் சமயம் மகிந்த ராஜபக்சைவுக்கு ஆதரவாய் களத்தில் இறங்கி தன்னுடைய பங்களிப்பை அச்சரம் பிசகாமல் வழங்கினார் அமரே. மேடைகளில் ஏறிப்பேசினார். பாட்டுபாடி மகிழ்ந்தார். தனுடைய ஆஸ்தான நாயகர்கள் பதவிக்குவர இப்படித்தான் உழைத்தார் அமரே. அமரே என்ற ஒருவரே அரச அங்கிகாரம் பெற்ற தாதாவாக அப்போது இருந்ததார். தென்மாகாணத்தில் இருந்த பல பாதாள உலக குழுக்களுக்கு செய்வதற்கு ஒன்றும் இருக்கவில்லை. அமரேவை எதிர்த்துகொண்டு நின்றுபிடிக்க முடியாததால் நேவி ருவான் போன்ற பிரபல தாதாக்கள் தலைமறைவானார்கள்

அதிகாரம் குறைந்த யூனியத் தாதாக்கள் அமரேவுக்கு சலாம் போட்டு ஒதுங்கி நின்றார்கள். அமரேமேல் அப்போது அதிக வம்புகளும் வழக்குகளும் குவிந்திருந்தன. ஆனால் அமரே எதையும் இலட்சியம் செய்வில்லை. எதுவுமே வேலைக்காகாததால் கண்ட இடத்தில் கைது செய்யுமாறு அமரேவுக்கு எதிராக தங்கல்ல மேல் நீதிமன்றம் திறந்த பிடியாணையை விதித்தது. எனக்கு என்ன வந்தது நீ விதித்தால் விதித்துக்கொள்ள என்றவாறு அமரே தன்பாட்டுக்குச் சுற்றித்திரிந்தார். அவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு யாருமே முயற்சி செய்யவில்லை. அந்த அளவுக்கு அமரேவின் அரசியல் பலம் இருந்தது. ஒரு முறை அமரே சாகாசமாய் வந்து சகசிறைவாசி ஒருவரை பார்த்துவிட்டுப் போவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து நின்றாராம் தங்கல்ல மேல் நீதிமன்ற நீதிபதி சந்தரசேனன்.

திறந்த பிடி ஆணை

திறந்த பிடி ஆணை பிரப்பிக்கப்பட்ட அமரே துப்பாக்கியை தூக்கிக்கொண்டு பொலிஸ் நிலையம் சென்று முறையாய்த் துப்பாக்கியை மேசைமேல் வைத்துக் கண்ணியப்படுத்திவிட்டு பொறுப்பு அதிகாரியோடு சாகசமாய் உரையாடி விட்டு வருவாராம். இப்படிப்பட்ட ஒருவரை யார் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவது. இப்போது இதை எல்லாம் கற்பனை செய்யவே அச்சமாக இருக்கிறது. இன்று சனநாயகம் பேசும் நாமலிடம் யாருமே இதற்கெல்லாம் விளக்கம் கேட்காததுதான் மற்றுமொரு புதிர். அமரேவின் அட்டகாசங்கள் இப்படி தறிகெட்டு சென்றுகொண்டு இருந்தபோதுதான் அமரேவின் வாழ்வை மொத்தமாக மாற்றிப்போட்ட அந்த சம்பவம் நடந்தது. நாமல் ராஜபக்சை தன்னை இளவரசர் என்று நினைத்திருந்த காலம்தான் அது. நாமலின் நீலப்படையெனப்படும் நில்பலகாயவில் எல்லாமாக இருந்தார் யூலம்பிட்டிய அமரே. இந்த நிலையில் ஜேவிப்பியின் பத்திரிகையான ஷலங்கா| யூலம்பிட்டிய அமரேவை போட்டு தாறுமாராகத் தாக்கத் தொடங்கியது. உச்சகட்டமாக நதமுல்லன  வேட்டை நாயை கட்டிப்போடு என்று கட்டுரை எழுதியது ஷலங்கா பத்திரிகை|. இதனால் மிகுந்த ஆத்திரம் கொண்டார் அமரே, 2012ஆண்டு யூன் 15ஆம் திகதி ஹம்பாம்தோட்ட மாவட்டத்தில் கடடிவற்ர கட்டுவான என்ற இடத்தில் லியனகே ரஞ்சித் என்பவரது வீட்டில் ஜேவிப்பியின் ஒரு சிறிய கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. அது ஒரு 50 - 60 பேர் கூடியிருந்த ஒரு கூட்டம். இன்றைய சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜாயதிஸ்ச  மேடையில் இருந்தார். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. அமரேயுடன் நான்கு பேர் மோட்டார் சைக்கிள்களில் தடாலடியாய் வந்து இறங்கினார்கள். நான் நதமுல்லன வேட்டையினாய் வந்திருக்கிறேன். யார் இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்தவன். முடிந்தால் வா மோதிப்பார்போம் என்று குரைத்தப்படி கண்டப்படி சுடத் தொடங்கினாராம் அமரே. அரசியல் தொடர்புகள் அற்ற இரண்டு பேர் அந்த இடத்திலேயே துடித்துடித்து இறந்துபோனார்கள்:- எடேறிமான்னல ஜி. மலானி (50) நிமாந்தா கேஷhன் ஜேயசேன (18) மற்றும் ஒருவருக்கு மிக கடுமையான காயம். இன்னும்பலர் கயமடைந்தனர்.

பயங்கரவாதத்தை ஒளித்து விட்டதாய் மார்புதட்டிக் கொண்ட தேசத்தில் யூலம்பிட்டிய அமரே ரீ56 துப்பாக்கிகளுடன் வந்து சனாதிபதியின் சொந்த மாவட்டத்தில் இந்த குரூரத்தை நிகழ்த்தி விட்டு போனார். அப்போது தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் என்ற ஒன்று இருந்தது. அதன் பணிப்பாளராய் லக்ஸ்மன் குலுகல்ல என்பவர் இருந்தது. இரவு 7 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. 9மணி அளவில் தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளராயிருந்த லக்ஸ்மன் குலுகல்ல, இந்த படுகொலைகளை ஜேவிப்பியின் கோஸ்டிச் சண்டை என்று கதைகட்டி, யூலம்பிட்டிய அமரேயைக் காப்பாற்றக் களத்தில் இறங்கினார். இதனால் மிகுந்த ஆத்திரமடைந்த ஜே.வி.பி, லக்ஸ்மன் குலுகல்லவை நாடாளமன்றத்திலும் பொதுமேடையிலும் வறுத்தெடுக்கத் தொடங்கியது. அமரவை கைதுசெய்யுமாறு அரசுக்கு அழுத்தம் கொடுத்து மிகப்பெரிய எதிரப்;புப் பேரணியை நடத்தியது 

அநுர குமார திஸாநாயக்கா உலுகல்லவை உலுக்கியமை

திரண தொலைக்காட்சியில் வாதப்பிட்டிய அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அநுர குமார திஸானாயக்கா லக்ஸ்மன் குலுகல்லமீது குட்டச்சாட்டுகளை அடுக்கிக்கொண்ட போனார். அப்போது நிகழ்ச்சிக்குத் தொலைபேசி வழியாகத் தொடர்புகொண்டு பேசிய லக்ஸ்மன் குலுகல்ல அநுர குமார திஸாநாயக்காவின் பொய்களுக்குத்தான் அஞ்சப்போவதிலை என்றார். அவ்வளவுதான் அநுர குமார திஸாநாயக்கா லக்ஸ்மன் குலுகல்லவை உடும்புப்பிடியாய்ப் பிடித்து உலுக்கி எடுக்க தொடங்கினார். 7மணிக்கு சம்பவம் நடக்கிறது. எந்த விசாரணையும் இன்று நீர் எப்படி இதை ஜேவிப்பி மோதல் என்று சொல்லலாம். ஓர் அரச உழியனாய் உமது கடைமையை சரிவரச் செய்ய என்றுவாறு எகிற வாதப்பிட்டிய நிகழ்ச்சி அல்லோல கல்லோமாகிப்போனது. அப்போது ஜேவிப்பியின் தலைவராக சோமவான்ச அமரசிங்கை இருந்தார். அவருடைய வழிகாட்டலில் கட்டுவன படுகொலைகளுக்கு எதிராக நாடுமுழுக்கச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மிகுந்த வீரியமாய் எதிர்த்து நின்றது ஜேவிப்பி. ஒரு கட்டத்தில் அமரேவை இன்னமும் பாதுகாப்பது பெரும் அவமானமாகிப் போனது அரசுக்கு. வாழை மரத்தை கொத்திய மரங்கொத்தி போலாகிபோனார் அமரே. வெள்ளை நிற சேட், வெள்ளை நிற காற்சட்டை, வெள்ளை நிற சபாத்து அணிந்து ரெஸ்ட் மச்சு விளையாடும் கிரிக்கட் வீரர் போல தங்கல்ல நீதிமன்றத்தில் சரணடைந்தார் அமரே. வலஸ்முல்ல நீதிவான் நீதிமன்றத்தில் நடத்த இனங்காணல் அணிவகுப்பில் அமரே கொலைக்குற்றவாளி என மூன்று கண்கண்ட சாட்சிகாளால் யூன் 22, 2012 இனங்காணப்பட்டார். 7ஆண்டுகள் நடந்த வழக்கு விசாரணை முடிவில்தான் 2019ல் தங்கல்ல மேல் நீதிமன்ற நீதிபதி சு.ளு.ளு.ளுயிரறiனாய அவர்கள் அமரேக்கு மரண தண்டனை விதித்தார். இந்த தண்டனையைக் கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியிருக்கின்றன. என்ன ஒரு விதி பாருங்கள்? வெறும் 30-40 பேர்களோடு சிறிய கூட்டம்கூட வைக்கமுடியாத அளவுக்கு அமரே மற்றும் ராஜபக்சைக்களால் அழுத்தம் கொடுக்கப்பட்ட காட்சியும். சனாதிபதியும் இன்று பதவியில் இருக்கிறார்கள். அமரேவைக்  காப்பாற்றுவது எப்படி போனாலும் அன்றைய சண்டித்தனத்தின் ராஜதானியான ஹம்பாதே}ட்டையில் தேருதலில் கூட நிற்க முடியாத அளவுக்கு ராஜபக்சைகள் வங்;கிரோத்த அடைந்திருக்கிறார்கள்

உச்ச நீதிமன்ற நீதிபதி சனாதிபதியினால் தீர்மானிக்கப்படும் ஒரு நேரத்தில் ஓரிடத்தில் வைத்து அமரே தூக்கிலிடப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்ப்பு அளித்துள்ளார். மரண தண்டனை நிறைவேற்றப்படும் வரைக்கும் வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளார். அரசியல்வாதிகளால் போசிக்கப்பட்ட அமரேவின் அத்தியாயம் 2025 ஐப்பசி 07 உடன் நிறைவுக்கு வருகிறது. அமரே போன்றோரை தம் அரசியல் தேவைக்காகப் பயன்படுத்தியவர்கள் இன்று வாயே திறக்கமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை அமரே பாவித்து முடித்து வீசப்பட்ட ஒரு ருசுப் பேப்பர். (Hisham.M.Vlogஎன்னும் வலையொளிப் பதிவிலிருந்தும் 
https://asianmirror.lk/newshttps://www.adaderana.lk/news, https://www.dailymirror.lkhttps://www.newswire.lk, பதிவிலிருந்தும் தொகுக்கப்பட்டது)


No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff