Wednesday, October 8, 2025

ஒழித்த மனப்பேரியும் ஒலுகல்லவின் கிடுக்குப்பிடியும்

ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர், 


ஒரே ஒரு நபர் மட்டும் வாய்த்திருந்தால் போதும் இலங்கைக் குற்றச் சாம்ராஜ்யத்தில் இத்தனை நாளாகத் திரைக்குப்பின்னால் மறைந்திருந்த அரசியல்வாதிகளின் சுயவிபரங்கள் எல்லாம் ஊடகங்கள் வழியாக வெளிவந்திருக்கும். அவர்தான் சம்பத் மனம்பேரி. மனம்பேரி ஒப்படைக்கப்பட வேண்டிய இடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.இனித்தான் ஆட்டம் ஆரம்பமாகப்போகின்றது. சம்பத் மனம்பேரியின் சரித்திரத்தைக் கடந்தவாரம் சுருக்கமாக இங்கு சொல்லியிருந்தோம். மனம்பேரி ஒரு காலத்தில் முன்னாள் சனாதிபதி மஹிந்த ராஜபக்சையின் பாதுகாப்புப்பிரிவில் பொலிஸ் கான்ஸ்டபிள். 50,000கிலோ ஐஸ் இரசாயண மாதிரிகள் அவருடைய வீட்டில் கண்டுபிடிக்கப்படும் வரை பொதுஜன பெருமுனவின் கட்சி உறுப்பினர். அவரை நாம் அங்குணுக்குல பலச பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் என்றும் முன்பு கூறியிருந்தோம். ஆனால் அவர் அங்குணுக்குல பலச பிரதேச சபையின் தேருதலில் பொதுஜன பெருமுன சார்பாகப்; போட்டியிட்டவராம். அவரது சகோதரர் பியல் மனம்பேரிதான் பிரதேச சபையின் உறுப்பினராய் இருந்தவராம் என்கிறார் நமால் ராஜபக்சை.பியல் மனம்பேரி 50,000கிலோ ஐஸ் இரசாயண மாதிரி விவகாரத்தில் முதல் சந்தேக நபர். ஐஸ் பூந்தோட்டம், சிறைவாசம் என்றவாறு விளக்கமறியலில் இப்போது இருக்கிறார்.

இனி சம்பத் மனம்பேரிக்கு இலங்கைக்குள் உருவாகி இருக்ககூடிய ஐஸ்லாந்தின் உத்தியோக பூர்வமற்ற சனாதிபதி என்றும் செல்லமாக நாமம் சூட்டலாம். ஐஸ் இரசாயண மாதிரிகளுக்காகப் புரட்டாதி 26ஆம்திகதி வரையிலும் பேரழிவு ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களை மறைத்து வைத்திருந்ததற்காக, ஐப்பசி 01திகதி வரையிலும் சம்பத் மனம்பேரி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 

கஜ்சாவின் வாக்குமூலம்

ராஜபக்சைக்களின் குற்றவியல் சரித்திரத்தை ஊடகவியலாளர் சமுதித்தவிடம் பிளந்து கொட்டிய கஜ்சா எனப்படும் அருண விதானகமகே அங்குணுக்குல பலச சிறையில் புழங்கும் போதைப் பொருளானது முழுப் பாக்கிஸ்தான் தேசத்திக்கும் பகிர்ந்;தளிக்கும் அளவுக்குத் தாராளமானது என்று சொல்லியிருந்தார். அந்த நேர்காணலில் சம்பத் மனம்பேரி போன்றோர் அம்பாந்தே}ட்ட மாவட்டத்தில் நிறுவிய இரத்தச் சரித்திரத்தை அழகாக விவரித்தும் இருந்தார் கஜ்சா. கஜ்சா இப்போது உயிரோடி இல்லை. இப்படிப் போதைப் பொருள்களும் குற்றங்களும் மலிந்துபோன சிறையில் மனம்பேரி போன்ற ஒரு கிரிமினல் அடைக்கப்படுவதானது பொலிஸ் விசாரணைகளில் ஒரு சறுக்கலை ஏற்படுத்தும் என்றும் மனம்பேரி ஒருவேளை சிறைக்குள்ளே கொல்லப்படலாம் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரையில் வலச்முல நீதவான நீதிமன்றம் சென்ற பொலிஸ் குழு, மனம்பேரியைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் 90நாள்கள் தடுத்து வைத்து மேல் மாகாணத்தில் வழக்குக் குற்றப்புலனாய்வு பிரிவில் விசாரிக்க விசேட அனுமதியை கோரியிருந்தது. அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது. மனம்பேரி தற்போது இலங்கையின் மிகப்பிரபல பொலிஸ் அதிகாரியான ஏ.எஸ்.பீ ரோஹான் ஒலுகல்லவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்.

இந்தோனேஷpயாவில் இருந்து கொண்டு முடிந்தால் என்னைக் கைது செய்துபாருங்கள் என்று இலங்கைப் பொலிஸ் திணைக்களத்துகு சவால்விட்ட ஹெகல் பத்திர பத்மே தலைமையிலான குழுவை அள்ளிக் கொண்டு இலங்கைக்கு வந்த அசகாய சூரன்தான் இந்த ரோஹான் ஒலுகல்ல. ஒலுகல்லவின் கிடுக்குப்பிடியில் ஹெகல் பத்திர பத்மே குழு கீரிப்பிள்ளையிடம் சிக்கிய கோழிபோல சின்னாபின்னமாகியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ரோஹான ஒலுகல்லவிற்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் பத்மே குழு வழங்கிக்கொண்டு இருக்கிறது. இதனால்தான் இலங்கையின் அரசியல் களம் இந்த அளவுக்கு அல்லோல கல்லோலமாயிருக்கிறது.

தொலைபேசி வேண்டும்


சில நாள்களுக்கு முன்னர் ஹெகல் பத்திர பத்மே, ரோஹான் ஒலுகல்லிடம் ஐயா எனக்கு ஒரு வெளிநாட்டு அழைப்பு எடுக்கவேண்டும் என்று சொல்ல, உடனே ஒலுகல்ல தனுடைய அலைபேசியைக் கொடுத்திருக்கிறார். யாருக்கோ அழைப்பு எடுத்த பத்வே, அண்ணா நான் உங்களுக்குத் தந்த ஆயுதங்களையும் ரீக்களையும் ஐயாவிடம் ஒப்படையுங்கள் என்று சொல்லியிருக்கிறார். இங்கே ரீP எனப்படுவது ரீ-56 துப்பாக்கி. இந்த உரையாடல் நடந்து சில நாள்களுக்குப்பின் புரட்டாதி 26ஆம் திகதி ஒலுகல்லவின் தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்திருக்கிறது. ஐயா, சாமான்கள் எல்லாம் அந்த இடத்தில் இருக்கின்றன. போய் எடுத்துகொள்ளுங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. உடனே அந்த இடத்துக்கு விரைந்தது பொலிஸ். அது பாலியகொட மீன் சந்தைக்கு அருகே ஓர் இடம். அந்த இடத்தில் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு ரீ-56வகைத் துப்பாக்கிகளும் 500 தோட்டாக்களும் இராணுவ சீருடையை ஒத்த சீருடைகளும் கைது செய்யும்போது பூட்டும் கைவிலங்கு ஒன்றும் மீட்கப்பட்டிருக்கின்றன. இந்த பயங்கரத்தின் பின்னணி என்ன? இராணுவச் சீருடை அணிந்து கொண்டு பெரிய அசம்பாவிதம் ஒன்றுக்குத் திட்டமிடப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணையை ஆரம்பித்திருக்கிறது சீஐடி.

ஒலுகல்லவிடம் ஒப்படைப்பு

ஒலுகல்லவிடம் மனம்பேரியை ஒப்படைப்பது என்பது இந்த விசாரணையின் போக்கை மேலும் செப்பன் செய்துவிடும். மனம்பேரி இலேசுபட்ட ஆள்கிடையாது. அவர் செய்திருக்கும் திருகுதாளங்கள் அப்படியானவை. நாடாளமன்றத்தில் நடந்த காரசாரமான விவாதம் ஒன்றின்போது பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, சம்பத் மனம்பேரி,  முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னண்டோவின் இணைப்புச் செயலாளராக இருந்தவர் என்று தெரிவித்திருந்தார்;. மனம்பேரி இராஜபக்சைக்கிளுக்கு மட்டும் அல்ல, ஜோன்ஸ்ரனுக்கும் சேவகம் செய்திருக்கிறார் என்பது இதன்மூலம் உறுதியாகின்றது. ஜோன்ஸ்ரன் குருநாகல் மாவட்டத்தில் 12அரசியல் கூட்டங்களை தவர்த்;துவிட்டு 300 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள மித்தனியவில் நடக்கக்கூடிய மனம்பேரியின் கூட்டத்துகு வந்ததாய் மார்புதட்டிக் கொண்டதன் பின்னனி என்னவென்று இப்போது தெளிவாகிறது. அந்த கூட்டத்தில் ஜோன்ஸ்ரன் மனம்பேரியை தாராளவாதி என்றும் பணத்தை வீசி எறிந்து செலவு செய்யும் கொடையாளி என்றும் புகழ்ந்து பாடியிருந்தார்.

மனம்பேரியின் தில்லுமுல்லு

சனாதிபதி மகிந்தவின் பாதுகாப்புப் பிரிவில் பொலிஸ் கான்ஸ்டபிளாக வாழ்க்கையை ஆரம்பித்த மனம்பேரி இப்படி முன்னேறியதெல்லாம் எப்படி. இத்தனை பெரும் செல்வத்தை மகிந்த ராஜபக்சையிடம் இருந்தபோது மனம்பேரி சம்பாதித்தாரா அல்லது ஜோன்ஸ்ரனின் இணைப்புச் செயலாளராக இருந்தபோது சம்பாதித்தாரா என்ற தெரியதில்லை. பொலிஸ் கான்ஸ்டபிள் அடையாள அட்டையைத் தவறுதலாகப் பயன்படுத்தி, கஞ்சா கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மனம்பேரி- கலா ரேடஸ் உரிமையாளர் சுவிஸ் கந்தராஜாவை கடத்தி கப்பம் கேட்டு கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மனம்பேரி - நாடாளமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மனம்பேரி- ஜோன்ஸ்ரனுக்கு எந்த மாதிரியான இணைப்புச் செயலாளராக இருந்தார் என்பதுதான் விடைதேடவேண்டிய வினா.

மனம்பேரியின் இராகுகாலங்களும் சனிகளும்


குருநாகலில் இருக்கும் சட்டத்தரணி ஒருவர் 327 கிலோமீற்றர் பயணம் செய்து வலச்புல நீதிமன்றத்தில் நடக்கும் ஒரு வழக்கில் ஆஜராகிய அதிசயம் ஒன்று உண்டு. சம்பத் மனம்பேரி வலச்புல நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போதெல்லாம் குருநாகலிலிருந்து ஒரு சட்டத்தரணி ஓடி வந்தார். எங்கோ ஒரு இடத்தில் நடக்கும் வழக்குக்கு, எங்கோ ஒரு மூலையிலிருந்து சட்டத்தரணி ஒருவர் படை எடுக்கிறார் என்றால் இந்த நெற்வோர்க்கின் பலத்தை சற்று யோசித்துபாருங்கள். உண்மையில் சம்பத் மனம்பேரி அத்தனை சீக்கிரத்தில் காவல் துறையிடம் சிக்குபவர் அல்லர். ரோஹான் ஒலுகல்ல தலைமையிலான குழு ஹெகல் பத்திர பத்மே கும்பலை அள்ளிக் கொண்டு வந்ததால்தான் மனம்பேரி சிக்கினார். மனம்பேரி இவர்களோடு நடத்திய வாட்சப் கூறுப் உரையாடல்கள் எல்லாம் அம்பலமாகியிருக்கின்றன. மனம்பேரியை ஒலுகல்லவிடம் ஒப்படைத்தி ருப்பதால் அவர் மனம்பேரியின் ஜாதகத்திலிருக்கும் இராகுகாலங்களையும் சனிகளையும் வட்டம் போட்டு பகிரங்கப்படுத்தி விடுவார் என்பது திண்ணம். ஏன்னென்றால் மனம்பேரி ஒலுகல்லவிடம் ஒப்படைக்கப்பட முன்னரே சில முக்கியமான தகவல்களை வெளியிட்டிருந்தார். அவருக்குப் பொலிசிலிருந்து தலைமறைவாய் இருக்க உதவிபுரிந்த தோளியையும் மின்சாரசபையில் வேலை செய்யும் தோளியின் கணவரையும் இனம் காட்டி இருந்தார்.

சிக்கிய சிட்டைகள்


அந்த வீட்டைப் பரிசோதித்தபோது தங்கம் பூசப்பட்ட ரீ-56துப்பாக்கிகளும் 115 தோட்டாக்களும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. அதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் துறை முகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஐஸ் இரசாயண மாதிரிகளை விடுவிக்கச் சுங்கத் திணைக்களத்துகு பணம் கட்டிய பின்னர் பெற்றுக்கொண்ட சிட்டைகளும் கொள்கலன்களை வெளியே எடுப்பதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களும்கூட சிக்கியிருத்தன. 


தனது சட்டதரணிகள் முகங்களில் கரி பூசிய மனம்பேரி 

மனம்பேரியின் சட்டதரணிகள் தம் தரப்பினருக்கும் இந்த ஐஸ் இரசாயண மாதிரிகளுக்கும் எந்த வித சம்பந்தமுமில்லை என்றும் இந்த கொள்கலன்கள் மனம்பேரியினுடையதல்ல என்றும் மனம்பேரி சும்மா யாருக்கோ உதவிக்கு அங்கே சென்றார் என்றும் புரட்டாதி 17ஆம் திகதி வலச்புல்ல நீதவான நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்கள். ஆனால் மனம்பேரி பொலிஸ் விசாரணைகளின் அமிலம் தாங்க முடியாமல் அனைத்தையும் ஒப்புக்கொண்டு தன்னுடைய சட்டத்தரணிகளின் முகத்திலேயே கரிபூசியிருந்தார். இப்போது கேள்வி என்னவென்றால் மனம்பேரி இக்கொள்கலன்களை சுங்க திணைக்களத்திடம் எப்படியானப் பொய்யைச் சொல்லி விடுவித்துக்கொண்டார் என்பதுதான். 

அமரிக்க உளவுத்துறைத் தகவல்

இக்கொள்கலன்களில் ஐஸ் மாதிரிகள் இருப்பதாக அமரிக்க உளவுத்துறை இலங்கைச் சுங்கத் திணைக்களத்திற்கு அறிவித்ததாகவும் இங்கே அவற்றைக் கண்டறியும் தொழினுட்பம் இல்லாததாலும் இந்த இக்கொள்கலன்கள் வெளியே சென்றதாகவும் சொல்லப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இலங்கைக்கான அமரிக்க தூதுவர் ஜூலி சாங் போதைப் பொருள்களைக் கண்டறியக்கூடி நவீன இயந்திரம் ஒன்றை இலங்கை அரசிடம் கையளித்திருந்தார். இது போன்ற போதைக் கடத்தல் பேர்வளிகள் சூட்சுமமாய் மறைத்துக் கொண்டுவரும் மாதிரிகளை அடையாளம் காணவேண்டு மென்ற நல்ல எண்ணமே எனலாம். எது எப்படியோ குறித்த கொள்கலன்கள் தொடர்பாக உரிய விசாரணைகள் நடிப்பதாக அமைச்சர் ஆனந்த விஜேபாலை அறுவித்திருக்கிறார்.

சஜித் பிரேமதாசவின் மௌன விரதம்

சும்மா முன்ணோட்டத்தின்போது இத்தனை விடயங்களைக்கொட்டிய சம்பத் மனம்பேரி, ஒலுகல்லவிடம் எல்லாவற்றையும் கொட்டப் போகிறார். இதெல்லாம் இப்படி இருக்க நாடெங்களும் போதைப் பொருள் மற்றும் பாதாள மாபியாவுக்கு எதிராக பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்க, எதிர்க்கட்சியோ இதை எதையும் இலட்சியம் செய்யாமல் இருக்கிறது. ஒரு சின்ன விடயத்தையும் பூதாகரமாக்கி நாடாள மன்றத்திலே கலாட்டா செய்யும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த விவகாரம் தொடர்பில் மௌன விரதம் இருக்கிறார் எனலாம். இதேவேளை உதே கம்மான்பில்ல நாட்டில் போதைப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் சந்தைப் பெறுமதி அப்படியே தான் இருப்பதாகவும் அரசு போதைமாபியாவுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டிருந்தால்  போதைப் பொருளினுடைய விலை இரண்டு மூன்று மடங்கு அதிகரித்து இளைஞர்கள் இளைஞிகள் அவலக்குரல் எழுப்பிக்கொண்டு பாதையில் விழ்ந்து கிடப்பார்கள் என்றும் அப்போ அவர்களை மக்கள் மருத்துவ மனைகளுக்கு தூக்கிச்சென்று இருப்பார்கள் என்றும் சொல்லுகிறார். என்ன ஒரு விளக்கம். குடிவரவு கட்டுபாட்டாளர் மாதிரி, கம்மன்பில்ல ஒரு குடுவரவு கட்டுபாட்டாளராய் இருக்க வேண்டிய ஒருவர் போலிருக்கிறது. காதல் நுளையாத மனமிலைமாதிரி, இந்த கம்மன்பில்ல கருத்துச் சொல்லாத இடம் இல்லை என்றாகிவிட்டது என்கிறது. 

முடிவு


இம்முறை ஒரு தேர்ந்த போதைப் பொருள் வியாபாரி வேடம் தாங்கி போதைப் பொருள் பாவிக்கும் சமூகத்தின் குரலாய் கம்மன்பில்ல கலக்கிக்கொண்டு இருக்கிறார். கம்மன்பில்ல தன்னுடைய தலைக்குள் இருக்கும் மூளையை தன்னுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது பயன்படுத்த வேண்டும் என்பது சமூக ஊடக நண்பர்கள் முன்வைக்கும் ஒரு கோரிக்கை. கம்மன்பில்ல வகையராக்கள் எதிர்க்கட்சிகள் என்னதான் ஒப்பாரி வைத்தாலும் இந்த ஒப்பரேசனை நிறுத்த எப்படிதான் சதி செய்தாலும் அனுர அரசுசின் அதிரடி முன்னோக்கிச் செல்லும் என்பதையே போதை மாப்பியாவிற்கு எதிரான சனாதிபதியினுடைய ஐ.நா சபை உரை உணர்த்தி நிற்கிறது. கடைசியாக சம்பத் மனம் பேரி ரோஹான் ஒலுகல்லவிடம் வாக்குமூலம் கொடுத்து முடியும்போது வெள்ளையும் சொல்லையுமாக இன்று கதைபேசி திரிபவர்களினுடைய கறுப்பு பக்கங்கள் நம்முன்னே அவலட்சனமாய்க் காட்சி கொடுக்கப்போகின்றது என்பது நிஜம்.  அப்போது எத்தனை பேர் சிறைக்குள் இருப்பார்கள் எத்தனை ஆயுதங்கள் கைப்பட்டப்பட்டிருக்கும் என்பதுதான் விறுவிறுப்பான இந்த படத்தின் கிளைமெக்ஸ் ஆக இருக்கப் போகுறது.(S.K. Kiruththikan  வலையொளிப் பதிவிலிருந்தும் https://hirunews.lk/ https://www.themorning.lk/https://www.adaderana.lk/ பதிவிலிருந்தும் தொகுக்கப்பட்டது)











No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff