Wednesday, November 19, 2025

பாதாள உலகக் கும்பலுக்குத் துப்பாக்கி விற்ற பொலிஸ்

 ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர், 


பாதால உலகக் கும்பலுக்கு ஆயிதம் விற்க ஒரு பொலிஸ் அதிகாரியால் முடிந்திருக்கிறது. அது இலங்கையில்தான் அண்மையில் நிகழ்ந்திருக்கிறது. இதற்கு இலங்கைக் களுத்துறையில் நடந்த ஒரு சம்பவம் மிகச் சரியான உதாரணமாயிற்று. கடந்த ஐப்பசி 11ஆம் திகதி களுத்துறை தெற்கு பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்துக்கு துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. அன்றைய தினமே களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அது தொடர்பில் கிடைபெற்ற தகவல்களின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் விசாரணையை மேற்கொண்டனர். களுத்துறை தெற்கு முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி பாதாளஉலக குழுவினருக்கு பொலிஸ் துப்பாக்கியை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விசேட அதிரடிப்படையினர் கடந்த ஐப்பசி 17 திகதி ருசிர கவிசன் எதிறிசிங்கே- ஜாபான (“Japana” )  என அழைக்கப்படுபவரை கழுத்துறையில் உள்ள நாகோடா பகுதியில் கைது செய்தார்கள் இதனைத்தொடர்ந்து இலங்கைக் காவற்துறையில் மிகப்பெரிய அபகீர்தியான ஒரு சம்பவம் அரங்கேறியது கண்டுபிடிக்கப்பட்டது. ஜாபான என்ற அழைக்கப்படும் இவர் ஒரு பாதால உலகப் பேர்வழி. இவர் இப்போது காவல்துறையிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறார். ஜாபானவின் படுக்கை அறையில் ஒழித்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டுத் தயரிப்பான 12- bore  சொட்கண், ஒரு பிஸ்ரல், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிகள், பலவகையான தோட்டாக்கள், கைவிலங்கு ஒன்று உட்பட இன்னும் பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன 



பின்னர் அவர் களுத்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, இந்த துப்பாக்கிகள் எங்கு கிடைத்தது என விசாரிக்கப்பட்டபோது, அவர் அளித்த வாக்கும்மூலம் அதிர்ச்சி ஏற்படுத்தியது. ஜாபான அப்படி என்ன சொன்னார்: முன்னாள் பிரதான பொலிஸ் பரிசோதகர் றுவான் விஜேசிங்கே -அவர் முன்பு களுத்துறை தெற்குப்பொலிஸ் நிலையத்தில் பொறுப்பாளரகப் பணிபுரிந்தவராவார்- தனக்குத் துப்பாக்கிகளையும் மற்றும் ஆயுதங்களையும் தந்தார் என உரிமை கொண்டாடினார். இப்போது இந்த பொலீஸ் அதிகாரி பதவியில் இருந்து நீக்கப்பட்டு இரத்தினபுரி காவல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார், ஆனால் அவர் தனது புதிய பதவியில் பணிக்கு வரத் தவறிவிட்டார் என்பதும் தெரியவந்தது.



குறித்த இந்தப் பொலிஸ் அதிகாரியுடன் உனக்கு என்ன தொடர்பு என்று கேட்டு அவருடைய கையடக்கத் தொலைபேசியைப் பரிசோதனை செய்தபோதுதான் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. பொலிஸ் பொறுப்பதிகாரி ஜாபானவுடன் இருந்தமை மற்றும் அவருடன் விருந்துகளில் கலந்து கொண்டமை, பொலிஸ் பொறுப்பதிகாரியின் துப்பாக்கியை 'ஜாபான' பாவித்த அனைத்தும் புகைப்படங்களும் இருந்துள்ளன. இந்த ஜாபான அந்த பொலிஸ் அதிகாரியுடன் மிக நெருக்கமாகப் புகைப்படத்தில் இருக்கிறார். அந்த பொலிஸ் அதிகாரியின் தொழில்முறை அதிகார கைத்துப்பாக்கியை தனது இடுப்பில் அணிந்தவாறு பல படங்கள் உள்ளார். ஒரு பாதால அடியாளான ஜாபானவுடன் அந்தப் பொலிஸ் அதிகாரி உண்டு குடித்து மகிழ்ந்து மது மயக்கத்தில் மதியிழந்து விதவிதமான புகைப்படங்கள் எடுத்திருப்பது அங்கு காணப்பட்டன. 



இந்த பொலிஸ் அதிகாரி பாதாள குழுக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். இந்த 'ஜாபான' களுத்துறை பொலிஸ் நிலையத்தில் பல சந்தர்ப்பங்களில் பொலிஸ் நிலைய அதிகாரியின் அறையில் விசாரணைகள் நடைபெறும்போது இவரும் விசாரணைகள் நடத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

தற்போதைய களுத்துறைத் தெற்குப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நாடகா குணசேகரா உடநடியாக ஓர் உள்ளக விசாரனையை ஆரம்பித்தார். களுத்துறை தெற்கு ஆயுதக் களஞ்சியத்தின் பொறுப்பாளர் சாஜன் மற்றும் ஹண்டபங்கொடவிலிருந்து நாகோடாவிற்கு ஆயுதத்தை கொண்டுசெல்லப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாகனத்தின் சாரதியிடமும்  பொலீசார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். துப்பாக்கி களஞ்சியச் சாலைக்குப் பொறுப்பான பொலிஸ் சாஜன் தெரிவிக்கையில்;: தன்னிடம் அந்த பிரதம பொலீஸ் பரிசோத அதிகாரி பின்னர் திருப்பித்தருகிறேன் என உறுதியளித்துத் துப்பாக்கியை களஞ்சியத்திலிருந்து எடுத்துச் சென்றதாக அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இந்தத் துப்பாக்கிக்கு 2012 ஆண்டிலிருந்து எந்த பதிவுகளும் ஆவணத்தில் இருந்திருக்கவில்லை என்பதும். இந்த துப்பாக்கி பொலிஸ் கண்காணிப்பில் இருக்கவேண்டும் என 2002 நீதிமன்றத்தின் ஒரு கட்டளை உள்ளதும் இப்போது கண்டு பிடிக்கப்படுகின்றது. அதாவது அந்த அதிகாரி பொலிஸ் களஞ்சியத்திலிருந்து துப்பாக்கிகளைக் கொண்டுபோய் ஒரு பாதாள அடியாளிடம் பத்திரமாய் ஒப்படைத்திருக்கிறார்.



குற்றப்பிரிவின் கூற்றுப்படி, ஹன்டபன்கொடை பகுதியில் துப்பாக்கி ஒப்படைக்கப்பட்ட தருணத்தைப் பதிவுசெய்ததாகக் கூறப்படும் புகைப்படங்கள் உட்பட, பெறுநரின் மொபைல் தொலைபேசியில் ஆதாரங்களை புலனாய்வாளர்கள் ஐப்பசி 29 அன்று கண்டறிந்தனர்.

தற்போது துப்பாக்கி கைப்பற்றப்பட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் களுத்துறை தெற்கு காவல் நிலையத்தில் உள்ள ஆயுதக் களஞ்சியத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

குறிப்பிடத்தக்க அளவில், இந்த வழக்கு தொடர்பாக மேலதிகமாகத் தெரியவருவது: 9 மிமீ வெடிமருந்துகளின் 51றவுன்சுகள் மற்றும் 38 வெடிமருந்துகளின் 16 றவுன்சுகளும் பொலீஸ் காவலில் இருந்து காணாமல் போயுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.



எப்படி இந்தக்கதை இருக்கிறது? இதேவேளை தான் கைதாவதைத் தடுக்குமுகமாகக் களுத்துறை நீதவான் நீதிமன்றதில் முன்பிணை கோரினார் அந்த பொலிஸ் அதிகாரி. இருப்பினும், காவல்துறையினர் முதற்கட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நீதிபதி அனுமதி அளித்தார், மேலும் கைது நடவடிக்கையைத் தொடர்வதற்கு எந்த சட்டத்தடையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். களுத்துறை நீதவான் நீதிமன்றம் பொலிஸ் அதிகாரி அந்தக் கோரிக்கை  நிராகரிக்கப்பட்டு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் களுத்துறை மாவட்ட சிஐடி விசாரணைகளை மேற்;கொண்டு வருகிறது: களுத்துறை குற்றப்பிரிவு இயக்குநர் கமல் கிரியெல்ல மற்றும் ழுஐஊ இன்ஸ்பெக்டர் நிலங்க சஞ்சீவ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.


சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி, பொது மக்களுக்குப் பாதுகாப்பையும் நம்பிக்கையும் வழங்க வேண்டிய நிறுவனங்களில் உள்ள உத்தியோகத்தவர்கள் கடமை தவறும்போது ஒட்டுமொத்த நிறுவனத்தையும் மக்கள் அவநம்பிக்கையுடன் பார்க்க ஆரம்பிப்பார்கள். இப்போது மக்களே முன்வந்து போதைப்பொருள்களுடன் சம்மந்தப்பட்ட நபர்கள் பற்றிய விவரங்களை பொலிஸ் திணைக்களத்துகு வளங்குகிறார். ஆனால் என்னதான் மாற்றங்கள் வந்திருந்தாலும்100மூ மறுமலர்ச்;சியைக் காண இன்னும் பெரும் தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. களுத்துறையில் ஒரு பொலிஸ் அதிகாரியின் பொறுப்பற்ற செயல்; பொலிஸ் திணைக்களத்துகுக் கிடைத்திருக்கும் மாபெரும் அவமானம். 



ஒரு தேசமாக ஒன்றிணைதல் - தேசிய இயக்கம்' என்ற தலைப்பில் அரசாங்கத்தின் புதிய போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின் தொடக்க விழாவில் பேசிய சனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளையும், இந்த நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைந்த கண்டுபிடிப்புகளையும் முன்வைத்தார். அவற்றில், இராணுவ முகாம்களில் இருந்து ரீ-56 தாக்குதல் துப்பாக்கிகள் குற்றவாளிகளின் கைகளில் சிக்கியதாகவும், 73 துப்பாக்கிகள் காணாமல் போனதாகவும், 35ஏற்கனவே மீட்கப்பட்டதாகவும் செய்திகள் இருப்பதாக தெரிவித்தி ருக்கிறார். வெடிமருந்துகளை வழங்கிய குற்றச்சாட்டில் ஒரு மூத்த இராணுவ கேணல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,அந்த அதிகாரியின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்பட்ட தாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், ஒரு பொலிஸ் அதிகாரி தனது சேவை ஆயுதத்தை விற்று நாட்டை விட்டு தப்பிச் சென்றதாகவும், விசாரணைகள் அதிகாரிகளுக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கும் இடையிலான தொடர்புகளைக் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். 


மோட்டார் போக்குவரத்துத் துறை, வாகனங்கள் இல்லாமல் எண் தகடுகளை வழங்கியுள்ளன. மேலும் கம்பஹாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்டதில் ஒரு பொலீஸ் அதிகாரி இரண்டு சட்டவிரோத வாகன எண் தகடுகளை வைத்திருப்பது அம்பலமானது என்றார். குடியேற்ற அதிகாரிகள் பாதாள உலக நபர்களுக்கு பாஸ்போர்ட்டுகளை எளிதாக்கியதாகவும், ஒரு புத்தக விற்பனையாளர் ஒரு குற்றவாளியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்காக கைரேகைகளை வழங்கிய வழக்கு இருப்பதையும் தெரிவித்தள்ளார். குற்றவியல் நலன்களுக்குச் சேவை செய்வதற்காக ஒரு கறுப்பு அரசு உருவாக்கப்பட்டுள்ளதுபோல் தென்படுகின்றது. இந்த குற்றங்களுக்கு உதவும் அனைத்து அரசு அதிகாரிகளும் உடனே மனம்மாற வேண்டும். எனவே காவல்துறையை சுத்திகரிப்பதன் மூலம் 80 வீதமான குற்றங்களை தடுத்துவிடலாம் என்பது எமது கருத்து. இந்த நாட்டில் பாதாள உலக கறுப்பு அரசு என்றும் இரண்டு அரசுகள் இருக்கூடாது. மக்களால் இயக்கப்படும் சனநாயக அரசு மட்டுமே இருக்கவேண்டும். எனவே கீளீன் ஸ்ரீறிலங்க தொடரட்டும் சனநாயக அரசு மலரட்டும்.

Hisham.M.Vlog என்னும் வலையொளிப் பதிவிலிருந்தும் https://www.lanka4.com https://battinaatham.net/?p=154034 https://article.wn.com/  https://www.virakesari.lk/article/179874 https://likedtamil.lk/kalutara-4/, https://www.tamilguardian.com  பதிவிலிருந்தும் தொகுக்கப்பட்டது)


நவம்பர் 21

ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர், 

நாமல் ராஜபக்சே ஆட்சிபிடிக்க திருகுதாளம் போடத் திட்டமிட்டிருக்கும் தினம் 21.11.2025 என்று ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த கபட நாடகம் கொழும்பில் எங்கோர் இடத்தில் நடைபெற இருக்கின்றது. இந்நாள் எமக்கு ஒரு முக்கிய நாளின் தொடக்கம். வரலாற்றை நோக்கினால் அவருக்கு அது அடி சறுக்கும் நாளாகத்தான் அமையப்போகிறது என்பது எமது கருத்துகணிப்பு. அதுமட்டுமல்ல அகிம்சையின் வெற்றிவீரர் எமது மண்ணுக்கு வந்த நாளும் இந்த மாதம் 27திகதிதான். அதாவது மாகாத்மாகாந்தி இம்மாதம் எமது பிரதேசத்திற்கு வந்த நாளாகும் என வாரலாறு கூறுகின்றது. எனவே அட்டுழியங்கள் செய்தவர்கள் வெல்ல மாட்டார்கள் என்பதை நாம் ஊகிக்கலாம். இந்த ஆட்சி பிடிக்கும் கபட நாடகம் அரசு சொல்லும் எந்த இடத்திலும் தம்மால் கூட்டத்தை திரட்டி அரங்கேற்ற முடியும் என்பது பொதுஜன பெரமுனவின் கூற்று.

2019 ஆண்டு நடந்த சனாதிபதி தேர்தல், 2020 ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் தமக்குக் கிடைத்த 69மூ வாக்குகளும் அப்படியே சிந்தாமல் சிதறாமல் இன்னமும் பத்திரமாக இருக்கின்றன என்பதுதான் பொதுஜன பெரமுனவின் அபிப்பிராயம். 2022ஆண்டு நடந்த மக்கள் புரட்சிபற்றியோ, அதன் பின்னர் பாதையில் இறங்க முடியாதவாறு நிலைமை சறுக்கியது  பற்றியோ, 2024ஆண்டு நடந்த சனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் மொத்த இருப்பும் ஆடிப்போகும் அளவுக்கு மக்கள் அளித்த தீர்ப்பு பற்றியோ, அவர்களின் மூளையில் எந்த ஒரு நினைவு மீட்டல்களுமே இல்லை. உறங்கிக்கொண்டிருக்கும் சிங்கங்கள் எல்லாம் தட்டி எழுப்பப்பட இருப்பதாகவும் இம்மாதம் 21ஆம்திகதி நடைபெறப்போவதைப் பார்க்க முடியும் என்றும் வீராவேசமாகச் சொல்கிறார்கள் பொதுஜன பெரமுனவின் எண்கணித வித்துவான்கள். இந்த இடத்தில் அறிந்த ஒரு கதையை நினைவூட்டித்தான் ஆகவேண்டும்:- 2008 ஆண்டு மகிந்த ராஜபக்சே இந்தியா சோதிடவாதிகளை நம்பி தேர்தல் ஒன்றை நடத்தி கவுண்டதாகப் பலர் கூறினர். ஆரம்பத்தில் ஒன்றிணைந்த எதிர்கட்சிகளின் மாபெரும் எதிர்ப்பு என்று இதற்கு நாமம் சூட்டப்பட்டது.




ஆனால் பொதுஜன பெரமுனவுக்கு ஒரு காலத்தில் ஜீவநாடியாக இருந்த வாயாலேயே வங்காளம் போகும் விமால் வீரவன்ஸ இந்த ஆட்சி கவிழ்ப்பு கபட நாடகத்தில் பங்கு பெறப்போவதாய் அறிவிக்கவில்லை. அவருக்கு ஏதோ கொள்ளைப் பிரச்சினை இருக்கிறதாம். மகிந்த ராஜபக்சே, கோட்டாபாய ராஜபக்சே என்று ராஜபக்சேக்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலின் முகவர்களில் ஒருவராகவிருந்த திலித் ஜயவீரவுக்கு நாமலை 21திகதி சனாதிபதியாக்க  ஆசை இல்லை. தாம் ஒருமுறை சனாதிபதியாகிப் பார்ப்போம் என்று அவர் சூறாவளிச் சுற்றுப் பயணத்தை எப்போதோ ஆரம்பித்துவிட்டார்.

கடந்த சனாதிபதி தேர்தலில் திலித் ஜயவீர போட்டியிட்டபோது அவருக்கு வீரவஞ்சவும் பிள்ளையானின் திடீர் சட்டதரணி கம்மான் பிலவும் பக்கவாத்தியம் வாசித்தார்கள். இந்த கோஷ;டி ஊர்களில் உள்ள ஒரு ரொட்டிக் கடையையும் விட்டு வைக்கவில்லை. ஒரு நேர்சையை நிறைவேற்றுவது போல ரொட்டிகளை ஓடர் செய்துகொண்டே இருந்தார் திலித். இந்த கூட்டணிக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. விமால் வீரவன்ஸ நாடாளுமன்றத் தேர்தலின்போது மெல்ல விலகிக்கொண்டு தன் பழைய ஜேவிபி உரிமைக்கதை எல்லாம் சொல்லி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார் ஆனால் கம்மான்பிலவோ தொடர்ந்தும் ரொட்டி தின்று வந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் கம்மான்பிலவின் உடைய வாக்குகளை ரோச்சடித்துத் தேடமுடியாத நிலைமை ஏற்பட்ட பிறகு திலித் ஜெவீரவின் சர்வஜன வலையவிலிருந்து கம்மான்பிலவு வெளியேறி பிள்ளையானினுடிய உத்தியோபூரவச்; சட்டத்தரணியானார். கடைசியில் வீரவான்ச, திலித் ஜெவீர, கம்மான்பிலவு என்ற முக்கூட்டுக்களும் சிதறின. அதாவது ஒரு காலத்தில் சிங்களத் தேசியவாதம் என்ற பெயரில் இனவாதத்தின் மறைப்படத்தைப் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு பொதுஜன பெரமுனவின் கூட்டிலிருந்து விட்டு, 2024ல் தனிக் கூட்டணியாய் இங்கத் தொடங்கி, இந்த மூவரும் இன்று வௌ;வேறான பாதையில் குப்புறவிழ்ந்து கிடக்கிறார்கள். உதே கம்மான்பில மட்டும் நாமலை சனாதிபதியாக்கும் சீராட்டு விழாவில் பங்கேற்க இருக்கிறார். கம்மான்பில வெறும் நான்காவது வரிசை, பாடாவதி பங்கேற்பாளர் அல்ல, அவர் இந்த வேள்வியின் முக்கிய பாத்திரம். 

சனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்குள் இருக்கும் ஹிட்லர் வெளியே வரத் துடிக்கிறான் என்பது, கம்மான்பில அண்மையில் ஆய்வு செய்து வெளியிட்ட மற்றொரு கண்டுபிடிப்பு. வால் அறுப்பட்ட பல்லிப்போல, சதா நேரமும் ஓடிக்கொண்டு, கண்டதெல்லாம் பேசும் கம்மான்பில, கோட்டாபாய ராஜபக்சே சனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கு வழங்கிய சான்றிதழ், ஒருவேளை ஞாபகம் இருக்கும். புரவலர் கம்மான்பில என்ன சொன்னார் தெரியுமா?: அதிகாரம் இல்லாத சனாதிபதி பதவியால் எந்தப் பயனுமே இல்லை. நாட்டைக் கட்டி எழுப்ப விளாடிமிர் புட்டின் போன்ற ஒரு தலைவர் தேவை. கோட்டாபாய ராஜபக்சேவிடம் புட்டினின் சகல குணங்களும் அம்சமாய் பொருந்தியிருக்கின்றன. ஆனாலும், வெறும் விளாடிமிர் புட்டின் மட்டும் இலங்கையைக் காக்கச் சரிவராது. மஹாதீர் மொஹமட் போன்ற அறிவுக் கூர்மையும், லீ குவான் யூ போன்ற நிர்வாகத்திறனும், ஜவஹர்லால் நேரு போன்ற நேர்மையான பண்புகளும், ஃபிடல் கஸ்ட்ரோவின் தேசப்பற்றும் கோட்டாபாய ராஜபக்சே மேலதிக பகேஜ்யாக இருக்கிறது என்று உலகத்தில் யாரும் கொடுக்காத ஒரு சான்றிதழை வழங்கினார் கம்மான்பில. 




அது எப்படி ஒரு மனிதனுக்குள் சர்வாதிகார புட்டினின் குணமும் இந்தியாவின் உடைய சுதந்திரத்தில் மகத்தான பங்களிப்புச் செய்த ஜவஹர்லால் நேருவின் குணமும் இருக்க முடியும் என்று யாருமே அப்போது கேள்வி கேட்கதில்லை. சரி இத்தனை குணங்களையும் அமையப்பெற்றவர் பல்பரிமான ஆளுமை ஒழுங்கற்ற தன்மையால் (அரடவipடந Pநசளழயெடவைல னளைழசனநச) அவதிப்படும் அன்னியன் படத்தில் வரும் அம்பியாகத்தான் இருக்கக்கூடும் என அப்போது அன்னாருக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு ஏனோதோன்றவில்லை. இது வீட்டில் செலவின்றி கோட்டாபாய ராஜபக்சேயைத் தயாரிப்பது எப்படி என்ற கம்மான்பிலவின் சமையல் குறிப்பு என்று புரிந்துகொண்டவர்கள் மட்டும் சிரித்துக்கொண்டு கடந்துபோனார்கள். சானாதிபதி அனுரவிற்குள் இருக்கும் ஹிட்லர் பற்றிப்பேசும் கம்மான்பில, இங்கே உதாரணமாய் சொன்னவர்களில் நேருவைத் தவிர மற்றவர்களைப் பாருங்கள் அத்தனை பேரும் எதோ ஒரு விதத்தில் சர்வாதிகார அலங்காரங்களைச் சூடிக்கொண்டவர்கள். 20, 30, ஏன் 50 வருடங்கள் என்று ஆண்டவர்கள். ஆக கம்மான்பிலப் போன்ற ஒரு நபரை இப்படி முன்பந்தியில் வைத்துக்கொண்டு நடத்தும் நவம்பர் -21 தோறணம் எங்கே போய் எப்படி முடியப் போகிறது என்றுதான் கேள்வியாய் இருக்கிறது. பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்த கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று ஏற்கனவே உத்தியோகப்பூரமாக அறிவித்து விட்டது. எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மார்கழி மாதம் சனாதிபதியாகுவார் என்று கேகாலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் அமுதவாக்கு வழங்கியிருப்பதால் அவர் அதற்கான முன்னேற்பாடுகளில் மூழ்கியிருக்கிறார்.


மிக அண்மையில் இந்தியா சென்ற சஜித் பிரேமதாச  பிரதமர் மோடியனுடைய அமைச்சரவை பிரபலங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் என்று பெரிய பெரிய கொப்புகளாய்ப் பார்த்துத்தான் பிடித்திருக்கிறார். கண்ணு கெட்டிய தூரம் நாட்டில் தேர்தல் ஒன்று இல்லாத நிலையில் அதிகம் வெளிநாட்டு பயணங்கள் எதுவும் மேற்கொள்ளாத சஜித் இப்படி தீடிர்என்று இந்தியா போயிருப்பதற்கான காரணம்தான் மர்மமாகிறது. ஒருவேளை மாகாணசபைத் தேர்தலை நடத்த இந்தியாமூலம் அழுத்தம் கொடுக்கும் நோக்கமாகக்கூட இருக்கலாம். எது எப்படியோ சஜித் பிரிமதாச தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் எடுத்த மிக முக்கியமான ஒரு தரமான முடிவுதான் பொது எதிரணி என்ற பெயரில் கூடி நாமலை சனாதிபதியாக்கும் பேரணியில் பங்கேர்க்காமல் இருப்பது. பொதுஜன பெரமுனவிற்குத்தான்  இந்நாள்களில் சேதாரம் அதிகம். ராஜபக்சேக்களின் முன்னைய கோட்டையான தென் பிராந்தியங்கள் எல்லாம் போதை மாப்பியாவினதும் பாதாள உலகத்தினதும் சொர்கபுரி என்று ஒரு விம்பம் உருவாகி இருக்குக்கூடிய நிலையில், தம் கட்சிமீது படிந்திருக்கக்கூடிய கறையைக் கழுவ பகீரத பிரியத்தனத்தின் ஓர் ஏற்பாடாகவே நவம்பர்-21 கோலாகலங்கள் பார்க்கப்படுகின்றன. இந்த அமளித்துமளியில் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்துகொண்டால் அதற்குக் கிடைக்கப்போகும் பட்டம் என்னவென்று தெரியும். இதனால்தான் சாமர்த்தியமாக தவிர்த்துவிட்டது ஐக்கிய மக்கள் சக்தி. ஆனால் இப்படி கலந்து கொள்வதில்லை என்று அறிவித்தாலும் ஒருசிலர் தனிப்பட்ட ரீதியில் கலந்துகொள்ள இருப்பதாகவும் இன்னும் சிலர் பெரிய மாகன்களாக ஆசிர்வாதப் பூக்களாக ஆசிர்வாதங்களைத் தூவ இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுஜன பெரமுனவினுடைய பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இப்போது கடும் அழுத்தத்தில் இருக்கிறார். சஜித் ஏன் வரமாட்டார் என்று கேட்டால் சனநாயகம் ஆபத்தில் இருக்கிறது என்கிறார். ரணில் கலந்து கொள்வாரா என்று கேட்டால் அரசியல் சாசன சர்வாதிகாரம் முறியடிக்கப்பட வேண்டும் என்கிறார்.  அனுர குமார் திசானாயாக்க இப்படி போதைப்பொருள் மாப்பியாவை ஒழிக்கப்போவதாய் முன்னர் சொல்ல வேயில்லை என்கிறார். ஒரு செயலாளராய் சாகர காரியவசவின் சம்பந்தம் இல்லாத பதில்களையும் தடுமாற்றங்களையும் பார்க்கும்போது வாழ்க்கையில் தொழில் விரக்தி அடைந்தவர்களுக்குப் படிப்பினை பெற நல்லதொரு பாடம் இருக்கிறது. பொதுஜன பெரமுனவின் செயலாளராய் இருப்பது என்பது ஒரு துன்பியல் நிகழ்வு. எப்படி எல்லாம் உருட்ட வேண்டி இருக்கிறது. சறுக்கிவிழ வேண்டி இருக்கிறது என்று பாருங்கள். அந்த அளவுக்கு சமாளிக்க திராணி என்று விழி பிதிங்கியிருக்கிறார் காரியவசம். பிரதான எதிர்கட்சியும் தலைவரும் பங்கோற்காமாற்போவதை சாகர காரியவசமால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆகவே அனுர அரசுடன் சஜித் தரப்புக்குக் கொடுக்கல் வாங்கல் இருக்கக்கூடும் என்று சொல்ல தலைப்பட்டிருக்கிறார் காரியவசம். டீல் கதை சொல்வதில் பொதுஜன பெரமுனவிற்கு நிகர் யாரும் இல்லை. 2015கும் 2019கும் இடைப்பட்ட காலத்தில் எதிர்கட்சியில் இருந்து கொண்டு ஜேவிபிக்கும் ரணிலுக்கும் டீல் இருப்பதாகவும் ஜேவிபி என்பது சிவப்பு யானைகள் என்று நன்மாராயம் வழங்கியது பொதுஜன பெரமுன. அண்மையில் ரணிலை கைது செய்தபோது அதே ரணிலோடு சேர்ந்துகொண்டு எல்லாரும் ஓடிவாருங்கள் சனநாயகம் ஆபத்திலிருக்கிறது என்று புலம்பகிறது பொதுஜன பெரமுன. இப்படித்தான் சஜித் பிமேதாசவும்  சனாதிபதித் தேர்தல்சமயம் தனது வெற்றியை ரணில் தடுத்துக் கொண்டிருப்ப தாகவும் ரணிலுக்கும் அனுரவிற்கும் இடையில் டீல் இருப்பதாகவும் அடித்துவிட்டார். ஆனால் ரணில் கைதானதும் ரணிலின் மனைவியை விட சிறப்பாய்  ரணிலை கவனித்துக் கொண்டார். தினமும் காலையிலும் மாலையிலும் மருத்துவமனைக்குப் போய் ரணிலை விடாப்பிடியாய் சந்தித்து மருத்துவமனை வளாகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பையும் நடத்தினார்.  உண்மையில் சனநாயகத்துகு இங்கே என்ன பாதிப்பு இருக்கிறது. தேர்தலை நடத்தாமல் இருந்தால் அல்லது வாக்குச் சீட்டுகளை எண்ணும்போது மின்சாரத்தைத் துண்டித்து மோசடி செய்தார். ஊடக நிறுவனங்களை தீயிட்டார். அரசுக்கு எதிராக தீர்ப்புச் சொல்லக் கூடிய நீதிபதிகளின் வீடுகளுக்கு கல்லெறிந்தார். ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டார். அல்லது எதிர்கட்சி தலைவர்கள் தேர்தலில் நின்ற ஒரே ஒரு குற்றதுகாகத் தறதறவென்று இழுத்துக் கொண்டுபோய் சிறைப்படுத்தப்பட்டார். சனநாயகம் செத்துவிட்டது என்று அழுது ஒப்பாரி வைக்கலாம். அப்படி எதுவும் இங்கே இல்லை. ஆனால் கடந்த ஆட்சிகளில் இதெல்லாம் இலங்கை அரசியலில் அங்கலாவணியங்களாக மாறியிருந்த அம்சங்கள். ஊடக சுதந்திரம் எந்தளவிற்கு இருந்தது என்று ஓர் இலத்திரனியல் ஊடகம் சாட்சிபகர்ந்தது. காலையிலிருந்து இரவு வரை அந்த ஊடகத்தின் வானொலி, தொலைக்காட்சி,  வலைய மைப்புக்கள் எல்லாம் அரசை கழுவி ஊற்றக்கொண்டு இருக்கிறது. யாராவது ஏதாவது சொன்னார்களா? அவர்கள் மேல் ஒரு கீறல் விழுந்ததா, இல்லை. ஆகவே அந்த சனநாயகம் மரித்துவிட்டது. அரசியல் சாசன சர்வதிகாரம் போன்ற கற்பனைக் கதைகளை கட்டிக்கொண்டு வீதியில் இறங்கினால் அதைப்போல நகைச்சுவை எங்குமே இல்லை. புதிய போரட்ட சுலோகங்கள் எதையும் உருவாக்கத்திராணி இன்றி நவம்பர்-21 வீதியில் இறங்கி சனநாயகத்தைத் தேடினால் காலியான பெருங்காய டப்பாமாதிரித்தான் இருக்கும்.  கடைசியாக இந்த பேரணியின் உருவாக்கத்தில் கம்மான்பில போன்ற அதி புத்திசாலி ஒருவரும் சம்மந்தப்பட்டிருப்பதால் இதுமுழுக்க முழுக்க நாமல் கம்மான்பில சங்கமமாகப் போகிறது. போவதற்கு வேறு போக்கிடம் இன்றியிருக்கிற ஐக்கிய தேசிய கட்சியின் ஒருசிலர் இணைந்து கொள்ளக்கூடும். கம்மான்பிலவின் நாடோடிக் கதைகளும் நாமலினுடைய பதட்டங்களும் மட்டும்தான் இங்கே பேசுபொருளாகவும் மாறும். உங்களுக்கு நினைவிருக்குமோ தெரியாது நவம்பர்-21 என்பது, 11வருடங்களுக்கு முன்பு 2014ஆண்டு சிறிசேன பொது வேட்பாளராய் அறிவித்தக்கொண்ட நாள். எல்லாவற்றிற்கும் காலம் நேரம் நாள் நட்சத்திரம் கிரகம் எல்லாம் பார்ப்பவர்கள் ஒரு சொதப்பல் சனாதிபதியின் அச்சொட்டான திகதியை பேரணி நடத்த ஏன் தெரிந்தெடுத்தார்கள் என்றுதான் தெரியவில்லை. 




Thursday, November 6, 2025

காடினலும் கத்தோலிக்க சமூகமும் நம்பிக்கை கொள்ளும் விசாரணைகள் -முடிச்சுக்கள் அவிழ்க்கப்படுமா? '' Æ


ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர், 

ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளாய் இருந்தவர்களை அடையாளம் கண்டு கொண்டதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்ததாக ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தன. விசாரணை நடந்து கொண்டிருக்கும் -இலங்கையை உலுக்கிய மிலேச்சத்தான் ஒரு கோரத்தைப் பற்றி நாடாளமன்றத் தெரிவுக் குழுவுக்குள் நடந்த ஓர் உரையாடலை வெளியே கசியவிட்ட பெருமை முஸ்லிம் காங்கிரஸ் நாடாளமன்ற உறுப்பினர் நிஜாம் காரியப்பரையேச் சார்ந்தது. விமல் ரத்நாயக்க, தயாசிறி ஜயசேகர, சவிந்திராணி கிரியால, நிஜாம் காரியப்பர் என்ற அந்த நாடாளமன்றத் தெரிவுக்குழு அங்கத்தவர்கள் அப்போது பிரசன்னமாகி இருந்திருக்கிறார்கள். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி உறுதிப்படுத்தும் பொருட்டு ரவி செனவிரத்ன குழுவுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். ரவி செனவிரத்னவின் புகைப்படம் தாங்கிய வண்ணம் ஈஸ்ரர் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர் என விசேட செய்திகள் வெளிவந்திருந்தன. இதுபற்றி நிஜாம் காரியப்பரை தவிர வேறுயாரும் வாயே திறக்கவில்லை. நிலைமையின் விபரீதம் வீரியமடைந்திருந்த நிலையில் ஊடகங்கள் இந்தச் செய்தியை ஊடக விஸ்தீரணமாக்கியிருந்தன.  தெரிவுக் குழுவுக்குள் நடந்த உரையாடலை நிஜாம் காரியப்பர் வெளியே கசியவிட்டது தவறு என்று அப்போதே தயாசிறி ஜயசேகரவே ஒப்புக்கொண்டார். 

ரவி செனவிரத்ன ஒரு புகழ்மிகு பொலீஸ் அதிகாரி. ஈஸ்ரர் குண்டுத்தாக்குதல் நடந்தபோது சிஐடிக்குப் பொறுப்பாய் இருந்தவரும் அவர். அளவாகத்தான்; பேசுவார். தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குத்தான் அவர் பதிலளித்தாரே ஒழிய அவர் ஒன்றும் அநாவசியமாய் போய் உளறிக் கொண்டிருக்கவில்லை:ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம் என்பது மட்டும்தான் அத்தகவல். 

ரவி செனவிரத்னவினுடைய கூற்று இந்தப்பயங்கரத்தின் மூளையாய் இருந்தவர்கள் யார் என்று எமக்குத் தெரியும். காலக்கிரமத்தில் ஆதாரங்களுடன் அனைத்தும் வெளிவரும் என்பதுதான். இதை உடனடியாக ஊடக சந்திப்பு ஒன்றைக் கூட்டி நிலைமையை பகிரங்கப் படித்தியிருக்கலாம். ஆனால் அவர் அப்படி எதையும் செய்யவில்லை. ஏதோ ஒன்றுக்குத் தருணம் பார்த்து காத்திரு ப்பது போலதான் தெரிகிறது. இந்த நிலையில்தான் நாடாளமன்றத்தினுடைய தெரிவுக்குழுவில் ரவி செனவிரத்ன இது பற்றிப் பேசியிருந்தார். தான் பேசுவது விகாரமாகி வதந்தியாகும் என்று அவர் எதிர்பாத்திருக்கமாட்டார். இன்னமும் அரசாங்கம் உத்தியோக பூர்வமானக அறிவிக்காத மிகஉணர்ச்சி தூண்டக்கூடிய இனவர்க்க முரண்பாடுகளை உருவக்கிய- ஒரு சமூகத்தையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய ஒரு பயங்கரத்தின் சூத்திரதாரிகளைப் பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. 

ஓர் உயர் அதிகாரியினுடைய தனிப்பட்டப் பாதுகாப்புப் பற்றி எந்தவித அக்கறையும் இல்லாமல் இப்படி அவர் சொன்னார். ஈஸ்ரர் விடயம் சரி என்னும் பொருள்பட சமூக ஊடகத்தில் பரப்பி ஒரு நேர்காணலைப்  பகிரங்கப்படுத்துவது எந்த விதத்தில் சரியாக இருக்கமுடியும். நாடாளமன்றத்தில் இதுதொடர்பாக விவதம்நடந்து கொண்டிருக்கும்போது ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகள் அடையளம் காணப்பட்டுள்ளதாக ரவி செனவிரத்ன தெரிவித்திருப்பதாக நிஜாம் காரியப்பர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டுப் பதட்டத்தை ஏற்படுத்தினார். இதனால் விடயம் மேலும் சிக்லானது. யார் அந்த சூத்திரதாரி என்று ஆளாளுக்குச் கேள்விகேட்கத் தொடங்க சமூக ஊடங்களில் பொய்வதந்திகள் வேகமாகப்பரவின. இந்த சதியின்பின்னணியில் இந்தியா இருப்பதாக ரவி செனவிரத்ன தெரிவித்ததாக சமூக ஊடங்களில் பரவிவும் இந்த செய்தி பொய்யனவை என பொலிஸ் ஊடகப்பிரிவு மறுப்பறிக்கை விடுத்தது. ரவி செனவிரத்ன அவர்களும் சமூகஊடகங்களில் சுற்றிவரும் இந்தச் செய்தி இடுகைகள் முற்றிலும் பொய்யனவை. தவறுக்கு வழிவகுக்கின்றன. தவறான தகவலைப்பரப்புவதற்கு இட்டுச்செல்கின்றன என தெரிவித்தார். கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்கியங்களுடன் இருந்தப் பொலிஸ் ஊடக அறிக்கையில் எந்த இடத்திலும் ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டார்கள் என ரவி செனவிரத்ன சொன்னதை மறுத்திருக்கவில்லை. பிரதான சூத்திரதாரி இந்தியா என்று தாம் எந்த இடத்திலும் சொல்லவில்லை என்றே அதன் சுருக்கம் இருந்தது. ஈஸ்ரர் குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இப்போது வேகம் எடுத்திருக்கின்றன. எல்லா விசாரணைகளையும் கம்மன்பிலத்தனமாகவோ அல்லது காரியப்பர்த்தனமாகவோ கடத்திவிடவும் முடியாது. 250பேருக்கு மேற்பட்ட மரணத்தோடு தொடர்புடைய அரசியல் சதியாக இருக்கக்கூடும் என்று சமூகத்தில் பேசப்படுகின்ற மிககோரவன்முறை அது. ஆகவே குற்றவாளிகளைச் சகல ஆதாரங்களுடன் பிடித்துத்தான கோப்பபுக்களை கையாளவேண்டும். 

இங்கே ரவி செனவிரத்ன சொன்ன விடயங்கள் ஒன்றும் புதுமையானவை அல்ல. ரவி செனவிரத்ன ஆரம்ப நாள்களில் இந்த விசாரணைகளை நடத்தியவர் ஆவார். சிஐடிக்கு அவர் பொறுப்பாக இருந்தபோது ஷhனி அபயசேகர சிஐடியின் பணிப்பாளராக இருந்தவர். ரவி செனவிரத்ன 2019-ஆம் பணி ஓய்வுபெற்றுச் செல்ல இருந்தபோது அப்போதைய ரணில் -மைத்திரி அரசு ரவி செனவிரத்ன ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலின் விசாரணைகளில் மும்மூரமாய்க் கவணம் செலுத்தியிருந்ததால் அவருக்குச் சேவை நீடிப்பை வழங்கியிருந்தது. ஆனால் 2019இல் நடந்த சனாதிபதித் தேருதலில் கோட்டாபாய ராஜபக்சே வென்றதும் பிரதமரையும் கபினற்றையும் நியமிக்கமுன்னர். ஷhனி அபயசேகரவை காலிமாவட்டத்திற்கு இடம்மாற்றி பதவியிறக்கியிருந்தார். அவரது தொழில்முறை வாழ்க்கையை காலிசெய்தார். மேலும் 100 அதிகமான சிஐடி அதிகாரிகள் கலைந்துபோன சீட்டுக்கட்டுக்களாக இடமாற்றம் செய்யப்பட்டார்கள். அவர்கள் வெளிநாடு செல்லமுடியாதவாறு பாஸ்போட்டுக்கள் முடக்கப்பட்டன. இதனால் ஈஸ்ரர் உட்பட முக்கிய விசாரணைகள் முடங்கிப்போயிருந்தன.  


ரவி செனவிரத்னவின் பதவியும் 31.12.2019ஆண்டு முடிவுக்கு வந்தது. கோட்டாபய அரசு அமைத்த சனாதிபதி விசாரணைக் குழுவுக்கு ரவி செனவிரத்ன 20.11.2020ஆண்டு அழைக்கப்பட்டார். ரவி செனவிரத்ன அன்று வழங்கிய வாக்குமூலம் மட்டுமே 163 பக்கங்களுக்கு மேல் இருக்கும். அப்போது நடந்த விசாரணைகள்தான் மிக முக்கியமானவை. இந்த விசாரணை அறிக்கையை படித்தால் பலவிடயங்கள் புரியும். ரவி செனவிரத்ன ஐந்து வருடங்களுக்கு முன்பே இது ஒரு சதி என்றும், இந்த சதியினுடைய முக்கியமானவர்களை நெருங்க உத்வேகத்துடனும் இருந்தார் என்றும் புரிந்து கொள்ள முடியும். 

'சஹ்ரான் குழுவுக்கும், ஐஎஸ் அமைப்புக்கும் பொருளாதார ரீதியிலான கொடுக்கல் வாங்கல்களோ அல்லது வேறு எந்த வடிவிலான கொடுக்கல் வாங்கல்களோ இருந்ததாக உங்கள் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டதா?' என்று ரவி செனவிரத்னவிடம் கேட்டார் அப்போதைய அரசு சட்டத்தரணி சஞ்சீவ திஸாநாயக்க. 'இல்லை. எனக்கு அப்படி எந்த விவரமும் கிடைக்கவில்லை. நான் 2019கடைசிவரை இந்த விசாரணைகளை நடத்தியிருந்தேன். தற்கொலைக் குண்டுதாரிகளான இப்ராஹிமின் புதல்வர்களிடமிருந்து பணப்பரிமாற்றம் நடந்த 41 இளைஞர்களின் வங்கிக் கணக்குகளை தடை செய்ய நடவடிக்கை எடுத்தேன். வெளிநாடுகளில் உள்ள இயக்கங்களின் மற்றும் நபர்களிடமிருந்து அப்படி ஏதும் வந்ததாக நாம் விசாரணை செய்யும்வரை எதுவும் பதிவாகவில்லை' என்றார் ரவி செனவிரத்ன. அப்போது சஞ்சீவ திஸாநாயக்க ஒரு தாளில் பெயரொன்றை எழுதி ரவி செனவிரத்னவிடம் காட்டினார். பின்னர் கேள்வியைத் தொடுத்தார். 'நான் இங்கே காட்டிக் கொண்டிருக்கும் பெயருக்கும் சஹ்ரானுக்கும் இடையில் ஏதாவது சம்பந்தம் இருப்பதாக உங்கள் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டதா?' என்று ரவி செனவிரத்னவிடம் கேட்டார் சஞ்சீவ திஸாநாயக்க. 'இப்படி சம்பந்தம் இருப்பதாக எங்களுக்கு தகவல்கிடைத்தது உண்மை. நாம் இதுபற்றி நீண்ட விசாரணை ஒன்றை நடத்தியி ருந்தோம். இதன்போது நீங்கள் சொல்லும், எமக்கு அண்மையில் இருக்கும் நாட்டிற்குள் உள்ள இந்தப் பெயருடன் சஹ்ரான் தொடர்புகளை வைத்திருந்ததற்கான எந்தவொரு ஆதாரத்தையும் எம்மால் உறுதி செய்யமுடியவில்லை', என்று பதிலளித்திருந்தார் ரவி செனவிரத்ன. இதன்போது சனாதிபதி கமிசனின் தலைவர் ஜனார்த்தன சில்வா, ரவி செனவிரத்னவிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டார். ரவி செனவிரத்ன அந்த கேள்விக்கு அன்று கொடுத்த பதிலுக்குப் பலரும் தலைசுற்றி விழாத நிலைமைதான். அப்படி என்ன கேள்வி -பதில், ஈஸ்ரர்அன்று தாக்குதல் நடத்த ஏதாவது ஒரு காரணத்தால் இந்த குரூரர்களுக்கு முடியாது போயிருந்தால் இவர்களுக்கு முறையாய்ப் பாதுகாப்பு வழங்கி சம்பவ இடங்களிலிருந்து இவர்களை அப்புறப்படுத்தி வதிவிடங்களை வழங்க ஏற்பாடு இருந்ததா அன்று ஜனார்த்தன சில்லா கேள்வி கேட்டார். அதற்குப் பதிலளிக்க ரவி செனவிரத்ன ஒரு பேப்பரும் பேனாவும் கேட்டார். ஒரு பெயரை எழுதினார். ரவி செனவிரத்ன அப்படி யாருடைய பெயரை எழுதினார். மிகப்பெரிய கேள்வி இது. 

காலம் ஒரு விசித்திரமான வாத்தியார். கோட்டாபாய ராஜபக்சே அரசு இனி 25,30 வருடங்களுக்கு ஆட்சிசெய்யும் என்று கோட்டபாயவினுடைய பிரியமிகு வழக்கறிஞரும் முன்னாள் அமைச்சருமான அலி சப்ரி அடித்துவிட்டது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அதே அலி சப்ரியைப் பற்றித்தான் சொல்கிறோம். கடைசியில் என்ன நடந்தது இரண்டரை வருடங்களுக்கு மேல் அவராகளால் சமாளிக்க முடியவில்லை. துரத்தி அடிக்கப்பட்டார்கள். கோட்டபாய அரசு, ரவி செனவிரத்ன, ஷhனி அபயசேகர போன்றோர் எனித் தலைஎடுக்க முடியாது என்று அலட்சியமாக நினைத்திருந்தது. ஆனால் ரவி செனவிரத்ன இன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கிறார். ஷhனி அபயசேகர சிஐடி பாணிப்பார் நாற்காலியில் இருந்துகொண்டு விட்ட விசாரணை கோப்புக்களை தூசுதட்டிக் கொண்டிருக்கிறார். ரவி செனவிரத்னவிற்கும், ஷhனி அபயசேகரவிற்கும் இந்த பதவிகள் வழங்கப்பட்டபோது கலவரமடைந்து சத்தம் போட்டவர்களை எல்லாம் நிறுத்தி ஒரு வட்டம்போட்டுப் பார்த்தால் வட்டத்தின் மையப்புள்ளி சட்டத்தில் பிடிபடும். அந்தவட்டத்தின் மையப்புள்ளியில்தான் சதித்திட்டமிட்டவர்களின் மர்மங்களும் மறைந்திருக்கிறன. 

ரவி செனவிரத்ன யார் அவரது பின்புலம் என்ன எதுவும்தெரியாத காரியப்பர் இதைப் பகிரங்கப்படுத்தி மகிழ்ச்சி அடைந்திருந்தாலும் ரவி செனவிரத்ன இதைஎல்லாம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சனாதிபதி ஆணைக்குழுவில் பேசிவிட்டார் என்பதே நிஜம். இப்போது பலகோணங்களில் விசாரைணை நடக்கிறது. சில அனுமானங்கள் சரியாகுகின்றன. சில சந்தேகங்கள் தீர்ந்திருக்கின்றன. பிள்ளையானின் கட்சியின் இணைப்பாளராக இருந்த அசாத் மௌலான சனல் 04 இற்கு வழங்கிய சர்ச்சைக்குரிய நேர்காணல் தொடர்பாக நடக்கும் விசாரணைகளும் தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளன. காடினலும் கத்தோலிக்க சமூகமும் இந்த விசாரணைகள் தொடர்பாக இப்போது நம்பிக்கையோடு பேசிக்கொண்டிருக்கின்றனர். ரவி செனவிரத்ன அன்று பேப்பரில் எழுதிக் கொடுத்த பெயருடன் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்ட விடயங்களுடன் கோர்த்துப் பார்த்தால் ஒன்று மட்டும் சொல்லமுடியும். அதுதான் இன்று சிலருக்கு இதைஎல்லாம் பார்க்கும்போது இருப்புக் கொள்ளவில்லை. ரெம்பவே பதட்டம் அடைந்திருக்கிறார்கள். இதனால்தான் ரவி செனவிரத்ன எந்த இடத்திலும் சொல்லாத இந்தியாவை இழுத்து பொய்க்கதை பரப்புகிறார்கள். இதுவரை நடந்துகொண்டிருக்கக்கூடிய இந்த விசாரணைகளின் பெறுபேறுகளைப் பார்க்கும்போது- கோட்டை நீதிமன்ற விசாரணையின் போக்கைப் பார்க்கும்போது ஒன்றை மட்டம் சொல்லமுடியும். உச்சக் காட்சி நடக்கிறது வேடம் கலையும் நேரமிது.

Hisham.M.Vlogvdஎன்னும் வலையொளிப் பதிவிலிருந்தும் https://www.dailymirror.lk/, https://www.adaderana.lk/, https://www.newswire.lk, https://www.parliament.lk, https://www.newsfirst.lkபதிவிலிருந்தும் தொகுக்கப்பட்டது)



Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff