ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்,
ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளாய் இருந்தவர்களை அடையாளம் கண்டு கொண்டதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்ததாக ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தன. விசாரணை நடந்து கொண்டிருக்கும் -இலங்கையை உலுக்கிய மிலேச்சத்தான் ஒரு கோரத்தைப் பற்றி நாடாளமன்றத் தெரிவுக் குழுவுக்குள் நடந்த ஓர் உரையாடலை வெளியே கசியவிட்ட பெருமை முஸ்லிம் காங்கிரஸ் நாடாளமன்ற உறுப்பினர் நிஜாம் காரியப்பரையேச் சார்ந்தது. விமல் ரத்நாயக்க, தயாசிறி ஜயசேகர, சவிந்திராணி கிரியால, நிஜாம் காரியப்பர் என்ற அந்த நாடாளமன்றத் தெரிவுக்குழு அங்கத்தவர்கள் அப்போது பிரசன்னமாகி இருந்திருக்கிறார்கள். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி உறுதிப்படுத்தும் பொருட்டு ரவி செனவிரத்ன குழுவுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். ரவி செனவிரத்னவின் புகைப்படம் தாங்கிய வண்ணம் ஈஸ்ரர் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர் என விசேட செய்திகள் வெளிவந்திருந்தன. இதுபற்றி நிஜாம் காரியப்பரை தவிர வேறுயாரும் வாயே திறக்கவில்லை. நிலைமையின் விபரீதம் வீரியமடைந்திருந்த நிலையில் ஊடகங்கள் இந்தச் செய்தியை ஊடக விஸ்தீரணமாக்கியிருந்தன. தெரிவுக் குழுவுக்குள் நடந்த உரையாடலை நிஜாம் காரியப்பர் வெளியே கசியவிட்டது தவறு என்று அப்போதே தயாசிறி ஜயசேகரவே ஒப்புக்கொண்டார்.
ரவி செனவிரத்ன ஒரு புகழ்மிகு பொலீஸ் அதிகாரி. ஈஸ்ரர் குண்டுத்தாக்குதல் நடந்தபோது சிஐடிக்குப் பொறுப்பாய் இருந்தவரும் அவர். அளவாகத்தான்; பேசுவார். தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குத்தான் அவர் பதிலளித்தாரே ஒழிய அவர் ஒன்றும் அநாவசியமாய் போய் உளறிக் கொண்டிருக்கவில்லை:ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம் என்பது மட்டும்தான் அத்தகவல்.
ரவி செனவிரத்னவினுடைய கூற்று இந்தப்பயங்கரத்தின் மூளையாய் இருந்தவர்கள் யார் என்று எமக்குத் தெரியும். காலக்கிரமத்தில் ஆதாரங்களுடன் அனைத்தும் வெளிவரும் என்பதுதான். இதை உடனடியாக ஊடக சந்திப்பு ஒன்றைக் கூட்டி நிலைமையை பகிரங்கப் படித்தியிருக்கலாம். ஆனால் அவர் அப்படி எதையும் செய்யவில்லை. ஏதோ ஒன்றுக்குத் தருணம் பார்த்து காத்திரு ப்பது போலதான் தெரிகிறது. இந்த நிலையில்தான் நாடாளமன்றத்தினுடைய தெரிவுக்குழுவில் ரவி செனவிரத்ன இது பற்றிப் பேசியிருந்தார். தான் பேசுவது விகாரமாகி வதந்தியாகும் என்று அவர் எதிர்பாத்திருக்கமாட்டார். இன்னமும் அரசாங்கம் உத்தியோக பூர்வமானக அறிவிக்காத மிகஉணர்ச்சி தூண்டக்கூடிய இனவர்க்க முரண்பாடுகளை உருவக்கிய- ஒரு சமூகத்தையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய ஒரு பயங்கரத்தின் சூத்திரதாரிகளைப் பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை.
ஓர் உயர் அதிகாரியினுடைய தனிப்பட்டப் பாதுகாப்புப் பற்றி எந்தவித அக்கறையும் இல்லாமல் இப்படி அவர் சொன்னார். ஈஸ்ரர் விடயம் சரி என்னும் பொருள்பட சமூக ஊடகத்தில் பரப்பி ஒரு நேர்காணலைப் பகிரங்கப்படுத்துவது எந்த விதத்தில் சரியாக இருக்கமுடியும். நாடாளமன்றத்தில் இதுதொடர்பாக விவதம்நடந்து கொண்டிருக்கும்போது ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகள் அடையளம் காணப்பட்டுள்ளதாக ரவி செனவிரத்ன தெரிவித்திருப்பதாக நிஜாம் காரியப்பர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டுப் பதட்டத்தை ஏற்படுத்தினார். இதனால் விடயம் மேலும் சிக்லானது. யார் அந்த சூத்திரதாரி என்று ஆளாளுக்குச் கேள்விகேட்கத் தொடங்க சமூக ஊடங்களில் பொய்வதந்திகள் வேகமாகப்பரவின. இந்த சதியின்பின்னணியில் இந்தியா இருப்பதாக ரவி செனவிரத்ன தெரிவித்ததாக சமூக ஊடங்களில் பரவிவும் இந்த செய்தி பொய்யனவை என பொலிஸ் ஊடகப்பிரிவு மறுப்பறிக்கை விடுத்தது. ரவி செனவிரத்ன அவர்களும் சமூகஊடகங்களில் சுற்றிவரும் இந்தச் செய்தி இடுகைகள் முற்றிலும் பொய்யனவை. தவறுக்கு வழிவகுக்கின்றன. தவறான தகவலைப்பரப்புவதற்கு இட்டுச்செல்கின்றன என தெரிவித்தார். கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்கியங்களுடன் இருந்தப் பொலிஸ் ஊடக அறிக்கையில் எந்த இடத்திலும் ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டார்கள் என ரவி செனவிரத்ன சொன்னதை மறுத்திருக்கவில்லை. பிரதான சூத்திரதாரி இந்தியா என்று தாம் எந்த இடத்திலும் சொல்லவில்லை என்றே அதன் சுருக்கம் இருந்தது. ஈஸ்ரர் குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இப்போது வேகம் எடுத்திருக்கின்றன. எல்லா விசாரணைகளையும் கம்மன்பிலத்தனமாகவோ அல்லது காரியப்பர்த்தனமாகவோ கடத்திவிடவும் முடியாது. 250பேருக்கு மேற்பட்ட மரணத்தோடு தொடர்புடைய அரசியல் சதியாக இருக்கக்கூடும் என்று சமூகத்தில் பேசப்படுகின்ற மிககோரவன்முறை அது. ஆகவே குற்றவாளிகளைச் சகல ஆதாரங்களுடன் பிடித்துத்தான கோப்பபுக்களை கையாளவேண்டும்.
இங்கே ரவி செனவிரத்ன சொன்ன விடயங்கள் ஒன்றும் புதுமையானவை அல்ல. ரவி செனவிரத்ன ஆரம்ப நாள்களில் இந்த விசாரணைகளை நடத்தியவர் ஆவார். சிஐடிக்கு அவர் பொறுப்பாக இருந்தபோது ஷhனி அபயசேகர சிஐடியின் பணிப்பாளராக இருந்தவர். ரவி செனவிரத்ன 2019-ஆம் பணி ஓய்வுபெற்றுச் செல்ல இருந்தபோது அப்போதைய ரணில் -மைத்திரி அரசு ரவி செனவிரத்ன ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலின் விசாரணைகளில் மும்மூரமாய்க் கவணம் செலுத்தியிருந்ததால் அவருக்குச் சேவை நீடிப்பை வழங்கியிருந்தது. ஆனால் 2019இல் நடந்த சனாதிபதித் தேருதலில் கோட்டாபாய ராஜபக்சே வென்றதும் பிரதமரையும் கபினற்றையும் நியமிக்கமுன்னர். ஷhனி அபயசேகரவை காலிமாவட்டத்திற்கு இடம்மாற்றி பதவியிறக்கியிருந்தார். அவரது தொழில்முறை வாழ்க்கையை காலிசெய்தார். மேலும் 100 அதிகமான சிஐடி அதிகாரிகள் கலைந்துபோன சீட்டுக்கட்டுக்களாக இடமாற்றம் செய்யப்பட்டார்கள். அவர்கள் வெளிநாடு செல்லமுடியாதவாறு பாஸ்போட்டுக்கள் முடக்கப்பட்டன. இதனால் ஈஸ்ரர் உட்பட முக்கிய விசாரணைகள் முடங்கிப்போயிருந்தன.
ரவி செனவிரத்னவின் பதவியும் 31.12.2019ஆண்டு முடிவுக்கு வந்தது. கோட்டாபய அரசு அமைத்த சனாதிபதி விசாரணைக் குழுவுக்கு ரவி செனவிரத்ன 20.11.2020ஆண்டு அழைக்கப்பட்டார். ரவி செனவிரத்ன அன்று வழங்கிய வாக்குமூலம் மட்டுமே 163 பக்கங்களுக்கு மேல் இருக்கும். அப்போது நடந்த விசாரணைகள்தான் மிக முக்கியமானவை. இந்த விசாரணை அறிக்கையை படித்தால் பலவிடயங்கள் புரியும். ரவி செனவிரத்ன ஐந்து வருடங்களுக்கு முன்பே இது ஒரு சதி என்றும், இந்த சதியினுடைய முக்கியமானவர்களை நெருங்க உத்வேகத்துடனும் இருந்தார் என்றும் புரிந்து கொள்ள முடியும்.
'சஹ்ரான் குழுவுக்கும், ஐஎஸ் அமைப்புக்கும் பொருளாதார ரீதியிலான கொடுக்கல் வாங்கல்களோ அல்லது வேறு எந்த வடிவிலான கொடுக்கல் வாங்கல்களோ இருந்ததாக உங்கள் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டதா?' என்று ரவி செனவிரத்னவிடம் கேட்டார் அப்போதைய அரசு சட்டத்தரணி சஞ்சீவ திஸாநாயக்க. 'இல்லை. எனக்கு அப்படி எந்த விவரமும் கிடைக்கவில்லை. நான் 2019கடைசிவரை இந்த விசாரணைகளை நடத்தியிருந்தேன். தற்கொலைக் குண்டுதாரிகளான இப்ராஹிமின் புதல்வர்களிடமிருந்து பணப்பரிமாற்றம் நடந்த 41 இளைஞர்களின் வங்கிக் கணக்குகளை தடை செய்ய நடவடிக்கை எடுத்தேன். வெளிநாடுகளில் உள்ள இயக்கங்களின் மற்றும் நபர்களிடமிருந்து அப்படி ஏதும் வந்ததாக நாம் விசாரணை செய்யும்வரை எதுவும் பதிவாகவில்லை' என்றார் ரவி செனவிரத்ன. அப்போது சஞ்சீவ திஸாநாயக்க ஒரு தாளில் பெயரொன்றை எழுதி ரவி செனவிரத்னவிடம் காட்டினார். பின்னர் கேள்வியைத் தொடுத்தார். 'நான் இங்கே காட்டிக் கொண்டிருக்கும் பெயருக்கும் சஹ்ரானுக்கும் இடையில் ஏதாவது சம்பந்தம் இருப்பதாக உங்கள் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டதா?' என்று ரவி செனவிரத்னவிடம் கேட்டார் சஞ்சீவ திஸாநாயக்க. 'இப்படி சம்பந்தம் இருப்பதாக எங்களுக்கு தகவல்கிடைத்தது உண்மை. நாம் இதுபற்றி நீண்ட விசாரணை ஒன்றை நடத்தியி ருந்தோம். இதன்போது நீங்கள் சொல்லும், எமக்கு அண்மையில் இருக்கும் நாட்டிற்குள் உள்ள இந்தப் பெயருடன் சஹ்ரான் தொடர்புகளை வைத்திருந்ததற்கான எந்தவொரு ஆதாரத்தையும் எம்மால் உறுதி செய்யமுடியவில்லை', என்று பதிலளித்திருந்தார் ரவி செனவிரத்ன. இதன்போது சனாதிபதி கமிசனின் தலைவர் ஜனார்த்தன சில்வா, ரவி செனவிரத்னவிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டார். ரவி செனவிரத்ன அந்த கேள்விக்கு அன்று கொடுத்த பதிலுக்குப் பலரும் தலைசுற்றி விழாத நிலைமைதான். அப்படி என்ன கேள்வி -பதில், ஈஸ்ரர்அன்று தாக்குதல் நடத்த ஏதாவது ஒரு காரணத்தால் இந்த குரூரர்களுக்கு முடியாது போயிருந்தால் இவர்களுக்கு முறையாய்ப் பாதுகாப்பு வழங்கி சம்பவ இடங்களிலிருந்து இவர்களை அப்புறப்படுத்தி வதிவிடங்களை வழங்க ஏற்பாடு இருந்ததா அன்று ஜனார்த்தன சில்லா கேள்வி கேட்டார். அதற்குப் பதிலளிக்க ரவி செனவிரத்ன ஒரு பேப்பரும் பேனாவும் கேட்டார். ஒரு பெயரை எழுதினார். ரவி செனவிரத்ன அப்படி யாருடைய பெயரை எழுதினார். மிகப்பெரிய கேள்வி இது.
காலம் ஒரு விசித்திரமான வாத்தியார். கோட்டாபாய ராஜபக்சே அரசு இனி 25,30 வருடங்களுக்கு ஆட்சிசெய்யும் என்று கோட்டபாயவினுடைய பிரியமிகு வழக்கறிஞரும் முன்னாள் அமைச்சருமான அலி சப்ரி அடித்துவிட்டது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அதே அலி சப்ரியைப் பற்றித்தான் சொல்கிறோம். கடைசியில் என்ன நடந்தது இரண்டரை வருடங்களுக்கு மேல் அவராகளால் சமாளிக்க முடியவில்லை. துரத்தி அடிக்கப்பட்டார்கள். கோட்டபாய அரசு, ரவி செனவிரத்ன, ஷhனி அபயசேகர போன்றோர் எனித் தலைஎடுக்க முடியாது என்று அலட்சியமாக நினைத்திருந்தது. ஆனால் ரவி செனவிரத்ன இன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கிறார். ஷhனி அபயசேகர சிஐடி பாணிப்பார் நாற்காலியில் இருந்துகொண்டு விட்ட விசாரணை கோப்புக்களை தூசுதட்டிக் கொண்டிருக்கிறார். ரவி செனவிரத்னவிற்கும், ஷhனி அபயசேகரவிற்கும் இந்த பதவிகள் வழங்கப்பட்டபோது கலவரமடைந்து சத்தம் போட்டவர்களை எல்லாம் நிறுத்தி ஒரு வட்டம்போட்டுப் பார்த்தால் வட்டத்தின் மையப்புள்ளி சட்டத்தில் பிடிபடும். அந்தவட்டத்தின் மையப்புள்ளியில்தான் சதித்திட்டமிட்டவர்களின் மர்மங்களும் மறைந்திருக்கிறன.
ரவி செனவிரத்ன யார் அவரது பின்புலம் என்ன எதுவும்தெரியாத காரியப்பர் இதைப் பகிரங்கப்படுத்தி மகிழ்ச்சி அடைந்திருந்தாலும் ரவி செனவிரத்ன இதைஎல்லாம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சனாதிபதி ஆணைக்குழுவில் பேசிவிட்டார் என்பதே நிஜம். இப்போது பலகோணங்களில் விசாரைணை நடக்கிறது. சில அனுமானங்கள் சரியாகுகின்றன. சில சந்தேகங்கள் தீர்ந்திருக்கின்றன. பிள்ளையானின் கட்சியின் இணைப்பாளராக இருந்த அசாத் மௌலான சனல் 04 இற்கு வழங்கிய சர்ச்சைக்குரிய நேர்காணல் தொடர்பாக நடக்கும் விசாரணைகளும் தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளன. காடினலும் கத்தோலிக்க சமூகமும் இந்த விசாரணைகள் தொடர்பாக இப்போது நம்பிக்கையோடு பேசிக்கொண்டிருக்கின்றனர். ரவி செனவிரத்ன அன்று பேப்பரில் எழுதிக் கொடுத்த பெயருடன் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்ட விடயங்களுடன் கோர்த்துப் பார்த்தால் ஒன்று மட்டும் சொல்லமுடியும். அதுதான் இன்று சிலருக்கு இதைஎல்லாம் பார்க்கும்போது இருப்புக் கொள்ளவில்லை. ரெம்பவே பதட்டம் அடைந்திருக்கிறார்கள். இதனால்தான் ரவி செனவிரத்ன எந்த இடத்திலும் சொல்லாத இந்தியாவை இழுத்து பொய்க்கதை பரப்புகிறார்கள். இதுவரை நடந்துகொண்டிருக்கக்கூடிய இந்த விசாரணைகளின் பெறுபேறுகளைப் பார்க்கும்போது- கோட்டை நீதிமன்ற விசாரணையின் போக்கைப் பார்க்கும்போது ஒன்றை மட்டம் சொல்லமுடியும். உச்சக் காட்சி நடக்கிறது வேடம் கலையும் நேரமிது.
Hisham.M.Vlogvdஎன்னும் வலையொளிப் பதிவிலிருந்தும் https://www.dailymirror.lk/, https://www.adaderana.lk/, https://www.newswire.lk, https://www.parliament.lk, https://www.newsfirst.lkபதிவிலிருந்தும் தொகுக்கப்பட்டது)

No comments:
Post a Comment