ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்,
நாமல் ராஜபக்சே ஆட்சிபிடிக்க திருகுதாளம் போடத் திட்டமிட்டிருக்கும் தினம் 21.11.2025 என்று ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த கபட நாடகம் கொழும்பில் எங்கோர் இடத்தில் நடைபெற இருக்கின்றது. இந்நாள் எமக்கு ஒரு முக்கிய நாளின் தொடக்கம். வரலாற்றை நோக்கினால் அவருக்கு அது அடி சறுக்கும் நாளாகத்தான் அமையப்போகிறது என்பது எமது கருத்துகணிப்பு. அதுமட்டுமல்ல அகிம்சையின் வெற்றிவீரர் எமது மண்ணுக்கு வந்த நாளும் இந்த மாதம் 27திகதிதான். அதாவது மாகாத்மாகாந்தி இம்மாதம் எமது பிரதேசத்திற்கு வந்த நாளாகும் என வாரலாறு கூறுகின்றது. எனவே அட்டுழியங்கள் செய்தவர்கள் வெல்ல மாட்டார்கள் என்பதை நாம் ஊகிக்கலாம். இந்த ஆட்சி பிடிக்கும் கபட நாடகம் அரசு சொல்லும் எந்த இடத்திலும் தம்மால் கூட்டத்தை திரட்டி அரங்கேற்ற முடியும் என்பது பொதுஜன பெரமுனவின் கூற்று.2019 ஆண்டு நடந்த சனாதிபதி தேர்தல், 2020 ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் தமக்குக் கிடைத்த 69மூ வாக்குகளும் அப்படியே சிந்தாமல் சிதறாமல் இன்னமும் பத்திரமாக இருக்கின்றன என்பதுதான் பொதுஜன பெரமுனவின் அபிப்பிராயம். 2022ஆண்டு நடந்த மக்கள் புரட்சிபற்றியோ, அதன் பின்னர் பாதையில் இறங்க முடியாதவாறு நிலைமை சறுக்கியது பற்றியோ, 2024ஆண்டு நடந்த சனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் மொத்த இருப்பும் ஆடிப்போகும் அளவுக்கு மக்கள் அளித்த தீர்ப்பு பற்றியோ, அவர்களின் மூளையில் எந்த ஒரு நினைவு மீட்டல்களுமே இல்லை. உறங்கிக்கொண்டிருக்கும் சிங்கங்கள் எல்லாம் தட்டி எழுப்பப்பட இருப்பதாகவும் இம்மாதம் 21ஆம்திகதி நடைபெறப்போவதைப் பார்க்க முடியும் என்றும் வீராவேசமாகச் சொல்கிறார்கள் பொதுஜன பெரமுனவின் எண்கணித வித்துவான்கள். இந்த இடத்தில் அறிந்த ஒரு கதையை நினைவூட்டித்தான் ஆகவேண்டும்:- 2008 ஆண்டு மகிந்த ராஜபக்சே இந்தியா சோதிடவாதிகளை நம்பி தேர்தல் ஒன்றை நடத்தி கவுண்டதாகப் பலர் கூறினர். ஆரம்பத்தில் ஒன்றிணைந்த எதிர்கட்சிகளின் மாபெரும் எதிர்ப்பு என்று இதற்கு நாமம் சூட்டப்பட்டது.
ஆனால் பொதுஜன பெரமுனவுக்கு ஒரு காலத்தில் ஜீவநாடியாக இருந்த வாயாலேயே வங்காளம் போகும் விமால் வீரவன்ஸ இந்த ஆட்சி கவிழ்ப்பு கபட நாடகத்தில் பங்கு பெறப்போவதாய் அறிவிக்கவில்லை. அவருக்கு ஏதோ கொள்ளைப் பிரச்சினை இருக்கிறதாம். மகிந்த ராஜபக்சே, கோட்டாபாய ராஜபக்சே என்று ராஜபக்சேக்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலின் முகவர்களில் ஒருவராகவிருந்த திலித் ஜயவீரவுக்கு நாமலை 21திகதி சனாதிபதியாக்க ஆசை இல்லை. தாம் ஒருமுறை சனாதிபதியாகிப் பார்ப்போம் என்று அவர் சூறாவளிச் சுற்றுப் பயணத்தை எப்போதோ ஆரம்பித்துவிட்டார்.
கடந்த சனாதிபதி தேர்தலில் திலித் ஜயவீர போட்டியிட்டபோது அவருக்கு வீரவஞ்சவும் பிள்ளையானின் திடீர் சட்டதரணி கம்மான் பிலவும் பக்கவாத்தியம் வாசித்தார்கள். இந்த கோஷ;டி ஊர்களில் உள்ள ஒரு ரொட்டிக் கடையையும் விட்டு வைக்கவில்லை. ஒரு நேர்சையை நிறைவேற்றுவது போல ரொட்டிகளை ஓடர் செய்துகொண்டே இருந்தார் திலித். இந்த கூட்டணிக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. விமால் வீரவன்ஸ நாடாளுமன்றத் தேர்தலின்போது மெல்ல விலகிக்கொண்டு தன் பழைய ஜேவிபி உரிமைக்கதை எல்லாம் சொல்லி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார் ஆனால் கம்மான்பிலவோ தொடர்ந்தும் ரொட்டி தின்று வந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் கம்மான்பிலவின் உடைய வாக்குகளை ரோச்சடித்துத் தேடமுடியாத நிலைமை ஏற்பட்ட பிறகு திலித் ஜெவீரவின் சர்வஜன வலையவிலிருந்து கம்மான்பிலவு வெளியேறி பிள்ளையானினுடிய உத்தியோபூரவச்; சட்டத்தரணியானார். கடைசியில் வீரவான்ச, திலித் ஜெவீர, கம்மான்பிலவு என்ற முக்கூட்டுக்களும் சிதறின. அதாவது ஒரு காலத்தில் சிங்களத் தேசியவாதம் என்ற பெயரில் இனவாதத்தின் மறைப்படத்தைப் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு பொதுஜன பெரமுனவின் கூட்டிலிருந்து விட்டு, 2024ல் தனிக் கூட்டணியாய் இங்கத் தொடங்கி, இந்த மூவரும் இன்று வௌ;வேறான பாதையில் குப்புறவிழ்ந்து கிடக்கிறார்கள். உதே கம்மான்பில மட்டும் நாமலை சனாதிபதியாக்கும் சீராட்டு விழாவில் பங்கேற்க இருக்கிறார். கம்மான்பில வெறும் நான்காவது வரிசை, பாடாவதி பங்கேற்பாளர் அல்ல, அவர் இந்த வேள்வியின் முக்கிய பாத்திரம்.
சனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்குள் இருக்கும் ஹிட்லர் வெளியே வரத் துடிக்கிறான் என்பது, கம்மான்பில அண்மையில் ஆய்வு செய்து வெளியிட்ட மற்றொரு கண்டுபிடிப்பு. வால் அறுப்பட்ட பல்லிப்போல, சதா நேரமும் ஓடிக்கொண்டு, கண்டதெல்லாம் பேசும் கம்மான்பில, கோட்டாபாய ராஜபக்சே சனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கு வழங்கிய சான்றிதழ், ஒருவேளை ஞாபகம் இருக்கும். புரவலர் கம்மான்பில என்ன சொன்னார் தெரியுமா?: அதிகாரம் இல்லாத சனாதிபதி பதவியால் எந்தப் பயனுமே இல்லை. நாட்டைக் கட்டி எழுப்ப விளாடிமிர் புட்டின் போன்ற ஒரு தலைவர் தேவை. கோட்டாபாய ராஜபக்சேவிடம் புட்டினின் சகல குணங்களும் அம்சமாய் பொருந்தியிருக்கின்றன. ஆனாலும், வெறும் விளாடிமிர் புட்டின் மட்டும் இலங்கையைக் காக்கச் சரிவராது. மஹாதீர் மொஹமட் போன்ற அறிவுக் கூர்மையும், லீ குவான் யூ போன்ற நிர்வாகத்திறனும், ஜவஹர்லால் நேரு போன்ற நேர்மையான பண்புகளும், ஃபிடல் கஸ்ட்ரோவின் தேசப்பற்றும் கோட்டாபாய ராஜபக்சே மேலதிக பகேஜ்யாக இருக்கிறது என்று உலகத்தில் யாரும் கொடுக்காத ஒரு சான்றிதழை வழங்கினார் கம்மான்பில.
அது எப்படி ஒரு மனிதனுக்குள் சர்வாதிகார புட்டினின் குணமும் இந்தியாவின் உடைய சுதந்திரத்தில் மகத்தான பங்களிப்புச் செய்த ஜவஹர்லால் நேருவின் குணமும் இருக்க முடியும் என்று யாருமே அப்போது கேள்வி கேட்கதில்லை. சரி இத்தனை குணங்களையும் அமையப்பெற்றவர் பல்பரிமான ஆளுமை ஒழுங்கற்ற தன்மையால் (அரடவipடந Pநசளழயெடவைல னளைழசனநச) அவதிப்படும் அன்னியன் படத்தில் வரும் அம்பியாகத்தான் இருக்கக்கூடும் என அப்போது அன்னாருக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு ஏனோதோன்றவில்லை. இது வீட்டில் செலவின்றி கோட்டாபாய ராஜபக்சேயைத் தயாரிப்பது எப்படி என்ற கம்மான்பிலவின் சமையல் குறிப்பு என்று புரிந்துகொண்டவர்கள் மட்டும் சிரித்துக்கொண்டு கடந்துபோனார்கள். சானாதிபதி அனுரவிற்குள் இருக்கும் ஹிட்லர் பற்றிப்பேசும் கம்மான்பில, இங்கே உதாரணமாய் சொன்னவர்களில் நேருவைத் தவிர மற்றவர்களைப் பாருங்கள் அத்தனை பேரும் எதோ ஒரு விதத்தில் சர்வாதிகார அலங்காரங்களைச் சூடிக்கொண்டவர்கள். 20, 30, ஏன் 50 வருடங்கள் என்று ஆண்டவர்கள். ஆக கம்மான்பிலப் போன்ற ஒரு நபரை இப்படி முன்பந்தியில் வைத்துக்கொண்டு நடத்தும் நவம்பர் -21 தோறணம் எங்கே போய் எப்படி முடியப் போகிறது என்றுதான் கேள்வியாய் இருக்கிறது. பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்த கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று ஏற்கனவே உத்தியோகப்பூரமாக அறிவித்து விட்டது. எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மார்கழி மாதம் சனாதிபதியாகுவார் என்று கேகாலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் அமுதவாக்கு வழங்கியிருப்பதால் அவர் அதற்கான முன்னேற்பாடுகளில் மூழ்கியிருக்கிறார்.
மிக அண்மையில் இந்தியா சென்ற சஜித் பிரேமதாச பிரதமர் மோடியனுடைய அமைச்சரவை பிரபலங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் என்று பெரிய பெரிய கொப்புகளாய்ப் பார்த்துத்தான் பிடித்திருக்கிறார். கண்ணு கெட்டிய தூரம் நாட்டில் தேர்தல் ஒன்று இல்லாத நிலையில் அதிகம் வெளிநாட்டு பயணங்கள் எதுவும் மேற்கொள்ளாத சஜித் இப்படி தீடிர்என்று இந்தியா போயிருப்பதற்கான காரணம்தான் மர்மமாகிறது. ஒருவேளை மாகாணசபைத் தேர்தலை நடத்த இந்தியாமூலம் அழுத்தம் கொடுக்கும் நோக்கமாகக்கூட இருக்கலாம். எது எப்படியோ சஜித் பிரிமதாச தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் எடுத்த மிக முக்கியமான ஒரு தரமான முடிவுதான் பொது எதிரணி என்ற பெயரில் கூடி நாமலை சனாதிபதியாக்கும் பேரணியில் பங்கேர்க்காமல் இருப்பது. பொதுஜன பெரமுனவிற்குத்தான் இந்நாள்களில் சேதாரம் அதிகம். ராஜபக்சேக்களின் முன்னைய கோட்டையான தென் பிராந்தியங்கள் எல்லாம் போதை மாப்பியாவினதும் பாதாள உலகத்தினதும் சொர்கபுரி என்று ஒரு விம்பம் உருவாகி இருக்குக்கூடிய நிலையில், தம் கட்சிமீது படிந்திருக்கக்கூடிய கறையைக் கழுவ பகீரத பிரியத்தனத்தின் ஓர் ஏற்பாடாகவே நவம்பர்-21 கோலாகலங்கள் பார்க்கப்படுகின்றன. இந்த அமளித்துமளியில் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்துகொண்டால் அதற்குக் கிடைக்கப்போகும் பட்டம் என்னவென்று தெரியும். இதனால்தான் சாமர்த்தியமாக தவிர்த்துவிட்டது ஐக்கிய மக்கள் சக்தி. ஆனால் இப்படி கலந்து கொள்வதில்லை என்று அறிவித்தாலும் ஒருசிலர் தனிப்பட்ட ரீதியில் கலந்துகொள்ள இருப்பதாகவும் இன்னும் சிலர் பெரிய மாகன்களாக ஆசிர்வாதப் பூக்களாக ஆசிர்வாதங்களைத் தூவ இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுஜன பெரமுனவினுடைய பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இப்போது கடும் அழுத்தத்தில் இருக்கிறார். சஜித் ஏன் வரமாட்டார் என்று கேட்டால் சனநாயகம் ஆபத்தில் இருக்கிறது என்கிறார். ரணில் கலந்து கொள்வாரா என்று கேட்டால் அரசியல் சாசன சர்வாதிகாரம் முறியடிக்கப்பட வேண்டும் என்கிறார். அனுர குமார் திசானாயாக்க இப்படி போதைப்பொருள் மாப்பியாவை ஒழிக்கப்போவதாய் முன்னர் சொல்ல வேயில்லை என்கிறார். ஒரு செயலாளராய் சாகர காரியவசவின் சம்பந்தம் இல்லாத பதில்களையும் தடுமாற்றங்களையும் பார்க்கும்போது வாழ்க்கையில் தொழில் விரக்தி அடைந்தவர்களுக்குப் படிப்பினை பெற நல்லதொரு பாடம் இருக்கிறது. பொதுஜன பெரமுனவின் செயலாளராய் இருப்பது என்பது ஒரு துன்பியல் நிகழ்வு. எப்படி எல்லாம் உருட்ட வேண்டி இருக்கிறது. சறுக்கிவிழ வேண்டி இருக்கிறது என்று பாருங்கள். அந்த அளவுக்கு சமாளிக்க திராணி என்று விழி பிதிங்கியிருக்கிறார் காரியவசம். பிரதான எதிர்கட்சியும் தலைவரும் பங்கோற்காமாற்போவதை சாகர காரியவசமால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆகவே அனுர அரசுடன் சஜித் தரப்புக்குக் கொடுக்கல் வாங்கல் இருக்கக்கூடும் என்று சொல்ல தலைப்பட்டிருக்கிறார் காரியவசம். டீல் கதை சொல்வதில் பொதுஜன பெரமுனவிற்கு நிகர் யாரும் இல்லை. 2015கும் 2019கும் இடைப்பட்ட காலத்தில் எதிர்கட்சியில் இருந்து கொண்டு ஜேவிபிக்கும் ரணிலுக்கும் டீல் இருப்பதாகவும் ஜேவிபி என்பது சிவப்பு யானைகள் என்று நன்மாராயம் வழங்கியது பொதுஜன பெரமுன. அண்மையில் ரணிலை கைது செய்தபோது அதே ரணிலோடு சேர்ந்துகொண்டு எல்லாரும் ஓடிவாருங்கள் சனநாயகம் ஆபத்திலிருக்கிறது என்று புலம்பகிறது பொதுஜன பெரமுன. இப்படித்தான் சஜித் பிமேதாசவும் சனாதிபதித் தேர்தல்சமயம் தனது வெற்றியை ரணில் தடுத்துக் கொண்டிருப்ப தாகவும் ரணிலுக்கும் அனுரவிற்கும் இடையில் டீல் இருப்பதாகவும் அடித்துவிட்டார். ஆனால் ரணில் கைதானதும் ரணிலின் மனைவியை விட சிறப்பாய் ரணிலை கவனித்துக் கொண்டார். தினமும் காலையிலும் மாலையிலும் மருத்துவமனைக்குப் போய் ரணிலை விடாப்பிடியாய் சந்தித்து மருத்துவமனை வளாகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பையும் நடத்தினார். உண்மையில் சனநாயகத்துகு இங்கே என்ன பாதிப்பு இருக்கிறது. தேர்தலை நடத்தாமல் இருந்தால் அல்லது வாக்குச் சீட்டுகளை எண்ணும்போது மின்சாரத்தைத் துண்டித்து மோசடி செய்தார். ஊடக நிறுவனங்களை தீயிட்டார். அரசுக்கு எதிராக தீர்ப்புச் சொல்லக் கூடிய நீதிபதிகளின் வீடுகளுக்கு கல்லெறிந்தார். ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டார். அல்லது எதிர்கட்சி தலைவர்கள் தேர்தலில் நின்ற ஒரே ஒரு குற்றதுகாகத் தறதறவென்று இழுத்துக் கொண்டுபோய் சிறைப்படுத்தப்பட்டார். சனநாயகம் செத்துவிட்டது என்று அழுது ஒப்பாரி வைக்கலாம். அப்படி எதுவும் இங்கே இல்லை. ஆனால் கடந்த ஆட்சிகளில் இதெல்லாம் இலங்கை அரசியலில் அங்கலாவணியங்களாக மாறியிருந்த அம்சங்கள். ஊடக சுதந்திரம் எந்தளவிற்கு இருந்தது என்று ஓர் இலத்திரனியல் ஊடகம் சாட்சிபகர்ந்தது. காலையிலிருந்து இரவு வரை அந்த ஊடகத்தின் வானொலி, தொலைக்காட்சி, வலைய மைப்புக்கள் எல்லாம் அரசை கழுவி ஊற்றக்கொண்டு இருக்கிறது. யாராவது ஏதாவது சொன்னார்களா? அவர்கள் மேல் ஒரு கீறல் விழுந்ததா, இல்லை. ஆகவே அந்த சனநாயகம் மரித்துவிட்டது. அரசியல் சாசன சர்வதிகாரம் போன்ற கற்பனைக் கதைகளை கட்டிக்கொண்டு வீதியில் இறங்கினால் அதைப்போல நகைச்சுவை எங்குமே இல்லை. புதிய போரட்ட சுலோகங்கள் எதையும் உருவாக்கத்திராணி இன்றி நவம்பர்-21 வீதியில் இறங்கி சனநாயகத்தைத் தேடினால் காலியான பெருங்காய டப்பாமாதிரித்தான் இருக்கும். கடைசியாக இந்த பேரணியின் உருவாக்கத்தில் கம்மான்பில போன்ற அதி புத்திசாலி ஒருவரும் சம்மந்தப்பட்டிருப்பதால் இதுமுழுக்க முழுக்க நாமல் கம்மான்பில சங்கமமாகப் போகிறது. போவதற்கு வேறு போக்கிடம் இன்றியிருக்கிற ஐக்கிய தேசிய கட்சியின் ஒருசிலர் இணைந்து கொள்ளக்கூடும். கம்மான்பிலவின் நாடோடிக் கதைகளும் நாமலினுடைய பதட்டங்களும் மட்டும்தான் இங்கே பேசுபொருளாகவும் மாறும். உங்களுக்கு நினைவிருக்குமோ தெரியாது நவம்பர்-21 என்பது, 11வருடங்களுக்கு முன்பு 2014ஆண்டு சிறிசேன பொது வேட்பாளராய் அறிவித்தக்கொண்ட நாள். எல்லாவற்றிற்கும் காலம் நேரம் நாள் நட்சத்திரம் கிரகம் எல்லாம் பார்ப்பவர்கள் ஒரு சொதப்பல் சனாதிபதியின் அச்சொட்டான திகதியை பேரணி நடத்த ஏன் தெரிந்தெடுத்தார்கள் என்றுதான் தெரியவில்லை.








No comments:
Post a Comment