ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்,
பாதால உலகக் கும்பலுக்கு ஆயிதம் விற்க ஒரு பொலிஸ் அதிகாரியால் முடிந்திருக்கிறது. அது இலங்கையில்தான் அண்மையில் நிகழ்ந்திருக்கிறது. இதற்கு இலங்கைக் களுத்துறையில் நடந்த ஒரு சம்பவம் மிகச் சரியான உதாரணமாயிற்று. கடந்த ஐப்பசி 11ஆம் திகதி களுத்துறை தெற்கு பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்துக்கு துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. அன்றைய தினமே களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அது தொடர்பில் கிடைபெற்ற தகவல்களின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் விசாரணையை மேற்கொண்டனர். களுத்துறை தெற்கு முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி பாதாளஉலக குழுவினருக்கு பொலிஸ் துப்பாக்கியை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விசேட அதிரடிப்படையினர் கடந்த ஐப்பசி 17 திகதி ருசிர கவிசன் எதிறிசிங்கே- ஜாபான (“Japana” ) என அழைக்கப்படுபவரை கழுத்துறையில் உள்ள நாகோடா பகுதியில் கைது செய்தார்கள் இதனைத்தொடர்ந்து இலங்கைக் காவற்துறையில் மிகப்பெரிய அபகீர்தியான ஒரு சம்பவம் அரங்கேறியது கண்டுபிடிக்கப்பட்டது. ஜாபான என்ற அழைக்கப்படும் இவர் ஒரு பாதால உலகப் பேர்வழி. இவர் இப்போது காவல்துறையிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறார். ஜாபானவின் படுக்கை அறையில் ஒழித்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டுத் தயரிப்பான 12- bore சொட்கண், ஒரு பிஸ்ரல், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிகள், பலவகையான தோட்டாக்கள், கைவிலங்கு ஒன்று உட்பட இன்னும் பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன
குறித்த இந்தப் பொலிஸ் அதிகாரியுடன் உனக்கு என்ன தொடர்பு என்று கேட்டு அவருடைய கையடக்கத் தொலைபேசியைப் பரிசோதனை செய்தபோதுதான் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. பொலிஸ் பொறுப்பதிகாரி ஜாபானவுடன் இருந்தமை மற்றும் அவருடன் விருந்துகளில் கலந்து கொண்டமை, பொலிஸ் பொறுப்பதிகாரியின் துப்பாக்கியை 'ஜாபான' பாவித்த அனைத்தும் புகைப்படங்களும் இருந்துள்ளன. இந்த ஜாபான அந்த பொலிஸ் அதிகாரியுடன் மிக நெருக்கமாகப் புகைப்படத்தில் இருக்கிறார். அந்த பொலிஸ் அதிகாரியின் தொழில்முறை அதிகார கைத்துப்பாக்கியை தனது இடுப்பில் அணிந்தவாறு பல படங்கள் உள்ளார். ஒரு பாதால அடியாளான ஜாபானவுடன் அந்தப் பொலிஸ் அதிகாரி உண்டு குடித்து மகிழ்ந்து மது மயக்கத்தில் மதியிழந்து விதவிதமான புகைப்படங்கள் எடுத்திருப்பது அங்கு காணப்பட்டன.
இந்த பொலிஸ் அதிகாரி பாதாள குழுக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். இந்த 'ஜாபான' களுத்துறை பொலிஸ் நிலையத்தில் பல சந்தர்ப்பங்களில் பொலிஸ் நிலைய அதிகாரியின் அறையில் விசாரணைகள் நடைபெறும்போது இவரும் விசாரணைகள் நடத்துவதாகவும் தெரியவந்துள்ளது.
தற்போதைய களுத்துறைத் தெற்குப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நாடகா குணசேகரா உடநடியாக ஓர் உள்ளக விசாரனையை ஆரம்பித்தார். களுத்துறை தெற்கு ஆயுதக் களஞ்சியத்தின் பொறுப்பாளர் சாஜன் மற்றும் ஹண்டபங்கொடவிலிருந்து நாகோடாவிற்கு ஆயுதத்தை கொண்டுசெல்லப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாகனத்தின் சாரதியிடமும் பொலீசார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். துப்பாக்கி களஞ்சியச் சாலைக்குப் பொறுப்பான பொலிஸ் சாஜன் தெரிவிக்கையில்;: தன்னிடம் அந்த பிரதம பொலீஸ் பரிசோத அதிகாரி பின்னர் திருப்பித்தருகிறேன் என உறுதியளித்துத் துப்பாக்கியை களஞ்சியத்திலிருந்து எடுத்துச் சென்றதாக அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இந்தத் துப்பாக்கிக்கு 2012 ஆண்டிலிருந்து எந்த பதிவுகளும் ஆவணத்தில் இருந்திருக்கவில்லை என்பதும். இந்த துப்பாக்கி பொலிஸ் கண்காணிப்பில் இருக்கவேண்டும் என 2002 நீதிமன்றத்தின் ஒரு கட்டளை உள்ளதும் இப்போது கண்டு பிடிக்கப்படுகின்றது. அதாவது அந்த அதிகாரி பொலிஸ் களஞ்சியத்திலிருந்து துப்பாக்கிகளைக் கொண்டுபோய் ஒரு பாதாள அடியாளிடம் பத்திரமாய் ஒப்படைத்திருக்கிறார்.
குற்றப்பிரிவின் கூற்றுப்படி, ஹன்டபன்கொடை பகுதியில் துப்பாக்கி ஒப்படைக்கப்பட்ட தருணத்தைப் பதிவுசெய்ததாகக் கூறப்படும் புகைப்படங்கள் உட்பட, பெறுநரின் மொபைல் தொலைபேசியில் ஆதாரங்களை புலனாய்வாளர்கள் ஐப்பசி 29 அன்று கண்டறிந்தனர்.
தற்போது துப்பாக்கி கைப்பற்றப்பட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் களுத்துறை தெற்கு காவல் நிலையத்தில் உள்ள ஆயுதக் களஞ்சியத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குறிப்பிடத்தக்க அளவில், இந்த வழக்கு தொடர்பாக மேலதிகமாகத் தெரியவருவது: 9 மிமீ வெடிமருந்துகளின் 51றவுன்சுகள் மற்றும் 38 வெடிமருந்துகளின் 16 றவுன்சுகளும் பொலீஸ் காவலில் இருந்து காணாமல் போயுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எப்படி இந்தக்கதை இருக்கிறது? இதேவேளை தான் கைதாவதைத் தடுக்குமுகமாகக் களுத்துறை நீதவான் நீதிமன்றதில் முன்பிணை கோரினார் அந்த பொலிஸ் அதிகாரி. இருப்பினும், காவல்துறையினர் முதற்கட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நீதிபதி அனுமதி அளித்தார், மேலும் கைது நடவடிக்கையைத் தொடர்வதற்கு எந்த சட்டத்தடையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். களுத்துறை நீதவான் நீதிமன்றம் பொலிஸ் அதிகாரி அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் களுத்துறை மாவட்ட சிஐடி விசாரணைகளை மேற்;கொண்டு வருகிறது: களுத்துறை குற்றப்பிரிவு இயக்குநர் கமல் கிரியெல்ல மற்றும் ழுஐஊ இன்ஸ்பெக்டர் நிலங்க சஞ்சீவ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி, பொது மக்களுக்குப் பாதுகாப்பையும் நம்பிக்கையும் வழங்க வேண்டிய நிறுவனங்களில் உள்ள உத்தியோகத்தவர்கள் கடமை தவறும்போது ஒட்டுமொத்த நிறுவனத்தையும் மக்கள் அவநம்பிக்கையுடன் பார்க்க ஆரம்பிப்பார்கள். இப்போது மக்களே முன்வந்து போதைப்பொருள்களுடன் சம்மந்தப்பட்ட நபர்கள் பற்றிய விவரங்களை பொலிஸ் திணைக்களத்துகு வளங்குகிறார். ஆனால் என்னதான் மாற்றங்கள் வந்திருந்தாலும்100மூ மறுமலர்ச்;சியைக் காண இன்னும் பெரும் தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. களுத்துறையில் ஒரு பொலிஸ் அதிகாரியின் பொறுப்பற்ற செயல்; பொலிஸ் திணைக்களத்துகுக் கிடைத்திருக்கும் மாபெரும் அவமானம்.
ஒரு தேசமாக ஒன்றிணைதல் - தேசிய இயக்கம்' என்ற தலைப்பில் அரசாங்கத்தின் புதிய போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின் தொடக்க விழாவில் பேசிய சனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளையும், இந்த நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைந்த கண்டுபிடிப்புகளையும் முன்வைத்தார். அவற்றில், இராணுவ முகாம்களில் இருந்து ரீ-56 தாக்குதல் துப்பாக்கிகள் குற்றவாளிகளின் கைகளில் சிக்கியதாகவும், 73 துப்பாக்கிகள் காணாமல் போனதாகவும், 35ஏற்கனவே மீட்கப்பட்டதாகவும் செய்திகள் இருப்பதாக தெரிவித்தி ருக்கிறார். வெடிமருந்துகளை வழங்கிய குற்றச்சாட்டில் ஒரு மூத்த இராணுவ கேணல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,அந்த அதிகாரியின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்பட்ட தாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், ஒரு பொலிஸ் அதிகாரி தனது சேவை ஆயுதத்தை விற்று நாட்டை விட்டு தப்பிச் சென்றதாகவும், விசாரணைகள் அதிகாரிகளுக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கும் இடையிலான தொடர்புகளைக் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மோட்டார் போக்குவரத்துத் துறை, வாகனங்கள் இல்லாமல் எண் தகடுகளை வழங்கியுள்ளன. மேலும் கம்பஹாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்டதில் ஒரு பொலீஸ் அதிகாரி இரண்டு சட்டவிரோத வாகன எண் தகடுகளை வைத்திருப்பது அம்பலமானது என்றார். குடியேற்ற அதிகாரிகள் பாதாள உலக நபர்களுக்கு பாஸ்போர்ட்டுகளை எளிதாக்கியதாகவும், ஒரு புத்தக விற்பனையாளர் ஒரு குற்றவாளியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்காக கைரேகைகளை வழங்கிய வழக்கு இருப்பதையும் தெரிவித்தள்ளார். குற்றவியல் நலன்களுக்குச் சேவை செய்வதற்காக ஒரு கறுப்பு அரசு உருவாக்கப்பட்டுள்ளதுபோல் தென்படுகின்றது. இந்த குற்றங்களுக்கு உதவும் அனைத்து அரசு அதிகாரிகளும் உடனே மனம்மாற வேண்டும். எனவே காவல்துறையை சுத்திகரிப்பதன் மூலம் 80 வீதமான குற்றங்களை தடுத்துவிடலாம் என்பது எமது கருத்து. இந்த நாட்டில் பாதாள உலக கறுப்பு அரசு என்றும் இரண்டு அரசுகள் இருக்கூடாது. மக்களால் இயக்கப்படும் சனநாயக அரசு மட்டுமே இருக்கவேண்டும். எனவே கீளீன் ஸ்ரீறிலங்க தொடரட்டும் சனநாயக அரசு மலரட்டும்.
Hisham.M.Vlog என்னும் வலையொளிப் பதிவிலிருந்தும் https://www.lanka4.com https://battinaatham.net/?p=154034 https://article.wn.com/ https://www.virakesari.lk/article/179874 https://likedtamil.lk/kalutara-4/, https://www.tamilguardian.com பதிவிலிருந்தும் தொகுக்கப்பட்டது)










No comments:
Post a Comment