01.9.2012 அன்று மேற்படி ஆலயத்தில் அருள் தந்தையர்கள் டியுக் வின்சன், பங்குத்தந்தை பத்தினாதர் தலைமையில் 10 சிறார்களுக்கு முதல் நன்மை அருட்சாதனம் வழங்கப்பட்டு திருப்பலி கொண்டாடப்பட்டது. இத் திருப்பலியில் மறையுரை அற்றிய அருள் தந்தை டியுக் வின்சன், இயேசு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே என்று தன்னை அறிவித்தார். அவரை நாம் இன்று முதல் முதலில் அருந்தபோகின்றோம். எனவே இயேசு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே என்று தன்னை அறிவித்த போது, அதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம் என்று சொல்லி அவரைப் பின்சென்றவர்களில் பலர் அவரை விட்டு விலகினர், அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை. அப்போது இயேசு பன்னிரு சீடரிடம், நீங்களும் போய்விட நினைக்கின்றீர்களா என்று கேட்டார். அதே கேள்வியை எம்மையும் பார்த்துக் கேட்கின்றாh.; விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து நமக்கு வாழ்வு வழங்க காத்திருக்கும் இயேசுவை நாமும் உட்கொண்டு அவரோடு இருப்போம். அவரைப்போல் வாழ்வோம்; என தெரிவித்தார்.
இப்பகுதி மக்கள் நாட்டில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக இடம் பெயர்ந்து தற்போது 15 வருடந்களுக்குப் பின்பு மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆலயம் முற்றக சேதமாக்கப்பட்டிருந்தாலும் அம்மக்களின் அயராத உழைப்பாலும் உதவியாலும் புனரமைக்கப்பட்டு அந்த அலயத்தில் பங்குத்தந்தை மடுத்தீன் பத்தினாதர் தலைமையில் இவ்வருடம் வழமைபோல் திருப்பலி கொண்டாடப்பட்டுவருகின்றது. இன்னிலையில் மறைஆசிரியர் செல்வன் கிறிஸ்ரி கொண்சலஸ் அவர்களின் வழிநடத்தலில் 10 சிறர்களுக்கு முதல் நன்மை அருட்சாதனம் வழங்கப்பட்ட திருப்பலி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
No comments:
Post a Comment