16.12.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இன்று நாம் சந்திப்பு. பற்றி சிந்திக்கலாம் சந்திப்புகள் பலவிதம். புனித பிலிப் நேரி வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு சம்பவம். புனித பிலிப் நேரி ஒருநாள் நண்பர்களுடன் பொழுதுபோக்காக சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சாவைப் பற்றிய பேச்சு அங்கு எழுந்தது. நண்பர்களில் ஒருவர் பிலிப்பிடம், "பிலிப், இதோ, அடுத்த நிமிடமே நீ இறக்கப் போகிறாய் என்று தெரிந்தால், என்ன செய்வாய்?" என்று கேட்டார். பிலிப் அவரிடம், "தொடர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பேன்." என்றாராம். பிலிப் நேரியாரைப் போல் எந்தவித பயமும் இன்றி இறைவனைச் சந்திக்க நாம் என்ன செய்ய வேண்டும்? நல்ல கேள்வி: இதே கேள்வியைத் தான் மக்கள் திருமுழுக்கு யோவானிடம் எழுப்புகிறார்கள். இறைவனைச் சந்திக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று யோவானைச் சுற்றி இருந்த மக்கள் தேட ஆரம்பித்தனர்.
இந்தக் கேள்விக்கு நாம் பதில் தேடு முன்பு, திருமுழுக்கு யோவானைச் சுற்றி நின்ற கூட்டத்தில் இருந்தவர்கள் யாவர் என நோக்கினால்: மக்கள், வரிதண்டுவோர்;, படைவீரர் என நற்செய்தி சொல்கின்றது. ஆனால், ஒரு முக்கிய குழுவைப் பற்றி இன்றைய நற்செய்தியில் இல்லை. ஆனால், அவர்கள் கட்டாயம் அந்தக் கூட்டத்தில் இருந்திருக்க வேண்டும். யார் அவர்கள்? மதத் தலைவர்கள் தான் அவர்கள். யோவானின் புகழ் பரவி வந்ததை அவர்களும் அறிவர். யார் இந்த மனிதர்? என இவரைத் தேடி பாலைவானத்திற்கே மக்கள் போகிறார்கள் என்றால் தங்கள் கேள்விகளுக்கு விடை தேடி அந்த மதத் தலைவர்களும் அங்கு வந்திருப்பர்.
இந்த கூட்டத்தில் யோவான் இறைவனின் வரவை, இறைவன் வார்த்தையை எடுத்துக் கூறுகிறார். இடித்துக் கூறுகிறார். யோவான் சொன்னதைக் கேட்ட மக்கள், வரிதண்டுவோரும், படைவீரர் இவர்கள் நடந்து கொண்டது ஒரு விதம். மதத் தலைவர்கள் நடந்து கொண்டது வேறு ஒரு விதம். கண்ணாடியில் தெரியும் உருவம் சரியில்லை என்றால், கோபத்தில் கண்ணாடியை உடைப்போமா? உடைத்தார்கள் அந்த மதத் தலைவர்கள். யோவான் வாழ்ந்த தவ வாழ்வு, அவரது போதனை எல்லாம் மதத் தலைவர்களின் முகமூடிகளைக் கிழித்து அவர்களது உண்மை உருவைக் காட்டும் கண்ணாடியாக இருந்தது. தங்கள் வாழ்வைச் சங்கடபடுத்தும் இந்த உண்மையை ஊமையாக்க ஒரே வழி? இந்தக் கண்ணாடியை உடைக்க வேண்டும். மதத்தலைவர்கள் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். உண்மையை ஊமையாக்க வேண்டும், உண்மை வாழ்வைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளை உடைக்க வேண்டும் என திட்டம் போட்டனர்.
மதத் தலைவர்களுக்கு மாறாக, தங்கள் வாழ்வின் உண்மை நிலையைக் காட்டிய யோவானிடம் மக்கள், வரிதண்டுவோர்;, படைவீரர் மீட்படையும் வழி கேட்டார்கள். ஏக்கம் நிறைந்த கேள்வி: நாங்கள் என்ன செய்ய வேண்டும்? நாங்கள் இறைவனைச் சந்திக்க என்ன செய்யவேண்டும்? சாக்குத் துணி அணிந்து, சாம்பல் பூசி, சாட்டைகளால் உங்களையே அடித்துக் கொண்டு கடும் தவம் செய்யுங்கள்." யோவான் இப்படி சொல்வார் என்று எதிர்பார்த்திருந்தனர் அந்த மக்கள். ஏனெனில் யோவானே அத்தகைய கடும் தவங்களைச் செய்து வருகிறவர். ஆனால், யோவான் கூறிய பதில் மிக எளியது:
பிரச்சனைகளுக்கான தீர்வை இயேசுகிறிஸ்துவுடன் நாம் கொள்ளும் ஒன்றிப்பிலேயேக் காணமுடியும், ஏனெனில் அதுவே அன்பு மற்றும் உண்மையை அடிப்படையாகக்கொண்ட வழிகளும் நடவடிக்கைகளும் உருவாகக் காரணமாகிறது. இறைவன் மீது கொண்டுள்ள தாகத்தை நினைவில்கொண்டு, உள்மன வாழ்வைத் தூய்மைப்படுத்தி, பலப்படுத்தவேண்டும்.
மனித குலம் அனைத்தும் ஆண்டாண்டு காலமாக எதிர்நோக்கியிருந்த ஒரு முடிவற்ற புதிய உடன்படிக்கையைக் குறித்து இறைவாக்குனர்கள் வழியாகக் கற்றுக்கொண்டனர். மனித வரலாற்றில் படிப்படியாக உணரப்பட்டு வடிவம் பெற்று வந்த இத்தெய்வீகத்திட்டம், இறைமகன் மனுவுருவெடுத்த இயேசுகிறிஸ்துவின் வருகையில் தான் உச்சநிலையை அடைந்தது. இந்த திருவருகைக்காலத்தில் இறைவனின் மீட்புத்திட்டம் படிப்படியாக வெளியிடப்பட்டதை ஆழ்ந்து தியானிப்போம், கிறிஸ்துவில் இறைவன் நம் அருகே நெருங்கி வந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்வோம்;. பெத்லகேம் குடிலை நிறைத்த மகிழ்வு மற்றும் ஒளி நம் வாழ்வின் வழியாக தன் கதிர்களைப் பரப்பி, இறைபிரசன்னத்தை உணர்ந்ததன் சாட்சிகளாக விளங்குவதற்கு, இவ்வுலகின் கவனச்சிதறல்கள், மனக்கலக்கங்கள் மற்றும் மேம்போக்கான நிலைகள் போன்றவைகளின் மத்தியிலும் நம்பிக்கையையும், நற்செய்தியையும் வாழ்வாக்குவோம்.

No comments:
Post a Comment