Thursday, March 28, 2013

இயேசுவின் உயிர்ப்பு கூறும் கதை

31.03.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

 
'கல்லறை உலகினில் பலவுண்டு - அவை சொல்லிடும் கதைகளில் கனிவுண்டும் வல்லவர் இயேசுவின் கல்லறையோ அவர் இல்லையே என்னிடம் என்றிடுதே! இறை திட்டத்தை நிறைவேற்ற வந்தவர் உண்மையைப் பேசியதற்காக, வாழ்வைக் கொடுத்ததற்காக வாழும் வழியைக் காட்டியதற்காக அவரை இந்த உலகம் படுகொலை செய்தது. தீமையின் அநீதியின் பாவத்தின் சக்திகள் அனைத்தும் கைகோர்த்து நின்று வேடிக்கை பார்த்து தன் கொலை வெறியை நிறைவேற்றியது. ஒரு பெண்ணின் மடியில் பிறந்து, மண்ணின் மடியில் புதைக்க பட்டு, உலக வரலாற்றில் முதல் முறையாக, விண்ணுக்கு உயிரோடு எழுந்த, உலக இரட்ச்சகரின் உயிர்ப்பு பெருவிழாநாள் இன்று.'சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த சாத்தானை  சாவின் வழியாகவே அழித்துவிட்டார்.வாழ்நாள் முழுவதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டிருந்தவர்களை விடுவித்தார்"

பரிசேயர்கள், யூதகுல மூப்பர்கள் மூளையில் உதித்தாக செல்லப்படும் கதை ஒன்றை இங்கு பகிர்வது நல்லது இயேசு இரத்தமும் சதையுமுள்ளவராக உயிருடன் எழுப்பப்பட்டதை மறைக்கப் புனைவு செய்ப்பட்ட கதை அது: இயேசு தம் சீடர்களிடம் 'நான் சிலுவையில் அறையப்படுவேன்; பிறகு இறந்தவனைப்போல் பாசாங்கு செய்வேன். நான் மரணம் அடைந்துவிட்டதாக எண்ணிப் படைவீரர்கள் எனது கால்களை முறிக்காமல் போய்விடுவார்கள்;. உடனே நீங்கள் என்னைச் சிலுவையிலே இருந்து இறக்கி எனது உடலை ஒளித்து வைத்து விடுங்கள்;  தப்பிவிடலாம். அவர் உயிர் பெற்று எழுந்து விண்ணகம் சென்றுவிட்டார் என்று பரப்பிவிட்டால் யாரும் உடலைத் தேடமாட்டார்கள்" என்று கதை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சித்திரவதை செய்து கொல்லப் பட்ட மனிதன் மீண்டும் உயிர்பெற்று எழுந்தார் என்று கூறிப் பரப்புவது காதில் பூ சுற்றும் கலைக்கு நிகரானது. எவன் இதனை நம்புவான்? என்ன ஆதாரம்? எங்காவது இறந்தவன் உயிர்த்தெழுவதுண்டா? இயேசுவைப் பற்றி முழுமையாய் அறிந்திராத எல்லோர் மனத்திலும் அன்று எழும்கதை தான் இது.

ஆனால் ஹார்வர்ட் பல்கலைக்கழகச் சட்டப் பேராசிரியரும் இங்கிலாந்து நாட்டின் நோட்டிங் ஹாம் என்கிற இடத்திலுள்ள தூயயோவான் கல்லூரி முதல்வருமான கலாநிதி மைக்கல் கிரீன் லீப் உலக புகழ்மிக்க 'சட்ட சாட்சியர் தொகுதி" என்னும் நூலாசிரியர் அவர். இயேசு உயிர்த்ததற்கான சாட்சியம் பற்றிய ஆய்வில் ஈடுபடுகையில் இயேசுவின் உயிர்ப்பு வெறும் கட்டுக்கதை என்று கருதினார்.  ஆனால் பைபிளை ஆழமாகப் படித்து, ஆராய்ந்து, தோய்ந்து ஆழ்ந்து சிந்தித்தபின் நற்செய்தி எழுத்தாளர்கள் நால்வரும், தூய பவுலடியாரும் எழுதிய பதிவுகளில் இயேசுவின் உயிர்ப்;புக்கு மறுக்கமுடியாத, ஆதாரமுள்ள,உயிருள்ள சாட்சிகள் உண்டு என்று கண்டறிந்தார். உயிர்ப்பு குறித்த ஐயம் வைத்திருந்த தம்மை உயிர்ப்பின் உண்மை விடுதலை செய்தது என்றார்.'இயேசு உயிர்க்கவில்லை என்றால் அவருடன் வாழ்ந்த சீடர்கள் ஓர் உண்மையை உறுதிப்படுத்தியிருக்க முடியாது. ஏனென்றால் அந்த உண்மையை உலகறியச் சாட்சியம் கூறியதற்காக அவர்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள்;. மறுத்துக் கூறுமாறு சிறையில் அடைக்கப் பட்டார்கள்;. உண்மைக்குச் சான்று பகர உயிரையும் கொடுத்தார்கள் " உயிர்ப்புக்கு உயிருள்ள சாட்சிகள் அவர்களே என்று மைக்கல் கிரீன் தனது கட்டுரையில் எழுதினார்.

'இயேசு ஓரு போலி மெசியா. தந்தை யாவேயைப் பழித்துப் பேசியவர்;. அவரது பெயரால் உருவான கிறிஸ்தவத்தை அடியோடு ஒழித்துக் கட்டவேண்டும்" என்று முழுமூச்சுடன் செயல்பட்டவர் சவுல்.  உரோமர்களிடமிருந்து கிறிஸ்தவர்கள்யார்? கிறிஸ்தவம்பரப்புவோர் யார்? என்ற ஆவண விவரங்களுடன் அவர்களைச் சிறைப்பிடித்துக் கொல்லவேண்டும் என்ற கங்கணத்துடன் தமஸ்கு நோக்கிப் பயணம் செய்தார் சவுல். அவ்வழ்யில் உயிர்த்த இயேசுவினால் தடுத்து நிறுத்தப்பட்டார்.  சவுலின் அவர் வாழ்வே உயிர்த்த இயேசுவுக்கு ஆதாரமான சாட்சியம். என்று எழுதி கலாநிதி மைக்கல் கிரீன் ஓர் ஆய்வு நூலை வெளியிட்டார். இயேசு 'அனைத்து மக்களுக்கும் அல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்து கொண்டவர்களுக்கு மட்டும் இயேசு காட்சி அளித்தார்". ஏன்கிறார் அவர்

இங்கிலாந்து நாட்டுத் தலைமை நீதி அரசராக ஒருமுறை இருந்த மேமிகு லார்ட் டார்லிங் கூறுகிறார்: 'ஏற்கெனவே காணக்கிடைத்துள்ள அளவுக்கு அதிகமான சாட்சியங்கள் பல: உடன்பாடான சாட்சியங்கள், சூழ்நிலைச் சாட்சியங்கள், உண்மைச் சாட்சியங்கள் போன்றவற்றின் அடிப்படையில் உலகின் அறிவாற்றல் மிக்க எந்த நீதியரசரும் இயேசு உயிர்த்த செய்தி மெய்யே என்று தீர்ப்பு வழங்கத் தவறமாட்டார்".

இங்கிலாந்து-ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறைத்தலைவர் பேராசிரியர் தாமஸ் ஆர்னால்டு 'உரோமானியர் வரலாறு"என்னும் ஆராய்ச்சி நூலைஆக்கியவர். வரலாற்று விழிகளையே மூடிவிட்டால்தான் இயேசுவின் உயிர்ப்பை மறுக்க முயல முடியும் என்று எழுதினார். அவர்  'வரலாறு குறித்த நோக்குகளும் இயேசு உயிர்த்ததற்கான சான்றுகளும் " என்னும் ஆய்வு நூலையும் வரலாற்று ஆதாரங்களுடன் வெளியிட்டார். ஆக்சுபோர்டு பல்கலைக்கழத்தில் இயேசுவின் உயிர்பை மறுத்துவந்து மாணவர்கள் இருவரும் உண்மை ஆதாரங்களை அறிந்து உணர்ந்து பின் மனம் மாறினர். எனவே பைபிளை முழுமையாக வாசித்த எவராலும் இயேசுவின் உயிர்ப்பு ஓர் கட்டுக்கதை என்று கற்பிதம் செய்யவே முடியாது.

பைபியில் உயிர்ப்புப் பதிவுகள் பல உண்டு. இயேசு உயிர்த்தெழுந்த உண்மைக்கு 500க்கு மேற்பட்ட சாட்சியங்கள்;  உயிருள்ளோர் மகதல மரியா முதற்சாட்சி.  கதவைப் பூட்டி உள்ளே அஞ்சி நடுங்கிய சீடர்கள் 11 பேர், எட்டு நாள் பின்னர் தோமா உள்ளிட்ட சீடர்கள், பின்பு திபேரியக் கடல் அருகே பேதுரு, திதிம்தோமா, கான நத்தனியேல், செபதேயு மக்கள், மீண்டும் எம்மாவுஸ் சீடர் இருவர்.  பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார்.  கடைசியில் எனக்கும் தோன்றினார் என்கிறார் பவுல் அடியார். இயேசு தமது உயிரையே விலையாகக் கொடுத்து இறுதித் துளி குருதிவரை பூமியில் சிந்தி மானிடரை மீட்ட மீட்பர். 'உயிர்ப்பு" என்கிற கோட்பாட்டு உண்மை கிறிஸ்தவத்தில் அடித்தளமாக உள்ளது.  இயேசுவின் உயிர்ப்பு வழியாக எல்லோரும் உயிர்பெற்று எழச்செய்து, அவரில் நம்பிக்கை கொண்டோர் கடவுளுக்கு ஏற்புடையராகி, நிலைவாழ்வு பெறச் செய்கிறது கடவுளாகிய அவரது அருளாட்சி. இயேசு உயிர்த்தெழுந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம். உயிர்ப்பு தரும் புதிய வாழ்வின் உண்மைகளுக்கு  சாட்சிகளாக விளங்குவோம்.

Tuesday, March 26, 2013

புனிதத்திற்கு புத்துயிரூட்ட கல்வாரிஊர்வலத்திற்கு புதிதாய் அன்பர்களை திரட்டுவோம்

24.03.2013'"
 ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்


இயேசு வெற்றியோடு எருசலேமில் நுழைந்ததை நினைவுகூரும் விதமாக இன்று நாம் குருத்தோலைப் பவனி ஞாயிறை கொண்டாடுகின்றோம். இந்தப் பவனி ஓர் ஆழமான ஆன்மீக அடையாளத்தைக் கொண்டுள்ளது, வாழும் கடவுளை நோக்கி இட்டுச் செல்லும் உன்னத பாதை வழியாக நாம் இயேசுவோடு சேர்ந்து பயணம் தொடர இது அழைக்கின்றது. நாம் வாழும் இக்காலத்தில் காலநிலை மாற்றத்தால் கடந்த வருடம்முதல் இன்றுவரை பல எதிர்பாராத விளைவுகளை நாம் கண்டுவருகின்றோம். இன்னும் சூறாவளி வரப்போகிறது என் கடந்த வருட இறுதியில் நாம் எச்சரிக்கை செய்யப்பட்டோம். இன்று நாம் குருத்து ஞாயிறு, சூறாவளி இரண்டையும் இணைத்து நோக்கினால் வரலாற்றில், முதல் குருத்துஞாயிறு நடந்த போது சூறாவளி ஒன்று எருசலேம் நகரைத் தாக்கியது. காற்று வடிவத்தில் வந்த சூறாவளி அல்ல, கடவுள் வடிவத்தில் வந்த சூறாவளி எனலாம். சூறாவளி என்ன செய்யும்? எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போடும். இதனடிப்படையில் பார்க்கும்போது, முதல் குருத்து ஞாயிறு நிகழ்வுகள் எல்லாவற்றையும் தலை கீழாக புரட்டிப் போட்டது.

இயேசு எருசலேமில் நுழைந்தபோது, மக்கள்; ஊர்வலம் ஒன்று தானாகவே ஏற்பட்டது. இன்று நடப்பதுபோல ஏற்பாடு செய்யப்பட்டதல்ல. அங்கு திருவிழா நாட்களில் எருசலேமில் இப்படி தானாகவே ஏற்படும் கூட்டங்கள், மதத் தலைவர்களுக்கும், உரோமைய அரசுக்கும் பலவித பயங்களை உருவாக்கியிருந்தன என்பதை நாம் பைபிளில் பார்கின்றோம். இயேசுவைச் சுற்றி எழுந்த இந்த ஊர்வலமும் அதிகாரவர்க்கத்தை அங்கு ஆட்டிப் படைத்திருக்க வேண்டும். இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்ததிலிருந்து, யூத மதத் தலைவர்களின் அதிகார வாழ்வு ஆட்டம் கண்டது. இந்தத் தலைகீழ் மாற்றங்களின் சிகரம் எருசலேம் நகரில் இயேசு ஊர்வலமாய் வந்தது. இதைத் தொடர்ந்து, அவர் அந்த மதகுருக்களின் அரணாக இருந்த எருசலேம் கோவிலில் நுழைந்து, அங்கிருந்த அமைப்பையும் தலைகீழாக்கினார். துரத்தினார். எனவே, இந்த குருத்து ஞாயிறு, அதிகார அமைப்புகளைப் பல வழிகளிலும் புரட்டிப் போட்ட ஒரு சூறாவளிதானே எனலாம்

இயேசு ஊர்வலத்தில் போய்க் கொண்டிருந்தபோது அங்கிருந்தவர்கள் தங்கள் மேலுடைகளை வழியில் விரித்துக் கொண்டே சென்றார்கள். அவர்கள் அனைவரும் தாங்கள் கண்ட எல்லா வல்ல செயல்களுக்காகவும் உரத்தக் குரலில் மகிழ்ச்சியோடு கடவுளைப் புகழத் தொடங்கினர்;: 'ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப் பெறுக! விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக!" என்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த பரிசேயர்களுள் சிலர் அவரை நோக்கி, 'போதகரே, உம் சீடர்களைக் கடிந்து கொள்ளும்" என்றனர். அதற்கு இயேசு மறுமொழியாக, 'இவர்கள் பேசாதிருந்தால் கற்களே கத்தும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். இன்றும் உலகெங்கும் அரசர்களை காப்பற்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. மக்கள் எவ்வாறு திரட்டப்படுகின்றார்கள். அவர்களின் ஏழ்மையை எள்ளி நகையாடும் ஆதிக்கசக்தியின் திருவிளையாடல் என்பது இங்கு உண்மையாகின்றதல்லவா. இயேசு தனது பதிலில் உண்மையை உரைக்க கற்களே கத்தும் என்றார். ஆனால் இங்கு உண்மையை மறைக்க திரட்டப்படுவோர் வாழ்வதற்கான வழிகளுக்காக தம்மை கற்களாக்கியே செல்லுகின்றார்கள். அங்கு ஏந்தப்படும் பதாதைகள் இலக்கணப்பிழைகளை தாங்கி நிற்கும் ஒன்றே இவர்கள் தானாக திரளவில்லை உண்மையை மறைக்க திரட்டப்பட்டார்கள் என்ற உண்மையை புலப்படுத்தியதுடன் இது பொய்மையின் வெளிப்பாடு, அநீதியை காப்பாற்ற எடுக்கும் முயற்சி என்னும் உண்மையை எமக்கு சொல்லித்தருகின்றது. 

குருத்து ஞாயிறு நிகழ்வு அநீதிக்கெதிரான போராட்டமும் உண்மையைக் காக்க வேண்டுமென்ற விடாஉறுதியும் ஒன்றையொன்று பிரிக்க முடியாதவை. இவற்றில் ஒன்றைப் பிரித்து மற்றொன்றுக்காக யாராலும் உழைக்க முடியாது" என்பதே நமக்குச் சொல்லித் தருகிறது. அநீதிகளை எதிர்த்து உண்மையைக் காக்கப் போராடுகின்றவர்கள் இறந்தும் வாழ்கிறார்கள். இவர்களால்தான் இலட்சியங்களுக்கு இறப்பே இல்லாமல் இருக்கின்றது. பேராயராக ஒஸ்கார் ரொமெரோ தனது நாட்டில் நடந்த அரசபடைகளின் அநீதிகளை எதிர்த்த போது சூட்டு கொல்லப்படுகின்றார். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாத்சி அடக்குமுறையால் பலர் மறைசாட்சிகளாகின்றனர் இன்றும் பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரிக்கப்படுகின்றார்கள். துருக்கி, பங்களாதேஸ், இந்தியா எனப்பலநாடுகளில் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுகின்றனர்,இந்த மறைசாட்சிகளின் வீரத்துவமான வாழ்வுக்கு அடிப்படையாக இருப்பவர் இயேசு. இந்தப் புரட்சி வீரரின் போதனைகளும் செயல்பாடுகளுமே அவர்களுக்கு உள்ளூக்கம் தந்தன.

இன்றுடன் புனிதவாரம் தொடங்ககின்றது இந்த வாரத்தில் நடந்தவைகளில் புனிதம் எதுவும் வெளிப்படையாகக் தெரிகிறதா. நம்பிக்கைக்குரிய நண்பர் காட்டிக் கொடுத்தார். அன்புக்கரிய  அன்பர்  மறுதலித்தார். மற்ற நண்பர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர். மனசாட்சி விலை போனது. பொய்சாட்சிகள் சொல்லப்பட்டன. வழக்கு என்ற பெயரில் அரசியல் சதுரங்கம் விளையாடப்பட்டது. இயேசு நல்லவர், குற்றமற்றவர் என்று தெரிந்தும் தவறாகத் தீர்ப்பு சொல்லப்பட்டது. இங்கு புனிதம் எங்காவது தெரிந்ததா? புனிதம் என்பதற்கே வேறொரு இலக்கணம் எழுத வேண்டியுள்ளதே. எனவே , வேறொரு இலக்கணம்தான் எழுதப்பட்டது. கடவுள் என்ற மறையுண்மைக்கே மாற்று இலக்கணம் தந்தவர் இயேசு. கடவுள் துன்பப்படக் கூடியவர்தான். அதுவும் அன்புக்காக எந்த துன்பத்தையும், எவ்வளவு துன்பத்தையும் ஏற்பவரே நம் கடவுள் என்று கடவுளைப் பற்றி வித்தியாசமான ஓர் இலக்கணத்தை இயேசு அந்தச் சிலுவையில் சொன்னாரே, அதேபோல் இந்தப் புனிதவாரம் முழுவதும் இயேசுவின் வாழ்வில் நடந்த எல்லா நிகழ்வுகளும் புனிதத்தை இந்த பூமிக்குக் கொண்டு வந்தன. வெளிப்படையாகத் தெரியாத இந்தப் புனிதத்தை நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். புனிதவாரம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் பல உள்ளன. கற்றுக்கொள்ளச் செல்வோம் கல்வாரிக்கு.

சட்டம் பேசி, கல்லரைகளைப் பெருக்குவதை விட, வாழும் வழிகளை அதிகமாக்குவோம்

17.03.2013'"

ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி,இயேசுவிடம்'போதகரே,இப்பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?" என்று கேட்டனர். என்னும் பைபிள் பகுதி இன்று எமக்குத் தரப்படுகின்றது.  பரிசேயரும் மறை நூல் அறிஞரும் விபச்சாரத்தில் ஒரு பெண்ணைக் கையும் மெய்யுமாகப் பிடித்து வந்ததாகக் கூறுகின்றனர். இவர்கள் ஏன் இயேசுவிடம் வர வேண்டும்? இவர்கள் தங்ளுக்குசட்டங்கள் தலைகீழாய்த் தெரியும் எனபைபிளில் தெரிவிக்கின்றவர்கள்  அச்சட்டப்படி அந்தப் பெண்ணைத் தண்டிக்கும் அதிகாரமும் அவர்களுக்கு உண்டு.  பின்பு எதற்கு இந்த வெளிவேடம் என்று பார்தால்: இயேசுவை எப்படியும் மடக்க வேண்டும் என்னும் சாவல். அதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். அவர்களுக்கு அந்த பெண்ணோ, சட்டங்களோகூட முக்கியமில்லை. சவாலில் வெல்லனெண்டும் இயேசுவை மடக்கவேண்டும் என்பதுதுன் பிரச்சினை.

மோசே நமக்குக் கொடுத்ததாக மறைநூல் அறிஞரும் பரிசேயரும் கூறும் சட்டம் என்ன என்று நாம் முதலில் நோக்குவது இங்கு நல்லது: 'அடுத்திருப்பவன் மனைவியோடு உடலுறவு கொள்பவனும் அந்தப் பெண்ணும் கொலை செய்யப்பட வேண்டும்." 'ஒரு மனிதன் மற்றொருவனுடைய மனைவியோடு படுத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால், அப்பெண்ணும் அப்பெண்ணோடு படுத்தவனும், இருவரும் சாவர்." என்பதுதான். எனவே பைபிளில் இருவேறு இடங்களில் மோசேயின் சட்டப்படி விபசாரத்தில் ஈடுபடும் இருவரும் கொலை செய்யப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்க அந்த ஆணை அவர்கள் இழுத்து வந்ததாகக் கூறப்படவில்லை. ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்ற அளவில் மறைநூல் அறிஞரும், பரிசேயரும் மோசே சட்டத்தை மாற்றி அமைத்து விட்டனர். அதிகாலையில், கோவில் வளாகத்தில் இப்படி ஒரு பெண்ணையும், மோசே சட்டத்தையும் பகடைக் காய்களாக்கிய பரிசேயரையும், மறைநூல் அறிஞர்களையும் வேதனையோடு நினைத்து, பரிதாபப்பட்டு, அவர்களோடு பேசாமல் இயேசு மௌனமாகிப்போனார். ஆனால், அவர்கள் விடுவதாயில்லை. மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே, 'உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்" என்றார் இயேசு.

நீதிபதியாக இருப்பதற்கு ஒரு தகுதி வேண்டும். தீர்ப்பிடுவதற்கு ஒரு கண்ணியம் இருக்க வேண்டும். பட்டமும் பணமும்பதவியும் அல்ல அந்ததகுதி. "உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்"என்பதுதான் எதிர்பார்க்கப்படும் தகுதி. இயேசுவின் போதனையின் இப்பகுதி தீர்ப்பு அளிக்க வேண்டாம் என்பதைவிட, தீர்ப்பு அளிப்பதற்கானத் தகுதியை முன் நிறுத்துகிறது. நம் கண்ணில் மரக்கட்டை உள்ளதா? நம் முதுகில் அழுக்கு உள்ளதா? நம் மனதில் பாவச் சுவடுகள் படிந்துள்ளதா? இவை இருக்குமாயின் எழுதும் தீர்ப்பு ஒருதலைப்பட்சமாக இருக்கும். அடுத்தவரை ஆழமாகப் புறிந்துகொண்டு மனித நேயமும், தெய்வீகமும் எம் தீர்பில் காணப்படவேண்டும் அப்போது அந்த தீர்ப்பு ஒரு தண்டனையாக, சுமையாக அமையாமல் சுவையாக, புதிய தொடக்கமாக அமைந்துவிடும். கடவுளின் முன்னிலையில், பிறருக்குத் தீர்ப்பு அளிக்கும் தகுதி நமக்கு இருக்கிறதா என்று சிந்திப்பது நலம்.

இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பதில் காட்டிய வேகமும் விவேகமும் வீரமும், இப்படிப்பட்டவர்களை எவ்வாறு வாழ வைப்பது என்பதில் காட்ட வேண்டும் என்பது இயேசு இந்த பகுதியில் நமக்கு தெளிவாக காட்டுகின்றார். கொல்லும் முயற்சியில் சட்டத்தைச் சாதகமாத பயன்படுத்தும் சாமர்த்தியம், பெண்ணை அடிமைப்படுத்தும் கொடூரம், அரங்கேறுவதைப் பார்க்கிறோம். சட்டத்தை வளைத்து வசப்படுத்துகின்றனர் கொலை வெறி கொண்டோர். அதே சட்டப்படி அச்செயலில் ஈடுபட்ட ஆணையும் கொண்டு வர வேண்டுமே! வரவில்லையே, ஏன்? பெரிய இடத்துப் பாவங்களையும், பலவீனங்களையும் மூடிமறைக்க, திசை திருப்ப, பாவம் இதுபோன்ற அப்பாவிகள் பலியிடப்படுகிறார்கள். "உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்" என்னும் இயேசுவின் கணீரொலி அத்தனை முகமூடிகளையும் பிடுங்கியெறிந்தது. அப்பெண்ணின் குனிந்த தலையை நிமிர வைத்தது. "அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?" 'அம்மா' என்று அந்த நீதி தேவனின் அழைப்பு, தன் பெண்;மையின் பரிமாணம், தாய்மையின் முழுமை என்னும் புது வாழ்வை அவளில் புகுத்தியதை அவள் உணர்ந்தாள். ஆணுக்குப் பெண் சரி நிகர் சமம்" என்று ஆணித்தரமாய் சொல்கிறார் இயேசு. இந்த உண்மையின் ஆழத்தை மட்டும் இந்த உலகம் மீண்டும் மீண்டும் அசை போட்டால், இந்த உண்மையின் ஆழத்தை நாம் ஒவ்வருவரும் மனதார ஏற்றுக் கொள்ள முயன்றால், ஆண்-பெண் உறவுகள் எவ்வளவோ நலமுடன், சக்தியுடன் வளரும். சட்டம் பேசி, கல்லரைகளைப் பெருக்குவதை விட, வாழும் வழிகளை அதிகமாக்குவோம்

Thursday, March 14, 2013

266 pope name and my name are same


http://media01.radiovaticana.va/imm/1_0_673428.JPGதிருஅவையின் 266வது திருத்தந்தையான திருத்தந்தை பிரான்சிஸ், அமெரிக்கக் கண்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் திருத்தந்தை,
 
நவீன காலத்தில் ஐரோப்பியரல்லாத முதல் திருத்தந்தை(நவீன சிரியாவில் பிறந்த திருத்தந்தை 3ம் கிரகரி 731ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் ஐரோப்பியரல்லாத திருத்தந்தை)திருஅவையில் திருத்தந்தையாகியுள்ள முதல் இயேசு சபைத் துறவி.
பேருந்தில் பயணம் செய்ய விரும்புகிறவர்,  50 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நுரையீரலுடன் வாழ்ந்து வருபவர் (இளவயதிலேயே நோய் காரணமாக ஒரு நுரையீரல் அகற்றப்பட்டுவிட்டது)

இரயில்துறையில் பணிபுரிந்தவரின் மகன், வேதியத்துறையில் பயிற்சி பெற்றவர், 2001ம் ஆண்டில் எய்ட்ஸ் நோயாளிகளின் பாதங்களைக் கழுவி முத்தமிட்டவர். இத்தாலியம், இஸ்பானியம், ஜெர்மானியம், ஆங்கிலம், ப்ரெஞ்ச் ஆகிய மொழிகள் தெரிந்தவர், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படும்வரை அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு சிறிய வீட்டில், தனது உணவைத் தானே சமைத்தவர். அங்கு மாற்றுத்திறனாளியான ஓர் இயேசு சபை துறவியுடன் இவ்வீட்டில் வாழ்ந்து வந்தவர்.
 
புவனோஸ் ஐரெஸ் நகரின் சேரிகளை அடிக்கடிச் சந்தித்து வந்தவர். திருத்தந்தையர் வரலாற்றில் முதன்முறையாக பிரான்சிஸ் என்ற பெயரைத் தெரிவு செய்தவர். தான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் உரோமைக்குப் பயணம் செய்து வரவேண்டாம், மாறாக, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுங்கள் என, அர்ஜென்டினாவை விட்டுப் புறப்படுவதற்கு முன்னர் சொல்லி வந்தவர்.
 
திருஅவைக் கோட்பாடுகளில் பற்றுள்ளவர், ஆயினும் திருமணமாகாத பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத் திருமுழுக்குக் கொடுப்பதற்கு மறுத்த குருக்களைக் குறை கூறியவர். சாதாரண குருக்கள் அணியும் இடுப்புக் கச்சையை அணிந்தவர்.
 
2005ல் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தேர்ந்தெடுக்கப்பட்ட கான்கிளேவில் பங்கெடுத்தவர். 

Thanks; http://ta.radiovaticana.va/Articolo.asp?c=673428

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff