திருஅவையின்
266வது திருத்தந்தையான திருத்தந்தை பிரான்சிஸ், அமெரிக்கக்
கண்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் திருத்தந்தை,
நவீன
காலத்தில் ஐரோப்பியரல்லாத முதல் திருத்தந்தை(நவீன சிரியாவில் பிறந்த
திருத்தந்தை 3ம் கிரகரி 731ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல்
ஐரோப்பியரல்லாத திருத்தந்தை)திருஅவையில் திருத்தந்தையாகியுள்ள முதல் இயேசு சபைத் துறவி.
பேருந்தில்
பயணம் செய்ய விரும்புகிறவர், 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நுரையீரலுடன்
வாழ்ந்து வருபவர் (இளவயதிலேயே நோய் காரணமாக ஒரு நுரையீரல்
அகற்றப்பட்டுவிட்டது)
இரயில்துறையில் பணிபுரிந்தவரின் மகன், வேதியத்துறையில் பயிற்சி பெற்றவர், 2001ம் ஆண்டில் எய்ட்ஸ் நோயாளிகளின் பாதங்களைக் கழுவி முத்தமிட்டவர். இத்தாலியம், இஸ்பானியம், ஜெர்மானியம், ஆங்கிலம், ப்ரெஞ்ச் ஆகிய மொழிகள் தெரிந்தவர், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படும்வரை அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு சிறிய வீட்டில், தனது உணவைத் தானே சமைத்தவர். அங்கு மாற்றுத்திறனாளியான ஓர் இயேசு சபை துறவியுடன் இவ்வீட்டில் வாழ்ந்து வந்தவர்.
புவனோஸ் ஐரெஸ் நகரின் சேரிகளை அடிக்கடிச் சந்தித்து வந்தவர். திருத்தந்தையர் வரலாற்றில் முதன்முறையாக பிரான்சிஸ் என்ற பெயரைத் தெரிவு செய்தவர். தான்
திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் உரோமைக்குப் பயணம் செய்து
வரவேண்டாம், மாறாக, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுங்கள் என, அர்ஜென்டினாவை
விட்டுப் புறப்படுவதற்கு முன்னர் சொல்லி வந்தவர்.
திருஅவைக்
கோட்பாடுகளில் பற்றுள்ளவர், ஆயினும் திருமணமாகாத பெண்களுக்குப் பிறக்கும்
குழந்தைகளுக்குத் திருமுழுக்குக் கொடுப்பதற்கு மறுத்த குருக்களைக் குறை
கூறியவர். சாதாரண குருக்கள் அணியும் இடுப்புக் கச்சையை அணிந்தவர்.
2005ல் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தேர்ந்தெடுக்கப்பட்ட கான்கிளேவில் பங்கெடுத்தவர்.
Thanks; http://ta.radiovaticana.va/Articolo.asp?c=673428
Thanks; http://ta.radiovaticana.va/Articolo.asp?c=673428
No comments:
Post a Comment