Thursday, March 28, 2013

இயேசுவின் உயிர்ப்பு கூறும் கதை

31.03.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

 
'கல்லறை உலகினில் பலவுண்டு - அவை சொல்லிடும் கதைகளில் கனிவுண்டும் வல்லவர் இயேசுவின் கல்லறையோ அவர் இல்லையே என்னிடம் என்றிடுதே! இறை திட்டத்தை நிறைவேற்ற வந்தவர் உண்மையைப் பேசியதற்காக, வாழ்வைக் கொடுத்ததற்காக வாழும் வழியைக் காட்டியதற்காக அவரை இந்த உலகம் படுகொலை செய்தது. தீமையின் அநீதியின் பாவத்தின் சக்திகள் அனைத்தும் கைகோர்த்து நின்று வேடிக்கை பார்த்து தன் கொலை வெறியை நிறைவேற்றியது. ஒரு பெண்ணின் மடியில் பிறந்து, மண்ணின் மடியில் புதைக்க பட்டு, உலக வரலாற்றில் முதல் முறையாக, விண்ணுக்கு உயிரோடு எழுந்த, உலக இரட்ச்சகரின் உயிர்ப்பு பெருவிழாநாள் இன்று.'சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த சாத்தானை  சாவின் வழியாகவே அழித்துவிட்டார்.வாழ்நாள் முழுவதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டிருந்தவர்களை விடுவித்தார்"

பரிசேயர்கள், யூதகுல மூப்பர்கள் மூளையில் உதித்தாக செல்லப்படும் கதை ஒன்றை இங்கு பகிர்வது நல்லது இயேசு இரத்தமும் சதையுமுள்ளவராக உயிருடன் எழுப்பப்பட்டதை மறைக்கப் புனைவு செய்ப்பட்ட கதை அது: இயேசு தம் சீடர்களிடம் 'நான் சிலுவையில் அறையப்படுவேன்; பிறகு இறந்தவனைப்போல் பாசாங்கு செய்வேன். நான் மரணம் அடைந்துவிட்டதாக எண்ணிப் படைவீரர்கள் எனது கால்களை முறிக்காமல் போய்விடுவார்கள்;. உடனே நீங்கள் என்னைச் சிலுவையிலே இருந்து இறக்கி எனது உடலை ஒளித்து வைத்து விடுங்கள்;  தப்பிவிடலாம். அவர் உயிர் பெற்று எழுந்து விண்ணகம் சென்றுவிட்டார் என்று பரப்பிவிட்டால் யாரும் உடலைத் தேடமாட்டார்கள்" என்று கதை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சித்திரவதை செய்து கொல்லப் பட்ட மனிதன் மீண்டும் உயிர்பெற்று எழுந்தார் என்று கூறிப் பரப்புவது காதில் பூ சுற்றும் கலைக்கு நிகரானது. எவன் இதனை நம்புவான்? என்ன ஆதாரம்? எங்காவது இறந்தவன் உயிர்த்தெழுவதுண்டா? இயேசுவைப் பற்றி முழுமையாய் அறிந்திராத எல்லோர் மனத்திலும் அன்று எழும்கதை தான் இது.

ஆனால் ஹார்வர்ட் பல்கலைக்கழகச் சட்டப் பேராசிரியரும் இங்கிலாந்து நாட்டின் நோட்டிங் ஹாம் என்கிற இடத்திலுள்ள தூயயோவான் கல்லூரி முதல்வருமான கலாநிதி மைக்கல் கிரீன் லீப் உலக புகழ்மிக்க 'சட்ட சாட்சியர் தொகுதி" என்னும் நூலாசிரியர் அவர். இயேசு உயிர்த்ததற்கான சாட்சியம் பற்றிய ஆய்வில் ஈடுபடுகையில் இயேசுவின் உயிர்ப்பு வெறும் கட்டுக்கதை என்று கருதினார்.  ஆனால் பைபிளை ஆழமாகப் படித்து, ஆராய்ந்து, தோய்ந்து ஆழ்ந்து சிந்தித்தபின் நற்செய்தி எழுத்தாளர்கள் நால்வரும், தூய பவுலடியாரும் எழுதிய பதிவுகளில் இயேசுவின் உயிர்ப்;புக்கு மறுக்கமுடியாத, ஆதாரமுள்ள,உயிருள்ள சாட்சிகள் உண்டு என்று கண்டறிந்தார். உயிர்ப்பு குறித்த ஐயம் வைத்திருந்த தம்மை உயிர்ப்பின் உண்மை விடுதலை செய்தது என்றார்.'இயேசு உயிர்க்கவில்லை என்றால் அவருடன் வாழ்ந்த சீடர்கள் ஓர் உண்மையை உறுதிப்படுத்தியிருக்க முடியாது. ஏனென்றால் அந்த உண்மையை உலகறியச் சாட்சியம் கூறியதற்காக அவர்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள்;. மறுத்துக் கூறுமாறு சிறையில் அடைக்கப் பட்டார்கள்;. உண்மைக்குச் சான்று பகர உயிரையும் கொடுத்தார்கள் " உயிர்ப்புக்கு உயிருள்ள சாட்சிகள் அவர்களே என்று மைக்கல் கிரீன் தனது கட்டுரையில் எழுதினார்.

'இயேசு ஓரு போலி மெசியா. தந்தை யாவேயைப் பழித்துப் பேசியவர்;. அவரது பெயரால் உருவான கிறிஸ்தவத்தை அடியோடு ஒழித்துக் கட்டவேண்டும்" என்று முழுமூச்சுடன் செயல்பட்டவர் சவுல்.  உரோமர்களிடமிருந்து கிறிஸ்தவர்கள்யார்? கிறிஸ்தவம்பரப்புவோர் யார்? என்ற ஆவண விவரங்களுடன் அவர்களைச் சிறைப்பிடித்துக் கொல்லவேண்டும் என்ற கங்கணத்துடன் தமஸ்கு நோக்கிப் பயணம் செய்தார் சவுல். அவ்வழ்யில் உயிர்த்த இயேசுவினால் தடுத்து நிறுத்தப்பட்டார்.  சவுலின் அவர் வாழ்வே உயிர்த்த இயேசுவுக்கு ஆதாரமான சாட்சியம். என்று எழுதி கலாநிதி மைக்கல் கிரீன் ஓர் ஆய்வு நூலை வெளியிட்டார். இயேசு 'அனைத்து மக்களுக்கும் அல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்து கொண்டவர்களுக்கு மட்டும் இயேசு காட்சி அளித்தார்". ஏன்கிறார் அவர்

இங்கிலாந்து நாட்டுத் தலைமை நீதி அரசராக ஒருமுறை இருந்த மேமிகு லார்ட் டார்லிங் கூறுகிறார்: 'ஏற்கெனவே காணக்கிடைத்துள்ள அளவுக்கு அதிகமான சாட்சியங்கள் பல: உடன்பாடான சாட்சியங்கள், சூழ்நிலைச் சாட்சியங்கள், உண்மைச் சாட்சியங்கள் போன்றவற்றின் அடிப்படையில் உலகின் அறிவாற்றல் மிக்க எந்த நீதியரசரும் இயேசு உயிர்த்த செய்தி மெய்யே என்று தீர்ப்பு வழங்கத் தவறமாட்டார்".

இங்கிலாந்து-ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறைத்தலைவர் பேராசிரியர் தாமஸ் ஆர்னால்டு 'உரோமானியர் வரலாறு"என்னும் ஆராய்ச்சி நூலைஆக்கியவர். வரலாற்று விழிகளையே மூடிவிட்டால்தான் இயேசுவின் உயிர்ப்பை மறுக்க முயல முடியும் என்று எழுதினார். அவர்  'வரலாறு குறித்த நோக்குகளும் இயேசு உயிர்த்ததற்கான சான்றுகளும் " என்னும் ஆய்வு நூலையும் வரலாற்று ஆதாரங்களுடன் வெளியிட்டார். ஆக்சுபோர்டு பல்கலைக்கழத்தில் இயேசுவின் உயிர்பை மறுத்துவந்து மாணவர்கள் இருவரும் உண்மை ஆதாரங்களை அறிந்து உணர்ந்து பின் மனம் மாறினர். எனவே பைபிளை முழுமையாக வாசித்த எவராலும் இயேசுவின் உயிர்ப்பு ஓர் கட்டுக்கதை என்று கற்பிதம் செய்யவே முடியாது.

பைபியில் உயிர்ப்புப் பதிவுகள் பல உண்டு. இயேசு உயிர்த்தெழுந்த உண்மைக்கு 500க்கு மேற்பட்ட சாட்சியங்கள்;  உயிருள்ளோர் மகதல மரியா முதற்சாட்சி.  கதவைப் பூட்டி உள்ளே அஞ்சி நடுங்கிய சீடர்கள் 11 பேர், எட்டு நாள் பின்னர் தோமா உள்ளிட்ட சீடர்கள், பின்பு திபேரியக் கடல் அருகே பேதுரு, திதிம்தோமா, கான நத்தனியேல், செபதேயு மக்கள், மீண்டும் எம்மாவுஸ் சீடர் இருவர்.  பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார்.  கடைசியில் எனக்கும் தோன்றினார் என்கிறார் பவுல் அடியார். இயேசு தமது உயிரையே விலையாகக் கொடுத்து இறுதித் துளி குருதிவரை பூமியில் சிந்தி மானிடரை மீட்ட மீட்பர். 'உயிர்ப்பு" என்கிற கோட்பாட்டு உண்மை கிறிஸ்தவத்தில் அடித்தளமாக உள்ளது.  இயேசுவின் உயிர்ப்பு வழியாக எல்லோரும் உயிர்பெற்று எழச்செய்து, அவரில் நம்பிக்கை கொண்டோர் கடவுளுக்கு ஏற்புடையராகி, நிலைவாழ்வு பெறச் செய்கிறது கடவுளாகிய அவரது அருளாட்சி. இயேசு உயிர்த்தெழுந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம். உயிர்ப்பு தரும் புதிய வாழ்வின் உண்மைகளுக்கு  சாட்சிகளாக விளங்குவோம்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff