10.08.2014 ' ";
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இன்று எமக்குத்தரப்படும் பைபிள் பகுதியில் இயேசு,கடல்மீது நடப்பதையும் இயேசுவின் சீடர் பேதுரு கடல்மீது நடக்கமுனைந்து பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி மூழ்கிப்போவதையும் பேதுரு 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்" என்று கத்திய துன்பவேளையில் இயேசு கையை நீட்டி தூக்கி பேதுருவை காப்பாற்றுவதையும் பார்க்கின்றோம்.
இந்தவேளையில் முன்பு ஒருமுறை வாசித்த ஓரு கதையை கட்டயம் கூறித்தான் ஆகவேண்டும்: 'மனிதன் ஒருவன் தன் வாழ்க்கைப் பயணத்தைத் திருப்பிப்பார்க்கிறான். பயணத்தில் கடவுள் தன்னோடு நடந்து வந்ததற்கு சான்றாக பாதை முழுவதும் இரு ஜோடி காலடித் தடங்கள் பதிந்திருந்தன. அவனுக்கு மிக்க மகிழ்ச்சி. ஒரு சில நேரங்களில் அந்தப் பாதையில் ஒரு ஜோடி காலடித்தடங்களே இருந்ததைப் பார்க்கிறான். நினைவுபடுத்தி பார்த்தபோது, அந்த நேரங்களெல்லாம் அவன் அதிகதுன்பத்தில், போராட்டத்தில் கஸ்டப்பட்ட நேரங்கள் என்று கண்டுபிடிக்கிறான். உடனே கடவுளிடம், ஷதுன்ப நேரத்தில் என்னைத் தனியே விட்டுவிட்டு போய்விட்டீர்களே. இது உங்களுக்கே நியாயமா?| என்று முறையிடுகிறான். கடவுள் பொறுமையாக அம்மனிதனுக்குப் பதில் சொன்னார்: ஷமகனே, பெரும் அலைகளாய் உன்வாழ்வில் துன்பங்கள் வந்தபோது ஒருஜோடி காலடித்தடங்களே இருப்பதைப் பார்த்துவிட்டு அவசரப்பட்டு முடிவேடுத்து விட்டாய். அந்த நேரத்தில் உன்னைவிட்டு நான் எங்கும் போகவில்லை. உன்னைத் தூக்கிக் கொண்டு நானே நடந்தேன்.| என்றார் கடவுள்."
தண்ணீரில் நடப்பதே ஒரு சாதனை. அதுவும் புயல், அலை எனச் சுற்றிலும் பயமுறுத்தும் சூழலில் இயேசு பேதுருவைத் தண்ணீரில் நடக்கச் சொன்னது பெரியதொரு சவால். இதில் நம் கவனத்தை ஈர்ப்பது என்னவென்றால், இயேசு பேதுருவுக்கு அந்தச் சவாலை அளிக்கும் முன்பு காற்றையும், கடலையும் அமைதிப் படுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யவில்லை என்பதுதான். வாழ்க்கையில் வீசும் புயல்கள் எல்லாம் ஓய்ந்த பிறகுதான், பிரச்சனைகளை எல்லாம் தீர்ந்த பிறகுதான் இறைவனைச் சந்திக்க முதல் அடி எடுத்துவைப்போம் என்று நினைக்கும் நம் எண்ணங்கள் தவறு. மாறாக அந்தப் புயலின் நடுவில் இறைவன் காத்துக்கொண்டிருப்பார் துணிந்து சென்று அவரைச் சந்திக்கலாம் என்பதை இயேசு நமக்கு சொல்லித்தருகிறார்
பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அலையும், புயலும் அலைகழித்துக் கொண்டுதான் இருக்கும். அஞ்சாதீர்கள், நம்பிக்கையுடன் துணிந்து வாருங்கள் துயர நேரங்களில் உன்னை தூக்கிச் சுமப்பேன். தம்மை நோக்கிக் கூக்குரல் எழுப்பிய பேதுருவை இயேசு 'உடனே தம் கையை நீட்டிப் தூக்கி காக்கின்றார். புயலின் நடுவில், கடலின் நடுவில் கடவுள் நம்மோடு இருக்கிறார். துயரநேரம் தூணாய்வந்து நம்மையும் கரம்நீட்டி தூக்கிகாப்பார்.
பேதுருவுக்கு இயேசுவைப்போல கடலின்மேல் நடக்கவேண்டும் என்று ஆசை வந்ததுபோல் இன்று எமக்கு கடவுளைப்போல் நாமும்; செய்யவேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். இயேசுவும் இதைத் தவறு என்று சொல்லவில்லை. பேதுருவை அனுமதித்ததுபோல் எமது ஆசைகளை அனுமதிக்கிறார். இன்று எமது ஆராய்ச்சிகள், புதியகண்டுபிடிப்புக்கள் எல்லாவற்றையும் இறைவன் அனுமதிக்கிறார். ஆனால் பேதுரு கடலில் மூழ்கியதுபோல் மூழ்கிவிடக்கூடுது என்று இறைவன் விரும்புகின்றார். பேதுருவுடைய நம்பிக்கையின்மை, பயம், ஆணவம், தெய்வீக வலுவின்மை, இவையே அவர் மூழ்குவதற்கு காரணமாயிருந்தன. ஆசைப்படுவதில் தவறில்லை. ஆண்டவனைப் போன்ற ஆற்றல் இருக்கிறதா? தெய்வீக ஆற்றலால், இறை உணர்வுகளால் நாம் நிரம்பியிருக்கின்றோமா? என்ற வினாவிற்கு விடைகாணவேண்டும். இயேசு இறைமகனாய் இருந்தும், அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒருமலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார். தெய்வீக ஆற்றலால் தன்னை நிறைத்துக் கொண்டார். கடல் மீது நடக்குமுன் கடவுள் அருளால் நிரப்பிக்கொண்டார். தந்தையோடு தனியே உறவாடச் சென்ற இயேசு அங்கேயேத் தங்கி விடவில்லை. காற்றோடு, கடலோடு போராடிய தன் சீடர்களைத் தேடி வந்தார். அதுவும், கடல் மீது நடந்து வந்தார். இந்த தெய்வீக ஆற்றல் இல்லாத ஆசை, ஆபத்தில் முடிவது எதிர்பார்க்கக்கூடியதே. அருளால் ஆண்டவனோடு இணைத்து ஆசைப்படுவோம், கடலிலும் நடக்கலாம், மலையையும் தாண்டலாம்.
No comments:
Post a Comment