05.10.2014 ' "
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இன்று தமக்குத்தரப்படும் பைபிள் பகுதியில் இயேசு, ஓர் உவமைக்கதை கூறுகின்றார். திராட்சைத் தோட்டம் போட்டு, அதைக் குத்தகைக்கு விட்ட நிலக்கிழார் தமக்குச் சேரவேண்டிய பழங்களைப் பெற்றுவர பணியாளர்களை அனுப்பியபோது, தோட்டத் தொழிலாளர்கள் பழங்களைக் கொடுக்காததோடு, பணியாளர்களைத் தாக்கினார்கள், இறுதியில் நிலக்கிழாரின் மகனையும் கொன்றுபோட்டார்கள். இஸ்ரயேல் மக்கள் திராட்சைத்தோட்டத்தோடு தங்களை ஒப்பிடுவதை பழையஏற்பாட்டில் நாம் பார்க்கலாம். 'படைகளின் ஆண்டவரது திராட்சைத்தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே". பொதுவாக திராட்சைத்தோட்டங்கள் முள்வேலிகளால் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்தது. கரடிபோன்ற கொடூரமான காட்டு விலங்குகளிடமிருந்தும், திருடர்களி டமிருந்து பாதுகாக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திராட்சைத்தோட்டத்தில் உயர்ந்த கோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கோபுரத்தினால் இரண்டு பயன்பாடுகள் இருந்தன. திருடர்கள் வருவதை முன்கூட்டியே பார்த்து எச்சரிக்கையாக தோட்டத்தைப் பாதுகாப்பதற்கும், திராட்சைத்தோட்டத்தில் வேலை செய்கிறவர்கள் தங்குவதற்கும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாலஸ்தீனம் ஆடம்பர வாழ்வுக்கு ஏற்ற இடமில்லை என்பதால், பொதுவாக திராட்சைத்தோட்ட உரிமையாளர்கள் தங்களின் திராட்சைத்தோட்டங்களை குத்தகைக்கு கொடுத்துவிட்டு, குத்தகைப்பணத்தைப் பெறுவதில் மட்டும்தான் கவனமாக இருந்தார்கள். இதுதான் இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த சூழ்நிலை
இந்த இடத்தில் அரசன் தாவீதுவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை கூறித்தான் ஆகவேண்டும்: இறைவாக்கினர் நாத்தான் அரசன் தாவீதிடம் ஊரியவின் மனைவியுடன் தகாத உறவு வைத்த நிகழ்வை ஓர் உவமையாக சொன்னபோது தாவீதுக்கு பெருகோபப்பட்டு. முதலில் தாமே அம்மனிதன் என்பதை உணராமல் அதனைச் செய்தவன் சாகவேண்டும் என்று கூறினார்;. பின் மனதுருகி இறைவனிம் மன்னிப்புகேட்டான். ஆனால், இங்கு இயேசுவின் உவமையைக் கேட்ட தலைமைக் குருக்களும், பரிசேயரும் தங்களைப் பற்றியே அந்த உவமையை இயேசு கூறினார் என்று 'உணர்ந்துகொண்டனர்." ஆனால், மனம் மாறவில்லை, மாறாக அவரைப் பிடிக்க வழிதேடினார்கள். இந்த உவமையை இன்று கேட்கும் எமது பதில் என்ன? தாவீதைப் போல நாமே அம்மக்கள் என்பதை உணராமல் கோபம் கொள்கிறோமா? அல்லது பரிசேயர்கள் போல உணர்ந்துகொண்டும் மனம் மாறாமல் இருக்கின்றோமா? விடைதேடவேண்டிய காலமிது. தாவீதைப் போல, மனதுருகி இறைவனிம் மன்னிப்பு கேட்போம். இறைவன் எதிர்பார்க்கும் கனிகளை எம் வாழ்வில் வழங்குவோம்.
தனக்குச் சேரவேண்டிய பங்கைக் கேட்பதற்கு, தோட்ட உரிமையாளர் தன் பணியாளரை, தனித் தனியாக அனுப்புகிறார். மோசே துவங்கி, திருமுழுக்கு யோவான் முடிய இறைவன் அனுப்பிய பணியாளர்கள் அனைவருமே தனி மனிதர்களாக வந்தவர்கள். இவர்களை நினைவுறுத்தவே, பணியாளர்கள் தனியே வந்தனர் என்றும், அவர்கள் அனைவருமே குத்தகைக்காரர்களின் வன்முறைக்கு உள்ளாயினர் என்றும் இயேசு குறிப்பிடுகிறார். குத்தகைக்காரர்களான மதத் தலைவர்கள் வெளிப்படுத்திய இந்த வன்முறையை நாம் இன்று வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் இயேசு இந்தஉவமையை இன்று எமக்குக் கூறி நாம் கடவுள் எமக்கு தந்த பொறுப்பை மறந்து, கணக்கு கொடுக்க தவறிவிடுகின்றோம். கடவுள் இன்றுகுருக்களை துறவிகளை இறைவாக்கினராக அனுப்பிஎங்களின்; பொறுப்புக்களை நினைவூட்டுகிறார். நாம் கண்டுகொள்ளாமல் அவர்கள் மீது குற்றம் கண்டு கூண்டில் நிறுத்த முனைகின்றோம். ஆனால், அவர்களோ இறைவனின் மனிதர்கள். கடவுள் அவர்களை கண்காணிப்பார் என்பதை மறந்து மரணதண்டனை வழங்கத்துடிக்கும் கூட்டத்திற்கு வலுச்சேர்க்கின்றோம். ஆனாலும், கட்டுவோர் விலக்கிய கல்லே கட்டிடத்தின் மூலைக்கல் ஆனதுபோல, அவர்கள் கடவுளின் மகன் வழியாக, இந்த உலகத்திற்கு வாழ்வுகொடுக்கிறாரகள்;. ஆனால், நம்முடைய கர்வம், ஆணவம், அகந்தை நமது பொறுப்பை தவறாகப்பயன்படுத்த நம்மைத்தூண்டுகிறது. இந்த வாழ்வு கடவுள் கொடுத்தது. ஆனால், இந்த வாழ்வை எப்படி வாழ்வது? என்பது நம்மைப்பொறுத்தது. கடவுள் நமக்கு முழுமையான சுதந்திரத்தைக் கொடுக்கிறார். அந்த சுதந்திரத்தை பொறுப்போடு பயன்படுத்த நாம் அழைக்கப்படுகிறோம். இன்றைய உலகில் கொடுக்கப்பட்டிருக்கிற சுதந்திரத்தை நாம் பலவழிகளில் தவறாக, முறைகேடாகப் பயன்படுத்துகிறோம். அதை நல்லமுறையில் பயன்படுத்தி பயன்பெற முயற்சி எடுப்போம்.
No comments:
Post a Comment