ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்,
சட்ட வைத்தியர் பேராசிரியர் ஆனந்த சமரசேகரஇ வசீம் தாஜுதீன் மரண அறிக்கையைத் திரிபுபடுத்தி எழுதியூள்ளார்.இலங்கை அரச நிர்வாகத்தின் படுமோசமான துஸ்பிரயோகம் இது. வசீம் தாஜுதீன் மரணத்தைப்பற்றி நாம் கடந்தவாரம் இதேபகுதியில் எழுதியிருந்தோம். தாஜுதீனின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த வைத்தியர் ஆனந்த சமரசேகர பொலீஸ் விசாரணைகளுக்குச் சரியாய் ஒத்துழைக்கவில்லை என்று அறியமுடிந்தது. இன்று ஆனந்த சமரசேகரவினுடைய இந்தச் செயலை விரிவாகப்பார்ப்போம். மே17இ2012ஆண்டு வசீம்தாஜுதீன் சென்றவாகனம் நாரஹேன்பிட்டிய சாலக்கா மைதானத்துகுகருகில் ஒரு மதிலில் விபத்துகுள்ளாகி அவர் இறந்துபோனதாக மறுநாள் இலங்கைப் பத்திரிகைகளில் செய்திகள் மூலையோரமாக வெளியாகியிருந்தன.
மே18. மற்றும் மே19.என்பது ராஜபக்சை அரசுக்கு விடுதலைப்புலிகளை வென்றௌம் என்னும் போர் வெற்றிவிழாத்தினங்கள்;. மிகக்கோலாகலமாக அந்த அரசு காலிமுகத்திடலில் கொண்டாடும்போது அந்தநிகழ்வூ ஓர் ஊடக விஸ்திரணமாகிப்போனது. தனிநபர்கள் கார் ஓட்டிக்கொண்டுபோய் விபத்துகுள்ளாகி இறந்துபோன துன்பியலுடன் ஒப்பிடும்போது வசீம் தாஜுதீனின் மரணம் மிகவித்தியாசமாகிருந்தது. அவர் காரின் பயணிகள் ஆசனத்தில் சீற் பெல்ட் அணிந்த நிலையில் இறந்து கிடந்தார். இந்த அவலத்தைப் பூதாகரமாக்கி மே18-19 நாள்களில் செய்திகளை வெளியிட்டிருக்க முடியூம். ஆனால் பெருமளவான ஊடகங்கள் அன்றைய ராஜபக்சை அரசு சொல்லும் கேவலங்களைச் செய்திகளாக வாந்தி எடுத்துக்கொண்டிருக்கு மளவூக்குத்தான் அன்று ஊடக சுதந்திரமும் இருந்தது.
பொய்யான அறிக்கை
மே18இ வசீம்தாஜுதீனின் உடலைப் பரிசோதித்த வைத்தியர் ஆனந்த சமரசேகரஇ காலை11 மணிக்கு தன்னுடைய இளையவர்களான வைத்தியர்கள் ஸ்ரீயந்த அமரசேன மற்றும் ராஜகுருவிடம் உடலை ஒப்படைத்து இது விபத்து அல்ல. இதில் ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதுபோல தெரிகிறது. இந்தப் பிரேதப் பரிசோதனையைக் கச்சிதமாகச் செய்யூங்கள் என்று சொல்லிவிட்டு வெளியே போனாராம். இரண்டு வைத்தியர்களும் பரிசோதனைகளை ஆரம்பித்த சில நொடிகளில் அவர்களுக்கு இந்தமரணம் விபரீதமானது என்று புரிந்துபோனது. தாஜுதீனின் தொண்டைப் பகுதியிலும் நெஞ்சுப்பகுதியிலும் துவாரங்கள் இருந்தன. தொடைஎலும்புகள் முழங்காலுடன் இணையூம் இடங்கள் மோசமாக நொறுக்கப்பட்டிருந்தன. பற்கள் உடைக்கப்பட்டிருந்தன. மேலும் தாஜுதீனின் ஆணுறுப்பும் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தது. எல்லாவற்றையூம் தம்பரிசோதனை அறிக்கைகளில் குறித்துக் கொண்ட வைத்தியர்களும் பிரேதத்தை பிரீசரில் போட்டுவிட்டு போய்விட்டார்கள். எங்கோ சென்றிருந்த வைத்தியர் ஆனந்த சமரசேகர பகல் 12:30அளவில் அவசரமாகத் திரும்பிவருகிறார். ஸ்ரீயந்தவூம் ராஜகுருவூம் எழுதியிருக்கக்கூடிய அறிக்கையைப் படித்துவிட்டு தாஜுதீனின் பிரேதத்தை மீண்டும் தனியாகப் பிரேதப் பரிசோதனை செய்ய ஆரம்பித்தார். இந்தமரணத்தில் ஏதோ ஒரு விடயம் இருகிறது. கவனமாய்ப் பார்த்து வேலை செய்யூங்கள் என்று சகாக்களிடம் சொல்லிவிட்டுபோன அதே ஆனந்த சமரசேகர மொத்தமாக தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இது ஒரு விபத்தால் ஏற்பட்ட மரணம் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கை வழங்கியிருந்தார்.
ஊடக அடக்குமுறை
ஆரம்பத்தில் பிரேதப் பரிசோதனை செய்த வைத்தியர்களான ஸ்ரீயந்தவூம் ராஜகுருவூம் ஆனந்த சமரசேகரவின் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குக் கூடவிருந்த சாட்சிகளாக கையொப்பமிட்டு இருந்தனர். அத்தோடு தாஜுதீன் விவகாரம் விபத்து என்ற பொய்ப்போர்வையால் மூடி மறைக்கப் பட்டது. ஆனால் இப்படி மூடப்பட்ட பொய்யில் விரிசல்கள் விழத்தொடங்கின. டுயமெய ஈ நியூ+ஸ் போன்ற இணையத்தளங்கள்இ ராவய போன்ற பத்திரிகைகள் கேள்வி எழுப்பிக் கொண்டு கட்டுரைகள் எழுதினாலும் முகநூலில் தங்களுடைய அடையாளத்தை மறைத்தபடி சில முகநூல் பக்கங்கள் இது ஒருகொலை என்று சத்தியம் செய்து கொண்டிருந்ததாலும் இராட்சதத் தனமான ராஜபக்சை அரசின் ஊடக ஒடுக்குமுறையை மீறி சாதாரணமக்களிடம் இவைபோய்ச் சேரவில்லை.
உதவமறுத்த ரணில்-மைத்திரி அரசு
சனவரி 08இ 2015ஆண்டு சனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சை தோற்கடிக்கப்பட்டுஇ நல்லாட்சி குழுபதவிக்கு வருவதற்கு தாஜுதீன் மரணம் தேர்தல் மேடைகளில் வாக்கள்ளும் இயந்திரமாக்கப் பட்டது. ராஜித சேனாரத்னஇ வசீம் தாஜுதீன் கொலைக்கு ராஜபக்சைவினுடைய மனைவி சிரந்தி ராஜபக்சை சம்பந்தப்பட்ட இருப்பதாகவூம்இ அலரிமாளிகையில் இருந்து தாஜூதீனைச் சித்திரவதை செய்த இடத்தில் இருந்த நபர்களுக்கு 42 தொலைபேசி அழைப்புகளை வழங்கியிருந்ததாகவூம்இ மக்களை அச்சத்தில் உறையச்செய்யூம் உரைகளை அந்த காலத்தில் ஆற்றியிருந்தார். பின்னாளில் சிரந்தியினுடைய கால்ட்டன் இல்லத்துகுச் சொந்தமான டிபண்டர்வாகனம் தாஜுதீனை பின்தொடர்ந்தது சிஐடியால் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் அன்றைய கோமாளி அரசு விசாரணை மேற்கொண்ட சிஐடி பணிப்பாளர் ~hனி அபேசேகர போன்றௌருக்கு எந்த ஒத்துழைப் பையூம் வழங்கவில்லை. சிரந்தி மற்றும் யோசித்தவின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்த படைவீரர்களின் விபரங்கள் மற்றும் குறித்தத் தினங்களில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பற்றிய எந்த ஒரு விபரத்தையூம் வழங்க ரணில்-மைத்திரி அரசு மறுத்துவிட்டது.
வசீம்தாஜுதீனின் உடல் யூலை2015ஆண்டு நாடாளாமன்றத் தேர்தலுக்குமுன் மீண்டும் தெகிவளை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் இருந்து எடுக்கப்பட்டு இரண்டாவது தடவையாகப் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அந்நாள்களில் இலங்கையில் மிகப்பிரபலமான வைத்தியர்களான அஜித் தென்னக்கோன் ஜீ.பெரேரா மற்றும் கொலம்பகே ஆகியயோர் பிரேதப் பரிசோதனை நடத்தினார்கள். தாஜுதீனின் சடலத்தின் தொடைஎலும்புகளும்இ நெஞ்சு எலும்புகளும்இ தொண்டைக் குழிஎலும்புகளும் காணாமல்போயிருப்பதைகண்டு பேரதிர்ச்சிக்குள்ளானர். இப்போது என்ன செய்வது? தாஜுதீனின் சடலத்தை ஆரம்பத்தில் பிரேதப் பரிசோதனை செய்த வைத்தியர்கள் ஸ்ரீயந்த அமரசேன மற்றும் ராஜகுரு ஆகியோர் பிரேதப்பரிசோதனை செய்த சம்பூரணமான அறிக்கையைக் கண்டுபிடிக்கிறார்கள். தொண்டைக்குழி எலும்புகளும் நெஞ்சு எலும்புகளும் தொடைஎலும்புகளும் சேதமாக்கப்பட்ட இருப்பதாக ஸ்ரீயந்தவூம் ராஜகுருவூம் அப்போது எழுதிய அறிக்கைக்குச் சான்றுபகரும் விதமாக அன்றைய எக்ஸ்ரே அறிக்கை எல்லா எலும்புகளும் பத்திரமாகவிருப்பதையூம் விபரிக்கிறது. ஆனால் அவை சேதமாக்கப்பட்டிருந்தன. ஆகவே வைத்தியர் ஸ்ரீயந்த மற்றும் ராஜகுருவின் பிரேதப்பரிசோதனைக்குப்பிறகு தாஜுதீனின் எலும்புகளை களவாடியது யார்?என்று விசாரணைகள் ஆரம்பமாகின. விடை தெரியாத கேள்விகள் இங்கும் ஆக்கிரமித்திருந்த நிலையில் விசேட வைத்தியர் குழு தாஜுதீன் கொடூரமாய் வதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக முடிவூக்கு வந்தனர்.
வதைசெய்யப்பட்ட தாஜுதீன்
தாஜுதீனை எங்கோ கொன்றுவிட்டு ஒரு விபத்தாய் நாடகமாடி இருக்கிறார்கள் என்று முடிவூ செய்தார் சானி அபேசேகர. சிஐடி 2012 தாஜுதீனின் பிரேதப் பரிசோதனையோடு சம்பந்தப்பட்ட வைத்தியர் ஆனந்த சமரசேகரவையூம் உதவியாளர்களாயிருந்த ஸ்ரீயந்த மற்றும் ராஜகுருவையூம் விசாரணைக்குள் கொண்டுவருகிறார்கள். எலும்புகளுக்கு என்ன நடந்தது என்று ஆனந்த சமரசேகரவிடம் விசாரித்தபோதுஇ தனக்கு எதுவூம் தெரியாது என்று முதலில் கைவிரித்தார். ஸ்ரீயந்த மற்றும் ராஜகுருவிடம் விசாரரித்தபோது. நாங்கள் பிரேதப் பரிசோதனை செய்தோம். நாங்கள் இன்று காணாமற்போய் இருப்பதாகச்சொல்லப்படும் எலும்புகள் தொடர்பாக அறிக்கையூம் எழுதி வைத்தோம். அது மட்டுமல்ல தாஜுதீன் உடலில் ஏற்பட்டிருந்த அசாதாரண காயங்கள் பற்றி ஆனந்த சமரசேகரவிடமும் முறையிட்டோம் என்றார்கள். மேலும் இந்த எலும்புகளை வைத்தியர் ஆனந்த சமரசேகர வேறாக எடுத்து கொண்டார் என்று வைத்தியர் ராஜகுரு மேலும் ஒரு அறிக்கையில் எழுதியிருந்தார். உடனே மீண்டும் சிஐடி ஆனந்த சமரசேகரவை நெருங்கியது. எலும்புகளை நீங்கள் எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அறிக்கையூம் இங்கே இருக்கிறது. எங்கே எலும்புகள் என்று எகிறினார்கள் சிஐடி. அதுவா? நான் மேலதிகப் பரிசோதனைகளுக்காக எடுத்தேன். அதை ஒரு ரொலியின் மீது வைத்தேன். அதன் பின்னர் எனக்கு மறந்துவிட்டது. அந்த எலும்புகளுக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை என்றார். ஆனந்த சமரசேகர பதில் கொடுத்த எழுகோலத்தை வைத்தே சாட்சிகளை அழிப்பதில் அவர் துணைபோயிருக்கிறார் என்ற முடிவூக்கு வந்தது சிஐடி.
மீண்டும் ஆனந்த சமரசேகர ஸ்ரீயந்த அமரசேன மற்றும் ராஜகுரு ஆகியோரை ஒன்று சேர்த்து விசாரணைகள் ஆரம்பமாகின. பிரேதப் பரிசோதனையை நீங்களா மேற்கொண்டீர்கள் என்று ஆனந்த சமரசேகரவிடம் கேட்டபோது எந்த தயக்கமும் இன்றி ஆம் நான்தான் என்றார். ஆனால் ஸ்ரீயந்தவூம் ராஜகுருவூம் அதனை மறுத்த விட்டனர். நாங்கள்தான் முதலில் பிரேதப் பரிசோதனை செய்தோம். எங்களுக்குத் தாஜுதீனின் உடலில் காயங்கள் இருந்த இடங்கள் தொடர்பாகச் சந்தேகங்கள் ஏற்பட்டது. நாங்கள் ஒன்றும் விடாமல் எல்லாவற்றையூம் குறித்துவைத்திருக்கிறௌம். இந்த நிலையில் ஆனந்த சமரசேகர மீண்டும் வந்தார். அவர் தனியே பிரேதப் பரிசோதனை மேற்கொண்டார். இது ஒரு விபத்து என்று தனது கடைசி அறிக்கையை எழுதினார். எம்மிடம் பலவந்தமாகத்தான் கையொப்பங்களை வாங்கினார். நாம் கையொப்பம் வழங்காவிட்டால் எமது மேற்படிப்புக்கு அனுமதிக்கப்போவதில்லை என்று மிரட்டினார். எமக்கு வேறுவழியில்லாமல் கையொப்பங்கள் வைத்தோம் என்றனர். ஒரு பிரேதப் பரிசோதனை நடக்கும்போது அது எந்த வகையான மரணம் என்றாலும் நீதிமன்ற விவகாரம் என்றபடியல் அந்தப் பிரேதப்பரிசோதனை நடக்கும் நிகழ்வைப் புகைப்படம் எடுப்பார்கள். தாஜுதீனின் மரணப்பரிசோதனை நடந்தநேரம் 79 புகைப்படங்கள் எடுக்கப்பட்டதைக் கண்டுபிடித்தது சிஐடி. ஆனால் எந்தவொரு புகைப்படத்திலும் ஆனந்த சமரசேகர இல்லை. நீங்கள் பிரேதப் பரிசோதனை செய்தால் இந்த புகைப்படங்களில் இருக்கவேண்டுமே. நீங்கள் ஒருபுகைப்படங்களிலும் இல்லையேஎன சீஐடி கேட்டபோது என்னைக் காட்சிப்படுத்தாமல் மற்றவர்களை வைத்துப் புகைப்படங்களை எடுக்கச்சொல்லி நான்தான் சொன்னேன் என்று மீண்டும் ஓர் அபூர்வமான காரணம் சொன்னார் அவர்.
புகைப்படப்பிடிப்பாளின் அறிக்கை
உடனே புகைப்படப்பிடிப்பாளர் அழைக்கப்படுகின்றார். இவர் என்ன சொல்லுகிறார். இவரை எடுக்காமல் ஏன் புகைப்படம் எடுத்தீர் என்று கேட்டபோதுஇ இது என்ன பைத்தியக்காரக் கதை. இவர் அகப்படாது புகைப்படம் எடுப்பதா எனதுவேலை. நான் மரணவிசாரணைகளுக்கான உத்தியோகபூர்வ புகைப்படப்பிடிப்பாளர். துல்லியமாக அனைத்தையூம் ஆவணப்படுத்துவது எனது கடமை என்றார் அவர். ஆனந்த சமரசேகர ஒரு குற்றத்தை தாழ்ப்பாழ்போட்டு மூடி மறைக்க முனைவது நிருபணமானது. ஆனந்த சமரசேகர வசமாய் இறுகி ஒரு கட்டத்தில் நிதானமிழந்து இனிமேல் என்னவாகும் எல்லாம் முடிந்துவிட்டதுதானே என்று கேட்டார். அதற்கு சிஐடி இனிமேல்தான் ஆரம்பமாகப்போகிறது உங்களுக்கு வந்த தொலைபோசி அழைப்புகள் பற்றிய விசாரணைகள் என்றனர். அவ்வளவூதான் ஆனந்த சமரசேகர அந்த இடத்திலே சிறுநீர் போய்விட்டாராம். சிஐடி காரியலையத்தில் ஆனந்த சமரசேகரவிற்கு எற்பட்ட இந்த நிலைமை தொடர்பாக அப்போது ராவைய பத்திரிகை ஒரு விரிவான கட்டுரையையூம் எழுதியிருந்தது. இதேவேளை காணமல்போன வசீம்தாஜுதீனின் எலும்புகள் நெவில் பெனாண்டோ மருத்துவ மனையில் இருக்கலாம் என்று சந்தேகம் எழும்பவே சிஐடி அங்கு விரைந்தது.
சைரம் மருத்துவமனையில் நடந்தது என்ன
சைரம் என்று அன்று அழைக்கப்பட்ட நெவில் பெனாண்டோ மருத்துவமனையில் மற்றும் மருத்துவக் கல்லூரியில் ஆனந்த சமரசேகர பணிபுரிந்து கொண்டிருந்தார். சிஐடி அங்கிருந்த ஆய்வூகூடங்களைப் பரிசோதித்தபோது மற்றும் ஓர்அபூர்வ மேசடியைக் கண்டிறிந்தது. மே 01இ 1993ஆண்டு ரணசிங்கப் பிறேமதாசவூடன் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்வர்களின் எலும்புகளை எல்லாம் ஆனந்த சமரசேகர இலாவகமாக அங்கு கொண்டுவந்திருப்பது தெரியவந்தது. வசீம் தாஜுதீனின் விவகாரத்தில்; சாட்சிகளை அழித்தக் குற்றச்சாட்டிற்காகவூம் அரச பகுப்பாய்வூத் திணைக்களத்தில் இருக்கவேண்டிய எலும்புகளைத் தாம் பணிபுரியூம் மருத்துவனைக்குக் கொண்டு சென்றதால் பொதுச்சொத்துகளைத் துஸ்பிரையோகம் செய்தக் குற்றச்சாட்டுக்காகவூம் கைது செய்யப்பட்டார் ஆனந்த சமரசேகர. முன்பிணைகோருவதும் கைதுசெய்யப்பட்டு பிணையில் வருவதுமாக மூன்று-நான்கு ஆண்டுகள் இப்படியே கழிந்தன. ஆனந்த சமரசேகர எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் 2020ஆண்டு அவர் இறந்துபோனபோது கொழும்பு மேல்நீதிமன்றம் இந்த வழக்கு முடிவூக்கு வருவதாக அறிவித்தது. ஒரு மருத்துவர் தனது கடைமையைச் செய்யாது தவறவிட்டு ஒரு குற்றத்தை யாருக்காகவோ மறைக்கப்போனதன் விளைவூகள் பாதாள உலகக் கும்பல்போல ஆட்சிக்கு உடந்தையாக இருந்த ஆனந்த சமரசேகரபோன்ற வைத்தியர்களும் அனுர சேனநாயக்க போன்ற டிஐஜிக்களும் வசீம் தாஜுதீனின் மரணத்திற்குப் பங்குதாரர் ஆகிப்போனார்கள். இன்று வசீம்தாஜுதீனைப் பின்தொடர்ந்த வாகனத்தில் இருந்ததாக உறுதிசெய்யப்பட்டிருக்கும் கஜ்ஜா எல்லாம் சும்மா ஏவலர்கள். படிப்பறிவில்லாத பாதாளப் பெயர்வழிகள். ஆனால் போரசிரியர் ஆனந்த சமரசேகரவூம் இந்தக் கொலைக்கு ஏதோவொருவிதத்தில் துணைபேயிருக்கிறார். என்ன படித்து என்ன பலன். மெத்தப் படித்த அவரையூம் சம்பத் மரம்போரி கஜ்ஜா குழுமத்துடன்தான் சேர்க்கவேண்டி இருக்கிறது.
Hisham.M.Vlog என்னும் வலையொளிப் பதிவிலிருந்தும் https://www.colombotelegraph.com, https://lankanewsweb.net, https://economynext.com, https://dbsjeyaraj.com/dbsj, https://www.themorning.lk,https://www.dailymirror.lk, https://www.adaderana.lk பதிவிலிருந்தும் தொகுக்கப்பட்டது)











