செய்தி: ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட தமது மாசிமாதச் செபக் கருத்தில் அண்மையில் சவுதி அரேபியாவில் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ரிசானா நஃபீக் என்னும் இளம்பெண்ணிற்காக செபித்தார். அத்துடன் எம் அனைவரையும் அவருக்காக செபிக்கும் படி வேண்டியும் உள்ளார்;;. அவர் தொடர்ந்தும் செபிக்கும் போது போர்ப் பகுதிகள் அல்லது ஆயுதம் தாங்கிய மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் அமைதியின் தூதுவர்களாக மாறுவதற்கு அவர்களுக்கு உதவிகள் வேண்டும் என்று வேண்டினார். குடியேற்றதாரக் குடும்பங்கள், உள்நாட்டு மோதல்கள், வறுமை காரணமாக வேறு நாடுகளில் பிழைப்பு தேடிக் குடியேறியிருப்பவர்கள், சிறப்பாக, தங்களது கணவன், பிள்ளைகளைச் சொந்த ஊர்களில் விட்டுவிட்டு, வெளிநாடுகளில் வீட்டுவேலைகள் செய்யும் தாய்மார்களுக்காகச் செபித்தார். இவர்கள் வீட்டுவேலைசெய்யும் குடும்பங்களில் பலவகையான, வெளிப்படையாகச் சொல்ல முடியாத துன்பங்களை எதிர்கொள்கிறார்கள். ஓய்வின்றி வேலை, தனிமை உட்பட பல கஸ்;டங்களை தினம் அனுபவிக்கின்றார்கள். அண்மையில் சவுதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த ரிசானா நஃபீக் என்ற இளம்பெண் பொது இடத்தில் வைத்து தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது உலகம் அறிந்த செய்தி. எனவே அப்பெண்ணிற்காக நாம் அனைவரும் இறைவனிடம் பிராத்திப்போம் என கேட்டுக்கொண்டார்.
இன்று உலகில் 19 கோடிக்கு மேற்பட்ட மக்கள் தங்கள் நாடுகளைவிட்டு வெளிநாடுகளில் வாழ்கின்றனர். தங்கள் குழந்தைகளையும் குடும்பத்தையும் பாதுகாப்பதற்குத் தாய்மார் எதிர்கொள்ளும் துன்பங்கள் கணக்கிலடங்காது நீளுகின்றன. எனவே இம்மாதத்தில் குடியேற்றதாரத் தாய்மார்களுக்காகச் செபிப்போம். எம் தாயும் தந்தையுமான பரம்பொருளே இறைவா, நீர் அநாதைகளுக்குத் தஞ்சம். நோயாளிகளின் மருத்துவர். வீடற்றவர்களுக்குப் புகலிடம். பசியால் வாடுவோருக்குப் பசிதீர்க்கும் உணவு. இறைவா, உம் பிள்ளைகளின் கவலைகளையும் கஸ்டங்களையும் போக்கியருளும். போர் இடம்பெறும் சூழல்களிலும், ஆயுதத் தாக்குதல்கள் இடம்பெற்றுவரும் இடங்களிலும் வாழும் மக்களை இவ்வேளையில் நினைக்கின்றோம். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பசியாலும் நோயாலும் தினம் தினம் சொத்து வாழும் மக்களை நினைவுகூரும். சொந்த ஊரை, உறவகளை விட்டுவிட்டு, வெளிநாடுகளில் வீட்டுவேலைகள் செய்யும் தாய்மார்களுக்காக வேண்டுவோம். எம் நல்ல தந்தையே, இவர்கள் தங்களின் கசப்பான அனுபவங்களிலிருந்து அமைதியின் மேன்மையை உணரச் செய்யும். இவர்களை அமைதியின் தூதுவர்களாக மாற்றும் என செபித்தார்.
உலகில் போர்கள் நீங்கி அமைதி நிலவச் செபிப்போம். உலகில் ஆயுதங்கள் களையப்படட்டும். அணுஉலைகள் மூடப்படட்டும். மக்கள் மத்தியில் சண்டைகள் நீங்கி அமைதி ஏற்படட்டும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும், பிணக்குகள் நீங்கி சமாதானம் ஏற்படவும் செபிப்போம் என அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment