24.02.2013 '"
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இயேசு உயர்ந்த மலையில் உரு அல்லது தோற்றம் மாறிய நிகழ்வை குறிக்கும்; பைபிள்; பகுதி இன்று எமக்கு தரப்படுகின்றது. டீடீஊ நிறுவனம் தயாரித்த 'மனித உடல்" எனும் ஒரு அறிவியல் திரைப்படதை பற்றி இங்கு குறிப்பிடுவது நல்லது.:'காலையில் எலாம் அடிக்கிறது. தூங்கிக்கொண்டிருந்த ஓர் இளைஞனின் காதுகளைத் தாக்கிய அந்த ஒலி அலைகளால் அவன் காதுக்குள் இருந்த செல்களில் மாற்றங்கள். எலாம் கேட்டு கண் விழித்தான். கண்ணிமை உரசியதால் விழியின் மேல் படலத்தில் இருந்த செல்களில் மாற்றங்கள். அந்த இளைஞனின் அன்றைய வாழ்வுக்கான மாற்றங்கள் துவங்கி விட்டன." என்ற வரிகளுடன் அப்படம் ஆரம்பமாகிறது. மாற்றம் என்பது மனிதனுக்கு அடிப்படையாக தேவையானது.

குழந்தைப் பருவம், வாலிபப் பருவம், முதுமைப் பருவம் என்று மனித உடலிலும், மனதிலும், அறிவிலும் எத்தனை மாற்றங்கள்? பருவ மாற்றங்கள், கலாசார மாற்றங்கள், எண்ணங்களில் மாற்றங்கள், மாற்றங்கள் என்று நினைக்கும் போது. பட்டியல் மிகவும் நீளுகின்றன. மாற்றங்கள் மனித வாழ்வின் மையம். அது இல்லையெனில் மரணம் தான். மாற்றங்கள் நேரும் போது போராட்டங்களும் இருக்கும். ஒவ்வொரு மாற்றமும் குழந்தை பெறுவது போன்றது. துன்பம், போராட்டம் இவற்றினின்று பிறப்பது மாற்றம். நம்மைச் சுற்றி எழும் மாற்றங்கள் ஒரு கனவுலகை உருவாக்கினாலும், அந்தக் கனவுகளின் நடுவிலும் வாழ்வின் குறிக்கோளை, இலட்சியத்தை நினைவில் கொள்வது நமக்கு நல்லது.
உருமாற்றம் என்றால் என்ன? ஏன், எப்படி, அது உண்டாகிறது? மாற்றம் தேவையா, இல்லையா? மாற்றம் நல்லதா, கெட்டதா? கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த இடத்தில் முன்பு வாசித்த ஒரு கதையை சொல்லித்தன் ஆகவேண்டும்: 'இறுதி இரவுணவு" என்ற உலகப் புகழ் மிக்க ஓவியத்தை லியோனார்டோ டா வின்சி வரையும் போது நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் ஒரு சம்பவம் இது. லியோனார்டோ டா வின்சி; ஓவியம் வரைவதற்கு ஆட்களைத் தேடுகிறார் என்று அறிந்ததும், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அவரது இல்லம் நோக்கி படையெடுத்தனர். அந்தக் கூட்டத்தில் அமைதியாக, கொஞ்சம் ஒதுங்கியே நின்ற ஒரு 20 வயது இளைஞனை டா வின்சி முதலில் தெர்தேடுத்தார். அவரை வைத்து, இயேசுவை வரைந்தார். பின்னர் ஒவ்வொரு சீடரை வரைவதற்கும் ஆட்களைத் தேர்ந்தெடுத்து, வரைந்து கொண்டிருந்தார். ஆறு ஆண்டுகளாய்த் தீட்டப்பட்ட இந்த ஓவியத்தின் இறுதி கட்டத்தில் யூதாஸை வரைந்தார். உரோமையச் சிறையிலிருந்து அனுப்பப்பட்ட ஒரு இளைஞனை வைத்து யூதாஸை வரைந்துகொண்டிருந்த போது அவன் அழுதான். ஏன் ஆழுகின்றாய் என விவரம் கேட்டார் டா வின்சி. 'ஆறு வருடங்களுக்கு முன் நீங்கள் இயேசுவை தீட்டுவதற்கு பயன்படுத்திய இளையனும் நான்தான்" என்று அவன் சொன்னான். ஒரு இளைஞன் ஒரு சில ஆண்டுகளில் உருவம், பழக்க வழக்கம் இவற்றில் பெரும் மாற்றங்கள் அடைவதை எல்லாருமே பார்த்திருக்கிறோம், உணர்ந்திருக்கிறோம்.
கூட்டுப் புழு கூட்டிலிருந்து வெளியேறுவதற்கு நீண்டதொரு போராட்டம் செய்யவேண்டியுள்ளது. அனால், அந்த போராட்டத்தின் போது அதன் இறக்கைகளைப் பெரிதாகும். போராட்டத்தின் இறுதியில் அழகான வண்ணத்துப் பூச்சி வெளியேறி பறக்கும். கூட்டுப் புழு பார்க்க அழகில்லாதது. வண்ணத்துப் பூச்சி அழகுக்கு இலக்கணமாகிறது. இந்த மாற்றம் உருவாக, போராட்டம் தேவை. போராட்டம், துன்பம் இவை ஈன்றெடுக்கும் குழந்தைதான் மாற்றம்.
உயர்ந்த மலையில் இயேசுவின் உருமாற்றம் சீடர்களிடம் உருவாக்கிய மாற்றங்கள்: பேச்சிழந்தனர், பயந்தனர், பின்னர் அவர்களுள் பேதுரு மட்டும் என்ன பேசுகிறோம் என்பதை உணராது எதையோ பேசினார். 'நாம் இங்கேயே தங்கி விடலாம்" என்கிறார். உடனே மேகங்களின் வழி இறைவன் சொன்ன பதில்: 'என் அன்பு மகன் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்."பேசுவதைக் குறைத்துக் கொண்டு, கேட்க வேண்டும். இறைவார்த்தையைக் கேட்க வேண்டும். அந்த இறைவன், இறை மகன் இயேசு என்ன கூறுகிறார். இங்கே தங்கியது போதும். வாருங்கள் மலையை விட்டிறங்கி நம் பணியைத் தொடர்வோம் என்று கூறுகிறார்.

கடவுள் அனுபவங்கள் வாழ்க்கைக்குத் தேவை. கடவுளோடு தங்குவதற்கு கூடாரங்கள், கோவில்கள் அமைப்பது நல்லதுதான். ஆனால், கோவில்களிலேயே தங்கி விடமுடியாது,கூடாது. இறைவனைக் கண்ட, தரிசித்த அந்த அற்புத உணர்வோடு, மீண்டும் உலகிற்குள் செல்ல வேண்டும். அங்கே, மக்கள் மத்தியில் இறைவனைக் காணவும், அப்படி காண முடியாதவர்களுக்கு இறைவனைக் காட்டவும் நாம் கடமை பட்டிருக்கிறோம். உருமாறிய கடவுளைக் கண்ணாரக் கண்ட சீடர்களை அழைத்துக் கொண்டு இறை மகன் இயேசு மலையிலிருந்து இறங்குகிறார். எதற்காக? அந்த மக்களை உருமாற்றவே
வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாற்றங்களை எதிர் கொள்ள நாம் மேற்கொள்ளும் போராட்டங்கள் இவை நம்மையும், நமது சூழ்நிலைகளையும் மாற்றும், புரட்டிப் போடும்.
இந்த நாட்களில் பலர் 'என்னடா வாழ்க்கை, எல்லம் நரகமாக இருக்கிறது. ரோட்டில நாட்டில இருக்க முடியவில்;லை. இந்த இளைஞர்கள் அட்டகாசம் கொஞ்ச நஞசமல்ல நாம் இங்கே இருப்பது நல்லது என்று சொல்லவோ நினைத்துப் பார்க்கவோ முடியவில்லை என அழுகிறார்கள். எனவே நாம் நல்லவராவோம். சிறைச்iசாலைக்கு செல்லும் முகச்சாயலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். இயேவின் முகச்சாயலை எம்மில் கொண்டுவருவோம். மக்களை உருமாற்றும் பணியில் நாமும் இணைவோம்.
No comments:
Post a Comment