03.03.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
பாவிகள் மனம் மாறாவிடால் அழிவர் என்று கூறுகின்றார். அத்துடன் இயேசு அத்திமரம் பற்றி ஒரு கதை கூறுகின்றார்:'ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் உள்ள அத்திமரத்தி கனியைத் தேடியபோது எதுவுமில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், பாரும் மூன்று ஆண்டுகளாக இந்த மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?" என்றார். தொழிலாளர் ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்" என்று அவரிடம் கூறினார்."
இந்த அத்திமர கதையில்;, உரிமையாளர் தொழிலாளியிடம் ஒருபுகார் சொல்லுகின்றார்: இம்மரத்தை வெட்டிவிடும். அவாறாறே கனிதராத ஒவ்வொரு கத்தோலிக்கரும்,இந்த உலகில் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய வாழ்விலும் அப்படியே. எத்தனையோ ஆண்டுகள் நாம் கனி தராமல் இருந்தால்,இறைவன் ஏமாற்றமேஅடைவார். எனவே,இந்தத் தவக்காலத்தில் நாம் மனமாற்றம் பெறுவோம். நம்முடைய வாழ்வு கனி தருவதாக அமையட்டும். நம்முடைய வாழ்வில் நற்செயல்கள் பெருகட்டும். நம்முடைய வாழ்வு இறைவனுக்கும், பிறருக்கும் கனி தருவதாக அமைய வேண்டும்.
நம்மை விட மற்றவர்கள் பெரிய பாவிகள் என்று நம்மால் உறுதியாக கூற முடியாது. மனிதர், சாத்தானின் தூன்டுதலால், தவறான வழியில் செல்பவர்கள். நமக்காகவே உடைந்த இயேசுவின் பாவமற்ற மனம், பாவ வழியில் செல்பவர்களை புனிதமாக்கும், என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வில்லை. ஒரு மனிதனின் ஆன்மா அழிவு பாதையில் செல்வதை நினைத்து நாம் வருத்தப்படவில்லை என்றால், நாம் பாவம் செய்கிறோம். எங்களுக்கு எதிராக பாவம் செய்தவர்கள் அனைவரும், அத்தி மரத்தை போன்றவர்கள். எங்களால் அவர்களை கேட்க வைக்க முடியும். நாங்கள் அவர்களுக்கு உரம் போட வேன்டும். எங்கள் நடவடிக்கைகள் மூலமும், எங்கள் வார்த்தைகள் மூலமும், அவர்களுக்கு நாங்கள் உரமாக இருக்கவேன்டும். சரியான திசையில் அவர்களை செலுத்த நாங்கள் பணிவுடனும், கனிவுடனும் அறிவுறுத்த வேண்டும். இயேசு கனிகொடாத மரத்தை அதிக நாட்கள் வைத்திருக்க விரும்பவில்லை. நம்மால் செய்ய முடிந்த்தெல்லாம் செய்தும், தீயவர்கள் மனம்திரும்பவில்லை என்றால், அந்த மரத்தை வெட்டிவிடுவது தான். அதாவது அவர்களை விட்டு விலகி விடுவது அல்லது, சரியான் அதிகாரத்தில் இருப்பவரிடம், இந்த பிரச்சினைகளை காட்டி அவர்களின் தீமைகளுக்கு சரியான தன்டனை கிடைக்க ஏற்பாடு செய்யதலே ஆகும். இதனையும் மிகவும் கனிவுடனும், பொருமையுடனும் செய்ய வேன்டும். உரம் கொடுத்தும், நல்ல கனிகளை தரவில்லையென்றால், அந்த மரம் கீழே விழுந்து, மக்கி மற்ற புதிய மரங்களுக்கு உரமாக இருக்கட்டும்
பாவிகள் மனம் மாறாவிடால் அழிவர் என்று கூறுகின்றார். மனமாற்றத்திற்கான அழைப்பை விடக்கும் தவக்காலம் மக்கள், வரலாற்றை வாசிக்கவும், துன்பங்களை, விசுவாசக் கண்கொண்டு நோக்கவும் வலியுறுத்துகின்றது. இன்றைய நாமக்குத் தரப்படும் பைபிள் பகுதியிலிருந்து இந்தப் பாடத்தையே நாம் கற்றுக் கொள்கிறோம்.'சிலர் இயேசுவிடம், தீமை, இறைவன் அனுப்பும் தண்டனை என்ற கோணத்தில், பிலாத்துவின் கட்டளையின் பேரில் சில கலிலேயர்கள் ஆலயத்தினுள் கொல்லப்பட்டது, சிலோவாமில் கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேர் இறந்தது பற்றிய பைபிள் பகுதியை மேற்கோள் காட்டி கேள்வி கேட்டபோது இயேசு கடவுள் நல்லவர், யார்மீதும் தீமை வருவதை அவரால் விரும்ப முடியாது" என்று பதில் கூறியதையும் காட்டுகின்றது.'இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப்பாவிகள் என நினைக்கிறீர்களா? என்று குருக்குக் கேள்வி கேட்கிறார். அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள். ஒருவர் எதிர்கொள்ளும் துயரச்சம்பவங்கள், அவர்தனது சொந்தத் தவறுகளுக்காக உடனடியாக அனுபவிக்கும் தண்டனைகள்" என்ற கருத்தை இயேசு எச்சரிக்கிறார். அடுத்தவனைப்பற்றி பேசும்போது அவனது பெருமை,திறமை, நன்மைகளைப் பேசவேண்டும். எம்;மைப்பற்றி பேசும்போது எம் பலவீனங்கள்,தவறுகள், குறைகளை மனதில் கொள்ளவேண்டும்.இரண்டையும் செய்யும்முன் இறைவனை எம் முன் நிறுத்திக்கொள்ளவேண்டும்.இயேசு சொன்ன சொற்கள், எல்லோரும் பாவிகள், எல்லோரும்; குற்றவாளிகள். மனமாற்றம் பெறுதலே அழிவிலிருந்து காத்துக்கொள்ள சிறந்த வழி.
'இயேசு, இந்த நிகழ்வுகளை வித்தியாசமான கண்ணோட்டத்தில் வாசிக்கவும் அவற்றை மனமாற்றத்தின் பொருளில் நோக்கவும் அழைப்பு விடுக்கிறார்". இறைவன் இன்றி நாம் வாழ முடியும் என்ற மாயையை வெற்றிகொள்ளவும் கடவுளின் துணையோடு அதுகுறித்து நாம் சிந்திப்பதற்கும் இச்சம்பவங்கள் வாய்ப்பளிக்கின்றன எனநாம் உணரவேண்டும். பாவிகள் தீமையை விட்டுவிலகி அவரன்பில் வளரவும் மற்றவர்கள் அருளின் மகிழ்வில் வாழ நாம்உதவவும் இறைவன் விரும்புகிறார்.'தனது மக்களுக்கு எப்பொழுதும் நல்லதையே விரும்பும் இறைவன், அம்மக்கள் மேலான நன்மைகளை கண்டுபிடிக்கும் வண்ணம் வேதனைகளை அனுபவிப்பது தமது அன்பின் நமது அறிவுக்கு எட்டாத திட்டத்தின் ஓர் அங்கமாக சிலவேளைகளில் அனுமதிக்கிறார்"இத்தவக்காலத்தில் இத்தகைய இச்சம்பவங்கள், இறைவன் இன்றி நாம் வாழ முடியும் என்ற மாயையை வெற்றிகொள்ளவும் கடவுளின் துணையோடு அது குறித்து நாம் சிந்திப்பதற்கும்; வாய்ப்பளிக்கின்றன.
No comments:
Post a Comment