Tuesday, October 14, 2025

மகிந்தாக்களால் பயன்படுத்தித் தூக்கி எறியப்பட்ட ருசுப் பேப்பர் வெலிக்கடை சிறைச்சாலையில் விழுந்த கதை

ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர், 

ராஜபக்சை குடும்பத்தின் மிகநெருங்கிய சகாவும் பிரபல பாதாள உலக தாதாவுமான யூலம்பிட்டிய அமரவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ஐப்பசி 7, 2025 அன்று உறுதி செய்திருக்கிறது.

தங்கல்ல மேல் நீதிமன்றம் கார்த்திகை 2019, வழங்கிய மரண தண்டனைக்கு எதிராக யூலம்பிட்டிய அமரே, கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு செய்திருந்தார். கார்த்திகை 2024, மேல் முறையீட்டு நீதிமன்றம், தங்கல்ல மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உறுதி செய்தது. ஆனாலும் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனாய் முயன்று பார்த்தார் யூலம்பிட்டிய அமரே. உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார். தன்னை முற்றாய் விடுவித்து அன்று பிறந்த பாலகன் போல ஆக்குமாறு யூலம்பிட்டிய அமரே தன்னுடைய சட்டதரணிகள் மூலம் கொடுத்த மனுவைப் பார்க்காமலேயே தூக்கி எறிந்திருக்கிறது உச்ச நீதிமன்றம். மூன்று நீதிமன்றங்களும் கை விரித்துவிட்;டன. இனிமேல் இலங்கையில் முறையிட நீதிமன்றம் எதுவுமில்லை. இனி ஆண்டவரிடம்தான் முறையிட வேண்டும். அல்லது மைத்ரிபால சீறிசேனை, கோட்டாபாய ராஜபக்சை, ஜே.ஆர் ஜேயவர்தன போன்ற ஆட்சியாளர்கள் அமைய வேண்டும். அப்படி ஓர் அதிஸ்டசாலி சனாதிபதி அமைந்தால்தான் பொது மன்னிப்பின் கீழ் யூலம்பிட்டிய அமரே வெளியே வரலாம். 

யார் இந்த யூலம்பிட்டிய அமரே? 

யார் இந்த யூலம்பிட்டிய அமரே? ஜீகான கமகே அமரசிறி என்னும் பெயர் கொண்டவர் யூலம்பிட்டிய அமரே என பிரபல்யமாக அறியப்படுபவர் ஆவார். அவர் சாதித்திருக்கும் சாதனைகள் என்ன என்ற கேள்விக்கு பதில்: 24 கொலை வழக்குகள், பதினைந்து கொள்ளை வழக்குகள் என்று ரொம்பவே எதிர்நிலையில் பிரகாசிக்கின்றன அமரேயின் சுயவிபர சமூகவிம்பம். இந்த யூலம்பிட்டிய அமரேயை மரண தண்டனையில் நிறுத்திய வழக்கு எது? அவர் அப்படி என்னதான் செய்தார்? அதை அறிவதற்கு அரசியல்வாதிகளால் போசிக்கப்பட்டு, காண்டாமிருகம்போல வளர்ந்து நின்ற பாதாள தாதாவின் இரத்த வரலாறுகளை நாம் சற்றேனும் அறிவது நன்று. இலங்கை அரசியல் தலைவர்களுக்கும் பாதாள உலகத்துக்குமான தொடர்பு பிரிக்க முடியாத ஒன்றாகியிருந்தது. ஜே. ஆர், -ரணிலுக்கு கோனவல சுணில் போல, பிரிமதாசவுக்கு சொத்தி உப்பாலி போல, சந்திரிக்காவுக்கு பத்தகான சஞ்சீவ போல, ராஜபக்சைக்களின் ஆஸ்தான பாதாள உலகத் தலைவராயிருந்தவர் தான் யூலம்பிட்டிய அமரே. யூலம்பிட்டிய அமரே இலங்கையின் தென்மாகாணத்தில் வெகுப்பிரசித்தம். அவருடைய சுயவிபரக் கோவையில் 06 வகுப்பு மட்டும் என்ற கல்வித் தகைமைக்கு அப்பால் துரைசார் நிபுணத்துவ அனுபவங்களாய், பொரும்நிழல்தரும் மரங்களை வெட்டி விற்றல், கஞ்சா கடத்துதல், கொலை செய்தல், கொள்ளை அடித்தல், கப்பம் கேட்டல், கள்ள மாடு வியாபாரம் என்று ஏகப்பட்வை இருக்கின்றன. அமரே ஆரம்பத்தில் மகிந்த ராஜபக்சையின் ஒன்;றுவிட்ட சகோதரி நிரூபமா ராஜபக்சையின் தோட்டக் காவலாளியாக இருந்தவர். இப்படி ஆரம்பித்த காவலாளி 18வயதில் என்ன பிடிக்கும் என்று பள்ளிப்படிப்பை மேற்கொள்ள வில்லை, மாறாகச்சிறைக்குச் சென்றார். இப்படித்தான் அமரேயின் ஆடுகளம் ஆரம்பமானது.

மித்தனியைச் சேந்த பஸ்வியாபாரி அமிலச்சூட்டி என்பவரை பிடித்து பகிரங்கமாய் அமரே செய்த கொலை பொலிஸ் ஆவணங்களில் இன்றளவும் பதபதைப்புடன் பேசப்படுகின்றது. அமரே தன்னிடமிருந்த குண்டுகளை வீணாக்கவில்லை. அமிலச்சூட்டியின் துப்பாக்கியைப் பறித்து அவரையே போட்டுத் தள்ளினார். அதன்மூலம் அமரேயின் திருநாமம் பட்டித்தொட்டியங்கும் பிரபல்யமானது. அமரேயின் பலமான அரசியல் ஆதரவுத்தலத்தின் முன்னால் கவல்துறைக்குச் சகலதையும் மூடிக்கொண்டு வேடிக்கைப் பார்ப்பதைத்தவிர வேறுவழியேதும் செய்யமுடியவில்லை. ஒரு முறை தன்னுடைய ஏற்றுமதி வியாபாரத்துகாக நான்கு ஏக்கர் காணி ஒன்றுக்குள் புகுந்து பலாமரங்களை எல்லாம் வெட்டிச்சாய்த்துக் கொண்டு இருந்தார் அமரே. இந்த அநியாயத்தைப் பார்ப்போர் கேட்போர் யாருமிலையா என்று மக்கள் சபித்தப்படி சென்றுகொண்டு இருந்தபோது, ஐந்துபொலிஸ் அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்தார்கள். சீருடையில் இருந்த அந்த அதிகாரிகளை ஒரு மணுத்தியலத்துகு மேலாக முழம்தாளிடவைத்தார் அமரே. இப்படி எல்லாம் நடக்குமா என்று அங்கலாய்க்க வேண்டாம். இப்படித்தான் இந்த நாடு ஒருகாலத்திலே இருந்தது. குண்டுத் துளைக்காத முழு ஆடை அணிந்தபடி எப்போதும் ரீ56 துப்பாக்கியைத் தோளில் ஏந்திய வண்ணம் பகிரங்கமாய் அலைவார் அமரே. இந்தியாவின் சந்தனக்கடத்தில் மன்னன் வீரப்பன் நடமாடுவதுபோல இந்த காட்சி இருக்குமாம். 

அமரேயின் சிறைச்சாலை முற்றுகை

அமரே சிறைக்குச்செல்வதும் விடுதலையாவதும் பெரிய விடையம் அல்ல. சிறையில் இருந்தால் பரவாயில்லை என்று யோசித்தால் சிறைக்குப்போவார். சிறைக்குப் போனாலும் தாராளமான உபசரிப்புகள் அவருக்குக் கிடைத்தன. 2002ஆண்டு அமரே தங்கல்ல சிறையில் இருந்தபோது நடத்திய ஒரு போராட்டத்தின்மூலம் உலக அளவில் பிரபலமானார். சிறைச்சாலை ஆயுதக் களஞ்சியத்தைக் கைப்பற்றிய அமரேவும் அவருடைய சக சிறைவாசிகளும் ஆயுதங்களை கையிலேந்திய படி திரிந்தன. அத்தனைபேர் கையிலும் ஆயுதங்கள் இருந்ததால் எந்த நேரத்திலும் சிறைச்சாலைக்குள் ஒரு கோரத் தாண்டவம் நிகழலாம் என்று எதிர்வு கூறப்பட்டது. ஊடகங்கள் எல்லாம் தங்கல்ல சிறைச்சாலையில் மையம் கொள்ளத் தொடங்கியிருந்தன. முன்னெச்சரிக்கையாக விசேட அதிரடிப்படையும் வரவழைக்கப்பட்டிருந்தது. அப்போது ரணில் பிரதமராக இருந்தார். மகிந்த ராஜபக்சை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.

உள்விவகார அமைச்சர் ஜோண் அமரத்துங்கவுக்கு நிலைமையின் விபரிதம் புரிந்திருந்தது. யாரை அழைத்துக்கொண்டு போனால் நிலைமையைச் சாந்தப்படுத்தலாம் என்று ஜோண் அமரத்துங்கவுக்கு தெரிந்திருந்தது. எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சையை அழைத்துக்கொண்டு சிறைச்சாலைக்கு விரைந்தார் ஜோண் அமரத்துங்க. சிறைச்சாலை மதிலுக்கு வெளியே இருந்தவாறே அமரே, அமரே, நான் மகிந்த ராஜபக்சையே வந்திருக்கிறேன். பயப்படாமல் வெளியே வா என்றாராம் மகிந்த ராஜபக்சைசே. அத்தோடு அமரேவின் அந்த சத்தியாகிரகப் போராட்டம் நிறைவு பெற்றது. பழையபடி அமரே தனுடைய சிறைகூடத்துக்குப் போனார். மகிந்த ராஜபக்சையின் ஒற்றை வாக்கியம் அமரேவை மகுடிக்குக் கட்டுப்படும் பாம்பாக்கியது. 2005ஆண்டு சனாதிபதி தேருதல் சமயம் மகிந்த ராஜபக்சைவுக்கு ஆதரவாய் களத்தில் இறங்கி தன்னுடைய பங்களிப்பை அச்சரம் பிசகாமல் வழங்கினார் அமரே. மேடைகளில் ஏறிப்பேசினார். பாட்டுபாடி மகிழ்ந்தார். தனுடைய ஆஸ்தான நாயகர்கள் பதவிக்குவர இப்படித்தான் உழைத்தார் அமரே. அமரே என்ற ஒருவரே அரச அங்கிகாரம் பெற்ற தாதாவாக அப்போது இருந்ததார். தென்மாகாணத்தில் இருந்த பல பாதாள உலக குழுக்களுக்கு செய்வதற்கு ஒன்றும் இருக்கவில்லை. அமரேவை எதிர்த்துகொண்டு நின்றுபிடிக்க முடியாததால் நேவி ருவான் போன்ற பிரபல தாதாக்கள் தலைமறைவானார்கள்

அதிகாரம் குறைந்த யூனியத் தாதாக்கள் அமரேவுக்கு சலாம் போட்டு ஒதுங்கி நின்றார்கள். அமரேமேல் அப்போது அதிக வம்புகளும் வழக்குகளும் குவிந்திருந்தன. ஆனால் அமரே எதையும் இலட்சியம் செய்வில்லை. எதுவுமே வேலைக்காகாததால் கண்ட இடத்தில் கைது செய்யுமாறு அமரேவுக்கு எதிராக தங்கல்ல மேல் நீதிமன்றம் திறந்த பிடியாணையை விதித்தது. எனக்கு என்ன வந்தது நீ விதித்தால் விதித்துக்கொள்ள என்றவாறு அமரே தன்பாட்டுக்குச் சுற்றித்திரிந்தார். அவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு யாருமே முயற்சி செய்யவில்லை. அந்த அளவுக்கு அமரேவின் அரசியல் பலம் இருந்தது. ஒரு முறை அமரே சாகாசமாய் வந்து சகசிறைவாசி ஒருவரை பார்த்துவிட்டுப் போவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து நின்றாராம் தங்கல்ல மேல் நீதிமன்ற நீதிபதி சந்தரசேனன்.

திறந்த பிடி ஆணை

திறந்த பிடி ஆணை பிரப்பிக்கப்பட்ட அமரே துப்பாக்கியை தூக்கிக்கொண்டு பொலிஸ் நிலையம் சென்று முறையாய்த் துப்பாக்கியை மேசைமேல் வைத்துக் கண்ணியப்படுத்திவிட்டு பொறுப்பு அதிகாரியோடு சாகசமாய் உரையாடி விட்டு வருவாராம். இப்படிப்பட்ட ஒருவரை யார் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவது. இப்போது இதை எல்லாம் கற்பனை செய்யவே அச்சமாக இருக்கிறது. இன்று சனநாயகம் பேசும் நாமலிடம் யாருமே இதற்கெல்லாம் விளக்கம் கேட்காததுதான் மற்றுமொரு புதிர். அமரேவின் அட்டகாசங்கள் இப்படி தறிகெட்டு சென்றுகொண்டு இருந்தபோதுதான் அமரேவின் வாழ்வை மொத்தமாக மாற்றிப்போட்ட அந்த சம்பவம் நடந்தது. நாமல் ராஜபக்சை தன்னை இளவரசர் என்று நினைத்திருந்த காலம்தான் அது. நாமலின் நீலப்படையெனப்படும் நில்பலகாயவில் எல்லாமாக இருந்தார் யூலம்பிட்டிய அமரே. இந்த நிலையில் ஜேவிப்பியின் பத்திரிகையான ஷலங்கா| யூலம்பிட்டிய அமரேவை போட்டு தாறுமாராகத் தாக்கத் தொடங்கியது. உச்சகட்டமாக நதமுல்லன  வேட்டை நாயை கட்டிப்போடு என்று கட்டுரை எழுதியது ஷலங்கா பத்திரிகை|. இதனால் மிகுந்த ஆத்திரம் கொண்டார் அமரே, 2012ஆண்டு யூன் 15ஆம் திகதி ஹம்பாம்தோட்ட மாவட்டத்தில் கடடிவற்ர கட்டுவான என்ற இடத்தில் லியனகே ரஞ்சித் என்பவரது வீட்டில் ஜேவிப்பியின் ஒரு சிறிய கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. அது ஒரு 50 - 60 பேர் கூடியிருந்த ஒரு கூட்டம். இன்றைய சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜாயதிஸ்ச  மேடையில் இருந்தார். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. அமரேயுடன் நான்கு பேர் மோட்டார் சைக்கிள்களில் தடாலடியாய் வந்து இறங்கினார்கள். நான் நதமுல்லன வேட்டையினாய் வந்திருக்கிறேன். யார் இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்தவன். முடிந்தால் வா மோதிப்பார்போம் என்று குரைத்தப்படி கண்டப்படி சுடத் தொடங்கினாராம் அமரே. அரசியல் தொடர்புகள் அற்ற இரண்டு பேர் அந்த இடத்திலேயே துடித்துடித்து இறந்துபோனார்கள்:- எடேறிமான்னல ஜி. மலானி (50) நிமாந்தா கேஷhன் ஜேயசேன (18) மற்றும் ஒருவருக்கு மிக கடுமையான காயம். இன்னும்பலர் கயமடைந்தனர்.

பயங்கரவாதத்தை ஒளித்து விட்டதாய் மார்புதட்டிக் கொண்ட தேசத்தில் யூலம்பிட்டிய அமரே ரீ56 துப்பாக்கிகளுடன் வந்து சனாதிபதியின் சொந்த மாவட்டத்தில் இந்த குரூரத்தை நிகழ்த்தி விட்டு போனார். அப்போது தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் என்ற ஒன்று இருந்தது. அதன் பணிப்பாளராய் லக்ஸ்மன் குலுகல்ல என்பவர் இருந்தது. இரவு 7 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. 9மணி அளவில் தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளராயிருந்த லக்ஸ்மன் குலுகல்ல, இந்த படுகொலைகளை ஜேவிப்பியின் கோஸ்டிச் சண்டை என்று கதைகட்டி, யூலம்பிட்டிய அமரேயைக் காப்பாற்றக் களத்தில் இறங்கினார். இதனால் மிகுந்த ஆத்திரமடைந்த ஜே.வி.பி, லக்ஸ்மன் குலுகல்லவை நாடாளமன்றத்திலும் பொதுமேடையிலும் வறுத்தெடுக்கத் தொடங்கியது. அமரவை கைதுசெய்யுமாறு அரசுக்கு அழுத்தம் கொடுத்து மிகப்பெரிய எதிரப்;புப் பேரணியை நடத்தியது 

அநுர குமார திஸாநாயக்கா உலுகல்லவை உலுக்கியமை

திரண தொலைக்காட்சியில் வாதப்பிட்டிய அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அநுர குமார திஸானாயக்கா லக்ஸ்மன் குலுகல்லமீது குட்டச்சாட்டுகளை அடுக்கிக்கொண்ட போனார். அப்போது நிகழ்ச்சிக்குத் தொலைபேசி வழியாகத் தொடர்புகொண்டு பேசிய லக்ஸ்மன் குலுகல்ல அநுர குமார திஸாநாயக்காவின் பொய்களுக்குத்தான் அஞ்சப்போவதிலை என்றார். அவ்வளவுதான் அநுர குமார திஸாநாயக்கா லக்ஸ்மன் குலுகல்லவை உடும்புப்பிடியாய்ப் பிடித்து உலுக்கி எடுக்க தொடங்கினார். 7மணிக்கு சம்பவம் நடக்கிறது. எந்த விசாரணையும் இன்று நீர் எப்படி இதை ஜேவிப்பி மோதல் என்று சொல்லலாம். ஓர் அரச உழியனாய் உமது கடைமையை சரிவரச் செய்ய என்றுவாறு எகிற வாதப்பிட்டிய நிகழ்ச்சி அல்லோல கல்லோமாகிப்போனது. அப்போது ஜேவிப்பியின் தலைவராக சோமவான்ச அமரசிங்கை இருந்தார். அவருடைய வழிகாட்டலில் கட்டுவன படுகொலைகளுக்கு எதிராக நாடுமுழுக்கச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மிகுந்த வீரியமாய் எதிர்த்து நின்றது ஜேவிப்பி. ஒரு கட்டத்தில் அமரேவை இன்னமும் பாதுகாப்பது பெரும் அவமானமாகிப் போனது அரசுக்கு. வாழை மரத்தை கொத்திய மரங்கொத்தி போலாகிபோனார் அமரே. வெள்ளை நிற சேட், வெள்ளை நிற காற்சட்டை, வெள்ளை நிற சபாத்து அணிந்து ரெஸ்ட் மச்சு விளையாடும் கிரிக்கட் வீரர் போல தங்கல்ல நீதிமன்றத்தில் சரணடைந்தார் அமரே. வலஸ்முல்ல நீதிவான் நீதிமன்றத்தில் நடத்த இனங்காணல் அணிவகுப்பில் அமரே கொலைக்குற்றவாளி என மூன்று கண்கண்ட சாட்சிகாளால் யூன் 22, 2012 இனங்காணப்பட்டார். 7ஆண்டுகள் நடந்த வழக்கு விசாரணை முடிவில்தான் 2019ல் தங்கல்ல மேல் நீதிமன்ற நீதிபதி சு.ளு.ளு.ளுயிரறiனாய அவர்கள் அமரேக்கு மரண தண்டனை விதித்தார். இந்த தண்டனையைக் கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியிருக்கின்றன. என்ன ஒரு விதி பாருங்கள்? வெறும் 30-40 பேர்களோடு சிறிய கூட்டம்கூட வைக்கமுடியாத அளவுக்கு அமரே மற்றும் ராஜபக்சைக்களால் அழுத்தம் கொடுக்கப்பட்ட காட்சியும். சனாதிபதியும் இன்று பதவியில் இருக்கிறார்கள். அமரேவைக்  காப்பாற்றுவது எப்படி போனாலும் அன்றைய சண்டித்தனத்தின் ராஜதானியான ஹம்பாதே}ட்டையில் தேருதலில் கூட நிற்க முடியாத அளவுக்கு ராஜபக்சைகள் வங்;கிரோத்த அடைந்திருக்கிறார்கள்

உச்ச நீதிமன்ற நீதிபதி சனாதிபதியினால் தீர்மானிக்கப்படும் ஒரு நேரத்தில் ஓரிடத்தில் வைத்து அமரே தூக்கிலிடப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்ப்பு அளித்துள்ளார். மரண தண்டனை நிறைவேற்றப்படும் வரைக்கும் வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளார். அரசியல்வாதிகளால் போசிக்கப்பட்ட அமரேவின் அத்தியாயம் 2025 ஐப்பசி 07 உடன் நிறைவுக்கு வருகிறது. அமரே போன்றோரை தம் அரசியல் தேவைக்காகப் பயன்படுத்தியவர்கள் இன்று வாயே திறக்கமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை அமரே பாவித்து முடித்து வீசப்பட்ட ஒரு ருசுப் பேப்பர். (Hisham.M.Vlogஎன்னும் வலையொளிப் பதிவிலிருந்தும் 
https://asianmirror.lk/newshttps://www.adaderana.lk/news, https://www.dailymirror.lkhttps://www.newswire.lk, பதிவிலிருந்தும் தொகுக்கப்பட்டது)


Wednesday, October 8, 2025

ஒழித்த மனம்ரியும் ஒலுகல்லவின் கிடுக்குப்பிடியும்

ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர், 


ஒரே ஒரு நபர் மட்டும் வாய்த்திருந்தால் போதும் இலங்கைக் குற்றச் சாம்ராஜ்யத்தில் இத்தனை நாளாகத் திரைக்குப்பின்னால் மறைந்திருந்த அரசியல்வாதிகளின் சுயவிபரங்கள் எல்லாம் ஊடகங்கள் வழியாக வெளிவந்திருக்கும். அவர்தான் சம்பத் மனம்பேரி. மனம்பேரி ஒப்படைக்கப்பட வேண்டிய இடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.இனித்தான் ஆட்டம் ஆரம்பமாகப்போகின்றது. சம்பத் மனம்பேரியின் சரித்திரத்தைக் கடந்தவாரம் சுருக்கமாக இங்கு சொல்லியிருந்தோம். மனம்பேரி ஒரு காலத்தில் முன்னாள் சனாதிபதி மஹிந்த ராஜபக்சையின் பாதுகாப்புப்பிரிவில் பொலிஸ் கான்ஸ்டபிள். 50,000கிலோ ஐஸ் இரசாயண மாதிரிகள் அவருடைய வீட்டில் கண்டுபிடிக்கப்படும் வரை பொதுஜன பெருமுனவின் கட்சி உறுப்பினர். அவரை நாம் அங்குணுக்குல பலச பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் என்றும் முன்பு கூறியிருந்தோம். ஆனால் அவர் அங்குணுக்குல பலச பிரதேச சபையின் தேருதலில் பொதுஜன பெருமுன சார்பாகப்; போட்டியிட்டவராம். அவரது சகோதரர் பியல் மனம்பேரிதான் பிரதேச சபையின் உறுப்பினராய் இருந்தவராம் என்கிறார் நமால் ராஜபக்சை.பியல் மனம்பேரி 50,000கிலோ ஐஸ் இரசாயண மாதிரி விவகாரத்தில் முதல் சந்தேக நபர். ஐஸ் பூந்தோட்டம், சிறைவாசம் என்றவாறு விளக்கமறியலில் இப்போது இருக்கிறார்.

இனி சம்பத் மனம்பேரிக்கு இலங்கைக்குள் உருவாகி இருக்ககூடிய ஐஸ்லாந்தின் உத்தியோக பூர்வமற்ற சனாதிபதி என்றும் செல்லமாக நாமம் சூட்டலாம். ஐஸ் இரசாயண மாதிரிகளுக்காகப் புரட்டாதி 26ஆம்திகதி வரையிலும் பேரழிவு ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களை மறைத்து வைத்திருந்ததற்காக, ஐப்பசி 01திகதி வரையிலும் சம்பத் மனம்பேரி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 

கஜ்சாவின் வாக்குமூலம்

ராஜபக்சைக்களின் குற்றவியல் சரித்திரத்தை ஊடகவியலாளர் சமுதித்தவிடம் பிளந்து கொட்டிய கஜ்சா எனப்படும் அருண விதானகமகே அங்குணுக்குல பலச சிறையில் புழங்கும் போதைப் பொருளானது முழுப் பாக்கிஸ்தான் தேசத்திக்கும் பகிர்ந்;தளிக்கும் அளவுக்குத் தாராளமானது என்று சொல்லியிருந்தார். அந்த நேர்காணலில் சம்பத் மனம்பேரி போன்றோர் அம்பாந்தே}ட்ட மாவட்டத்தில் நிறுவிய இரத்தச் சரித்திரத்தை அழகாக விவரித்தும் இருந்தார் கஜ்சா. கஜ்சா இப்போது உயிரோடி இல்லை. இப்படிப் போதைப் பொருள்களும் குற்றங்களும் மலிந்துபோன சிறையில் மனம்பேரி போன்ற ஒரு கிரிமினல் அடைக்கப்படுவதானது பொலிஸ் விசாரணைகளில் ஒரு சறுக்கலை ஏற்படுத்தும் என்றும் மனம்பேரி ஒருவேளை சிறைக்குள்ளே கொல்லப்படலாம் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரையில் வலச்முல நீதவான நீதிமன்றம் சென்ற பொலிஸ் குழு, மனம்பேரியைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் 90நாள்கள் தடுத்து வைத்து மேல் மாகாணத்தில் வழக்குக் குற்றப்புலனாய்வு பிரிவில் விசாரிக்க விசேட அனுமதியை கோரியிருந்தது. அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது. மனம்பேரி தற்போது இலங்கையின் மிகப்பிரபல பொலிஸ் அதிகாரியான ஏ.எஸ்.பீ ரோஹான் ஒலுகல்லவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்.

இந்தோனேஷpயாவில் இருந்து கொண்டு முடிந்தால் என்னைக் கைது செய்துபாருங்கள் என்று இலங்கைப் பொலிஸ் திணைக்களத்துகு சவால்விட்ட ஹெகல் பத்திர பத்மே தலைமையிலான குழுவை அள்ளிக் கொண்டு இலங்கைக்கு வந்த அசகாய சூரன்தான் இந்த ரோஹான் ஒலுகல்ல. ஒலுகல்லவின் கிடுக்குப்பிடியில் ஹெகல் பத்திர பத்மே குழு கீரிப்பிள்ளையிடம் சிக்கிய கோழிபோல சின்னாபின்னமாகியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ரோஹான ஒலுகல்லவிற்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் பத்மே குழு வழங்கிக்கொண்டு இருக்கிறது. இதனால்தான் இலங்கையின் அரசியல் களம் இந்த அளவுக்கு அல்லோல கல்லோலமாயிருக்கிறது.

தொலைபேசி வேண்டும்


சில நாள்களுக்கு முன்னர் ஹெகல் பத்திர பத்மே, ரோஹான் ஒலுகல்லிடம் ஐயா எனக்கு ஒரு வெளிநாட்டு அழைப்பு எடுக்கவேண்டும் என்று சொல்ல, உடனே ஒலுகல்ல தனுடைய அலைபேசியைக் கொடுத்திருக்கிறார். யாருக்கோ அழைப்பு எடுத்த பத்வே, அண்ணா நான் உங்களுக்குத் தந்த ஆயுதங்களையும் ரீக்களையும் ஐயாவிடம் ஒப்படையுங்கள் என்று சொல்லியிருக்கிறார். இங்கே ரீP எனப்படுவது ரீ-56 துப்பாக்கி. இந்த உரையாடல் நடந்து சில நாள்களுக்குப்பின் புரட்டாதி 26ஆம் திகதி ஒலுகல்லவின் தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்திருக்கிறது. ஐயா, சாமான்கள் எல்லாம் அந்த இடத்தில் இருக்கின்றன. போய் எடுத்துகொள்ளுங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. உடனே அந்த இடத்துக்கு விரைந்தது பொலிஸ். அது பாலியகொட மீன் சந்தைக்கு அருகே ஓர் இடம். அந்த இடத்தில் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு ரீ-56வகைத் துப்பாக்கிகளும் 500 தோட்டாக்களும் இராணுவ சீருடையை ஒத்த சீருடைகளும் கைது செய்யும்போது பூட்டும் கைவிலங்கு ஒன்றும் மீட்கப்பட்டிருக்கின்றன. இந்த பயங்கரத்தின் பின்னணி என்ன? இராணுவச் சீருடை அணிந்து கொண்டு பெரிய அசம்பாவிதம் ஒன்றுக்குத் திட்டமிடப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணையை ஆரம்பித்திருக்கிறது சீஐடி.

ஒலுகல்லவிடம் ஒப்படைப்பு

ஒலுகல்லவிடம் மனம்பேரியை ஒப்படைப்பது என்பது இந்த விசாரணையின் போக்கை மேலும் செப்பன் செய்துவிடும். மனம்பேரி இலேசுபட்ட ஆள்கிடையாது. அவர் செய்திருக்கும் திருகுதாளங்கள் அப்படியானவை. நாடாளமன்றத்தில் நடந்த காரசாரமான விவாதம் ஒன்றின்போது பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, சம்பத் மனம்பேரி,  முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னண்டோவின் இணைப்புச் செயலாளராக இருந்தவர் என்று தெரிவித்திருந்தார்;. மனம்பேரி இராஜபக்சைக்கிளுக்கு மட்டும் அல்ல, ஜோன்ஸ்ரனுக்கும் சேவகம் செய்திருக்கிறார் என்பது இதன்மூலம் உறுதியாகின்றது. ஜோன்ஸ்ரன் குருநாகல் மாவட்டத்தில் 12அரசியல் கூட்டங்களை தவர்த்;துவிட்டு 300 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள மித்தனியவில் நடக்கக்கூடிய மனம்பேரியின் கூட்டத்துகு வந்ததாய் மார்புதட்டிக் கொண்டதன் பின்னனி என்னவென்று இப்போது தெளிவாகிறது. அந்த கூட்டத்தில் ஜோன்ஸ்ரன் மனம்பேரியை தாராளவாதி என்றும் பணத்தை வீசி எறிந்து செலவு செய்யும் கொடையாளி என்றும் புகழ்ந்து பாடியிருந்தார்.

மனம்பேரியின் தில்லுமுல்லு

சனாதிபதி மகிந்தவின் பாதுகாப்புப் பிரிவில் பொலிஸ் கான்ஸ்டபிளாக வாழ்க்கையை ஆரம்பித்த மனம்பேரி இப்படி முன்னேறியதெல்லாம் எப்படி. இத்தனை பெரும் செல்வத்தை மகிந்த ராஜபக்சையிடம் இருந்தபோது மனம்பேரி சம்பாதித்தாரா அல்லது ஜோன்ஸ்ரனின் இணைப்புச் செயலாளராக இருந்தபோது சம்பாதித்தாரா என்ற தெரியதில்லை. பொலிஸ் கான்ஸ்டபிள் அடையாள அட்டையைத் தவறுதலாகப் பயன்படுத்தி, கஞ்சா கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மனம்பேரி- கலா ரேடஸ் உரிமையாளர் சுவிஸ் கந்தராஜாவை கடத்தி கப்பம் கேட்டு கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மனம்பேரி - நாடாளமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மனம்பேரி- ஜோன்ஸ்ரனுக்கு எந்த மாதிரியான இணைப்புச் செயலாளராக இருந்தார் என்பதுதான் விடைதேடவேண்டிய வினா.

மனம்பேரியின் இராகுகாலங்களும் சனிகளும்


குருநாகலில் இருக்கும் சட்டத்தரணி ஒருவர் 327 கிலோமீற்றர் பயணம் செய்து வலச்புல நீதிமன்றத்தில் நடக்கும் ஒரு வழக்கில் ஆஜராகிய அதிசயம் ஒன்று உண்டு. சம்பத் மனம்பேரி வலச்புல நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போதெல்லாம் குருநாகலிலிருந்து ஒரு சட்டத்தரணி ஓடி வந்தார். எங்கோ ஒரு இடத்தில் நடக்கும் வழக்குக்கு, எங்கோ ஒரு மூலையிலிருந்து சட்டத்தரணி ஒருவர் படை எடுக்கிறார் என்றால் இந்த நெற்வோர்க்கின் பலத்தை சற்று யோசித்துபாருங்கள். உண்மையில் சம்பத் மனம்பேரி அத்தனை சீக்கிரத்தில் காவல் துறையிடம் சிக்குபவர் அல்லர். ரோஹான் ஒலுகல்ல தலைமையிலான குழு ஹெகல் பத்திர பத்மே கும்பலை அள்ளிக் கொண்டு வந்ததால்தான் மனம்பேரி சிக்கினார். மனம்பேரி இவர்களோடு நடத்திய வாட்சப் கூறுப் உரையாடல்கள் எல்லாம் அம்பலமாகியிருக்கின்றன. மனம்பேரியை ஒலுகல்லவிடம் ஒப்படைத்தி ருப்பதால் அவர் மனம்பேரியின் ஜாதகத்திலிருக்கும் இராகுகாலங்களையும் சனிகளையும் வட்டம் போட்டு பகிரங்கப்படுத்தி விடுவார் என்பது திண்ணம். ஏன்னென்றால் மனம்பேரி ஒலுகல்லவிடம் ஒப்படைக்கப்பட முன்னரே சில முக்கியமான தகவல்களை வெளியிட்டிருந்தார். அவருக்குப் பொலிசிலிருந்து தலைமறைவாய் இருக்க உதவிபுரிந்த தோளியையும் மின்சாரசபையில் வேலை செய்யும் தோளியின் கணவரையும் இனம் காட்டி இருந்தார்.

சிக்கிய சிட்டைகள்


அந்த வீட்டைப் பரிசோதித்தபோது தங்கம் பூசப்பட்ட ரீ-56துப்பாக்கிகளும் 115 தோட்டாக்களும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. அதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் துறை முகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஐஸ் இரசாயண மாதிரிகளை விடுவிக்கச் சுங்கத் திணைக்களத்துகு பணம் கட்டிய பின்னர் பெற்றுக்கொண்ட சிட்டைகளும் கொள்கலன்களை வெளியே எடுப்பதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களும்கூட சிக்கியிருத்தன. 


தனது சட்டதரணிகள் முகங்களில் கரி பூசிய மனம்பேரி 

மனம்பேரியின் சட்டதரணிகள் தம் தரப்பினருக்கும் இந்த ஐஸ் இரசாயண மாதிரிகளுக்கும் எந்த வித சம்பந்தமுமில்லை என்றும் இந்த கொள்கலன்கள் மனம்பேரியினுடையதல்ல என்றும் மனம்பேரி சும்மா யாருக்கோ உதவிக்கு அங்கே சென்றார் என்றும் புரட்டாதி 17ஆம் திகதி வலச்புல்ல நீதவான நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்கள். ஆனால் மனம்பேரி பொலிஸ் விசாரணைகளின் அமிலம் தாங்க முடியாமல் அனைத்தையும் ஒப்புக்கொண்டு தன்னுடைய சட்டத்தரணிகளின் முகத்திலேயே கரிபூசியிருந்தார். இப்போது கேள்வி என்னவென்றால் மனம்பேரி இக்கொள்கலன்களை சுங்க திணைக்களத்திடம் எப்படியானப் பொய்யைச் சொல்லி விடுவித்துக்கொண்டார் என்பதுதான். 

அமரிக்க உளவுத்துறைத் தகவல்

இக்கொள்கலன்களில் ஐஸ் மாதிரிகள் இருப்பதாக அமரிக்க உளவுத்துறை இலங்கைச் சுங்கத் திணைக்களத்திற்கு அறிவித்ததாகவும் இங்கே அவற்றைக் கண்டறியும் தொழினுட்பம் இல்லாததாலும் இந்த இக்கொள்கலன்கள் வெளியே சென்றதாகவும் சொல்லப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இலங்கைக்கான அமரிக்க தூதுவர் ஜூலி சாங் போதைப் பொருள்களைக் கண்டறியக்கூடி நவீன இயந்திரம் ஒன்றை இலங்கை அரசிடம் கையளித்திருந்தார். இது போன்ற போதைக் கடத்தல் பேர்வளிகள் சூட்சுமமாய் மறைத்துக் கொண்டுவரும் மாதிரிகளை அடையாளம் காணவேண்டு மென்ற நல்ல எண்ணமே எனலாம். எது எப்படியோ குறித்த கொள்கலன்கள் தொடர்பாக உரிய விசாரணைகள் நடிப்பதாக அமைச்சர் ஆனந்த விஜேபாலை அறுவித்திருக்கிறார்.

சஜித் பிரேமதாசவின் மௌன விரதம்

சும்மா முன்ணோட்டத்தின்போது இத்தனை விடயங்களைக்கொட்டிய சம்பத் மனம்பேரி, ஒலுகல்லவிடம் எல்லாவற்றையும் கொட்டப் போகிறார். இதெல்லாம் இப்படி இருக்க நாடெங்களும் போதைப் பொருள் மற்றும் பாதாள மாபியாவுக்கு எதிராக பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்க, எதிர்க்கட்சியோ இதை எதையும் இலட்சியம் செய்யாமல் இருக்கிறது. ஒரு சின்ன விடயத்தையும் பூதாகரமாக்கி நாடாள மன்றத்திலே கலாட்டா செய்யும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த விவகாரம் தொடர்பில் மௌன விரதம் இருக்கிறார் எனலாம். இதேவேளை உதே கம்மான்பில்ல நாட்டில் போதைப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் சந்தைப் பெறுமதி அப்படியே தான் இருப்பதாகவும் அரசு போதைமாபியாவுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டிருந்தால்  போதைப் பொருளினுடைய விலை இரண்டு மூன்று மடங்கு அதிகரித்து இளைஞர்கள் இளைஞிகள் அவலக்குரல் எழுப்பிக்கொண்டு பாதையில் விழ்ந்து கிடப்பார்கள் என்றும் அப்போ அவர்களை மக்கள் மருத்துவ மனைகளுக்கு தூக்கிச்சென்று இருப்பார்கள் என்றும் சொல்லுகிறார். என்ன ஒரு விளக்கம். குடிவரவு கட்டுபாட்டாளர் மாதிரி, கம்மன்பில்ல ஒரு குடுவரவு கட்டுபாட்டாளராய் இருக்க வேண்டிய ஒருவர் போலிருக்கிறது. காதல் நுளையாத மனமிலைமாதிரி, இந்த கம்மன்பில்ல கருத்துச் சொல்லாத இடம் இல்லை என்றாகிவிட்டது என்கிறது. 

முடிவு


இம்முறை ஒரு தேர்ந்த போதைப் பொருள் வியாபாரி வேடம் தாங்கி போதைப் பொருள் பாவிக்கும் சமூகத்தின் குரலாய் கம்மன்பில்ல கலக்கிக்கொண்டு இருக்கிறார். கம்மன்பில்ல தன்னுடைய தலைக்குள் இருக்கும் மூளையை தன்னுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது பயன்படுத்த வேண்டும் என்பது சமூக ஊடக நண்பர்கள் முன்வைக்கும் ஒரு கோரிக்கை. கம்மன்பில்ல வகையராக்கள் எதிர்க்கட்சிகள் என்னதான் ஒப்பாரி வைத்தாலும் இந்த ஒப்பரேசனை நிறுத்த எப்படிதான் சதி செய்தாலும் அனுர அரசுசின் அதிரடி முன்னோக்கிச் செல்லும் என்பதையே போதை மாப்பியாவிற்கு எதிரான சனாதிபதியினுடைய ஐ.நா சபை உரை உணர்த்தி நிற்கிறது. கடைசியாக சம்பத் மனம் பேரி ரோஹான் ஒலுகல்லவிடம் வாக்குமூலம் கொடுத்து முடியும்போது வெள்ளையும் சொல்லையுமாக இன்று கதைபேசி திரிபவர்களினுடைய கறுப்பு பக்கங்கள் நம்முன்னே அவலட்சனமாய்க் காட்சி கொடுக்கப்போகின்றது என்பது நிஜம்.  அப்போது எத்தனை பேர் சிறைக்குள் இருப்பார்கள் எத்தனை ஆயுதங்கள் கைப்பட்டப்பட்டிருக்கும் என்பதுதான் விறுவிறுப்பான இந்த படத்தின் கிளைமெக்ஸ் ஆக இருக்கப் போகுறது.(S.K. Kiruththikan  வலையொளிப் பதிவிலிருந்தும் https://hirunews.lk/ https://www.themorning.lk/https://www.adaderana.lk/ பதிவிலிருந்தும் தொகுக்கப்பட்டது)











Tuesday, September 30, 2025

கோடி பெற்ற கேடி

ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர், 

மனித வாழ்க்கையின் மகிழ்ச்சியான தர்ணங்களில் அன்புக்குரியவர்கள் பரிசில்கள் தருவார்கள். ஏன் இங்கு இது என எண்ணலாம். போகப்போகப் புரியும். அப்படிக் கோடிப் பெறுமதியானப் பரிசைப் பெற்ற கேடி ஒருவர் இருப்பதான செய்தியை அறியமுடிந்தது. அந்த பரிசை பெற்றவர் வேறு யாருமல்ல, நன்கு பரீசையமான சம்பத் மனம்பேரி என்னும் இலங்கையர்தான். 

யார் இந்த சம்பத் மனம்பேரி

சுருக்கமாகச் சொன்னால் ஒரு காலத்தில் முன்நாள் சனாதிபதி மஹிந்தஇராஜபக்சையின் பாதுகாப்புப் பிரிவில் கன்ஸ்டபிள். அத்துடன் முன்நாள் பிரதேசசபை உறுப்பினரும்கூட. இலங்கையின் 75மூ பாதாளஉலக நிழற் காரியங்களிலும் 50மூமேற்பட்ட போதை வினையோகத்திலும் சம்மந்தப்பட்டிருந்து இந்தோனேசியாவில் கைதான ஹெகல் பத்திர பத்மே, பக்கோசமனக் கும்பலுடன் மிகநெருக்கமான தொடர்புகளைப் பேணியவர். மனம்பேரிக்கு அந்த பரிசு வண்டியை வழங்கிய பாரி வள்ளல் யார் என்று நீங்கள் அறிய ஆவலாக இருக்கலாம். சம்பத் மனம்பேரி ஒரு வீடு கட்டினாராம். அந்த வீட்டினுடைய திறப்பு விழாவிற்குப் பல முக்கிய அரசியல்வாதிகள் சென்று விதம்விதமான பரிசுப் பொருள்களை வழங்கியிருக்கிறார்கள். மனம்பேரியினுடைய வீட்டுக்கு வருகை தந்திருந்த ஒரு பிரபல அரசியல் பிரமுகருடைய வாகனம் அங்கே உள்ளவர்களின் கண்களை உறுத்தியருக்கிறது.

மனம்பேரியின் வீட்டுக்குச் சமமான கவனக்குவிப்பை அந்த வாகனம் பெற்றுள்ளது. அந்த அளவுக்குச் சொகுசாய் இருந்திருக்கிறது அந்த வண்டி. இந்த அரசியல் பிரமுகர் பிரியாவிடைபெறும்போது, அந்த கார் சாவிவை மனம்பேரியிடம் கொடுத்து, வைத்துக்கொள்ளப்பா என்றாராம். இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனராம். இந்த அரசியல்வாதி யார் என்பதை காலமும் நிகழ்வுகளும் இன்னும் சில நாள்களில் சொல்லிவிடும். அப்போது நாம் உத்தியோகபூர்வமாக இதனை அறியத்தரலாம். மனம்பேரியின் தடாலடி கார்க் காட்சியுடன் இந்த கட்டுரையை ஆரம்பிப்பதன் நோக்கம் கிளைமக்சில் தெரிந்துவிடும். 

ஏ.எஸ்.பி. ரோஹான் ஒலுகல்ல விசாரணை

ஹெகல் பத்திர பத்மேயிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சம்பத் மனம்பேரி கைது செய்யப்பட்டுப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்படி விளக்கமறியலில் மேல்மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். மனம்போரியை விசாரிப்பது ஏ.எஸ்.பி. ரோஹான் ஒலுகல்ல. இன்று இலங்கையில் துணிச்சலான, மிடுக்கான, கீர்த்திமிகு பொலிஸ் அதிகாரிகளுள் ஒலுகல்லவும் ஒருவர். அவர்தான் இந்தோனேசியாவிலிருந்து ஹெகல் பத்திர பத்மே குழுவினரை அள்ளிக்கொண்டு இலங்கைக்குக் வந்தவர்.  

சரி ஆரம்பிக்கலாமா?| என்று எல்லா அட்டூளியங்களுடனும் கூட இருந்த தோஸ்தான சம்பத் மனம்பேரியின் ஷகைத்தொலைபேசிக்கு என்ன நடந்தது| என்றுதான் விசாரணை தொடங்கப்பட்டதாம். அண்மையில் மனம்பேரி பாவித்த கைத்தொலைபேசி பொலிசாரிடம் சிக்கியது. ஆனால் அதன் பின்புலம் மனம்பேரியிடம் இருந்தது அவர் வருடக்கணக்கில் பாவித்த தொலைபேசி அல்ல.  ஏ.எஸ்.பி. ரோஹான் ஒலுகல்ல ஷதொலைபேசிக்கு என்ன நடந்தது| என்று கேட்டு நின்றபோது, தான் வெள்ளவத்தையில் ஒரு ரயில் தண்டவாளத்தில் அதனை வைத்ததாகவும் ஒரு ரயில் அதன்மீது ஏறியதால் அது தூள்தூளாகச் சிதறியதாகவும் தனக்கு அந்த தொலைபேசியை வைத்த இடத்தைக் காட்ட முடியும் என்றும் மனம்பேரி சொல்லியிருக்கிறார். மித்தனியாவில் இருக்கும் மனம்பேரி குறிப்பாய் ஓர் இடத்தில் தங்கியிருக்கவில்லை என்பது பரிகிறது. இப்படிப் பல வருடங்களாய்ப் பாவித்த கைத்தொலைபேசி ஆயுளை இழந்துபோனதும், மித்தனியவில் இருக்கும் அதாவது மனம்பேரி பேரழிவாயுதங்களை மறைத்து வைக்க உதவிபுரிந்த அவருடையதோழி கொடுத்த கைத்தொலை பேசியைத்தான் பாவித்திருக்கிறார். அந்த கைத்தொலைபேசிதான் பொலிஸ் வசம் இருக்கின்றது. இதுதவிர மனம்பேரிபாவித்த நான்கு வங்கி அட்டைகளும் சுங்கத் திணைக்களத் திலிருந்த ஐஸ் இரசாயண மாதிரிகளை விடுவிக்கச் சமர்ப்பித்த ஆவணங்களும் அவற்றுக்குக் கட்டிய சிட்டைகளும் மனம்பேரியின் தோழிவீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன. மனம்பேரிக்குப் பாதுகாப்பும் தங்குமிடமும் கொடுத்ததுகாக மின்சாரசபையில் வேலைபார்த்து வந்த ஒருவரைக் கைது செய்தது பொலிஸ்.

சிக்கிய தொலைபேசிகள்  

மனம்பேரியின் கைதும் இன்று அவர் பொலிஸ் அதிகாரி ஒலுகல்லவிடம் ஒப்படைக்கப்பட்டதால் ஏற்பட்டிருக்கும் அதிர்வலைகளும் எக்கச்சக்கம். நாம் மிச்சம் மீதி வைக்காமல் இந்தப்பாதாள சாம்பராச்சியத்தை ஒழிப்போம். அனைவரையும் சட்டத்தின் பிடியில் நிறுத்துவோம் என்கிறார் பொது மக்கள்பாதுகாப்பு மற்றும் நாடாளமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால. இந்த விசாரணைகள் வேகம் எடுத்திருப்பதற்கும் பலகைதுகள் நடப்பதற்கும் ஹெகல் பத்திர பத்மே குழுவினரிடமிருந்த 32 கையடக்கத் தொலைபேசிகள்தான் காரணமாம். இதில் சில தொலைபேசிகள் உயிர்ப்புடன் இருந்தன. சிலவற்றில்  உரையாடல்கள் அழிக்கப்பட்டு இருந்தன. மனம்பேரியும் ஹெகல் பத்தர பத்மே குழுவும் நடத்திய வாட்சப்குழு உரையாடல்கள் எல்லாம் வெட்டவெளிச்சமானதும் இத்தொலைபேசிகளால்தான்.


மனம்பேரியினுடைய வீட்டில் புதைக்கப்பட்டிருந்த 50,000 கிலோ ஐஸ் இரசாயண மாதிரிகளை துறைமுகத்துகுச் சென்று விடுவிக்குமாறு பக்கோசமான் இந்தோனேசியாவிலிருந்து அனுப்பிய தகவல்கள் எல்லாம் ஆதாரங்களுடன் வசமாய் சிக்கியதும் இதே தொலைபேசிகளால்தான். இந்தோனேசியாவில் ஒரு ஹோட்டேலில் தங்கியிருந்த ஹெகல் பத்திர பத்மே தலைமையிலான ஒரு குழு ஹோட்டேலை காலி செய்துவிட்டு அவசர அவசரமாய்த் தப்பி ஓடியபோது, ரோஹான் ஒலுகல்லவின் அணியும் இந்தோனேசியாவின் குற்றப்புலனாய்வுப் பிரிவிநரும் 70கி.மீ துரத்திச் சென்றுதான் மடக்கிப் பிடித்திருக்கின்றார்கள்.  

காவற்துறைக்குள் கறுப்பு ஆடு 

ஹோட்டேலிலேயே கைது செய்து அழைத்து வர வேண்டிய இந்த விவகாரத்தை அனாவசியமாக சிக்கலாக்கியது யார் என்ற கேள்விக்குப் பதில் ஒரு பொலிஸ் அதிகாரி என்பதுதான். ரோஹான் ஒலுகல்ல உங்களைத் தேடி வந்துகொண்டு இருக்கிறார் என்று பொலிஸ் திணைக்களத்திருந்த ஒரு கறுப்பு ஆடுதான் போட்டுக் கொடுத்திருக்கிறது. இங்கே ஒரு முக்கிய விடயத்தைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. ரோஹான் ஒலுகல்லவின் இந்தோனேசியா ஒப்பரேன் விரல் விட்டு எண்ணக் கூடி ஒரு சில பொலிஸ் உயர் ஆதிகாரிகள் மட்டுமே அறிந்திருந்த ஒன்று. ஆனால் தருண் எனப்படும் இலங்கை அரசு இப்போது தேடிக்கொண்டிருக்கும் - இப்போது வெளிநாடு ஒன்றில் வாழும் பாதாள உலகக் கேடியிடம் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார் குறித்த பொலிஸ் அதிகாரி. அத்தோடு நின்றுவிடாமல் இன்ரப்போல் வழியாக இவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்யப் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு ஆணை தொடர்பான ஆவணங்களை அனுப்பியிருக்கிறார் குறித்த பொலிஸ் அதிகாரி. இவை அனைத்தும் ஹெகல் பத்திர பத்மே தொலைபேசியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறன. இந்த அளவுக்குத் தைரியமாய் உள்வீட்டு இரகசியங்களை எல்லாம் அனுப்பிய பொலிஸ் அதிகாரியும் இந்தோனேசியாவில் சிக்கிய பாதாளக் கோஷ;டியும் இப்படி ஆகிவிடும் என்று என்றைக்குமே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

சம்பத் மனம்பேரி, ஒலுகல்லவிடம் வழங்கிய வாக்குமூலம்

அதில் தாம் இதே தருணின் துணையுடன் படகுமூலம் இந்தியாவுடாக வேறோர் நாட்டுக்குச் செல்ல இருந்ததாகவும் சொல்லியிருந்தார். இந்தோனேசியாவில் இந்தக்கும்பல் கைதுசெய்யப்பட்ட செய்தி வந்ததும் மனம்பேரி குறித்தக் கொள்கலன்களை அவசரம் அவசரமாகப் புதைக்கத் தொடங்கினார். இந்த கைதுகள் இலங்கை அரசியலின் ஒரு திருப்பு முனை என்றும் சொல்லலாம். இல்லாவிட்டால் மனம்பேரி என்ற நபரும் மித்தனியவில் வாழ்ந்து மடியும் சாமானியமான ஒருவர்போல் கடைசிவரை இருந்திருக்கும். வெள்ளை வெளேர் என்ற ஆடையில் புனிதவேடம் போடும் எட்டப்பர்களுடைய அசுத்தங்களும் காலத்தோடு கரைந்துபோயிருக்கும். இந்த நிகழ்வுகள் எல்லாம் உணர்த்துவது என்ன?;: பொலிஸ் கறுப்பு ஆடு கம்பஹாவில் போதை மாபியாவுடன் சம்பந்தப்பட்ட ஒரு பொலிஸ் அதிகாரி கைதாகிறார். மித்தனியவில் நடந்த ஒரு கொலைக்கு மற்றொரு பொலிஸ் அதிகாரி கைதாகிறார். இந்த வருடத்தில் இதுவரை போதைவஸ்துடன் தொடர்புபட்டிருந்தக் குற்றங்களுக்காக 68பொலிஸ் அதிகரிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.இதெல்லாம் இலங்கையில் உத்தியோகப்பூர்வ அரசுக்கு மேலதிகமாய் இயங்கிய பாதாளவுலக அரசின் குரூர முகத்தைத்தான் துள்ளியமாய் கட்டம் போட்டுக் காட்டுகிறது. 

சனாதிபதி அனுர குமார திசாநாயக்காவின் உரை

சனாதிபதி அனுர குமார திசாநாயக்கா நியுயோக்கில் வாழும் இலங்கையர்களை அண்மையில் சந்தித்தபோது ஆற்றிய உரை மிக முக்கியமான ஒன்று. அவர் இந்தப் பாதாள அரசின் பயங்கரத்தை விபரித்துச் சொல்லியிருந்தார். பேர்போன கிருமினல் ஒருவருக்கு மூன்று பாஸ்போட்டுகளை செய்து கொடுத்திருக்கிறார்கள். எப்படி இது சாத்தியம் என்று நீங்கள் நினைக்கலாம். புறக்கோட்டையில் புத்தகம் விற்கும் ஒருவரை அழைத்துவந்து குறித்த கிருமினலுக்குப் பதிலாகக் கை விரல் அடையாளத்தைப் பதித்திருக்கிறார்கள். நீதிமன்ற விசாரணைகளின்போது குறித்த குடிவரவு அதிகாரிகள் சொன்னது: குற்றவாளியின் முகமும் இந்தப் புத்தகக் கடைகாரரின் முகமும் ஒரே மாதிரி இருந்தது என்று. இதேபோல 2008ஆண்டில் தயாரிக்கப்பட்ட கார் ஒன்றை 2003ஆண்டுக்குப் பதிவுசெய்கிறது மோட்டார்த் திணைக்களம். கல்கிசையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் வு-56 துப்பாக்கிகளைக் களவாடி விற்றுவிட்டு நாட்டை விட்டுத் தப்பி ஓடி இருக்கிறார்.

ஒரு பாதால உலக தாதா தன்னை தடுப்புக் காவலிலிருந்து சிறைக்கு மாற்றப் போவதாகவும், இனி தான் சுதந்திர மனிதன் என்றும் சொல்லுகிறார். அதாவது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும்போது தன்னால் ஒன்றும் செய்யமுடியாது என்றும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டால் தன்னால் செய்யமுடியாதது எதுவுமில்லை என்றுதான் அர்த்தம். மாத்தறை சிறைச்சாலையில் புனர் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள இருந்ததால் அங்குணுக்குள்ள பலச சிறைக்கு மாற்றப்பட்டனர். அப்போது மாத்தறைச் சிறைச்சாலையில் இருந்த பொருள்களைக் கண்டால் ஆச்சரியப்படுவீர்கள். ஏராளமான கைத்தொலைபேசிகள், சாஜர்கள், ரவுட்டர்களோடு பொலிசார் கைதுசெய்தால் மாட்டும் ஏழு கைவிலங்குகள். இதை யாரிடம் போய்ச்சொல்வது. சிறைக் கைதிகள் கை விலங்குகள் வைத்திருக்கும் அதிசயத்தைக் கண்டிருக்கிறீர்களா? இப்படித்தான் இராணுவ முகாமொன்றிலிருந்து வு-56 துப்பாக்கிகள் 73 கடந்தகாலத்தில் மாயமாகின. இவற்றில் 38 கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் 35துப்பாக்கிகளைக் கண்டுபிடிக்கப்பட வேண்டியிருக்கின்றன.

கமாண்டோ ஒருவர் ஓர் இலட்சம் தோட்டாக்களைப் பாதால உலகுக்குக் களவாக விற்பதற்குப் பேரம் பேசியிருக்கிறார். 350 விற்றபோது கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர்களுக்கு என்று பாஸ்போட் பெறுவதற்கு இமிக்ரேசன் அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆயுதங்கள் வழங்கக் காவல்துறைகளில் ஆள்கள் இருக்கிறார்கள். வாகனங்களைப் பதிவுசெய்து கொடுக்க மோட்டார்த் திணைக்களத்தில் அதிகாரிகள் இருக்கிறார்கள். சில காலம் இப்படியே நாடு போயிருந்தால் உத்தியோகப் பூர்வ அரசு கலைந்துபோய் இந்தப்பாதாள உலக அரசே ஆண்டிருக்கும். அவர்களின் நீதிமன்றங்களில்தான் வழக்குகளும் நடந்திருக்கும். நாம் இதை மாற்றிக் கொண்டிருக்கிறோம். இப்போது இவர்களின் இந்த காட்டு தர்பார் ஆட்டம் கண்டு இருக்கிறது. இன்னும் தோண்டத் தோண்ட இந்த நாசகாரத்தினுடைய பருமன் வெளிப்படும் என்று பலத்தக் கரகோசத்துகு மத்தில் சொல்லிக்கொண்டு போனார் சனாதிபதி அனுர குமார திசாநாயக்கா. உண்மையில் இவர்கள் கறுப்புப் பொருளாதாரம் ஒன்றை உருவாக்கினார்கள். அரசியல்வாதிகளுக்குக் கோடிகளில்பணம் வழங்கினார்கள்.சில அரசியல்வாதிகள் இவர்களின் வீடுகளுக்குப் போய் வரி வசூலிப்பதுபோல மாதாமாதம் பணம் பெற்றிருக்கிறார்கள். முக்கியமான அரச திணைக்களங்களில் தமக்குத் தோதான சில அதிகாரிகளுடன் நட்புப் பேணிக் கொண்டு தாராளமாய் இலஞ்சமும் கொடுத்திருக்கிறார்கள். 


முடிவு

மனம் பேரியின் கார் பற்றி ஆரம்பத்தில் சொன்னோம் அல்லவா இவ்வளவு பெரிய கறுப்பு இராச்சியத்தில் மனம்பேரி போன்ற ஒருவருக்கு அரசியல் பிரமுகர்கள் நவீன ஹெலிக்கொப்டர் ஒன்றை வழங்கி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. இந்த கறுப்பு இராச்சியத்தை ஒரே நாளில் அழித்து ஒழிக்க முடியாது. ஆனால் ரோஹான் ஒலுகல்ல, ஷhனி அபேசேகர போன்ற மிகச்சிறந்த பொலிஸ் அதிகாரிகளும் ஒட்டுமத்த அரசு முறைமையும் இந்த வேகத்தில் இயங்கினால் இந்த பாதாள அரசின் எச்சசொச்சங்கள் கழை எடுக்கப்பட்டு இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஓர் அரசு மட்டுமே எஞ்சி இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை உண்டு. ரோஹான் ஒலுகல்ல, ஷhனி அபேசேகர அவர்களின் அடுத்த அதிரடி ஆட்டம் சனத் ஜெயசூரியா களுவித்தாரணவின் 96யின் அதிரடி ஆட்டத்தை மீண்டும் நிற்சயம் நினைவுபடுத்தும். ( compiled from S.K. Kiruththikan tiynahspg; gjptpypUe;Jk; https://tamilwin.com, https://thaainews.com, https://www.dailymirror.lk,  https://island.lk, https://www.newswire.lk, https://adaderana.lk/ https://www.newsfirst.lk,https://colombotimes.lk,

Wednesday, September 24, 2025

கோட்டாபாய இராஜபக்ஸவினால் தூக்கி எறியப்பட்ட ஷhனி அபேசேகர மஹிந்தவின் மாளிகைக்குள் நுழைந்த கதை

 கோட்டாபாய இராஜபக்ஸவினால் தூக்கி எறியப்பட்ட ஷhனி அபேசேகர மஹிந்தவின் மாளிகைக்குள் நுழைந்த கதை

ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர், 

ஷhனி அபேசேகரவைக் கைது செய்தார்கள். சிறையில் அடைத்தார்கள், ஓய்வுதியத்தைப் பறித்தார்கள். பதவி இறக்கினார்கள். இலங்கையின் மிகத் திறமையானப் புலனாய்வு அதிகாரி ஒரு குப்பையைப்போல் தூக்கி எறியப்பட்டார்.

இவ்வாறு கொடுமைகள் புரிந்ததன்மூலம் இராஜபக்சைகளின் சாம்ராஜியம், ஷhனி அபேசேகர (ளூயni யுடிநலளநமயசய) என்ற அத்தியாயத்தை முற்றிலுமாக அழித்து விட்டதாக நினைத்தது. ஆனால் எந்த இராஜபக்சைக்கள் ஷhனி அபேசேகர அவர்களைப் பழிவாங்கினார்களோ அதே இராஜபக்சைக்களின் கதையை முடிக்க அதே ஷhனி அபேசேகர திரும்பி வந்திருக்கிறார். திகில் நிறைந்த இந்தக்கதையை ஆரம்பிக்கலாம். மீண்டும் அதிகாரத்திற்கு வந்திருக்கக் கூடிய ஷhனி அபேசேகரவிற்கு முன்னால் இரண்டு பிரமாண்டமான சவால்கள் காத்திருக்கின்றன:-

காத்திருக்கும் சவால்கள்:-

முதலாவது: இந்துனேசியாவில் கைதாகி இப்போது ஊஐனு காவலில் இருக்கும் பாதாள உலகக்கும்பல் - அரசியல் வாதிகளினுடைய ஏவல் நாய்களாக இருந்த இவர்கள் - இப்போது தாங்கள் யாருக்காக வேலைசெய்தோம் என்ற உண்மைகளைக் கக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்களின் வாக்குமூலம் இலங்கையின் பழம்பெரும் தலைகளின் முகத்திரையைக் கிழிக்கப்போகிறது. இவர்களோடு சம்பந்தம் வைத்திருந்த அரசியல் வாதிகளும் ஓடி ஒழிந்துகொண்டு இருப்பதால் இவர்கள் தமக்குள்ளேயே அடித்துச் செத்துகொண்டு இருக்கிறார்கள். மொத்தமாய் எல்லாரையும் கூண்டோடு அள்ள ஊஐனு விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றது. 

யார் இந்த மௌலானா:-

இரண்டாவது: இதைவிட பெரிய சவால்: ஈஸ்ரர் குண்டுத் தாக்குதலின் முக்கிய சாட்சியான ஹசீர் அசாத் மௌலானாவை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவருவது. 270 அப்பாவிகளின் உயிரைப் பறித்த ஈஸ்ரர்த் தாக்குதல் ஓர் அரசியல் சதி என்கிற மௌலானாவின் வாக்குமூலம் இலங்கையின் சரித்திரத்தையே மாற்றக்கூடியது. அசாத் மௌலானா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், இப்போது பல்வேறு சட்டச்சாட்டுகளின் நிமிதம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருப்பவருமான பிள்ளையானின் இணைப்புச் செயலாளராயிருந்தவர். மௌலானா இலங்கையில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக்கூறி சுவிஸ்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கிறார். அரசியல் தஞ்சம் கோரியிருப்பவரினுடைய கோரிக்கை நிறைவேற்றப்பட்டு வழங்கப்படும் பாஸ்போட்டில் அச்சுறுத்தல் உள்ள நாட்டைத் தவிர மற்ற நாடுகளுக்குச் செல்ல முடியும். ஆகவே சற்றுச்சிக்கலான விவகாரம் இது. மௌலானாவை மீண்டும் எந்த வழியிலேயேனும் நாட்டுக்குள் கொண்டுவரும் ஏற்பாடுகளையும் ஊஐனு செய்து கொண்டிருக்கிறது. மௌலானா எப்படியும் அழைத்து வரப்படுவார் என்று அமைச்சர் விமல் இரத்நாயக்கவும் கடந்த வாரம் அறிவித்திருந்தார். 

ஷhனி அபேசேகரவின் திரும்பி வருகை:-

ஷhனி அபேசேகர் திரும்பி வந்திருக்கிறார். ஆனால் அவருடைய முதல் அடி எங்கே விழுந்திருக்கிறது தெரியுமா? இராஜேபக்சைக்களின் கோட்டையிலேயே விழுந்திருக்கிறது. மஹிந்த இராஜேபக்சையினுடைய ஏக்கர் கணக்கான ஆடம்பரபங்களா இனி இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஊஐனுக்கு உடையதாக மாறியிருக்கிறது. இது ஒரு மிக தெளிவான செய்தி. இனி உங்களின் கோட்டைக்குள் இருந்தே உங்களை வேட்டையாடுவோம் என்கிற ஒரு ஸ்மார்ட்டான இராஜதந்திரம். ஆனால் ஒரு சாதாரண மனிதரால் இப்படி இவ்வளவு பெரிய சத்திகளை எதிர்க்க முடிகிறது. கையே வைக்க முடியாது என்று இலங்கையில் உள்ள 99மூ நம்பப்பட்ட முன்னாள் சனாதிபதி ரணிலின் மீதும் கை வைத்தார். சிறையிலடைக்கப்பட மூளையானவர் ஷhனி அபேசேகர எனலாம். எனவே முதல் பந்திலிருந்தே சனத் ஜெயசூரியாவின் சிக்சர்களை நாம் மிக நீண்ட நாள்களுக்குப் பின்பு கண்டுகளிக்கலாம் போலவும். சனத்தாட்டம் சல்லடைபோடும். போடவேண்டும்.

யார் இந்த ஷhனி அபேசேகர:-

இலங்கை பொலீஸ் திணைக்களத்தில் ஹொலக் ஹோம்ஸ் என்று அழைக்கப்படும் கீர்த்திமிகு பொலீஸ் அதிகாரியான ஷhனி அபேசேகர, அனுர குமார திசாநாயக்கா சனாதிபதி அவர்களால் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் பொலீஸ் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவருக்குக் குற்றப் புலனாய்வு, பகுப்பாய்வு மற்றும் குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதில் மிகத்திறன்படத் தன்னுடைய பணியைமுடித்த ஷhனி அபேசேகர மீண்டும் தனக்குத் தோதான காக்கிச் சட்டையைப் போட்டுக்கொண்டு ஊஐனு பணிப்பாளராய் அனுர குமார திசாநாயக்காவுக்குச் சல்லூட் அடித்து நடந்தபோது ஷhனி அபேசேகரவின் இரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விசிலடித்து கொண்டாடினார்கள். ஷhனி அபேசேகர திரைப்படக் கதாப்பாத்திரம் அல்ல. அவர் நிஜ சாதனையாளர்;.

1986ஆண்டு சப்;பின்ஸ்பெக்டராய் பொலீஸ் திணைக்களத்தில் சேர்ந்த ஷhனி அபேசேகர பொலீஸ் விசேட அதிரடிப்படையிலும் சனாதிபதி பாதுகாப்புப் படையிலும் பணிபுரிந்தார். அவரின் துணிச்சல்மிகு சேவை அவரை 1999ஆண்டு ஊஐனுக்கு உள்ளீர்க்க வைத்தது. ஷhனி அபேசேகர என்றால் எம் நாட்டு மக்களுக்கு யார் என்று புரிய வைக்கும் அளவுக்கு அடுத்து வரும் குற்றங்களும் சம்பவங்களும் விசாரணைகளும் அமைந்தன. 

சட்டண பத்திரிகையின் எழுத்து:-

ஷhனி அபேசேகர 1999ஆண்டு முதல் இலங்கையில் மெல்ல பிரபல்யமடையத் தொடங்கினர். அப்போதைய சனாதிபதி சந்திரிக்காவுக்கும் நடிகர் சனத் குணத்திலக்காவுக்கும் தொடர்பு இருப்பதாக அப்போது சிங்கள வாசகர்கள் மத்தியில் பிரபலமான விடயத்தைச் சட்டண பத்திரிகை எழுதியது. அந்நாளில் சனத் குணத்திலக்காதான் சந்திரிக்காவுக்கு எல்லாமே. மனேஜர், இணைப்புச் செயலாளர், பி.ஏ மாதிரி. சட்டண சந்திரிக்கா அரசினுடைய ஒவ்வொரு ஊழலையும் அச்சமின்றி எழுதித் தள்ளியது. அவுஸ்ரேலியாவில் இருக்கும் குருபரன் என்ற கோடிஸ்வரர் சனல்-9என்ற தொலைக்காட்சி சேவையை இலங்கையில் தொடங்க சனத் குணத்திலக்காவை அணுகியதாகவும் அனுமதிப்பத்திரம் பெற்றுத்தந்தால் பதிலுக்கு 20மில்லியன் டொலர் இலஞ்சம் தர குருவரன் ஒப்புக் கொண்டதாகவும் சந்திரிக்காவும் அத்தொலைக்காட்சி சேவையில் காமினி இராஜனாயகம் என்ற பினாமி பெயரில் பங்குதாரராக விருப்பியதாகவும் சட்டண அப்போது எழுதியது. இதன் விழைவுகள் மிகப் பயங்கரமாக அமைந்தன.

கொலைகளும்  ஷhனி அபேசேகர மேற்கொண்ட நடவடிக்கைகளும்  

பர்த்தகானே சஞ்சிவ என்ற அரச அனுசரணை பெற்ற அந்நாளின் பாதாள உலக தாதவால்  சட்டண பத்திரிகை ஆசிரயர் ரோஹன குமார படுகொலை செய்யப்பட்டார். பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய அந்த படுகொலையின் சூத்திரதாரி பத்தகானே சஞ்சிவ என்று, இளம் உப பொலீஸ் பரிசோதகரான ஷhனி அபேசேகர கண்டுபிடித்தபோது உடனே விசாரணை நிறுத்தப்பட்டது. இதே போல ஒன்றுதான் 2005ஆண்டு ராஜிகிரிய ரோயல் பார்க்கில் நடந்த சுவீடன் யுவதியான ஈமான் யோன்ஸ் படுகொலை. சாட்சியே இல்லாமல் நடந்தேறிய அந்த பயங்கரத்தினுடைய பின்னணியை விசாரித்தவரும் ஷhனி அபேசேகர தான். ஆங்காங்கே பதிந்திருந்த கைரேகைகள் மூலம் குற்றவாளி யூட் மஹாவின் கையில் விலங்கைப் பூட்டினார் ஷhனி அபேசேகர. பம்பலபிட்டி கோடிஸ்வர வர்த்தகர் சியாம் படுகொலையில் னு.ஐ.பு.வாஸ் குணவர்த்தனவை உள்ளேதள்ளிய பெருமையும் ஷhனி அபேசேகரவுக்கே. சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமத்துங்கவின் கொலை, நாடாளமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் கொலை, அங்குலானய இரட்டை கொலை, உடத்தலவின முஸ்லீம் இளைஞர்கள் கொலை, பார்தலக்ஸ்மன் கொலை, 11தமிழ் மாணவர்கள் கொலை - 2007-2009காலத்தில்11 இளைஞர்கள் கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், றக்கி வீரர் வசீன் தாஜுதீன் கொலை, குடிதண்ணீர் கேட்டுப் போராடிய ரத்துப் பஸ்வல மக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் பின்னணி, ஊடகவியலாளர்களான போத்தல ஜாயந்த, பிறகீத் எக்யெலிகொடா மற்றும் கேய்த் நோயர் போன்றோரின் மீதான தாக்குதல்கள் என்று  இலங்கையினை ஒரு பாதாள தேசமாக்கிய அத்தனை குற்றங்களின் பையில்களையும் ஷhனி அபேசேகர திறந்தவைத்தார். 

வெளியே போ கழுதை| என்ற ரணிலின் கோசம்:-

2015-2019கால ஆட்சியில் ஷhனி அபேசேகர ஊஐனுபணிப்பாளராய் நியமிக்கப்பட்ட போதிலும் அன்றைய ஆட்சியாளர்கள் கடமையைச் செய்ய ஒத்துழைக்கவில்லை. மத்திய வங்கி கொள்ளை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளப் போனபோது ஷவெளியே போ கழுதை| என்று பிரதமர் ரணிலினால் விரட்டப்பட்டார் ஷhனி அபேசேகர. இப்படித்தான் அன்று கள்ளன் பிடிப்பதாய் ஆட்சியைக்கோரிய கோமாளிகளின் தர்பார் அமைந்தது.

கோட்டாபாய இராஜபக்ஸ சனாதிபதியும் அவரது செயலும்:- 

ஷhனி அபேசேகர 2019ஆண்டு நடந்த ஈஸ்ரர் குண்டுவெடிப்பானது அரசியல் அதிகாரத்தை மேற்கொள்வதற்காக நடத்தப்பட்ட ஒரு சதி வலையா என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தார். கோட்டாபாய தேருதலில் வெற்றிகொண்டவுடன் அவர்களுக்கு எதிராக விசாரணைகள் நடாத்திய பொலீஸ் உயர் அதிகாரிகள் தூக்கிப் பந்தாடப்பட்டார்கள். கோட்டாபாய சனாதிபதியாகி பதவிப்பிரமானம் எடுத்ததும் பிரதமரையும் கபினெட்டையும் நியமிப்பதை ஒத்திப் போட்டுவிட்டு செய்த முதல் காரியமே ஷhனி அபேசேகரவை அப்படியே தூக்கிக் காலிக்கு இடம்மாற்றம் செய்து காலி செய்தார். ஆயினும் ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகளை மிகவேகமாகப் இனங்கண்டு கைதுசெய்தமைக்காக சர்வதேசரீதியில் ஷhனி அபேசேகர புகழப்பட்டார். இன்ரப்போலிடமிருந்தும் புகழினைப் பெற்றுக்கொண்டார் என்பதும் இங்கு குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்

கெத்தாய் இருந்த ஷhனி அபேசேகர கடிதம் பிரிக்கும் ஒரு பியோன் தரத்துகு மிதித்து எறியப்பட்டார். ஷhனி அபேசேகர மற்றும் சி.ஐ.டி அதிகாரிகளின் இடமாற்றங்களால் ஈஸ்ரர் தாக்குதல் உட்பட மொத்தக் குற்ற விசாரணைகளும் நிலைகுலைந்த போயின. அனைத்து வழக்குகளிலுமிருந்து இராஜபக்சைகளும் எடுப்பிடிகளும் விடுதலையானார்கள். வேறுவழியின்றி பணி ஓய்வு பெற்றார் ஷhனி அபேசேகர. அனாலும் கோட்டாபாய விடுவதாகவில்லை. வாஸ் குணவர்தனவின் கேசை மையமாக வைத்து சேவையிடை நிறுத்தம். மூன்று வருடம், ஆறுமாதம், ஓய்வுதியம் இடை நிறுத்தம், பத்துமாதச்சிறை என்று தொடந்து பழிவாங்கல்கள். கோட்டாபாய மக்கள் எழுச்சியால் தப்பி ஓடியபிறகு, ரணில் சனாதிபதியான போதும் ஷhனி அபேசேகர விடயத்தில் பாராமுகமாகவே இருந்தார். அதுமட்டமல்ல கோட்டாபாய காலத்தில் மூடப்பட்ட எந்த ஒரு பையிலும் திறக்கப்படவே இல்லை. ரணில் மொத்தத்தில் இராஜபக்சைகளின் ஏஜன்ராய்ப்பணி செய்துவிட்டு, சனாதிபதித் தேருதலில் தோற்றுப்போனார். கடைசியில் பூமரம் மீண்டும் ஷhனி அபேசேகர பக்கம் வந்தது.

ஷhனி அபேசேகர அவர்களின் அதிரடி முடிவு:-

யாரோடு சேர்ந்தால் கணக்குத் தீர்க்கமுடியுமோ அவர்களோடு சேரத் தீர்மானித்தார் ஷhனி அபேசேகர. சனாதிபதி தேருதலின் ஓய்வு பெற்ற பொலீஸ் அதிகாரிகள் என்ற விசேட மாநாட்டைக் கூட்டி அதற்குத் தலைமையும் தாங்கி, அனுரவிற்குத் ஆதரவளித்தார் ஷhனி அபேசேகர. அவர் எந்த ஒரு தலைவருடனும் சமரசம் செய்து கொண்டதில்லை. இது ஷhனி அபேசேகர அவர்களின் முறை. இனித்தானே பார்க்போறாய் காலியின் ஆட்டத்தை என்ற விறுவிறுப்பு இரகம் அந்தமுறை எந்த இராஜபக்சைக்களால் ஷhனி அபேசேகர பழிவாங்கப்பட்டாரோ அந்த இராஜபக்சைக்கள் நாடாளமன்றத் தேருதல் போட்டியிட முடியாத அளவுக்கு ஓடி ஒழிந்துகொண்டு இருக்கும் நிலையில் ஷhனி அபேசேகர வேலையை ஆரம்பித்திருக்கிறார். என்ன ஒரு பவபுல்லான கர்ம வினை. இந்தத் தடவை எந்த அரசியல் தலையீடும் இருக்காது. ஷhனி அபேசேகர இராஜபக்சைகளுக்குச் சவால் விடத்தயாராகிக் கொண்டிருக்கிறார் என்பதையே அவரது நடவடிக்கைகள் கட்டியம் கூறுகின்றன. 

முடிவு:

இராஜபக்சைக்கள் பிறைவேட் லிமிடட். ரணில் உட்பட 90மூ அரசியல்வாதிகளை ஈரேழு ஜென்மத்திற்கும் பகைத்து கொள்ளவேண்டிய நிற்பந்தம் ஷhனி அபேசேகரவுக்கும் அவர் வழியில் செல்லப்போகும் நேர்மையான பொலீஸ் அதிகாரிகளுக்கும் ஏற்படலாம். ஷhனி அபேசேகரவின்  சேவையில் இதுதெல்லாம் புதிய விடயம் அல்ல. ஷhனி அபேசேகர எப்படி அடித்தாடப்போகிறர் என்பதை அவருடைய அடுத்தடுத்த நகர்வுகள் தீர்மானிக்கும். (S.K. Kiruththikan வலையொளிப் பதிவிலிருந்தும் www.lankaenews.com , Daily FT, News 1st  பதிவிலிருந்தும் தொகுக்கப்பட்டது)



Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff