Sunday, June 7, 2020

அறிவுக்கும் ஆர்வத்திற்கும் தீனிபோடும் வன்செய்தி மற்றும் மென் செய்திகள் எழுதும் பாணிகள்

ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை




வன்செய்தி மற்றும் மென்செய்திகளுக்கு இடையில் எழுத்துப்பாணியில் வித்தியாசத்தை அறிந்துகொள்வது ஓர் ஊடகவியலாளருக்கு அத்தியவசிய மானது. இச்செய்திகள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்டு எழுதப்ப டுகின்றது என்பதையும், வெவ்வேறு செய்தி ஊடகங்கள் எந்த வகையான செய்திகளை வெளியிட எத்தனிக்கின்றன என்பதையும் வைத்து இந்த பாணிகளை உணரமுடியும். இவ்வாறு வேறுபாடுகளை நாம் அறிந்து கொண்டால் அது ஊடகங்கள் எழுதுபவரை தம்பக்கம் ஈர்க்க மிகமுக்கிய வழிகாட்டியாக இருக்கும். வன்செய்தி மற்றும் மென்செய்திக்கும் இடையிலான ஒரு பெரிய வேறுபாடு விளக்கக்காட்சியின் தொனியாகும் (Tone of presentation) வன்செய்திகள் குறிக்கோள்களை, இலக்கை மையமாக கொண்டமைய வேண்டுமென்பதால் வன்செய்திகளுக்கும் மென்செய்திகளுக்கும் இடையில் எழுத்து நடைகணிசமாக வேறுபடுகின்றன.

வன்செய்தி


வன்செய்தி என்பது கணப்பொழுதில் நிகழ்ந்த, நிகழவிருக்கின்ற செய்திகள் மற்றும் உடனடியாக அறிவிக்கப்படும் நிகழ்வுகள் போன்றவற்றை குறிக்கிறது. ஊடகவியலாளர் வன்செய்திகளை எழுதும்போது தனது சொந்தக்கருத்தை அதன்மீது தெரிவிக்கவேண்டிய அவசியமோ-கடப்பாடோ இல்லை. வன்செய்திகள் தலைகீழ் பிரமிட் எழுத்தின் கட்டமைப்பைப் உள்ளவாறே-சீரியவழியில் பின்பற்றி எழுதப்படவேண்டும். வன்செய்திகள் விரைவாகப் படிக்கப்படுகின்றன என்பதை ஊடகவியலாளர் உணர்ந்து மிக முக்கியமான உண்மைத் தகவல்கள் முதல் பந்தியில் அழகுற அமைந்து எழுதவேண்டும். பத்திரிகையியலில் இதை 'தலைகீழ் பிரமிட்" என்று அழைக்கிறார்கள்: என்ன நடந்தது? யார் இதில் ஈடுபட்டனர்? அது எங்கே, எப்போது நடந்தது? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? என்பதனை விளக்கி எழுதவேண்டும். அதனைத் தொடர்ந்து வரும் பந்திகளில்; விவரங்களை அதிகரித்து சேர்த்துக்கொண்டு போகலாம். எனவே வாசகர் முதல் பந்தியைப் படித்துவிட்டு என்ன நடந்தது என்பது பற்றிய நல்ல கருத்தினை புரிந்துகொள்ள வைக்கமுடியும்.


வன்செய்தியில் லீட், (Lead or Lede )  அல்லது முதல் வாக்கியம் செய்தியின் மிக முக்கியமான பகுதியாகும். ஓர் ஊடகவியலாளருடைய லீட் என்ன, எங்கே, எப்போது, ஏன், எப்படி என்று வினாக்களுக்கு விடையை சுருக்கமாக வாசகரிடம் சொல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக, லீட் முழுமையானதாக இருக்க வேண்டுமே ஒழிய அடர்த்தியாக-நெரிசலாக (not crowded) இருக்கக் கூடாது, எனவே செய்தி நன்றாக நகர்த்தப்படுவதற்காக லீட்டை இரண்டு வாக்கியங்களில் அமைக்கலாம். ஒரு வாசகர் முழுமையாக வாசிக்கவில்லை என்றாலும் இதனை வாசித்தபோது என்ன நடந்தது என்பதை அவர் உணர்ந்து கொள்ளத்தக்க வண்ணம் அமைக்கப்படவேண்டும். பத்திரிகையாளர் அமைக்கும் தமது லீட் வினைத்திற னாக அமைந்தால், மீதமுள்ள செய்தியின் பகுதிகள் எழுதுவது மிக எளிதாக அமைந்துவிடும்;. தொடர்ந்து சுருக்கமாக நிகழ்வின் பின்னணித் தகவல்களை எழுதிக்கொண்டே போகலாம். அதிகபட்ச வாசிப்புக்கு ஏற்ற வகையில் சிறிய பந்திகளை மிகசுருக்கமாக எளிய மொழிநடையில் அமைப்பது சாலச்சிறந்துது


வன்செய்திகள் பெரும்பாலும் எல்லோரலும் அடிக்கடி புரிந்து கொள்வது கடினம் என்பதனால் அவை எளிய மொழிநடையில்:;:(Plain language: 3Cs “Clear, Concise and Correct”) ((தெளிவு, சுருக்கம், சரியானது) எழுதப்படுவது வரவேற்கத்தக்கது. வன்செய்திகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த போதிலும், பொதுவாக குறைவான வாசகர்களையே ஈர்க்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு சொற்குறைப்பும் பொருள் செறிவும் கொண்டு வினைத் திறனாக எழுதுவது வரவேற்கத்தக்கது.வன்செய்திகளின் முக்கியத்து வத்தைப் புரிந்துகொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள தகவல்களைப்பற்றி மக்கள் சிந்திக்க வைக்கும் வண்ணம் எழுத்து நடை அமைக்கப்பட வேண்டும்.


வன்செய்திகள் மற்றும் மென்செய்திகள் தொடர்பான மற்றொரு முக்கிய வேறுபாடு பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடுவைப் பற்றியது ஆகும். அதாவது காலத்தோடு இயைந்திருக்கும் இயல்பு ஆகும். கவரேஜின்-coverage அவசரத்தின்- உடனடித்தேவையின் பொருட்டு வன்செய் திகளை கையாளுகின்ற ஒரு செய்தியாளருக்கு மிகவும் இறுக்கமான-குறுகிய காலக்கெடுவே வழங்கப்படுகிறது. உண்மைகளை உறுதிளாக ஒட்டிக்கொண்டு கவிதைமொழியை அல்லது உருவகமொழியை தவிர்த்துக் கொண்டு எழுதப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது. பெரும்பாலான வன்செய் திக்கான நேரடியான அறிக்கையிடல் முயற்சிகள், விளக்கமளிக்கும் அறிக்கையிடலுக்கு வழிவகுக்கின்றன என்பதைக்கருத்தில் கொண்டு, அதில் அறிக்கை செய்பவர் நிரூபிக்கப்பட்ட உண்மைத் தகவல்களின் முக்கியத்து வத்தை சரியாக விளக்கி பொருள்கோடல் செய்து அமைக்கவேண்டும். மேலும் மக்கள் படிப்பதைப், பார்ப்பதை, அல்லது இரசிப்பதைப் புரிந்து கொள்ள தேவையான பின்னணியை பெரும்பாலும் வழங்கும் வண்ணம் அமைக்க வேண்டும்.  

மென்செய்திகள்


மென்செய்திகள் அறிவைக் காட்டிலும் மனித ஆர்வங்களை அதிகம் வருடுக் கவருகின்றன. மென்செய்திகள் எழுதுபவர் படைப்பாற்றலுக்கு அதிக முக்கி யத்துவத்தைக் கொடுத்து எழுதவேண்டும். எழுதத்தொடங்கும் போது அவர் எழுதும் தலைப்பைப்பற்றி எந்த அறிவும் இல்லாத ஒருவர் அறிந்து கொள்ள வேண்டியது என்ன என்பதை அவர் தன்னைத்தானே கேட்டுக் கொண்டு அதற்கான விடையாக அந்தத்தகவலைச் சேர்த்து எழுதுவதில் உறுதியாக இருக்கவேண்டும். மென்செய்தி எழுதுபவர் எழுதும் கட்டமைப்பை தனக்கு ஏற்றவாறு கொண்டு தனது தனிப்பட்ட கருத்தை உட்புகுத்தி எழுதும் நெகிழ்வுத் தன்மையை பயன்படுத்தி எழுதலாம். 

எழுதும்போது அந்த செய்தியில் உள்ள அனைத்தும் முற்றிலும் உண்மை என்பதை முயன்றவரை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். ஆனால் ஒரு நிகழ்வுகளின் அல்லது ஒரு நபரின் சுவாரிசமான விபரணங்களை; பயன் படுத்தப் பயப்படாது எழுதவேண்டும். செய்தியை தெளிவாக்குவதற்கு தேவையான விவரங்களை முன்னிலைப்படுத்தவும் சேர்க்கவும் நகைச்சுவை யான கோணங்களைத் தேர்ந்தெடுத்து எழுதவேண்டும். யார் என்ன செய்கிறார்கள், அவற்றை இயக்கும் சக்திகள் மற்றும் நிலைமை எவ்வாறு உணத்துகின்றது. நன்றாக உள்ளதா, நன்றாக தோற்றமளிக்கின்றதா, சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமைகின்றதா எனகண்டறிந்து வாசகர் அதை இலகுவாக கண்டு பிடிப்பதற்கு தனது எழுத்து பாணிமூலம் அழைத்துச் செல்லவேண்டும்.


மென்செய்திகள் பிரபலங்கள், தொழில்நுட்பம் போன்றவற்றைப் பற்றிய வதந்திகளாவும் கூட இருக்கலாம் என்பதை சரியாகக் புரிந்து கொண்டு அதற்கு உரியவாறு கவிதை மொழியை அல்லது உருவகமொழியை அமைத்து எழுதுவது அற்புதமாகும். மென்செய்திகள் ஆசிரியர் தலையங் கங்களாகக்கூட அமைத்து எழுதமுடியும். அவை ஆசிரியர் தலையங்கங்க ளாகவும் ஆக்கப்படுகின்றன. மென்செய்திகள் அகநிலைவாய்த தாக (subjective)  அமைக்கப்படுகின்றன. மென்செய்திகள் பொதுவாக தலைகீழ் பிரமிட்டு எழுத்தின் கட்டமைப்பைப்பின்பற்றி எழுதப்படுவதில்லை எனலாம். இந்த வேறுபாடு இலகுவனவை அல்ல. சில வேளைகளில் இவ் இரண்டையும் வேறுபடுத்துவது மிகவும் கடின ஒரு காரியமாகும். உதாரணமாக நாம் ஓர் அரசியல்வாதியின் தனிப்பட்ட வாழ்க்கையில் நேரிட்ட ஒரு செய்தியை வகைப்படுத்துமிடத்து இது மிக கடினமாகலாம். 

மென்செய்திகள்-செய்தியின் பெறுமதியைப்பாதிக்கும் காரணியாகிய: காலத்தோடுஇயைந்திருக்கும் இயல்பு அற்றதாக அமைக்கமுடியும். ஒரு மென்செய்தி, வாசகரை மகிழ்விக்க அல்லது அறிவுரை செய்வதற்கு முயற்சிக்கிறது: உ-ம்:செய்தித்தாள் அல்லது தொலைக்காட்சிகளில் 'நாம் பயன்படுத்தக்கூடிய செய்திகள்" என்று வருபவற்றை நாம் அறிந்திருப்போம்: 'சாக்லேட்டின் நன்மைகள்", 'எடையைக் குறைப்பதற்கான உதவிக்குறிப்பு கள்" உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு சரியாக செய்யவேண்டியவை, புதிய கணனியை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை போன்ற உதவிக் குறிப்புகளாக இருக்கலாம். இத்தகைய செய்திகள் எந்தநேரத்திலும் வெளியிடப்படலாம். இந்தவிடத்தில் எழுதும் நடை மிகவும் நெகிழ்வானதாக அமையும்.

மென் செய்தி எழுதும் போது பத்திரிகையின் பாரம்பரிய விதிகளுக்கு கட்டுப்பட்டு எழுதவேண்டிய கடப்பாடு இpல்லை. வன்செய்தி அவசரத்தில் மிகவிரைவாகப் படிக்கப்படுவதுபோல் ஒரு மென்செய்தி அத்தகைய அவசரத்தில் படிக்கப்படுவதில்லை. எனவே சுவாரஸ்யமான நடையில் ஆழமாக சிறப்புற  அமைக்கும் போது மென்செய்தி வாசகருக்கு வாசிக்க ஊக்கமளித்து, தூண்டி பலவிடயங்களை கற்பிக்கும்.


வினைத்திறனான-வலுவான மென்செய்திகள் எழுத உதவும் சில குறிப்புகள்:


  • முதலில்  எழுதுவதனால்; என்ன ஏற்படப்போகின்றது என்பதை இனங்காணல்
  • செய்தி எழுதப்படும் அந்த நபர் அல்லது தலைப்பு ஏன் வாசகருக்கு சுவாரஸ்யமானது? என்பதை அடையாளம் காணல் 
  • அந்த குறிப்பிட்ட நபர் அல்லது தலைப்பு பற்றி முடிந்தவரை ஆராய்ச்சி செய்து கொள்ள வேண்டும். அவை தொடர்பாக பூரணஅறிவு இருந்தால் அல்லது அந்த விடயத்தைப் பற்றி எவ்வளவு அதிகமாக அறிந்திருக்கின்றோமோ, அவ்வளவு அதிகமாக அச்செய்தி செழிமையாக அமைந்துவிடும் என்பதை உணரல். 
  • சிறந்த மென்செய்தி எழுதுவதற்கு பலசெய்தித்தாள்கள் மற்றும் செய்திஇதழ்களை நன்றாக வாசித்தல். 
  • சில வகையான மென்செய்திகளை எழுதுவதற்கு சில பாணிகளை பயன்படுத்துவது பரவாயில்லை என்றாலும், நல்ல எளிய மொழி நுட்பங்களைப் (தெளிவான, சுருக்கமான மற்றும் சரியான தொடர்பாடல்) பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது 
  • எழுதும் செய்தியின் கட்டமைப்பைக் கண்டுபிடிப்பதில் சிக்கல்களை எதிர் கொள்வீர்களாயின், அந்த செய்தியினை நீங்கள் ஒரு நண்பரிடம் சொல்கிறீர்கள் என்று பாசாங்கு செய்யதுகொண்டு முயற்சித்தல் 


தொடரும்...

உசாத்துணை நின்றவை:-

  1. பத்திரிகை இயலுக்கு ஓர் ஆறிமுகம்இ முதற்பதிப்பு 26 டிசம்பர் 2001இ புனித வளன் கத்தோலிக்க அச்சகம்இ யாழ்ப்பணம்.
  2. https://collegejournalism.wordpress.com/2008/07/15/hard-news-vs-soft-news/
  3. https://www.vskills.in/certification/blog/news-reporting-understanding-the-difference-between-hard-and-soft-news/
  4. https://wecommunication.blogspot.com/2016/07/hard-news-and-soft-news-working.html
  5. https://pdfs.semanticscholar.org/768c/b4b19844e149ef5a75cd16ff531688b5861c.pdf

Friday, June 5, 2020

செய்தி உள்ளடகத்தின் அடிப்படையிலான செய்தி வகைப்பாடுகள் இரண்டினைச் சுருக்கமாக அறிமுகப்படுத்துவோம்


ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை




செய்தியொன்றின் உள்ளடக்கம், இயல்புகள், முக்கியத்துவம் பற்றி கவனத்தில் கொள்ளும்போது செய்தி மிகபிரதானமாக இரண்டு வகைக்குள் பிரித்துப் இனக்காணமுடியும்: வன்செய்தி, மென்செய்தி இந்த இரண்டு பிரிவுகளையே செய்தியின் பிரதான வகைகள் என்று அழைக்கப்படுகின்றது 

வன்செய்தி



சமூகத்தின் பெரும்பான்மையான மக்களுக்குக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் சம்பவங் களை அறியப்படுத்தல்-தருவது, தேசிய-சர்வதேச அளவிலான முக்கியமான நிகழ்வுகள் குறித்து அறிக்கையிடும் செய்திகளே வன்செய்தி ஆகும்.

பொதுமக்களுக்கு அதிக முக்கியத்துவமும் தாக்கமும் கொண்டதகவல்கள் செய்திப்பத்திரிகையின் முதல் பக்கத்திலேயே அதிகம் காணப்படுகின்றன. செய்திப்பத்திரிகையில் முதற்பக்கத்தில் பெரும்பாலும் காணக்கிடைப்பது வன்செய்திகள் ஆகும்.

வன்செய்திகளின் தாக்கம் கூடுதலாக இருந்தாலும் பலர் மென் செய்திக ளுக்கு-சுவையான செய்திகளுக்கு விருப்பத்தைத் தெரிவிப்பார்கள் என்பதை யும் நாம் மறக்கக்கூடாது.

சமூகத்திலுள்ள பெரும்பான்மையான மக்கள் அதிகம் கவனம் செலுத்துவது வன்செய்திகளின் பாலாகும். ஒரு நாட்டின் எரிபொருள் விலைகள் அடிக்கடி தளம்பிச் செல்வது பற்றிய ஊடக அறிக்கையிடல்களில் அவதானிக்கக் கூடியதாக இருந்தால் இதனையும் ஒரு வன்செய்தி அணுகு முறையின் முக்கிய அம்சமாகும் எனகூறலாம். செய்திஅறிக்கை யிடலில் (பத்திரிகை யில்) மிக முக்கியமான தகவல் முதலில் வெளிப்படுத்தப்படுவது வன்செய்தி அறிக்கையிடலில் நிகழ்கின் றது.

'தொலைக்காட்சி அலைவரிசைகளில் இன்று வெளியாகும் பெரும்பாலன செய்திகள் வெறும் கதையாடல்களாகவே உள்ளன" என ஒருவர் கூறிகின்றார் எனின் அதன் அர்த்தம் மேற்படி குறித்த அலைவரிசைகள் வன் செய்திகளின் பால் குறைந்த கவனம் செலுத்துகின்றன என்பதாகும்

பேருந்து விபத்தில் 30பேர் மரணம், அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவுப்படி அதிகரிக் கப்பட்டது என்னும் தலைப்பில் வெளியாகும் செய்திகள் வன்செய்திக்கு உதாரணங்களாகும்.

மென்செய்தி -சுவையான செய்தி:-


மனிதர்களைக் கவரும் அல்லது ஆர்வமூட்டவல்ல கதைகளை அடிப்படை யாகக் கொண்டதோடு மனிதரது வாழ்வில் தீவிரமான விளைவுகளை உருவாக்காதது செய்திகள் மென்செய்தி- சுவையான செய்தி ஆகும். இதனை பெரும்பாலான வாசகர்கள் வாசிப்பதற்கு விருப்பம் காட்டுவர்.

சமூகத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாத ஆனால் பலரது கவனத்தையும், விருப்பத்தையும் பெற்ற மானிட உணர்வுகளை தூண்டுகின்ற செய்திகள் மென்செய்திகள் ஆகும். இங்கு பயன்படுத்தப்படும் மொழி படைப்பாக் கமிக்க மொழியாவதோடு இத்தகைய செய்திகளை வாசிக்கும் வாசகர் மகிழ்வூட்டலைப் பெறுவர். அதேபோல் கோபம், கவலை முதலான உணர்வுக ளைத் தூண்டும் செய்திகளும் இந்த மென் செய்திகளில் அடங்கும். டப்லொய்ட் செய்திப்பத்திரிகைகள் மென் செய்திகளுக்கு அதிக முக்கியத்து வம் அளிக்கின்றன எனலாம். தொலைக்காட்சியில் செய்தி சஞ்சிகை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்ற போது அவற்றுள் மென்செய்தி உள்ளடக்கி இருப்பதற்கும் சந்தர்ப்பங்கள் உண்டு. பெரும்பாலான மக்களின் கவனத் தைக் கவர்வது மற்றும் அவர்களது உணர்வுகளுக்குத் தீனி போடுவதாக அமையும் செய்தி மென்செய்தி ஆகும். வார இறுதிப் பத்திரிகையில் கூடுதலாகக் காணக்கிடைப்பது மென்செய்தி- சுவையான செய்திகள் ஆகும்.

முன்னாள் கிரிக்கெற் வீரருக்குத் திருமணம். பூனகரியில் நடைபெற்ற பூஜை வழிபாடு என்னும் தலைப்புக்களில் வெளியாகும் செய்திகள் மென்செய்தி க்கு உதாரணங்களாகும்.



Wednesday, June 3, 2020

செய்தியின் பிரதானமான வகைகளுக்கு இடையிலான வேறுபாடுகள் : வன் செய்தி மற்றும் மென் செய்தி

செய்தி: – வன்செய்தி-Hard News, மென்செய்தி.-Soft News



ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை



செய்தியின் வகைகள் என பலவற்றை கடந்த பிரசுரத்தில் வெளியிட்டி ருந்தோம். அவற்றை ஆழமாக நோக்கும் போது செய்தியொன்றின் உள்ளடக்கம், இயல்புகள், முக்கியத்துவம் பற்றி கவனத்தில் கொள்ளும்போது செய்தி மிகபிரதானமாக இரண்டு வகைக்குள் பிரித்துப் இனக்காணமுடியும்: வன்செய்தி-Hard News, மென்செய்தி.-Soft News இந்த இரண்டு பிரிவுகளையே செய்தியின் பிரதான வகைகள் என்று அழைக்கப்படுகின்றது 

வன்செய்தி- Hard News :-

பாரிய அளவினருக்குத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய, தேசிய அல்லது சர்வதேச மட்டத்தில் முக்கியத்துவம் கொண்ட நடப்புப் பெறுமதியு டைய- Timeliness செய்திகள் வன் செய்திகள் என அழைக்கப்படும். பெரும்பாலும் நாளந்த செய்தி தாள்களில்- வெளியீடுகளில் முன்பக்கத்தில்-முதலில் இடம்பிடிப்பவை இத்தகைய வன் செய்திகளேயாகும் எனலாம். அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள், பிரபலமான குற்றங்கள் பற்றிய தகவல்கள், போர் சம்மந்தமான விடயங்கள், திடீர் விபத்துக்கள், திடீர் அனர்த்த நிலமைகள், அரசியல், பொருளாதார மற்றும் பண்பாடு பற்றிய முக்கியதுவம் பெற்ற விடயங்கள், ஆகியவற்றை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். ஒப்பீட்டு ரீதியில் பெரும்பாலும் புரோட் சீட் அளவுடைய செய்தித் தாள்கள் இவ்வகை செய்திகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றன.  

அவசரமாக அறிக்கை செய்ய வேண்டிய செய்திகளை வன் செய்தி எனப்படுகின்றது. அவை தரவுடன் கூடிய உண்மைக் செய்திகள், அவை பகுப்பாய்விற்கு கிடைக்கக்கூடிய நிகழ்வுகள் குறித்தவை. அரசியல், குற்றம், பொருளாதாரம், சர்வதேச விவகாரங்கள், இயற்கை பேரழிவுகள், கலவரம் போன்ற செய்திகள் இதற்கு உதாரணங்களாகும்.


இந்தியாவிற்கும் இலங்கைக்கும் வர்த்தக ரீதியான உடன்படிக்கைக்காக ஒரு கலந்துரையாடல் நிகழ்கிறது என்றால் அது வன்செய்திக்கு உதாரணமாக கூறலாம் அல்லது. எமது இலங்கை நாட்டினுடைய பிரதமர் நாடாளமன்றத்தில் வீதி அபிவிருந்தி அல்லது கொழும்பு துறைமுக அபிவி ருத்தி சம்மந்தமாக ஒர் அறிக்கையினை வெளியிடுவாராயின் அது ஒரு வன்செய்தியாகும்.நாட்டின் நாடளமன்ற பேரவையில் 2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை சனதிபதி அவர்கள் அறிவித்தார். இது வன்செய்திக்கு ஒர் உதாரணமாகும். அறிவியல் அறிஞர்கள் அறிவியல் மாநாடுகளில் வெளியிடும் செய்திகளும், தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய மாநாடுகளில் கூறும் செய்திகளும் கடினமான செய்திகளுக்கு எடுத்துக்காட் டாகும்.

உண்மையான நேரடியான நம்பத்தகுந்த கருத்தாழம் மிக்க செய்திகளே வன்செய்திகள் ஆகும். இச்செய்திகள் உண்மை சார் அணுகு முறைகளை தாங்கி நிற்கும். அதாவது என்ன நடந்தது? ஏன் நடந்தது?, எங்கே நடந்துது? யார் யார் தொடர்பு பட்டிருக்கிறார்கள்? எப்போது நடந்தது? எப்படி(எவ்வாறு) நடந்தது? என்ற வினாக்களுக்கு வர்ணனைகள் ஏதுமற்று நேரடியாக உண்மையான விடைகளை கொடுத்து ஆதேவேளை மக்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் செய்திகளாக இவை வரும்.  What happened? Why did it happen??, Where did it happen? Who was involved? when did it happen? How it was happened?    

It is hard news that catches readers- The Mr Lord North Cliffe- வன்செய்திகளே வாசகர்களுக்கு பிடிக்கும் என்ற நோர்த் கிளிவ் பிரபுவின் கூற்று இங்கு நோக்கத்தக்கது. 


மென்செய்தி- Soft News: 

சமூகத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத ஆனால் பலரது கவனத்தையும் விருப்பத்தையும் பெற்ற, மனிதனுடைய உணர்வுகளைத் தூண்டுகின்ற செய்திகளை மென் செய்திகள் என அழைப்பர். அன்பு, கருணை, துக்கம், வைராக்கியம், குரோதம், போன்ற உணர்வுகளை அடிப்படையாக கொண்ட செய்திகளை இவ்வகைச் செய்திகளுக்குள் நோக்கலாம். இங்கு மொழி நடையானது படைப்பற்றல் மிக்கதாக இருக்கும். வாசகர்கள் இச்செய்திகளை வாசிப்பதற்கோ அல்லது அறிந்து கொள்வதற்கோ ஆர்வம் காட்டுவர். உடனடியாகப் பாமர வாசகர்களும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியவை மென்மையான செய்திகளாகும். திரைப்பட வெளியீடு, தேர்தல் முடிவுகள், கிரிக்கெர் போட்டியின் முடிவுகள் ஆகியவற்றை மென்மையான செய்திகளாகக் கருதலாம். ஒப்பீட்டு ரீதியில் பெரும்பாலும் டப்லொய்ட் அளவுடைய செய்தித் தாள்கள் இவ்வகை செய்திகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றன.  

ஒரு படநடிகருடைய அல்லது கிரிக்கெர் வீரருடைய திருமணக் கொண்டாட்ட நிகழ்ச்சி பற்றிய செய்தி மென் செய்திக்கு உதாரணமாகும். அல்லது பிரபல கிரிக்கெர் வீரர் ஒர் அனாதை விடுதியை தரிசித்து அங்கு உள்ளவர்களுடன் மதிய போசனம் அருந்தினார் என்றால் அது இதயத்தை நெகிழவைக்கும் ஒரு மென்மையான செய்தியே. 

மென்மையான செய்திகள் உலக நிகழ்வுகள், மனித ஆர்வக் கதைகள் அல்லது பொழுதுபோக்கு செய்திகள் பற்றிய பிற பின்னணி தகவல்களை வழங்கும் செய்திகளை மென் செய்திகள் எனப்படுகின்றது. இவை தீவிரமான விடயங்களைக் கையாள்வதில்லை என்பதால், இவை 'மென்மையானவை" என்று பெயரிடப்படுகின்றன. உ-ம் :விளையாட்டுச் செய்திகள், பிரபலங்களின் செய்திகள் அல்லது மனித ஆர்வம் -உணர்ச்சிகளைக் கையாளும் மனித ஆர்வக் செய்திகள்  ஆகியவை அடங்கும்.


சமூகத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாத ஆனால் பலரது கவனத்தையும், விருப்பத்தையும் பெற்ற மானிட உணர்வுகளை தூண்டுகின்ற செய்திகள் ஆகும். இங்கு பயன்படுத்தப்படும் மொழி படைப்பாக்கமிக்க மொழியாவதோடு இத்தகைய செய்திகளை வாசிக்கும் வாசகர் மகிழ்வூட்டலைப் பெறுவர். அதேபோல் கோபம், கவலை முதலான உணர்வுகளைத் தூண்டும் செய்திகளும் இதிலடங்கும்.

கவர்ச்சியான உண்மைக் கருவிற்கு கற்பனைவளமூட்டப்பட்டு நம்பகத்தன்மை சற்றுக் குறைந்த செய்திகளை மென்செய்திகள் என்றும் கூறலாம். 

மென் செய்திகள் வாசகர்களை மகிழ்விப்பதாகவும் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்குவதாகவும் இருக்கும். நாம் தொலைக்காட்சியில் - வானொலியில் - பத்திரிகைகளில்;; பாடித்திருக்கிகும்- 'நீங்கள் பாவிக்கலாம் என்னும் செய்தி", 'உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது எவ்வாறு கால் கைகளை சரியாக நீட்டி மடக்கவேண்டும் என்னும் குறிப்பு வழங்கல்.",  'ஒரு கணனியை கொள்வனவு செய்யும்போது கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்." போன்றன மென் செய்திகளுக்கு இன்னும் சில உதாரணங்கள்.

உத்தியோக பூர்வமான செய்திகளைக் காட்டிலும் உணர்வுபூர்வமான செய்திகளையே வாசகர்கள் விரும்புகின்றனர். உறுதியான செய்திகளைக் காட்டிலும் உறுதியற்ற செய்திகளையே விரும்பிப் படிக்கின்றனர். இவை பொழுதுபோக்கு வாசிப்புப் பொல் அமைந்து விடுகின்றன. 



செய்தியாளன் செய்தியினை எழுதுகின்ற போது நாம் மேலே குறிப்பிட் இந்த வினாக்களுக்கு கிடைக்கும் பதிலில் விடயங்களைச் சேகரித்து, அதனை அழகுற ஒழுங்குபடுத்தி வாசகர்களைக் கவரத்தக்க வகையில் படைக்க வேண்டும் என்பதை மனதில் எப்போதும் வைத்துக்கொள்ள வேண்டும். 

இதில் எதற்கு முதலிடம் கொடுப்பது என்ன நடந்தது என்பதற்கா? மனிதருக்கு முதலிடம் கொடுப்பதா? சம்பவம், நிகழ்ந்த விதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதா? என்பதையெல்லம் நிகழ்ச்சியின்-செய்தியின் மதிப்பிற்குத் தக்கதாக முடிவெடுத்து படைக்கவேண்டும். எல்லா வினாக்களுக்கும் விடை அளிக்க முடியவில்லை என்றாலும் முடிந்தவரை எல்லா வினாக்களுக்கு விடை அளிப்பது விரும்பத்தக்கது. சில வேளைகளில் எவர்? எப்பொழுது? என்ன? எங்கே? எப்படி? என்ற வினாக்களுக்கு விடையை விளக்கிக்கொண்டு வரும்போ? அந்த நிகழ்வின் பின்னணியில் ஏன்? என்ற வினாவிற்கான விடையும் தெளிவாகிவிடும் என்பதையும் கருத்தில் நோக்கலாம்.  



தொடரும்...

உசாத்துணை நின்றவை:-

  1. பத்திரிகை இயலுக்கு ஓர் ஆறிமுகம்இ முதற்பதிப்பு 26 டிசம்பர் 2001இ புனித வளன் கத்தோலிக்க அச்சகம்இ யாழ்ப்பணம்.
  2. தொடர்பாடலும் ஊடகவியற்கற்கையும், தரம் 11, இரண்டாம் பதிப்பு 2016, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இலங்கை 
  3. https://www.vskills.in/certification/blog/news-reporting-understanding-the-difference-between-hard-and-soft-news/, accessed on 01.06.2020
  4. https://www.researchgate.net/publication/249689936_Hard_news_soft_news_'general'_news_The_necessity_and_utility_of_an_intermediate_classification,accessed on 01.06.2020
  5. https://wecommunication.blogspot.com/2016/07/hard-news-and-soft-news-working.html,accessed on 01.06.2020


Tuesday, June 2, 2020

துவிச்சக்கர வண்டி செலுத்துவோரை அதிகரிக்க யாழில் பல்வேறு விழிப்புணர்வுத் திட்டங்கள்| யாழ் போதன வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி ஐயா அவர்களின் தெரிவிப்பிற்கு அர்த்தம் கொடுப்போமா


செய்தியின் வகைகள்

செய்தி – News


ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை


'செய்தி", 'தகவல்"

தமிழ் மொழியில் 'செய்தி",'தகவல்" ஆகிய இரண்டு சொற்பதங்களும் பயன் படுத்தப்படுகின்றன. தொடர்பாடலில் அடிப்படையான பண்புக்கூறு களுள் இவ்இரண்டு சொற்பதங்களும் ஒரே அர்த்தத்தில் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் 'செய்தி" என்பது தமிழ் மொழிச் சொற்பதமாகும். 'தகவல்"; என்பது அரபு மொழிச் சொற்பதமாகும்.  

தொடர்பாடல் கற்கைநெறியில் 'செய்தி",'தகவல்" ஆகிய இரண்டு சொற்பதங் களும் ஒரே அர்த்தத்தில் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டாலும் அதனை ஆழமாக நோக்குமிடத்து நாம் ஒரு சிறிய வேறுபாட்டையும் இனங் காணமுடியும்.

'ஏதேனும் ஓர் இடத்தில் நடந்த நிகழ்வொன்றை யாராவது அவதானித்து அதை இன்னொரு வருக்கு தொடர்பாடல் செய்வாராயின் அதனை நாங்கள் தகவல் என்கின்றோம்". 

செய்திபற்றி பல்வேறு புலமைசார்ந்தவர்கள் வெளியிட்ட கருத்துககளை நாம் முதல் பிரசுரத்தில் தந்திருந்தோம். இருப்பினும் எளிமையாகச் சொல்வதானால்:' அறிக்கையிடுமளவிற்கு முக்கியத்துவ முடைய, சமூகத் தின் கவனத்தை ஈர்க்கக்கூடியதான, சமூகத்தில் ஓர் அக்கறையை ஏற்படுத்தக்  கூடிய தகவல் ஒன்றையே செய்தி என்று கூறமுடியும்." 



இன்று நாம் செய்தியின் வகைகள் பற்றி நோக்குவோம்: 

செய்தியின் வகைகள்: Classification of News

செய்திகளை- காலத்தின் அடிப்படையில், வாசகரின் அடிப்படையில், முக்கியத்துவத்தின் அடிப்படையில், செய்தி சொல்லும் விதத்தின் அடிப்ப டையில், செய்தியின் பாகுபாட்டின் அடிப்படையில் என பல பகுதிகளாக பிரிக்கலாம்.

காலத்தின் அடிப்படையில் நிகழ்வு நடைபெறும் தன்மையில்: Fast News- விரைவுச் செய்தி, Slow News- விரைவு அல்லாச் செய்தி 

வாசகரின் அடிப்படையில்: Predictable News- எதிர்பார்க்கைச் செய்தி,   Unpredictable  News- எதிர்பாரச் செய்தி 

செய்தி சொல்லும் விதத்தின் அடிப்படையில்: Straight News- நேரடிச் செய்தி,Explanatory News-விளக்கச்செய்தி, Investigative News- புலனாய்வுச்செய்தி.

செய்தியின் பாகுபாட்டின் அடிப்படையில்: Spot News - தளச்செய்தி,  Sports News- விளையாட்டுச் செய்தி, Hot News-சூடான செய்;தி, Crime News- குற்றச் செய்தி, Government News- அரசுச் செய்தி, Court News- நீதிமன்றச் செய்தி, Political News- அரசியல் செய்தி, Parliamentary News-- நாடளமன்றச் செய்திகள், Festival News- விழாச்செய்தி, Medical News - மருத்தவச் செய்தி, Agricultural News-விவசாயச் செய்தி, Economical News-பொருளாதாரச் செய்தி, Cinema News-சினிமாச் செய்தி,  Developmental News- அபிவிருத்திச் செய்திகள், Science News-அறிவியல் செய்தி போன்றவை யாகும். 

International News-சர்வதேச செய்திகள், National News- தேசிய செய்திகள், Regional News-பிரதேச செய்திகள், Local News  உள்ஊர்செய்திகள் எனவும் பிரித்து நோக்கப் படுகின்றது. 

முக்கியத்துவத்தின் அடிப்படையில்: Hard News வன்செய்தி-கடினமான-உறுதிச் செய்தி, Soft News- மென்செய்தி- உறுதியற்ற செய்தி 



இவற்றினை எல்லாம் நோக்கம்போது செய்தியொன்றின் உள்ளடக்கம், இயல்புகள் பற்றி கவனத்தில் கொள்ளும்போது செய்தி பிரதானமாக இரண்டு வகைக்குள் பிரித்துப் இனக்காணமுடியும்: Hard News  வன்செய்தி, Soft News- மென்செய்தி (அமெரிக்காவில் செய்திகளை, கடினமான செய்திகள் என்றும் மென்மையான செய்திகள் என்றும் பிரிக்கின்றனர்)

வன்செய்தி, மென்செய்தி என்பவற்றைப்பற்றி அடுத்த பிரசுரிப்பில் நோக்குவோம்: 



தொடரும்...
உசாத்துணை நின்றவை:-

  1. பத்திரிகை இயலுக்கு ஓர் ஆறிமுகம், முதற்பதிப்பு 26 டிசம்பர் 2001, புனித வளன் கத்தோலிக்க அச்சகம், யாழ்ப்பணம்.
  2. தொடர்பாடலும் ஊடகவியற்கற்கையும், தரம் 11, இரண்டாம் பதிப்பு 2016, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இலங்கை 

Monday, June 1, 2020

'உதாரணம் உண்மையாயிற்று நாயை மனிதன் கடித்தான்."

செய்தி – News 

ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை


செய்தி என்றால் என்ன? அல்லது 'என்ன", செய்தியை உருவாக்குகின்றது



'உதாரணம் உண்மையாயிற்று நாயை மனிதன் கடித்தான்."

செய்திக்கு ஒரு வரைவிலக்கணம் கூறுங்கள் என யாரைக் கேட்டாலும் உடனடியாகக் கூறும் வரைவிலக்கணம்: 'நாய் மனிதனைக் கடித்தல் அது செய்தியல்ல மாறாக மனிதன் நாயைக் கடித்தால் அது செய்தியாகும்." ஆனால் இது தொடர்பாடல் துறையில் செய்திபற்றி முன்வைக்கப் பட்ட ஒரு பிரசித்திபெற்ற கூற்றே தவிர செய்தி என்பதற்கு முழுமையான வரைவிலக்கணம் தரும் ஒரு கூற்று அல்ல என்பதை நாம் முதலில் உணரவேண்டும். கீழ்வரும் இந்த விடயங்களை நோக்குவோம்:- 

தினமணிப் பத்திரிகை 06.08.1989, 'உதாரணம் உண்மையாயிற்று நாயை மனிதன் கடித்தான்." என்று பிரசுரித்த செய்தி ஒன்றினை நோக்குவோம்: பிரிட்டனில் உள்ள போட் ஓப் போல் என்ற இடத்தை சேர்ந்த 25 வயது மிக்க சார்ண் டெஸ்பொரா என்ற பிரிட்டிஸ் இளைஞன் பக்கத்து வீட்டுக்காரரின் நாயைக் கடித்துக் காயப்படுத்தியமைக்காக 200 ஸ்ரேலிங் பவுண் அபராதம் விதிக்கப்பட்டதுடன், 3 ஆண்டுகள் நாய் வளர்க்கவும் தடை விதிக்கப்பட்டது. 

'நாயைக் கடித்த மனிதன் பிரிட்டனில் வினோதம்" என்று சுடர் ஒளி பத்திரிகை 15.11.2004 தலைப்பிட்டு வெளியிட்ட செய்தியும் பிரசித்தி பெற்ற இக்கூற்றை உண்மையாக்கிவிட்டது. 

இங்கு நியூயோர்க், சண் பத்திரிகையின் பதிப்பாசிரியர் John Bogart-ஜோண் போகாட் அவர்கள் செய்தி என்ற சொற்பதத்திற்கு ஒத்ததாதக கூறிய விளக்கத்தை நோக்குவது சாலச்சிறந்தது:When a dog bites a man, that is not news, because it happens so often. But if a man bites a dog, that is news. Though, this may seem true, sometimes, when a dog, bites a man that can also become news. Suppose a dog, bites a famous film star, it definitely makes big news.

“If a dog, bites a man it is not news, but if a man bites a dog it is news.”  Or “When a dog, bites a man that is not news, but when a man bites a dog that is news”. This saying has been credited to several newspaper people including: John B. Bogart, Amos Cummings, and Charles Anderson Dana who all worked at the New York Sun. The British press baron Alfred Harmsworth who became Lord Northcliffe has also been named as the originator.


நாய்யொன்று ஒரு மனிதனைக் கடிக்கும் போது அது ஒரு செய்தியல்ல. மாறாக ஒரு மனிதன் ஒரு நாயைக் கடிக்கும் போது அது செய்தியாகும். நாய் மனிதனைக் கடிப்பது, அடிக்கடி நிகழ்பவை ஆனால், மனிதன் நாயைக் கடிப்பது வழமைக்கு மாறான நிகழ்வு. எனவே இந்த கூற்று வழமைக்கு மாறான நிகழ்வுகள் தான் செய்திகளாக முடியும் என்கிறது போலும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் நாய் மனிதனைக் கடிப்பதும் செய்திகளாகலாம்: உ-ம் பிரசித்தி பெற்ற ஒரு படநடிகரை, கிரிக்கெர் வீரரை நாய் கடித்து விட்டால் நிச்சயமாக அது ஒரு பெரிய செய்தியாக மாறும். உ-ம் அவுஸ்திரேலிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மத்தியூவ் கெய்டன் நடைப்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் ஒரு நாய் கடித்துவிட்டது. அந்த நிகழ்வை ஊடகங்கள் விறுவிறுப்பான செய்தியாக வெளியிட்டன. எமது நாட்டில் 'கெய்டனுக்கு நாய்க்கடி" என்று தலைப்பிட்டு வீரகேசரி பத்திரிகை 24.10.2006 ஆண்டு வெளியிட்ட செய்தியும், நாய் கடித்தது என்று மெற்றோ நியூஸ் 24.10.2006 வெளியிட்ட செய்தியும் இதற்கு உதாரணங்கள் ஆகும். 

கடந்ந நூற்றாண்டின் கொடைவள்ளலான சாள்ஸ் ஹென்றி டி சொய்சாவை விசர் நாய் கடித்தபோது அது விறுவிறுப்பான செய்தியானது. 

1950இல் ஒரு விசர் நாய் அனுராதபுரப் பாடசாலையில் புகுந்து ஐந்து சிறுவர்களைக் கடித்தபோது அது விறுவிறுப்பான செய்தியானது. '"


தொடர்பியல் அரிமாக்கள் செய்தி என்பதற்கு முன்வைத்த வரைவிலக்கணங்களை நோக்குவோம்:-


 Oxford Dictionary:: ஒக்ஸ் போட் அகராதி: புதிய தகவல், சமிபத்திய சம்பவ அறிக்கை  (“New information, the report of latest incident”.)

Gerald W. Johnson- ஜெரால்ட் டபிள்யு. ஜோன்சன்- 'பால்ரிமோ- Baltimore சண் பத்திரிகையின் ஆசிரியர்" 'சமிபத்திய சம்பவங்களை எழுத்துக்களாக அறிக்கையாக்கும் போது அவை செய்திகளாகின்றன." “News is the report of such incidents as in writing them, a first rank journalist feels satisfied”. 

'அனுபவம் மிக்க ஆசிரியர் ஒருவர் தனது நாளிதழில் இடம்பெறத்தக்கது என்று எதை நினைக்கிறாரோ அதுவே செய்தியாகும்." என்கிறார் 

William F. Brook-- வில்லியம் எஃப் புறுக்  'செய்தி என்பது உண்மையிலேயே எதிர்பாராத ஒரு சம்பவத்தை குறிக்கின்றது."  “News is in fact a synonym of the unexpected”.

William Stead-  வில்லியம் ஸ்டீட்- 'வழக்கத்திற்கு மாறான, அசாதாரணமான அனைத்தையும் செய்தி என்று அழைக்கப்படுகிறது". “Everything which is extra­ordinary and unusual is called news”. 


Carrel Warren - கார்ல் வார்ன் - சாதாரணமான ஒரு மனிதனுக்கு முன்வைக்கப்படுவதற்கு முன்பு அவர் அறிந்திராத ஒர் அறிக்கையையே நாம் பொதுவாக செய்தி என்கிறோம். இவ்வறிக்கை வாசகர்களுக்கான தகவல்கள், பொழுதுபோக்கு விடயங்களை, ஆர்வத்தைதூண்டும் தகவலுக் கான ஆதாரங்களை உள்ளடக்குகின்றன. “News is usually a report which is not known to layman before its presentation. This report deals with such activities of man as are a source of interest, entertainment or information to the readers”.


William Consvenor Blayer- வில்லியம் கன்வென்னர் ப்லேயர் - பிரபல இதழியலாளர்; - 'தக்க நேரத்தில் பலரும் அறியத்தக்க வகையில் கிடைப்பதே செய்தியாகும்;;;, என்றும் பெரும் பாலான மக்களிடம் பேரார்வத்தைத் தூண்டக் கூடியதுமே சிறந்த செய்தி" என்றும் கூறுகிறார்.

Eric C. Hopwood- எரிக் சி. ஹோப்வூட் - 'மக்களின் ஆர்வத்திற்கு தீனியாக அமைகின்ற முதன் முதலில் தரப்படுகின்ற எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தகவலும் செய்தியாகும்."என்கிறார் 

Paul De Mesuniyar - போல் டி மெசுனியர்- 'செய்தி என்பது மக்களுக்கு பாதிப்பையேற்படுத்தும் அவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றதுமான கடந்தகால முக்கிய சம்பவமொன்றுடன் தொடர்புடைய ஒரு புதிய தகவலாகும்."

Charles Anderson Dana-சார்லஸ் ஆண்டர்சன் டானா- 1869-1897 ஆம் ஆண்டு நியூயோர்க் சண் பத்திரிகை நிறுவனத்தை நடத்தியவர் -'ஒரு சமூகத்தின் பெரும் பகுதியின் ஆர்வத்தை தூண்டுவதும் அந்த சமூகத்தின் கவனத்திற்கு முன்பு ஒருபோதும் கொண்டுவரப்படதாததுமான ஏதாவது ஒரு விடயமே செய்தி ஆகும்." என்கிறார். “When a dog bites a man that is not news, but when a man bites a dog that is news”  - Charles Anderson Dana, who ran the New York Sun from 1869-1897, said news is: “anything that interests a large part of the community and has never been brought to its attention before.”



Miltan Birash :'எல்லா உத்வேகமான புதினங்களும் செய்திகளே." என்கிறார்.

Tuner Catledge -ரீயூனர் கர்லேட்ச் : 'நேற்று உனக்கு தெரியாத எதுவும் செய்தியாகலாம் " என்கிறார். “News is anything you did not know yesterday”

H. Maris -எச் மாரிஸ்- அமரிக்க பத்திரிகையாளர்-: 'செய்தி என்பது அவசர அவசரமாக நிகழ்கின்ற ஒரு வரலாறு". என்கிறார் 

Stanley Walker, New York Herald Tribune City Editor in 1930s: “News is based on the 3 W’s: Women, Wampum and Wrongdoing.” (i.e., sex, money and crime.) 

இவற்றை நோக்கும் போது உலகில் உள்ள எல்லா செய்தியாளர்களும் தமக்கு ஏற்ற விதத்தலில் 'எது"ஃ 'என்ன", செய்தி என்பதற்கான விளக்தத்தை, வரைவிலக்கணத்தை முன்வைக்கின்றனர். ஒருவருக்கு செய்தி ஆவது மற்றவருக்கு செய்தி ஆகாமால் போகலாம். எனவே செய்தி என்பதற்கு எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வரைவிலக்கணம் இல்லை என்று சொன்னாலும் யாரும் மறுப்பத்றகில்லை. எனவே நேற்று என்ன நடந்தது? இன்று என்ன நடக்கிறது? நாளை என்ன நடக்கப்போகிறது என்று நாட்டுநடப்புக்களை சொல்வது செய்தியாகும் என்று நாம் ஒரு முடிவுக்கு வரலாம் போலும்.

எனவே நாம் இப்போது செய்தி என்பதனை வரையறை செய்ய முனைவோம்:-


வாசகர்களுக்கு ஆர்வத்தை தூண்டுகின்ற-தேடுகின்ற, தகவலை வழங்குவதாக, பாடம்புகட்டுவதாக  பிரசுரிக்கப்படாத மனித செயற்பாடுகளின் தொகுப்பே செய்தி ஆகும். செய்தி என்பது முதலில் வாசகரிடமே வந்து சேரவேண்டும். அதாவது நேரடயாக சூளையிலிருந்து வரும் ஒரு சுடான கேக்கை போன்று இருக்கவேண்டும். முன்னரே பிரசுரத்தில் வந்தவையாக இருந்தால் அது செய்தி அல்ல. மாறாக அவை வேறேதாகவும் இருக்கலாம். செய்தி என்பது மனித செயற்பாட்டுடன் தொடர்புபட்டதாக அல்லது மனிதர்கள், நிகழ்ந்த நிகழ்வில் கட்டயாம் உட்படுத்தப்புடும் போதுதான் அது செய்தியாகும். இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பார்கள். மனித குலத்தின் இழிநிலை மற்றும் மனிதகுலத்தின் பெருமைகளை உள்ளடக்குகின்றது.

செய்தி என்பது என்ன நடக்கிறது என்பது பற்றி பொது மக்களுக்கு கிடைக்கக்கூடிய தற்போதைய தகவல் ஆகும். செய்தி மக்களின் எண்ணங்களைத் தூண்டி, என்னத்தை சிந்திக்க வேண்டும், எவ்வாறு செயற்படவேண்டும் என்பதை மக்கள் மனதில் பதிய வைப்பதாகும். ஒரு நிகழ்வின் சுருக்க மானதும், துல்லியமானதும், உண்மையானதுமான ஒர் அறிக்கையே செய்தி என்பர்கள். குறிப்பிடப்பட்ட ஒரு காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் அறிக்கையே செய்தி என்பார்கள். நிகழ்கால நிகழ்வின் அறிக்கையே செய்தி என்பார்கள். சற்று முன்னர் நடந்த அல்லது மிக உடனடியாக நடக்கவிருக்கிற நிகழ்வின் தகவலே செய்தி என்பார்கள். 


இப்போது நாம் சில உ-ம் நோக்குநோம்: அனுராதபுரத்தில் போக்குவரத்து பேருந்துக்கள் நேருக்க நேர் மோதிக்கொண்டதில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக வானொலி செய்தி ஒன்றில் கேட்கின்றோம். தற்போது அடிக்கடி எங்கும் வீதி விபத்துக்கள் நடைபெற்று மக்கள் இழப்பக்களை சந்திப்பதால், நாம் இதனை ஒரு செய்தியாக கருதாமல் போவதற்கு சந்தர்ப்பம் உண்டு. ஆயினும் அன்று மாலை எங்கள் பிரதேசத்தை சேர்ந்தவர்களும் அந்த விபத்தில் இறந்ததாகக் கேள்விப்படுகின்றோம். இப்போது நாம் அதிக விழிப்புணர்வு அடைகின்றோம். இந்த நிகழ்வு நமக்கு செய்தியாக முக்கியமாகிறது. இப்போது பேருந்தில் பயணித்த பிரயாணிகள் நிலைமை பற்றி அறிய ஆர்வமாக இருப்போம். எத்தனை பேர் பாதுகாப்பாக உள்ளார்கள்? எத்தனை பேர் கயமுற்றிருக்கிறார்கள்? எத்தனை பேர் கவலைக்கிடமாக இருக்கிறார்கள்? எத்தனை பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று அறிய துடித்துக் கொண்டிருப்போம்.



தொடரும்...

உசாத்துணை நின்றவை:-

  1. பத்திரிகை இயலுக்கு ஓர் ஆறிமுகம், முதற்பதிப்பு 26 டிசம்பர் 2001, புனித வளன் கத்தோலிக்க அச்சகம், யாழ்ப்பணம்.
  2. தொடர்பாடலும் ஊடகவியற்கற்கையும், தரம் 11, இரண்டாம் பதிப்பு 2016, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இலங்கை 
  3. https://en.wikipedia.org/wiki/News, Accessed on 25.05.2020
  4. https://www.coursehero.com/file/38510021/Citizen-Journalism1-1pptx/,Accessed on 25.05.2020
  5. http://www.ccsenet.org/journal/index.php/ijel/article/download/70946/39793,Accessed on 25.05.2020
  6. https://quoteinvestigator.com/2013/11/22/dog-bites/,Accessed on 25.05.2020
  7. http://studylecturenotes.com/what-is-news-meaning-definition-and-sources-of-news/,Accessed on 25.05.2020
  8. https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/155004/8/08_chapter%202.pdf,Accessed on 25.05.2020
  9. http://www.authorstream.com/Presentation/N.VIJI-1923933-definitions-news/,Accessed on 25.05.2020

"செய்தி" -சொற்பதத்தின் உருவாக்கம்

ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை




செய்தி – News  

அனைத்து ஊடக உள்ளடக்கங்களில் செய்தியும் ஒன்றாகும். தொடர்பாடல் செயன்முறைக்கு பல மூலக்கூறுகள் அல்லது பண்புக்கூறுகள் - Elements of Communication இன்றியமையாதவையாகும். இந்தபண்புக் கூறுகள் வினைத்திற னாகச் செயற்படுகின்றபொழுது தொடர்பாடல் செயல்முறையானது வினைத்திறன் மிக்கதாக அயையும் எனலாம் இவற்றுள் அடிப்படையான பண்புக்கூறுகளுள் 'செய்தி–தகவல்" என்பது ஒன்றாகும். இச் சொல் உருவாக்கம் பற்றி சற்று விரிவாக முதலில் நோக்குவோம். 

'செய்தி" , 'தகவல்"

தமிழ் மொழியில் 'செய்தி" , 'தகவல்" ஆகிய இரண்டு சொற்பதங்களும் பயன்படுத்தப்படுகின்றன. தொடர்பாடலில் அடிப்படையான பண்புக் கூறுகளுள் இவ் இரண்டு பொற்பதங்களும் ஒரே அர்த்தத்தில் தான் பெரும் பாலும் பயன்படுத்தப்படுகின்றன. 

ஆனால் 'செய்தி" என்பது தமிழ் மொழிச் சொற்பதமாகும். 'தகவல்"; என்பது அரபு மொழிச் சொற்பதமாகும்.  

செய்தி என்னும் சொற்பதம்  

தொடர்பாடலில் தமிழில் செய்தி என் குறிப்பிடப்படும் சொற்பதம் ஆங்கில மொழியில் நேறள என பயன்படுத்தப்படும் சொற்பதத்திலிருந்தே வந்திருக்கிறது. ஆயினும் ஆங்கிலத்திற்கு “நேறள” எனும் சொற்பதம் எவ்வாறு வந்திருக்கிறது என்று முதலில் நாம் நோக்குவோம்:

ஆங்கில மொழிப் பாவனையில் 14ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட பெயர் அடைச்சொல்லான- “New”  - 'புதிய" அல்லது ““New thing”- 'புதிய விடயம்" என்ற சொல்லிற்கு பன்மை வடிவத்தின் சிறப்புப் பயன்பாடாக ஆங்கில சொல்லாக “News” - 'செய்தி" எனும் சொற்பதம்; பயன்படுத்தப்பட்டிருக் கின்றது. 

மத்திய காலப்பகுதியில் இதற்கு இணையாக  “Newes” என்னும் சொற்பதம் பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலத்தில் “New”- 'புதிய" என்ற சொற்ப தத்திலிருந்து “News” - 'செய்தி" என்னும் சொற்பதம் மாற்றம் பெற்றதைபோல், பழையகால பிரெஞ்சு மொழியில் “Nouveau” –(New” தமிழில் புதியது என அர்த்;தம் பெறும்) இச்சொல்லின் பெண்பால் பன்மை பெயர்ச் சொல் லான் “Nouvelles”, (News- தமிழில் செய்தி) - என மாற்றம் பெற்றதை ஒத்ததாக மாறியிருக்ககூடும் எனகருதப்படுகின்றது. அவ்வாறே இந்த German   - Neues   சொல்லின் வடிவமும் அமைகின்றது.



14ஆம் C நூற்றாண்டிற்கு முன்னர் ஆங்கில மொழி பேசுபவர்கள் பொதுவாக “New”- 'செய்தி" என்ற சொல்லிற்கு பதிலாக “Tidings”- 'செய்தி" என்ற சொற்பதத்தினையே பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இந்த   “Tidings” -என்னும் சொற்பதம் ஒரு நிகழ்வின் அறிவிப்பு என் அன்று பொருள் கொள்ளப்பட்டது. 

11ஆம்C நூற்றாண்டிற்கு முன்னர் பழைய ஆங்கில அடியைக் கொண்ட “Tidung” என்ற சொற்பதம் 'செய்தி" யை குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த “Tidung”  - என்னும் சொற்பதம் நிகழ்வு- சம்பவம் என அர்த்தம் பெற பயன்படுத்தப்பட்டது. 

1923இல் இருந்து வானொலிகள் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரலின்படி நடப்பு நிகழ்வுகளை முன்வைப்பதே செய்தி என்று கூறப்பட்டது. 

1926இல் இருந்து Bad News- கெட்ட செய்தி என்ற சொற்பதம் மோசமான செய்திகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் நல்ல செய்தி அல்லது ஒரு செய்தியும் இல்லை என்ற சொற்பாவனை 1640களில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இன்று நாம் News-  என்று பயன்படுத்தும் சொற்பதம் முன்னர் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்று பார்ப்போம்.



(ஆனால் 1889இல் இருந்து செய்தி என்னும் சொல் பதம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என கூறுபவர்களும் உண்டு.) 


நான்கு திசைகளில் இருந்து வருபவை 

செய்தி என்பதனை ஆங்கிலத்தில் News என்கிறோம். News என்பதற்கு North, East, West and South என்ற நான்கு திசைகளிலிருந்தம் பெறப்படுபவை என்ற ஒரு விளக்கமும் உண்டு. அதனால் இந்த திசைகளுக்குரிய முதல் எழுத்துக்களை ஒருங்கிணைத்து- News  என்றும் அழைக்கலாம் என ஒரு எளிய விளக்கமும் உண்டு. இவ் விளக்கம் புதுமையனதாக இருந்தாலும் இன்று நடைமுறையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே உள்ளது. புதியது எதுவோ அதுவே செய்தி (News புதியவைகள்) என்று சொல்லப்படுகின்றது. If it is not new, it cannot be news. புதியது அல்லையாயின் அது செய்தியான இருக்க முடியாது. இன்றைய செய்தியின் மதிப்பு இன்றோடு போய்விடும். நாளை புதிய செய்திகளுக்கான மதிப்பு ஏற்படும். இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே புதியவைகள் செய்திகள் என்று அழைக்கப் படுகின்றன. 


'NeWS"  (Network extensible Window System-) 

இங்கு ஒரே உச்சரிப்பிலும் ஒரே எழுத்துக்களிலும் வரும் 'NeWS"  என்னும் இந்த சொல்லுடன் நாம் குழப்பமடைந்து விடக்கூடது. அந்த சொல்லின் அர்த்தம்: (Network extensible Window System-)  வலையமைப்பு நீட்டிப்பு சாளரபணி முறமை. இங்கு 'e" என்னும் சொல் எப்பொழுதுமே சிறிய எழுத்தாகவே எழுதப்படுகிறது என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.

நாம் அனைவரும் செய்தித்தாள்கள் படிக்கின்றோம். ஏன் அவைகள் செய்தித்தாள்கள் என்று அழைக்கப்படுகிறன. ஏனெனில் அவை செய்திகளை தன்னகத்தே கொண்டுள்ளன என்னதாலாகும். நாம் எவ்வாறு செய்திகளை பெற்றுக் கொள்கின்றோம்? என எண்ணி பார்ப்போமானால் அச்செய்தி களைப் பெற்றுக்கொள்வதற்கு பலவகையான மூலங்கள் பயன்படுத் தப்படுகின்றன: பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம்;. உ-ம் வானொலியில் செய்திகளைக் கேட்க முடியும், தொலைக்காட்சிகளில் கேட்கவும் பார்க்கவும் முடியும், செய்தித்தாள்களில் வாசிக்கமுடியும், இணையத்தில் கணனிமூலம் உலாவி அறிந்து கொள்ள முடியும். எனவே எங்கள் வாழ்க்கையில் தினமும் நாம் சந்திக்கும் ஒரு விடயத்தான் செய்தி ஆகுகின்றன எனலாம். 

எனவே செய்தி என்றால் என்ன? அல்லது 'என்ன", செய்தியை உருவாக்குகின்றது என்று நாம் அடுத்த பிரசுரிப்பில் அலசுவோம்:


தொடரும்...

உசாத்துணை நின்றவை:-

  1. பத்திரிகை இயலுக்கு ஓர் ஆறிமுகம், முதற்பதிப்பு 26 டிசம்பர் 2001, புனித வளன் கத்தோலிக்க அச்சகம், யாழ்ப்பணம்.
  2. தமிழ் மொழியும் இலக்கியமும், தரம்-8  நான்காம் பதிப்பு -2019, கல்வி வெளியீட்டுத் திணைக்களம் இலங்கை
  3. https://en.wikipedia.org/wiki/News, accessed on 25.05.2020
  4. https://en.wikipedia.org/wiki/NeWS, accessed on 25.05.2020

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff