Tuesday, June 2, 2020

செய்தியின் வகைகள்

செய்தி – News


ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை


'செய்தி", 'தகவல்"

தமிழ் மொழியில் 'செய்தி",'தகவல்" ஆகிய இரண்டு சொற்பதங்களும் பயன் படுத்தப்படுகின்றன. தொடர்பாடலில் அடிப்படையான பண்புக்கூறு களுள் இவ்இரண்டு சொற்பதங்களும் ஒரே அர்த்தத்தில் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் 'செய்தி" என்பது தமிழ் மொழிச் சொற்பதமாகும். 'தகவல்"; என்பது அரபு மொழிச் சொற்பதமாகும்.  

தொடர்பாடல் கற்கைநெறியில் 'செய்தி",'தகவல்" ஆகிய இரண்டு சொற்பதங் களும் ஒரே அர்த்தத்தில் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டாலும் அதனை ஆழமாக நோக்குமிடத்து நாம் ஒரு சிறிய வேறுபாட்டையும் இனங் காணமுடியும்.

'ஏதேனும் ஓர் இடத்தில் நடந்த நிகழ்வொன்றை யாராவது அவதானித்து அதை இன்னொரு வருக்கு தொடர்பாடல் செய்வாராயின் அதனை நாங்கள் தகவல் என்கின்றோம்". 

செய்திபற்றி பல்வேறு புலமைசார்ந்தவர்கள் வெளியிட்ட கருத்துககளை நாம் முதல் பிரசுரத்தில் தந்திருந்தோம். இருப்பினும் எளிமையாகச் சொல்வதானால்:' அறிக்கையிடுமளவிற்கு முக்கியத்துவ முடைய, சமூகத் தின் கவனத்தை ஈர்க்கக்கூடியதான, சமூகத்தில் ஓர் அக்கறையை ஏற்படுத்தக்  கூடிய தகவல் ஒன்றையே செய்தி என்று கூறமுடியும்." 



இன்று நாம் செய்தியின் வகைகள் பற்றி நோக்குவோம்: 

செய்தியின் வகைகள்: Classification of News

செய்திகளை- காலத்தின் அடிப்படையில், வாசகரின் அடிப்படையில், முக்கியத்துவத்தின் அடிப்படையில், செய்தி சொல்லும் விதத்தின் அடிப்ப டையில், செய்தியின் பாகுபாட்டின் அடிப்படையில் என பல பகுதிகளாக பிரிக்கலாம்.

காலத்தின் அடிப்படையில் நிகழ்வு நடைபெறும் தன்மையில்: Fast News- விரைவுச் செய்தி, Slow News- விரைவு அல்லாச் செய்தி 

வாசகரின் அடிப்படையில்: Predictable News- எதிர்பார்க்கைச் செய்தி,   Unpredictable  News- எதிர்பாரச் செய்தி 

செய்தி சொல்லும் விதத்தின் அடிப்படையில்: Straight News- நேரடிச் செய்தி,Explanatory News-விளக்கச்செய்தி, Investigative News- புலனாய்வுச்செய்தி.

செய்தியின் பாகுபாட்டின் அடிப்படையில்: Spot News - தளச்செய்தி,  Sports News- விளையாட்டுச் செய்தி, Hot News-சூடான செய்;தி, Crime News- குற்றச் செய்தி, Government News- அரசுச் செய்தி, Court News- நீதிமன்றச் செய்தி, Political News- அரசியல் செய்தி, Parliamentary News-- நாடளமன்றச் செய்திகள், Festival News- விழாச்செய்தி, Medical News - மருத்தவச் செய்தி, Agricultural News-விவசாயச் செய்தி, Economical News-பொருளாதாரச் செய்தி, Cinema News-சினிமாச் செய்தி,  Developmental News- அபிவிருத்திச் செய்திகள், Science News-அறிவியல் செய்தி போன்றவை யாகும். 

International News-சர்வதேச செய்திகள், National News- தேசிய செய்திகள், Regional News-பிரதேச செய்திகள், Local News  உள்ஊர்செய்திகள் எனவும் பிரித்து நோக்கப் படுகின்றது. 

முக்கியத்துவத்தின் அடிப்படையில்: Hard News வன்செய்தி-கடினமான-உறுதிச் செய்தி, Soft News- மென்செய்தி- உறுதியற்ற செய்தி 



இவற்றினை எல்லாம் நோக்கம்போது செய்தியொன்றின் உள்ளடக்கம், இயல்புகள் பற்றி கவனத்தில் கொள்ளும்போது செய்தி பிரதானமாக இரண்டு வகைக்குள் பிரித்துப் இனக்காணமுடியும்: Hard News  வன்செய்தி, Soft News- மென்செய்தி (அமெரிக்காவில் செய்திகளை, கடினமான செய்திகள் என்றும் மென்மையான செய்திகள் என்றும் பிரிக்கின்றனர்)

வன்செய்தி, மென்செய்தி என்பவற்றைப்பற்றி அடுத்த பிரசுரிப்பில் நோக்குவோம்: 



தொடரும்...
உசாத்துணை நின்றவை:-

  1. பத்திரிகை இயலுக்கு ஓர் ஆறிமுகம், முதற்பதிப்பு 26 டிசம்பர் 2001, புனித வளன் கத்தோலிக்க அச்சகம், யாழ்ப்பணம்.
  2. தொடர்பாடலும் ஊடகவியற்கற்கையும், தரம் 11, இரண்டாம் பதிப்பு 2016, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இலங்கை 

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff