செய்தி – News
ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை
'உதாரணம் உண்மையாயிற்று நாயை மனிதன் கடித்தான்."
செய்திக்கு ஒரு வரைவிலக்கணம் கூறுங்கள் என யாரைக் கேட்டாலும் உடனடியாகக் கூறும் வரைவிலக்கணம்: 'நாய் மனிதனைக் கடித்தல் அது செய்தியல்ல மாறாக மனிதன் நாயைக் கடித்தால் அது செய்தியாகும்." ஆனால் இது தொடர்பாடல் துறையில் செய்திபற்றி முன்வைக்கப் பட்ட ஒரு பிரசித்திபெற்ற கூற்றே தவிர செய்தி என்பதற்கு முழுமையான வரைவிலக்கணம் தரும் ஒரு கூற்று அல்ல என்பதை நாம் முதலில் உணரவேண்டும். கீழ்வரும் இந்த விடயங்களை நோக்குவோம்:-
தினமணிப் பத்திரிகை 06.08.1989, 'உதாரணம் உண்மையாயிற்று நாயை மனிதன் கடித்தான்." என்று பிரசுரித்த செய்தி ஒன்றினை நோக்குவோம்: பிரிட்டனில் உள்ள போட் ஓப் போல் என்ற இடத்தை சேர்ந்த 25 வயது மிக்க சார்ண் டெஸ்பொரா என்ற பிரிட்டிஸ் இளைஞன் பக்கத்து வீட்டுக்காரரின் நாயைக் கடித்துக் காயப்படுத்தியமைக்காக 200 ஸ்ரேலிங் பவுண் அபராதம் விதிக்கப்பட்டதுடன், 3 ஆண்டுகள் நாய் வளர்க்கவும் தடை விதிக்கப்பட்டது.
'நாயைக் கடித்த மனிதன் பிரிட்டனில் வினோதம்" என்று சுடர் ஒளி பத்திரிகை 15.11.2004 தலைப்பிட்டு வெளியிட்ட செய்தியும் பிரசித்தி பெற்ற இக்கூற்றை உண்மையாக்கிவிட்டது.
இங்கு நியூயோர்க், சண் பத்திரிகையின் பதிப்பாசிரியர் John Bogart-ஜோண் போகாட் அவர்கள் செய்தி என்ற சொற்பதத்திற்கு ஒத்ததாதக கூறிய விளக்கத்தை நோக்குவது சாலச்சிறந்தது:When
a dog bites a man, that is not news, because it happens so often. But if a man bites a dog, that is news.
Though, this may seem true, sometimes, when a dog, bites a man that can also
become news. Suppose a dog, bites a famous film star, it definitely makes big
news.
“If a dog, bites a man it is not news, but if
a man bites a dog it is news.” Or “When
a dog, bites a man that is not news, but when a man bites a dog that is news”. This
saying has been credited to several newspaper people including: John B. Bogart,
Amos Cummings, and Charles Anderson Dana who all worked at the New York Sun. The
British press baron Alfred Harmsworth who became Lord Northcliffe has also been
named as the originator.
நாய்யொன்று ஒரு மனிதனைக் கடிக்கும் போது அது ஒரு செய்தியல்ல. மாறாக ஒரு மனிதன் ஒரு நாயைக் கடிக்கும் போது அது செய்தியாகும். நாய் மனிதனைக் கடிப்பது, அடிக்கடி நிகழ்பவை ஆனால், மனிதன் நாயைக் கடிப்பது வழமைக்கு மாறான நிகழ்வு. எனவே இந்த கூற்று வழமைக்கு மாறான நிகழ்வுகள் தான் செய்திகளாக முடியும் என்கிறது போலும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் நாய் மனிதனைக் கடிப்பதும் செய்திகளாகலாம்: உ-ம் பிரசித்தி பெற்ற ஒரு படநடிகரை, கிரிக்கெர் வீரரை நாய் கடித்து விட்டால் நிச்சயமாக அது ஒரு பெரிய செய்தியாக மாறும். உ-ம் அவுஸ்திரேலிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மத்தியூவ் கெய்டன் நடைப்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் ஒரு நாய் கடித்துவிட்டது. அந்த நிகழ்வை ஊடகங்கள் விறுவிறுப்பான செய்தியாக வெளியிட்டன. எமது நாட்டில் 'கெய்டனுக்கு நாய்க்கடி" என்று தலைப்பிட்டு வீரகேசரி பத்திரிகை 24.10.2006 ஆண்டு வெளியிட்ட செய்தியும், நாய் கடித்தது என்று மெற்றோ நியூஸ் 24.10.2006 வெளியிட்ட செய்தியும் இதற்கு உதாரணங்கள் ஆகும்.
கடந்ந நூற்றாண்டின் கொடைவள்ளலான சாள்ஸ் ஹென்றி டி சொய்சாவை விசர் நாய் கடித்தபோது அது விறுவிறுப்பான செய்தியானது.
1950இல் ஒரு விசர் நாய் அனுராதபுரப் பாடசாலையில் புகுந்து ஐந்து சிறுவர்களைக் கடித்தபோது அது விறுவிறுப்பான செய்தியானது. '"
Oxford Dictionary:: ஒக்ஸ் போட் அகராதி: புதிய தகவல், சமிபத்திய சம்பவ அறிக்கை (“New information, the report of latest incident”.)
Gerald W. Johnson- ஜெரால்ட் டபிள்யு. ஜோன்சன்- 'பால்ரிமோ- Baltimore சண் பத்திரிகையின் ஆசிரியர்" 'சமிபத்திய சம்பவங்களை எழுத்துக்களாக அறிக்கையாக்கும் போது அவை செய்திகளாகின்றன." “News is the report of such incidents as in
writing them, a first rank journalist feels satisfied”.
'அனுபவம் மிக்க ஆசிரியர் ஒருவர் தனது நாளிதழில் இடம்பெறத்தக்கது என்று எதை நினைக்கிறாரோ அதுவே செய்தியாகும்." என்கிறார்
William F. Brook-- வில்லியம் எஃப் புறுக் 'செய்தி என்பது உண்மையிலேயே எதிர்பாராத ஒரு சம்பவத்தை குறிக்கின்றது." “News is in fact a synonym of the unexpected”.
William Stead- வில்லியம் ஸ்டீட்- 'வழக்கத்திற்கு மாறான, அசாதாரணமான அனைத்தையும் செய்தி என்று அழைக்கப்படுகிறது". “Everything which is extraordinary and unusual is called news”.
Carrel Warren - கார்ல் வார்ன் - சாதாரணமான ஒரு மனிதனுக்கு முன்வைக்கப்படுவதற்கு முன்பு அவர் அறிந்திராத ஒர் அறிக்கையையே நாம் பொதுவாக செய்தி என்கிறோம். இவ்வறிக்கை வாசகர்களுக்கான தகவல்கள், பொழுதுபோக்கு விடயங்களை, ஆர்வத்தைதூண்டும் தகவலுக் கான ஆதாரங்களை உள்ளடக்குகின்றன. “News is usually a report which is not known to
layman before its presentation. This report deals with such activities of man
as are a source of interest, entertainment or information to the readers”.
William Consvenor
Blayer- வில்லியம் கன்வென்னர் ப்லேயர் - பிரபல இதழியலாளர்; - 'தக்க நேரத்தில் பலரும் அறியத்தக்க வகையில் கிடைப்பதே செய்தியாகும்;;;, என்றும் பெரும் பாலான மக்களிடம் பேரார்வத்தைத் தூண்டக் கூடியதுமே சிறந்த செய்தி" என்றும் கூறுகிறார்.
Eric C. Hopwood- எரிக் சி. ஹோப்வூட் - 'மக்களின் ஆர்வத்திற்கு தீனியாக அமைகின்ற முதன் முதலில் தரப்படுகின்ற எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தகவலும் செய்தியாகும்."என்கிறார்
Paul De Mesuniyar - போல் டி மெசுனியர்- 'செய்தி என்பது மக்களுக்கு பாதிப்பையேற்படுத்தும் அவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றதுமான கடந்தகால முக்கிய சம்பவமொன்றுடன் தொடர்புடைய ஒரு புதிய தகவலாகும்."
Charles Anderson Dana-சார்லஸ் ஆண்டர்சன் டானா- 1869-1897 ஆம் ஆண்டு நியூயோர்க் சண் பத்திரிகை நிறுவனத்தை நடத்தியவர் -'ஒரு சமூகத்தின் பெரும் பகுதியின் ஆர்வத்தை தூண்டுவதும் அந்த சமூகத்தின் கவனத்திற்கு முன்பு ஒருபோதும் கொண்டுவரப்படதாததுமான ஏதாவது ஒரு விடயமே செய்தி ஆகும்." என்கிறார். “When a dog
bites a man that is not news, but when a man bites a dog that is news” - Charles
Anderson Dana, who ran the New York Sun from 1869-1897, said
news is: “anything that interests a large part of the community and has never
been brought to its attention before.”
Miltan Birash :'எல்லா உத்வேகமான புதினங்களும் செய்திகளே." என்கிறார்.
Miltan Birash :'எல்லா உத்வேகமான புதினங்களும் செய்திகளே." என்கிறார்.
Tuner Catledge -ரீயூனர் கர்லேட்ச் : 'நேற்று உனக்கு தெரியாத எதுவும் செய்தியாகலாம் " என்கிறார். “News
is anything you did not know yesterday”
H. Maris -எச் மாரிஸ்- அமரிக்க பத்திரிகையாளர்-: 'செய்தி என்பது அவசர அவசரமாக நிகழ்கின்ற ஒரு வரலாறு". என்கிறார்
Stanley Walker, New
York Herald Tribune City Editor in 1930s: “News is based on the 3 W’s: Women,
Wampum and Wrongdoing.” (i.e., sex, money and crime.)
இவற்றை நோக்கும் போது உலகில் உள்ள எல்லா செய்தியாளர்களும் தமக்கு ஏற்ற விதத்தலில் 'எது"ஃ 'என்ன", செய்தி என்பதற்கான விளக்தத்தை, வரைவிலக்கணத்தை முன்வைக்கின்றனர். ஒருவருக்கு செய்தி ஆவது மற்றவருக்கு செய்தி ஆகாமால் போகலாம். எனவே செய்தி என்பதற்கு எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வரைவிலக்கணம் இல்லை என்று சொன்னாலும் யாரும் மறுப்பத்றகில்லை. எனவே நேற்று என்ன நடந்தது? இன்று என்ன நடக்கிறது? நாளை என்ன நடக்கப்போகிறது என்று நாட்டுநடப்புக்களை சொல்வது செய்தியாகும் என்று நாம் ஒரு முடிவுக்கு வரலாம் போலும்.
எனவே நாம் இப்போது செய்தி என்பதனை வரையறை செய்ய முனைவோம்:-
வாசகர்களுக்கு ஆர்வத்தை தூண்டுகின்ற-தேடுகின்ற, தகவலை வழங்குவதாக, பாடம்புகட்டுவதாக பிரசுரிக்கப்படாத மனித செயற்பாடுகளின் தொகுப்பே செய்தி ஆகும். செய்தி என்பது முதலில் வாசகரிடமே வந்து சேரவேண்டும். அதாவது நேரடயாக சூளையிலிருந்து வரும் ஒரு சுடான கேக்கை போன்று இருக்கவேண்டும். முன்னரே பிரசுரத்தில் வந்தவையாக இருந்தால் அது செய்தி அல்ல. மாறாக அவை வேறேதாகவும் இருக்கலாம். செய்தி என்பது மனித செயற்பாட்டுடன் தொடர்புபட்டதாக அல்லது மனிதர்கள், நிகழ்ந்த நிகழ்வில் கட்டயாம் உட்படுத்தப்புடும் போதுதான் அது செய்தியாகும். இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பார்கள். மனித குலத்தின் இழிநிலை மற்றும் மனிதகுலத்தின் பெருமைகளை உள்ளடக்குகின்றது.
செய்தி என்பது என்ன நடக்கிறது என்பது பற்றி பொது மக்களுக்கு கிடைக்கக்கூடிய தற்போதைய தகவல் ஆகும். செய்தி மக்களின் எண்ணங்களைத் தூண்டி, என்னத்தை சிந்திக்க வேண்டும், எவ்வாறு செயற்படவேண்டும் என்பதை மக்கள் மனதில் பதிய வைப்பதாகும். ஒரு நிகழ்வின் சுருக்க மானதும், துல்லியமானதும், உண்மையானதுமான ஒர் அறிக்கையே செய்தி என்பர்கள். குறிப்பிடப்பட்ட ஒரு காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் அறிக்கையே செய்தி என்பார்கள். நிகழ்கால நிகழ்வின் அறிக்கையே செய்தி என்பார்கள். சற்று முன்னர் நடந்த அல்லது மிக உடனடியாக நடக்கவிருக்கிற நிகழ்வின் தகவலே செய்தி என்பார்கள்.
இப்போது நாம் சில உ-ம் நோக்குநோம்: அனுராதபுரத்தில் போக்குவரத்து பேருந்துக்கள் நேருக்க நேர் மோதிக்கொண்டதில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக வானொலி செய்தி ஒன்றில் கேட்கின்றோம். தற்போது அடிக்கடி எங்கும் வீதி விபத்துக்கள் நடைபெற்று மக்கள் இழப்பக்களை சந்திப்பதால், நாம் இதனை ஒரு செய்தியாக கருதாமல் போவதற்கு சந்தர்ப்பம் உண்டு. ஆயினும் அன்று மாலை எங்கள் பிரதேசத்தை சேர்ந்தவர்களும் அந்த விபத்தில் இறந்ததாகக் கேள்விப்படுகின்றோம். இப்போது நாம் அதிக விழிப்புணர்வு அடைகின்றோம். இந்த நிகழ்வு நமக்கு செய்தியாக முக்கியமாகிறது. இப்போது பேருந்தில் பயணித்த பிரயாணிகள் நிலைமை பற்றி அறிய ஆர்வமாக இருப்போம். எத்தனை பேர் பாதுகாப்பாக உள்ளார்கள்? எத்தனை பேர் கயமுற்றிருக்கிறார்கள்? எத்தனை பேர் கவலைக்கிடமாக இருக்கிறார்கள்? எத்தனை பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று அறிய துடித்துக் கொண்டிருப்போம்.
தொடரும்...
தொடரும்...
உசாத்துணை நின்றவை:-
- பத்திரிகை இயலுக்கு ஓர் ஆறிமுகம், முதற்பதிப்பு 26 டிசம்பர் 2001, புனித வளன் கத்தோலிக்க அச்சகம், யாழ்ப்பணம்.
- தொடர்பாடலும் ஊடகவியற்கற்கையும், தரம் 11, இரண்டாம் பதிப்பு 2016, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இலங்கை
- https://en.wikipedia.org/wiki/News, Accessed on 25.05.2020
- https://www.coursehero.com/file/38510021/Citizen-Journalism1-1pptx/,Accessed on 25.05.2020
- http://www.ccsenet.org/journal/index.php/ijel/article/download/70946/39793,Accessed on 25.05.2020
- https://quoteinvestigator.com/2013/11/22/dog-bites/,Accessed on 25.05.2020
- http://studylecturenotes.com/what-is-news-meaning-definition-and-sources-of-news/,Accessed on 25.05.2020
- https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/155004/8/08_chapter%202.pdf,Accessed on 25.05.2020
- http://www.authorstream.com/Presentation/N.VIJI-1923933-definitions-news/,Accessed on 25.05.2020
No comments:
Post a Comment