ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை
வன்செய்தி மற்றும் மென்செய்திகளுக்கு இடையில் எழுத்துப்பாணியில் வித்தியாசத்தை அறிந்துகொள்வது ஓர் ஊடகவியலாளருக்கு அத்தியவசிய மானது. இச்செய்திகள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்டு எழுதப்ப டுகின்றது என்பதையும், வெவ்வேறு செய்தி ஊடகங்கள் எந்த வகையான செய்திகளை வெளியிட எத்தனிக்கின்றன என்பதையும் வைத்து இந்த பாணிகளை உணரமுடியும். இவ்வாறு வேறுபாடுகளை நாம் அறிந்து கொண்டால் அது ஊடகங்கள் எழுதுபவரை தம்பக்கம் ஈர்க்க மிகமுக்கிய வழிகாட்டியாக இருக்கும். வன்செய்தி மற்றும் மென்செய்திக்கும் இடையிலான ஒரு பெரிய வேறுபாடு விளக்கக்காட்சியின் தொனியாகும் (Tone of presentation) வன்செய்திகள் குறிக்கோள்களை, இலக்கை மையமாக கொண்டமைய வேண்டுமென்பதால் வன்செய்திகளுக்கும் மென்செய்திகளுக்கும் இடையில் எழுத்து நடைகணிசமாக வேறுபடுகின்றன.
வன்செய்தி
வன்செய்தி என்பது கணப்பொழுதில் நிகழ்ந்த, நிகழவிருக்கின்ற செய்திகள் மற்றும் உடனடியாக அறிவிக்கப்படும் நிகழ்வுகள் போன்றவற்றை குறிக்கிறது. ஊடகவியலாளர் வன்செய்திகளை எழுதும்போது தனது சொந்தக்கருத்தை அதன்மீது தெரிவிக்கவேண்டிய அவசியமோ-கடப்பாடோ இல்லை. வன்செய்திகள் தலைகீழ் பிரமிட் எழுத்தின் கட்டமைப்பைப் உள்ளவாறே-சீரியவழியில் பின்பற்றி எழுதப்படவேண்டும். வன்செய்திகள் விரைவாகப் படிக்கப்படுகின்றன என்பதை ஊடகவியலாளர் உணர்ந்து மிக முக்கியமான உண்மைத் தகவல்கள் முதல் பந்தியில் அழகுற அமைந்து எழுதவேண்டும். பத்திரிகையியலில் இதை 'தலைகீழ் பிரமிட்" என்று அழைக்கிறார்கள்: என்ன நடந்தது? யார் இதில் ஈடுபட்டனர்? அது எங்கே, எப்போது நடந்தது? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? என்பதனை விளக்கி எழுதவேண்டும். அதனைத் தொடர்ந்து வரும் பந்திகளில்; விவரங்களை அதிகரித்து சேர்த்துக்கொண்டு போகலாம். எனவே வாசகர் முதல் பந்தியைப் படித்துவிட்டு என்ன நடந்தது என்பது பற்றிய நல்ல கருத்தினை புரிந்துகொள்ள வைக்கமுடியும்.
வன்செய்தியில் லீட், (Lead or Lede ) அல்லது முதல் வாக்கியம் செய்தியின் மிக முக்கியமான பகுதியாகும். ஓர் ஊடகவியலாளருடைய லீட் என்ன, எங்கே, எப்போது, ஏன், எப்படி என்று வினாக்களுக்கு விடையை சுருக்கமாக வாசகரிடம் சொல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக, லீட் முழுமையானதாக இருக்க வேண்டுமே ஒழிய அடர்த்தியாக-நெரிசலாக (not crowded) இருக்கக் கூடாது, எனவே செய்தி நன்றாக நகர்த்தப்படுவதற்காக லீட்டை இரண்டு வாக்கியங்களில் அமைக்கலாம். ஒரு வாசகர் முழுமையாக வாசிக்கவில்லை என்றாலும் இதனை வாசித்தபோது என்ன நடந்தது என்பதை அவர் உணர்ந்து கொள்ளத்தக்க வண்ணம் அமைக்கப்படவேண்டும். பத்திரிகையாளர் அமைக்கும் தமது லீட் வினைத்திற னாக அமைந்தால், மீதமுள்ள செய்தியின் பகுதிகள் எழுதுவது மிக எளிதாக அமைந்துவிடும்;. தொடர்ந்து சுருக்கமாக நிகழ்வின் பின்னணித் தகவல்களை எழுதிக்கொண்டே போகலாம். அதிகபட்ச வாசிப்புக்கு ஏற்ற வகையில் சிறிய பந்திகளை மிகசுருக்கமாக எளிய மொழிநடையில் அமைப்பது சாலச்சிறந்துது
வன்செய்திகள் பெரும்பாலும் எல்லோரலும் அடிக்கடி புரிந்து கொள்வது கடினம் என்பதனால் அவை எளிய மொழிநடையில்:;:(Plain language: 3Cs “Clear, Concise and Correct”) ((தெளிவு, சுருக்கம், சரியானது) எழுதப்படுவது வரவேற்கத்தக்கது. வன்செய்திகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த போதிலும், பொதுவாக குறைவான வாசகர்களையே ஈர்க்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு சொற்குறைப்பும் பொருள் செறிவும் கொண்டு வினைத் திறனாக எழுதுவது வரவேற்கத்தக்கது.வன்செய்திகளின் முக்கியத்து வத்தைப் புரிந்துகொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள தகவல்களைப்பற்றி மக்கள் சிந்திக்க வைக்கும் வண்ணம் எழுத்து நடை அமைக்கப்பட வேண்டும்.
வன்செய்திகள் மற்றும் மென்செய்திகள் தொடர்பான மற்றொரு முக்கிய வேறுபாடு பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடுவைப் பற்றியது ஆகும். அதாவது காலத்தோடு இயைந்திருக்கும் இயல்பு ஆகும். கவரேஜின்-coverage அவசரத்தின்- உடனடித்தேவையின் பொருட்டு வன்செய் திகளை கையாளுகின்ற ஒரு செய்தியாளருக்கு மிகவும் இறுக்கமான-குறுகிய காலக்கெடுவே வழங்கப்படுகிறது. உண்மைகளை உறுதிளாக ஒட்டிக்கொண்டு கவிதைமொழியை அல்லது உருவகமொழியை தவிர்த்துக் கொண்டு எழுதப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது. பெரும்பாலான வன்செய் திக்கான நேரடியான அறிக்கையிடல் முயற்சிகள், விளக்கமளிக்கும் அறிக்கையிடலுக்கு வழிவகுக்கின்றன என்பதைக்கருத்தில் கொண்டு, அதில் அறிக்கை செய்பவர் நிரூபிக்கப்பட்ட உண்மைத் தகவல்களின் முக்கியத்து வத்தை சரியாக விளக்கி பொருள்கோடல் செய்து அமைக்கவேண்டும். மேலும் மக்கள் படிப்பதைப், பார்ப்பதை, அல்லது இரசிப்பதைப் புரிந்து கொள்ள தேவையான பின்னணியை பெரும்பாலும் வழங்கும் வண்ணம் அமைக்க வேண்டும்.
மென்செய்திகள்
மென்செய்திகள் அறிவைக் காட்டிலும் மனித ஆர்வங்களை அதிகம் வருடுக் கவருகின்றன. மென்செய்திகள் எழுதுபவர் படைப்பாற்றலுக்கு அதிக முக்கி யத்துவத்தைக் கொடுத்து எழுதவேண்டும். எழுதத்தொடங்கும் போது அவர் எழுதும் தலைப்பைப்பற்றி எந்த அறிவும் இல்லாத ஒருவர் அறிந்து கொள்ள வேண்டியது என்ன என்பதை அவர் தன்னைத்தானே கேட்டுக் கொண்டு அதற்கான விடையாக அந்தத்தகவலைச் சேர்த்து எழுதுவதில் உறுதியாக இருக்கவேண்டும். மென்செய்தி எழுதுபவர் எழுதும் கட்டமைப்பை தனக்கு ஏற்றவாறு கொண்டு தனது தனிப்பட்ட கருத்தை உட்புகுத்தி எழுதும் நெகிழ்வுத் தன்மையை பயன்படுத்தி எழுதலாம்.
எழுதும்போது அந்த செய்தியில் உள்ள அனைத்தும் முற்றிலும் உண்மை என்பதை முயன்றவரை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். ஆனால் ஒரு நிகழ்வுகளின் அல்லது ஒரு நபரின் சுவாரிசமான விபரணங்களை; பயன் படுத்தப் பயப்படாது எழுதவேண்டும். செய்தியை தெளிவாக்குவதற்கு தேவையான விவரங்களை முன்னிலைப்படுத்தவும் சேர்க்கவும் நகைச்சுவை யான கோணங்களைத் தேர்ந்தெடுத்து எழுதவேண்டும். யார் என்ன செய்கிறார்கள், அவற்றை இயக்கும் சக்திகள் மற்றும் நிலைமை எவ்வாறு உணத்துகின்றது. நன்றாக உள்ளதா, நன்றாக தோற்றமளிக்கின்றதா, சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமைகின்றதா எனகண்டறிந்து வாசகர் அதை இலகுவாக கண்டு பிடிப்பதற்கு தனது எழுத்து பாணிமூலம் அழைத்துச் செல்லவேண்டும்.
மென்செய்திகள் பிரபலங்கள், தொழில்நுட்பம் போன்றவற்றைப் பற்றிய வதந்திகளாவும் கூட இருக்கலாம் என்பதை சரியாகக் புரிந்து கொண்டு அதற்கு உரியவாறு கவிதை மொழியை அல்லது உருவகமொழியை அமைத்து எழுதுவது அற்புதமாகும். மென்செய்திகள் ஆசிரியர் தலையங் கங்களாகக்கூட அமைத்து எழுதமுடியும். அவை ஆசிரியர் தலையங்கங்க ளாகவும் ஆக்கப்படுகின்றன. மென்செய்திகள் அகநிலைவாய்த தாக (subjective) அமைக்கப்படுகின்றன. மென்செய்திகள் பொதுவாக தலைகீழ் பிரமிட்டு எழுத்தின் கட்டமைப்பைப்பின்பற்றி எழுதப்படுவதில்லை எனலாம். இந்த வேறுபாடு இலகுவனவை அல்ல. சில வேளைகளில் இவ் இரண்டையும் வேறுபடுத்துவது மிகவும் கடின ஒரு காரியமாகும். உதாரணமாக நாம் ஓர் அரசியல்வாதியின் தனிப்பட்ட வாழ்க்கையில் நேரிட்ட ஒரு செய்தியை வகைப்படுத்துமிடத்து இது மிக கடினமாகலாம்.
மென்செய்திகள்-செய்தியின் பெறுமதியைப்பாதிக்கும் காரணியாகிய: காலத்தோடுஇயைந்திருக்கும் இயல்பு அற்றதாக அமைக்கமுடியும். ஒரு மென்செய்தி, வாசகரை மகிழ்விக்க அல்லது அறிவுரை செய்வதற்கு முயற்சிக்கிறது: உ-ம்:செய்தித்தாள் அல்லது தொலைக்காட்சிகளில் 'நாம் பயன்படுத்தக்கூடிய செய்திகள்" என்று வருபவற்றை நாம் அறிந்திருப்போம்: 'சாக்லேட்டின் நன்மைகள்", 'எடையைக் குறைப்பதற்கான உதவிக்குறிப்பு கள்" உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு சரியாக செய்யவேண்டியவை, புதிய கணனியை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை போன்ற உதவிக் குறிப்புகளாக இருக்கலாம். இத்தகைய செய்திகள் எந்தநேரத்திலும் வெளியிடப்படலாம். இந்தவிடத்தில் எழுதும் நடை மிகவும் நெகிழ்வானதாக அமையும்.
மென் செய்தி எழுதும் போது பத்திரிகையின் பாரம்பரிய விதிகளுக்கு கட்டுப்பட்டு எழுதவேண்டிய கடப்பாடு இpல்லை. வன்செய்தி அவசரத்தில் மிகவிரைவாகப் படிக்கப்படுவதுபோல் ஒரு மென்செய்தி அத்தகைய அவசரத்தில் படிக்கப்படுவதில்லை. எனவே சுவாரஸ்யமான நடையில் ஆழமாக சிறப்புற அமைக்கும் போது மென்செய்தி வாசகருக்கு வாசிக்க ஊக்கமளித்து, தூண்டி பலவிடயங்களை கற்பிக்கும்.
வினைத்திறனான-வலுவான மென்செய்திகள் எழுத உதவும் சில குறிப்புகள்:
- முதலில் எழுதுவதனால்; என்ன ஏற்படப்போகின்றது என்பதை இனங்காணல்
- செய்தி எழுதப்படும் அந்த நபர் அல்லது தலைப்பு ஏன் வாசகருக்கு சுவாரஸ்யமானது? என்பதை அடையாளம் காணல்
- அந்த குறிப்பிட்ட நபர் அல்லது தலைப்பு பற்றி முடிந்தவரை ஆராய்ச்சி செய்து கொள்ள வேண்டும். அவை தொடர்பாக பூரணஅறிவு இருந்தால் அல்லது அந்த விடயத்தைப் பற்றி எவ்வளவு அதிகமாக அறிந்திருக்கின்றோமோ, அவ்வளவு அதிகமாக அச்செய்தி செழிமையாக அமைந்துவிடும் என்பதை உணரல்.
- சிறந்த மென்செய்தி எழுதுவதற்கு பலசெய்தித்தாள்கள் மற்றும் செய்திஇதழ்களை நன்றாக வாசித்தல்.
- சில வகையான மென்செய்திகளை எழுதுவதற்கு சில பாணிகளை பயன்படுத்துவது பரவாயில்லை என்றாலும், நல்ல எளிய மொழி நுட்பங்களைப் (தெளிவான, சுருக்கமான மற்றும் சரியான தொடர்பாடல்) பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது
- எழுதும் செய்தியின் கட்டமைப்பைக் கண்டுபிடிப்பதில் சிக்கல்களை எதிர் கொள்வீர்களாயின், அந்த செய்தியினை நீங்கள் ஒரு நண்பரிடம் சொல்கிறீர்கள் என்று பாசாங்கு செய்யதுகொண்டு முயற்சித்தல்
தொடரும்...
உசாத்துணை நின்றவை:-
- பத்திரிகை இயலுக்கு ஓர் ஆறிமுகம்இ முதற்பதிப்பு 26 டிசம்பர் 2001இ புனித வளன் கத்தோலிக்க அச்சகம்இ யாழ்ப்பணம்.
- https://collegejournalism.wordpress.com/2008/07/15/hard-news-vs-soft-news/
- https://www.vskills.in/certification/blog/news-reporting-understanding-the-difference-between-hard-and-soft-news/
- https://wecommunication.blogspot.com/2016/07/hard-news-and-soft-news-working.html
- https://pdfs.semanticscholar.org/768c/b4b19844e149ef5a75cd16ff531688b5861c.pdf
No comments:
Post a Comment