Monday, June 1, 2020

"செய்தி" -சொற்பதத்தின் உருவாக்கம்

ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை




செய்தி – News  

அனைத்து ஊடக உள்ளடக்கங்களில் செய்தியும் ஒன்றாகும். தொடர்பாடல் செயன்முறைக்கு பல மூலக்கூறுகள் அல்லது பண்புக்கூறுகள் - Elements of Communication இன்றியமையாதவையாகும். இந்தபண்புக் கூறுகள் வினைத்திற னாகச் செயற்படுகின்றபொழுது தொடர்பாடல் செயல்முறையானது வினைத்திறன் மிக்கதாக அயையும் எனலாம் இவற்றுள் அடிப்படையான பண்புக்கூறுகளுள் 'செய்தி–தகவல்" என்பது ஒன்றாகும். இச் சொல் உருவாக்கம் பற்றி சற்று விரிவாக முதலில் நோக்குவோம். 

'செய்தி" , 'தகவல்"

தமிழ் மொழியில் 'செய்தி" , 'தகவல்" ஆகிய இரண்டு சொற்பதங்களும் பயன்படுத்தப்படுகின்றன. தொடர்பாடலில் அடிப்படையான பண்புக் கூறுகளுள் இவ் இரண்டு பொற்பதங்களும் ஒரே அர்த்தத்தில் தான் பெரும் பாலும் பயன்படுத்தப்படுகின்றன. 

ஆனால் 'செய்தி" என்பது தமிழ் மொழிச் சொற்பதமாகும். 'தகவல்"; என்பது அரபு மொழிச் சொற்பதமாகும்.  

செய்தி என்னும் சொற்பதம்  

தொடர்பாடலில் தமிழில் செய்தி என் குறிப்பிடப்படும் சொற்பதம் ஆங்கில மொழியில் நேறள என பயன்படுத்தப்படும் சொற்பதத்திலிருந்தே வந்திருக்கிறது. ஆயினும் ஆங்கிலத்திற்கு “நேறள” எனும் சொற்பதம் எவ்வாறு வந்திருக்கிறது என்று முதலில் நாம் நோக்குவோம்:

ஆங்கில மொழிப் பாவனையில் 14ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட பெயர் அடைச்சொல்லான- “New”  - 'புதிய" அல்லது ““New thing”- 'புதிய விடயம்" என்ற சொல்லிற்கு பன்மை வடிவத்தின் சிறப்புப் பயன்பாடாக ஆங்கில சொல்லாக “News” - 'செய்தி" எனும் சொற்பதம்; பயன்படுத்தப்பட்டிருக் கின்றது. 

மத்திய காலப்பகுதியில் இதற்கு இணையாக  “Newes” என்னும் சொற்பதம் பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலத்தில் “New”- 'புதிய" என்ற சொற்ப தத்திலிருந்து “News” - 'செய்தி" என்னும் சொற்பதம் மாற்றம் பெற்றதைபோல், பழையகால பிரெஞ்சு மொழியில் “Nouveau” –(New” தமிழில் புதியது என அர்த்;தம் பெறும்) இச்சொல்லின் பெண்பால் பன்மை பெயர்ச் சொல் லான் “Nouvelles”, (News- தமிழில் செய்தி) - என மாற்றம் பெற்றதை ஒத்ததாக மாறியிருக்ககூடும் எனகருதப்படுகின்றது. அவ்வாறே இந்த German   - Neues   சொல்லின் வடிவமும் அமைகின்றது.



14ஆம் C நூற்றாண்டிற்கு முன்னர் ஆங்கில மொழி பேசுபவர்கள் பொதுவாக “New”- 'செய்தி" என்ற சொல்லிற்கு பதிலாக “Tidings”- 'செய்தி" என்ற சொற்பதத்தினையே பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இந்த   “Tidings” -என்னும் சொற்பதம் ஒரு நிகழ்வின் அறிவிப்பு என் அன்று பொருள் கொள்ளப்பட்டது. 

11ஆம்C நூற்றாண்டிற்கு முன்னர் பழைய ஆங்கில அடியைக் கொண்ட “Tidung” என்ற சொற்பதம் 'செய்தி" யை குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த “Tidung”  - என்னும் சொற்பதம் நிகழ்வு- சம்பவம் என அர்த்தம் பெற பயன்படுத்தப்பட்டது. 

1923இல் இருந்து வானொலிகள் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரலின்படி நடப்பு நிகழ்வுகளை முன்வைப்பதே செய்தி என்று கூறப்பட்டது. 

1926இல் இருந்து Bad Newsகெட்ட செய்தி என்ற சொற்பதம் மோசமான செய்திகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் நல்ல செய்தி அல்லது ஒரு செய்தியும் இல்லை என்ற சொற்பாவனை 1640களில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இன்று நாம் News என்று பயன்படுத்தும் சொற்பதம் முன்னர் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்று பார்ப்போம்.



(ஆனால் 1889இல் இருந்து செய்தி என்னும் சொல் பதம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என கூறுபவர்களும் உண்டு.) 


நான்கு திசைகளில் இருந்து வருபவை 

செய்தி என்பதனை ஆங்கிலத்தில் News என்கிறோம். News என்பதற்கு North, East, West and South என்ற நான்கு திசைகளிலிருந்தம் பெறப்படுபவை என்ற ஒரு விளக்கமும் உண்டு. அதனால் இந்த திசைகளுக்குரிய முதல் எழுத்துக்களை ஒருங்கிணைத்து- News  என்றும் அழைக்கலாம் என ஒரு எளிய விளக்கமும் உண்டு. இவ் விளக்கம் புதுமையனதாக இருந்தாலும் இன்று நடைமுறையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே உள்ளது. புதியது எதுவோ அதுவே செய்தி (News புதியவைகள்) என்று சொல்லப்படுகின்றது. If it is not new, it cannot be news. புதியது அல்லையாயின் அது செய்தியான இருக்க முடியாது. இன்றைய செய்தியின் மதிப்பு இன்றோடு போய்விடும். நாளை புதிய செய்திகளுக்கான மதிப்பு ஏற்படும். இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே புதியவைகள் செய்திகள் என்று அழைக்கப் படுகின்றன. 


'NeWS"  (Network extensible Window System-) 

இங்கு ஒரே உச்சரிப்பிலும் ஒரே எழுத்துக்களிலும் வரும் 'NeWS என்னும் இந்த சொல்லுடன் நாம் குழப்பமடைந்து விடக்கூடது. அந்த சொல்லின் அர்த்தம்: (Network extensible Window System-)  வலையமைப்பு நீட்டிப்பு சாளரபணி முறமை. இங்கு 'e" என்னும் சொல் எப்பொழுதுமே சிறிய எழுத்தாகவே எழுதப்படுகிறது என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.

நாம் அனைவரும் செய்தித்தாள்கள் படிக்கின்றோம். ஏன் அவைகள் செய்தித்தாள்கள் என்று அழைக்கப்படுகிறன. ஏனெனில் அவை செய்திகளை தன்னகத்தே கொண்டுள்ளன என்னதாலாகும். நாம் எவ்வாறு செய்திகளை பெற்றுக் கொள்கின்றோம்? என எண்ணி பார்ப்போமானால் அச்செய்தி களைப் பெற்றுக்கொள்வதற்கு பலவகையான மூலங்கள் பயன்படுத் தப்படுகின்றன: பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம்;. உ-ம் வானொலியில் செய்திகளைக் கேட்க முடியும், தொலைக்காட்சிகளில் கேட்கவும் பார்க்கவும் முடியும், செய்தித்தாள்களில் வாசிக்கமுடியும், இணையத்தில் கணனிமூலம் உலாவி அறிந்து கொள்ள முடியும். எனவே எங்கள் வாழ்க்கையில் தினமும் நாம் சந்திக்கும் ஒரு விடயத்தான் செய்தி ஆகுகின்றன எனலாம். 

எனவே செய்தி என்றால் என்ன? அல்லது 'என்ன", செய்தியை உருவாக்குகின்றது என்று நாம் அடுத்த பிரசுரிப்பில் அலசுவோம்:


தொடரும்...

உசாத்துணை நின்றவை:-

  1. பத்திரிகை இயலுக்கு ஓர் ஆறிமுகம், முதற்பதிப்பு 26 டிசம்பர் 2001, புனித வளன் கத்தோலிக்க அச்சகம், யாழ்ப்பணம்.
  2. தமிழ் மொழியும் இலக்கியமும், தரம்-8  நான்காம் பதிப்பு -2019, கல்வி வெளியீட்டுத் திணைக்களம் இலங்கை
  3. https://en.wikipedia.org/wiki/News, accessed on 25.05.2020
  4. https://en.wikipedia.org/wiki/NeWS, accessed on 25.05.2020

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff