Wednesday, June 3, 2020

செய்தியின் பிரதானமான வகைகளுக்கு இடையிலான வேறுபாடுகள் : வன் செய்தி மற்றும் மென் செய்தி

செய்தி: – வன்செய்தி-Hard News, மென்செய்தி.-Soft News



ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை



செய்தியின் வகைகள் என பலவற்றை கடந்த பிரசுரத்தில் வெளியிட்டி ருந்தோம். அவற்றை ஆழமாக நோக்கும் போது செய்தியொன்றின் உள்ளடக்கம், இயல்புகள், முக்கியத்துவம் பற்றி கவனத்தில் கொள்ளும்போது செய்தி மிகபிரதானமாக இரண்டு வகைக்குள் பிரித்துப் இனக்காணமுடியும்: வன்செய்தி-Hard News, மென்செய்தி.-Soft News இந்த இரண்டு பிரிவுகளையே செய்தியின் பிரதான வகைகள் என்று அழைக்கப்படுகின்றது 

வன்செய்தி- Hard News :-

பாரிய அளவினருக்குத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய, தேசிய அல்லது சர்வதேச மட்டத்தில் முக்கியத்துவம் கொண்ட நடப்புப் பெறுமதியு டைய- Timeliness செய்திகள் வன் செய்திகள் என அழைக்கப்படும். பெரும்பாலும் நாளந்த செய்தி தாள்களில்- வெளியீடுகளில் முன்பக்கத்தில்-முதலில் இடம்பிடிப்பவை இத்தகைய வன் செய்திகளேயாகும் எனலாம். அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள், பிரபலமான குற்றங்கள் பற்றிய தகவல்கள், போர் சம்மந்தமான விடயங்கள், திடீர் விபத்துக்கள், திடீர் அனர்த்த நிலமைகள், அரசியல், பொருளாதார மற்றும் பண்பாடு பற்றிய முக்கியதுவம் பெற்ற விடயங்கள், ஆகியவற்றை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். ஒப்பீட்டு ரீதியில் பெரும்பாலும் புரோட் சீட் அளவுடைய செய்தித் தாள்கள் இவ்வகை செய்திகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றன.  

அவசரமாக அறிக்கை செய்ய வேண்டிய செய்திகளை வன் செய்தி எனப்படுகின்றது. அவை தரவுடன் கூடிய உண்மைக் செய்திகள், அவை பகுப்பாய்விற்கு கிடைக்கக்கூடிய நிகழ்வுகள் குறித்தவை. அரசியல், குற்றம், பொருளாதாரம், சர்வதேச விவகாரங்கள், இயற்கை பேரழிவுகள், கலவரம் போன்ற செய்திகள் இதற்கு உதாரணங்களாகும்.


இந்தியாவிற்கும் இலங்கைக்கும் வர்த்தக ரீதியான உடன்படிக்கைக்காக ஒரு கலந்துரையாடல் நிகழ்கிறது என்றால் அது வன்செய்திக்கு உதாரணமாக கூறலாம் அல்லது. எமது இலங்கை நாட்டினுடைய பிரதமர் நாடாளமன்றத்தில் வீதி அபிவிருந்தி அல்லது கொழும்பு துறைமுக அபிவி ருத்தி சம்மந்தமாக ஒர் அறிக்கையினை வெளியிடுவாராயின் அது ஒரு வன்செய்தியாகும்.நாட்டின் நாடளமன்ற பேரவையில் 2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை சனதிபதி அவர்கள் அறிவித்தார். இது வன்செய்திக்கு ஒர் உதாரணமாகும். அறிவியல் அறிஞர்கள் அறிவியல் மாநாடுகளில் வெளியிடும் செய்திகளும், தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய மாநாடுகளில் கூறும் செய்திகளும் கடினமான செய்திகளுக்கு எடுத்துக்காட் டாகும்.

உண்மையான நேரடியான நம்பத்தகுந்த கருத்தாழம் மிக்க செய்திகளே வன்செய்திகள் ஆகும். இச்செய்திகள் உண்மை சார் அணுகு முறைகளை தாங்கி நிற்கும். அதாவது என்ன நடந்தது? ஏன் நடந்தது?, எங்கே நடந்துது? யார் யார் தொடர்பு பட்டிருக்கிறார்கள்? எப்போது நடந்தது? எப்படி(எவ்வாறு) நடந்தது? என்ற வினாக்களுக்கு வர்ணனைகள் ஏதுமற்று நேரடியாக உண்மையான விடைகளை கொடுத்து ஆதேவேளை மக்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் செய்திகளாக இவை வரும்.  What happened? Why did it happen??, Where did it happen? Who was involved? when did it happen? How it was happened?    

It is hard news that catches readers- The Mr Lord North Cliffe- வன்செய்திகளே வாசகர்களுக்கு பிடிக்கும் என்ற நோர்த் கிளிவ் பிரபுவின் கூற்று இங்கு நோக்கத்தக்கது. 


மென்செய்தி- Soft News

சமூகத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத ஆனால் பலரது கவனத்தையும் விருப்பத்தையும் பெற்ற, மனிதனுடைய உணர்வுகளைத் தூண்டுகின்ற செய்திகளை மென் செய்திகள் என அழைப்பர். அன்பு, கருணை, துக்கம், வைராக்கியம், குரோதம், போன்ற உணர்வுகளை அடிப்படையாக கொண்ட செய்திகளை இவ்வகைச் செய்திகளுக்குள் நோக்கலாம். இங்கு மொழி நடையானது படைப்பற்றல் மிக்கதாக இருக்கும். வாசகர்கள் இச்செய்திகளை வாசிப்பதற்கோ அல்லது அறிந்து கொள்வதற்கோ ஆர்வம் காட்டுவர். உடனடியாகப் பாமர வாசகர்களும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியவை மென்மையான செய்திகளாகும். திரைப்பட வெளியீடு, தேர்தல் முடிவுகள், கிரிக்கெர் போட்டியின் முடிவுகள் ஆகியவற்றை மென்மையான செய்திகளாகக் கருதலாம். ஒப்பீட்டு ரீதியில் பெரும்பாலும் டப்லொய்ட் அளவுடைய செய்தித் தாள்கள் இவ்வகை செய்திகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றன.  

ஒரு படநடிகருடைய அல்லது கிரிக்கெர் வீரருடைய திருமணக் கொண்டாட்ட நிகழ்ச்சி பற்றிய செய்தி மென் செய்திக்கு உதாரணமாகும். அல்லது பிரபல கிரிக்கெர் வீரர் ஒர் அனாதை விடுதியை தரிசித்து அங்கு உள்ளவர்களுடன் மதிய போசனம் அருந்தினார் என்றால் அது இதயத்தை நெகிழவைக்கும் ஒரு மென்மையான செய்தியே. 

மென்மையான செய்திகள் உலக நிகழ்வுகள், மனித ஆர்வக் கதைகள் அல்லது பொழுதுபோக்கு செய்திகள் பற்றிய பிற பின்னணி தகவல்களை வழங்கும் செய்திகளை மென் செய்திகள் எனப்படுகின்றது. இவை தீவிரமான விடயங்களைக் கையாள்வதில்லை என்பதால், இவை 'மென்மையானவை" என்று பெயரிடப்படுகின்றன. உ-ம் :விளையாட்டுச் செய்திகள், பிரபலங்களின் செய்திகள் அல்லது மனித ஆர்வம் -உணர்ச்சிகளைக் கையாளும் மனித ஆர்வக் செய்திகள்  ஆகியவை அடங்கும்.


சமூகத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாத ஆனால் பலரது கவனத்தையும், விருப்பத்தையும் பெற்ற மானிட உணர்வுகளை தூண்டுகின்ற செய்திகள் ஆகும். இங்கு பயன்படுத்தப்படும் மொழி படைப்பாக்கமிக்க மொழியாவதோடு இத்தகைய செய்திகளை வாசிக்கும் வாசகர் மகிழ்வூட்டலைப் பெறுவர். அதேபோல் கோபம், கவலை முதலான உணர்வுகளைத் தூண்டும் செய்திகளும் இதிலடங்கும்.

கவர்ச்சியான உண்மைக் கருவிற்கு கற்பனைவளமூட்டப்பட்டு நம்பகத்தன்மை சற்றுக் குறைந்த செய்திகளை மென்செய்திகள் என்றும் கூறலாம். 

மென் செய்திகள் வாசகர்களை மகிழ்விப்பதாகவும் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்குவதாகவும் இருக்கும். நாம் தொலைக்காட்சியில் - வானொலியில் - பத்திரிகைகளில்;; பாடித்திருக்கிகும்- 'நீங்கள் பாவிக்கலாம் என்னும் செய்தி", 'உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது எவ்வாறு கால் கைகளை சரியாக நீட்டி மடக்கவேண்டும் என்னும் குறிப்பு வழங்கல்.",  'ஒரு கணனியை கொள்வனவு செய்யும்போது கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்." போன்றன மென் செய்திகளுக்கு இன்னும் சில உதாரணங்கள்.

உத்தியோக பூர்வமான செய்திகளைக் காட்டிலும் உணர்வுபூர்வமான செய்திகளையே வாசகர்கள் விரும்புகின்றனர். உறுதியான செய்திகளைக் காட்டிலும் உறுதியற்ற செய்திகளையே விரும்பிப் படிக்கின்றனர். இவை பொழுதுபோக்கு வாசிப்புப் பொல் அமைந்து விடுகின்றன. 



செய்தியாளன் செய்தியினை எழுதுகின்ற போது நாம் மேலே குறிப்பிட் இந்த வினாக்களுக்கு கிடைக்கும் பதிலில் விடயங்களைச் சேகரித்து, அதனை அழகுற ஒழுங்குபடுத்தி வாசகர்களைக் கவரத்தக்க வகையில் படைக்க வேண்டும் என்பதை மனதில் எப்போதும் வைத்துக்கொள்ள வேண்டும். 

இதில் எதற்கு முதலிடம் கொடுப்பது என்ன நடந்தது என்பதற்கா? மனிதருக்கு முதலிடம் கொடுப்பதா? சம்பவம், நிகழ்ந்த விதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதா? என்பதையெல்லம் நிகழ்ச்சியின்-செய்தியின் மதிப்பிற்குத் தக்கதாக முடிவெடுத்து படைக்கவேண்டும். எல்லா வினாக்களுக்கும் விடை அளிக்க முடியவில்லை என்றாலும் முடிந்தவரை எல்லா வினாக்களுக்கு விடை அளிப்பது விரும்பத்தக்கது. சில வேளைகளில் எவர்? எப்பொழுது? என்ன? எங்கே? எப்படி? என்ற வினாக்களுக்கு விடையை விளக்கிக்கொண்டு வரும்போ? அந்த நிகழ்வின் பின்னணியில் ஏன்? என்ற வினாவிற்கான விடையும் தெளிவாகிவிடும் என்பதையும் கருத்தில் நோக்கலாம்.  



தொடரும்...

உசாத்துணை நின்றவை:-

  1. பத்திரிகை இயலுக்கு ஓர் ஆறிமுகம்இ முதற்பதிப்பு 26 டிசம்பர் 2001இ புனித வளன் கத்தோலிக்க அச்சகம்இ யாழ்ப்பணம்.
  2. தொடர்பாடலும் ஊடகவியற்கற்கையும், தரம் 11, இரண்டாம் பதிப்பு 2016, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இலங்கை 
  3. https://www.vskills.in/certification/blog/news-reporting-understanding-the-difference-between-hard-and-soft-news/, accessed on 01.06.2020
  4. https://www.researchgate.net/publication/249689936_Hard_news_soft_news_'general'_news_The_necessity_and_utility_of_an_intermediate_classification,accessed on 01.06.2020
  5. https://wecommunication.blogspot.com/2016/07/hard-news-and-soft-news-working.html,accessed on 01.06.2020


No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff