Friday, June 5, 2020

செய்தி உள்ளடகத்தின் அடிப்படையிலான செய்தி வகைப்பாடுகள் இரண்டினைச் சுருக்கமாக அறிமுகப்படுத்துவோம்


ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை




செய்தியொன்றின் உள்ளடக்கம், இயல்புகள், முக்கியத்துவம் பற்றி கவனத்தில் கொள்ளும்போது செய்தி மிகபிரதானமாக இரண்டு வகைக்குள் பிரித்துப் இனக்காணமுடியும்: வன்செய்தி, மென்செய்தி இந்த இரண்டு பிரிவுகளையே செய்தியின் பிரதான வகைகள் என்று அழைக்கப்படுகின்றது 

வன்செய்தி



சமூகத்தின் பெரும்பான்மையான மக்களுக்குக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் சம்பவங் களை அறியப்படுத்தல்-தருவது, தேசிய-சர்வதேச அளவிலான முக்கியமான நிகழ்வுகள் குறித்து அறிக்கையிடும் செய்திகளே வன்செய்தி ஆகும்.

பொதுமக்களுக்கு அதிக முக்கியத்துவமும் தாக்கமும் கொண்டதகவல்கள் செய்திப்பத்திரிகையின் முதல் பக்கத்திலேயே அதிகம் காணப்படுகின்றன. செய்திப்பத்திரிகையில் முதற்பக்கத்தில் பெரும்பாலும் காணக்கிடைப்பது வன்செய்திகள் ஆகும்.

வன்செய்திகளின் தாக்கம் கூடுதலாக இருந்தாலும் பலர் மென் செய்திக ளுக்கு-சுவையான செய்திகளுக்கு விருப்பத்தைத் தெரிவிப்பார்கள் என்பதை யும் நாம் மறக்கக்கூடாது.

சமூகத்திலுள்ள பெரும்பான்மையான மக்கள் அதிகம் கவனம் செலுத்துவது வன்செய்திகளின் பாலாகும். ஒரு நாட்டின் எரிபொருள் விலைகள் அடிக்கடி தளம்பிச் செல்வது பற்றிய ஊடக அறிக்கையிடல்களில் அவதானிக்கக் கூடியதாக இருந்தால் இதனையும் ஒரு வன்செய்தி அணுகு முறையின் முக்கிய அம்சமாகும் எனகூறலாம். செய்திஅறிக்கை யிடலில் (பத்திரிகை யில்) மிக முக்கியமான தகவல் முதலில் வெளிப்படுத்தப்படுவது வன்செய்தி அறிக்கையிடலில் நிகழ்கின் றது.

'தொலைக்காட்சி அலைவரிசைகளில் இன்று வெளியாகும் பெரும்பாலன செய்திகள் வெறும் கதையாடல்களாகவே உள்ளன" என ஒருவர் கூறிகின்றார் எனின் அதன் அர்த்தம் மேற்படி குறித்த அலைவரிசைகள் வன் செய்திகளின் பால் குறைந்த கவனம் செலுத்துகின்றன என்பதாகும்

பேருந்து விபத்தில் 30பேர் மரணம், அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவுப்படி அதிகரிக் கப்பட்டது என்னும் தலைப்பில் வெளியாகும் செய்திகள் வன்செய்திக்கு உதாரணங்களாகும்.

மென்செய்தி -சுவையான செய்தி:-


மனிதர்களைக் கவரும் அல்லது ஆர்வமூட்டவல்ல கதைகளை அடிப்படை யாகக் கொண்டதோடு மனிதரது வாழ்வில் தீவிரமான விளைவுகளை உருவாக்காதது செய்திகள் மென்செய்தி- சுவையான செய்தி ஆகும். இதனை பெரும்பாலான வாசகர்கள் வாசிப்பதற்கு விருப்பம் காட்டுவர்.

சமூகத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாத ஆனால் பலரது கவனத்தையும், விருப்பத்தையும் பெற்ற மானிட உணர்வுகளை தூண்டுகின்ற செய்திகள் மென்செய்திகள் ஆகும். இங்கு பயன்படுத்தப்படும் மொழி படைப்பாக் கமிக்க மொழியாவதோடு இத்தகைய செய்திகளை வாசிக்கும் வாசகர் மகிழ்வூட்டலைப் பெறுவர். அதேபோல் கோபம், கவலை முதலான உணர்வுக ளைத் தூண்டும் செய்திகளும் இந்த மென் செய்திகளில் அடங்கும். டப்லொய்ட் செய்திப்பத்திரிகைகள் மென் செய்திகளுக்கு அதிக முக்கியத்து வம் அளிக்கின்றன எனலாம். தொலைக்காட்சியில் செய்தி சஞ்சிகை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்ற போது அவற்றுள் மென்செய்தி உள்ளடக்கி இருப்பதற்கும் சந்தர்ப்பங்கள் உண்டு. பெரும்பாலான மக்களின் கவனத் தைக் கவர்வது மற்றும் அவர்களது உணர்வுகளுக்குத் தீனி போடுவதாக அமையும் செய்தி மென்செய்தி ஆகும். வார இறுதிப் பத்திரிகையில் கூடுதலாகக் காணக்கிடைப்பது மென்செய்தி- சுவையான செய்திகள் ஆகும்.

முன்னாள் கிரிக்கெற் வீரருக்குத் திருமணம். பூனகரியில் நடைபெற்ற பூஜை வழிபாடு என்னும் தலைப்புக்களில் வெளியாகும் செய்திகள் மென்செய்தி க்கு உதாரணங்களாகும்.



No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff