05.08.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது என்று இயேசு கூறியதை கேட்ட ஒரு குடிகாரன் அவரது குடிப்பழக்கம் காரணமாக அவனருடைய குடும்பம் மிக்க பிரச்சினைக்குள் இரும்பதை அறியாமல் தொடர்ந்தும் அதே நிலையில் வாழ்ந்துவந்தான். தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் குடிப்பதில் செலவிட்டு வந்தார். அவர்ஒரு நாள் கேரளத்தில் உள்ள தியான மடம் சென்று திரும்பினார். இயேசுவின் மீது ஆழ்ந்த பற்றுக் கொண்டார். இயேசுவின்மீது கொண்ட பக்தி காரணமாக அவன் குடிப்பதை நிறுத்திவிட்டார். சில மாதங்களுக்குப் பின்னர் வீதியில் சென்று கொண்டிருந்தபோது முன்னர் அவரோடு குடித்துக் கொண்டிருந்த ஒருவரை சந்தித்தார். நண்பா நீ இப்போதெல்லாம் குடிப்பதற்கு வருவதில்லையே என்று கேட்டார். நான் இயேசுவைச் சந்தித்தேன். அவரை நான் நம்புகிறேன். இப்போது குடிப்பதை நிறுத்திவிட்டேன் என்றார். ஓ நீ இயேசுவை நம்புகிறாயா. அவர் தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியதாக சொல்லப்படுவதையெல்லாம் நம்புகிறாயா எனக் கேட்டார். இயேசு தண்ணீரை இரசமாக மாற்றியதை நான் பார்க்கவில்லை. ஆனால் அவர் பீரையும் விஸ்கியையும் என் குடும்பத்தில் அனைவருக்கும் உணவாகவும் உடையாகவும் மாற்றியுள்ளார் என்பதை நம்புகின்றேன் என்றார். நான் இப்பொது அழிந்து போகும் உணவுவை அல்ல அழியா வாழ்வு தரும் உணவை அன்றாடம் அருந்த ஆவலாய் இருக்கின்றேன் என்றார்.
நாம் இரு விதமான உணவுகளைக் காண்கிறோம். அழிந்து போகும் உணவு. இந்த உணவுக்காகத்தான் நாம் அனைவரும் ஆர்வத்துடன் உழைக்கின்றோம். இடையூறுகளைச் சகித்துக்கொள்கின்றோம்.அழியாத வாழ்வு தரும் உணவாக இறைமகன் இயேசு இருக்கிறார். அவரது மொழியும், உடலும் நிலைவாழ்வைத் தருகின்றன. ஆனால், இவற்றின்மீது ஆர்வமற்றவர்களாக, நம்மில் பலரும் வாழ்கிறோம். மெல்ல, மெல்ல நாம் இறைப்பற்றை, ஆன்மீகத்தின் அடிநாதத்தை இன்று இழந்து வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இறைவன் தரும் அமைதி, ஆற்றல், மகிழ்ச்சியைவிட உலக இன்பங்கள், உணவு, உல்லாசங்கள் பெரிய மதிப்பீடுகளாக மாறி வருகின்றன. நாம் வயிறே நிஜம், வயிறே வாழ்வு, வயிறே தெய்வம், என்பதைப் போல அற்ப வயிற்றுப் பசிக்காக, உண்மையான வாழ்வு தரும் கடவுளை ஏற்க மறுக்கின்றோம். போதைப் பொருட்களில் சுற்றிச் சுற்றி வந்து சுகம் அடைந்தவன் போல, திருட்டுப் பழக்கத்தில் திருடித் திருடி மகிழ்ந்தவன் போல பிறரைப் பற்றிக் குறைகூறிக் குறைகூறி மீள முடியாதவன் போல நாம் செற்ப வாழ்வு கிடைத்தும் அற்ப வயி;றறுப் பசிக்காக அற்ப உணவிற்காக அண்டவரை அவமதிக்கின்றோம். எனவே, இன்று நற்செய்தியில் இயேசு நமக்கு ஓர் எச்சரிக்கை அழைப்பு விடுக்கின்றார்; போலும். அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் தருவார். எனவே, நம் அன்றாட வாழ்வில் இறைவார்த்தைக்கும், நற்கருணைக்கும், இறைத் திருவுளத்துக்கும் நேரமும், ஆற்றலும் செலவழிக்க முன்வருவோம். அப்போது மற்ற அனைத்தையும் இறைவன் நமக்கு நிறைவாகத் தருவார்.

அனைத்தும் அளித்த இறைவன், மரத்தை நட்டவன் தண்ணீர் ஊற்றுவது போல, பெற்றெடுத்தவர்கள் பேணி வளர்ப்பது போல அழைத்து வந்த இறைவன் எமக்கு நிலைவாழ்வு தரும் உணவை அளிக்க காத்திருக்கின்றார். அழிகின்ற உடலை அதிகம் பேணும் போதும், அதிகம் பராமரிக்கின்ற போதும் அழியாத ஆன்மா நினைவுக்கு வருவதில்லை. இன்றையச் சமுதாயத்தில் தேடல்கள் பலவாயுள்ளன. சிலர் வேலைக்காக அலைகின்றார்கள். வேலை கிடைத்தால் பணத்துக்காக அலைகின்றார்கள் பணம் கிடைத்தால் புகழுக்ககாக அலைகின்றார்கள். தேடுவது அனைத்தும் நல்லவை தான். ஆனால் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். வாழ்வு தரும் வார்த்தைக்காக தேடி ஓடுவோம். பல மைல்கள் கடந்து வாழ்வு தரும் வார்த்தைக்காக அவரிடம் தேடி ஓடி வருவோம். இயேசு, அங்கே உண்மையான வார்த்தைகளை அள்ளிக் தாருவார் அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். அழியாத நிலையான உணவிற்காகவே உழைப்போம்.
அமெரிக்கா அதிபராக நிக்சனின் இருந்தகாலத்தில் அவரது அலுவலகத்தில் பணிபுரிந்த சார்லஸ் கோல்சன் கொடிக்கட்டி பறந்தவர். அவருக்கு இருந்த அணையாத தாகம் கடவுள் இல்லாமையே. இறைவனைத் தவிர்த்த எந்த மகிழ்தச்சியும் உண்மை மகிழ்ச்சியாகது என உணர்ந்தார். அன்றிரவே தனியாகச் செபிக்க ஆரம்பித்தார். அவர் மனமாற்றம் பெற்றார். அவர் தனது பணியை உதறிவிட்டு இயேசுவின் பக்தராக மாறினார்.அமெரிக்கா முழுவதும் ஆச்சரியப்பட்டது. அமெரிக்காவின் செய்தி ஏடுகள் சார்லஸ் கோல்சன் மனம் மாறி கிறிஸ்துவின் சீடரானார் என அவரை வர்ணித்தன.
இறைவனைத் தவிர்த்த எந்த மகிழ்தச்சியும் உண்மை மகிழ்ச்சியன்று. இவையாவும் இன்றிருந்து நாளை மறையக் கூடியன. அழிந்து போகும் உணவுக்கு ஒப்பானவை. அழியும் இன்பங்களில் அமிழ்ந்து அழிந்துவிடாது நாம் சாதுரியாமாக வாழ்வோம். இயேசுவில் நிலைவாழ்வை, நிறைவாழ்வைப் பெறுவோம்.
No comments:
Post a Comment