Sunday, January 27, 2013

உண்மையை என்றும் உரைப்பவர்களில் நாமும் ஒருவராவோம்


03.02.2013 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

 
நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்று இயேசு கூறும் இறைவார்த்தை பகுதி இன்று நற்செய்தியில் நமக்கு தரப்படுகின்றது. 32ஆண்டுகளுக்கு முன், எல் சால்வதோர் நாட்டில் சான் சால்வதோர் நகரில் பேராயராய் இருந்த ஒஸ்கார் ரொமேரோ 1980ஆம்ஆண்டு மார்ச் 24 காலை7 மணியளவில் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது, படை வீரன் ஒருவன் குறிவைத்து சுட்டான். ஒரே ஒரு குண்டு. பேராயரின் இதயத்தில் பாய்ந்தது. திருப்பலியை நிறைவு செய்யாமலேயே, பீடத்தின் மீது சாய்ந்து பலியானார் அவர். ஒஸ்கார் ரொமேரோ இறந்த பத்து ஆண்டுகளில் திருத்தந்தையாக இருந்த இரண்டாம் ஜான் போல்; ஒஸ்கார் ரொமேரோ இறைவனின் அடியார் என்ற நிலைக்கு உயர்த்தினார்

ஒஸ்கார் ரொமேரோ பேராயர் கொலைசெய்யப்படுவதற்கு என்ன காரணம்? என கூர்ந்துநோக்கினால் கொலை செய்யப்படுவதற்கு முந்திய நாள், பேராயர் ஒரு பொதுக் கூட்டத்தில் மக்களை அச்சுறுத்தும் வண்ணம் சுற்றி வளைத்து ஆயுதம் தாங்கி நின்றிருந்த வீரர்களைப் பார்த்து: சகோதரர்களே, இங்கு நீங்கள் சூழ்ந்திருக்கும்  இந்த மக்கள் மத்தியில் தான் நீங்கள் பிறந்து வளர்ந்தீர்கள். இவர்கள் உங்கள் சகோதரர்கள். உங்கள் சகோதரர்களையே நீங்கள் கொன்று வருகிறீர்கள். மக்களைக் கொல்லும் படி உங்களுக்குத் தரப்படும் எந்த ஆணையும் இறைவன் தந்துள்ள 'கொலை செய்யாதே' என்ற அந்த கட்டளைக்கு உட்பட்டதே. இறை கட்டளையை மீறி உங்களுக்குத் தரப்படும் நெறியற்ற ஆணைகளுக்கு நீங்கள் கீழ்படியத் தேவையில்லை. இந்த நெறியற்ற ஆணைகளுக்கு கீழ்படிவதைவிட, உங்கள் மன சாட்சிக்குக் கீழ்படியுங்கள். இந்த அராஜகத்தைப் பார்த்துக் கொண்டு திருச்சபை மௌனமாய் இராது. கடவுளின் பெயரால், தினமும் விண்ணை நோக்கிக் குரல் எழுப்பும் இந்த மக்கள் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், உங்கள் ஆயர் என்ற முறையில் ஆணை இடுகிறேன், உங்கள் அராஜகத்தை நிறுத்துங்கள். என்று கூறினார்.

ஆயர் எடுத்துரைத்த உண்மைகள் மிகவும் கசந்திருக்க வேண்டும். அதனால், அடுத்த நாள் காலை அந்தப் படைவீரர்களில் ஒருவன் ஆயரது உயிரைப் பறித்தான். இன்று உலக அரங்கில் பல்வேறு நிலைகளில் அவரை உண்மைக்காக, நீதிக்காக உயிர் துறந்த ஒரு தலைவராகப் போற்றுகின்றனர். இருபதாம் நூற்றாண்டில் மனித சமுதாயத்தை நல் வழி நடத்திய பல தலைவர்களில் ஒருவராக பேராயர் ரொமேரோவைக் கருதுகின்றனர். பேராயர் ரொமேரோ ஓர் இறைவாக்கினர். இறைவனின் வார்த்தையை, அது கூறும் உண்மைகளைக் கலப்படமில்லாமல், எந்த வித அலங்காரமும் இல்லாமல் எடுத்துச் சொன்னவர். இறைவாக்கினர்கள் சராசரி மனிதர்கள் அல்ல. தனித்து நின்று, இறைவனின் வார்த்தையைத் தைரியமாக முழங்குபவர்கள். ஒஸ்கார் ரொமேரோ 80களில் இறைவார்த்தையை முழங்கினார். சுடப்பட்டு இறந்தார். மார்ட்டின் லூத்தர் கிங் 60களில் அமெரிக்காவில் இறைவாக்கை எடுத்துரைத்தார். குண்டடிபட்டு இறந்தார். இறைவாக்கினர் பேசுவது பொதுவாக எல்லாரையும் சங்கடப்படுத்தும் என்பதால், அவருக்கு வரவேற்பு இருக்காது. இந்த எண்ணத்தை இயேசு இன்றைய நற்செய்தியில் தெளிவாகச் சொல்கிறார்.

இயேசு தான் வளர்ந்த ஊரான நாசரேத்துக்கு ஒரு சில உண்மைகளைச் சொல்ல ஆரம்பித்தார். வளர்ந்த ஊர் என்பதால், சிறு வயதிலிருந்து இயேசு அங்கு நிகழ்ந்த பல காரியங்களைப் பார்த்து, உணர்ந்து வந்தவர். அவர்கள் எல்லாருக்குமே தெரிந்த பல நெருக்கமான, அதேநேரம் சங்கடமான, உண்மைகளைச் சொன்னார் இயேசு.

உண்மை உள்ளத்தை ஊடுருவிய போது, பலர் மனம் திருந்துகிறார். ஆனால், உண்மைகள் உரைக்கப்பட்ட பல நேரங்களில் இவ்வாறு நன்மைகள் நடப்பதில்லை. பெரும்பாலும் உண்மைகள் கோபத் தீயை கொழுந்துவிட்டு எரியச் செய்துள்ளன. பல இடங்களில் உண்மைகள் சொல்லப்பட்ட போது, அந்த உண்மைகளை ஊமையாக்க, உண்மை சொன்னவர்களை ஊமையாக்க, அவர்கள் உயிரைப் பறித்த சம்பவங்கள் பல உண்டு. இன்று நற்செய்தியிலும் இயேசுவுக்கு அந்த நிலைதான். இயேசு சொன்ன உண்மைகளைக் கேட்க முடியாமல், அவர்கள் கோபம் கொலை வெறியாகிறது. இந்த முறை இயேசு தப்பித்துக் கொள்கிறார். அவர் நம்மைப் போல் ஒரு சராசரி மனிதராய் இருந்திருந்தால், இந்த ஒரு அனுபவம் எனக்குப் போதும். நான் ஏன் இந்த ஊருக்கு உண்மைகளைச் சொல்லி ஏச்சும், பேச்சும் பெற வேண்டும்? விட்டிருந்தால், இவர்கள் நம்மை இன்று கொன்றிருப்பார்கள். தேவையில்லை இவர்கள் சகவாசம் என்று இயேசு ஒதுங்கி இருக்கலாம். ஆனால், அன்று இறைவாக்குரைக்கத் தொடங்கிய அவரது பணி, கல்வாரி பலியில் தான் முடிந்தது.

மனித வரலாற்றில் பல்லாயிரம் இறைவாக்கினர்கள் இதையேச் செய்தனர். உண்மையைச் சொன்னார்கள், உயிரைத் தந்தார்கள். உண்மைக்கும், உயிர்பலிக்கும் அப்படி ஒரு நெருங்கிய உறவு. உண்மை கசக்கும், உண்மை எரிக்கும், உண்மை சுடும் என்று உண்மையின் பல விளைவுகளைச் சொல்கிறோம். உண்மை பல வேளைகளில் நம்மைச்  சங்கடப்படுத்தும். உலகத்தின் கண்களைக் கட்டிவிட்டதாய் நினைத்துக் கொண்டு, நம் கண்களை நாமே கட்டிக்கொண்டு தவறுகள் செய்யும்போது, உண்மை வந்து நம் கண் கட்டை அவிழ்க்கும். கட்டவிழ்க்கப்பட்டதும் அந்த ஒளியை, உண்மையைக் காண முடியாமல் நம் கண்கள் கூசி நிற்கும். உண்மை நம்மைத் தோலுரித்துக் காட்டும். உண்மையின் பின் விளைவுகளை இப்படி நாம் பட்டியலிடும் போது, ஒரு முக்கியமான அம்சத்தையும் நினைத்துப்பார்க்க வேண்டும். உண்மை விடுவிக்கும். உண்மை மீட்பைத்  தரும். எனவே உண்மையின் ஒளியில் எம் வாழ்வை மீட்பின் பாதையில் நகர்த்துவோம்



03.02.2013 cz;ikia vd;Wk; ciug;gth;fspy; ehKk; xUtuhNthk; 
k.gpuhd;rp];f; - fj;Njhypf;f Rje;jpu gj;jpupifahsh;
ehd; cWjpahf cq;fSf;Fr; nrhy;fpNwd;. ,iwthf;fpdu; vtUk; jk; nrhe;j Cupy; Vw;Wf; nfhs;sg;gLtjpy;iy vd;W ,NaR $Wk; ,iwthh;j;ij gFjp ,d;W ew;nra;jpapy; ekf;F jug;gLfpd;wJ. 32Mz;LfSf;F Kd;> vy; rhy;tNjhu; ehl;by; rhd; rhy;tNjhu; efupy; Nguhauha; ,Ue;j x];fhu; nuhNkNuh 1980Mk;Mz;L khu;r; 24 fhiy7 kzpastpy; jpUg;gyp epiwNtw;wpf; nfhz;bUf;Fk; NghJ> gil tPud; xUtd; Fwpitj;J Rl;lhd;. xNu xU Fz;L. Nguhaupd; ,jaj;jpy; gha;e;jJ. jpUg;gypia epiwT nra;ahkNyNa> gPlj;jpd; kPJ rha;e;J gypahdhu; mth;. x];fhu; nuhNkNuh ,we;j gj;J Mz;Lfspy; jpUj;je;ijahf ,Ue;j ,uz;lhk; [hd; Nghy;; x];fhu; nuhNkNuh ,iwtdpd; mbahu; vd;w epiyf;F cau;j;jpdhu;

x];fhu; nuhNkNuh Nguhau; nfhiynra;ag;gLtjw;F vd;d fhuzk;? vd $h;e;JNehf;fpdhy; nfhiy nra;ag;gLtjw;F Ke;jpa ehs;> Nguhau; xU nghJf; $l;lj;jpy; kf;fis mr;RWj;Jk; tz;zk; Rw;wp tisj;J MAjk; jhq;fp epd;wpUe;j tPuu;fisg; ghu;j;J: rNfhjuu;fNs> ,q;F ePq;fs; R+o;e;jpUf;Fk;  ,e;j kf;fs; kj;jpapy; jhd; ePq;fs; gpwe;J tsu;e;jPu;fs;. ,tu;fs; cq;fs; rNfhjuu;fs;. cq;fs; rNfhjuu;fisNa ePq;fs; nfhd;W tUfpwPu;fs;. kf;fisf; nfhy;Yk; gb cq;fSf;Fj; jug;gLk; ve;j MizAk; ,iwtd; je;Js;s 'nfhiy nra;ahNj' vd;w me;j fl;lisf;F cl;gl;lNj. ,iw fl;lisia kPwp cq;fSf;Fj; jug;gLk; newpaw;w MizfSf;F ePq;fs; fPo;gbaj; Njitapy;iy. ,e;j newpaw;w MizfSf;F fPo;gbtijtpl> cq;fs; kd rhl;rpf;Ff; fPo;gbAq;fs;. ,e;j muh[fj;ijg; ghu;j;Jf; nfhz;L jpUr;rig nksdkha; ,uhJ. flTspd; ngauhy;> jpdKk; tpz;iz Nehf;fpf; Fuy; vOg;Gk; ,e;j kf;fs; ngauhy; ehd; cq;fisf; nfQ;rpf; Nfl;fpNwd;> cq;fs; Mau; vd;w Kiwapy; Miz ,LfpNwd;> cq;fs; muh[fj;ij epWj;Jq;fs;. vd;W $wpdhh;.

Mau; vLj;Jiuj;j cz;ikfs; kpfTk; fre;jpUf;f Ntz;Lk;. mjdhy;> mLj;j ehs; fhiy me;jg; giltPuu;fspy; xUtd; MauJ capiug; gwpj;jhd;. ,d;W cyf muq;fpy; gy;NtW epiyfspy; mtiu cz;ikf;fhf> ePjpf;fhf capu; Jwe;j xU jiytuhfg; Nghw;Wfpd;wdu;. ,Ugjhk; E}w;whz;by; kdpj rKjhaj;ij ey; top elj;jpa gy jiytu;fspy; xUtuhf Nguhau; nuhNkNuhitf; fUJfpd;wdu;. Nguhau; nuhNkNuh Xu; ,iwthf;fpdu;. ,iwtdpd; thu;j;ijia> mJ $Wk; cz;ikfisf; fyg;glkpy;yhky;> ve;j tpj myq;fhuKk; ,y;yhky; vLj;Jr; nrhd;dtu;. ,iwthf;fpdu;fs; ruhrup kdpju;fs; my;y. jdpj;J epd;W> ,iwtdpd; thu;j;ijiaj; ijupakhf Koq;Fgtu;fs;. x];fhu; nuhNkNuh 80fspy; ,iwthu;j;ijia Koq;fpdhu;. Rlg;gl;L ,we;jhu;. khu;l;bd; Y}j;ju; fpq; 60fspy; mnkupf;fhtpy; ,iwthf;if vLj;Jiuj;jhu;. Fz;lbgl;L ,we;jhu;. ,iwthf;fpdu; NgRtJ nghJthf vy;yhiuAk; rq;flg;gLj;Jk; vd;gjhy;> mtUf;F tuNtw;G ,Uf;fhJ. ,e;j vz;zj;ij ,NaR ,d;iwa ew;nra;jpapy; njspthfr; nrhy;fpwhu;.

,NaR jhd; tsu;e;j Cuhd ehrNuj;Jf;F xU rpy cz;ikfisr; nrhy;y Muk;gpj;jhu;. tsu;e;j Cu; vd;gjhy;> rpW tajpypUe;J ,NaR mq;F epfo;e;j gy fhupaq;fisg; ghu;j;J> czu;e;J te;jtu;. mtu;fs; vy;yhUf;FNk njupe;j gy neUf;fkhd> mNjNeuk; rq;flkhd> cz;ikfisr; nrhd;dhu; ,NaR.

cz;ik cs;sj;ij CLUtpa NghJ> gyh; kdk; jpUe;Jfpwhu;. Mdhy;> cz;ikfs; ciuf;fg;gl;l gy Neuq;fspy; ,t;thW ed;ikfs; elg;gjpy;iy. ngUk;ghYk; cz;ikfs; Nfhgj; jPia nfhOe;Jtpl;L vupar; nra;Js;sd. gy ,lq;fspy; cz;ikfs; nrhy;yg;gl;l NghJ> me;j cz;ikfis Cikahf;f> cz;ik nrhd;dtu;fis Cikahf;f> mtu;fs; capiug; gwpj;j rk;gtq;fs; gy cz;L. ,d;W ew;nra;jpapYk; ,NaRTf;F me;j epiyjhd;. ,NaR nrhd;d cz;ikfisf; Nfl;f Kbahky;> mtu;fs; Nfhgk; nfhiy ntwpahfpwJ. ,e;j Kiw ,NaR jg;gpj;Jf; nfhs;fpwhu;. mtu; ek;ikg; Nghy; xU ruhrup kdpjuha; ,Ue;jpUe;jhy;> ,e;j xU mDgtk; vdf;Fg; NghJk;. ehd; Vd; ,e;j CUf;F cz;ikfisr; nrhy;yp Vr;Rk;> Ngr;Rk; ngw Ntz;Lk;? tpl;bUe;jhy;> ,tu;fs; ek;ik ,d;W nfhd;wpUg;ghu;fs;. Njitapy;iy ,tu;fs; rfthrk; vd;W ,NaR xJq;fp ,Uf;fyhk;. Mdhy;> md;W ,iwthf;Fiuf;fj; njhlq;fpa mtuJ gzp> fy;thup gypapy; jhd; Kbe;jJ.

kdpj tuyhw;wpy; gy;yhapuk; ,iwthf;fpdu;fs; ,ijNar; nra;jdu;. cz;ikiar; nrhd;dhu;fs;> capiuj; je;jhu;fs;. cz;ikf;Fk;> capu;gypf;Fk; mg;gb xU neUq;fpa cwT. cz;ik frf;Fk;> cz;ik vupf;Fk;> cz;ik RLk; vd;W cz;ikapd; gy tpisTfisr; nrhy;fpNwhk;. cz;ik gy Ntisfspy; ek;ikr;  rq;flg;gLj;Jk;. cyfj;jpd; fz;fisf; fl;btpl;ljha; epidj;Jf; nfhz;L> ek; fz;fis ehNk fl;bf;nfhz;L jtWfs; nra;Ak;NghJ> cz;ik te;J ek; fz; fl;il mtpo;f;Fk;. fl;ltpo;f;fg;gl;lJk; me;j xspia> cz;ikiaf; fhz Kbahky; ek; fz;fs; $rp epw;Fk;. cz;ik ek;ikj; NjhYupj;Jf; fhl;Lk;. cz;ikapd; gpd; tpisTfis ,g;gb ehk; gl;baypLk; NghJ> xU Kf;fpakhd mk;rj;ijAk; epidj;Jg;ghu;f;f Ntz;Lk;. cz;ik tpLtpf;Fk;. cz;ik kPl;igj;  jUk;. vdNt cz;ikapd; xspapy; vk; tho;it kPl;gpd; ghijapy; efh;j;JNthk;


Monday, January 21, 2013

வரலாற்றை நாமும் மாற்ற மனம்மாறுவோம்


25.01.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
கத்தோலிக்க திருச்சபை பவுலின் மனமாற்றத்தை இன்று கொண்டாடுகின்றது. பவுல் பென்யமின் குலத்தைச் சேர்ந்த யூதக் குடும்பத்தில் கி.பி-10ம் ஆண்டில் பிறந்தவர். இவரது யூதப் பெயர் சவுல். இவர் தர்சு நகரத்தை சேந்தவர். இவர் யூதச் சட்டம் நெறிமுறைகளையும் கற்றவர். அன்றைய உலகப் பொது மொழியாம் கிரேக்கம் கற்றவர். கமாலியேல் என்பவரிடம் கல்வி பயின்றார். இவர் கி.பி. 60இல் கைது செய்யப்பட்டு நீரோ மன்னன் காலத்தில் மரண தண்டனை பெற்றார் என மரபு கூறுகிறது. இவர் யூத கோட்பாடுகளையும் நன்கறிந்து பரிசேயர் சமயப் பிரிவின் உறுப்பினராகவும் இருந்தவர். இப்பிரிவினர் தொடக்க காலத்தில் கிறிஸ்துவர்களை துன்புறுத்தி வந்தனர் அவர்களுடன் சேர்ந்து இவரும் அவர்களை துன்புறுத்தி வந்தார்.

சவுலாகிய இவர் சீறி எழுந்து திருத்தொண்டு செய்யும் முடியப்ரை கல்லெறிந்து கொல்வதற்காகவும், இயேசுவினுடைய சீடர்களை கொன்று விடுவதாகவும் கிறிஸ்துவர்களை துன்புறுத்துவதாகவும் தமஸ்கு நகர் சென்றுகொண்டிருந்தார் அந்த வழியில் இவரை இயேசு தடுத்து ஆட்கொள்கின்றார். தீடீரென வானத்தில் ஓர் ஒளி அவரை ஆட்கொண்டது. அவர் தரையில் விழ சவுலே, சவுலே ஏன் என்னை துன்புறுத்துகின்றாய்? என்று ஒர் குரல் தொடர்ந்து கேட்டது. அதற்கு அவர் ஆண்டவரே நீர் யார்? எனக் கேட்டார். இயேசு மறுமொழியாக நீ துன்புறுத்தும் இயேசு, நானே! உடனே நீ நகருக்குள் செல்! நீ என்ன செய்ய வேண்டும் என்று உனக்கு அறிவிக்கப்படும் இவ்வாறு ஆண்டவரின் மீட்பு பணியை உலகெங்கும் பறைசாற்றிட தாம் தேர்ந்து கொள்ளப்பட்டார் என உணர்ந்து.  ஆண்டவரின்  கருவியாக செயல்ப்பட்டார். இயேசுவை யார் சிலுவையில் அறைந்து கொன்றார்களோ, அவர்களிடையே பிறந்த சவுல் பவுலாக மாற்றி இயேசுதான் உண்மை மெசியா  என்பதை அவர் நாவினாலே அறிக்கையிடும் விதமாக அமைந்தது அவரது இந்த மனமாற்றம். பவுலில் வாழ்க்கையின் இந்த நாள் வரலாற்றை மாற்றி அமைத்த நாள்.

தன்னை அருளால் ஆண்டவன் இயேசு நிரப்பியபோது மனமாற்றம் வந்தது நிஜத்தில் கால்பதித்த நெஞ்சத்தின் உயிர்த்தவிப்பு அது. கிறிஸ்தவர்களை எதிர்த்துச் சென்றார் சவுல். எதிர்ப்பட்ட கிறிஸ்துவை  சந்தித்து பவுலாகி இனி வாழ்பவன் நானல்ல. என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார் என்று கூறக்கூடிய நிலையை அடைகிறார். இதுதான் மனமாற்றம். மயக்க நிலையிலிருந்து விழிப்பு நிலைக்குத் திரும்புதல். பாறைக்குள் பதுங்கியிருந்த புதுமையைப் பக்குவமாய் தட்டி எடுக்கும் அதிசயம். முள்ளில் விழுந்த சேலையைக் கிழிபடாமல் எடுக்கும் கலை. எல்லாம் இழந்து இறைவனை மட்டும் பற்றிக்கொள்ளும் இரகசியம்.

நீ துன்புறுத்தும் நாசரேத்தூர் இயேசு நானே என்ற சொற்கள் பவுலுக்கு மட்டுமன்று நமக்கும் பாடமாய் அமைகின்றன. கிறிஸ்துவால் ஆட்கொள்ளப்பட்டு அவரை நேசிப்போமாயின் எல்லோரையும் நாம் நேசிக்க வேண்டும். கிறிஸ்தவர்களுக்கு எதிராகவே சாதி, குலம், ஏழ்மை முதலிய அடிப்படையில் வேறுபாடுகள் காட்டுவோமாயின் கிறிஸ்துவையே எதிர்த்துப் போராடுகிறோம் என்பதை உணர்கிறோமா. மனமாற்றம் ஒருவரது வாழ்வின் உயர் குறிக்கோளை சரியான பாதையில் மாற்றி அமைக்கிறது. அதனால் பழக்கவழக்கத்திலும் பண்பாட்டிலும், நடத்தையிலும முழுமையான மாற்றம் உண்டாகிறது.

மனமாற்றம் அறிவு சார்ந்ததல்ல. கொள்கை சார்ந்ததல்ல. கோட்பாடுகளின் மாற்றம் அல்ல. உடலில், உடையில், உணவில் உள்ள மாற்றம் அல்ல. இயேசுவோடு உண்டான தனிப்பட்ட நெருக்கமான உறவில் விளைந்த ஒன்று. இந்த உறவை மறுக்க முடியாது. அதன் கவர்ச்சி எந்த ஈர்ப்பையும் விட மிகவும் சக்தி வாய்ந்தது. அப்படித்தான் பவுல் மாட்டிக்கொண்டார். இத்தகைய மனமாற்றம் எவருக்கும் எப்பொழுதும் எந்த நேரத்திலும் ஏற்படலாம். அதற்கென தகுதி, நேரம் காலம் இல்லை. சந்தர்ப்பம் சூழ்நிலை அவசியமில்லை. அந்தஸ்து, அறிவு முக்கியமில்லை.

பவுலின் மனமாற்றம், அவர் புதிய ஞானத்தை வழங்கி திருச்சட்டம், இறைவாக்கினர்கள் பற்றிய உண்மையை புதிய வழியில் விளக்கவும் தனது விண்ணக போதகரைப் பின்பற்றி அனைவருடனும் உரையாடல் நடத்தவும் உதவியது. இக்கால மனிதராகிய எமக்கு கிறிஸ்துவும் அவரது மீட்புச் செய்தியும் இன்னும் தேவைப்படுகின்றது. இக்கால மனிதராகிய நாம் எமது கதிக்குத் நாமே தலைவர் என்று உணர்வதால் எமது தீர்மானங்களிலும் செயல்களிலும் கடவுளை புறம்பாக்கிவிடுகின்றோம். புனித பவுலின் மனமாற்றம் அவர் உயிர்த்த கிறிஸ்துவை சந்தித்ததில் முதிர்ச்சியடைந்தது, அதுவே அவரது வாழ்வை அதிரடியாக மாற்றியது. பவுல் நற்செய்தியை நம்பியதால் மனம்மாறினார். பவுலது மற்றும் நமது மனமாற்றம், இறந்து உயிர்த்த இயேசுவை நம்புவதிலும், சுடர்விடும் அவரின் இறையருளுக்கு நம்மைத் திறந்து வைப்பதிலும் அடங்கியுள்ளது. கிறிஸ்தவர்களை துன்புறுத்திய தனக்காகவும் இயேசு இறந்தார், இப்பொழுது அவர் உயிர்த்தெழுந்துள்ளார் என்ற உண்மையைத் தனது மீட்பு சார்ந்துள்ளது என்பதை பவுல் புரிந்து கொண்டார். எனவே ஒருவரின் மனமாற்றம் என்பது, இயேசு சிலுவையில் எனக்காக இறந்தார் என்றும், உயிர்த்தெழுந்த அவர் என்னில் என்னோடு வாழ்கிறார் என்றும் நம்புவதாகும். இயேசுவின் உறவில் மகிழ்ந்து வாழவும், பிறரை வாழ்விக்கவும் நம்மையும் எதிர்பாராத வேளையில் இயேசு அழைக்கலாம். எனவே வரலாற்றை நாமும் மாற்ற மனம்மாறுவோம்

Thursday, January 17, 2013

பலனை எதிர்பார்க்காமல் செயல்படும் அன்பு உள்ளங்களுடன் நாமும் இணைந்துகொள்வோம்

20.01.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

 
கானாவூர் என்னுமிடத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது. இயேசுவும் அங்கிருந்தார். அங்கு திருமண வைபவங்களில் விருந்தோடு நல்ல திராட்சை இரசமும் தாராளமாகப் பரிமாறப்படுவது வழக்கமாக இருந்தது. எதிர்பாராதவிதமாக அவ்விருந்தில் இரசம் தீடிரென திருமண விழாவில் தீர்ந்து போய்விட்டது. திருமண வீட்டார் குழம்பியிருக்க இNசுவின் தாய் அன்னைமரியா அவர்களின் அவமானத்தை போக்க தம் மகன் இயேசுவிடம் பரிந்துபேசினார். புதுமை நிகழ்த்தக்கூடிய நேரம் இன்னும் வரவில்லையென்று இயேசு தம் தாயிடம் கூறுகிறார். இருப்பினும் தாய் சொல்லைத் தட்டாத மைந்தன் இயேசு தண்ணீரை சுவைமிக்க திராட்சை ரசமாக மாற்றிக் கொடுத்தார். இதுவே இயேசுசெய்த முதல் புதுமை. இயேசுவின் புதுமைகள் நம்பிக்கைக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகள். விசுவாசத்துக்கு அளிக்கப்பட்ட விருதுகள். இயேசுவின் புதுமைகள், உறுதியை வளர்க்கப் பவனி வந்த அவனியின் ஆச்சரியங்கள்.

“உங்களை எது அதிக ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது?” என்று ஒரு முறை ஒரு குருவானவரிடம் கேட்டபோது. “மனிதர்களே” என்று அவர் சொன்ன பதில் எம்மை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது: மனிதர்கள்; தங்கள் உடல்நலனைத் தியாகம் செய்து பணம் திரட்டுகிறார்கள். பின்னர் திரட்டிய பணத்தைத் தியாகம் செய்து உடல்நலனை மீண்டும் பெற முயற்சி செய்கிறார்கள். எதிர்காலத்தைப் பற்றிய கவலையால் சுமைசுமந்து போகிறார்கள். அவர்கள்; நிகழ்காலத்தை அனுபவிக்காமல் போகிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் நிகழ்காலத்திலும் வாழ்வதில்லை. எதிர்காலத்திலும் வாழ்வதில்லை. இறக்கவே போவதில்லை என்ற கற்பனையில் மனிதர்கள் வாழ்கிறார்கள். இறுதியில் வாழாமலேயே இறந்து விடுகிறார்கள். மிகவும் ஆழமான வார்த்தைகள். இயேசுவிடம் வந்துவிட்டால், சுமைகளைத் தூக்கி குப்பையில் எறிந்து விடலாம். சுமைகளைச் சுமந்து, அல்லது, சுமைகளைப் பிறர் மீது சுமத்தி வாழ்ந்து வரும் நாம், நமது சுமைகள் தீர இயேசுவை நாடி வருவோம். அவர் நமது சுமைகளை நீக்குவார். சுகம் தருவார். புதுமைகள் நம்வாழ்விலும் நிகழும்.

நம்மில் சிலர் புதுமைகளை, அதுவும் நற்செய்தியில் வரும் புதுமைகளை நம்புவதுமில்லை. ஏற்றுக் கொள்வதுமில்லை. ஆனால் இன்றும் ஆலயங்களிலும் மருத்துவ மனைகளிலும் பலரின்; உருக்கமான நம்பிக்கை மிக்க வேண்டுதல் காரணமாகவும் கடவுள் புதுமைகளை நிகழ்த்தி வருவது கண்கூடாக இருப்பதாக பல அறிவியலார் தெரிவிக்கின்றனர். முழுமையான ஈடுபாட்டுடன் செய்யும் ஒவ்வொரு செயலும் மன நிறைவைத் தருவதோடு வாழ்வில் மாற்றங்கள் பலவற்றையும் உருவாக்கும்.

தன்னலம் கருதாது திருமணவீட்டாரின் அவமானம் போக்க செயற்பட்ட அன்னை மரியாவை எண்ணிப்பார்க்கும்போது ஒரு கதை நினைவில் நிழலாடுகிறது: பக்தர் ஒவ்வொருநாளும் கடவுளையே நினைத்து, தியானித்து வாழ்ந்துவந்தார். அவர் முன் கடவுள் தோன்றி அவருக்கு ஏதாவது ஒரு வரம் தருவதகக் கூறினார். “இறைவா, உம்மைத் தியானிக்கும் ஒரு வரம் எனக்குப் போதும், வேறு வரம் எதுவும் வேண்டாம்” என்று பக்தர் கூறினார். ஏதாவது ஒரு வரம் கேள் என்று அவரைக் கடவுள் கட்டாயப்படுத்தினார். ஆழ்ந்த சிந்தனைக்குப்பின், பக்தர் சொன்னார். கடவுளே, தரையில் விழும் என் நிழலைத் தொடும் அனைவரும் நலம் பெற வேண்டும். அனால், ஒரு நிபந்தனை. எப்போதெல்லாம் என் நிழல் எனக்குப் பின்னே விழுகிறதோ, அந்த நிழலைத் தொடும் மக்களே குணமாக வேண்டும். எனக்கு முன் விழும் நிழலுக்கு அந்த சக்தி இருக்கக் கூடாது." என்று வரம் கேட்கிறார்;.

தனது சக்தியால் நன்மை நடக்க வேண்டும், ஆனால், அது தனக்குத் தெரியாமல் நடக்க வேண்டும் என்பதில் அந்த பக்தர் மிகத் தெளிவாக இருந்தார் என்று கதையை கவனமாக ஆராய்தால் நமக்கு புலப்படும். தன்னலத்தை அறவே துறந்த பக்தனின் ஒட்டுமொத்த உருவாக, அவர்களுக்கெல்லாம் ஒரு முன் மாதிரியாக மரியா வாழ்ந்தார் என்பதற்கு கானாவூர் திருமண நிகழ்வு மற்றொரு எடுத்துக்காட்டு. அற்புதங்கள் நிகழ்த்தும் சக்தி தன் மகனிடம் இருப்பதை அவர் உணர்ந்திருந்தாலும், அந்த சக்தி மற்றவருக்கு மட்டுமே பயன்பட வேண்டுமேயொழிய, தன் நலனுக்காக அல்ல என்பதில் மரியா தெளிவாக, தீர்க்கமாக இருந்தார். மரியாவின் இந்த வேண்டுகோளுக்கிணங்க, இயேசு ஆற்றிய புதுமையை தனிச்சிறப்புப் பெறுகின்றது.

வீடு தீப்பற்றி எரியும்போது, தண்ணீர் ஊற்றி அணைப்பதற்குப் பதில், தண்ணீர் ஊற்றுபவர்களைத் தடை செய்யவேண்டும் என்று கூறும் நாட்டில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒரு நல்ல காரியம், மிக நல்ல முறையில் நடைபெற வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்துடன், வேறு எந்த நோக்கமும் இல்லாமல், வேறு எந்த பலனையும் எதிர்பார்க்காமல் அன்னை மரியா செயற்பட்டார். இவ்வாறு செயல்படும் அன்பு உள்ளங்கள் உலகத்தில் இன்றும் நடமாடுகிறார்கள். அவர்களுடன் நாமும் இணைந்துகொள்வோம்

Saturday, January 12, 2013

நல்ல செயல்களை நாம் எங்காவது ஒரு இடத்தில், என்றாவது ஒரு நாள், எப்போதாவது ஒரு நேரம் ஆரம்பித்தாலே போதும்.


13.01.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழா இன்று. பாவ வாழ்விலிருந்த விடுவித்து ஒளியின் பாதையில் மக்களை நடத்திச்சென்று, புதுவாழ்வை அவர்களில் தொடங்கிவைக்க, இயேசுவிற்கு சொந்த மானவர்கள் எனும் முத்திரையை அவர்களுக்கு கொடுக்க திருச்சபை வழங்கும் ஓர் அடையாளமே திருமுழுக்கு ஆகும். உலகின் பாவங்களை போக்கும் கடவுளின் செம்மறியாக இவ்வுலகிற்கு வந்த  இயேசு தன்னுடைய பாடுகள் மரணத்தின் மூலம் மனுக்குலத்தின் பாவங்களைப் போக்கி உயிர்ப்பின் மூலம் மக்களுக்கு புதுவாழ்வு தந்தார். எனவே ஒருவன் கிறிஸ்துவோடு பாவத்துக்கு இறந்து, தன்னுடைய பழைய மனித இயல்பை அடக்கம் செய்துவிட்டு, கிறிஸ்துவோடு புதுவாழ்வுக்கு உயிர்த்தெழுவதே உண்மையான திருமுழுக்காகும் என பவுல் உரோமையருக்குக் கூறுகின்றார்.

இயேசுவின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அவரது திருமுழுக்கு அமைந்தது. மனிதனை மீட்க மனிதனாகத் தோன்றிய இயேசு தன்னுடைய பணி வாழ்வைத் தொடங்கிபோது பாலஸ்தீனத்தின் அவலங்களையும் சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் அடித்தட்டு மக்களின் அழுகுரல்களையும் அன்றாடம் கண்டு கொண்டார். புறந்தள்ளப்பட்ட அடித்தட்டு மக்களின் விடுதலை, நம்பிக்கை தான் இயேசுவின் இறையாட்சிப் பணிக்கு வித்திட்டது எனலாம். இறைவனின் செயல்திட்டத்தில் தாமும் அழைக்கப்பட்டிருப்பதை ஆழமாக இயேசு உணர்ந்திருந்தார். அத்தகைய ஓர் உந்து சக்திதான் அவரை யோர்தான் நோக்கி பயணிக்க வழிவகுத்தது.

மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்று யோர்தான் நதியோரம் வீரமுழக்கமிட்ட திருமுழுக்கு யோவானின் குரலொலி இயேசுவைக் கவர்ந்தது. சட்டங்களையும் சடங்குகளையும் உயர்த்திப் பிடிக்காமல் அன்பையும் நீதியையும் சமர்த்துவத்தையும் பகிர்வையும் வலியுறுத்திய யோவானின் புரட்சிக்கருத்துக்கள் இயேசுவின் கருத்துக்களோடு ஒருமித்து இருந்தன. அத்தகைய உண்மையை எத்திசையும் பறை சாற்ற தந்தையின்; விருப்பத்திற்குப் பணிந்து இயேசு வரிசையில் காத்திருந்து மக்களோடு மக்களாக திருமுழுக்கு யோவானிடம் யோர்தானில் திருமுழுக்குப் பெற்றார். இங்கு வானதூதர்களோ நட்சத்திரமோ இயேசுவை அறிவிக்கவில்லை. மாறாக இறைந்தந்தையே தனது மகன் இயேசு வெளிப்படுத்துகின்றார். 'இவரே என் அன்பார்ந்த மகன், இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று தந்தையின் குரல் வானத்தில் இருந்து ஒலித்தது.

இயேசுவின் திருமுழுக்கு அவரது வாழ்வின் நோக்கத்தை வெளிப்படுத்துகின்றது. இயேசு பெற்ற திருமுழுக்கு மாந்தர் அனைவரையும் மனமாற்றத்திற்கு அழைத்துச் செல்லும் ஓர் அடையாளச் செயல். இயேசுவின் திருமுழுக்கு பாவிகள் தொழு நோயாளிகள், அடித்தட்டு மக்கள் இவர்களுடன் நெருக்கமான உறவையும் தோழமையையும் எடுத்துக் காட்டும் செயல். இயேசுவின் திருமுழுக்கு எமது திருமுழுக்கு, கிறிஸ்தவ வாழ்வு பற்றிசிந்தித்துப் பார்க்க அழைக்கிறது. இயேசு தனது அர்ப்பணம்,பணி வாழ்விற்கான இசைவின் மூலமாக இறைத்தந்தைக்கு பூரிப்பைஏற்படுத்துகின்றார். தன் மகனோ, மகளோ அர்த்தமுள்ள, பெருமை சேர்க்கும் செயல்களைச் செய்யும் போது, நெற்றியில் முத்தமிட்டு, ஆசீர்வதிக்கும், அரவணைக்கும் பெற்றோரைப் பார்த்திருக்கிறோம்.நாமும் இந்த ஆசீர்,அரவணைப்பை அனுபவித்திருப்போம். அதுதான் அன்று யோர்தானில் நடந்தது. திருமுழுக்கு பெற்ற நாம் ஒவ்வொருவரும் இறைவனின் குடும்பத்தில் அங்கத்தவராக மாறி விண்ணகப் பேரின்ப முத்திரையாக மாறுவோமாக. இதுவே இயேசுவின் திருமுழுக்கு எமக்குத் தரும் செய்தியாகும். இன்று நாமும் திருமுழுக்கு மூலமாக இறைவனின் ஊழியராக வாழ நம்மைகளை நானிலமெங்கும் ஆற்ற முன்வர வேண்டும். அப்போது நாமும் இறைவனை மகிழ்விக்கலாம்.

ஒரு நாள் மாலை, கடற்கரையில் நடந்து கொண்டிருந்த ஓர் அறிவாளி இந்த உலகத்தை எப்படி காப்பாற்றுவது என்பது பற்றி ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தார். உலகத்தின் பிரச்சனைகள் உச்சநிலையில் தெரிந்ததால் எங்கு எப்படி ஆரம்பிப்பது என்று குழம்பிப் போயிருந்தார். அவருக்கு முன் ஓர் ஏழை மீனவன் கடற்கரையில் ஒதுங்கிக்கிடந்த சின்னச் சின்ன நட்சத்திர மீன்களை எடுத்து கடலில் எறிந்ததைப் பார்த்தார். 'என்ன செய்கிறீர் நண்பரே?" என்று கேட்டார் அறிவாளி. 'இவை இங்கேயே தங்கிவிட்டால், இறந்துவிடும். அதனால், இவைகளை மீண்டும் கடலுக்குள் அனுப்பிவைக்கிறேன்." என்றார். 'அது தெரிகிறது. ஆனால், நீர் இப்படி செய்வதால் என்ன பயன்? இது போல் உலகத்தின் பல கடற்கரைகளில் மீன்கள் கிடக்கின்றனவே. உமது இந்த செயலால் எத்தனை மீன்களைக் காப்பாற்ற முடியும் என்று நினைக்கிறீர்?" என்று கேட்டபோது, அந்த மீனவன், 'எல்லா மீனையும் காப்பாற்ற முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், இதோ, இந்த மீனை என்னால் காப்பாற்ற முடியும்." என்று சொன்னபடி, ஒரு மீனை எடுத்து கடலில் எறிந்தாராம். நல்ல செயல்களை நாமும் எங்காவது ஒரு இடத்தில், என்றாவது ஒரு நாள், எப்போதாவது ஒரு நேரம் ஆரம்பித்தாலே போதும். நல்ல செயல்களால் நானிலம் நிறையும் நாமனைவரும் நல்லமைதியில் வாழ்வோம்.

எம் திருமுழுக்கு வாழ்வு எம்மை இறைவனின்பால் புரட்டிப் போடட்டும்.

13.01.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இன்று இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழா. மக்களை பாவ இருளில் இருந்து விடுவித்து அவர்களை ஒளியின் பாதையில் நடத்தி, புதுவாழ்வை அவர்களில் தொடங்கிவைக்கவும், கிறிஸ்துவுக்கு சொந்தமானவர்கள் எனும் முத்திரையை அவர்களுக்கு கொடுக்கவும் திருச்சபை வழங்கும் ஓர் அடையாளமே திருமுழுக்கு. இதனை இயேசு தனது 30 வயதில் யோர்தான் நதியில் பெற்றுக்கொண்டார்.  அப்போது கடவுளின் குரல் வானிலிருந்து வந்து இயேசு தம் அன்புமிக்க மகன்; தாம் அவரைக் குறித்து மகிழ்ச்சியடைகின்றோம் என்ற பேருண்மையை வெளிப்படுத்தியது. இத்திருமுழுக்கு இயேசுவின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்து. அவரது வாழ்வை புரட்டிப்போட்டது.

17 ஆண்டுகளுக்கு முன் புத்தாண்டுகாலை நடந்த ஒரு சம்பவத்தை சற்று பகிர்வது இங்கு நல்லது: சென்னையில் நள்ளிரவு, காலைத் திருப்பலிகளை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த இயேசு சபையைச் சார்ந்த ஒரு குருவானவர் அன்று காலை சாலை விபத்தில் இறந்து விட்டார். அவரது உடலை வெற்றுவர இரு இயேசு சபையைச் சார்ந்த குருக்கள் புத்தாண்டு தினத்தன்று சென்னை அரசு மருத்துவ மனைக்குச் சென்றனர். பிரேத அறையில் பல உடல்கள், பலவாறாக சிதைக்கப்பட்ட நிலையில் இருந்தன. அத்தனை உடல்களின்; மத்தியில் தங்கள் குருவை அடையாளம் காட்டி எடுத்தனா.; அங்கு அடைந்த அதிர்ச்சி: வாழ்க்கை இவ்வளவு தானா? என்ற ஒரு கேள்வியை எழுப்பத் தெடங்கியது என்றும் வாழ்வைப் பற்றிய ஏதோ ஒரு தெளிவு கிடைத்ததை தான் உணர்ந்தேன் என்றும் அவர்களில் ஒரு குரு தெரிவித்தார். அந்த புத்தாண்டு அனுபவம் தமக்குக் கிடைத்த மற்றொரு திருமுழுக்கு என்கின்றார் அவர். அந்த அனுபவம் தன் வாழ்க்கை புரட்டிப் போட்டது என்கின்றார் அவர்.

இப்படி எத்தனையோ பேருடைய வாழ்வைப் புரட்டிப் போட்ட சம்பவங்களை நாம் பார்க்கலாம். தங்களுடன் இரவு உணவருந்தி விட்டு தங்களுக்கு முன்பு மோட்டார் வண்டியில் சென்றுகொண்டிருந்த யாழ்மறைமாவட்ட இளங்குரு லக்;ஸ்மன் அண்மையில் சட்டென்று வீதியேலே விழுந்து இறந்தபோது இரத்தத்தில் தோய்ந்த அவரது தலையை முதலாவதாக தூக்கிய அனுபவம் தன் வாழ்;வை  புரட்டிப்போட்டது என்கின்றார் மிருசுவில் பங்குத்தந்தை பத்திநாதர்.

பூனைத்தொடுவாயில் தம்மை மோட்டார் வண்டியில் தள்ளிவந்து பங்குமனையில் வீட்டுவிடு 'வரும் ஞாயிறு எங்கள் ஆலயத்திற்கு வருவீர்கள் தானே" என்று கேட்டு சென்ற சிறுவன் செற்பநேரத்தில் கிபிர் தாக்குதலில் தலை துண்டிக்கப்பட்டு தன் சிறிய சகோதரியுடன் இறந்து இரத்த வெள்ளத்தில் மிதத்தபோது அதை பார்த்த தற்போதைய பாசையூர் பங்குத்தத்தை றோய்பேடினன் வாழ்வு இவ்வளவு தானா? என்ற அனுபவம் தன் வாழ்வை புரட்டிப்போட்டது என்கின்றார்.

இன்னும் பிணி, முதுமை, சாவு இவற்றைப் பார்த்த புத்தரின் அகக்கண்கள் திறக்கப்பட்டன. அது அவரது வாழ்க்கை புரட்டிப் போட்டது.

கொலை வெறியோடு கிறிஸ்தவர்களைக் கைது செய்து எருசலேமுக்குக் கொண்டுவர தமஸ்கு நகர்நோக்கிச் சென்ற சவுலைப் பார்வை இழக்கச் செய்து, பின்னர் மறுபார்வை கொடுத்த இறைவனின் செயல் சவுலின் வாழ்வைப் புரட்டிப் போட்டது.

தென்னாப்பிரிக்காவில், புகைவண்டியிலிருந்து பலவந்தமாய் வெளியேற்றப்பட்ட ராஜ் மோகனின் அந்த பயணம், அவரது வாழ்வைப் புரட்டிப் போட்டது. அவரை மகாத்மாவாக்கியது

கொல்கத்தாவின் சாக்கடைகளும், சேரிகளும் அன்னை தெரசாவின் வாழ்வைப் புரட்டிபோட்டன. ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால், இவர்களுக்குக் கிடைத்த இந்த அனுபவங்கள் எல்லாம் இவர்களுக்குக் கிடைத்த ஒரு திருமுழுக்கு அனுபவமெனலாம். இறைமகன் இயேசுவின் வாழ்வைப் புரட்டிப் போட்ட அவரது திருமுழுக்கை நாம் சிந்தித்து அது நமக்கு தரும் செய்தியின்  ஒளியில் தம்மை புடமிடுவோம்.

இரு நண்பர்களில் ஒருவர்: நான் கடவுளைப் பார்த்தால், கடவுளே, இன்று இவ்வுலகில் இவ்வளவு அநியாயம் நடக்குறதைப் பார்க்கின்றாயே. ஒன்றும் செய்ய மாட்டியோ? என்று ஒரே ஒரு கேள்வியை  கேட்பேன். என்றார். மற்றவர் நல்ல கேள்வி. கேட்கவேண்டியது தானே? அதே கேள்வியை கடவுள் என்னிடம் திருப்பி கேட்டால்?...சிரிப்புகள் பலநேரங்களில் சிந்தனைகளைத் தூண்டிவிடும் சீனவெடிகள் ஆகுகின்றன இல்லையா?

இந்தக் கேள்வியைப் பலகோடி மக்கள் இதுவரை கேட்டிருப்பர். இனியும் கேட்பார்கள். பலர் இந்தக் கேள்வியைக் கேட்க நினைத்ததுண்டு. கேட்டதில்லை. இந்தக் கேள்வியை விண்ணை நோக்கி மிசையிலாக ஏவி விட்டால், அது மீண்டும் ஒரு மின்னலாக, இடியாக, எதிரொலியாக தம்மை தாக்குமோ என்ற பயம்.

சாதாரண மனித கண்ணோட்டத்தில் பார்த்தால், இயேசுவுக்கும் இந்தக் கேள்வி கட்டாயம் உள்ளத்தில் எழுந்திருக்கும். 30 ஆண்டுகள் அமைதியாக, நாசரேத்தூரில், தன் பெற்றோரோடு வாழ்ந்து பழகி விட்டாலும், அவ்வப்போது இயேசுவைச் சுற்றி நடந்த பல அநியாயங்கள் அவர் மனதில் பூகம்பங்களாய் வெடித்திருக்கும். இந்த அநியாயங்களுக்கு விடை தேடி தன் நண்பர்கள், தெரிந்தவர்கள் பலரும் புரட்சிக் குழுக்களை உருவாக்கியதையும், அந்தக் குழுக்களில் சேர்ந்ததையும் இயேசு கட்டாயம் அறிந்திருந்தார். குழப்ப புரட்சிகளும் தீவிரவாதமும், வன்முறையும் தான் தீர்வுகளா? வேறு வழிகள் என்ன? என்று இயேசு கட்டாயம் சிந்தித்திருப்பார். இந்த சிந்தனைகளின் விடையாக அவர் எடுத்த முதல் முடிவு மக்களோடு மக்களாகத் தன்னைக் கரைத்துக் கொள்ள வேண்டும். அந்த முடிவோடு, அந்த முனைப்போடு யோர்தான் நதியில் இயேசு இறங்கினார்.

இயேசுவைக் கண்டு, அவருக்குத் திருமுழுக்கு அளிக்க இருந்த யோவான் திகைத்திருப்பார். அவரை இயேசு அமைதிபடுத்தி, திருமுழுக்கு பெறுகிறார். இயேசுவின் இந்த பணிவு, மக்களோடு மக்களாய் கரைந்து விட அவர் கொண்ட ஆர்வம் ஆகியவை விண்ணகத் தந்தையை மிகவும் மகிழ்விக்கிறது. மக்களோடு மக்களாகத் தன்னை முழுவதும் இணைத்துக் கொண்ட இயேசுவைக் கண்டு ஆனந்த கண்ணீர் பொங்க தந்தை சொன்ன வார்த்தைகள்: 'என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்."

உள்ள பூரிப்புடன், உன்னத இறைவன் இந்த வார்த்தைகளை நம் ஒவ்வொருவருக்கும் சொல்லக் காத்திருக்கிறார். நம்மையும் வாரி அணைத்து உச்சி முகந்து இந்த அன்பு மொழிகளை அவர் சொல்லக் காத்திருக்கின்றார். தீவிரவாதமும், வன்முறையும் கொலைகளும் களவுகளும் கற்பளிப்புக்களும் கருவறுப்புக்களும் தானா இன்றைய தீர்வுகள்? வேறு வழிகள் என்ன? என என்ணுவோம். 'வேறு வழி என்ன" என்று என்ணி இயேசு யோர்தான் நதிக்கு சென்று திருமுழுக்கு பெற்றார். தந்தையின் பணியை தொடர்ந்தார். இயேசு திருமுழுக்கு பெற்றபோது   தந்தையாம் கடவுளின் பணியில் வாழ வாக்குறுதி எடுத்தார். சாத்தான் அவரை சோதித்தபோதும் சற்றும் சறுக்காமல் மக்களை நல்வழியில் நடத்தி தன் இலக்கை அடைந்தார். கத்தோலிர்கராகிய நாமும் ஆண்டு தோறும் கிறிஸ்து உயிர்ப்பு திருவிழிப்பு பூசையில் எம் திருமுழுக்கை புதுப்பிக்கின்றோம்: சாத்தானையும் அதன் மாயதீய செயல்களை எல்லாம் விட்டுவிடுகின்றோம் என வாக்குறிதி எடுக்கின்றோம். எனவே நம் திருமுழுக்கு வாழ்வு எம்மை இறைவனின் பால் புரட்டிப் போட்டு நம்முடன் வாழ்பவர்கள்; நல்வழியில் நடந்து நானிலமெங்கும் நல்லமைதியை உருக்கும் கருவிகளாக்கட்டும்.

Friday, January 4, 2013

விண்மீனாக வாழிகாட்டிய இறைவார்த்தை எம்மையும் வழிகாட்ட இடமளிப்போம்

06.01.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவாகிய இன்று, குழந்தை இயேசுவைத் தேடி கீழ்த்திசை ஞானிகள் மூவர் வந்து வணங்கிய நிகழ்வைக் கொண்டாடி, மெசியாவாம் இயேசு புற இனத்தாருக்கும் தம்மை வெளிப்படுத்தியதை நினைவுகூர்கிறோம். இயேசுவை தேடி வணங்க வந்த ஞானிகளின் பயணம்; இயேசுவை சென்றடையும் பாதையினை எமக்கு தெளிவாகக் காட்டுகின்றது. பெத்லகேமில் இயேசு பிறந்துள்ளதை அறிந்த அரசன் ஏரோதும்  எருசலேமும் கலங்கினாலும் ஞானிகள் பிறந்த பாலன் இயேசுவை வணங்கச் சென்ற பயணம் இயேசுவை சென்றடையும் பாதையினை எமக்கு தெளிவாகக் காட்டுகின்றது. ஞானிகள் இயேசுவை  வணங்க வந்த நிகழ்வு பாலன் இயேசு பிறந்த நிகழ்வோடு பின்னிப் பிணைந்துள்ள ஒரு நிகழ்வு என்பது நமக்குத் தெரிந்த ஒருவிடயம். இவர்கள் மூன்று ஞானிகள் என்று திருச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டள்ள ஒருவிடைமாகிறது. இவர்கள் வீண்மீன் கண்டு வீறுநடைபோட்டு இயேசுவைக்கண்டு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்த இயேசு பாலனை வணங்கினர். பரிசுகளைக் கொடுத்தது வந்தவழி விட்டு வேறுவழியில் திரும்பினர்.

யார் இந்த ஞானிகள்?

கிரேக்க மொழியிலே “மாகோஸ்” (magos) என்றால் “ஞானி” என்று பொருள். இது பன்மையில் (mag) என்பது பொருளாகும். இவர்களை நாம் பல கூறுகளாகப் பிரித்து நோக்கலாம். பெர்சிய நாட்டுக் குருக்களின் கூட்டத்தைச் சார்ந்தவர்கள். இரகசிய மறைபொருளை உணர்ந்து கொள்ளும் சக்தியைக் கொண்டவர்கள். மந்திரவாதிகள். நாடோடிப் போலி மருத்துவர்கள் அல்லது அறிஞர்கள். தத்துவ அறிவில்கைதேர்ந்தவர்கள். குறி சொல்லும் முன்னறிவிப்பாளர்கள். இயற்கை மருத்துவத்தி;ல் கைதேர்ந்தவர்கள். கனவுகளுக்கு விளக்கும் அளிப்பவர்கள். வானசாஸ்திரிகள்.

இந்த ஞானிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாகலாம்?

இந்த ஞானிகள எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற ஆராய்ச்சியில் முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. பெர்சிய நட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். மீதியா நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். மெசபெத்தோமிய நாட்டிலிருந்து வந்திருக்கலாம். அரேபியா நாட்டிலிருந்து பயணி;திருக்கலாம் என்று மரபுகள் கூறுகையில் இந்தியாவிலிருந்து கூட யூதேயா நாட்டிற்க்கு சென்றிருக்கலாம் என்று கூறுபவர்களும் உளர்.

இந்த ஞானிகள்; எத்தனை பேர்?
நற்செய்தியில் பாலன் இயேசுவைக் காணவந்த ஞானிகள் எத்தனை பேர் என்று குறிப்பிடவில்லை. மூன்று பேர் வந்தார்கள் என்ற மரபு எப்படி வந்ததென்றல், நற்செய்தியி;ல் மூன்று வகையான பரிசுகளைக் கொண்டு வந்தார்கள் என்று குறிப்பிடுள்ளதால் தான் என்கிறார்கள்.

இந்த ஞானிகள் பெயர்கள் என்ன?
இந்த ஞானிகளின் பெயர்கள்: கஸ்பார், மெல்கியோர், பல்தசார் என்பது  மரபாகிறது.

இயேசுவைக் காணவந்த ஞானிகள் என்ன செய்தார்கள்?
இயேசுவைக் காணவந்த ஞானிகள் உண்மையில் வானயல் பற்றி ஞானத்தைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வானத்தை ஆய்வு செய்பவர்களே ஒழிய எதிர் கால வீண்மீன்கள் பற்றி ஆராயவில்லை,  கூற முனையவுமில்லை. அவற்றிலிருந்து சில நன்மைகளை பெற முற்றடுபட்டார்கள். வாழ்க்கையின் வழியைக்காட்டும் உண்மை ஒளியை தேடும் மனிதர்களானர்கள். கடவுளின் முகவரியை கடவுளின் படைப்பபில் காண முற்பட்டவர்கள். மாந்தர் வாழ்விற்கு வழிகாட்டும் பாதையைக் கண்டுகொன்டார்கள். இறைவனின் அடிச்சுவட்டைப் பின்பற்றி அவரை  தேடியவர்கள், அவரின் கைவண்ணத்தை படைப்பில் காண தேடியவர்கள் கடவுள் இயற்கையினூடாக தம்தை வெளிப்படுத்துவார் என்று உறுதியாக நம்பினர். இந்த உலகைப் படைத்தவரே பெத்தலேகேமில் குகையில் மனிதனாகப் பிறந்தார் என்பதை உணர்ந்தனர். இந்த ஞானிகள் வேதாகமம் கூறுவதைக் கேட்டனர். அதுவே உண்மை வழியைக் காட்டும் விண்மீனாகா தோண்றியது என்ற மிகப்பெரிய பரிசுத்த உண்மையை எமக்கு தெளிப்படுத்தி நின்றனர்.

இயேசுவைக் காணவந்த ஞானிகள் கொண்டுவந்த பரிசுகளுக்கு அர்த்தம் என்ன?
கஸ்பாhர் என்பவர் தாடி இல்லாமல் இளைஞராக ஓவியத்தில் சித்தரிக்ப் பட்டுள்ளார். இவர் சாம்பரணி கொண்டுவந்தர். சாம்பரணி குருத்துத்வதைக் குறிக்கின்றது. குருக்களை பெர்சிய நாட்டில் 'போன்தி ஃ பெக்ஸ்' அதாவது பாலமாக இருப்பவர்கள் - இறைவனுக்கும் மனிதருக்குமிடையே பரிந்து பேசி பாலமாக இருந்தவர்கள் மன்னர்கள் என்ற கருத்து நிலவியது. இறைத் தந்தைக்கும் நமக்குமிடையே உறவை வளர்க்கும் பாலமாக இருக்கும் இயேசுவுக்கு இது எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது என்பது தெளிவு

மெல்கியேர் வயதானவராக, நீண்ட தாடியோடு சித்தரிக்கப்பட்டுள்ளார். இவர் பொன்னைக் கொண்டு வந்தர். பொன் அல்லது தங்கம் இயேசு அரசர் என்பதைக் குறிக்கின்றது. பெர்சியா நாட்டில் அந்நாட்டு அரசரையாராவது சந்திக்கச் சென்றால் கட்டாயம் தங்கத்தைக் கொண்டுச் செல்ல வேண்டுமென்பது ஒரு கட்டாயமான மரபு. ஆகவே இயேசுவை ஓர் அரசராகக் கருதி பொன்னைப் பரிசாகக் கொண்டு வருகிறார் இந்த ஞானிகள்.

பல்தாசார் ஓர் இளைஞன். குறுந்தாடியுடையவர். இவர் வெள்ளைப்போளம் கொண்டு வந்தாதகக் கூறப்படுகிறது. வெள்ளைப்போளம் பொதுவாக இறந்தவர்களின் உடலைப் பதபடுத்திப் பாதுகாப்பாக இருக்கப் பயன்படு;தப்பட்ட ஒரு பொருள். இது இயேசு இறைவன் மட்டுமல்ல, அவர் ஒரு மனிதனாகவும் இருக்கின்றார் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது. ஆம் இயேசு பிறந்ததே நாம் மீட்பு பெறுவதற்காகவே. இயேசு தமது உயிரை பயணமாக வைத்துத் தமது இறப்பினால் நம்மை மீட்டார் என்பது வெள்ளிடை மலை.

இந்த ஞானிகளின் வருகையை ஒட்டிச் சில முன்னறிவிப்புக்கள் உள்ளன. விண்மீன்-கிறிஸ்து பிறப்பதற்கு முன் 11ஆம் ஆண்டில் ஹோலிஸ் நட்சத்திரம் தோன்றியது. கி.மு. 7ஆம் ஆண்டில் மூன்று கோள்கள்-சாட்டர்ன், ஜுபிட்டர், மார்ஸ் ஒன்றாகக் கூடிவந்து வானத்தில் விந்தை நடந்தது வரலாறு. கி.மு. 5லிருந்து 2ஆம் ஆண்டுக்கு இடையிலான காலத்தில் மெசோரி, சூரியன், டாக்ஸ்டார் என்பவை பிரகாசமாகத் தோன்றின என்பதும் வரலாறு.

இவ்வெளிப்பாட்டின் வழியாக ஒரு புதிய அரசர் தோன்றுவார் என்று மக்கள் நம்பினர். இயேசு பிறப்பதற்கு முன் இஸ்ரயேல் நாட்டில் ஓர் அரசக் தோன்றுவார். அவர் மெசியா- அரசராக இருப்பார். அவர் மக்களை மீட்டு விடுதலை அளிப்பார் என்று மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். “ யூதா நாட்டுப் பெத்தலேகேமே யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை;, ஏனெனில், என் மகளாகிய இஸ்ராயெலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்து தோன்றுவார்”. ஏன் இறைவாக்கினரின் எழுத்துக்களில் நம்கிக்கை கொண்டு அவரது வருகைக்காக ஆவலோடு காத்திருந்தனர். மன்னர் பிறந்துவிட்டார் என்று வானசாஸ்திரிகள் தங்கள் ஞானத்தைப் பயன்படுத்தி பாலன் இயேசுவைக் காணவந்தனர். உண்மையாகவே இயேசு இவ்வுலகை மீட்க வந்த மீட்பர் என்பதை எடுத்துக்காட்டினர்.

இயேசுவின் பிறப்பைப் பற்றிய மூன்று கண்ணேட்டங்கள்:
மெசியா - அரசராக இயேசு பிறப்பார் என்று இஸ்ரயேல் வானசாஸ்திரிகள் ஆய்ந்தறிந்து உறுதிப்படுத்தியவுடன் மூன்று வகையான நபர்கள் தங்களது கண்ணேட்டத்தை வெளிப்படுத்தினதை நாம் நற்செய்தியில் பார்க்கிறோம்.

ஏரோது-பகைமை உணர்வு- ஏரோது முறையான வகையில் அரசனாகப் பதலி ஏற்கவில்லை. ஆகவே வேறு ஓர் அரசன் பிறந்துள்ளார் என்று கேள்வியுற்றதும் தனக்குத் தற்காப்பின்மை என்ற உணர்வு ஏற்பட்டதால் இயேசுக் குழந்தை மீது பகையுணர்வு கொண்டான். அவரைக் கொல்லச் சதித்திட்டம் போட்டான்.

பரிசேயர்களின் பாராமுகம்- இஸ்ரயேல் நாட்டின் குருக்களும், சட்டவல்லுநர்களும் புதிய மெசியா அரசர் பிறப்பார் என்று விவிலியம் முன்னறிவித்திருந்தும் அவர்கள் இந்நிகழ்வின்மேல் எந்த அக்கறையும் கொள்ளவில்லை.மாறாக, இயேசுபோதிக்கத் தொடங்கியதும் அவரை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கின்றனர்.

ஞானிகள் - பக்தி பரவசம்- இயேசு பிறந்த இடத்தை அடைந்ததும் ஞானிகளுக்கு வழிகாட்டி வந்த விண்மீன் நின்றது. அதை கண்ட அவர்கள் மட்டில்லா பெருமகிழ்ச்சி அடைந்தனர். குழந்தை இயேசுவைக் கண்டார்கள். நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள். தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். பக்தி பரவசத்தில் மூழ்கினார்கள்.
ஞானிகளின் வருகை நமக்குத் தரும் பாடங்கள்-
நாம் இயேசுவை ஆவலோடு தேடிச் சென்றால் அவரைக் கண்டு நாம் மகிழ்ச்சியில் ஆழ்வோம். இறைவனின் வழிநடத்துதல் என்றும் நம்மோடு இருக்கும். இயேசுவை ஆராதித்து வணங்க நமக்கு வாய்ப்பு கிடைக்கும். இறைவனே நமக்கு பரிசாக அமைவார். இயேசுவைக் கண்ட ஒருவர் மாற்றுப் பாதையில் தான் நடக்க வேண்டும். இயேசுவைப் பலர் தேடி வந்தனர். நாமும் அவரை தேடினோம் என்றால் அவரைக் கண்டடைவோம். பல ஆயிரக்கணக்கான கல் தூரம் பல வேதனைகளையும், துன்பங்களையும் சகித்துக் கொண்டு ஞானிகள் இயேசுவைத் தேடி வந்தனர். நாம் எமது மனங்களில் எதிர்ப்பு மனப்பான்மையை கைவிட்டு கடவளால் வழிநடத்தப்படுவதற்கு நம்மை கையளிக்கவேண்டும். உறுதியாக உண்மையானவரைக் காணவேண்டும் என்ற விசுவாசத்தின் கண்களினாலேயே தேடினால் தான் அவரைக் காணமுடியும்

இயேசுவைக் கண்டு அனுபவிப்பவர்களின் வாழ்க்கை மாற்றுப் பாதையில் தான் அமையவேண்டும். பழைய மனிதத்தை களைந்துவிட்டுப் புத்தாடை அணிந்துப் புனிதனாக மாறவேண்டும். இதைத்தான் ஞானிகளும் செய்தார்கள். வாருங்கள் நாமும் ஞானிகள் வழிசெல்வோம்.

விண்மீனாக வாழிகாட்டிய இறைவார்த்தை எம்மையும் வழிகாட்ட இடமளிப்போம்

06.01.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவாகிய இன்று, குழந்தை இயேசுவைத் தேடி கீழ்த்திசை ஞானிகள் மூவர் வந்து வணங்கிய நிகழ்வைக் கொண்டாடி, மெசியாவாம் இயேசு புற இனத்தாருக்கும் தம்மை வெளிப்படுத்தியதை நினைவுகூர்கிறோம். இயேசுவை தேடி வணங்க வந்த ஞானிகளின் பயணம்; இயேசுவை சென்றடையும் பாதையினை எமக்கு தெளிவாகக் காட்டுகின்றது. இவர்கள் மூன்று ஞானிகள் அல்லது அரசர்கள் என்று திருச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டள்ளது. இவர்கள் வீண்மீன் கண்டு வீறுநடை போட்டு இயேசுவைக் கண்டு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து இயேசு பாலனை வணங்கினர். பரிசுகளைக் கொடுத்தது வந்தவழி விட்டு வேறுவழியில் திரும்பினர்.

இந்த ஞானிகளின் வருகையை ஒட்டிச் சில முன்னறிவிப்புக்கள் உள்ளன என்று வரலாறு கூறுகின்றது. விண்மீன்: கிறிஸ்து பிறப்பதற்கு முன் 11ஆம் ஆண்டில் ஹோலிஸ் நட்சத்திரம் தோன்றியது. கி.மு. 7ஆம் ஆண்டில் மூன்று கோள்கள்: சாட்டர்ன், ஜுபிட்டர், மார்ஸ் ஒன்றாகக் கூடிவந்து வானத்தில் விந்தை நடத்தியது வரலாறு. கி.மு. 5லிருந்து 2ஆம் ஆண்டுக்கு இடையிலான காலத்தில் மெசோரி, சூரியன், டாக்ஸ்டார் என்பவை பிரகாசமாகத் தோன்றின என்பதும் வரலாறு.
இவ்வெளிப்பாட்டின் வழியாக ஒரு புதிய அரசர் தோன்றுவார் என்று மக்கள் நம்பினர். இயேசு பிறப்பதற்கு முன்னர்  இஸ்ரயேல் நாட்டில் ஓர் அரசக் தோன்றுவார். அவர் மெசியா- அரசராக இருப்பார். அவர் மக்களை மீட்டு விடுதலை அளிப்பார் என்று மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். யூதா நாட்டுப் பெத்தலேகேமே யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை;, ஏனெனில், என் மகளாகிய இஸ்ராயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்து தோன்றுவார். என் இறைவாக்கினரின் எழுத்துக்களில் நம்கிக்கை கொண்டு அவரது வருகைக்காக ஆவலோடு காத்திருந்தனர். மன்னர் பிறந்துவிட்டார் என்று வானசாஸ்திரிகள் வீண்மீன்கண்டு தங்கள் ஞானத்தைப் பயன்படுத்தி பாலன் இயேசுவைக் காணவந்தனர். உண்மையாகவே இயேசு இவ்வுலகை மீட்க வந்த மீட்பர் என்பதை எடுத்துக்காட்டினர்.

வேதாகமத்தில் கூறப்பட்ட மெசியாவை தேடிக் காணச்சென்ற இந்த மூன்று அரசர்கள் உண்மையில் வானயல் பற்றி ஞானத்தைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வானத்தை  ஆய்வு செய்பவர்களே ஒழிய எதிர் கால வீண்மீன்கள் பற்றி ஆராயவில்லை, கூற முனைபவர்கள் அல்லர். இறுதியாக அவற்றிலிருந்து சில நன்மைகளை பெற முற்றடுபவர்கள்.  வாழ்க்கையின் வழியைக்காட்டும் உண்மை ஒளியை தேடும் மனிதர்கள் அவர்கள். கடவுளின் முகவரியை கடவுளின்படைப்பபில் காண முற்பட்டவர்கள். மாந்தர் வாழ்விற்கு வழிகாட்டும் பாதையைக் கண்டுகொள்கிறார்கள்.

இறைவனின் அடிச்சுவட்டைப் பின்பற்றி அவரை  தேடியவர்கள், அவரின் கைவண்ணத்தை படைப்பில் காண தேடியவர்கள். கடவுள்  இயற்கையினூடாக தம்தை வெளிப்படுத்தூவார் என்று அவர்கள் உறுதியாக நம்பினர். நாம் எமது மனங்களில் எதிர்ப்பு மனப்பான்மையை கைவிட்டு கடவுளால் வழிநடத்தப்படுவதற்கு நம்மை கையளிக்கவேண்டும். படைப்பில் கடவுளிக் கையெழுத்து உள்ளது என்றும் மனிதராகிய நாம்  படைப்பில் கடவுளைக் காணவேண்டும். அந்த அரசர்கள் உண்மையானவரைக் காணவேண்டும் என்ற விசுவாசத்தின் கண்களினாலேயே தேடினால் தான் அவரைக் காணமுடியும் என்று நம்பினார்கள். நாமும் கடவுளின் ஞானத்தை, அவரது வல்லமையை, எல்லையற்ற அன்பை உணர அழைக்கப்பட்டவர்கள்.

நாம் எமது அறிவை வெறும் கோட்பாடுகளினால் புடமிடுவதற்கு அனுமதிக்க கூடாது. இந்த கோட்பாடுகளை நாம் கூர்ந்து கவனித்தால் இறை நம்பிக்கைக்கு முரணானவையாக தென்படும். அவற்றை வைத்துக் கொண்டு வாழ்வின் இறுதி அர்த்தத்தை கண்டடைய முடியாது. உலனின் அழகையும் அதன் வியப்பையும், உள்ளர்த்தத்தையும், தோற்றத்தையும்  தோற்றத்தின் காரண தன்மையையும் கண்டுணரமுடியாது. ஆனால் நாம் இத்த உலகில்- வானத்தையும் பூமியையும் படைத்த கடவுளினால் வாழிநடத்தப்படவே முடியும். இதனை நாம் கருத்தில் கொண்டால் இந்த உலகைப் படைத்தவரே பெத்தலேகேமில் குகையில் மனிதனாகப் பிறந்தார் என்பதை உணர முடியும். அவரே  நற்கருணையில் தொடர்ந்தும் எம்முடன் வாழ்கின்றார். அவரே எம்மை என்றும் அன்பு செய்து முடிவில்லா வாழ்விற்கு அழைத்துச் செல்லும் உயிர் உள்ள கடவுளாவார்.


இந்த மூன்று அரசர்களுக்கு பரிசுத்த வேதாகமம் கூறுவதைக் கேட்பது இன்றியமையாததாக இருந்தது. அதுவே அவர்களுக்குரிய உண்மை வழியைக் காட்டுபவையாக இருந்தது. நிச்சயமற்ற மனித வார்த்ததைப் பிரசங்கத்தில் விழங்கப்படுத்த முடியாதவாறு இறைவார்தைதையே விண்மீனாகா தோண்றியது. இதுவே மிகப்பெரிய பரிசுத்த உண்மையை எமக்கு தெளிப்படுத்தியது. எனவே நாம் ஒவ்வாரும் இறைவார்த்தையான இந்த வீண்மீன்ளினால் வாழிநடத்தப்பட எம்மை அற்பணிப்போம். திருச்சபையுடன் இணைந்து வழிநடப்போம். உலகின் எந்த விழக்கினாலும் ஒளி கொடுக்கமுடியாத உண்மையானவரின் ஒளியால் எமது பாதைகள் வழிநடத்தப்பட வேண்டுவோம். நாமும் எமக்க அடுத்திருப்பவர்களுக்காக பிரகாசிக்கும் விண்மீன்களாக மாறுவோம். கிறிஸ்து எம்மீது ஒளிhவித்த அதே ஒளியை நாமும் மற்றவர்களில் ஒளிர விடுவோம்.


Tuesday, January 1, 2013

புதிய வரலாற்றுக்குள் பயணம் செய்வோம். புதிய வரலாற்றைப் பயணம் செய்யவைப்போம்.

01.01.2013  
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
 
என் வாசகர்கள் அனைவருக்ககும் வழ்த்துக் கூறி இன்று தொடங்கும் இந்தப் புதிய ஆண்டில் நலமும் வளமும் பெருகி இறை ஆசீரை நிறைவாகப்பெற்று வாழ நாம் செபக்கின்றோம். இன்று நாம் மூன்று பெரும் விழாக்களை கொண்டாடுகின்றோம் என்று கூறலாம்: அன்னைமரியா இறைவனின் தாய் என அறிவிப்பு விழா, இயேசுவுக்கு பெயர் சூட்டப்பட்ட விழா, 2013ண்டு தொடக்கநாள் விழா.

திருச்சபை கன்னிமரியாவைக் கடவுளின் தாயாகப் போற்றிச் சிறப்பிக்கிறது. இன்று சிறப்பான வகையில் சாதாரண மனிதப் பெண்ணான மரியா இயேசுவின் தாயானதால் இறைவனின் தாயான மாண்பினை பெருமையுடன் நினைவு கூர்ந்து விழா கொண்டாடுகின்றது. தாய்மை என்பது கடவுளின் முக்கிய பண்புகளில் ஒன்று. மனிதருக்கு உயிரளித்து, அவர்களைப் பேணிக்காத்து, வளர்த்து மேம்படுத்தும் செயலைக் கடவுள் செய்வதால் அவரை நாம் தாய் என உரிமையோடு அழைக்கலாம். கடவுளின் தாய்மை வௌ;வேறு வழிகளில் வெளிப்பட்டாலும் மரியா வழியாக அது சிறப்பான விதத்தில் உயர்வுபெற்றது. மரியா கடவுளின் தாய் என அழைக்கப்படுவதற்குக் அவர் கடவுளின் மகனை நமக்கு ஈந்தளித்த செயலே முக்கியகாரணம் ஆகும். மரியாவின் வயிற்றில் உருவான குழந்தைக்கு இடப்பட்ட பெயர் அவருடைய பணியை அழகாகக் குறிப்பிடுகிறது. நம் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் நம் தாயின் ஆசியோடு தொடங்குதுதானே நமது பண்பாடு. எனவே, இந்தப் புத்தாண்டையும் இறைவனின் தாயும், நம் விண்ணக அன்னையுமான மரியாவின் ஆசியோடு நாம் தொடங்குவோம்.

மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள்.  வானதூதர் செல்லியிருந்தவாறு எட்டாம் நாள் குழந்தைக்கு “இயேசு” என்னும் பெயரிட்டார்கள். இயேசு என்னும் சொல் மீட்பர் எனப் பொருள்படும். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் யோசுவாவும் இவ்வாறே மீட்பர் என்று அறியப்பட்டார். இஸ்ரயேல் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களிலிருந்து விடுவிக்க யோசுவா ஒரு கருவியாக இருந்தார். கடவுள் காலமாகிவிட்டார் போன்றும் கடவுள் நம்மை கைவிட்டுவிட்டது போன்றும் தோன்றும் இன்றைய நவீன உலகில், இறை அன்பிலிருந்து வெளிப்படும் மீட்புபை கொண்டுவந்து உலக மக்கள் அனைவரையும் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் மீட்கவும் அவர்களை நிலைவாழ்வில் பங்கேற்கச் செய்யவும் வல்லவராக இயேசு வருகின்றார். இயேசு கொண்டுவரும் மீட்பு நம்மைக் கடவுளோடு நெருங்கிய விதத்தில் இணைக்கின்றது. கடவுளின் வாழ்வில் நமக்குப் பங்கு வழங்குகின்றது. நம்மைப் பிரிக்கின்ற அனைத்தையும் கடவுள் இயேசுவின் வழியாக நம்மிலிருந்து அகற்றிவிடுகின்றார். தடைகள் அகலும்போது நாம் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டு, கடவுளுடைய அருளின் வல்லமையால் புதுப் பிறவிகளாக மாறுகின்றோம். புதுப்பிறப்படைந்த மனிதர் புது வாழ்வுக்கு அழைக்கப்படுகின்றனர். அந்த வாழ்வு நம்மில் ஓர் ஆழ்ந்த மாற்றத்தைக் கொணடுவரவேண்டும். புத்தாண்டில் நாம் அந்த மற்றத்துடன் புதுமை பெற்று வாழ்ந்திட முன்வருவோம்

இறைவாக்கைக் கேட்பவர் இயேசுவின் தாய் ஆவார் என இயேசு கூறினாலும் இறைவாத்தைக்கு முழுமையாக மரியா சரணடைந்ததனால் “மகனே” என்று இயேசுவை அழைக்க இறைத்தந்தைக்கு அடுத்த நிலையில் உரிமை உள்ளவரானர் நம் தாய் மரியா என்று கூறலாம். “மகனே  ஏன் இப்படிச் செய்தாய்” என்று விளித்த மரியா கானாவூர் திருமண வீட்டாருக்காகப் பரிந்துரைத்தபோதும் “மகனே”  என்று விளித்து  “அவர்களுக்கு இரசம் தீர்ந்துவிட்டது” என்று சொல்லப்படும் வாய்ப்பைக் கொண்ட வகையில் உயரிய பரிந்துரையாளரானார் நம் தூய கன்னிமரியா. இனி இத்தாயை முன்மாதிரியாக வைத்து அவர் போல நாம் வாழ முயல்வோம். அவர் சொன்னதை மனதில் இருத்தி அவர் சொன்னதைச் செய்து இயேசுவின் மதிப்பீடுகளின்படி வாழ்வோம். இந்த நல்ல நம்தாயின் அரவணைப்பில், வழி நடத்தலில் அவரைப் பின் செல்லலில் புதுவாழ்வு வாழ்வோம். தூய கன்னிமரியாவைப் பின்சென்று இறைவனின் மக்களாக வாழ தொடர்ந்து ஒரு புது ஆண்டைத் நமக்குத் தந்து நம்மை  இறைவன் வாழவைத்துள்ளார். இப் புதிய ஆண்டில் புது உணர்வு கொள்வோம்.  புது முயற்சிகள் மேற்கொள்வோம்   புது உறவுகள் வளர்ப்போம் இறைவனுக்கு நன்றி உள்ளவராய் வாழ்வோம். நம்மைச் சுற்றியுள்ளவரை மனதார அன்புடன் வாழ்த்தி நலமாய் வாழ ஊக்கமூட்டுவோம். அன்னைக்கு ஏற்ற பிள்ளைகளாய் ஆண்டு முழுவதும் இறை அருளிலும் அமைதியிலும் நிறைவுடன் வாழ்ந்திட வரம்வேண்டுவோம். இன்று புதிய2012ஆண்டை கொண்டாடுகின்றோம். இவ்வருடம் முழுவதும் வாழ்வை  நேர்மை என்னும் பண்பில் அடித்தளம் இடுவோம். புதிய நேர்மையான இலக்குகளை வகுப்போம். செயல்படத் தொடங்குவோம். இறைவனின் கருவியாகச் செயல்பட இப்புதிய ஆண்டில் உறுதியேற்போம். நாம்மில்; நேர்மை எனும் எந்திரத்தைப் பொருத்தி அன்மை மரி கொண்டிருந்த இறைமை, எளிமை உணர்வுகள் எனும் சக்கரங்களைக் கொண்டு புதிய வரலாற்றுக்குள் பயணம் செய்வோம். புதிய வரலாற்றை நாம் பயணம் செய்ய வைப்போம். இந்த ஆண்டு நலமான ஆண்டாக நமக்கு அமைய வேண்டும் என  புது முயற்சிகளை நாம் மேற்கொள்வோம். நமது ஆண்டவர் இயேசுவின் இனிய ஆசீரிலும், தாயாகிய தூய கன்னிமரியாவின் பரிந்துரையிலும் ஆசீரிலும் இந்த ஆணடில் நமக்கு நலன்கள் பொழி, வளங்கள் சேர,  பலன்கள் கிடைக்க,  பிரிந்திருக்கும் மனங்களெல்லாம் இணை, இறைவனின் அன்னையாம் தூய மரியாவின் பெருவிழா கொண்டாடுவோம்.

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff