13.01.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழா இன்று. பாவ வாழ்விலிருந்த விடுவித்து ஒளியின் பாதையில் மக்களை நடத்திச்சென்று, புதுவாழ்வை அவர்களில் தொடங்கிவைக்க, இயேசுவிற்கு சொந்த மானவர்கள் எனும் முத்திரையை அவர்களுக்கு கொடுக்க திருச்சபை வழங்கும் ஓர் அடையாளமே திருமுழுக்கு ஆகும். உலகின் பாவங்களை போக்கும் கடவுளின் செம்மறியாக இவ்வுலகிற்கு வந்த இயேசு தன்னுடைய பாடுகள் மரணத்தின் மூலம் மனுக்குலத்தின் பாவங்களைப் போக்கி உயிர்ப்பின் மூலம் மக்களுக்கு புதுவாழ்வு தந்தார். எனவே ஒருவன் கிறிஸ்துவோடு பாவத்துக்கு இறந்து, தன்னுடைய பழைய மனித இயல்பை அடக்கம் செய்துவிட்டு, கிறிஸ்துவோடு புதுவாழ்வுக்கு உயிர்த்தெழுவதே உண்மையான திருமுழுக்காகும் என பவுல் உரோமையருக்குக் கூறுகின்றார்.
இயேசுவின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அவரது திருமுழுக்கு அமைந்தது. மனிதனை மீட்க மனிதனாகத் தோன்றிய இயேசு தன்னுடைய பணி வாழ்வைத் தொடங்கிபோது பாலஸ்தீனத்தின் அவலங்களையும் சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் அடித்தட்டு மக்களின் அழுகுரல்களையும் அன்றாடம் கண்டு கொண்டார். புறந்தள்ளப்பட்ட அடித்தட்டு மக்களின் விடுதலை, நம்பிக்கை தான் இயேசுவின் இறையாட்சிப் பணிக்கு வித்திட்டது எனலாம். இறைவனின் செயல்திட்டத்தில் தாமும் அழைக்கப்பட்டிருப்பதை ஆழமாக இயேசு உணர்ந்திருந்தார். அத்தகைய ஓர் உந்து சக்திதான் அவரை யோர்தான் நோக்கி பயணிக்க வழிவகுத்தது.
மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்று யோர்தான் நதியோரம் வீரமுழக்கமிட்ட திருமுழுக்கு யோவானின் குரலொலி இயேசுவைக் கவர்ந்தது. சட்டங்களையும் சடங்குகளையும் உயர்த்திப் பிடிக்காமல் அன்பையும் நீதியையும் சமர்த்துவத்தையும் பகிர்வையும் வலியுறுத்திய யோவானின் புரட்சிக்கருத்துக்கள் இயேசுவின் கருத்துக்களோடு ஒருமித்து இருந்தன. அத்தகைய உண்மையை எத்திசையும் பறை சாற்ற தந்தையின்; விருப்பத்திற்குப் பணிந்து இயேசு வரிசையில் காத்திருந்து மக்களோடு மக்களாக திருமுழுக்கு யோவானிடம் யோர்தானில் திருமுழுக்குப் பெற்றார். இங்கு வானதூதர்களோ நட்சத்திரமோ இயேசுவை அறிவிக்கவில்லை. மாறாக இறைந்தந்தையே தனது மகன் இயேசு வெளிப்படுத்துகின்றார். 'இவரே என் அன்பார்ந்த மகன், இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று தந்தையின் குரல் வானத்தில் இருந்து ஒலித்தது.
இயேசுவின் திருமுழுக்கு அவரது வாழ்வின் நோக்கத்தை வெளிப்படுத்துகின்றது. இயேசு பெற்ற திருமுழுக்கு மாந்தர் அனைவரையும் மனமாற்றத்திற்கு அழைத்துச் செல்லும் ஓர் அடையாளச் செயல். இயேசுவின் திருமுழுக்கு பாவிகள் தொழு நோயாளிகள், அடித்தட்டு மக்கள் இவர்களுடன் நெருக்கமான உறவையும் தோழமையையும் எடுத்துக் காட்டும் செயல். இயேசுவின் திருமுழுக்கு எமது திருமுழுக்கு, கிறிஸ்தவ வாழ்வு பற்றிசிந்தித்துப் பார்க்க அழைக்கிறது. இயேசு தனது அர்ப்பணம்,பணி வாழ்விற்கான இசைவின் மூலமாக இறைத்தந்தைக்கு பூரிப்பைஏற்படுத்துகின்றார். தன் மகனோ, மகளோ அர்த்தமுள்ள, பெருமை சேர்க்கும் செயல்களைச் செய்யும் போது, நெற்றியில் முத்தமிட்டு, ஆசீர்வதிக்கும், அரவணைக்கும் பெற்றோரைப் பார்த்திருக்கிறோம்.நாமும் இந்த ஆசீர்,அரவணைப்பை அனுபவித்திருப்போம். அதுதான் அன்று யோர்தானில் நடந்தது. திருமுழுக்கு பெற்ற நாம் ஒவ்வொருவரும் இறைவனின் குடும்பத்தில் அங்கத்தவராக மாறி விண்ணகப் பேரின்ப முத்திரையாக மாறுவோமாக. இதுவே இயேசுவின் திருமுழுக்கு எமக்குத் தரும் செய்தியாகும். இன்று நாமும் திருமுழுக்கு மூலமாக இறைவனின் ஊழியராக வாழ நம்மைகளை நானிலமெங்கும் ஆற்ற முன்வர வேண்டும். அப்போது நாமும் இறைவனை மகிழ்விக்கலாம்.
ஒரு நாள் மாலை, கடற்கரையில் நடந்து கொண்டிருந்த ஓர் அறிவாளி இந்த உலகத்தை எப்படி காப்பாற்றுவது என்பது பற்றி ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தார். உலகத்தின் பிரச்சனைகள் உச்சநிலையில் தெரிந்ததால் எங்கு எப்படி ஆரம்பிப்பது என்று குழம்பிப் போயிருந்தார். அவருக்கு முன் ஓர் ஏழை மீனவன் கடற்கரையில் ஒதுங்கிக்கிடந்த சின்னச் சின்ன நட்சத்திர மீன்களை எடுத்து கடலில் எறிந்ததைப் பார்த்தார். 'என்ன செய்கிறீர் நண்பரே?" என்று கேட்டார் அறிவாளி. 'இவை இங்கேயே தங்கிவிட்டால், இறந்துவிடும். அதனால், இவைகளை மீண்டும் கடலுக்குள் அனுப்பிவைக்கிறேன்." என்றார். 'அது தெரிகிறது. ஆனால், நீர் இப்படி செய்வதால் என்ன பயன்? இது போல் உலகத்தின் பல கடற்கரைகளில் மீன்கள் கிடக்கின்றனவே. உமது இந்த செயலால் எத்தனை மீன்களைக் காப்பாற்ற முடியும் என்று நினைக்கிறீர்?" என்று கேட்டபோது, அந்த மீனவன், 'எல்லா மீனையும் காப்பாற்ற முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், இதோ, இந்த மீனை என்னால் காப்பாற்ற முடியும்." என்று சொன்னபடி, ஒரு மீனை எடுத்து கடலில் எறிந்தாராம். நல்ல செயல்களை நாமும் எங்காவது ஒரு இடத்தில், என்றாவது ஒரு நாள், எப்போதாவது ஒரு நேரம் ஆரம்பித்தாலே போதும். நல்ல செயல்களால் நானிலம் நிறையும் நாமனைவரும் நல்லமைதியில் வாழ்வோம்.

No comments:
Post a Comment