01.01.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
என் வாசகர்கள் அனைவருக்ககும் வழ்த்துக் கூறி இன்று தொடங்கும் இந்தப் புதிய ஆண்டில் நலமும் வளமும் பெருகி இறை ஆசீரை நிறைவாகப்பெற்று வாழ நாம் செபக்கின்றோம். இன்று நாம் மூன்று பெரும் விழாக்களை கொண்டாடுகின்றோம் என்று கூறலாம்: அன்னைமரியா இறைவனின் தாய் என அறிவிப்பு விழா, இயேசுவுக்கு பெயர் சூட்டப்பட்ட விழா, 2013ண்டு தொடக்கநாள் விழா.
திருச்சபை கன்னிமரியாவைக் கடவுளின் தாயாகப் போற்றிச் சிறப்பிக்கிறது. இன்று சிறப்பான வகையில் சாதாரண மனிதப் பெண்ணான மரியா இயேசுவின் தாயானதால் இறைவனின் தாயான மாண்பினை பெருமையுடன் நினைவு கூர்ந்து விழா கொண்டாடுகின்றது. தாய்மை என்பது கடவுளின் முக்கிய பண்புகளில் ஒன்று. மனிதருக்கு உயிரளித்து, அவர்களைப் பேணிக்காத்து, வளர்த்து மேம்படுத்தும் செயலைக் கடவுள் செய்வதால் அவரை நாம் தாய் என உரிமையோடு அழைக்கலாம். கடவுளின் தாய்மை வௌ;வேறு வழிகளில் வெளிப்பட்டாலும் மரியா வழியாக அது சிறப்பான விதத்தில் உயர்வுபெற்றது. மரியா கடவுளின் தாய் என அழைக்கப்படுவதற்குக் அவர் கடவுளின் மகனை நமக்கு ஈந்தளித்த செயலே முக்கியகாரணம் ஆகும். மரியாவின் வயிற்றில் உருவான குழந்தைக்கு இடப்பட்ட பெயர் அவருடைய பணியை அழகாகக் குறிப்பிடுகிறது. நம் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் நம் தாயின் ஆசியோடு தொடங்குதுதானே நமது பண்பாடு. எனவே, இந்தப் புத்தாண்டையும் இறைவனின் தாயும், நம் விண்ணக அன்னையுமான மரியாவின் ஆசியோடு நாம் தொடங்குவோம்.
மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள். வானதூதர் செல்லியிருந்தவாறு எட்டாம் நாள் குழந்தைக்கு “இயேசு” என்னும் பெயரிட்டார்கள். இயேசு என்னும் சொல் மீட்பர் எனப் பொருள்படும். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் யோசுவாவும் இவ்வாறே மீட்பர் என்று அறியப்பட்டார். இஸ்ரயேல் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களிலிருந்து விடுவிக்க யோசுவா ஒரு கருவியாக இருந்தார். கடவுள் காலமாகிவிட்டார் போன்றும் கடவுள் நம்மை கைவிட்டுவிட்டது போன்றும் தோன்றும் இன்றைய நவீன உலகில், இறை அன்பிலிருந்து வெளிப்படும் மீட்புபை கொண்டுவந்து உலக மக்கள் அனைவரையும் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் மீட்கவும் அவர்களை நிலைவாழ்வில் பங்கேற்கச் செய்யவும் வல்லவராக இயேசு வருகின்றார். இயேசு கொண்டுவரும் மீட்பு நம்மைக் கடவுளோடு நெருங்கிய விதத்தில் இணைக்கின்றது. கடவுளின் வாழ்வில் நமக்குப் பங்கு வழங்குகின்றது. நம்மைப் பிரிக்கின்ற அனைத்தையும் கடவுள் இயேசுவின் வழியாக நம்மிலிருந்து அகற்றிவிடுகின்றார். தடைகள் அகலும்போது நாம் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டு, கடவுளுடைய அருளின் வல்லமையால் புதுப் பிறவிகளாக மாறுகின்றோம். புதுப்பிறப்படைந்த மனிதர் புது வாழ்வுக்கு அழைக்கப்படுகின்றனர். அந்த வாழ்வு நம்மில் ஓர் ஆழ்ந்த மாற்றத்தைக் கொணடுவரவேண்டும். புத்தாண்டில் நாம் அந்த மற்றத்துடன் புதுமை பெற்று வாழ்ந்திட முன்வருவோம்
இறைவாக்கைக் கேட்பவர் இயேசுவின் தாய் ஆவார் என இயேசு கூறினாலும் இறைவாத்தைக்கு முழுமையாக மரியா சரணடைந்ததனால் “மகனே” என்று இயேசுவை அழைக்க இறைத்தந்தைக்கு அடுத்த நிலையில் உரிமை உள்ளவரானர் நம் தாய் மரியா என்று கூறலாம். “மகனே ஏன் இப்படிச் செய்தாய்” என்று விளித்த மரியா கானாவூர் திருமண வீட்டாருக்காகப் பரிந்துரைத்தபோதும் “மகனே” என்று விளித்து “அவர்களுக்கு இரசம் தீர்ந்துவிட்டது” என்று சொல்லப்படும் வாய்ப்பைக் கொண்ட வகையில் உயரிய பரிந்துரையாளரானார் நம் தூய கன்னிமரியா. இனி இத்தாயை முன்மாதிரியாக வைத்து அவர் போல நாம் வாழ முயல்வோம். அவர் சொன்னதை மனதில் இருத்தி அவர் சொன்னதைச் செய்து இயேசுவின் மதிப்பீடுகளின்படி வாழ்வோம். இந்த நல்ல நம்தாயின் அரவணைப்பில், வழி நடத்தலில் அவரைப் பின் செல்லலில் புதுவாழ்வு வாழ்வோம். தூய கன்னிமரியாவைப் பின்சென்று இறைவனின் மக்களாக வாழ தொடர்ந்து ஒரு புது ஆண்டைத் நமக்குத் தந்து நம்மை இறைவன் வாழவைத்துள்ளார். இப் புதிய ஆண்டில் புது உணர்வு கொள்வோம். புது முயற்சிகள் மேற்கொள்வோம் புது உறவுகள் வளர்ப்போம் இறைவனுக்கு நன்றி உள்ளவராய் வாழ்வோம். நம்மைச் சுற்றியுள்ளவரை மனதார அன்புடன் வாழ்த்தி நலமாய் வாழ ஊக்கமூட்டுவோம். அன்னைக்கு ஏற்ற பிள்ளைகளாய் ஆண்டு முழுவதும் இறை அருளிலும் அமைதியிலும் நிறைவுடன் வாழ்ந்திட வரம்வேண்டுவோம். இன்று புதிய2012ஆண்டை கொண்டாடுகின்றோம். இவ்வருடம் முழுவதும் வாழ்வை நேர்மை என்னும் பண்பில் அடித்தளம் இடுவோம். புதிய நேர்மையான இலக்குகளை வகுப்போம். செயல்படத் தொடங்குவோம். இறைவனின் கருவியாகச் செயல்பட இப்புதிய ஆண்டில் உறுதியேற்போம். நாம்மில்; நேர்மை எனும் எந்திரத்தைப் பொருத்தி அன்மை மரி கொண்டிருந்த இறைமை, எளிமை உணர்வுகள் எனும் சக்கரங்களைக் கொண்டு புதிய வரலாற்றுக்குள் பயணம் செய்வோம். புதிய வரலாற்றை நாம் பயணம் செய்ய வைப்போம். இந்த ஆண்டு நலமான ஆண்டாக நமக்கு அமைய வேண்டும் என புது முயற்சிகளை நாம் மேற்கொள்வோம். நமது ஆண்டவர் இயேசுவின் இனிய ஆசீரிலும், தாயாகிய தூய கன்னிமரியாவின் பரிந்துரையிலும் ஆசீரிலும் இந்த ஆணடில் நமக்கு நலன்கள் பொழி, வளங்கள் சேர, பலன்கள் கிடைக்க, பிரிந்திருக்கும் மனங்களெல்லாம் இணை, இறைவனின் அன்னையாம் தூய மரியாவின் பெருவிழா கொண்டாடுவோம்.

No comments:
Post a Comment