06.01.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவாகிய இன்று, குழந்தை இயேசுவைத் தேடி கீழ்த்திசை ஞானிகள் மூவர் வந்து வணங்கிய நிகழ்வைக் கொண்டாடி, மெசியாவாம் இயேசு புற இனத்தாருக்கும் தம்மை வெளிப்படுத்தியதை நினைவுகூர்கிறோம். இயேசுவை தேடி வணங்க வந்த ஞானிகளின் பயணம்; இயேசுவை சென்றடையும் பாதையினை எமக்கு தெளிவாகக் காட்டுகின்றது. பெத்லகேமில் இயேசு பிறந்துள்ளதை அறிந்த அரசன் ஏரோதும் எருசலேமும் கலங்கினாலும் ஞானிகள் பிறந்த பாலன் இயேசுவை வணங்கச் சென்ற பயணம் இயேசுவை சென்றடையும் பாதையினை எமக்கு தெளிவாகக் காட்டுகின்றது. ஞானிகள் இயேசுவை வணங்க வந்த நிகழ்வு பாலன் இயேசு பிறந்த நிகழ்வோடு பின்னிப் பிணைந்துள்ள ஒரு நிகழ்வு என்பது நமக்குத் தெரிந்த ஒருவிடயம். இவர்கள் மூன்று ஞானிகள் என்று திருச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டள்ள ஒருவிடைமாகிறது. இவர்கள் வீண்மீன் கண்டு வீறுநடைபோட்டு இயேசுவைக்கண்டு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்த இயேசு பாலனை வணங்கினர். பரிசுகளைக் கொடுத்தது வந்தவழி விட்டு வேறுவழியில் திரும்பினர்.
யார் இந்த ஞானிகள்?
கிரேக்க மொழியிலே “மாகோஸ்” (magos) என்றால் “ஞானி” என்று பொருள். இது பன்மையில் (mag) என்பது பொருளாகும். இவர்களை நாம் பல கூறுகளாகப் பிரித்து நோக்கலாம். பெர்சிய நாட்டுக் குருக்களின் கூட்டத்தைச் சார்ந்தவர்கள். இரகசிய மறைபொருளை உணர்ந்து கொள்ளும் சக்தியைக் கொண்டவர்கள். மந்திரவாதிகள். நாடோடிப் போலி மருத்துவர்கள் அல்லது அறிஞர்கள். தத்துவ அறிவில்கைதேர்ந்தவர்கள். குறி சொல்லும் முன்னறிவிப்பாளர்கள். இயற்கை மருத்துவத்தி;ல் கைதேர்ந்தவர்கள். கனவுகளுக்கு விளக்கும் அளிப்பவர்கள். வானசாஸ்திரிகள்.
இந்த ஞானிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாகலாம்?

இந்த ஞானிகள எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற ஆராய்ச்சியில் முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. பெர்சிய நட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். மீதியா நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். மெசபெத்தோமிய நாட்டிலிருந்து வந்திருக்கலாம். அரேபியா நாட்டிலிருந்து பயணி;திருக்கலாம் என்று மரபுகள் கூறுகையில் இந்தியாவிலிருந்து கூட யூதேயா நாட்டிற்க்கு சென்றிருக்கலாம் என்று கூறுபவர்களும் உளர்.
இந்த ஞானிகள்; எத்தனை பேர்?
நற்செய்தியில் பாலன் இயேசுவைக் காணவந்த ஞானிகள் எத்தனை பேர் என்று குறிப்பிடவில்லை. மூன்று பேர் வந்தார்கள் என்ற மரபு எப்படி வந்ததென்றல், நற்செய்தியி;ல் மூன்று வகையான பரிசுகளைக் கொண்டு வந்தார்கள் என்று குறிப்பிடுள்ளதால் தான் என்கிறார்கள்.
இந்த ஞானிகள் பெயர்கள் என்ன?
இந்த ஞானிகளின் பெயர்கள்: கஸ்பார், மெல்கியோர், பல்தசார் என்பது மரபாகிறது.
இயேசுவைக் காணவந்த ஞானிகள் என்ன செய்தார்கள்?
இயேசுவைக் காணவந்த ஞானிகள் உண்மையில் வானயல் பற்றி ஞானத்தைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வானத்தை ஆய்வு செய்பவர்களே ஒழிய எதிர் கால வீண்மீன்கள் பற்றி ஆராயவில்லை, கூற முனையவுமில்லை. அவற்றிலிருந்து சில நன்மைகளை பெற முற்றடுபட்டார்கள். வாழ்க்கையின் வழியைக்காட்டும் உண்மை ஒளியை தேடும் மனிதர்களானர்கள். கடவுளின் முகவரியை கடவுளின் படைப்பபில் காண முற்பட்டவர்கள். மாந்தர் வாழ்விற்கு வழிகாட்டும் பாதையைக் கண்டுகொன்டார்கள். இறைவனின் அடிச்சுவட்டைப் பின்பற்றி அவரை தேடியவர்கள், அவரின் கைவண்ணத்தை படைப்பில் காண தேடியவர்கள் கடவுள் இயற்கையினூடாக தம்தை வெளிப்படுத்துவார் என்று உறுதியாக நம்பினர். இந்த உலகைப் படைத்தவரே பெத்தலேகேமில் குகையில் மனிதனாகப் பிறந்தார் என்பதை உணர்ந்தனர். இந்த ஞானிகள் வேதாகமம் கூறுவதைக் கேட்டனர். அதுவே உண்மை வழியைக் காட்டும் விண்மீனாகா தோண்றியது என்ற மிகப்பெரிய பரிசுத்த உண்மையை எமக்கு தெளிப்படுத்தி நின்றனர்.
இயேசுவைக் காணவந்த ஞானிகள் கொண்டுவந்த பரிசுகளுக்கு அர்த்தம் என்ன?
கஸ்பாhர் என்பவர் தாடி இல்லாமல் இளைஞராக ஓவியத்தில் சித்தரிக்ப் பட்டுள்ளார். இவர் சாம்பரணி கொண்டுவந்தர். சாம்பரணி குருத்துத்வதைக் குறிக்கின்றது. குருக்களை பெர்சிய நாட்டில் 'போன்தி ஃ பெக்ஸ்' அதாவது பாலமாக இருப்பவர்கள் - இறைவனுக்கும் மனிதருக்குமிடையே பரிந்து பேசி பாலமாக இருந்தவர்கள் மன்னர்கள் என்ற கருத்து நிலவியது. இறைத் தந்தைக்கும் நமக்குமிடையே உறவை வளர்க்கும் பாலமாக இருக்கும் இயேசுவுக்கு இது எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது என்பது தெளிவு
மெல்கியேர் வயதானவராக, நீண்ட தாடியோடு சித்தரிக்கப்பட்டுள்ளார். இவர் பொன்னைக் கொண்டு வந்தர். பொன் அல்லது தங்கம் இயேசு அரசர் என்பதைக் குறிக்கின்றது. பெர்சியா நாட்டில் அந்நாட்டு அரசரையாராவது சந்திக்கச் சென்றால் கட்டாயம் தங்கத்தைக் கொண்டுச் செல்ல வேண்டுமென்பது ஒரு கட்டாயமான மரபு. ஆகவே இயேசுவை ஓர் அரசராகக் கருதி பொன்னைப் பரிசாகக் கொண்டு வருகிறார் இந்த ஞானிகள்.
பல்தாசார் ஓர் இளைஞன். குறுந்தாடியுடையவர். இவர் வெள்ளைப்போளம் கொண்டு வந்தாதகக் கூறப்படுகிறது. வெள்ளைப்போளம் பொதுவாக இறந்தவர்களின் உடலைப் பதபடுத்திப் பாதுகாப்பாக இருக்கப் பயன்படு;தப்பட்ட ஒரு பொருள். இது இயேசு இறைவன் மட்டுமல்ல, அவர் ஒரு மனிதனாகவும் இருக்கின்றார் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது. ஆம் இயேசு பிறந்ததே நாம் மீட்பு பெறுவதற்காகவே. இயேசு தமது உயிரை பயணமாக வைத்துத் தமது இறப்பினால் நம்மை மீட்டார் என்பது வெள்ளிடை மலை.
இந்த ஞானிகளின் வருகையை ஒட்டிச் சில முன்னறிவிப்புக்கள் உள்ளன. விண்மீன்-கிறிஸ்து பிறப்பதற்கு முன் 11ஆம் ஆண்டில் ஹோலிஸ் நட்சத்திரம் தோன்றியது. கி.மு. 7ஆம் ஆண்டில் மூன்று கோள்கள்-சாட்டர்ன், ஜுபிட்டர், மார்ஸ் ஒன்றாகக் கூடிவந்து வானத்தில் விந்தை நடந்தது வரலாறு. கி.மு. 5லிருந்து 2ஆம் ஆண்டுக்கு இடையிலான காலத்தில் மெசோரி, சூரியன், டாக்ஸ்டார் என்பவை பிரகாசமாகத் தோன்றின என்பதும் வரலாறு.
இவ்வெளிப்பாட்டின் வழியாக ஒரு புதிய அரசர் தோன்றுவார் என்று மக்கள் நம்பினர். இயேசு பிறப்பதற்கு முன் இஸ்ரயேல் நாட்டில் ஓர் அரசக் தோன்றுவார். அவர் மெசியா- அரசராக இருப்பார். அவர் மக்களை மீட்டு விடுதலை அளிப்பார் என்று மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். “ யூதா நாட்டுப் பெத்தலேகேமே யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை;, ஏனெனில், என் மகளாகிய இஸ்ராயெலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்து தோன்றுவார்”. ஏன் இறைவாக்கினரின் எழுத்துக்களில் நம்கிக்கை கொண்டு அவரது வருகைக்காக ஆவலோடு காத்திருந்தனர். மன்னர் பிறந்துவிட்டார் என்று வானசாஸ்திரிகள் தங்கள் ஞானத்தைப் பயன்படுத்தி பாலன் இயேசுவைக் காணவந்தனர். உண்மையாகவே இயேசு இவ்வுலகை மீட்க வந்த மீட்பர் என்பதை எடுத்துக்காட்டினர்.
இயேசுவின் பிறப்பைப் பற்றிய மூன்று கண்ணேட்டங்கள்:
மெசியா - அரசராக இயேசு பிறப்பார் என்று இஸ்ரயேல் வானசாஸ்திரிகள் ஆய்ந்தறிந்து உறுதிப்படுத்தியவுடன் மூன்று வகையான நபர்கள் தங்களது கண்ணேட்டத்தை வெளிப்படுத்தினதை நாம் நற்செய்தியில் பார்க்கிறோம்.
ஏரோது-பகைமை உணர்வு- ஏரோது முறையான வகையில் அரசனாகப் பதலி ஏற்கவில்லை. ஆகவே வேறு ஓர் அரசன் பிறந்துள்ளார் என்று கேள்வியுற்றதும் தனக்குத் தற்காப்பின்மை என்ற உணர்வு ஏற்பட்டதால் இயேசுக் குழந்தை மீது பகையுணர்வு கொண்டான். அவரைக் கொல்லச் சதித்திட்டம் போட்டான்.
பரிசேயர்களின் பாராமுகம்- இஸ்ரயேல் நாட்டின் குருக்களும், சட்டவல்லுநர்களும் புதிய மெசியா அரசர் பிறப்பார் என்று விவிலியம் முன்னறிவித்திருந்தும் அவர்கள் இந்நிகழ்வின்மேல் எந்த அக்கறையும் கொள்ளவில்லை.மாறாக, இயேசுபோதிக்கத் தொடங்கியதும் அவரை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கின்றனர்.
ஞானிகள் - பக்தி பரவசம்- இயேசு பிறந்த இடத்தை அடைந்ததும் ஞானிகளுக்கு வழிகாட்டி வந்த விண்மீன் நின்றது. அதை கண்ட அவர்கள் மட்டில்லா பெருமகிழ்ச்சி அடைந்தனர். குழந்தை இயேசுவைக் கண்டார்கள். நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள். தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். பக்தி பரவசத்தில் மூழ்கினார்கள்.
ஞானிகளின் வருகை நமக்குத் தரும் பாடங்கள்-
நாம் இயேசுவை ஆவலோடு தேடிச் சென்றால் அவரைக் கண்டு நாம் மகிழ்ச்சியில் ஆழ்வோம். இறைவனின் வழிநடத்துதல் என்றும் நம்மோடு இருக்கும். இயேசுவை ஆராதித்து வணங்க நமக்கு வாய்ப்பு கிடைக்கும். இறைவனே நமக்கு பரிசாக அமைவார். இயேசுவைக் கண்ட ஒருவர் மாற்றுப் பாதையில் தான் நடக்க வேண்டும். இயேசுவைப் பலர் தேடி வந்தனர். நாமும் அவரை தேடினோம் என்றால் அவரைக் கண்டடைவோம். பல ஆயிரக்கணக்கான கல் தூரம் பல வேதனைகளையும், துன்பங்களையும் சகித்துக் கொண்டு ஞானிகள் இயேசுவைத் தேடி வந்தனர். நாம் எமது மனங்களில் எதிர்ப்பு மனப்பான்மையை கைவிட்டு கடவளால் வழிநடத்தப்படுவதற்கு நம்மை கையளிக்கவேண்டும். உறுதியாக உண்மையானவரைக் காணவேண்டும் என்ற விசுவாசத்தின் கண்களினாலேயே தேடினால் தான் அவரைக் காணமுடியும்
இயேசுவைக் கண்டு அனுபவிப்பவர்களின் வாழ்க்கை மாற்றுப் பாதையில் தான் அமையவேண்டும். பழைய மனிதத்தை களைந்துவிட்டுப் புத்தாடை அணிந்துப் புனிதனாக மாறவேண்டும். இதைத்தான் ஞானிகளும் செய்தார்கள். வாருங்கள் நாமும் ஞானிகள் வழிசெல்வோம்.
No comments:
Post a Comment