06.01.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவாகிய இன்று, குழந்தை இயேசுவைத் தேடி கீழ்த்திசை ஞானிகள் மூவர் வந்து வணங்கிய நிகழ்வைக் கொண்டாடி, மெசியாவாம் இயேசு புற இனத்தாருக்கும் தம்மை வெளிப்படுத்தியதை நினைவுகூர்கிறோம். இயேசுவை தேடி வணங்க வந்த ஞானிகளின் பயணம்; இயேசுவை சென்றடையும் பாதையினை எமக்கு தெளிவாகக் காட்டுகின்றது. இவர்கள் மூன்று ஞானிகள் அல்லது அரசர்கள் என்று திருச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டள்ளது. இவர்கள் வீண்மீன் கண்டு வீறுநடை போட்டு இயேசுவைக் கண்டு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து இயேசு பாலனை வணங்கினர். பரிசுகளைக் கொடுத்தது வந்தவழி விட்டு வேறுவழியில் திரும்பினர்.
இந்த ஞானிகளின் வருகையை ஒட்டிச் சில முன்னறிவிப்புக்கள் உள்ளன என்று வரலாறு கூறுகின்றது. விண்மீன்: கிறிஸ்து பிறப்பதற்கு முன் 11ஆம் ஆண்டில் ஹோலிஸ் நட்சத்திரம் தோன்றியது. கி.மு. 7ஆம் ஆண்டில் மூன்று கோள்கள்: சாட்டர்ன், ஜுபிட்டர், மார்ஸ் ஒன்றாகக் கூடிவந்து வானத்தில் விந்தை நடத்தியது வரலாறு. கி.மு. 5லிருந்து 2ஆம் ஆண்டுக்கு இடையிலான காலத்தில் மெசோரி, சூரியன், டாக்ஸ்டார் என்பவை பிரகாசமாகத் தோன்றின என்பதும் வரலாறு.

இவ்வெளிப்பாட்டின் வழியாக ஒரு புதிய அரசர் தோன்றுவார் என்று மக்கள் நம்பினர். இயேசு பிறப்பதற்கு முன்னர் இஸ்ரயேல் நாட்டில் ஓர் அரசக் தோன்றுவார். அவர் மெசியா- அரசராக இருப்பார். அவர் மக்களை மீட்டு விடுதலை அளிப்பார் என்று மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். யூதா நாட்டுப் பெத்தலேகேமே யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை;, ஏனெனில், என் மகளாகிய இஸ்ராயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்து தோன்றுவார். என் இறைவாக்கினரின் எழுத்துக்களில் நம்கிக்கை கொண்டு அவரது வருகைக்காக ஆவலோடு காத்திருந்தனர். மன்னர் பிறந்துவிட்டார் என்று வானசாஸ்திரிகள் வீண்மீன்கண்டு தங்கள் ஞானத்தைப் பயன்படுத்தி பாலன் இயேசுவைக் காணவந்தனர். உண்மையாகவே இயேசு இவ்வுலகை மீட்க வந்த மீட்பர் என்பதை எடுத்துக்காட்டினர்.
வேதாகமத்தில் கூறப்பட்ட மெசியாவை தேடிக் காணச்சென்ற இந்த மூன்று அரசர்கள் உண்மையில் வானயல் பற்றி ஞானத்தைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வானத்தை ஆய்வு செய்பவர்களே ஒழிய எதிர் கால வீண்மீன்கள் பற்றி ஆராயவில்லை, கூற முனைபவர்கள் அல்லர். இறுதியாக அவற்றிலிருந்து சில நன்மைகளை பெற முற்றடுபவர்கள். வாழ்க்கையின் வழியைக்காட்டும் உண்மை ஒளியை தேடும் மனிதர்கள் அவர்கள். கடவுளின் முகவரியை கடவுளின்படைப்பபில் காண முற்பட்டவர்கள். மாந்தர் வாழ்விற்கு வழிகாட்டும் பாதையைக் கண்டுகொள்கிறார்கள்.
இறைவனின் அடிச்சுவட்டைப் பின்பற்றி அவரை தேடியவர்கள், அவரின் கைவண்ணத்தை படைப்பில் காண தேடியவர்கள். கடவுள் இயற்கையினூடாக தம்தை வெளிப்படுத்தூவார் என்று அவர்கள் உறுதியாக நம்பினர். நாம் எமது மனங்களில் எதிர்ப்பு மனப்பான்மையை கைவிட்டு கடவுளால் வழிநடத்தப்படுவதற்கு நம்மை கையளிக்கவேண்டும். படைப்பில் கடவுளிக் கையெழுத்து உள்ளது என்றும் மனிதராகிய நாம் படைப்பில் கடவுளைக் காணவேண்டும். அந்த அரசர்கள் உண்மையானவரைக் காணவேண்டும் என்ற விசுவாசத்தின் கண்களினாலேயே தேடினால் தான் அவரைக் காணமுடியும் என்று நம்பினார்கள். நாமும் கடவுளின் ஞானத்தை, அவரது வல்லமையை, எல்லையற்ற அன்பை உணர அழைக்கப்பட்டவர்கள்.
நாம் எமது அறிவை வெறும் கோட்பாடுகளினால் புடமிடுவதற்கு அனுமதிக்க கூடாது. இந்த கோட்பாடுகளை நாம் கூர்ந்து கவனித்தால் இறை நம்பிக்கைக்கு முரணானவையாக தென்படும். அவற்றை வைத்துக் கொண்டு வாழ்வின் இறுதி அர்த்தத்தை கண்டடைய முடியாது. உலனின் அழகையும் அதன் வியப்பையும், உள்ளர்த்தத்தையும், தோற்றத்தையும் தோற்றத்தின் காரண தன்மையையும் கண்டுணரமுடியாது. ஆனால் நாம் இத்த உலகில்- வானத்தையும் பூமியையும் படைத்த கடவுளினால் வாழிநடத்தப்படவே முடியும். இதனை நாம் கருத்தில் கொண்டால் இந்த உலகைப் படைத்தவரே பெத்தலேகேமில் குகையில் மனிதனாகப் பிறந்தார் என்பதை உணர முடியும். அவரே நற்கருணையில் தொடர்ந்தும் எம்முடன் வாழ்கின்றார். அவரே எம்மை என்றும் அன்பு செய்து முடிவில்லா வாழ்விற்கு அழைத்துச் செல்லும் உயிர் உள்ள கடவுளாவார்.
இந்த மூன்று அரசர்களுக்கு பரிசுத்த வேதாகமம் கூறுவதைக் கேட்பது இன்றியமையாததாக இருந்தது. அதுவே அவர்களுக்குரிய உண்மை வழியைக் காட்டுபவையாக இருந்தது. நிச்சயமற்ற மனித வார்த்ததைப் பிரசங்கத்தில் விழங்கப்படுத்த முடியாதவாறு இறைவார்தைதையே விண்மீனாகா தோண்றியது. இதுவே மிகப்பெரிய பரிசுத்த உண்மையை எமக்கு தெளிப்படுத்தியது. எனவே நாம் ஒவ்வாரும் இறைவார்த்தையான இந்த வீண்மீன்ளினால் வாழிநடத்தப்பட எம்மை அற்பணிப்போம். திருச்சபையுடன் இணைந்து வழிநடப்போம். உலகின் எந்த விழக்கினாலும் ஒளி கொடுக்கமுடியாத உண்மையானவரின் ஒளியால் எமது பாதைகள் வழிநடத்தப்பட வேண்டுவோம். நாமும் எமக்க அடுத்திருப்பவர்களுக்காக பிரகாசிக்கும் விண்மீன்களாக மாறுவோம். கிறிஸ்து எம்மீது ஒளிhவித்த அதே ஒளியை நாமும் மற்றவர்களில் ஒளிர விடுவோம்.

No comments:
Post a Comment