Wednesday, May 27, 2020

கேலிச்சித்திரங்களும் மட்டுப்பாடுகளும்


ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை




கேலிச்சித்திரங்களில் மனிதர்களின் தோற்றங்கள் அல்லது செய்கை மரபுகள் வெளிப்படுத்தப் படுகின்றன. 'இயல்பான மனிதனின் தோற்றத்தை மிகைப்படுத்திக் கேலியும் கிண்டலுமாக வரைபடத்தின் மூலம் வெளிக் காட்டுவது கேலிச்சித்திரமாகும்"  என நாம் அறிந்து கொண்டோம்  கேலிச்சித்திரம் அங்கதச்சுவையைத் தூண்டும் வகையில் வரையப்படும் சித்திரங்கள்ஆகும்.ஹிட்லர்நிலைகுலைந்துதோற்றுப்போவதற்கு டேவிட்வோ வின் கேலிச்சித்திரங்களும் ஒரு காரணம் என வரலாறறிந்தோர் கூறுகின் றனர்.

'அரசின் குறைகளை, ஆட்சியின் அவலங்களை, பொதுமக்களின் இன்னல்களை யாருமே சொல்லக்கூடாது, பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டு போட்டவர்கள் பின்னர் தங்கள் நிலையில் இருந்து பின் வாங்கியதுதான் வரலாறு.

'சட்டத்தின் ஆட்சி அல்ல, காட்டாட்சி நடக்கிறது: கார்ட்டூனிஸ்ட் பாலா கைதுக்கு முன்னாள் நீதிபதி சந்துரு கண்டனம்"  இந்திய செய்தி

'ஒரு கேலிச்சித்திரம் நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய மாபெரும் மேதை அம்பேக்கார் அவர்களை அவமானப்படுத்தி விட்டது அதற்குக் காரணமானவர்கள் மீத உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்." இந்திய செய்தி

'இஸ்லாமியரின் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரம் என்று கூறி ஒரு கேலிச்சித்திரத்தை வெளியிட்ட தமிழகத்தின் தினமலர் பத்திரிகைமீது பல்வேறு பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன" இந்திய செய்தி

தமிழகத்தில் கார்ட்டூன்களில் அரசியல் கருத்துக்களை சொன்ன ஆங்கில, தமிழ் பத்திரிகைகள் ஏராளம். தமிழகத்தில் அரசுக்கு எதிராக கேலிச்சித்திரம் வரைந்ததற்காக கைது செய்யப்பட்டவர் ஆனந்தவிகடனின் ஆசிரியர் பாலசுப்ரமணியன். 1987 ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் அட்டைபடத்தில் வெளியிட்ட கேலிச்சித்திரத்தை கண்டு அவரை கைது செய்ய உத்தரவிட்டார் அன்றைய வானளாவிய அதிகாரம் படைத்த சபாநாயகர் பி.எச்.பாண்டியன். கைதுக்கு எதிராக எழுந்த எதிர்ப்பலையை பார்த்து பணிந்த அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் சபாநாயகரிடம் பேசி அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். 

'இன்னும் தினமலர் போன்றே இந்த இஸ்லாமியரின் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை டென்மார்க் பத்திரிகை பிரசுரித்த காரணத்தால் எழுந்த மோதலில் 150 ஆதிகமானோர் பலியானர்கள் "

'மலேசியாவினன் பிரதம மந்திரியான நஜிப் ரசாக் அவர்களை கோமாளியாகச் சித்தரித்து கேலிச்சித்தரம் வரைந்தவர் கைதுசெய்யப் பட்டார் என்றும் அவருக்கு ஒரு மாதசிறைத்தண்டனையும் 700 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது"


'டி.எஸ் சேனநாயக்கா அவர்கள் பிரதம மந்திரியாக எமது நாட்டில் இருந்த போது கொலட் அவர்களின் கேலிச்சித்திரத்தில் -கார்ட்டூனில் பல அரசியல் வாதிகள் கதிகலங்கிப் போனார்கள். அவர்கள் டி.எஸ் சேனநாயக்காவிடம் முறையிட்டார்கள். அதற்கு பிரதம மந்திரியவர்கள் நாடும் சிரிக்க வேண்டும் என சமாதானம் கூறினார்" இவ்வாறு பல செய்திகளை நாம் வாசித்திருக்கின்றோம். 


'இதனுள் இன்னும் ஒரு விடயத்தை கூறித்தான் ஆகாவேண்டும். சேர் ஜோண் கொத்தலாவல அவர்கள் மற்றய அரசியல் வாதிகளிலிருந்து சற்று வித்தியாசமானவர். தன்னை கிண்டல் செய்த படைப்புக்களை நன்றாக சுவைப்பாராம். அது மட்டுமல்லாது. ஆந்த படைப்புக்ககை பத்திரிகையா ளர்களிடமிருந்து பணம் கொடுத்து வாங்கிச் சட்டமிட்டு தன் அறையில் தங்கவைத்து இரசிப்பாராம் "

எனவே கேலிச்சித்திரத்திற்கு எதிராக மட்டுப்பாடுகள் இருக்கின்றனவா என நாம் தெரிந்து கொள்வதும் சாலப் பொருத்தம். எமது இலங்கை நாட்டில் கேலிச்சித்திரங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என்பது பற்றி எமது அறிவுக்கு எட்டிய அளவிற்கு தெரியவில்லை. ஆனால் எடுக்கப்பட முடியாது எனவும் நாம் அறிதியிட்டும் கூற முடியாது. ஆனால் எடுக்கப்படாது என்பது எழுதப்படாத ஊஜிதமே என்றால் சாலப்பொருந்தும் எனலாம். 

ஆட்சியாளர்கள் குறைகளை மக்களிடம் எடுத்துச்செல்வதும் அதை வெளிக்கொணரவும் பல வடிவங்கள் இருந்தாலும் மிகச்சிறந்த வடிவமாக இருப்பது கேலிச்சித்திரங்களே. கேலிச்சித்திரம் எல்லோராலும் வரைந்து விட முடியாது. ஏன் ஒரு ஓவியரால் கூட கேலிச்சித்திரம் வரைய முடியாது.

கேலிச்சித்திரம் ஒருவகை எழுத்தாற்றலே. பல பக்கங்கள் எழுதி சொல்ல முடியாத ஒன்றை ஒரு கருத்துப்படம், கேலிச்சித்திரம் உணர்த்திவிடும். கேலிச்சித்திரங்கள் அடுத்தவர் இரசிக்கும் படியாகவும் அதில் ஆழமாக இடித்துரைக்கும் விடயமும் இருக்கும்.


இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை- அதி விசேடமானது 2048ஃ1 ஆம் இலக்கம் - 2017 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் 04 ஆந் திகதி திங்கட்கிழமை வெளியான வர்த்தமான அறிவித்தலில்  இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பினது 104ஆ (5) (அ) என்னும் உறுப்புரையின் கீழான ஊடக வழிகாட்டு நெறிகள் எனும் திரட்டில் நான்காவது சரத்தில் 'நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்கின்றவர் மற்றும் தொலைக்காட்சி அத்துடன் வானொலி அலைவரிசைகளின் அறிவிப் பாளர் ஒவ்வொருவரும், ஒரு திறத்தவருக்குப் பங்கமேற்படுத்துகின்ற அல்லது ஒரு திறத்தவரை ஊக்குவிக்கின்ற செய்தித்தாள் தலைப்புச் செய்திகளை மற்றும் கேலிச்சித்திரங்களை தொகுத்தளிக்கின்ற போது தமது தனிப்பட்ட கருத்துக்களைத் தெரிவிப்பதனைத் தவிர்த்தல் வேண்டும்." என்பதனை பார்க்க முடிகின்றது. 

கார்ட்டூனிஸ்ட் - (கேலிச்சித்திர ஓவியர்) அம்மைப்பிள்ளை யோகமூர்த்தி அவர்கள் இலங்கையிலிருந்து வெளியாகும் ஆங்கில செய்தித்தாள்-தி ஐலன் வுhந ஐளடயனெ பத்திரிகைக்கு 08.04.2019 அன்று வளங்கி செவ்வியிலிருந்து சிலபகுதியை இங்கு சுட்டிக்காட்டுவவது சாலப் பொருத்தம். 


கார்ட்டூனிஸ்ட் - (கேலிச்சித்திர ஓவியர்) அம்மைப்பிள்ளை யோகமூர்த்தி அவர்கள்:'ஒரு கார்ட்டூனிஸ்ட் அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தப்படவோ அல்லது இயக்கப்படவோ கூடாது" என்று மீண்டும் வலியுறுத்தி 08.04.2019 அன்று கூறினார் என்று மேற்படி பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. 'ஒரு கார்ட்டூன் நாட்டின் உண்மையான அரசியல் நிலைமையை பிரதிபலிக்க வேண்டும். ஒரு கார்ட்டூனிஸ்ட் அரசியல் பிரச்சினைகளை நடுநிலையான மனநிலையோடு மத்தியஸ்தம் செய்ய வேண்டும். என்று மேலும் தெரிவித் தார்;" இலங்கையில், குறிப்பாக ஒரு தமிழ் கார்ட்டூனிஸ்டுக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கிறதா என்று அவரிடம் கேட்டபோது, யோகமூர்த்தி, கார்ட்டூன்கள் கருத்துச் சுதந்திரத்தின் விளைவாகும் என்று சுட்டிக்காட்டி னார்."எனது ஆசிரியர் கூட எனது கார்ட்டூன்களில் தலையிடவில்லை. என்றும் தெரிவித்தார்."

தனது பதவிக்காலத்தில் ஊடக சுதந்திரம் எந்த வடிவத்திலும் தடைப்படாது என்று உறுதியளித்ததாக  இலங்கை ஜனாதிபதி கோதபய ராஜபக்~ 12.12.2019 அன்று வியாழக்கிழமை அவரது அலுவலகத்தில் இருந்து வெளியிட் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார். இதுவும் கேலிச்சித்திரங்கள் சுகந்திரமாக வரையப்படலாம் என்பதற்கு ஒரு எடுத்தக்காட்டு 

எனவே ஒரு கார்ட்டூனிஸ்ட் சுய தணிக்கை செய்து தனது கேலிச்சித்திரங் களை செய்வது மிகவும் நன்றாக இருக்கும் என இங்கு கூறிக்கொள்ளத்தான் வேண்டும். 

இந்தவகையில் பின்வருவனவற்றை கருத்தில் நோக்குவோம். 


  1. இறைவனையும் புனிதம் பொருள்களையும் இழிவுபடுத்தும் வகையில் கேலிச்சித்திரங்கள் வரைவதைத் தவிர்பது நல்லது 
  2. கேலிச்சித்திரங்கள் வரையும்போது தேசியக் கொடி, தேசிய சின்னங்களின் மதிப்பை கெடுக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது
  3. தனிமனிதர்களையும் அவர்களை அச்சுறுத்தும் வகையிலும் கேலிச்சித்திரங்களை வரைவதைத் தவிர்ப்து நல்லது.
உசாத்துணை நின்றவை:-

  1. பத்திரிகை இயலுக்கு ஓர் ஆறிமுகம், முதற்பதிப்பு 26 டிசம்பர் 2001, புனித வளன் கத்தோலிக்க அச்சகம், யாழ்ப்பணம்.
  2. https://www.thehindu.com/news/international/gotabaya-assures-media-freedom-under-his-govt/article30288980.ece, Accessed on 21.05.2020
  3. https://www.newsfirst.lk/2019/12/12/president-gotabaya-rajapaksa-assures-media-freedom-during-his-administration/,Accessed on 21.05.2020
  4. http://island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=202388
  5. https://www.canadamirror.com/world/04/162817,Accessed on 21.05.2020
  6. http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/19917-2012-05-26-19-45-58,Accessed on 21.05.2020
  7. https://adiraiexpress.wordpress.com/2008/09/20/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%88/,Accessed on 21.05.2020


No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff